என் நெஞ்சுநேர்பவளே -13

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
13

" உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க.. இப்படி ஓவரா வேலை வாங்கிட்டே இருந்தா வேலைய விட்டு நின்னுடுவேன் பார்த்துக்கோ... "

அருகில் ரித்விக் வாய் மேல் கைவைத்து ரதியையே பார்த்துக் கொண்டிருந்தான்... ரதி அருகில் ரஞ்சி "ரதி அமைதியா இருடி... "என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்..

"ஹே சும்மா இருடி.. நானும் வந்தா புடிச்சு பாக்குறேன்.. அந்த செக்சன்க்கு போய் அத வாங்கு.. இதை கொடுத்துட்டு வா.. அந்த டீடெயில்ஸ் கலெக்ட பண்ணுனு ஆர்டர் போட்டுட்டே இருக்கான்... ஒன்னு செஞ்சு முடிக்கிறதுக்குள்ள இன்னொன்னு குடுக்கறான்...."

ஆதி "மிஸ் ஆரதி இந்த வேலையெல்லாம் செய்ய தான் உங்களுக்கு சம்பளம் குடுக்கறோம்... "என்றான் இறுகிய குரலில்..

ரஞ்சி "சாரி சார்.. இவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. "

"மிஸ் அபரஞ்சி.... நீங்க திரும்பத் திரும்ப இவங்களுக்காக பரிஞ்சுட்டு வராதீங்க.."

"சார் அது.. " என்று மறுத்து பேச வந்த ரஞ்சியை,

"அபரஞ்சி ரித்விக் ரெண்டு பேரும் என்கூட வெளிய வாங்க.. "என்ற கார்த்தி இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்..

"ரித்விக் நீ போய் மற்ற வேலையை கவனி.. அபரஞ்சி நீங்க என்கூட வாங்க.."என்றவன் அவளை அழைத்துக் கொண்டு ஆராதனைக்கு அருகில் இருந்த காபி ஷாப்க்கு வந்தான்..

ரஞ்சி "இப்ப இங்க எதுக்கு கூட்டிட்டு வந்துருக்க.. "

"ஹே நான் உனக்கு மேல் அதிகாரி.. என்ன இப்படி சட்டுனு மரியாதை இல்லாம பேசுற.. "

"அதிகாரி எல்லாம் ஆபீஸ்குள்ள மட்டும் தான்.. இங்க இல்ல.. "

"அது சரி...ரதி பிரண்ட் தானே.. "என்றான் வாய்க்குள் முனகலாய்..

"என்ன முணுமுணுப்பு.. "

"ஒன்னு இல்லமா...உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. "

"என்ன!! என்னை லவ் பன்றேன்னு சொல்ல போறியா?.. "என்று அசால்ட்டாய் அவள் கேட்கவும் இவனுக்கு புரை ஏறியது..

"இப்ப எதுக்கு இவ்ளோ ஓவரா அதிர்ச்சி ஆகுற... அத சொல்ல தானே கூட்டிட்டு வந்த.. எனக்கு அதில் எல்லாம் இன்டெரஸ்ட் இல்ல ஓகேவா.. சரி எனக்கு வேலை நிறைய இருக்கு.. நீ வேணும்னா வெட்டியா உக்காந்திரு.. நான் உள்ள போறேன்.. " என்று எழுந்து சென்றே விட்டாள்..

ரதி ஆதி விஷயத்தை சொல்லலாம் என்று அழைத்துக் கொண்டு வந்த இவன் தான் மந்திரித்து விட்ட கோழி போல் முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்...

உள்ளே ஆரதி ஆதியை முறைத்துக் கொண்டு நின்றாள்... உள்ளுக்குள் பொருமி விம்மி வெதும்பிக் கொண்டிருந்தாள்..

சுரபியை இன்று பெண் பார்க்க வருவதால் அவளை தயார் செய்த ரதியிடம் சிவகாமி,
"இந்தா தங்கம்.. இந்த புடவையை நீ கட்டிக்கோ... "என்று ஒரு புடவை பெட்டியை நீட்டினார்..

"அம்மாச்சி.. அக்காவ தானே பொண்ணு பார்க்க வராங்க.. நான் எதுக்கு கட்டணும்... ஆபிஸ் வேற போகணும்.. இதெல்லாம் கட்டிட்டு முழு நாளும் இருக்க முடியாது... "

"சுபிக்கும் உனக்கும் ஆசையா வாங்கிட்டு வந்தேன்.. கட்டிக்கோ தங்கம்.. "

"கட்டிக்கோ ரதி... அம்மாச்சி ஆசையா வாங்கிட்டு வந்துருக்கு.. "

"அதில்ல சுபி.. ஆபிஸ்ல நாள் பூரா கட்டிட்டு இருக்கணுமே... "

"அதெல்லாம் பழகிடும்டி.. கட்டிட்டு போ.."

ஆரதிக்கும் ஆசை தான்.. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு.... படபடப்பு.. ஏனோ ஆதியை புடவை கட்டிக்கொண்டு எதிர் கொள்ள தயக்கம்.. எல்லாவற்றையும் மீறி ஒரு வித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ள புடவையிலேயே ஆராதனைக்கு தயாராகி வந்திருந்தாள்...

ரஞ்சி கூட இவள் புடவையில் வந்ததை வியப்பாய் பார்த்திருந்தாள்.. "என்னடி இன்னைக்கு இவ்ளோ கலக்கலா வந்துருக்க.. "

"எல்லாம் அம்மாச்சி பண்ண வேலைடி.. நிஜமா நல்லாருக்கா.. "

"நல்லாருக்காவா !!அசத்துறடி..பாக்குறவனுங்க எல்லாம் பக்கா பிளாட்.. "

ஆர்வமாய் ஆவலாய் ஆராதனைக்குள் ரதி நுழையவும் ஆதி எதிராய் வெளியே வரவும் சரியாய் இருந்தது.... அவனைக் கண்டதும் கால்கள் நகர்வதை நிறுத்த தானாய் நின்றிருந்தாள்.. இவளை நோக்கி வந்த ஆதியோ கண்டும் காணாமல் பொதுவாய் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட மலையளவு ஏமாற்றம் வளர்ந்து நின்றது...
தன் இயல்பையும் மீறி திரும்பி அவனைப் பார்த்தாள்.. அவன் பார்ப்பானா என்று...

அவனோ 'ஆதி அப்பிடியே ஓடி போயிரு.. நின்னு பார்த்துட்டு இருந்த இவ இங்கயே பிளாட் ஆக்கி படுக்க வச்சுருவா.. அப்புறம் இன்னைக்கு செய்ய வேண்டிய சம்பவம் மிஸ் ஆகிரும்.. வந்து கவனிச்சுக்கலாம்.. செல்லக்குட்டிய'என்று திரும்பி பார்க்காமல் கூட பறந்து விட்டிருந்தான்..

ஆரதி கடுப்பில் கரைந்து கோவத்தில் கொதித்து கிடைத்த கேப்பில் எல்லாம் ரஞ்சி ரித்விக் கார்த்தியை பிழிந்து கொண்டிருந்தாள்...

கார்த்திக்கும் ரித்விக்கிற்கும் ஆதிதான் காரணம் என்று ஒருவாறு புரிந்து தான் இருந்தது.. ஆனால் ரஞ்சி தான் மண்டை காய்ந்து போனாள்.. எது பேசினாலும் எரிந்து விழுந்த ரதி இவளுக்கு புதிது....

அவளை பொறுத்த வரை ரதி எதற்கும் அலட்டிக்கொள்ளாத ரகம்.. வீட்டில் இருந்து நன்றாக வந்தவள் இங்கு வந்ததும் இப்படி எரிந்து விழுவதன் காரணம் புரியவில்லை... அதனால் வழக்கம் போல் ரதியுடன் வாயாடாமல் அமைதியாகவே இருந்தாள்..

மதியம் போல் ஆராதனைக்கு வந்த ஆதி என்றும் இல்லாத திருநாளாய் ரதியை தங்கள் அறைக்கு அழைத்தான்..

காலையில் இருந்த கோவம் சற்று நீரு பூத்திருக்க அமைதியாகவே வந்தாள்..

"சொல்லுங்க சார்.. "

"புது ப்ரோக்ராம் ஒன்னு வந்துருக்கு.. சில டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணனும்.. எல்லாரையும் கொஞ்சம் மீட்டிங் ஹால்க்கு வர சொல்லுங்க... "

"ஓகே சார்.. "என்று விட்டு வெளியில் வந்தவள் 'இதை போன்லயே சொல்லுருக்க வேண்டியது தானே.. இம்சை புடிச்சவன்.. 'என்று திட்டிக்கொண்டே அவன் சொன்னது போல் அனைவரையும் அழைத்துக் கொண்டு மீட்டிங் ஹால் சென்றாள்..

ஈரோட்டில் நடக்கவிருந்த அமைச்சர் ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இவர்களிடம் ஒப்படைக்க பட்டிருந்தது...

ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.. ரதியுமே ஆவலாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.. அவள் இங்கு சேர்ந்த பிறகு வரும் பெரிய நிகழ்ச்சி இது..

மற்றவர்களை பேச விட்டு ரதியை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.. கண்களில் கருப்பு நிற கூலர் அணிந்திருந்தான் வசதியாக.
.
மீட்டிங் ஒருவழியாய் நடந்து முடிந்தது அனைவரும் சென்று விட ரதியை மட்டும் இருக்க சொன்னான்..

" ரதி இன்னைக்கு டிஸ்கஸ் பண்ணுன டீடெயில்ஸ் எல்லாத்தையும் கொஞ்சம் மொத்தமா ஹிண்ட்ஸ் போல எடுத்து தாங்க.. "என்று சொல்லவும் அவனை முறைத்துக் கொண்டே செய்ய ஆரம்பித்தாள்...

"ஆரும்மா.. " என்ற அவன் அழைப்பில் சட்டென ஆதியை பார்த்தாள்.. அவன் போனில் படு பிஸியாக எதையோ செய்து கொண்டிருந்தான்.. அப்படி பாவ்லா செய்து கொண்டிருந்தான்.. வழக்கம் போல் கனவுதான் என்று நினைத்துக் கொண்டு அவன் சொன்ன வேலையை செய்து முடித்தாள்..

"சார் முடிச்சுட்டேன்... "

"ஓகே.... ரித்விக் கிட்ட அந்த தேதில எந்த மண்டபம்லாம் பிரீயா இருக்குன்னு லிஸ்ட் வாங்கிட்டு வாங்க.."

பல்லை கடித்துக் கொண்டு அவன் சொன்னது போல் வாங்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.. அதை வாங்கியவன் ஓரமாக டேபிள் மேல் வைத்துவிட்டு,

"மிஸ் குப்பம்மா.. இன்னைக்கு என்ன புதுசா புடவைல வந்துருக்கீங்க... யாராச்சும் பொண்ணு பார்க்க வந்தங்களா என்ன... "

சுள்ளென மூண்ட கோவத்திலும் எதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்..

"என்ன எதுவும் பேச மாட்டீங்கறீங்க.. ஏன் அந்த மாப்பிள்ளைய பிடிக்கலையா... "

"உன்னை தவிர யாரு வந்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன்.. " என்றாள் பட்டென..

"ஓ.. சூப்பர்.. நல்லபடியா கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு..... "

வேகமாய் அவன் அருகில் வந்தவள் " பின்ன உன்ன நினைச்சுட்டு ஆயுசு முழுக்க இருக்க சொல்றியா.. "

"ஹ்ம்ம் இதுதான்.. இந்த நிலை இல்லாதது தான் அந்த வயசுல வர லவ் எல்லாமே.. பாரு எவ்ளோ சீக்கிரம் என்னை மறக்க வச்சிருச்சுன்னு.. "

'ஆதி போதும் ரொம்ப செல்லத்தை சீண்டாத..'என்ற மனதை அடக்கினான்.. 'கோவப் படும் போது ஜோரா இருக்கா.. ரசிக்க விடாம ஏன் டிஸ்டர்ப் பண்ற.. பார் எவ்ளோ நெருக்கத்துல நிக்குறான்னு.. எனக்கு வேற கை பறபறங்குது... சின்னதா ஒரு ஹக் வேணுமே.. '

'கட்டிப் புடிச்சுத் தான் பாரேன்.. சேரை தூக்கி மண்டைல போட்டுருவா ஆதி.. அதுக்குலாம் இன்னும் நேரம் இருக்கு.. பொறுமை பொறுமை '

இப்படி தனக்குள்ளாய் பேசிக் கொண்டிருக்க வெளியில் மட்டும் விறைப்பாய் கோவமாய் முகத்தை வைத்திருந்தான்..

"என் லவ்வ பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல.. " என்றவள் சற்று தூரம் சென்று மீண்டும் அவனிடம் வந்து "இப்பவும் ஒன்னு சொல்றேன் நீ மீண்டும் எப்பயாச்சும் லவ்வுன்னு என் முன்னாடி வந்து நின்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. "என்று விட்டு சென்றுவிட

'அதெல்லாம் எதையும் செய்ய விடாம கட்டி போடுற கலை தெரியும் செல்லக்குட்டி.. "இவன் மனதுக்குள் கொஞ்சி நின்றான்..

மீண்டுமாய் அவள் எழுதிக் குடுத்து ஹிண்ட்டில் ஏதோ சந்தேகம் என்று அவர்கள் டிபார்ட்மென்ட்க்கு வந்து ரதியிடம் கேட்கவும் இருந்த கடுப்பை மொத்தமாய் கொட்ட முடியாமல் தான் அதிக வேலை வாங்குவதாக சொல்லி அவனை திட்டியது...

கார்த்தி ரஞ்சி ரித்விக்கை வெளியே அழைத்துச் சென்று விட ரதியின் அருகில் சென்றான்..

"என்ன இந்த வேலைய விட்டுட்டு நாளைக்கு பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹவுஸ் வைப்பா இருக்க போறியா.. "

"ஆமாம் அப்பிடித்தான் வச்சுக்கோ.. நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம்.. "

"ஆமாமாம் இங்கயே இருந்தா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பேன் தானே.. அதுக்கு பயந்து தான ஓடுற.. "என்றவனின் சட்டைக் பிடித்து அவனை தன் முகம் நோக்கி குனிய வைத்தவள்

"இந்த முகம் என்னை ஒரு காலத்துல ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்துச்சு தான்... இந்த கண்ணு ஒரு முறையாச்சும் ஆசையா பார்க்காதான்னு ஏங்கி நின்னேன் தான்... ஒரு தடவையாச்சும் உன் கைக்குள்ள என் முகத்தை பொத்தி வச்சுக்க மாட்டையான்னு கனவு கண்டவ தான்.. எல்லாமே இப்ப கனவு மாறி ஆகி போச்சு..

உன்னை இப்ப பாக்கும் போதெல்லாம் கோவம் மட்டுமே வருது.. நீ பேசுன பேச்சு மட்டுமே நியாபகம் வருது.. உன்கிட்ட ஆசைப்பட்டதும் போதும் இப்ப வெறுப்பா விலகி நிக்கிறதும் போதும்.... இனி எப்பவும் உன்னை பாக்கவே வேண்டாம்... "
கண்களில் வழிந்தோடும் நீரை துடைத்துக் கொண்டு வேகமாய் வெளியேறினாள்... எதிர்ப்பட்ட ரஞ்சியையும் அழைத்துக் கொண்டு ஆராதனையை விட்டே சென்றுவிட்டாள்..

இருவரும் போவதை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த கார்த்தி, இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்த ஆதியை பார்த்தான்..

"என்னடா ஆச்சு.... "

"சீக்கிரம் எல்லாத்தையும் நடத்தி முடிக்கணும்டா.. இதுக்கும் மேல அவளை பிரிஞ்சு இருக்க கூடாது... "என்றான் உறுதியாய்..

வீட்டிற்கு வந்ததும் இறங்கிய ரஞ்சியிடம் "இனிமே நான் அங்க வேலைக்கு வரல ரஞ்சி.. நீ மட்டும் போய்ட்டு வா.. "

"நீ இல்லாம நான் எங்கயும் போக மாட்டேன்..சோ வீட்ல இருந்துட்டு சுபி அக்கா கல்யாணத்தை என்ஜோய் பண்ணப் போறேன்... "

"ஆமால்ல மறந்தே போய்ட்டேன்.. மாப்பிளை வீட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியல.... வா அத மொதல்ல போய் கேப்போம் "என்றவாறே உள்ளே வந்தனர்..

இவர்கள் உள்ளே வரவும் "அம்மா ரதிகிட்ட கேக்காம நீங்க எந்த முடிவுக்கும் வராதீங்க.. என்று சுபி சொல்லவும் சரியாக இருந்தது..

"ஹே என்கிட்ட என்ன கேக்கணும்.. என்ன சுபி நான் பார்த்து ஓகே சொன்னா தான் மாப்பிள்ளைய கட்டிக்குவியா.. நான் தான் முன்னாடியே போட்டோ பார்த்து ஓகே சொல்லிட்டேனே.. "

"அதில்லடி இது வேற பிரச்சனை.. "

"வேற என்ன.. "

"நான் சொல்றேன் தங்கம்.. நீ இங்க வா.. " என்று ரதியை அழைத்து அவர் அருகில் அமர வைத்தார் சிவகாமி..

"என்னம்மாச்சி பில்டப் எல்லாம் பலமா இருக்கே.. "

"அதொன்னும் இல்ல தங்கம்.. வந்தவங்களுக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு.. அவங்க பையன் ரெண்டு பேருக்கும் ஒரே வீட்ல இருந்து தான் பொண்ணு எடுப்பங்களாம்.. இந்த வரனை கொண்டு வந்தவங்க இந்த விஷயம் சொல்லாம விட்டுட்டாங்க..

இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து சொல்லி தான் விஷயமே தெரிஞ்சுது..நம்ம சுபிய மாப்பிள்ளைக்கு ரொம்ப புடிச்சு போச்சுது.. விடவும் மனசு இல்ல....

மாப்பிள்ளையோட தம்பி உன் விருப்பத்தை கேக்குறாங்க.. நாங்க உன்னை கேட்டு சொல்றோம்னு சொல்லிருக்கோம்.. நீ சரின்னு சொன்னா அவங்களுக்கு விவரம் சொல்லிட்டு நேரே நிச்சயம் வச்சுக்கலாம்.. இல்லனா வேற மாப்பிள்ளை தான் பாக்கணும்.. " என்ற சிவகாமியின் பேச்சில் திகைத்து போய் நின்றாள்.. இப்படி ஒரு பிரச்சனையை அவள் சற்றும் எதிர் பார்க்கவே இல்லை...

"ரதிம்மா நீ என்னடா சொல்ற.. "என்ற திரு கேட்கவும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை..

மீனா "உனக்கும் கல்யாண வயசு தான ரதி.. சுபிக்கு ஜாதகம் சரியா அமையாததுனால இவ்ளோ தூரம் தள்ளி வந்துருச்சு.. இப்ப தான் அந்த சாமி புண்ணியத்துல ரெண்டு பேருக்கும் நல்லபடியா அமைஞ்சுருக்கு.. உனக்கு ஓகே தான ரதி.. "

இவ்ளோ நாள் கழித்து சுபிக்கு நல்ல வரன் அமைந்தது.. அலுவலகத்தில் ஆதியிடம் பேசியது.. இரண்டும் சேர்ந்து ரதியை சம்மதமாய் தலையாட்ட வைத்துவிட்டது..

அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க அவர்கள் முன்னே பொம்மையாய் புன்னகைத்தவள் தங்கள் அறையில் வந்து குளியல் அறைக்குள் புகுந்தவள் சத்தமில்லாத அழுகையில் கரைந்தாள்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN