நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா சொன்னது இனியனை வேதனைபடுத்தி விட்டது.

"ரியா கேரக்டரை ஜட்ச் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு..?" இனியன் தன் மனதின் வலியை மறைத்தபடி அவளிடம் கேட்டான்.

இனியன் இப்படி கேட்டது சந்தியாவை நிலைதடுமாற செய்துவிட்டது.

"முன்ன பின்ன பார்க்காத ஒரு பொண்ணோட கேரக்டரையே இப்படி சொல்றவ என்னை பொம்பள பொறுக்கின்னு சொன்னது ஒன்னும் அதிசயம் இல்ல.." மிக மிக அமைதியாக சொன்னான் இனியன். ஆனாலும் அவனது வார்த்தைகள் அனைத்தும் மிக பெரிய வலிகளை சுமந்து இருந்தது வெளிப்படையாகவே சந்தியாவிற்கும் தெரிந்தது.

தான் பேசும் வார்த்தைகள் இனியனை கஷ்டப்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்த அவளால் தன் மனதில் உள்ளதை பேசாமல் இருக்க முடியவில்லை.

"அடுத்தவ புருசனுக்கு ஃபோன்ல முத்தம் தரவ கேரக்டரை ஜட்ச் பண்ண எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.." கோபத்தோடு பறந்தன அவளது வார்த்தைகள்.

"அடுத்தவ புருசனா..?" என கேட்டு சிரித்தவன் "அடிக்கடி இப்படி சொல்லுடி.. இல்லன்னா நான் ஒருத்திக்கு புருஷனா இருக்கற விசயமே மறந்துடும்.." என்றான் சிரிப்பினூடே.

"எனக்கு கல்யாணம் ஆன விசயம் ரியாவுக்கும் அத்தைக்கும் தெரியாது.." சிரித்து முடித்து அவன் சொல்ல அவள் இன்னும் அதிர்ந்து போய் நின்றாள்.

"கல்யாணம் ஆன விசயம் தெரியாதா..? ஏன்..? அதுதான் உனக்கு நல்ல சௌகர்யமா..? கல்யாணமாகி பொண்டாட்டி இருக்கறது தெரிஞ்சா அவளுக்கு உன்னை பிடிக்காதுன்னு நீ இதை சொல்லலையா..?"

தன் முன் நின்றிருந்தவளை குழப்பதோடும் கோபத்தோடும் பார்த்தான் இனியன்.
"இன்னைக்கு உனக்கு திடீர்ன்னு என்னடி ஆச்சி..? நேத்து வரைக்கும் நீ யாரோ நான் யாரோன்னு இருந்தவ இப்ப மட்டும் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கற..?"

இதற்கு சந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை. கணவனவனை விலக்கி வைக்கவும் வெறுக்கவும் ஆயிரம் மடங்கு உரிமை தனக்கு உண்டு என நினைத்து இருந்தவளுக்கு இன்று அவனிடம் கேள்வி கேட்கையில், வெறுப்பால் இயலாது அன்பு இருந்தால்தான் கேள்வி கேட்க முடியும் என்ற நியதி சற்று பின்னடைவை தந்து விட்டது.

"நா.. நான் கேள்வி கேட்க கூடாதா..?" என்றவள் அவன் ஏதோ சொல்ல வரும் முன் கை காட்டி தடுத்தாள்.

"கரெக்ட்தான்.. நான் யாரு கேள்வி கேட்க..? என்னை யூஸ் பண்றது மட்டும்தான் உனக்கு தேவை. எங்க அப்பாவை பழி வாங்க அன்னைக்கு என்னை யூஸ் பண்ண.. இன்னைக்கும் அதேதான் தொடருது. காதலிக்கறவன் எவனும் இப்படி பொம்பள பொறுக்கியா அடுத்தவளோடு கொஞ்சிட்டு இருக்க மாட்டான்.. அன்னைக்கு ஏமாந்தது போல இன்னைக்கு ஏமாற மாட்டேன்.. நீ எவ கூட எப்படி போனாலும் இனி எனக்கு எந்த கவலையும் இல்ல.." என்றவள் அவனின் வழியிலிருந்து விலகி நின்றாள்.

இனியனின் முகத்தில் ரத்த ஓட்டம் நின்று விட்டது. அவளுக்கு தன் மேல் துளியும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கையே இல்லாத இடத்தில் காதலை எதிர்ப்பார்த்தது தனது தப்புதான் என உள்ளூர வெம்பினான். இவளை காதலித்தது தனது வாழ்வின் மிக பெரிய சாபம் என நினைத்தவன் தன் முன் தலை கவிழ்ந்து நிற்பவளை வெறுப்போடு பார்த்துவிட்டு வெளியே நடந்தான்.

அவன் சென்றதும் கதவை சாத்திவிட்டு அதே இடத்தில் கதவின் மீது சாய்ந்து அமர்ந்தாள் சந்தியா. அவளுக்கு அவன் மீது காதல் உண்டு. ஆனால் அதை சொல்ல இயலாது அவளால். அவன் அவளுக்கு தந்த ஏமாற்றம் அவ்வளவு பெரிய ஒன்று. இரண்டு நாளா நான்கு நாளா என்பது முக்கியம் இல்லை. அவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்தாள் அவள். அவன் சொன்னதை நம்பி தன் முழு காதலையும் தந்தாள். ஆனால் அவனோ பழி வாங்க பயன்படுத்தினேன் என சொன்னான். அந்த நாட்கள் தந்த காயங்கள் ஐந்து வருடங்கள் ஆன பிறகும் துளியும் ஆறவில்லை. அவனை காதலித்தாள் அவள். ஆனால் மன்னிக்க மறுத்தாள்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருந்தவளை இன்று இன்னும் அதிகமாக காயப்படுத்தி விட்டான் இனியன். ஆனால் இவளின் சந்தேகம் அவனை காயப்படுத்தி உள்ளதை கண் கொண்டும் பார்க்க மறுத்து விட்டாள் இவள்.

இனியன் மாந்தோப்பிற்கு வந்தபோது மூர்த்தி அங்கு இல்லை. மரத்தடி ஒன்றின் கீழ் இருந்த கயிற்று கட்டிலில் விழுந்தவன் வானம் பார்த்தான்.

"எதுக்காக இவளை நான் லவ் பண்ணேன்..? ஊருல உலகத்துல எத்தனை கோடி பெண்கள் இருக்காங்க.. ஆனா இவ ஏன் என் வாழ்க்கையில வந்தா..?" புலம்பிக் கொண்டிருந்தவன் ஜில்லென வீசிய தென்றல் காற்றில் உடல் சிலிர்த்து உறங்க ஆரம்பித்து விட்டான்.

தோப்பின் பின்பக்க கேட்டை சாத்தி விட்டு வந்த மூர்த்தி உறங்கி கொண்டிருக்கும் இனியனை கண்டதும் அமைதியாக அவன் அருகே அமர்ந்தான். குழந்தை போல் முகம் கொண்டு கள்ளம் கபடமற்று உறங்கிக் கொண்டிருந்த இனியனை கண்டு அவனுக்குள் விளக்க முடியாத ஒரு பாச இணைப்பு உண்டானது. மூர்த்தி இனியனின் உருவத்தில் மயங்கி விட்டான்.

உறங்கி கொண்டிருந்தவனின் மேல் போர்வை ஒன்று கொண்டு வந்து போர்த்தி விட்டான். இனியனும் போர்வையின் கதகதப்பில் நன்றாக ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தான்.
வீரய்யா கொண்டு வந்து சென்ற உணவை சற்று முன்தான் உண்டிருந்தான் மூர்த்தி. உண்ட மயக்கத்தில் இனியனின் அருகில் இருந்த கட்டிலில் சும்மா தலை சாயலாம் என படுத்த அவனும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.

இரவு உணவின் போது அனைவரும் இனியன் எங்கே என சந்தியாவை கேட்டனர். முக்கிய வேலையாக வெளியே சென்றுள்ளான் என சொன்னவள் இரவு நடுநிசி ஆனபிறகும் தூக்கம் வரவில்லை. ஜன்னலில் நின்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையில் செல்லும் பைக் எல்லாமே அவனுடையதுதானோ என எதிர்ப்பார்த்தாள். ஆனால் இனியன் வரவேயில்லை.

சந்தியாவிற்கு தோன்றியது அத்தனையும் எதிர்மறை எண்ணங்களே. கண் விழித்து நின்றிருந்தவளின் முன்னால் இனியன் பெண்கள் சிலரோடு சிரித்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வந்து போயின.

விடிய விடிய ஒரே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தாள் அவள். தான் அவனால் கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியம் ஆகிறோம் என்பதை அவள் உணரவேயில்லை.

காக்கைகள் கரையும் குரல் கேட்டு கண் விழித்த இனியன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
மாந்தோப்பிலேயே உறங்கி விட்டோம் போல என நினைத்தவன் தன் மேல் உள்ள போர்வையையும் அருகே உறங்கி கொண்டிருந்த மாமனையும் பார்த்தான். எழுந்து அமர்ந்து கை விரல்களில் நெட்டி முறித்தவன் கட்டிலை விட்டு கீழே இறங்கினான். கொட்டாவி விட்டபடியே போர்வையை மாமன் மீது போர்த்தியவன் வண்டியில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தான்.

அரை இருள் இன்னும் இருந்தது. அதிகாலைக்கான அடையாளமாக ஒரு சிலர் மட்டும் பாதைகளில் தென்பட்டனர்.

"என்னா தூக்கம்டா சாமி.." பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு உடலை சோம்பல் முறித்தவன் வீட்டின் கதவை தட்டினான்.

கதவு தட்டப்பட்ட சில நொடிகளில் படீரென கதவை திறந்தாள் சந்தியா.

"நைட்டெல்லாம் எங்கே இருந்த..? ஏன் உன் போன் ஸ்விட்ச் ஆஃபா இருந்தது..?" கதவு திறந்த அதே வேகத்தில் கேட்டாள் அவள்.

"வீட்டுல எல்லோரும் தூங்கறாங்க.. கத்தி பேசாதடி.." என்றவன் அறையை நோக்கி நடந்தான். அவனை பின்தொடர்ந்து ஓடி வந்தாள் சந்தியா.

"இப்ப நீ எவ கூட சுத்திட்டு வந்தன்னு சொல்லலன்னா நான் இந்த மொத்த வீட்டையும் கத்தியே எழுப்பிடுவேன்.." மூச்சிறைக்க அவள் சொன்னாள்.

இனியன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளை இழுத்து கொண்டு அறைக்கு வந்தான். அறைக்குள் வந்ததும் கையை விட்டவன் அவளை கோபத்தோடு பார்த்தான்.

"என்னை தப்பாவே பார்ப்ப, என்னை தப்பாவே நினைப்பியா நீ..? நான் எவ கூடவும் ஊர் மேய போகல.. என் போன்ல சார்ஜ் காலி. அதான் ஸ்விட்ச் ஆஃப்.. மாந்தோப்புக்கு போனவன் அலைச்சல் தாங்காம உன் அப்பாவோடு சேர்ந்து மாந்தோப்புல தூங்கிட்டேன்.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னு தெரியும்.. நீ இதை உன் அப்பாக்கிட்டயே கேட்டுக்கோ.." என்றவன் கட்டிலில் சென்று போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு படுத்தான்.

கட்டிலில் உறங்க முயன்று கொண்டிருந்தவனை சந்தியா வேதனையோடு பார்த்தாள்.
இரவெல்லாம் கண்விழித்து அவனுக்காக காத்திருந்தாள் அவள். அவன் மாந்தோப்பில் இருந்து வந்தது அவளுக்கு மிக மகிழ்ச்சியே. ஆனால் நான் இங்கு அவனுக்காக துடித்திருப்போம் என்பதை இவன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லையே என எண்ணியவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

தனது காதலை ஏமாற்றினான். தனது நம்பிக்கையை பெற ஒரு நொடி யோசிக்கவில்லை என்றாலும் தன்னை பற்றி தன் மனம் பற்றி ஒரு நொடி யோசிக்க மறந்து விட்டானே என எண்ணி உள்ளூர வெம்பினாள். இனி இவன் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்க கூடாது என முடிவெடுத்து விட்டாள்.

கண்கள் மூடி உறங்க முயன்றுக் கொண்டிருந்தவனுக்கு சந்தியா சற்று முன் கேட்ட கேள்வி ஆத்திரத்தை தந்துக் கொண்டிருந்தது. 'என்னை பொம்பள பொறுக்கியாவே முத்திரை குத்திடா இவ.. கொஞ்சம் கூடவா என் மேல நம்பிக்கை இல்லாம போச்சி..' என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

இருவரும் தங்களின் மனதில் என்ன ஓடுகிறது தங்களுக்கு எவ்வளவு வலி உள்ளது என்பதை மட்டுமே பார்த்தனரே தவிர மற்றவர்களின் மனதில் என்ன ஓடும் என்பதை யோசிக்க மறந்து விட்டனர்.

மாசியின் வீட்டில் இருந்தனர் மகேஷின் மொத்த குடும்பமும். ஒரு ரவுடி இரண்டு போலிஸ் என ஒரு கூட்டமே அருணாவை பெண் கேட்டு போயிருந்தனர். ரகுவின் மீது ஆயிரம் கோபம் என்றாலும் வந்தவர்கள் பெரிய இடம் என்பதால் அவர்களை வாசலிலேயே திருப்பி அனுப்ப இயலவில்லை அவர்களால்.

"இவன் என் மகனை போல.. உங்க பொண்ணை இவனுக்கு கட்டி வைங்க.. இவன் நல்லபடியா கவனிச்சிப்பான்.." என்றான் மகேஷ்.

"உங்க மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் மகேஷ்‌.. ஆனா இவனுக்கு எங்க வீட்டு பொண்ணை கொடுக்கறதுங்கறது நடக்காத ஒரு விசயம்.. எங்களோடது எவ்வளவு பெரிய குடும்பம் எப்படிப்பட்ட பரம்பரைன்னு உங்களுக்கே தெரியும்.. இவனுக்கு எங்க பொண்ணை கொடுத்தா எங்க மரியாதை என்னத்துக்கு ஆகும்..?" என கேட்டார் மாசி.

"இவன் நல்ல பையன். இவனுக்கு அந்த பொண்ணை கட்டி வைக்கிறதால என்ன ஆகிட போகுது..?" சக்தி கோபத்தை மறைத்தபடி கேட்டாள்.

"அனாதை பையனுக்கு பொண்ணை கொடுத்தா நாளைக்கு அவ நிலைமை என்னத்துக்கு ஆகும்.?" என்றார் அவர்.

அவர் சொன்னதை கேட்டு ரகுவின் முகம் கறுத்து போய் விட்டது. வெளியே போக எழுந்து நின்றவனை கை பிடித்து அமர வைத்தான் இனியன்.

"அனாதைக்கு பொண்ணு கொடுக்க விருப்பம் இல்லன்னா இவனை உங்க வீட்டோட மாப்பிள்ளையா வச்சிக்கங்க.." என்றான் அவன்.

இனியனை அதிர்ச்சியோடு பார்த்தான் ரகு.

word count 1041
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top