நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 3 .1

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

ஓம் வாசுதேவாய நாமஹ.!

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 03


அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு மாதத்தில் அவனின் முகத்தில் இருந்த சாந்தமும் துறுதுறுப்பும் மறைந்து வேகமும் விவேகமும் நினைத்ததை அடைய வேண்டும் என்ற துடிப்பும் அவனை இந்த இடத்தில் நிறுத்தியிருந்தது. அவன் இப்போது காண்கிற லட்சியத்தில் ஒரு படி முன்னேறிய சந்தோஷத்தை அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு ஒரு தூண்டுகோலாக எடுத்துக்கொண்டான்.

அதனாலயே இதோ இன்று எட்டாக் கனி என்று நினைத்த அன்னையின் பாசத்தையும் அன்னையின் திருமுகத்தையும் காணவும் பெறவும் முதல் படி என்பது போல் ரயில் நிலையத்தில் ரயில்காக காத்துக் கொண்டு இருக்கிறான்.

காலத்தின் விதியோ சதியோ எதனை கூறுவது, இருவரும் பிரிய காரணமான இருந்த உயிரே அவர்களை இணைக்கும் பொருட்டு அதற்கான வழியை தேடிக் கொண்டு முன்னேறி செல்கிறது. இரு இணைகளும் சேரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வது போல் அவன் செல்ல வேண்டிய ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது..

வண்டி என் பெயரை சொல்லி சென்னை முதல் தொடங்கி அடுத்தடுத்த ஊர் பெயர்களை சொல்லி இறுதியாக சென்றடையும் ஊர் பெயரையும் கூறி அதன் வருகையை கச்சித்தமாக சொல்லிக் கொண்டு இருந்தது அந்த ஒலிபெருக்கி..

அதன் சத்தம் நம் வசியின் காதினிலும் விழ ,மெதுவாக எழுந்தவன் அடர்ந்து வளர்ந்த தாடியை நீவிய படியே அவன் பையை எடுத்துக்கொண்டு அவனது கம்பார்ட்மெண்ட் நோக்கி நடையிட்டான்.

ரயிலில் ஏறி அவனது இருக்கை எண்ணை தெரிந்து கொண்டு அமர்ந்தவன் பெரும் மூச்சொன்றை இழுத்து வெளியிட்டான். இந்த இடத்திற்கு வருவதற்கு அவன் விலை கொடுத்தது ஒருத்தரின் மன நிம்மதியை அல்லவா கொடுத்துள்ளான்.

அதற்குள் அவனை காண்பதற்காக ரயில் நிலையம் வந்த விபு அவனின் இருக்கை எண் தெரியாது தவிப்புடன் நின்றான்.

அதற்குள் அவனை கண்ட வசி அவனுக்கு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

" வசி எங்க டா இருக்க.?" என்று அந்த கூட்டத்தில் கத்த

"அடேய் நான் உன்ன பாத்துட்டேன் டா. அப்படியே லெஃப்ட் சைடா வா . நான் வெளியே வரேன் " என்று சொல்லி வைத்தான்.

அவனும் வசி கூறியது இடப்புறத்தில் வர ,சில நொடியிலே அவனை கண்டு கொண்டான் விபுனன். அவனை காணும் வரை இருந்த தவிப்பு மாறி கோபத்துடன் நின்றான்.

"மச்சி! நீ பண்றது சரியில்லை டா.இப்போ எதுக்கு இவ்வளோ அவசரமா போற? அப்பா பாவம் டா அவர இப்படி டென்ஷன் படுத்தி விட்டு அங்க போகனும்னு இருக்கா என்ன " என்று சீற்றத்துடன் கேட்க

