"சந்தியா.." என்றபடி வந்த இனியனை என்னவெனும் விதமாக திரும்பி பார்த்தாள் சந்தியா.
அவன் அவளது ஸ்ட்ரச்சரில் சற்று தடுமாறிவிட்டான். ஒரு கையால் ஜன்னலின் கம்பியை பிடித்தபடி பாதியாக திரும்பி நின்று தன்னை பார்ப்பவளை கண்கள் மின்ன பார்த்தான். அவளது காலில் இருந்து மெல்ல மெல்ல பார்வையை உயர்த்தினான்.
"என்ன பிகர்.!!?" அவன் முணுமுணுக்கவும் சந்தியா முகம் சிவந்தது.
'இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா.?' என நினைத்தாள்.
'ஆமா. நீ அவனை ரசிக்காத மாதிரிதான் சாம்பிராணி வேஷமும் சன்னியாசி வேஷமும் போடுவ..' மனசாட்சி இப்படி சொல்லவும் 'என்னோட மிக பெரிய எதிரி என் மனசாட்சிதான்..' என நொந்து கொண்டாள்.
சூழலை இயல்புக்கு கொண்டு வர நினைத்தவள் பாட்டி தந்த திருநீறை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்குள் இதய துடிப்பு அதிகமான நேரத்தில் அவன் நெற்றியில் திருநீறை இட்டாள்.
"பாட்டி கோவிலுக்கு போயிட்டு வந்தாங்களாம்.." என்றவள் திருநீறை இட்டு விட்டு கையை இறக்க அவனின் முகத்தின் முன்னால் கை இருக்கும் போதே கையை பற்றினான் இனியன்.
"எ.. என்ன..?"
"நீ அழகா இருக்க.."
'நீயும்தான்..' என சொல்ல துடித்த நாவை மிகுந்த சிரமத்தோடு அடக்கி கொண்டாள்.
"நாளைக்கு என்னோடு ஒரு இடத்துக்கு வா.." என்றான் அவன்.
"எதுக்கு..?" இயல்பாக எழுந்தது கேள்வி.
"ஏன் எதுக்குன்னு அத்தனை விவரமும் சொன்னாதான் வருவியா..? உன்னை கடலை மிட்டாய் கடையில வித்துட்டு அதுக்கு பதிலா மிட்டாய் வாங்கி சாப்பிட போறேன்.."
"நீ செஞ்சாலும் செய்வ.." என முனகியவளை கொலை வெறியோடு பார்த்தான் இனியன். இத்தனை நேரம் இருந்த மொத்த சூழலும் நொடியில் அடியோடு மாறி போனது.
"உனக்கு ஆண்டவன் அதிகமா பேச்சை தந்துட்டான். அதுக்கு பதிலா கொஞ்சமா மூளையையும் தந்திருந்தா ஆகியிருக்கும்.."
அவள் தன் கையை விடுவித்து கொண்டு அவனை விட்டு விலகி நின்றாள்.
"அப்படி மூளையை தந்திருந்தா நான் ஏன் உன் கூட இருக்க போறேன்..?" அவள் அமைதியாக இருந்தாலும் அவளது வாய் அமைதியாக இருக்க மறுத்தது. உதடு தாண்டி விட்ட சொற்களுக்காக அவள் வருத்தப்பட்டாள். அவளது வார்த்தைகள் அவனையும் புண்படுத்தி விட்டிருந்தது.
"உனக்கு மூளையே வேண்டாம்.. இன்னும் ஆயிரம் ஜென்மம் ஆனாலும் முட்டாளாவே இரு.. எனக்கு அதுல பிரச்சனையே இல்ல.." என்றவன் அறையின் கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியே நடந்தான்.
சந்தியா தன் நெற்றியில் அறைந்துக் கொண்டாள். தனது வாழ்க்கையை தானேதான் கெடுத்து கொள்கிறோமோ என எண்ணி வருத்தப்பட்டாள்.
