நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா அவனது அணைப்பில் இருக்க முடியாமல் நெளிந்தாள்.

"தள்ளி நில்லு இனியா.." என சொன்னவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து தேய்த்தான் அவன்.

"இப்படி சும்மா வளையாம நெளியாம நான் சொல்றதை மட்டும் செய்.. உப்பு ஒரு ஸ்பூன் தூவி விட்டு அப்புறம் இதை கிளறு.." என்றான் இனியன்.

அவனின் மூச்சுக்காற்று பட்டதிலும் அவனின் அருகாமையினாலும் அவளது முகம் நாணத்தால் சிவந்து விட்டிருந்தது. அதை மறைக்கும் வழியும் தெரியவில்லை அவளுக்கு. அவனிடமிருந்து விலகும் வழியும் தெரியவில்லை.

"இப்படி பிடிச்சி வச்சிட்டு சொன்னா அப்புறம் நான் எப்படி உப்பை எடுத்து இதுல சேர்க்க முடியும்..?" திணறலாக கேட்டாள் சந்தியா.

அவளின் இடுப்பில் ஒரு கையை பதித்தவன் தனது மற்றொரு கையால் தூரத்தில் இருந்த உப்பை எடுத்து அவள் முன்னால் வைத்தான். அவன் இடுப்பில் கையை வைத்தபோதே கரண்டியை கை நழுவ விட்டிருந்தாள் அவள். மூச்சு விட மறந்து நின்றுக் கொண்டிருந்தவளின் தோளில் மீண்டும் தன் முகத்தை பதித்தான் அவன்.

"இனியா.. ப்ளீஸ் தள்ளி நில்லேன்‌‌.. யாராவது பார்த்துட போறாங்க.." கெஞ்சல் குரலில் சொல்ல நினைத்தாள் அவள். ஆனால் வார்த்தைகள் கொஞ்சலாக வெளிவந்தது. அவனது அதிகார ஆணவத்திற்கு தன்னை இழந்து விட கூடாது என தன் மனதிற்குள் கட்டுப்பாட்டை போட்டு வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் அதே நேரம் அவனை பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் தன் மனதை இழந்துக் கொண்டிருந்தாள்.

'கொடுமைடா..' அவள் தன்னையே திட்டிக் கொண்ட நேரத்தில் அவளின் இடுப்பில் இருந்த கையின் பிடி சற்று இறுகியது.

"யாரும் இங்கே இப்ப வரமாட்டாங்க.." அவளின் காதில் தன் இதழ் பதித்து கிசுகிசுப்பாக சொன்னான் இனியன்.

"நீ என்னை தொட்டு பேச மாட்டன்னு அன்னைக்கு சொன்னதானே..?" ஏமாற்றமாக அவள் கேட்க அவனின் முகத்தில் குறும்பு சிரிப்பு அரும்பியது. அவனுக்கும் அவளது பேச்சிற்கு மரியாதை தந்து விலகி நின்று பேசத்தான் ஆசை. ஆனால் சந்தியாவுடனான அவனது காதல் தினமும் பன் மடங்காக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் அவனது கட்டுப்பாடும் கை மீறிக் கொண்டிருந்தது.

"ஆனா நான்தான் யார் பேச்சையும் கேட்க மாட்டானே.." என அவன் சொல்லவும் அவளுக்கு ஏமாற்றத்தின் காரணமாக கோபம் வந்தது.

"நீ ஒரு.." அவள் மேலும் பேசும் முன் அவளது காது மடலின் மீது முத்தம் ஒன்றை பதித்தான் இனியன்.

அவள் பேசவே மறந்து விட்டாள். சிலையாக அவள் நின்றிருக்க அவளின் கை பிடித்தவன் வாணாலியில் இருந்த காய்களை கிளறினான்.

"ஏ.." பேச நினைத்த வார்த்தைகள் கூட அவளது குரல்வளையை தாண்ட மறுத்தது.

"ஏன் இப்படி பண்ற..? நேர்மையா போராடவே மாட்டியா நீ..? எதுக்கு இப்படி குறுக்கு வழியில என் மனசை கலைக்க பார்க்கற..?" மிகவும் சிரமப்பட்டு தான் சொல்ல நினைத்ததை சொன்னாள் சந்தியா.

இனியன் சின்னதாக நகைத்தான். "காதல்ல எல்லா வழியும் நியாயமானதுதான். உன் மனசுல நான் இடம் பிடிச்சி ரொம்ப வருசமாச்சி. ஆனா அதை உன் முட்டாள் மூளைதான் புரிஞ்சுக்கல.. அதை புரிய வைக்கதான் இப்ப டிரை பண்ணிட்டு இருக்கேன்.."

சந்தியா சடாரென அவன் பக்கம் திரும்பி நின்றாள். அவன் நெருங்கி நின்று இருந்ததால் அவனது கழுத்தில் அவளது முகம் பதிந்தது. பின்னால் நகரவும் முடியாதபடி சமையலறையின் மேடை தடுத்தது.

"இது காதல் இல்ல.. இது அடக்குமுறை.." என அவள் சொல்ல அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
அவளது முதுகில் கை வைத்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "எனக்கு அடக்குமுறை பிடிச்சிருக்கு சந்தியா ம்மா.." என்றான்.

அவனின் இரும்பு பிடியிலிருந்து விலகி நிற்க போராடிக் கொண்டிருந்தவள் "எனக்கு பிடிக்கல.." என்றாள் கோபத்தோடு.

அதற்கும் அவன் சிரிக்கத்தான் செய்தான். "பிடிக்காத விசயத்தை பிடிக்க வைக்கிறதுதான் அடக்குமுறை செல்லம்.." என்றவன் அவளின் இதழை பார்த்துக்கொண்டை அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.

"என்ன பண்ற..?" என்றவள் அவன் தன்னை முத்தமிட வருவதை கண்டு பயத்தோடு பின்னால் சாய்ந்தாள். சட்டென அவளை பிடித்து நேராக நிறுத்தினான் அவன்.

"இன்னும் கொஞ்சம் நீ பின்னால் சாய்ஞ்சா அப்புறம் உன் முதுகை நெருப்பு பிடிச்சிடும். என்னோட சொத்து நீ.. எனக்கு சொந்தமானதை சேதப்படுத்த உனக்கு உரிமை இல்ல. அதனால கவனமா இரு.."

சந்தியாவிற்கு அவனது வார்த்தைகள் கோபத்தை தந்தன. "நான் உன் சொத்து ஒன்னும் கிடையாது. நான் மனுசி.." அவனின் நெஞ்சில் கை வைத்தவள் அவனை பின்னால் தள்ள முயன்றாள்.

அவன் செண்டி மீட்டர் கூட நகரவில்லை.

"என்னை விட்டு தள்ளி நில்லு இனியா.." இயலாமையின் வலி தந்த கோபத்தில் கொஞ்சம் பெரும் குரலில் சொன்னாள் சந்தியா.

இனியன் கிண்டல் பார்வையோடு ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

அவனின் நெஞ்சில் ஒரு குத்து விட்டாள் அவள். அவனுக்கு வலிக்கவில்லை என்ற போதும் ஆச்சரியம் அதிகமாக இருந்தது.

"இனி என்னை தொட்டு பேசாத.." என்றவள் அவனை தாண்டிக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள். அவளை தடுத்து நிறுத்த முயன்றான் இனியன். ஆனால் சந்தியா சராலென அவனை தாண்டி சென்று விட்டாள்.

பெருமூச்சோடு அடுப்பு பக்கம் திரும்பினான் இனியன். சந்தியா போன வேகத்தில் திரும்பி வந்தாள். அவளின் கொலுசொலி கேட்டு ஆச்சரியத்தோடு திரும்பினான் இனியன்.

அவனின் அருகில் வந்து அவனது நெஞ்சில் தன் சுட்டு விரல் பதித்தவள் அவன் முகத்தை பார்த்தாள். "நீ என்னை கொள்ளையடிக்க பார்க்கற.. ஆனா நான் விரும்புறவன் என் மனசை கொள்ளையடிக்கணும்ன்னு நினைக்கிறேன் நான்.. இதான் நாம. உனக்கும் எனக்கும் நடுவுல ஓராயிரம் வித்தியாசம். உன்னால உன் அதிகாரத்தை நிறுத்த முடியாது. என்னால அடிபணிஞ்சி போக முடியாது. இந்த வீட்டு பெரியவங்களுக்காகதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அத்தையை நான் மதிக்கிறேன். இன்னைக்கும் உன் ஆணவத்தை தாங்கிட்டு அதிகாரத்தை பொறுத்து போறேன்னா அதுக்கு ஒரே காரணம் அத்தை மட்டும்தான். ஆனா ஓவரா ஆடாத நீ.. அப்புறம் நான் கடுப்புல அத்தைக்கிட்ட நீ என்னை பண்ற கொடுமை அத்தனையையும் சொல்லிடுவேன்.. அதனால் நீ உன் வழியை பாரு. நான் என் வழியை பார்க்கறேன்.. அதை விட்டுட்டு என்னை நீ மயக்க பார்க்காத.." என்றவள் புடவை தலைப்பு அவன் முகத்தில் படரும் படி வேகமாக திரும்பி நடந்தாள்.

அவள் ஓரடி எடுத்து வைக்கும் முன்பே அவளுக்கும் முன்னால் நடந்த இனியன் சமையலறை வாசலுக்கு வந்து அவளுக்கு வழியை மறித்து நின்றான்.

சந்தியா அவனை முறைத்தாள். "மரியாதையா எனக்கு வழியை விட்டு தள்ளி போ.." என்றாள் சிடுசிடுப்போடு.

இனியன் நக்கலாக அவளை மேலும் கீழும் பார்த்தான்.

"டயலாக் நல்லாதான் பேசின.. ஆனா ஒன்னை நீ மறந்துட்ட.. நான் உன் மனசுக்காக அஞ்சி வருசம் காத்திருந்தேன். ஆனா நீதான் என்னை சுத்தமா பிடிக்கலன்னு சொல்லிட்ட.." என்றவன் கசப்பாக சிரித்தான். "

"உன்னை எப்பவுமே உன் வழியில போக விடமாட்டேன் நான். உன்னோட ஒவ்வொரு நாளையும் திருத்தி எழுத எனக்கு எல்லா உரிமையும் உண்டு. உன் மொத்த வாழ்க்கையையும் அடியோடு மாத்தி எழுதுற அளவுக்கு எனக்கு தைரியமும் இருக்கு. ஒன்னை மட்டும் நல்லா புரிஞ்சிக்க. உன் வாழக்கையோட மொத்த கன்ட்ரோலும் நான்தான். உனக்கு இது பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கில்ல.." அதிகாரமாக சொன்னான் அவன். அவனது குரலே சந்தியாவின் மனதில் விரிசலை தந்தது.

அவளையும் மீறி ஒற்றை துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது. இவனிடம் காதலை எதிர்ப்பார்த்தால் அது கடைசி வரையிலும் கிடைக்காது என புரிந்து போனது அவளுக்கு. அவளால் அவனது மனோப்பாவாத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவன் முன்னால் நிற்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை. "வழியை விடு இனியா..?" குரல் அவளையும் மீறி உடைந்து இருந்தது.

ஆரம்பத்திலேயே இப்படி முழுமையாக தன்னை அடக்கி வைக்க நினைப்பவன் காதல் வளர்ந்த காலம் பல சென்ற பின் எப்படியெல்லாம் தன்னை இம்சிப்பான் என பயந்து போனாள் அவள். சந்தியாவிற்கு தேவையான காதல் பூக்களும் கை கொள்ளும் தென்றலை போன்றது. ஆனால் இனியனோ ஆலத்தின் வேர் பிடுங்கும் புயலாகவே இருந்தான். இனியும் அப்படிதான் இருப்பான் என்பது அவளுக்கும் தெரியும்.

இனியன் அவளுக்கு வழியை விடவில்லை. அவளது முகம் பற்றி நிமிர்த்தினான். அவளது கன்னத்து ஈரத்தை துடைத்தான்.

"ஏன் அழற..? உன் கண்ணீர் கூட என்னோட சொத்துதான். அதனால சும்மா சும்மா அழாத.." என்றவன் அவளின் காதோரம் தன் முகத்தை கொண்டு சென்றான்.

"என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு.. உனக்கு வழி விடுறேன்.." என்றான் மெல்லிய குரலில்.
சந்தியா கொஞ்சம் நஞ்சம் இருந்த கண்ணீரையும் புறங்கையால் துடைத்துக் கொண்டு அவனை விட்டு ஓரடி பின்னால் விலகி நின்றாள்.

"ஐ ஹேட் யூ.." என்றாள் அழுத்தமான குரலில்.

இனியனின் நெஞ்சத்தில் உண்டான காயத்தின் வலி அவனது முகத்தில் தெரிந்தது. அவளுக்கு வலி விட்டு ஒதுங்கி நின்றான்.

சந்தியா அவனை குழப்பமாக பார்த்தாள். அவன் தரை பார்த்து நின்றிருந்தான். அவனை தாண்டிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் அவள்.

அவள் அங்கிருந்து சென்று சில நொடிகளுக்கு பிறகு நிமிர்ந்த இனியன் அவள் சென்ற திசையை பார்த்தான்.

அவன் அவளது பதில் இதுதான் என எதிர்ப்பார்த்துதான் கேட்டான். ஆனால் அவள் அதை சொல்லும்போது அவனால் தாங்கி கொள்ள முடியாமல் போனது. அவளது வெறுப்பை காதலாக மாற்றும் வழி அவனது மரமண்டைக்கு தெரியவில்லை. அவள் சொல்லி சென்ற வார்த்தைக்கு தான் அனுபவித்த அதே வலியை அவளுக்கும் தர வேண்டும் என எண்ணினான் அவன். காதலின் வலிகள் எப்போதும் பிரதிபலிப்பாக திருப்பி பேரழிவை தரும் என்பதை அப்போது அறியவில்லை அவன்.

இப்படி ஒரு உரையாடல் முடிந்து ஆறு மாத இடைவெளியில் அவள் தன் சுயநினைவு இழந்து மருத்துவமனை பெட்டில் படுத்திருப்பாள் என்று அவன் அறியவில்லை.

சந்தியா மயங்கி விழுந்த சேதி கேட்டு ஓடி வந்த சக்திக்கும் மகேஷ்க்கும் இவர்கள் இருவருக்கிடையே நடந்த பனிப்போர் பற்றி ஏதும் தெரியாது. தாத்தா இனியனின் அருகே வந்து அமர்ந்தார்.

"பயப்படாத ப்பா.. ஒன்னும் ஆகாது.. இது ஏதாவது சாப்பிடாத மயக்கமா இருக்கும்.." என்றார்.
ஆனால் அவனின் மனதுக்கு தெரியும் ஏதோ ஒரு பெரிய தவறு நடக்க இருக்கிறது என்பது.
"ஸார்.." இனியன் முன்னால் சற்று பயத்தோடு வந்து நின்றாள் நர்ஸ்.

"டாக்டர் உங்களை கூப்பிடுறாரு.." என அவள் சொல்லி விட்டு சொல்லவும் மருத்துவர் இருந்த அறையை நோக்கி நடந்தான் இனியன். அவனின் கால்கள் ஏனோ நடுங்கின. இதயம் எதற்காக அடித்துக் கொண்டது என்பதை அவனால் கண்டறியவே முடியவில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் அப்படி என்ன நடந்தது என்பதை இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top