நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவ சுந்தரி வீட்டின் காலிங்பெல் மீண்டும் ஒலித்தது.

"இந்த கொலையை அவதான் பண்ணி இருப்பான்னு எல்லோரும் சொல்லும் போது கூட நான் நம்பவே இல்ல சார்.. ஆனா அவ ரூமை க்ளீன் பண்ணும்போது கிடைச்ச இந்த கத்தியை பார்த்த பிறகுதான் அவ யாருன்னு தெரியுது.." என சிவப்பு சட்டைக்காரன் சொல்ல இனியனுக்கு குப்பென தாக்கியது அதிர்ச்சி.

"அவதான் கொலை பண்ணி இருப்பான்னு எல்லோரும் சொன்னாங்களா.? ஆனா ஏன்.?" என்றான் தன் பதட்டத்தை மறைத்தபடியே.

"அவளை எங்க பெரியம்மா இங்கே கூட்டி வந்ததே வீட்டு வேலை செய்யதான் சார். ஆனா இந்த ரூமை பாருங்க.. வேலைக்காரியோட ரூம் மாதிரியா இருக்கு.. அவ ஒரு பச்சோந்தி சார்.. ஒரு நாகம் போல.. எப்ப எப்படி மாறுவான்னும் தெரியாது.. யாரை எப்படி மயக்குவான்னும் தெரியாது.. அவ இங்கே வந்த கொஞ்ச நாளுலயே தன் பச்சோந்தி குணத்தால பெரியம்மாவையும் மயக்கி வச்சிக்கிட்டா. கொஞ்ச நாளுல தன்னோட பசங்களை கூட பெரியம்மா மறந்துட்டாங்க.. எங்க பெரிய அண்ணன் ஃபோன்ல தினமும் புலம்புவான் சார். 'அம்மா என்கிட்ட ஃபோன்ல கூட பேச மாட்டேங்கிறாங்க.. அவங்க எங்களை சுத்தமா மறந்துட்டாங்க.. நாங்க ஃபோன் பண்ணாலும் மேகாதான் ஃபோனை எடுக்கறா.. அம்மாக்கிட்ட கொடுன்னு சொன்னாலும் கூட கொடுக்காம ஃபோனை இவளே கட் பண்ணிடுறா.. இவ வந்ததிலிருந்து அம்மாவுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கற தூரம் அதிகமாகிட்டே வருது'ன்னு சொல்வான் சார்.. இவங்களை பார்க்க போன மாசம் எங்க இரண்டு அண்ணனுங்களுமே வந்தாங்க சார்.. ஆனா கடைசியில பெரிய சண்டை ஆயிடுச்சி.. மேகா மேகான்னு இவங்க நொடிக்கு நூறு தரம் கொஞ்சியது அண்ணன்ங்களுக்கு சுத்தமா பிடிக்கல.. 'பெத்த பசங்க முன்னாடி இருக்கும் போது கூட எவளோ ஒருத்தி கூடவே பேசிட்டு இருக்கிங்களே'ன்னு இரண்டு பேரும் கத்திட்டாங்க சார்.. சண்டை பெருசாகி அம்மா அவங்க இரண்டு பேரையும் 'என் வீட்டை விட்டு போங்க'ன்னே சொல்லிட்டாங்க. அண்ணன்களும் கோபத்தோடு கிளம்பி போயிட்டாங்க.. ஆனா இவங்க அடுத்த வாரத்துலயே தன் சொத்து முழுசையும் மேகா பேருக்கு மாத்துறதா சொல்லிட்டாங்க.. 'இது சரி கிடையாது அம்மா.. நாங்க வந்து பிறகு பார்த்துக்கலாம்'ன்னு இரண்டு பேரும் சொன்னாங்க.. ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி மொத்தத்தையும் மேகா பேருக்கே பெரியம்மா எழுதிட்டாங்க.. அவ ஒரு பிசாசு சார். எங்க பெரியம்மாவை பிரைன் வாஷ் பண்ணி சொத்து எழுதி வாங்கிட்டு கொன்னுட்டா.. தன் வேசத்தால தாயையும் பிள்ளைகளையும் பிரிச்சவ சொத்துக்காக கொலையையும் பண்ணிட்டா சார்..‌ அவளை தேடி கண்டுபிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.." என்றான் சிவப்பு சட்டைக்காரன்.

"இந்த ரூம்ல எதையும் டச் பண்ணாதிங்க.. பாரன்சிக் ஆபிசர்ஸை வர சொல்றோம்.." என்ற தேவன் இனியனின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"உடனே போய் அந்த பொண்ணை அரெஸ்ட் பண்ணிடலாம் சார்.." என்றான் அவன்.

இனியன் குழப்பத்தோடே தேவனின் அருகே அமர்ந்தான். காரை ஓட்டிய தேவன் "என்ன சார் யோசனை.?" என்றான்.

"ஒரே குழப்பமா இருக்கு தேவன்.. அந்த பொண்ணுதான் கொலை பண்ணி இருப்பான்னு எனக்கு தோணவே மாட்டேங்குது.."

"அந்த பொண்ணு மேல உங்களுக்கு கிரஷ் ஏதும் வந்துடுச்சா.?" தேவன் இப்படி கேட்கவும் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான் இனியன்.

"யோவ்.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சிய்யா.." என்றான் அவசரமாக.

"கல்யாணமான ஆண்களுக்கு கிரஷ் வர கூடாதா என்ன..?" என கேட்டவன் இனியன் தன்னை முறைப்பதை கண்டு "சார் அந்த பொண்ணு ரூம்ல கொலை செய்ய பயன்படுத்திய கத்தி இருக்கு.. காலிங் பெல் சத்தம் காது பிளக்கற மாதிரி இருந்தும் இவ கதவை திறக்கல.. கொலை நடந்து ஒன்னரை மணி நேரம் கழிச்சிதான் தகவல் சொல்லி இருக்கா.. அப்படி ஒரு கொலை ஹால்ல நடக்கும்போது அவளுக்கு இது தெரியலன்னு சொல்றது கூட நம்பலாம். ஆனா ஒன்னரை மணி நேரமா அந்த கொலையை பார்க்கலன்னு சொன்னா எப்படி நம்ப முடியும்.? சொத்துக்காகவே காத்திருந்து கொலை பண்ணி இருக்கா..‌ தான் செஞ்ச கொலை தன் மேல விழ கூடாதுன்னு இவளேதான் ராமன் மூலமா காளியை இதுல இழுத்து விட்டிருப்பா.." என்று தனது முடிவை சொன்னான்.

இனியன் கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். மேகலையின் அழுத முகம் கண்ணில் வந்து போனது. எங்கேயோ ஏதோ ஒன்றை தவற விட்டதை போல இருந்தது.

சந்தியா சமையலறையில் இருந்தாள். மல்லியிடம் கேட்டு சரியான முறையில் பாயாசம் செய்வது எப்படி என கற்றுக் கொண்டிருந்தாள்.

"உங்களுக்கு சமைக்க தெரியாதா.?" என ஒரு குரல் கேட்கவும் சந்தியா திரும்பி பார்த்தாள். சமையலறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள் மேகலை.

"எங்க சந்தியாம்மா சின்ன புள்ளையிலிருந்து கிச்சன் பக்கமே வந்தது இல்ல.. இப்ப சின்ன தம்பிக்காக புதுசா கத்துக்கறாங்க.." என்று அவளுக்கு பதிலை சொன்னாள் மல்லி. சந்தியா முகம் நாணத்தால் சிறிது சிவந்தது. அவளது புன்னகை குறையாத முகம் மேகலைக்கு சிறு பொறாமையை தந்தது.

"ஓ.. நான் சின்ன பொண்ணா இருக்கும் போதிருந்து சமைக்கிறேன்.." என்றபடி உள்ளே வந்தாள் மேகலை. அவளது குரலில் இனம் புரியாத சோகம் இருந்தது.

"என்ன செய்யறிங்க.?" என்றாள் அருகில் வந்து நின்று.

"பாயாசம்.." என்று சந்தியா சொன்ன அதே வேளையில் சக்தி அங்கு வந்தாள்.

"அதுக்குள்ள ஏன் வந்துட்டிங்க அத்தை.? ஸ்டேசன்ல வேலை ஏதும் இல்லையா.?" சக்தியின் காவல் உடையை பார்த்தபடி கேட்டாள் சந்தியா.

"இந்த வீட்டுலதான்ம்மா வேலையே.." என்றவள் மேகலையின் அருகே வந்து அவளது கையில் விலங்கை பூட்டினாள்.

மேகலை அதிர்ச்சியோடு சக்தியை பார்த்தாள்.

"என்னை ஏன் அரெஸ்ட் பண்றிங்க மேடம்.?"

"தேவ சுந்தரியை கொலை பண்ண காரணத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்றோம் மேகலை.." என்றவள் அவளை முதுகில் கை வைத்து வெளியே நடத்தி வந்தாள்.

சந்தியா அதிர்ச்சியோடு அவர்களின் பின்னால் ஓடினாள்.

"நான் எந்த கொலையும் செய்யல மேடம்.. நான் ஏன் எங்க சித்தியை கொல்ல போறேன்.? என்னோட ஒரே சொந்தம் அவங்க மட்டும்தான். அவங்களை கொலை செய்ய எனக்கு என்ன பைத்தியமா.?" மேகலையின் கண்களில் கண்ணீர் உடனடியாக திரண்டு விட்டது.

"எல்லா ஆதாரமும் உங்களுக்கு எதிரா இருக்கு மேகலை.. நீங்கதான் கொலைகாரின்னு ஒத்துக்கிட்டா எங்களுக்கு வேலை முடிஞ்சிடும்.." அந்த வீட்டின் ஹாலில் நின்றிருந்த தேவன் இதை சொன்னான்.

அவனருகில் நின்றிருந்த இனியன் இன்னும் தன் யோசனையிலேயே இருந்தான்.

இனியனின் அருகே ஓடினாள் மேகலை. விலங்கிட்ட தன் கையால் அவனது கையை பற்றினாள்.

"சார் நீங்களாவது என்னை நம்புங்க சார்.. நான் அப்பாவி சார்.. என் மேல எந்த தப்பும் இல்ல.." இனியனின் கையை பிடித்தபடி கெஞ்சினாள் அவள்.

இனியன் சிலையாகவே நின்றான்.

"உங்க அப்பாவி தனத்தை கோர்டுல சொல்லுங்க மேகலை.." என்ற தேவன் சக்தியை பார்க்க, அவள் தலையசைத்து விட்டு அவளை தன்னோடு அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

தேவன் இனியனின் கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடக்க ஓடி வந்து இனியனின் கையை பற்றினாள் சந்தியா.

இனியனும் தேவனும் நின்றனர்.

"அந்த பொண்ணு பாவம் இனியா.. எப்படி அழறா பாரு.. அவளை விட்டுடேன்.." என்றாள் கெஞ்சலாக.

"மேடம் அவ கொலைக்காரி.. அவளை பார்த்து நீங்க பயப்படணுமே தவிர பரிதாபப்பட கூடாது.." என்றான் தேவன்.

இனியன் சந்தியாவின் கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தான்.

"அந்த பொண்ணு தப்பு செய்யாதவளா இருந்தா கோர்டே அவளை விடுதலை பண்ணிடும்.. நீ இதை பத்தி யோசிக்காம உன் ஃபார்ம்க்கு கிளம்பு.." என்றான்.

அவனது கையின் மீது தன் கையை பதித்த சந்தியா "நான் இன்னைக்கு பார்ம்க்கு போகல.. பாயாசம் செய்ய கத்துட்டு இருந்தேன்.." என்றாள் சிறு வெட்க குரலில்.

"மேகலை உண்மையை ஒத்துக்கிட்டா எங்க முதல் கேஸ் சக்சஸ் ஆகிடும்.. அப்புறம் பாயாச விருந்து தாராளமா சாப்பிடலாம்.. அதை பிரிட்ஜ்ல பத்திரப்படுத்தி வைங்க.‌. சார் சாயங்காலம் வந்து சாப்பிடுவாரு.. இப்போதைக்கு சார் கொஞ்சம் பிஸி.." என்ற தேவன் இனியனை இழுத்துக் கொண்டு காருக்கு நடந்தான்.

ஆபிஸ்க்கு திரும்பும் வழியில் தேவன் ஆச்சரியத்தோடு "ஒரு கொலைக்காரியை பார்த்து பயப்படாம அவளுக்கே வக்காலத்து வாங்கறாங்களே.. உங்க வொய்ப்க்கு ரொம்ப தைரியம் சார்.." என்றான்.

இனியன் சிரித்தான்.

"எங்க தாத்தா சாதி பிரச்சனைகள் செஞ்சவரு.. அவளோட அப்பா எங்க தாத்தாவுக்கு கையாளா இருந்து அவர் கை காட்டிய ஆளையெல்லாம் கை கால் உடைச்சி விட்டவரு.. எங்க அப்பா கட்டப்பஞ்சாயத்து ரவுடி.. எங்க அம்மா போலிஸ். நானும் போலிஸ்காரன்.. அப்புறம் எதுக்குயா அவ இதுக்கெல்லாம் பயப்பட போறா.?" என்றவன் மீண்டும் மேகலையின் நினைவில் மூழ்கினான்.

சக்தி பல முறை விசாரித்தும் கூட மேகலை தான்தான் கொலைக்காரி என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. வனஜா மேகலைக்கு இரண்டு மூன்று அறைகளை வேறு தந்து விட்டாள். அது இனியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"அவளை அடிக்காம விடுங்க ஆன்டி.." என்று வனஜாவிடம் சொன்ன இனியன் மேகலையின் முன்னால் சென்று நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தான்.

"உண்மையை சொல்லும்மா.. உனக்கு கிடைக்கற தண்டனை குறையவாவது நாங்க ஏற்பாடு பண்றோம்.." என்றான் இனியன்.

'எதுக்கு இவன் குழந்தைக்கிட்ட மிட்டாய் காட்டி பதில் கேட்கற மாதிரி இவக்கிட்ட கொஞ்சுறான்.?' என குழம்பி போனாள் வனஜா.

"சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல சார்.." என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் மேகலை.

"அப்படின்னா நான் கேட்கற கேள்விகளுக்கு பதிலை சொல்லு.. பாடியை பார்த்து எவ்வளவு நேரம் கழிச்சு போலிஸ்க்கு சொன்ன.?" தனது முதல் கேள்வியை கேட்டான் இனியன்.

"அப்பதான் சார் நான் என் ரூமை விட்டே வெளியே வந்தேன். வந்து பார்த்தா ஹால்ல எங்க சித்தி வெட்டுப்பட்டு இருந்தாங்க.. பக்கத்துல போய் அவங்களை உலுக்கி பார்த்தேன்.
ஆனா அவங்க ஜில்லுன்னு இருந்தாங்க.. பயந்து போய் பக்கத்துல இருந்தவங்களை கூட்டி வந்தேன்.. அவங்கதான் பார்த்துட்டு எங்க சித்தி செத்துட்டாங்கன்னு சொன்னாங்க.. அவங்களேதான் போலிஸ்க்கு ஃபோன் பண்ண சொன்னாங்க.. நானும் உடனே போலிஸ்க்கு ஃபோன் பண்ணிட்டேன்.." அழுதபடியே சொன்னாள் அவள்.

"ஆனா நீ போலிஸ்க்கு சொல்லும் ஒன்னரை மணி நேரம் முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க.. அதுவுமில்லாம தலைவலியோடு படுத்திருந்த உனக்கு பூசாரி வந்து காலிங்பெல் அடிச்சது கேட்கல.. ஆனா பூசாரிதான் கொன்னுட்டான்னு மட்டும் தெரியும்.. இது எப்படி.?" என்று குறுக்கு கேள்வி கேட்டான் தேவன்.

"அ.. அது.." மேகலை பதில் சொல்ல திணறுவதை கண்டு தனது கேள்வி திறனுக்கு சபாஷ் சொல்லிக் கொண்டான் அவன்.

"அது மட்டுமில்ல.. தேவ சுந்தரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உங்க அலமாரியில இருந்துதான் கிடைச்சது.." என்று இனியன் சொல்ல அவள் முகம் பேயறைந்தது போல மாறி போனது.

Word count 1073

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN