நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

என்னுள் மாயம் செய்தாயோ... 04

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 04


கல்லூரி வாழ்க்கையை முடித்தவள்‌ , நரேனிடம் கூட சொல்லாமல் ஊட்டியை நோக்கி சென்று விட்டாள்.

எப்போதும் ஊட்டிக்கு அவனுடனே சென்றவள் , இன்று தனித்து வர பழகிக் கொண்டாள்.

அறையே கதி என்று இருக்க தொடங்கினாள். தங்கராஜ் அமுதவேலிடம் மட்டும் ஓர் இரண்டு வார்த்தை பேசுபவள் மற்றவர்களை அறவே தவிர்த்தாள்.

எப்போதும் அவளை அழைத்து வருபவன் , சந்தியாவுடன் வருகை தந்திருந்தான்.‌ ஏன் அவளை பார்த்து கூட வருகிறாயா என்று கேட்க வில்லை. அதை விட அவளின் நினைப்பு அவனுக்கு சுத்தமாக இல்லை. காரணம் அவனுக்குள் உண்டான காதல். அந்த காதல் நீருவை மறக்க செய்தது.

அவனுக்குள் இருந்த நீரு தீடிரென்று மாயமாக மறைந்து விட்டாள். இப்போது அவன் வாழ்வின் புது அத்தியாயமாக சந்தியா அவனுடன் இருந்தாள்.

நீருவின் வலியை மறைத்துக் கொண்டு வாழத் தொடங்கினாள்‌.

அவள் தாயாக நினைத்த குழந்தையை மட்டும் சென்று பார்த்து விட்டு வருதை வழக்கமாக வைத்துக் கொண்டாள்.

இன்றோடு சந்தியா நரேன் ஊருக்கு வந்து ஒருவாரம் காலம் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை நரேன் அவளை வந்து காண வில்லை. ஏன் ஒரு அழைப்பு கூட அழைத்து நலம் விசாரிக்க வில்லை..

சந்தியாவும் நரேன்னும் ஊருக்கு கிளம்பும் நாள் வர , அந்த நாளில் தான் அவன் சந்தியாவை அழைத்துக் கொண்டு நீரு வீட்டிற்கு வந்தான்.

நீரு அவர்களின் பிணைப்பை கண்டு உள்ளுக்குள் வெதும்பினாலும் வெளியில் புன்னகையுடன் வரவேற்றாள்.

" வா திரா ! வாங்க சந்தியா ! " என்று புன்னகையுடன் வரவேற்று அவர்களை உபசரித்தாள்.

அவர்களுக்காக சுட சுட காஃபி போட உள்ளே சென்று விட , சந்தியா தான் " திரா நாம வெளியே நின்னு செல்ஃபி எடுத்துக்கலாமா " என்று ஆசையாக கேட்டாள்.

" நீ இப்போ என்ன பேரு சொல்லி கூப்பிட்ட ..?" என்று கோபப் பார்வையில் நரேன் கேட்க

" திரான்னு கூப்பிட்டேன் " என்றாள் சாதாரணமாக..

" அப்படி கூப்பிடாதா சந்தியா .அப்படி நீரு மட்டும் தான் கூப்பிடுவா.‌அவள தவிர வேற யாரும் அப்படி கூப்பிட கூடாது. உனக்கு வேணும்னா வேற பேறு வச்சி கூப்பிடு " என்றான் அதிகாரமாய்..

" அது எப்படி டா நான் உன்னோட காதலி அது மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆகிடும். எல்லாரும் கூப்பிடற மாதிரி நான் கூப்பிட்டா அது நல்லாவா இருக்கும் சொல்லு அதான் திரான்னு கூப்பிட்டேன். அதுவும் இப்படி கூப்பிட அழகா இருக்கு " என்றாள் அவனை பற்றி சிந்திக்காது..

" ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ சந்தியா. நீ என்னோட வாழ்க்கைய தான் ஷேர் பண்ணிக்க வரப் போற. அதுக்காக என்கூட இருக்கிறவுங்களும் உன்னோட வார்த்தைக்கு அடங்கி போகனுமோ இல்ல அவுங்களோட உரிமையை விட்டு கொடுக்கனும்னோ எந்த ஒரு அவசியமும் இல்ல அத புரிஞ்சுக்க நீ. அது மட்டும் இல்லாமல் எனக்கு என்னோட நீருவ தவிர யாரு திரான்னு கூப்பிட்டாலும் பிடிக்காது. எங்களுக்குள்ள சின்ன வயசுலயே நான் போட்ட சாலேன்ஜ் ஒன்னு இருக்கு நாங்க ரெண்டு பேருமே எங்களோட முழு பெயர் சொல்லி கூப்பிட மாட்டோம்.அதே மாதிரி வேற பேர் சொல்லியும் கூப்பிட கூடாது. அப்படி கூப்பிட்டா நாங்க ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க பிரிஞ்சி இருக்கனும்னு சவால் போட்ருக்கோம். அது இப்போ வரைக்கும் கடை பிடிச்சிட்டு இருக்கோம் .நீ எங்களுக்குள்ள உள்ள வராத சரியா "என்று சொல்லி முடிக்க நீரு காஃபியுடன் வந்து நின்றாள்.

பின்னர் இருவரும் காபி அருந்தி விட்டு விடைபெற்று சென்றனர்.

அவர்கள் இருக்கும் வரை அழுகையை இழுத்து பிடித்து வைத்தவள் , அவர்கள் சென்றதும் திறந்த விட்ட ஓடையை போல் அழுகத் தொடங்கினாள்.

அவளின் கண் முன் சந்தியாவை அறிமுக படுத்தின நாள் நினைவு படமாக அவள் முன் ஓடியது..

*
*
*
*
*
*

அன்றைய தினம்....

" மீட் மிஸ் சந்தியா நீரு கூடிய சீக்கிரத்திலயே மிஸஸ் நரேந்திரன் ஆக போறவுங்க " என்றான் காதல் பொங்கி..

அந்த ஒற்றை வார்த்தையில் அவள் மொத்த உயிரும் பறிபோனது.

" எங்களோட லவ் சக்ஸஸ் ஆக நீங்க தான் காரணம் நீர்த்திகா .அதுக்காக தான் இவன் காதல சொன்ன உடனே உங்கள பாக்கனும்னு ஆச பட்டேன் " என்றாள்.

" என்ன சொல்றீங்க" என்று புரியாமல் அவள் கேட்க

" நீ தான ஒரு நாள் லவ் பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்ட .அப்ப எனக்கு எதுவும் தோணல .ஆனா நீ வச்சதும் எனக்கு சந்தியா முகம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சி.ஏன்னா அந்த நேரத்தில தான் சந்தியா எனக்கு ப்ரோப்போஸ் பண்ணி இருந்தா. அப்போ எனக்கு அது பெருசா தெரியல சோ நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன். நீ கேட்டதுக்கப்புறம் தான் தெரிஞ்சது நான் அவள லவ் பண்ற விஷயமே . அதான் காதலர் தினமான இன்னைக்கு என்னோட காதல சொன்னேன் " என்றான்.

" என்னோட காதல‌ சொல்றதுக்காக அடித்தளம் போட்டா, நீ உன்னோட காதல என்கிட்ட சொல்லிட்டல " என்று மனதினுள் நினைத்தவள் வெளியே சிரித்து வைத்தாள்.

" சரி நீங்க பேசுங்க நான் கிளம்புறேன் .எனக்கு கொஞ்சம் ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு " என்று அவர்களின் பதிலை எதிர்பாராது கிளம்பி வந்துவிட்டாள்.

ஹாஸ்டலிற்கு வந்தவள் சாதனாவின் மடியில் படுத்து கவலை தீரும் வரை அழுது தீர்த்தாள்.

சாதனாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாலும் ஏதோ தவறாக நடந்திருக்கு என்று மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அமைதியாக நீருவின் தலையை வருடி விட , நீரு சிறிது நேரத்திலே துயில் கொண்டாள்.

அவள் தூங்கியதும் ஆதிக்கு அழைத்து பேசிட , " அவன் யாரோ சந்தியான்னு ஒரு பொண்ண காதலிக்கிறானாம் டி. அதுவும் இன்னைக்கு தான் அந்த பொண்ணோட காதல ஏத்துகிட்டு இருந்திருக்கிறான் " என்றவன் " ஆமா ஏன் நீ இதெல்லாம் கேக்குற " என்க

" சும்மா தான் கேட்டேன் . நான் அப்புறமா பேசுறேன் பாய் அண்ட் லவ் யூ டா " என்றாள்.

" லவ் யூ டூ டி " என்று அழைப்பை அணைத்தான்.

பின் வந்த நாட்களில் நீரு மிகவும் உடைந்து போனாள். அவனுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்க தோடங்கியவளுக்கு தோல்வியே மிஞ்சி இருந்தது.

இது தான் வாழ்க்கையோ என்று எண்ணியவளுக்கு அந்த வாழ்க்கை இருளாக மாறத் தொடங்கியது.

தேர்வுகள் தொடங்கி விட , பேருக்கு தேர்வினை எழுதியவள் சாதனாவிடம் மட்டும் கூறிவிட்டு உடனடியாக ஊருக்கு கிளம்பி வந்து விட்டாள்.

இதனை நினைத்தவளின் விழியில் அழுகை வரவில்லை.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையே வந்தது.

அடுத்து வந்த வாரத்தில் அமுதவேலும் வடிவுக்கரசியும் கோவை சென்று சந்தியாவை பெண் கேட்டனர்.

அவர்கள் வீட்டினரும் சம்மதம் தெரிவித்து விட , அவர்கள் திருமணத்திற்கான வேலைகள் நடக்கத் தொடங்கியது..

இங்கே நீருவும் வேலைக்காக சென்னை சென்ற சாதனாவை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு வேலை வாங்கி தருமாறு கேட்டுக் கொண்டாள்.

அவளும் சரி பார்க்கிறேன் என்று விட்டு வேறு சிலவற்றை பேசிவிட்டு வைத்தாள்.

நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்னாடி சாதனா அழைத்து , உனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் உடனே கிளம்பி வருமாறும் கூறி இருந்தாள்.

அவளும் சரி என்று விட , நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலிற்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள்.

நிச்சயத்திற்கு தேவையான ஆடைகள் வாங்க செல்ல நரேன் அவளை வற்புறுத்தி அழைத்து சென்று அவளுக்கான உடையை அவனே வாங்கி தந்தான். அது மட்டுமல்லாமல் அவனுக்கான உடையையும் அவளையே தேர்ந்தெடுக்க வைத்தான்.

நரேன் சந்தியாவின் காதல் நிச்சயத்தில் வந்து நிற்க , நீருவின் காதல் இறுதி அத்தியாயத்தில் சமாதி கட்ட வேண்டிய நிலையில் வந்து நின்றது..

நிச்சயம் தொடங்க இருக்க சிறிது நேரத்திற்கு முன்பு தான் நீரு அவனிடம் பேசிவிட்டு ,தங்கராஜ் எவ்வளவு தடுத்தும் கிளம்பி வந்து விட்டாள்.

காற்றுடன் மழை பெய்வதால் கோவை மேட்டுப்பாளையம் பேசென்ஞ்ர் ட்ரெயின் வர தாமதமெடுக்க , அதனால் நீலகிரி எக்ஸ்பிரஸ் கிளம்ப முடியாமல் அங்கேயே நின்றது..

சிறிது நேரத்திலேயே மழை நிற்கவும் பேசென்ஞ்ர் ரயிலும் வந்துவிட மெது மெதுவாக வண்டி கிளம்பத் தொடங்கியது.

ஊட்டியில்....

" மச்சி.!! சீக்கிரமா போ டா மணி ஆச்சி .இப்பவே ட்ரெயின் கிளம்பி இருக்கும் டா எரும .ஒரு வண்டிய கூட வேகமா ஓட்ட தெரியாதா " என்று ஆதித்யாவை பார்த்து கத்தினான் நரேன்.

"எதாவது பேசுன கொன்னுடுவேன் உன்ன பாத்துக்க நீ என்ன பெரியா அப்பாடக்காரா என்ன..??இங்க மழை பெய்யுறது தெரியல அது மட்டும் இல்லாம இது என்ன நேர் பாதையா சொல்லு வேகமா போறதுக்கு . உனக்கு வேணும்னா நீயே வண்டி ஓட்டிட்டு போன்னு நான் சொல்லிட்டு அமைதியா இருந்திருக்கனும். நண்பனுக்கு உதவி செய்ய வந்தேன்ல என்னைய அடிச்சிக்கனும்" என்று அவனை பார்க்காமல் திட்டியவன் இறுதியில் தன்னையே திட்டிக் கொண்டான்.

" சாரி மச்சி .!! பதற்றத்துல பேசிட்டேன். ஆனா நீ இன்னும் கொஞ்சம் வேகமா போலாம் டா ஆதி " என்று சொல்லி அவனின் முறைப்பை பரிசாக பெற்றான் நரேன்.

" ரெண்டு வள வளன்னு பேசாமா அமைதியா வரீங்களா " என்று சந்தியா கடிந்து கொள்ள

இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சந்தியா ஒரே போல் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்.

" எனக்கு தெரிஞ்சு மழை இப்படி பெய்யுறதுனால இன்னும் ட்ரெயின் பொயிருக்காதுன்னு தான் நினைக்கிறேன் " என்று மாலையில் நரேன் சந்தியா என இருவருமாய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்தாவாறே சொன்னாள்.

" பொய் இருக்காதுல " என்று கவலை தேய்ந்த குரலில் இறைவனின் மேல் பாரத்தை வைத்து கொண்டு அவள் புறம் திரும்பி கேட்க ,

" நரேன் இந்த பிக்ல நாம ரொம்ப க்யூட்டா இருக்கோம்ல .சேம் சேம் கலர்ல ட்ரெஸ் சூப்பரா இருக்கு பாரேன் " என்று சம்பந்தமே இல்லாமல் அவன் கேட்ட பதிலுக்கு மாறாக எதையோ பேசினாள்.

" இது ரொம்ப முக்கியமா என்ன " என்று கட்டுக்கடங்காத கோபத்தில் கத்த

" முக்கியம் தான் .அப்போ தான் இத நீரா கிட்ட காட்ட முடியும் " என்றாள் அவனை கடுப்பேத்தும் விதமாக ,

தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக , அந்த மொபைலை பிடுங்கி வெளியே எறிந்தான்.

இதனை கேட்ட ஆதித்யாவுக்கு முகத்தில் முகத்தில் புன்முறுவல் தோன்றி மறைந்தது.

" எந்த ஒரு பொக்கிஷமும் விட்டுட்டு போனதுக்கு அப்புறம் தான் அவுங்களுக்கு புரியும் போல ஆதி " என்று சந்தியா ஓர விழியால் நரேனை கண்டவாறே ஆதியிடம் பேசினாள்.

" சிலருக்கு அப்போ கூட புரியாது சந்தியா மா. அவுங்களுக்கு எல்லாம் தான் பண்றது தான் சரின்னு நினைப்பு " என்று குத்தலாக ஆதி கூற நரேன் தலை கவிழ்ந்தான்.

அவனால் எதுவும் பேச முடியவில்லை. ஆதி கூறியதும் சந்தியா கூறியதும் உண்மை தானே. வாழ்வின் பெரிய பொக்கிஷத்தை அல்லவா அவன் இலந்திருக்கிறான்.

அவனை கண்டவாறே ஒரே சமயத்தில் சந்தியாவும் ஆதியும் அவர்களுக்குள்ளே சிரித்துக் கொண்டனர்.

அவனை கண்டு அவர்கள் மட்டுமல்ல விதியும் கைக்கூப்பி சிரித்தது...

சாலையில் ஆதியின் வாகனம் இறக்கை இல்லாமல் பறந்திட , கல்லாரை தாண்டி வண்டி சென்றுக் கொண்டிருந்தது.

இரவு நேரம் என்பதால் சாலையில் ட்ராஃபிக் அதிகமாகிட , நரேன் டென்ஷனாகி போனான்.

" டேய் வேற எதாவது வழி இருந்தா அதுல போய் தொலையேன் டா " என்று கத்திட

அவனை பார்த்து முறைத்த ஆதி , "உனக்கு அவ்ளோ அவசரமா இருந்தா நடந்தே போ .ஆனா என்ன டார்ச்சர் பண்ணாத சரியா " என்று கடுகடுத்தாலும் வண்டியை திருப்ப எதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தான்.

அதற்கு வாய்ப்பே சுத்தமாக இல்லை என்று சொல்லாமல் சொல்லியது பின்னால் இருந்த வண்டிகளின் ஹாரன் சத்தம்.

" சுத்தம் " என்பது போல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் ஆதித்யா.

நரேன் தான் முன்னே இருந்த வண்டி ஓட்டினரிடம் , " கொஞ்சம் வண்டிய முன்னாடி கொண்டு போனா தான் என்ன " என்று ட்ராஃபிக் என்பதை அறிந்தும் நீருவை காண வேண்டும் என்ற எண்ணத்தில் சத்தம் மிட்டு கொண்டு இருந்தான்.

" யோவ்! கண்ண என்ன பொடனியிலா வச்சிருக்க முன்னாடி பாத்து தான் தொலையேன் . ஏதோ காலியான ரோட்ல யாரும் போகக் கூடாதுன்னு நிறுத்தி வச்சிருக்கிற மாதிரி பேசுற " என்று அந்த வண்டியில் அமர்ந்திருவரும் கத்த இதனை பார்த்த சந்தியா தலையில் அடித்துக் கொண்டு நரேன் சண்டை போடும் இடத்திற்கு சென்றாள்.

" நரேன்.! இங்க நின்னு எதுக்கு இவர் கிட்ட சண்ட போட்டுட்டு இருக்க வா காருக்குள்ள போய் இருக்கலாம்" என்று அவனை அங்கிருந்து நகர்த்த எண்ணி பேசிட

" நான் எதுக்கு வரனும் சந்தியா முதல இவர வண்டிய எடுக்க சொல்லு அப்போ தான் நம்மலால போக " என்று அவளிடம் பேசிய படியே வாக்குவாதத்தை மேலும் தொடர ,அடுத்த நொடி பளார் என்ற சத்தத்தில் நரேன் தன் கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கிய படியே விழியில் நீரை கோர்த்து நின்றான்.

" என்னடா உளறி கிட்டு இருக்க ..?இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை சொல்லு .? யார் யாரோ கிட்ட எல்லாம் சத்தம் போட்டுட்டு இருக்க ??உன்ன விட நீரா எவ்வளவு துடிச்சிருப்பா புதுசா ஒரு உறவு உனக்கு வந்துருச்சின்னு அவள விட்டுட்டு வந்தவன் தான நீ . உன்ன மட்டுமே நம்பி வாழ்ந்துட்டு இருந்த பொண்ணு டா அவ. அவள தான் வேண்டான்னு சொல்லிட்டு தான இதோ இங்க நிக்கிற சந்தியாவ செலக்ட் பண்ண அப்புறம் எதுக்கு இப்போ அவள தேடுற சொல்லு .நீ பாட்டுக்கு சந்தியாவோட காதல் தான் பெருசுன்னு பொயிட்ட .ஆனா அந்த நேரத்துல நீ அவள விட்டு போனதுல அவ எவ்ளோ துடிச்சான்னு போய் சாதனா கிட்ட கேளு அவ சொல்லுவா . அவ அவளோட நிம்மதிய தேடி பொய் இருக்கா டா அத கெடுக்க நினைக்காத " என்று கோபத்தில் இத்தனை நாள் மனதினுள் வைத்திருந்ததை கொட்டி விட்டு சென்று காரில் அமர்ந்துக் கொண்டான்.

சந்தியா அந்த கார் காரனிடம் தன் மன்னிப்பை கூறிவிட்டு அவளும் காரிற்குள் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

ஆதியை பேசிய அனைத்தையும் கேட்டவனுக்கு உயிர் தன்னை விட்டு பிரிவது போல் இருக்க கண்களில் விழி நீர் கொட்டியது. ஆனால் அவனின் கண்ணீர் மழை நீரோடு ஒரு நீராக கலந்துவிட்டது.

மெதுவாக ட்ராஃபிக் க்ளியர்யாக ஆதியே அவனை இழுத்து வந்து காரினுள் அமர வைத்தான்.

பின் , கார் சீறி பாய்ந்திட மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் முன்பு நின்றது.

ரயில் கிளம்பிதை அறிந்த மூவரும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் காரை கோவை செல்லும் பாதையில் செலுத்தினான் ஆதி.

கிட்ட தட்ட வண்டி 80தில் சீறி பாய்ந்திட , முக்கால் மணி நேரத்திலேயே கோவை ரயில் நிலையத்தை அடைந்திருந்தனர்.

காரை நிறுத்திய அடுத்த நொடியே காரை விட்டு இறங்கிய நரேன் நீருவை காண வேண்டும் என்ற நோக்கிலேயே சாலையை கடக்க முயல அதி வேகத்தில் வந்த டெம்போ ஒன்று அவன் மீது ஏத்தியது.

அதில் பறந்து விழுந்தவன் " நீரு " என்று பெருங்குரலோடு கத்தி தரையில் விழுந்தான்.

தன் நினைவினில் இருந்தவளுக்கு , திராவின் அழைப்பு செவிகளுக்கு எட்டினாலும் அவள் மனது அதனை பிரமை என்று சொல்லி திசை திருப்பி விட்டது..

கண்களில் நீர் கோர்க்க விழியை நீரு முட , அதே நேரத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படியே கண்களை மூட அழுத முகமான நீருவின் முகமே அவன் நினைவில் வந்து போனது...

மாயம் தொடரும்.....
 

Author: Ashwathi
Article Title: என்னுள் மாயம் செய்தாயோ... 04
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top