வண்ணத்துப்பூச்சி_1

Shivantini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
IMG-20201116-WA0053.jpg

"கயல் கயல் அடியே கயலு எழுந்திரிடி….​

பொழுது விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது,கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இழுத்து போத்திகிட்டு தூங்குறா.கல்யாணம் பண்ணி போற இடத்துல பொண்ண வளர்த்து வச்சிருக்கா பாருனு என்னதான் கொறசொல்லுவாங்க…​

வயசுக்கு ஏத்த பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல. இப்ப நீ எழுந்திரிக்க போறியா இல்லயா டி"…​

ஊகும் கயலிடம் இருந்து ஒரு அசைவும் இல்ல,போர்வையை இழுத்து தலை வரையும் மூடி அசையாமல் படுத்து இருந்தாள்.​

"எழுந்திரிடி மணி6 ஆயிட்டு நா வயலுக்கு வேற போகனும்"....​

கயலோட அம்மா தனலெட்சுமி அவள எழுப்பி பாத்திட்டு அவரால கத்தமுடியாம,​

"உன்கிட்ட கத்தி கத்தி என் தொண்ட தண்ணிதான் வத்திபோச்சி..பாரு நாளையில் இருந்து உன் அப்பார விட்டுதான் உன்ன எழுப்ப சொல்லபோறேன்…​

பொண்ணு பொண்ணுனு அவர் கொடுக்குற செல்லம் தான் நீ சொல்பேச்சு கேக்காம ஆடுற… வீட்டுல ஒரு வேலையும் பாக்குறது இல்ல, நாளைக்கு உன் அப்பார விட்டே உன்ன எழுப்ப சொல்லுறேன்.அப்ப தெரியும் நா உன்ன எழுப்புறத்துக்கே எவ்வளவு கஷ்டபடுறேனு…​

நா உன்ன பத்தி எது சொன்னாலும் என் பொண்ணு நல்ல பொண்ணுனு என் வாய அடைக்க வேண்டியது"…. என புலம்பிய படியே,கயலை வழக்கம் போலவே எழுப்ப முடியாமல் தோல்வியை தழுவி, ஒரு பெருமூச்சை விட்டு கொண்ட வயலுக்கு புறப்பட்டு சென்றார்.​

இவ்வளவு சத்தத்துக்கும் எழுந்திருக்காம தூங்கறமாதிரி நடிக்கறது வேற யாரும் இல்லைங்க எல்லாம் நம்ம ஹீரோயின் கயல்விழியாள் தான் …​

அவள பத்தி சொல்லனுமுனா இப்ப நடந்த ஒரு விசயமே போதும் அவ சேட்டைய பத்தி சொல்ல, குறும்பு தனம் நிறைந்தவள். குழந்தை மனசு போல சுபாவம் கொண்டவள். கிராமத்து பைங்கிளி… கோயில் சிலை போல அழகான உடல் வாகு, வட்டமான முகம், கோலிகுண்டு கண்கள் கூரான நாசி, துறு துறு பட்டாம்பூச்சி….ஆனா சரியான அறுந்தவாலு..அப்பாவுக்கு செல்ல பொண்ணு…​

கயலின் அப்பா சத்தியமூர்த்தி ஒரு விவசாயி,சொந்தமா சில ஏக்கர் நிலம் வச்சிருக்கார். நடுத்தரமான குடும்பம். கயல்விழி B.Ed படிச்சிட்டு, ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வெயிட் பண்ணுறா...​

அம்மா ஓட சத்தம் கேட்காமல் போகவும் போர்வையை விளக்கி விட்டு...​

"அப்பாட... தப்பிச்சடி கயலு இல்லனா இந்த அம்மா அட்வைஸ்னுங்குற பேருல நம்ம கழுத்த அறுத்துருக்கும் …​

ம் நல்ல கனவு... இந்த அம்மா வந்து எழுப்பிவிட்டுட்டு... நம்ம ஹீரோவோட டூயட் பாடும்போது தான் வரனுமா இந்த அம்மா ஒரு 10 நிமிசம் லேட்டா வந்துருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும் ….​

இப்படி புலம்பிய படியே எழுந்து பாத்துரூம்குள்ள குளிக்க சென்றாள்…​

ரூமைவிட்டு கிளம்பி வெளியே அவள்வரும் போது மணி7 ஆகிட்டு….​

அப்பா...யாருமே இல்ல இப்படியே எஸ்கேப் ஆகிடனும்.மெதுவா பூனை பாதம் வைத்து வெளியேரும் போது…​

"ஏய் நில்லுடி…"​

'ஆகா… நமக்கு இன்னைக்கு நேரம் சரியில்லையோ இதுக்கிட்ட காலையிலேயே மாட்டிக்கிட்டோம் போல இப்ப என்ன பண்ணுறது?​

(ஊரையே கதறடிக்கும் இவளையே கதறடிக்க இரண்டு பேரு இருக்காங்க அதுல ஒருத்தர் தான் இந்த அன்பரசி பாட்டி, கயலோட அப்பத்தா...இன்னொருத்தர் யாருனு கதையில போகும் போது தெரியும்)​

" என்னடி கூப்பிடறது கூட காதுல விழாதளவுக்கு அங்க நின்னுட்டு அப்படி என்ன கனா காணுற?​


"ம் எங்க தாத்தா நேத்து என் கனவுல வந்து எனக்கு இங்க ரொம்ப போர் அடிக்குது அதனால துணைக்கு உன் அப்பத்தாவ அழைச்சிக்கிட்டு போறேனாரு... அதான் இன்னமும் உன்ன அழைச்சிகிட்டு போலயேனு யோசிக்கிறேன்…​

"எடுவிளக்கமத்த… உனக்கு வர வர ரொம்ப கொழுப்பு கூடிபோச்சி...யாரடி சாகசொல்லுற…என் பேரன்கிட்ட சொல்லி உன் கொழுப்ப அடக்கல... நா அன்பரசி இல்லடி…​

"இப்ப சொன்னபாத்தி நா அன்பரசி இல்லனு அது உண்மை, நீ எல்லாம் அன்பே இல்லாதரசி…​

எப்ப பாரு என்பேரனவிட்டு அடக்குறேன்,என் பேரனவிட்டு அடக்குறேனுட்டு… நா என்ன காளமாடா அவன் என்ன அடக்க.. உன்பேரன் என்ன பெரிய இவனா, அவனையே தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடுற… சரியான வளர்ந்து கெட்டவன், பனமரம்..பனமரம்… என கயல் முனுமுனுக்கவும்,​


"என்னடி அவன் இவன்னு சொல்லுற, மரியாதையா பேசமாட்டியலோ… ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு டி.. என்பேரன் ராசாடி நா அப்படிதான் தலையில் தூக்கிவச்சி ஆடுவேன் உனக்கு என்னடி வந்துச்சி…​


" இங்க பாரு கிழவி காலையிலேயே என்கிட்ட வம்புக்கு வராத சரியா…நீ உன் பேரன தலையில வச்சி ஆடு, இல்ல இடுப்புல வச்சி ஆடு.இப்ப எனக்கு வழிய விடு, இப்ப உன்கிட்ட பதில்பேசவும் எனக்கு நேரம் இல்ல நா கெளம்புறேன்… அப்புறம் இன்னொரு விசயம் அவன அத்தான்னுலாம் கூப்பிடமுடியாது சொல்லிட்டேன் ….அத்தானா,அத்தான் சரியான பொத்தான்...என முனுமுனுத்தாள்...​


" ஆமா இவபெரிய கலெக்டர் உத்யோகம் பாக்குறா ...இவபோய் கையெழுத்து போட்டாதான் எல்லாம் வேலையும் நடக்கனும், போடி போ, போய் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு என்ன பில்டப்பு…என வேண்டுமென்றே அவளை வம்பு வளர்த்தார்..​


" இது நல்லா இல்ல சொல்லிட்டேன் கிழவி, சும்மா போனவள கூப்பிட்டு இப்படி வம்பு வழக்குறது"​

அப்பத்தா எதோ பேச வாய தொறக்கவும்,​

"இங்கபாரு கிழவி மறுபடியும் ஆராம்பிக்காத, எனக்கு இப்பவே ரொம்ப நேரம் ஆச்சி, இதுல நா உன்பொண்ணு வீட்டுக்குபோய் செண்பாவ அழைச்சுகிட்டு வேற போகனும்…​

" ஏய் நீ கெட்டுபோறது பத்தாதுனு என் பேத்தியையும் ஏன் டி கெடுக்குற…​

"ஆமா இவங்க பேத்தி பெரிய ஒழுங்கு நா சேர்ந்துதான் அவ கெட்டு போறத்துக்கு...அவளே எட்டு ஊருக்கு வாயடிப்பா… இங்கேரு கிழவி காலையிலேயே என் மூட கெடுக்காத நா வரேன்...நா திரும்பி வந்த பிறகு நம்ம பஞ்சாயத்த வச்சுக்கலாம்…​

ம்… எல்லாம் என் நேரம்… எல்லோரையும் நா வாயடைக்க வைக்கிறேனா,என்ன இந்த கிழவி வாயடைக்க வைக்குது…​

"என்னடி அங்க முனுமுனுப்பு…​

" ஒன்னும் இல்ல கிழவி நா வரேன்…​

"ஏய் சாப்பிட்டு போடி வெறும் வயிற்றோட போகாத…​

" ஓடிக்கிட்டே வேணா அப்பத்தா நா அத்தவீட்டுல சாப்பிட்டுகிறேன்…​

எவ்வளவு தான் இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் வாரிகிட்டாலும், அப்பத்தாவுக்கு கயலுனா உசுரு கயலுக்கும் அது தெரியும். அதே மாதிரிதான் கயலுக்கும் அப்பத்தானா ரொம்ப இஷ்டம்.​"அத்தே அத்தே … வீட்டுக்குள் நுழையும் போதே சத்தம் கொடுத்துக் கொண்டே போனாள்...​

'எங்க இந்த அத்தைய காணும்… அடுப்படியில் இருந்து ஏனம் உருளும் சத்தம் வரவும், அங்கே போய் கயல் பார்த்தாள்.​

"என்னத்த, இப்படி ஏனத்த போட்டு ஒடச்சிக்கிட்டு இருக்க,வெளியே வரையும் சத்தம் வருது, காலையிலேயே எங்க அத்தைக்கு யாரு மேல இப்படி கோவம்..என அத்தையின் கழுத்தை கட்டி செல்லம் கொஞ்சிகொண்டே காதில் கத்தினாள் …​

"ஏய் கயலு காதுல வந்து இப்படி கத்தாதடி... நானே செம கடுப்புள இருக்கேன்.இதுல நீ வேற என் காத செவுடா ஆக்குறமாதிரி கத்துற, உன் மாமா வேற இப்ப வீட்டில் தான் இருக்காரு…​

"என்ன வீட்டுல இருக்காரா..அதிசயம் தான் போ"​

"ஏன் டி என் புருசன் வீட்டுல இருக்கறது அப்படி என்னடி அதிசயம்…​

"இல்லையா பின்ன சேவல் கூவரத்துக்கு முன்னாடியே அப்பாரும், பிள்ளையும் வெளியே கிளம்பிருவாங்களே அதான் சொன்னேன்…சரி நா கேட்டதுக்கு பதில் சொல்லத்த என்ன கோவம் உனக்கு?​

"அது ஒன்னும் இல்லடி இன்னைக்கு உன் மாமாவோட அக்கா குடும்பம் வராங்க. அதான் காலையிலேயே அத செய்யி,இதசெய்யினு என் உயிர வாங்குறார் இந்த மனுசன்…​

நானும் தனியா எவ்வளவு தான் பண்ணுறது சொல்லு, இந்த செண்பாவ உதவிக்கு கூப்பிடலாம்னா,அவர் பொண்ண வேலை வாங்க கூடாதான். சரி பரவால்லனு நானே எல்லாம் செஞ்சிவச்சா,அவர் அக்கா ஏலட்டு நொட்ட குறை சொல்லிகிட்டு சாப்பிடுவாங்க. இன்னைக்கு முழுக்க என்ன ஒக்கார விடாம ஏவிகிட்டே இருப்பாங்க.இவரும் கண்டுகாம அமைதியா இருப்பாரு…​

"அதான் ஒரே கடுப்பா இருக்கு, ஏதோ செந்தில் இருக்குறதால கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க... அதான் இன்னைக்கு அவர் வயலுக்கு போகல.செந்திலும் ஆபிஸ் போகாம, ரைஸ்மில்லுக்கு மட்டும் போய் ஓர் எட்டு பாத்துட்டு வரேனு போயிருக்கான்..​

" அத்த நா வேணா எதாச்சும் உனக்கு செஞ்சிதரட்டுமா?​

"வேணாம் டா,பாதி முடிச்சிட்டேன். இன்னும் கொஞ்சம் தான். தம்பி ரைஸ்மில்லுல இருந்து வரப்ப கறி வாங்கிகிட்டு வரேனு சொல்லிருக்கு,அத பெறட்டி எடுத்துட்டா வேல முடிஞ்சுடும்..தம்பி வர நேரம்தான்..அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல.நானே முடிச்சிடுவேன்..​

'ஆகா அந்த பனமரம் வீட்டுக்கு வர நேரமா?அது வரதுக்குள்ள எஸ் ஆகிடனும்...சரி அத்த அப்ப செண்பா இன்னைக்கு வர மாட்டாளா?​

"அவ இப்பதான் குளிக்கவே போயிற்கா...அவ வந்தாதான் தெரியும் உன்னோட வராளா இல்லையானு…​

"என்ன இப்ப தான் குளிக்கிறாளா! இது வேளைக்கு ஆகாது அத்த நா கிளம்புறேன்… எனக்கு ஏற்கனவே லேட்டா ஆச்சி" மனசுகுள்ள 'அந்த பனமரம் வரதுகுள்ள இங்க இருந்து கெளம்பிறனும் பா,என யோசித்தாள்...​

"இருடி சாப்பிட்டுட்டு போலாம் ..​

"இல்லத்த வேணாம் நா வீட்டுலேயே சாப்பிட்டுட்டேன்..​

"பொய் சொல்லாதடி அம்மா போன் பண்ணி கயலு சாப்பிடாமா வந்துஇருக்கா சாப்பிட வச்சு அனுப்புனு சொல்லுச்சு.. வா வந்து சாப்பிடு..​

'இந்த அப்பத்தாவுக்கு என் மேல பாசத்த பொழிய இதுவா நேரம்..போன்போட்டு பாச பயிற வளர்த்து இருக்கு'​

"என்னடி யோசிக்கற.உனக்கு பிடிச்ச ஆப்பம்தான் டி பண்ணிருக்கேன் வா..​

"என்ன ஆப்பமா…ஆமாடி உனக்கு ஆப்பம்னா ரொம்ப பிடிக்கும்ல வா வந்து சாப்பிடு..​

அவ சாப்பிடுவோமா வேணாமா என யோசனையில் ஆழ்ந்தாள்.. 'சாப்பிட ஆசையா இருக்கு ஆனா அந்த பனமரம் வந்துட்டுனா என்ன பண்ணுறது?​

'வந்தா வரட்டும் உனக்கென்ன பயம்.அவன் எல்லாம் ஒரு ஆளுனு அவனுக்கு பயப்படுற,என மனசாட்சி குரல் கொடுக்கவும், அதான நா ஏன் பயப்படனும் அதுவும் அவனுக்கு போய், என தைரியமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டு அடுப்படி பக்கம் திரும்பி நடக்கும் போதே, அவளின் தைரியத்துக்கு வேட்டு வைப்பது போல, வெளியே அவனுடைய புல்லட் சவுண்ட் கேட்டது…​

கயல கலங்கடிக்கிற இன்னோரு ஆள் வந்துட்டான், அட அது நம்ம ஹீரோ தாங்க, வாங்க அவன பார்ப்போம்.. தன் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில் கம்பீரமாய் வந்து இறங்கினான் செந்தில் குமரன்...​

அவன் தன் வண்டிக்கு ப்ரேக் போட்டு நிறுத்தும் போதே, இவளுக்கு ப்ரேக் போட்டது போல நடை நின்றுவிட்டது....​

அவ்வளவு தான் அவளது தைரியம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி போயிட்டு…​

அதை தொடர்ந்து அவன் கேட்டை திறந்துக்கொண்டு நடந்து வரும் ஒரு ஒரு அடிக்கும், இவளுக்கு ஹாட் பிட் வெளியே விழும் அளவுக்கு துடிக்க ஆரம்பித்தது… அப்போது அவன் செல் போன் கரெக்ட் டையத்துக்கு இசைக்க ஆரம்பித்தது...​அந்த பாட்டை கேட்கும் போதே இவளுக்கு யாரோ நெஞ்சை இருக்கி பிழிவதை போல இருந்தது.அவளின் உள்ளே ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின... அவன் போனை எடுத்து ஹலோ என்று பேச ஆரம்பிக்கும் போதே அவனின் கம்பீரமான குரல், இவளுக்குள்ளே போய் என்னவோ செய்தது.அவளால் நிற்கக் கூட முடியாத அளவுக்கு உடல் தள்ளாடியது.அவன் ஒரு கையால் போன் பேசி கொண்டே மறு கையால் நெற்றியின் மீது விழுந்த முடியினை கோதி, கம்பீரமாக நடந்து வரும் நடையில் ஆணழகனாக இருந்தான்.அவனின் அகன்ற நெற்றியும் கூரான நாசி, சிகரெட் படாத உதடுகளும் அதனின் தெற்றுப்பல் சிரிப்பும் அவனை வசிகரனாய் காட்டியது.அவனின் சிரிப்பில் வசியப்பட்டது போல் இவள் மயங்கி சிலையாய் நின்றாள்…​

 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN