நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா கீழே விழுந்து கிடந்த போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். போனின் அழைப்பு சில நொடிகளுக்கு பிறகு கட் ஆகி விட்டது. ஆனால் அவளால் அந்த போனில் ஒலித்த குரலை மறக்க முடியவில்லை.

"ஹலோ மாமா.." என்று காதோரம் பேச்சு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

"எனக்கு என் மாமனார்ன்னா சுத்தமா ஆகாதுப்பா.." என ரகு சொன்னதற்கு இனியன் சிரிக்கும் சத்தம் சந்தியா காதுகளில் விழுந்தது.

அவசரமாக கீழே இருந்த போனை எடுத்து மேஜை மேல் வைத்தாள்.

"அப்புறமா பார்க்கலாம்.." என ரகுவிடம் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தான் இனியன்.

சந்தியா எதிர் திசையில் திரும்பி தன் கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். ஆனால் கண்ணீர் ஒரு எதிரி. துடைக்க துடைக்க அதிகமாகும். அப்படியே விட்டால் கூட சற்று நேரத்தில் ஓய்ந்து விடும். அவளுக்கும் அப்படிதான் அழுகை அதிகமானது. அதை விட கோபம் பன் மடங்கு பெருகியது. எதற்கென அந்த கோபம் என அவளுக்கும் தெரியவில்லை.

"சந்தியா.." என்றபடி கட்டிலில் வந்து அமர்ந்தவன் மேல் தலையணையை தூக்கி வீசினாள்.

"என் பேரை சொல்லாத.." என்றவளின் குரலில் அழுகையும் கோபமும் கலந்திருந்தது. அவள் விசிறியடித்த தலையணை அவன் முகத்தின் மீது பட்டது. அடிப்படவில்லை என்றாலும் குழப்பம் அவனை பிடித்துக் கொண்டது. அவளது குரலில் இருந்த மாற்றம் இன்னும் குழப்பியது.

"என்ன ஆச்சி உனக்கு..?" என கேட்டவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்தாள் அவள்.

"நீ திமிரு பிடிச்ச எருமை மாடுன்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா நீ ஒரு பொம்பள பொறுக்கின்னு இப்பதானே தெரியுது.." அவள் சொன்னதை கேட்டு கோபத்தோடு படக்கென எழுந்து நின்றான் அவன்.

இந்த ஐந்து வருடத்தில் அவன் ஒரு பெண்ணை கூட ஏறெடுத்து பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் இப்படி ஒரு வீண் பழி அவனுக்கு கோபத்தை தந்து விட்டது. அதை விட அதிகமான கோபத்தை தந்தது தன்னை பிடிக்கவில்லை என சொன்னவள் இப்படி சொன்னதுதான்.

"நான் பொம்பள பொறுக்கியா இருந்தா உனக்கென்ன வந்தது.? நான் எப்படி இருந்தா உனக்கென்ன.?" பதிலுக்கு கோபமாக கேட்டான் இனியன்.

"அப்படின்னா நான் எதையும் கேட்க கூடாதா..? நீ யாரு கூட எப்படி இருந்தாலும் நான் கேட்க கூடாதா..?" கன்னம் தாண்டி விட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்டாள் அவள். அவளது கண்ணீரே அவள் அவனை இன்னும் நேசிக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. ஆனால் அதை சொல்லமாட்டாள் என்பதை நன்றாக அறிவான் அவன்.

தான் ஒரு திமிர் பிடித்தவன் என அவன் வெளிப்படையாக ஒத்துக் கொண்ட அதே நேரத்தில் அவள் தன் பிடிவாதத்தை விட்டு தராமல்தான் இருந்தாள்.

அவளை நெருங்கி வந்து அவளது முகத்தை பற்றினான். "என்னை பிடிக்கலன்னு சொன்னவளுக்கு நான் எப்படி இருந்தா என்ன.? நான் பொம்பள பொறுக்கிதான்.. அதுக்கு இப்ப என்ன.? பொண்டாட்டி மாதிரி நீ என்னை ஏன் கேள்வி கேட்கற.?"

'உன்னை பிடிச்சிருக்கு' என அவள் சொல்வாளா என எதிர்பார்த்தான். இருளில் சூரியன் வராது என தெரிந்தும் சூரியனை அழைக்கும் மடத்தனம் இது என அவனும் அறிவான். ஆனால் குருட்டுதனமாகவேனும் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என காத்திருந்தான்.

அவனது கையை தட்டி விட்டு தள்ளி நின்ற சந்தியாவிற்கு அவன் தன்னை பொம்பள பொறுக்கி என சொல்லி கொண்டது கேட்டு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒற்றை சொல் மறுத்து சொல்லமாட்டானா என ஏங்கியிருந்த மனம் இப்போது விம்மி அழுதது. அவன் கேட்ட கேள்விகள் அவளுக்கு இன்னும் அதிகமாக காயத்தை தந்தது.

புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

"நீ மட்டும் ஏன் இப்படி இருக்க..? நம்ம வச்சி ஏமாத்திட்ட நீ.." என்றவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.
அவனுக்கு சிரிப்பாக வந்தது. 'இவ மட்டும் ஏன் இப்படி இருக்கா..?' என நினைத்தான்.

"உன்னை நான் நம்ப வச்சேன்னு சொன்னதை கூட ஏத்துக்கலமா. ஆனா நீ எப்ப என்னை நம்பின.?" அருகிலிருந்த சுவற்றில் தலை சாய்ந்து கேட்டவனை முறைப்போடு பார்த்தாள்.

"எல்லாமே உன் தப்புதான்.. என் லைப்ல நீ வந்ததே தப்புதான்.. ஐ ஹேட் யூ.."

அவன் தன் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டான். அவளது பேச்சில் வெறுப்பு இல்லை கோபம் மட்டும்தான் என்றாலும் கூட அதுவே அவனுக்கு ஆறா ரணத்தை தந்தது. பிடிக்கவில்லை என ஆயிரம் முறை பொய் சொல்பவள் பிடிக்கிறது என ஒரு முறையேனும் உண்மை சொல்வாளா என எதிர்ப்பார்த்தான்.

"ஆமான்டி ஆத்தா.. நான் உன் வாழ்க்கையில வந்ததே தப்புதான்.. ஆனா அதுக்காக உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா.?" என கேட்டு பைத்தியம் போல் சிரித்தான். அவள் தன் பிடிவாதத்தை விடும்வரை தன்னையும் தன் ஈகோ விடாது என நினைத்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.

"இதுவரைக்கும் நடந்ததுல நான் எந்த தப்பையும் பண்ணல.. நான் உன் அனுமதி இல்லாம உன்னை தொடல.. உன் அனுமதி இல்லாம உன்னை கட்டிக்கல.. உன்." அவன் சொல்லும் முன் அவள் இடை புகுந்தாள்.

"நான் உன்னை கட்டிக்கலன்னுதான் சொன்னேன்.." எதற்கு இதை சம்பந்தம் இல்லாமல் சொல்கிறோம் என அவளுக்கே புரியவில்லை.

"ஆமா.. அதுவும் தாலி கட்டுற நேரத்துலதானே.." என்றவன் பல்லை கடித்தபடி அவளை பார்த்தான்.

"என் அம்மா அப்பா உன்கிட்ட சம்மதம் வாங்கி ஊரையெல்லாம் கூப்பிட்டு கல்யாண ஏற்பாடு செஞ்சா நீ மணமேடையில பிடிக்கல்லன்னு சொல்வியோ.. இதை பாருடி நான் இப்படிதான்.. எனக்கு அதிகாரம் பண்ணதான் தெரியும்.. ஆணவம் எனக்கு எக்கச்சக்கம்.. உன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் அவசியம் எனக்கு கிடையாது. உன்னை காதலிக்கும் முன்னாடி காதலிக்கறதா பொய் சொன்னது தப்புதான். அதுக்கு ஸாரி சொல்லிட்டேன். ஆனா அதுக்காக உன் காலுல விழுந்து கெஞ்சுவேன்னு மட்டும் நினைக்காத.. என்னை பிடிக்கலன்னு சொன்னவளுக்கு என்னை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது. நான் இதுவரைக்கும் பொம்பள பொறுக்கி இல்ல. ஆனா இனி அப்படிதான் இருக்க போறேன்.. தினம் ஒருத்தியோடு சுத்த போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.." என சொன்னவன் தன் பைக்கின் சாவியை தேடினான்.

மேஜை மேல் இருந்த பைக் சாவியை கண்ட நொடியில் பாய்ந்து எடுத்துக் கொண்டாள் சந்தியா. இனியன் அவளை ஆத்திரத்தோடு பார்த்தான்.

"சாவியை கொடுடி.."

"கொடுக்க மாட்டேன்.. இன்னைக்கு இந்த விசயத்தை பேசி தீர்க்காம நான் உன்னை விடமாட்டேன்.. நான் ரகுவோடு பேசியது தப்புன்னு நீ சொல்லி அடிக்கும்போது உன்னை நான் ஏன் கேள்வி கேட்க கூடாது.? நியாயம் ஒரே மாதிரிதானே இருக்கணும்.." அவனிடம் நியாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை என தெரிந்தும் கேட்டாள் அவள்.

"இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.. நான் உன்னை கேள்வி கேட்பேன். அடிப்பேன்.. ஏனா நான் உன்னை காதலிக்கிறேன்.." அவன் இதை சொல்லும்போது அவள் உள்ளம் அழுகையை நிறுத்தி விட்டு துள்ளி குதித்தது.

"ஆனா என்னை கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாது. ஏனா நீ என்னை காதலிக்கல.." என அவன் சொல்ல சற்று முன் பிரகாசமடைந்த அவளது முகம் அதிகமாக இருளடைந்தது.

"உன்னை காதலிச்சாதான் கேள்வி கேட்கணுமா..? நான் உன் பொண்டாட்டி.. உன்னை கேள்வி கேட்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. எனக்கு உன்னை பிடிக்கலதான். ஆனா அதுக்காக நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை கண்டுக்காம அமைதியா விடுவேன்னு நினைக்காத.. ஊருல நாலு பேர் சந்தியா புருசன் ஒரு பொம்பள பொறுக்கின்னு சொன்னா அந்த இடத்துல என் பேரும்தான் டேமேஜ் ஆகும்.." என்றவளிடம் 'இதுல எந்த லாஜிக் இருக்கு.?' என கேட்டது மனசாட்சி. அவள் தன் மனசாட்சிக்கு பதில் சொல்லும் முன் அவனும் இதையேதான் கேட்டான்.

"இதுல என்னடி லாஜிக் இருக்கு.? என்னை பிடிக்கலன்னு சொல்ற உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.? உனக்கே பதில் சொல்ல நினைக்காத நான் ஏன் ஊருல எவனோ பேசுறதுக்கு கவலைபடணும்.?" என்றவன் அவள் கையில் இருந்த சாவியை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டான்.

இங்கிருந்தால் சண்டைதான் அதிகமாகும் என்றும் தனது நாவே தன்னை படு குழியில் தள்ளும் என்றும் புரிந்துக் கொண்டவன் அதை தடுக்க நினைத்து வெளியே புறப்பட்டான். இப்படிபட்ட சமயத்தில் அவனுக்கு போக இருந்த ஒரே இடம் மாந்தோப்புதான். அவனோடு பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருப்பதும் மூர்த்திதான். மகளின் அக்கப்போர் தாங்காமல் தந்தையிடம் செல்ல நினைத்தான் இனியன்.

"எனக்காக வெயிட் பண்ணாம தூங்கு.. நான் நைட் லேட்டாதான் வருவேன்.." என்றவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு கதவை நோக்கி நடந்தான். அவன் எங்கு செல்கிறான் என அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் எவளுடனோ சுத்ததான் கிளம்பி விட்டான் என நினைத்தாள். அந்த நினைப்பே அவளுக்கு மனதில் வலியை தந்தது.

அவனுக்கு முன்னால் பாய்ந்து வந்து நின்றவள் கை காட்டி அவனை மறித்தாள்.

"நீ எங்கேயும் போக முடியாது.. நீ என்ன சொன்னாலும் நான் உன்னை வெளியே அனுப்ப மாட்டேன்.. யார் அந்த மை டார்லிங்.? அவ ஏன் உன்னை மாமான்னு கூப்பிடுறா.? அவ எதுக்கு உனக்கு போன்ல முத்தம் தரா.?" அவள் வார்த்தைகள் அத்தனையிலும் கோபம் டன் கணக்கில் இருந்தது.

இனியனுக்கு இப்போதுதான் விசயம் புரிந்தது. ரியா போன் செய்து உள்ளாள் என புரிந்துக் கொண்டவனுக்கு அவள் ஏன் முத்தம் தந்தாள் என்றுதான் புரியவில்லை. அதை பற்றி அப்புறமாக அவளிடம் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

"அவ செல்வா மாமா பொண்ணு.." என இனியன் சொன்னதும் சந்தியா அதிர்ச்சியோடு தன் வாய் மீது கை வைத்தாள்.
"அவ செல்வாப்பா பொண்ணு ரியாவா.? அப்படி டிரஸ் பண்ணி இருந்தா.. பொன்லயே அத்தனை முத்தம் தரா.. இந்த அஞ்சி வருசத்துல என்னவெல்லாம் நடந்திருக்கும்.?" மனதில் நினைப்பதாக நினைத்து வெளியே பேசிக் கொண்டிருந்தவள் கவலையும் துக்கமும் தாங்காமல் தலையை பிடித்தாள்.

அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"அஞ்சி வருசமா ஒரே வீட்டுல இருந்திருக்காங்க.. அவ முகமே காட்டுது அவ கேரக்டரை.. அவ மாமா மாமான்னு போன்ல கொஞ்சியபோதே தெரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கணும்.. இது எதுவுமே சரி கிடையாது.. நான்தான் முட்டாள்.." அவள் தலையை பிடித்தபடி சொல்ல, இனியனின் இதயம் அவளது வார்த்தைகளால் உடைந்தது.

word count 1027

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top