"கண்டிப்பா இருக்கு மச்சி. நான் யாருக்காக போறேன் என்னோட அம்மாவ பாக்க போறேன் டா. எங்க அம்மான்னு சொல்றதை விட அவுங்க தான் எங்க ரெண்டு பேரோட உலகம்னு சொல்லலாம் டா .அப்படி இருக்கும் போது அந்த உலகம் எங்க கூட இல்லன்னா எப்படி அந்த வாழ்க்கை நல்லா இருக்கும் சொல்லு. காசு பணம் எவ்வளவு தான் இருந்தாலும் அம்மா அப்பா சொந்தம் பந்தம் கூட இருக்கிற மாதிரி வருமா என்ன .எனக்கும் குடும்பமா சந்தோஷமா எங்க அம்மா அப்பாவோட வாழனும்னு ஆசையா இருக்காதா டா. இவ்வளோ நாள் எப்படி வாழ்ந்தேன்னே தெரியல .ஆனா இனியும் அம்மாவ பிரிஞ்சி என்னால இருக்க முடியாது விபு. அது மட்டும் இல்ல எனக்கு என்னோட அம்மா அப்பாவை ஒன்னா பாக்கனும் டா.எதுக்காக அவுங்க பிரிஞ்சி வாழ்றாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா இனியும் அவுங்க பிரிஞ்சி வாழ கூடாது மச்சி. அதுனால இப்போ தான் போறேன் .எனக்கு வேற வழி தெரியல அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சி " என்று நீண்டதொரு பெரிய பதிலை அவனுக்கு வழங்கினான்.

அவனின் விளக்கத்தை கேட்ட விபுவிற்கு தன் நண்பனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலே அவன் பதில் ஏதும் கூறாமல் அமைதியாகினான்.

"சரி விபு ,நீ தான் இனி அப்பாவையும் நம்ம கம்பெனியையும் பார்த்துக்கணும். எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரமாவே நான் அம்மாவ கூட்டிட்டு இங்க வந்துருவேன். அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ மச்சி. இப்போ அப்ப கொஞ்சம் ஃபெட்பா இருப்பாரு .அதுனால அவரை நல்லா பாத்துக்கோ டா. உன்ன நம்பி தான் அவரை இங்க தனியா விட்டுட்டு போறேன் பாத்துக்கோ மச்சி " என்று விட்டு ரயிலில் ஏறினான்.

"கண்டிப்பா டா ,நான் இங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன் நீ கவலபடாம போய் உன்னோட வேலையை முடி .நீ இங்க வரும்போது அம்மாவ கூட்டிட்டு வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு கவல படாம போ " என்று வசியை ஊக்குவிக்கும் விதமாக பேசி அவனை திடப்படுத்தினான் விபுனன்.

அதற்குள் ரயில் கிளம்பும் விதமாக ஒலிபெருக்கி மூலமாக சத்தம் வர ," டேக் கேர் மச்சி " என்று வழியனுப்பி வைத்தான் விபு.

வசியும் புன்னகை முகத்துடனே அதனை ஏற்றுக் கொண்டு " யூ டூ மச்சி " என்றான்.

அடுத்த சில மணி துளியிலே ரயில் கிளம்பி விட ,வசியும் அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டு இயற்கையின் வழி வரும் அந்த அழகிய சுவாசத்தை சுவாசித்தவாறே தன் தந்தையை எப்படி சம்மதிக்க வைத்தோம் என்பதை பற்றி சிந்திக்க தொடங்கினான்.

%%%%%£%%%%%

முடிவெடுத்த அன்றைய நாளிலே அவனது அனைத்து வேலைகளையும் முடிக்கும் எண்ணத்தில் தீவிரமாக வேலையில் இறங்கி செய்ய தொடங்கி இருந்தான்.

அதற்காகவே அவனுடன் அக்ரிமெண்ட் போட்டிருந்த கம்பெனி லிஸ்ட் எடுத்து பார்த்தவன் , அவர்கள் ப்ராட்க்கெட் மார்க்கெட்டிங் பத்தி பார்த்தவன் ,உடனே விபுவை அழைத்தான்.

"சொல்லு மச்சி எதுக்கு கூப்பிட்ட " என்று கேட்க

"விபு நீ என்ன பண்றன்னா " என்றவன் கம்பெனி பெயர்களை கூறி " இவுங்க எல்லாருக்கூடயும் ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணு டா கொஞ்சம் அர்ஜென்ட் "என்றவன் தன் வேலை முடிந்தது என தலையை லேப்டேப்பில் நுழைத்துக் கொண்டான்.

விபுவும் அவன் கூறியது போலவே ,அந்த அந்த கம்பெனிகளுக்கு அழைத்து ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தான் வேறு வேறு நேரத்தில்.

அடுத்த நாளே இந்த மீட்டிங் எல்லாம் இருந்ததால் , இருவருக்கும் அதிக வேலை இருக்க போய் அன்றைய நாளை அங்கேயே கழித்தனர். அதனாலே அங்கே பாரியின் கலங்கிய நிலை யாரும் அறியா நிலை ஆகிப்போனது.

இரவு முழுவதும் வசியும் விபுவும் சேர்ந்து அட் சூட்டிற்கு தேவையான கன்டென்டையும் எங்கு எடுக்க வேண்டும் என்று சில பல இடங்களையும் யாரை வைத்து செய்வது என்று சிந்தித்து அதற்கான வேலையில் இருந்தனர். விடியற்காலையிலே வேலை எல்லாம் முடித்து ,அங்கு அவர்களுக்கு என்று இருக்கும் அறைக்கு சென்று ஓய்வெடுக்க தொடங்கினர்.

விடிந்ததும் வேகமாக எழுந்து கிளம்பி , மீட்டிங் அட்டன் செய்தனர். அனைத்து மீட்டிங்கும் சிறப்புற மாலைப்போல் முடிவடைய , அடுத்து கட்ட வேலையை தொடங்கினர். அதற்காக அனைத்து வேலைகளும் சக ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து இருவரும் வேறு வேலையை பார்க்க சென்றனர்.

இரவு பாராது இருவரின் தலைமையிலும் அந்த கம்பெனி வேகமாக செயல்பட , அதற்காகவே அடுத்த வாரத்திலே சூட் எடுப்பதற்கான பயணத்தில் வந்து முடிந்தது.

வசி நேரங்கடந்தே வீட்டிற்கு வருவதும் பாரி எழுவதற்கு முன்பே செல்வதுமாக இருக்கவே பாரியின் கவலை அவனுக்கு தெரியவில்லை. தன் மகனை நினைத்து பெரிதும் கவலை கொண்டார். அவர் குறை தீர்க்கும் இடமாக கண்ணமாவின் புகைப்படம் இருக்கும் இடமே இடமாகிப்போனது.

வசி ஊருக்கு கிளம்பும் நாள் அன்று காலையில் தான் தன் தந்தையை காணச் சென்றான் அவரது அறைக்கு. தினமும் இரவு வேளையில் அவரை கண்டு விட்டு தான் படுக்க செல்வான். ஆனால் அறைக்குள் வந்து பார்க்க மாட்டான் வெளியே இருந்தே பார்த்து விட்டு செல்வது என்று இருந்தவன் இன்று தான் அவரது அறைக்குள் பிரவேசம் செய்கிறான்.

அவன் அறைக்குள் நுழையும்போது தான் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு உள்ளே வந்தவர் ," என்ன டா தம்பி நீ இன்னைக்கு இங்க இருக்கற இந்நேரத்துக்கு வெளியல போயிருப்ப " என்று சிறிது காட்டமாகவே கேட்டார்.

அவரது குரலில் திரும்பியவன் ,தந்தையின் முகத்தில் இருந்து வந்து வந்து மறைந்து போகும் வேதனையையும் வலியையும் கண்டு அதிர்ந்தவன் அது எதற்காக என்று யோசிக்க தொடங்கிய நேரம் அவனை உளுக்கினார் பாரிவேந்தர்.

"டேய் நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உன் கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கூட ட்ரிம்ஸ்ல இருந்தா என்ன அர்த்தம் டா "

அவரது குரலில் சுயநினைவு வந்தவன் ," அது வந்து பா கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது . அதான் சீக்கிரமா கிளம்பி போற மாதிரி ஆகிடுச்சி . அதுமட்டும் இல்லாமல் எனக்கு ஒரு அட் சூட் இருக்கு பா .அதுக்காக நான் ஒருமாதம் வெளியூர் போக வேண்டி இருக்கு " என்று தன்னிலையை கூற

"சரி எப்போ போகனும் " என்று அமைதியான குரலில் கேட்க

"இன்னைக்கு இவ்னிங் அஞ்சு மணிக்கு பா " என்றான் பார்வையை தளர்த்தி. இதுநாள்வரை அவன் தந்தையின் ஆலோசனையின்றி எந்த ஒரு வேலையும் செய்தது இல்லை. ஆனால் இந்த முறை அது எதுவும் இல்லாமல் சுயமாக சிந்தித்து ஒரு முடிவெடுத்து அதை நோக்கி செல்பவனுக்கு அது சிறு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

"சந்தோஷம் டா தம்பி பாத்து பத்திரமா பொய்ட்டு வா " என்று சொல்லி அவன் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.

அதன் பின் வேகமாக நேரங்கள் கடந்து விட ,சரியாக கிளம்பும் சமையம் தன் அன்னையின் புகைப்படத்தின் முன்பு வந்த வசி ,"உங்கள பாக்க சீக்கிரமே வந்தறேன் மா . அப்புறம் நம்ம மூணு பேரும் சேர்ந்து நிம்மதியான ஒரு வாழ்க்கைய வாழலாம் " என்று நினைத்து விழி மூடி தன்னை சமன் செய்தவன் தந்தையை ஒரு நொடி ஆழ்ந்த பார்வையை பார்த்துவிட்டு கிளம்பினான்.

அவனின் பார்வையே அவருக்கு நிறைய விடயங்களை சொல்லியது போல் இருந்தது. அவன் ஏதோ முடிவெடுத்திருக்கிறான் என்பதை ஒரு தந்தையாக சரியாக புரிந்து கொண்ட பாரி அதை அவன் வாய் மொழி கேட்கும் நாளுக்காக காத்திருந்தார்.

அடுத்தடுத்த வந்த நாட்கள் வசிக்கும் விபுவிற்கும் வேலை சரியாக இருக்க , ஓய்வெடுக்கும் நேரம் கூட இல்லாமல் போனது.

எடுக்க வேண்டிய ஆட் சூட்டை திறம்பட எடுத்த வசியின் திறனை கண்டு அந்த ப்ராடெக்ட் கம்பெனிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே சிந்தனை எப்படியும் இந்த ஆட் ப்ராடெக்ட் அனைத்து மக்களையிடையும் சென்றடையும் அதைவைத்து அடுத்து கட்ட நடவடிக்கையை எப்படி தொடங்க வேண்டும் என்பதே..

எடுக்க வேண்டிய அனைத்து விளம்பர படங்களையும் அந்த ஒரு மாதத்தில் எடுத்த வசியின் குழு சொந்த ஊரை நோக்கி பயணித்தது.

வந்ததும் எடிட்டிங் டீமோடு சேர்ந்து வேலையை தொடங்கிய வசி ,அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு கம்பெனியே கதி என்று இருந்து விட்டான். விபுவை மட்டும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அனைத்து வேலைகளும் முடிந்த பின்பு தான் வசியால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. அதுவரை வேலையை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த மனம் இப்போது தந்தையிடம் தனக்கு தேவையான பதிலை எப்படி வாங்குவது என்று யோசிக்க தொடங்கியது.

அந்த நாள் அப்படியே செல்ல ஒரு முடிவை எடுத்தவன் ,அன்று இரவு தான் வீட்டிற்கே சென்றான் வசீகரன்.

வீட்டிற்கு வந்த வசிக்கு ,எப்போதும் புன்னகையுடன் காட்சி தரும் கண்ணம்மாவின் புகைப்படத்தை பார்த்து "மன்னிச்சிடுங்க மா நான் இதை பண்ணி தான் ஆகனும் .இதுனால அப்பா மனசு எந்த அளவு கஷ்ட படும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல மா. இந்த செயல் கண்டிப்பா நம்மள ஒரு குடும்பமா சேர்க்கும் .எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு " என்று நினைத்தவன் கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு உள்ளே சென்றான்.

அவனிற்காகவே காத்திருந்த பாரி ," வா டா மகனே ,இப்போ தான் உனக்கு இந்த வீடு இருக்குன்னு ஞாபகம் வந்துச்சா சொல்லு " என்று சிரித்தபடியே கேட்டாளும் காட்டமாகவே கேட்டார்.

"அப்படி இல்ல பா ஒரு வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலைய முடிச்சிட்டா நமக்கு டென்ஷன் இருக்காது பாருங்க அதான் இப்படி வேலை பாக்க வேண்டியதா போச்சி " என்று சலிப்புடன் கூறினான்.

"சரி டா அதுக்காக இப்படியா தாடி எல்லாம் வச்சி பாக்கவே சகிக்கல டா .நீ எவ்வளவு தான் தாடி வச்சி சுத்தினாலும் நான் இருக்கிற வரையுக்கும் உனக்கு மவுஸ் இல்ல தம்பி அதை நல்லா ஞாபகம் வச்சிக்கோ " என்று நக்கலாக கூறி அவனின் என்னவோட்டத்தை மாற்ற நினைக்க அவனின் பதிலோ வெறும் புன்னகை மட்டுமாகவே இருந்தது. அதில் ஒரு உயிர்ப்பு இல்லாமல் இருந்ததாக தோன்றியது பாரிக்கு..

"சரி பா எனக்கு தூக்கம் வருது நான் படுக்க போறேன் குட் நைட்டு டாட் " என்று சொல்லி அவரை இறுக்கி அணைத்தவன் அடுத்த நொடியே வேகமாக அவனது அறைக்கு மாடி ஏறி சென்று விட்டான்.

அடுத்த நாளின் விடியல் அதிரடியாக பிறந்தது .அவர் எதிர்பார்த்த நாளாக இன் நன்நாளும் அமைந்திருக்க எதை அவன் வாய்மொழியாக கேட்க நினைத்தாரோ அது கேட்க நேரிடும் போது அவரின் மனநிலை எப்படி இருக்கப் போகுதோ..

காலையில் எழுந்த பாரி ,எப்போதும் போல் பாத்துரும் சென்று தன்னை சுத்த படுத்தியவர் , உடற்பயிற்சி செய்யலாம் என்றென்னி கதவை திறந்து வெளியே வந்தவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.


அந்த அதிர்ச்சியில் "வசி " என அந்த வீடே அதிரும் படி கத்த ,அதை கண்டு கொள்ளாதது போல் அவனது வேலையை தொடர்ந்தான்.

அதாவது வீட்டின் நுழைவாயில் மாற்ற பட்டிருந்த புகைப்படத்தை கீழே போட்டு உடைத்திருந்தான். அது மட்டுமல்லாது அவர் ஞாபகமாக வைத்திருந்த குட்டி குட்டி புகைப்படமும் ஒருகையால் அவன் கிழித்து போட மறுகையில் இருந்த மதுபானத்தை அறுந்தி கொண்டு இருந்தான்.

அவனின் செய்கையில் திகைப்புற்றவர் ,அவனருகே வந்து அவனின் கண்ணத்தில் ஓங்கி அரை விட அந்த சத்தத்தை விட அவனின் சிரிப்பு சத்தம் பெரிதாக இருந்தது.

"வசி என்ன காரியம் பண்ணிட்டு இருக்க நீ " என்று கோபமாக கத்த

"என்ன டாடி உங்க கண்ணம்மாக்காக சாரி சாரி என்னோட அம்மாள அவுங்க மறந்துட்டேன் " என்று நக்கலாக சிரித்தவன் " அவுங்களுக்காக நீங்க என்னையே கை நீட்டி அடிச்சிட்டிங்கள " என்று ஆதங்கம் பட்டவன் "இதுக்கு எதாவது பண்ணணுமே " என்று பித்து பிடித்தவன் போல் அங்கும் இங்கும் நடக்க தொடங்கினான்.

அதற்குள் பாரி அவரின் கண்ணம்மாவின் புகைப்படத்தை எடுக்க போக ,"ஹான் ஐடியா வந்துடுச்சி " என்றவன் ஆங்காரமாக சிரித்தவன் ,

"தள்ளுங்க டாடி " என்று அவரை தள்ளி விட்டவன் அந்த புகைப்படத்தின் மேலே மது பாடில்லை கவுத்தி நெருப்பை பற்ற வைத்தான்.

அவன் தள்ளிவிட்டதில் தடுமாறியர் நிலைப்படுத்தி கொள்வதற்குள் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்து வைக்க , அவருக்கு ஆத்திரம் மட்டுப்படாமல் போக வசியை தன்னால் முடிந்தவரை அடித்தார். ஆனாலும் அவன் கல்லு மாதிரி அப்படியே நின்றான்.

"எவ்வளவு வேணாலும் அடிச்சிக்கோங்க டாடி. ஏன்னா நான் உங்க புள்ள ஆனா யாரோ ஒருத்தருக்காக நீங்க என்னை அடிக்கிறத என்னால தாங்கிக்க முடியாது "

அவனின் கூற்றில் இடி விழுந்தது போல் இருக்க ," டேய் அவ உங்க அம்மா டா ,அவள பாத்து யாரோ ஒருத்தர்ன்னு சொல்ற உனக்கு என்ன மூலை ஏதும் கெட்டு போச்சா என்ன " என்று சீற்றத்துடன் கேட்க

"இவ்வளோ நாள் பளிங்கு போல இருந்த மூலை இப்போ தான் சரியா வேலை செய்யுது. அவுங்க அம்மான்னு சொல்றீங்க ஆனா அதுக்கு அவுங்க நம்ம கூடல இருக்கனும். அவுங்க எங்க இங்க இருக்காங்க சொல்லுங்க " என்று கேள்வி எழுப்ப ,பாரிவேந்தர் அவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தவித்து போனார்.

" நான் பிறந்ததுல இருந்து அவுங்க நம்ம கூட இல்லையே அது ஏன் பா.? அவுங்க தான் அம்மான்னு சொல்றீங்க அப்புறம் ஏன் அவுங்க என்னைய பாக்க வராம இருக்காங்க சொல்லுங்க .அது கூட பரவால்ல பாக்க தான் வரல அட்லீஸ்ட் ஒரு போன் கால் பண்ணி பேச என்னவாம் . இதை எல்லாம் வச்சி பாக்கும்போது எனக்கு சந்தேகமா இருக்கு அவுங்க தான் என்னோட அம்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அவனின் கன்னம் பழுத்திருந்தது.

"என்ன பேசிட்டு இருக்க வசி நீ .என்ன பேசுறோம் யார பத்தி பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீயா சொல்லு .அவ உன்னோட அம்மா டா உன்ன பத்து மாசம் சுமந்து பெத்தவ .என்னைய விட அவளுக்கு தான் அதிகமான உரிமை உன்மேல இருக்கு. ஆனா அவ அதையெல்லாம் விட்டுட்டு எங்கோ இருந்து கஷ்ட படுறா .யாருக்காக அந்த கஷ்டம் எல்லாம் அனுபவிக்கிறா எல்லாம் உனக்காக, அவளோட வாழ்க்கையே நம்ம இரண்டு பேரு தான் டா. நம்மக்காக மட்டும் தான் எங்கேயோ அவ உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கா .வாய் இருக்குன்றதுக்காக என்னவெல்லாம் பேசலாம்னு அர்த்தம் இல்லை. சொன்ன சொல்லை எப்பவுமே அல்ல முடியாது வசி புரிஞ்சி நடந்துக்கோ " என்று அவனின் தவறை உணர்த்த நினைத்து பேச அவனோ எங்கோ வெறித்து கொண்டிருந்தான்.

" அவுங்க நம்மக்காக தான் வாழ்றாங்கன்னா இப்போ எங்க இருக்காங்க சொல்லுங்க அவுங்கள போய் உடனே கூட்டிட்டு வந்திடலாம் " என்க

"அ..அ..அது தெ..ரி..யா..து " என்று திக்கி திணறி சொல்ல

" தெரியாதா இல்ல தெரியாத போல் நடிக்கிறீங்களா " என்க

அவனின் கேள்வியில் அதிர்ச்சியடைந்தவர் அதனை மறைத்து கொண்டு "அது வந்து.." என்று இழுக்க

"எதுக்கு அது வந்து பொந்துன்னு இழுக்குறீங்க .அவுங்க தான் என்னோட அம்மான்னா இன்னைக்கு நீங்க அவுங்க எங்க இருக்காங்கன்னு சொல்லியே ஆகனும் டாடி .இல்லன்னா அவுங்க கொடுத்த இந்த உயிர் எனக்கெதுக்கு " என்று சொல்லி அந்த பாடில்லை உடைத்தவன் அதில் கிடைத்த கண்ணாடி சில்லை கொண்டு மணிக்கட்டில் வைத்து அழுத்தம் தர "வசி என்ன பண்ற நீ " என்று அதிர்ச்சியடைந்தவர் தடுக்க முயல அவன் இரண்டடி பின்னுக்கு சென்றவன்,

" அவுங்க எங்க இருக்காங்க சொல்லுங்க பா " என்று மேலும் அழுத்தம் தர மெதுமெதுவாக அவன் உதிரம் வெளியேற தொடங்க அதில் பயந்து போனவர் "சொல்றேன் சொல்றேன் டா " என்றவர் கை மீறி போன நிலையை எண்ணி மானசியமாக தன் கண்ணம்மாவிடன் மன்னிப்பு கூறியவர் " செம்மலபுரம் " என்று கத்தலானார்.

அடுத்த நொடியே "அதான் சொல்லிட்டேன்ல இப்போவாது அத எடுத்து போடு டா " என்று தந்தையாக தவிப்புடன் சொல்ல

அதுவரை அழுத்தம் கொடுத்ததினாலோ என்னவோ வசி அதை எடுக்கும் போது கையினில் தானாகவே கீச்சியது . அதிலிருந்து இரத்தம் சொட்ட ,பயந்து போன பாரி உடனே விபுவிற்கு அழைத்து மருத்துவரை அழைத்து வர சொன்னார்.

அவனும் சிறிது நேரத்திலே மருத்துவரை அழைத்து வர , வீட்டின் நிலையை கண்ட நொடியே எதுவோ ஒன்று தவறாக பட எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

லேசான கிழிசல் என்பதால் ஒரே ஒரு ஸ்டிச் மட்டும் போட்டு விட்டவர் ,தேவையான மருந்துகளை கொடுத்து விட்டு சென்றார்.

அவர் நிமிடமே அறைக்கு சென்று கதவை அடைத்தவன் மாலைப் போல் தான் வெளியவே வந்தான் ஒரு பேகை மாட்டிக்கொண்டு....

யாரையும் கவனியாது விருட்டென சென்று விட்டான் வசீகரன். ஒரு தந்தையாக பாரிக்கு அவனின் இன்றைய செயல்கள் அனைத்தும் கவலையை தொடுத்தது.


இதோ அதோ என்று இப்போது ரயிலில் அமர்ந்துள்ளான் வசி. அவனையும் அறியாமல் தந்தையை காயப்படுத்தியதற்காக விழியில் இருந்து கண்ணீர் துளித்தது. பாசத்தையும் அன்பையும் மட்டுமே காட்டி வளர்த்த தந்தையின் மனதை நோகடித்ததை எண்ணி மருகிப் போனான்.
 
Last edited:
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top