இனியன் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தான். இருளில் இருந்த சுற்றுப்புறம் மின்விளக்கு ஒளியால் புதிதான சாம்ராஜ்யத்தை நிறுவிக் கொண்டிருப்பதை போல இருந்தது.
கைப்பிடி சுவற்றின் மீது ஏறி அமர்ந்தான். வானத்து நட்சத்திரங்களை பார்த்தான்.
"உங்களை போலவே என் காதலும் எனக்கு எட்டாத விசயமாயிடுச்சி.." என அவன் சோகமாக வானம் பார்த்து சொல்லிய நேரத்தில் அவன் அருகே சலசலப்பு கேட்டது. திடுக்கிடலோடு திரும்பி பார்த்தான். இருள் கண்களுக்கு பழகி விட்ட காரணத்தால் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ரகு அவனது பார்வைக்கு தென்பட்டான்.
"ரகு..?" கைப்பிடி சுவற்றில் இருந்து கீழே இறங்கி நின்றபடி கேட்டான்.
"லைட் கூட போடாம இங்கே ஏன் உட்கார்ந்திருக்க..?" இனியன் கேட்டதை கண்டு சிரித்தான் ரகு.
"நீங்களும் லைட் போடாமதான் வந்து உட்கார்ந்திங்க.." என்றான் பதிலாக.
இனியன் நேரடி பதிலை சொல்லாமல் சுவற்றின் மீது சாய்ந்து நின்றான்.
"இங்கே என்ன பண்ற..?" என கேட்ட இனியனின் குரலில் இயல்பாகவே அதிகாரம் இருந்தது. ஆனால் அதை ரகு பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"சும்மாதான்.. அருணாவை அவங்க வீட்டுல அடிச்சிருப்பாங்களோன்னு பயம். அதான் இங்கே வந்து அவளை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.."
இனியன் புரிந்துக் கொண்டவனாக தலையசைத்தான்.
"நீங்க என்ன பண்றிங்க இங்கே..?"
"நான் சும்மா மொட்டை மாடியை சுத்தி பார்க்க வந்தேன்.." என்றவன் வானத்தை பார்த்தான்.
"அவளுக்கும் உங்களுக்கும் நடுவுல பிரச்சனையா..?" ரகு இப்படி கேட்கவும் அவனை முறைத்தான் இனியன். அவன் முறைப்பதை அந்த இருளிலும் ரகுவால் உணர முடிந்தது.
"ஸாரி.. உங்க பர்சனல் விசயம் பத்தி கேட்க கூடாதுதான். ஆனா அவ என் பிரெண்ட். நீங்க அவளை கொடுமை பண்ற மாதிரி எனக்கு தோணுது.." ரகு இப்படி சொல்லவும் இனியன் விழுந்து விழுந்து சிரித்தான்.
"நான் அவளை கொடுமை பண்றேன்னா..? எதனால இப்படி சொல்ற..?"
"அவ உங்களை பயத்தோடும் வெறுப்போடுதான் பார்க்கறா.. ஆக்ராவுல அவளுக்கு தெரியாம சின்ன வீடு ஏதும் செட்டப் பண்ணிட்டிங்களா.? அதனாலதான் அவளுக்கு இவ்வளவு கோபமா.?" ரகுவின் கேள்விக்கு இம்முறையும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் இனியன்.
"நல்ல கற்பனை வளம் உனக்கு.." சிரிப்போடு சொன்னான்.
அவன் சிரித்து முடிக்கும்வரை காத்திருந்தான் ரகு.
"இவளை கல்யாணம் பண்ணத்துக்கே உயிரோட டார்ச்சர் பண்றா.? இதுல நான் இன்னொன்னு செட்டப் பண்ணி.?"
"அப்புறம் ஏன் அவ உங்களை பார்த்து பயப்படுறா..? ரெஸ்டாரண்ட்ல கூட நீங்க அவளை மிரட்டலாதான் பார்த்திங்க.."
"அது என் இயல்பு. பார்வையில் கொஞ்சல் இருப்பவங்க மட்டும்தான் நல்லவங்கன்னா நான் கெட்டவனா இருந்துக்கிறேன். தேனா பேசி எதிரில் இருப்பவங்களை மெழுகா உருக வைக்கிறவங்கதான் நல்லவங்கன்னா நான் கெட்டவனாவே இருந்துக்கிறேன்.."
ரகு என்ன பதில் சொல்வதென தெரியாமல் இருந்தான்.
"உடம்புல வலி இப்ப எப்படி இருக்கு..?" அக்கறையாக கேட்டான் இனியன்.
"இப்ப பரவால்ல. நீங்க அஞ்சி நிமிசம் லேட்டா வந்திருந்தா கூட அந்த போலிஸ் என்னை சாமிக்கிட்ட அனுப்பி வச்சிருப்பாரு.. தேங்க்ஸ்.."
இனியன் தலையசைத்தான்.
"இங்கேயே நிற்க போறியா.? நான் கீழே போறேன்.." என இனியன் சொல்ல அவனோடு இணைந்து கீழே நடந்தான் ரகு.
"என்ன வேலை பண்ற நீ..?" இனியன் யோசித்து கேட்டான்.
"நிலா நிறுவனத்தோட சீப் செகரட்டரியா இருக்கேன்.."
"ஓ.."
"நான் உங்களை விட மூணு வருசம் பெரியவன்.." என ரகு சொல்ல இனியன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.
தன்னை விட பெரியவனை வா போ என அழைத்தது அவனுக்கு சிறு வருத்தமாக இருந்தது.
"ஸாரி. நீங்க பெரியவர்ன்னு தெரியாது.."
"பரவால்ல.. என் வேலையை விட உங்க பதவி உயர்ந்தது. வயசு வித்தியாசம் மேட்டரா..?"
"இருந்தாலும் பெரியவங்களை வா போன்னு கூப்பிட்டிருக்க கூடாது இல்லையா..?"
"வயசை விட மத்த எல்லாத்திலும் என்னை விட சீனியர் நீங்க. நான் என் காதலி வீட்டுல சம்மதம் வாங்க கூட முடியாம இருக்கேன். ஆனா நீங்க அஞ்சாவது வருச கல்யாண நாள் முடிஞ்சி ஆறாவது வருசமே கொண்டாட போறிங்க.."
இனியனுக்கு அவன் சொன்னது சிறு நாணத்தை தந்தது. இருபது வயது கூட முடியாத போது திருமணம் செய்துக் கொண்டது வெளியே யாரிடமாவது சொல்லுகையில் சிறு தயக்கத்தை தந்தாலும் மனைவி சந்தியா என நினைக்கும் போது அவனால் தான் செய்ததை தவறென நினைக்க முடியவில்லை.
"ஓ.. சீனியர்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா..? சரி உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். இரண்டு பேரும் வா போன்னு கூப்பிட்டுக்கலாம்.." என்றான் முடிவாக.
ரகுவும் அதற்கு ஒத்து போனவனாக சரியென தலையசைத்தான்.
இனியன் நாளை தன்னை எங்கு அழைத்து போக போகிறான் என யோசனையோடு இருந்தாள் சந்தியா. அவளால் சரியாக எதையும் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை நிஜமாவே கடலை மிட்டாய் கடையில் விற்க போகிறானோ என நினைத்து தன் நினைப்புக்கு சிரித்தும் கொண்டாள்.
அவளின் யோசனையையும் சிரிப்பையும் கலைக்கும் விதமாக ஃபோன் ஒலித்தது. இனியனின் போன்தான் மேஜை மேல் இருந்தபடி ஒலித்துக் கொண்டிருந்தது. தன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது ஃபோனை மேஜை மீது வைத்தவன் அதை எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டான் என்பதை புரிந்து கொண்டவள் ஃபோனை எடுத்தாள்.
மை டார்லிங் என்ற பெயரே சந்தியாவிற்கு பூகம்பத்தை தந்தது. அடுத்ததாக ஸ்க்ரீனில் தெரிந்த ரியாவின் புகைப்படம் அவளை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
"யார் இது.?"
அவள் ரியாவை பற்றி கேள்விபட்டுள்ளாளே தவிர அவளின் புகைப்படத்தை பார்த்தது இல்லை. இந்த ஐந்து வருடத்தில் இனியனை மட்டுமல்லாமல் அவனோடு சம்பந்தப்பட்டவர்களையும் தன்னிடமிருந்து விலக்கியே வைத்திருந்தாள் சந்தியா.
தன் செல்வா அப்பாவின் செல்லமகள் பள்ளி மாணவியாகவோ இல்லை சிறு பெண்ணாகவோ இருப்பாள் என நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு போன் ஸ்க்ரீனில் இருந்த ரியாவின் புகைப்படம் அதிர்ச்சியை தந்தது இயல்பே.
மாடர்ன் உடையின் பெயரை அவள் அறியவில்லை. ஆனால் ஒரு பக்கம் தோள் பகுதி முழுமையாக தெரியும்படி இருந்தது அந்தக் கவர்ச்சி உடை. முத்தம் தரும் ஸ்டைலில் உதடு குவித்து எடுக்கப்பட்டிருந்த அந்த செல்பியை ரியாதான் இனியன் மொபைலில் வைத்திருந்தாள்.
அந்த பெயர் கூட அவளே பதிந்து வைத்ததுதான்.
சின்ன பெண்ணின் விளையாட்டு என எண்ணி இனியனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது சந்தியாவிற்கு மிக பெரிய விசயம்தான். ரியாவின் முகப்பாவமும், அவளது உடையின் அதீத கவர்ச்சியும், ஸ்க்ரீனில் தெரிந்த பெயரும் அவளுக்கு ஏதேதோ எண்ணத்தை தந்தது. யோசிக்காமலேயே இனியன் மீது மிக பெரிய தவறு உள்ளதாக எண்ணிக் கொண்டாள்.
அவள் இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த அழைப்பு துண்டாகி மீண்டும் ரிங் ஆனாது. அறிய முடியா உணர்வோடு அழைப்பை ஏற்று காதில் ஃபோனை வைத்தாள்.
"ஹலோ.. மாமா.. ஐ மிஸ் யூ.." என்றவள் அதை தொடர்ந்து போனில் முத்தங்களை வழங்க ஆரம்பித்தாள். சந்தியா அந்த நொடியிலேயே நடுங்கும் கரங்களை தடுக்க இயலாமல் ஃபோனை கீழே விட்டுவிட்டாள்.
தளும்பி நிற்கும் கண்ணீரோடு தரையில் கிடந்த ஃபோனை பார்த்தாள். அதிக விசையோடு விழாத காரணத்தால் அது இன்னும் நன்றாகவே இருந்தது. ரியா "மாமா.. மாமா.." என அழைப்பது சிறு ஓசையாக சந்தியாவின் காதுகளில் விழுந்தது.
அவளுக்கு அவளது மொத்த உலகமும் பொய்யாய் போனது போல இருந்தது. ஆக்ராவில் எவளையோ காதலியாக வைத்துக் கொண்டு தன்னிடம் காதல் வசனம் பேசிவிட்டானே என நினைத்தாள். மொத்த உடலும் நடுங்கியது அவளுக்கு. பார்த்த நொடியில் காதலித்து அடுத்த இரு நாட்களிலேயே தன்னையே ஆக்கிரமித்தவன் இந்த ஐந்து வருடத்தில் எத்தனை பேரோடு சல்லாபித்து இருந்தானோ என நினைத்தவளுக்கு தான் இனி இந்த உலகத்தையே கண் கொண்டு பாராமல் மண்ணில் புதைந்து விட வேண்டும் என்று தோன்றியது.
ஏமாற்றம் இத்தனை பெரிய வலியை தரும் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
Word count 1024
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
FOLLOW
SHARE