செங்கா தன் முன் இருந்த பெரிய மலையை அண்ணாந்து பார்த்தாள். அதில் ஏறுவது அவளுக்கு மிகவும் சுலபம்தான். ஆனால் அவள் அந்த மலை மீது ஏறி விட்டால் பின்னர் கீழிறங்க நான்கு நாட்கள் ஆகி விடும். மலை மீது ஏறும் முன் பொன்னாவோடு ஒரு வார்த்தை பேசி விடலாம் என நினைத்தபடி தனது போனை எடுத்தாள்.
பொன்னா இரண்டாவது ரிங்கில் அழைப்பை எடுத்து விட்டாள்.
"ஹலோ செங்கா.. என்ன பண்ற.?" என்றாள். அவளது குரல் ஏனோ கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக தோன்றியது செங்காவிற்கு.
"நான் கரட்டுல இருக்கேன். உனக்கு என்ன ஆச்சி.? ஏதும் காச்ச கீச்ச வந்துடுச்சா.?" என்றாள் கவலையோடு.
"இல்ல.. நல்லாதான் இருக்கேன் நான்.. சாப்பிட்டியா நீ.?"
"இல்ல.. இனிதான் சாப்பிடணும்.."
"சரி நான் அப்புறமா போன் பண்றேன்.." என்ற பொன்னா அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.
தன் முன் கை கட்டி நின்றிருந்த ரூபிகாவை எரிச்சலோடு பார்த்தாள். கல்லூரி ஹாஸ்டலில் உள்ள சக மாணவிகளில் இந்த ரூபிகாவுக்கும் இவளுக்கும் மட்டும் ஏழாம் பொருத்தம்.
ஒருநாள் நடந்த சின்ன வாய் சண்டையில் பொன்னாவை காட்டான் என்று அழைத்து விட்டாள் ரூபிகா. பொன்னா கோபத்தில் ஒரு அறையை தந்துவிட்டாள். அன்றிலிருந்து பொன்னாவுக்கும் அவளுக்கும் சுத்தமாக ஆவதில்லை. எதற்கெடுத்தாலும் வம்பிழுப்பாள் ரூபிகா. அவளிடம் மல்லு கட்ட பொன்னாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை.
தன் அறை வாசலில் நின்றிருந்தவளை கோபத்தோடு பார்த்தவள் "வழியை விடு ரூபிகா.." என்றாள்.
"லீவு நாளேச்சே.? வெளியே எங்கேயும் சுத்த போறியா.?" என்று நக்கலாக கேட்டாள் அவள்.
"ஆமா என் லவ்வர் கூட ஊர் சுத்த போறேன்.." என்றவள் அவளை தள்ளி விட்டுவிட்டு வெளியே நடந்தாள்.
"உனக்கெல்லாம் லவ்வரா..? பொய் சொல்ல ஒரு அளவு இல்ல..?" என்று கேட்ட ரூபிகாவின் சிரிப்பொலி அந்த வராண்டாவை கடந்து செல்லும் வரை பொன்னாவின் காதில் விழுந்தது.
"சின்ன சின்ன விசயத்துகெல்லாம் ஓவரா பீல் பண்ணாத.." என தனக்கு தானே சொல்லி கொண்டவள் தனது துப்பட்டாவை சரி செய்த படி சாலையில் சென்ற ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் தான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னாள்.
காலை நேரம் என்பதால் அந்த ரெஸ்டாரண்டில் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. இவள் ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்ததும் கடைகோடி மேஜையில் அமர்ந்திருந்த அவளது காதலன் கை காட்டி அழைத்தான்.
அவனை கண்டதும் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு உண்டானது அவளுக்கு. அவன் முன்னால் சென்று அமர்ந்தாள்.
"ஏன் இவ்வளவு லேட்.?" என்றான் அவன். அதே நேரத்தில் அவனது போன் ஒலித்தது. அதை கவனிக்க மறுத்து விட்டு பொன்னாவின் பதிலுக்கு காத்திருந்தான்.
"நைட்டெல்லாம் விழிச்சிருந்து அசைன்மென்ட் எழுதிட்டு இருந்தேன். அதனால லேட்டாதான் எழுந்தேன்.. நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா.?" என்றவளின் கன்னத்தை தொட்டு பார்த்தான் அவன்.
"என்ன.?" என கேட்டு பின்னால் நகர்ந்தாள் பொன்னா.
"ஒன்னுமில்ல.. ஒரு மாதிரியா இருக்கியே.. அதான் காய்ச்சல் ஏதும் வந்துடுச்சான்னு பார்த்தேன்.." என்றவன் தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.
"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. லேட்நைட் விழிச்சதால டயர்டா இருக்கு.." என்றாள்.
"ஓ.." என்றவன் அவளை கண்களால் அளந்தான்.
"என்னை ஏன் இப்படி திங்கற மாதிரி பார்க்கறிங்க.? அதுக்கு பதிலா ரிங் ஆகுற போனை எடுக்கலாமில்ல.?" என கேட்டவளுக்கு அவனது பார்வையால் கன்னம் சிவந்து போனது.
"அது ஏதும் சும்மா காலா இருக்கும்.." என்றவன் அவளையே விழியெடுக்காமல் பார்த்தான். போன் அதன்பாட்டுக்கு ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆர்டர் எடுக்க வந்த பேரரிடம் அவனே உணவு வகைகளை ஆர்டர் செய்தான்.
பொன்னாவிற்கு தூக்கம் வருவது போலவே இருந்தது. முகமேனும் கழுவி வரலாம் என நினைத்தாள்.
"நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்.." என்றவள் எழுந்து நடந்தாள்.
அவள் நாலடி எடுத்து வைத்தபிறகு அவளின் காதலன் விஷ்வா தனது போனை எடுத்தான்.
"சாரிடா.. புவி கூட பேசிட்டு இருந்தேன். போன் சைலண்ட்ல இருந்தது.."
அவன் போனில் சொன்ன பதில் பொன்னா காதிலும் விழுந்தது. நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்தாள். அவன் போனில் பேசுவதில் கவனமாக இருந்தான். அவளின் மனம் வலி ஒன்றை உணர்ந்தது.
ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள். தண்ணீரை பிடித்து முகத்தில் சளாரென வீசினாள்.
அரைகுறை தூக்கம் கலைந்துக் கொண்டிருந்தது. தன் முன் இருந்த கண்ணாடியை பார்த்தாள். அழகான இளம் மங்கை. இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தல் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது. நெற்றி நடுவே இருந்த சிறு பொட்டு அவளை பேரழகியாக்கி காட்டியது. கனவு மின்னும் கண்கள். சிறு வெட்கத்திற்கும் சிவக்கும் கன்னம்.
தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த பொன்னா கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தபடி வெளியே நடந்தாள்.
எம்.எஸ்.சி கடைசி வருடம் இது. அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த நகரத்தோடு ஒட்ட வரவில்லை. இத்தனை வருடங்களும் மிகவும் போராடியபடிதான் இங்கு இருக்கிறாள். சக மாணவிகளின் கிண்டல் அவளை வெகுவாக பாதித்து விட்டது. அவள் செங்கா அளவிற்கு மன தைரியம் உள்ளவள் அல்ல. சின்ன சின்ன வார்த்தைகள் கூட அவளின் மனதை உடைத்து விடும். தான் உண்டு தன் படிப்பு உண்டென இருந்தவள் விஷ்வாவின் காதலியானதே பெரும் ஆச்சரியம்தான். ரத்த தான முகாம் ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பு ஒவ்வொரு முகாமிலும் தொடர்ந்தது. நட்பென பழக வந்தவன் திடீரென ஒருநாள் காதலிப்பதாக சொன்னான். பொன்னா முதலில் மறுத்து விட்டாள். ஆனால் தொடரும் நிழலாக சுற்றி அவளது சம்மதத்தை வாங்கி விட்டான் விஷ்வா.
உண்மையில் பொன்னாவிற்கும் விஷ்வாவை ரொம்ப பிடித்திருந்தது. அவனோடு இருக்கும்போது சுற்று சூழல் மறந்து போனாள். அவன் தனது அடிக்ட் என்று அறிந்தே வைத்திருந்தாள் இவளும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனிடமும் சொல்லவில்லை.
அவளுக்கு இந்த நகரத்து வாழ்க்கை மீதும் பிடிப்பில்லை. நகரத்து மாந்தர் மீதும் நம்பிக்கை இல்லை. தனது நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டு விஷ்வாவை காதலிப்பவளுக்கு தனது காதலின் ஆழம் எவ்வளவு என வெளியே சொல்ல பயமாக இருந்தது. திடீரென அவன் விட்டு சென்று விட்டால் என்ன செய்வது என தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள்.
ஏற்கனவே குழப்பதில் இருப்பவள் புவி என்ற பெயரை கேட்டதும் நொந்து போய் விட்டாள்.
தாங்கள் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி நடந்துக் கொண்டிருந்தவள் தன் காலடியில் ஏதோ விழவும் தரையை பார்த்தாள். பேனா ஒன்று தரையில் உருண்டோடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த மேஜை மீது இருந்து கீழே விழுந்தது என்பதை புரிந்துக் கொண்டவள் பேனாவை எடுத்து மேஜை மேலே வைத்தாள். இரண்டு ஆண்கள் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன் இவளை கண்டதும் பெண்ணையே கண்ணில் காணாதவன் போல அப்படி ஒரு பார்வை பார்த்தான். ஏனென தெரியாவிட்டாலும் அவனது பார்வையில் ஏதோ ஓர் அருவெறுப்பை தனக்குள் உணர்ந்தாள் பொன்னா.
"இங்கே பாருங்க சீனு.. நான் ரொம்ப முக்கியமான விசயம் பேச வந்திருக்கேன்.." எதிரில் இருந்தவனின் குரலில் இவன் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பொன்னா விஷ்வா முன்னால் வந்து அமர்ந்தாள்.
"ஆர் யூ ஓகே.?"
"ம்.. புவின்னு என்னை குறிப்பிடாதிங்கன்னு எத்தனை முறை சொல்றது.?" என்றாள் வருத்ததோடு. அவளுக்கு அதிகம் கோபம் வராது. ஆனால் அது வருத்தமாக மாறி அவளை பாதிக்கும்.
"பொன்னா.. இது ஏதோ ஒரு மாதிரியா இருக்குப்பா.. அதான் உன் பேரை புவின்னு என் வீட்ல சொல்லி வச்சிருக்கேன். உன்னை பழங்காலம்ன்னு அவங்க நினைச்சிட கூடாது இல்லையை.?" என்றான் விஷ்வா.
"பொன்னா.. பொன்ஆம்பல்.. என் பேர்ல நீங்க என்ன குறையை கண்டுபிடிச்சிங்கன்னு தெரியல.. நான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேன் உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு. இது இன்னைக்கு நிரூபணம் ஆகிடுச்சி.." என்றவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டாள்.
"இதுக்கெல்லாம் கோவிச்சிக்காத புவி.. இது என்ன சும்மா பேர்தானே.?" என்று சமாதானம் சொன்னான் விஷ்வா.
"உங்களுக்கு புரியல.. என் பேரை கூட உங்களால ஏத்துக்க முடியல.. அப்புறம் எப்படி லைப் முழுக்க என் இயல்பை ஏத்துப்பிங்க.? இது உங்களுக்கு வேணா விளையாட்டா இருக்கலாம். ஆனா எனக்கு இல்ல.. என் பேரே உங்களுக்கு பிடிக்கல.. உங்க குடும்பம் என் பேர் தெரிஞ்சா என்னை ஒரு பழங்காலமா நினைப்பாங்கன்னு சொல்றிங்க. அப்ப என் வீட்டை பார்த்தா என்ன சொல்வாங்க.? அவங்களை விடுங்க.. நீங்க என்ன நினைப்பிங்க.? ஒரு மலையடிவார கிராமத்துல உள்ள ஒரு ஓலை குடிசைக்காரி நான். அதுதான் என் அடையாளம். மேனியை மட்டும் பார்க்காதிங்க. மனுசங்க மனசையும் பாருங்க.." என்றவள் எழுந்து நின்றாள்.
"மேனி..? நான் வெறும் அழகுக்காக உன்னை லவ் பண்றேன்னு சொல்றியா.?" என கேட்ட விஷ்வா குரலில் கோபம் இருந்தது.
"இதுவரைக்கும் எனக்கும் அது தெரியாமதான் இருந்தது. ஆனா இன்னைக்கு தெரிஞ்சிடுச்சி.. எனக்கும் உங்களுக்கும் ஒத்து வராதுன்னு புரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நான் உங்களோடு பிரேக் அப் பண்ணிக்கிறேன்.." என்றவள் எழுந்து நடந்தாள்.
"புவி.." என அழைத்தபடி எழுந்து வந்து அவளது கையை பற்றினான் விஷ்வா.
"இதோ இப்பவும் இதான் பிரச்சனை.. என்னை என் பேரை சொல்லி கூப்பிட கூட உங்களுக்கு மனசு வர மாட்டேங்குது.. இது எனக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு உங்களுக்கு புரியல.. இனி என்னை பார்க்க வராதிங்க.. காதல்ன்னு பேர் சொல்லி என்னை ஏமாத்தாதிங்க.." என்றவள் தன் கையை விடுவித்துக் கொண்டு வெளியே நடந்தாள்.
"புவி.." என மீண்டும் அழைத்து விட்டு பல்லை கடித்துக் கொண்டான். "பொன்னா.. ஏய் பொன்னா.." அவன் கத்திக் கொண்டு அவள் பின்னால் சென்றான். பொன்னா தன் அருகே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். விஷ்வா ஆட்டோவை நெருங்கும் முன் ஆட்டோ புறப்பட்டு விட்டது.
பொன்னாவிற்கு கண்கள் ஓரத்தில் ஈரமானது. அவளது போன் ரிங் ஆனது. விஷ்வாதான் அழைத்திருந்தான். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை. கல்லூரி விடுதிக்கு வந்தவள் தனது பேக்கை எடுத்து தனது உடைகளை நிரப்ப ஆரம்பித்தாள். இன்னும் மூன்று நாட்களுக்கு கல்லூரி விடுமுறை. மூன்று நாட்களும் விஷ்வாவோடு சுற்ற நினைத்திருந்தாள். ஆனால் இப்போது ஏனோ மனம் உடைந்து போனதை உணர்ந்திருந்தவளுக்கு எப்போது வீட்டிற்கு திருப்புவோம் என்றிருந்தது. தனது பேக்கை மாட்டிக் கொண்டு பஸ் ஸ்டேன்டை நோக்கி நடந்தாள்.
அவள் விடுதியின் கேட்டை கடந்து சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு அந்த கேட்டின் முன் தன் காரை நிறுத்தி விட்டு அவசரமாக இறங்கினான் விஷ்வா. உள்ளே ஓட இருந்தவனை வாட்ச்மேன் தடுத்து நிறுத்தினார்.
"இது லேடிஸ் ஹாஸ்டல்.. ஆண்கள் உள்ளே போக கூடாது.." என்றார்.
"பொன்னாவை பார்க்கணும்.. அவளை வர சொல்லுங்க. ப்ளீஸ்.." என்றான்.
"அந்த பொண்ணு இப்போதான் ஊருக்கு கிளம்பினா.. இன்னேரம் பஸ் ஏறி இருப்பா.. நீங்க நாலு நாள் கழிச்சிட்டு வந்து பாருங்க.. இப்ப இங்கிருந்து கிளம்புங்க.." என்று விரட்டினார் அவர்.
சோகத்தோடு வந்து காரில் அமர்ந்தான். எதற்காக அவள் இப்படி திடீரென பிரேக்அப் செய்து போனாள் என்று குழம்பினான். அவளது பெயரை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக ஏன் பிரிந்து செல்ல வேண்டும் என யோசித்தான். சக மாணவிகள் பலரும் அவள் பெயரை கேலி செய்து ஏற்கனவே மனம் உடைத்துதான் வைத்திருந்தனர். அவர்களின் கிண்டலையும் கேலியையும் தாங்கி கொள்ள முடிந்தவளால் தனது காதலனே தன் பெயரை ஒருகேலி பொருளாக்கி விட்டதை தாங்கி கொள்ள முடியவில்லை.
வாழ்வின் சோதனைகள் எதையும் பார்த்திராத விஷ்வாவிற்கு இவளது ஆதங்கமும் முழுமையாக புரியவில்லை.
பேருந்தின் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தாள் பொன்னா. பேருந்து நகர ஆரம்பித்து விரைவில் வேகம் பிடித்தது. ஆசை காதலனோடு தன் காதலை முறித்து வந்ததை நினைத்தவளுக்கு அழுகையாக வந்தது. முகத்தை மூடியபடி சீட்டில் தலையை சாய்த்தாள். கண்ணீர் காயும் கண்களோடு பேருந்தின் வேகத்தில் உறங்க ஆரம்பித்தாள்.
தன் காதலியை பார்க்க இன்னும் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலையோடு வீட்டிற்கு திரும்பினான் விஷ்வா.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
Word count 1190
LIKE
COMMENT
SHARE
FOLLOW