நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 4

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியேகாதல் என்பது யாருக்கு யார்மீது எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.
துருவிற்கும் அப்படிதான்.
ஒருவேளை இது காதலா? இது சாத்தியமா? அவனுக்குத் தெரியவில்லை.


தன் காதலி அழகு,கொஞ்சம் திமிர், அமைதி கொண்டவளாக இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும்.
அதே போல் தான் கிருஷ்ணாவிற்கும்.


ஆனால் ஏன் எதற்கு என்ற காரணம் அறியாமல் ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவள் தான் நினைத்ததைப் போல் இல்லா விட்டாலும் அவள் மீதான காதல் என்றும் குறையாது.


காதல் அப்படித்தான்.
பலகனவுகளோடு தன் எதிர்கால துணைக்குக் காத்திருந்து தன் ஒட்டு மொத்த காதலும் அவருக்குத் தான் என நினைத்து தன் காதலைக் காட்டி அந்த காதல் திரும்பி அவரால் தனக்கு காட்டப்படா விட்டாலும் அவர் மீதான காதல் என்றும் குறையாது.
அவர் செய்யும் செயல்கள் ஒரு சதவீதம் கூட பிடிக்கவில்லையென்றாலும் அவரை அவருக்காகவே பிடிப்பது காதலில் மட்டும் தான் முடியும்.
தாய்க்கு நிகரான அன்பு இது,
தந்தைக்கு நிகரான அரவணைப்பு இது,
தோழனுக்கு நிகரான தோழமை இது.
அவன் /அவள் கருப்பா, சிவப்பா, திமிரா,அமைதியா, குட்டையா,நெட்டையா என எதுவும்
பார்க்காமல் வரும் காதல் சில சமயம் அவர் நல்லவரா கெட்டவரா எனக் கூட பார்ப்பதில்லை.


கிருஷ்ணாவிற்கும் அப்படித்தான்.
அவள் முகம் பார்க்காமல் அடிக்கடி வரும் தன் கனவில் வரும் காரிகையின் நினைவில் வாழ்ந்து வந்தவன் இன்று அவள் முகம் பார்த்தான்.


எப்போதும் போல இன்று வானில் பல நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் அவள் நடந்து வர ஏனோ அவள் நடை சாதரண மனிதர் போல் இல்லை.
அந்த நடை கூட அவனுக்குப் பிடிக்க அதை ரசித்துப் பார்க்க தொடங்கினான்.
அவளுக்கு தாகம் எடுக்க அந்த குழாயின் அருகே குனிந்தவள் கைகளில் பிடித்து குடிக்காமல் குழாய் அருகே தன் வாய் வைத்து அப்படியே தண்ணீர் குடிக்க அது கூட அவனுக்கு அழகாக இருந்தது போல.
நிமிர்ந்தவள் அவனைப் பார்க்க
அந்த கண்களில் என்ன கண்டானோ
தனக்கு அவள் மீது ஏற்படும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டான்.


தலைக்கு கை வைத்து அமர்ந்தவன்
இது எப்படி சாத்தியம் என எண்ணிக் கொண்டிருக்க , அவனின் பாழாய் போன மனது மட்டும் அது காதல் என உரக்கக் கத்திக் கொண்டிருந்தது.


கண்களை மூடினாலே அவள் மட்டுமே வர அதற்கு மேல் முடியாமல் அவள் யாரென்று கண்டுபிடித்த செமினாரை நினைவு கூர்ந்தான் கிருஷ்ணா.


செமினாரில் அவர் கொடுத்த தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொல்ல அவர்கள் தேர்ந்தெடுத்ததோ பயிர் வட்டங்கள்(crop circles).
இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் வானியலைப் பற்றி படிக்கும் அவர்கள் இதைப் பற்றி சிறிதளவு அறிந்து வைத்திருந்தனர்.


பயிர் வட்டங்கள் என்பது ஒரு மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும் வயலில் உள்ள பயிர்கள் பாதி வளைந்து நிலத்தோடு ஒட்டி இருக்கும்.
இது 17ம் நூற்றாண்டில் முதன் முதலில் ஒரு மரத்தில் தான் தோன்றியது.
மரத்தின் மேல் ஏதோ ஒரு வடிவில் இந்த வட்டம் இருக்க அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதற்கு பிறகு பல இடங்களில் இது ஏற்பட்டாலும் அதை யாரும் பெரிது படுத்தவில்லை என்பது தான் உண்மை.
1960-70களில் லண்டனில் ஒரு விவசாயி நிலத்தில் ஏற்பட்ட பயிர் வட்டம் தான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுவரை கண்டுகொள்ளாத அறிஞர்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் எழுந்தாலும் அவர்களால் ஏன் எப்படி இது ஏற்படுகிறது என்பதை மட்டும் அறிய முடியவில்லை.


இதே மாதிரி நிகழ்வு அமெரிக்காவிலும் நிகழ ஒரு மிகப்பெரிய வணிகர் தன் ஒட்டுமொத்த சொத்தையும் கொடுத்து பல டிடெக்டிவ் வைத்து அதை கண்டுபிடித்தார்.


இரவு நன்றாக இருக்கும் நிலம் காலையில் இப்படி மாறிவிடுகிறது.
கண்டிப்பாக மனிதர்களால் இதை செய்ய முடியாது என்பதை கண்டுபிடித்தவர்கள் அந்த பயிர் வட்டங்களில் நீளம், அகலம் என அளந்து அதன் மூலம் யாரோ தங்களுக்கு கூற வரும் தகவல்களை கண்டறிந்தனர்.


இதைப் போலவே இதற்கு முன் ஏற்பட்ட எல்லா பயிர் வட்டங்களையும் கண்டறிய ஏற்பட்ட முயற்சியில் தான்
நமக்கு பல வித ஜோதிட தகவல்கள், கணித தேற்றங்கள்( Theorem)உருவாகின.


யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்ற முயற்சியின் இறுதியில் அதை கண்டுபிடித்தும் விட்டார்கள்.
ஆனால் பலர் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அவர்களே இப்படி ஒரு பயிர் வட்டத்தை தங்கள் நிலங்களில் ஏற்படுத்திக் கொள்வதால் அதற்கு பிறகு இதை யாரும் கண்டுகொள்வதில்லை என அவர் கூறி முடிக்க


அனைவரும் வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தனர்.


ஒவ்வொரு பயிர் வட்டங்களின் உயரமும் சராசாரியாக 100 அடி இல்லை அதற்கு மேல் தான் இருக்கும்.
ஒரே இரவில் இது எப்படி சாத்தியம் என்பது தான் அவர்களுக்கு ஆச்சர்யம்.


யார் சார் இதை செய்திருப்பார்கள் என்ற மாணவர்களுக்கு அவர் அளித்த பதில் சிறிது அச்சத்தையும் வியப்பையும் அளித்தது.


அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன் பாத்ரூம் சென்று முகத்தில் தண்ணீர் கொண்டு அடித்து ஒரு தெளிவுடன் வந்து அமர்ந்தான்.


கனவில் வரும் அந்த இடமாக இப்போது அவனது அறை காட்சியளிக்க அவனுக்கு எதிரில் தோன்றினாள் அவள்.
முதலில் பயந்து பிறகு வியந்து அவளைப் பார்க்கத் தொடங்கினான் இல்லை இல்லை ரசிக்கத் தொடங்கினான்.


அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்து பேசத் தொடங்கினாள் எதிரில் இருப்பவள்..
அவள் பேசுவது அவனுக்கு புரியவில்லை காதல் மயக்கம் என நினைத்தால் மன்னித்துக் கொள்ளவும் அவள் பேசிய மொழி அவனுக்குப் புரியவில்லை.என்னவாக இருக்கும்???ஒருவேளை மராத்தி,சமஸ்கிருதமாக இருக்குமோ என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு தான்.
யாரும் அறியாத மொழி.அறிஞர் பலருக்குக் கூடத் தெரியாத மொழி என்னவாக இருக்கும்???...


அது ஏலியன்(Alien) மொழி ஆயிற்றே பிறகு எப்படித் தெரியும் அவன் இதுவரை வர்ணித்தது கூட ஏலியனைத் தான்,அவன் கனவில் வரும் காரிகை கூட ஏலியன் தான்(ஈஈஈஈ கோபம் வருகிறது என்று நினைக்கிறேன் அடித்து விடாதீர்கள் ஐ யம் பாவம்)


ஆம் அந்த பயிர் வட்டங்கள் கூட வேற்றுக்கிரக வாசிகளான ஏலியன்களால் தான் ஏற்படுகிறது.
அவர்கள் பேச நினைப்பதை தான் நமக்கு இந்த பயிர் வட்டங்களால் உணர்த்துகின்றனர் என அவர் கூறி முடித்து ஏலியன் புகைப்படங்களை காண்பிக்க ஏனோ அது அவன் காரிகையின் முகமாக தோன்றியது.


எப்படி ஒரு ஏலியன் மீது காதல் வரும் என தெரியவில்லை.
ஆனால் அவனுக்கு அவளைத் தான் பிடித்திருக்கிறது...காதலும் அவள் மீது தான் வந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் மீது காதல் ஏற்படும்.
பலருக்கு புத்தங்கள், சிலருக்கு பாடல்கள், ஒரு சிலருக்கு தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மீது ஏற்படும்.


இவனுக்கு இவன் படிப்பு தான் எல்லாம்...இவன் இப்படி தான் இருப்பான் என அவன் பெற்றோர் அப்போதே நினைத்திருப்பார்கள் போல...
துருவ் என்ற நட்சத்திரத்தின் பெயரையே வைத்தனர்...
ஏனென்று தெரியவில்லை அவனுக்கு வானம் அங்கு உள்ள அனைத்தின் மீது அளவுக்கடந்த காதல்...


விடியற்காலைப் பொழுதில் கதிரவனை வரவேற்ற இப்பூவலகைக் கண்டு கொள்ளாமல் ஆழியை பிரிந்த சோகத்தில் இருந்தான் அந்த மாயவன்.


இங்கு கிருஷ்ணாவோ தன் காதலைக் கண்டுகொண்டதில் மனம் லேசாக இருக்க அந்த துள்ளலுடனே கல்லூரிக்கு கிளம்பினான்.


உள்ளே வந்த அவனை வரவேற்றது பூஷன் தான்.


" என்னடா உன் முகம் தௌசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி எரியுது...கனவு காரிகை கூட டூயட்டா" எனக் கேட்க


என்றும் போல் தன் வசீகர புன்னகையை உதிர்த்தவன் "கண்டிப்பா டூயட் பாடிருவோம்" என்று கூறி கண் அடித்து விட்டு அவன் இருக்கைக்கு சென்றான்.


உள்ளே நுழைந்த அவர்களின் மென்டர்
" ஹாய் எல்லாருக்கு நேற்று நடந்த செமினார் பிடித்ததா?" என்று கேட்க


" ரொம்ப இன்ட்ரெஷ்டிங்கா இருந்தது சார் ஆனால் அதெல்லாம் உண்மைனு தான் நம்ப முடியல " என்றவனைக் கண்டு சிரித்தவர்


" நீங்க கண்டுபிடிக்கலாமே" என்ற ஆசிரியர் வெட்டவா குத்தவா என்ற பார்வையில் பார்த்து வைத்தான் அவருக்குப் பதில் கூறியவன்.


" வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?" என்றவரிடம்


" அவர் எப்படி சார் அவ்வளவு பட்டம் வாங்குனாரு?? எனக்கு இது படிக்கவே கஷ்டமா இருக்கு" என்ற பூஷனை கண்டு சிரித்தவர்


அவருக்கு படிப்பு மேல காதல் அதன் விளைவு தான் அப்படி...
நீங்களும் உங்க படிப்பை காதலிச்சா உங்களாலையும் தான் நிறைய சாதிக்க முடியும் என்றவரைக் கண்டு சிரித்தவர்கள்


" அப்போ ஏலியனை காதலிக்க சொல்றீங்களா சார்?" என்று கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்தவனையெல்லாம் அடித்துக் கொண்டு சத்தமாக சிரிக்கும் பூஷனைக் கண்டு அனைவரும் சிரிக்க ஒருவன் மட்டும் முறைத்தான்.


" ஏன் காதலிக்க கூடாது" என்ற கிருஷ்ணாவின் கேள்வியில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க


" என் கனவில் வரும் காரிகை அவள் தான்" என்றான்.


" எவள் டா" என்று கேட்ட பூஷனை முறைத்தவன்


" ஏலியன்" என்று திமிர் கலந்த பார்வை அவன் குரலிலும் தெரிய
" இவன் என்ன பைத்தியமா " என்று அனைவரும் பார்க்க


சாஹீ மட்டும் ஒரு வித பயத்தில் அவனைப் பார்த்தாள்.
அவள் அறிவாளே அவன் அந்த காரிகையின் மேல் கொண்ட காதலை.


இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அனைவரையும் பிராஜக்ட் பற்றி ஏதாவது யோசனை செய்யுமாறு கூறிச் சென்றார் அவர்களது மென்டர்.


அப்போது மணி அடித்தது அவன் மூளையில்.


பூஷனின் கைப்பிடித்து தன் யோசனையைக் கூறியது தான் தாமதம் "இதெல்லாம் படிக்க தான் சரிடா இனிமேல் இப்படிலாம் கனவில் கூட யோசிக்காதே...நீ காதல்னு சொன்னதுக்கே உன்னை எந்த மனநல மருத்துவமனையில் சேர்க்கலாம்னு யோசிட்டு இருக்கேன் " எனக் கூறிய பூஷனைக் கண்டுகொள்ளாமல் ஏதோ யோசனையில் இருந்தவனைப் பார்த்து
"ஏலியன்களைப் பற்றி ஆராய்ந்த இருவருமே இன்று உயிருடன் இல்லை உனக்குத் தெரியுமா" என ஒருவன் கேட்க


"தெரியும் என்ன ஆனாலும் சரி
என் முடிவில் மாற்றமில்லை நான் செல்லப் போகிறேன் ஆராயப் போகிறேன் என்னுடன் என் உயிர்த் தோழன் வருவான்" என பூஷனைக் கோர்த்துவிட்டான்.


"அய்யோ அம்மா "என அலறியவன்
" உன் காதல் போதைக்கு நான் ஊறுகாயா? பிச்சு பிச்சு படவா ராஸ்கல் நான் வரமாட்டேன் நீயும் போகாத" என்ற பூஷனிடம்


" நான் போகத்தான் போகிறேன்...நீயும் வரணும் ஏன்னா நீ என் உயிர் நண்பன்"


"அதுக்காக உயிரையே கேட்டா எப்படிடா" என்ற பூஷனைக் கண்டு புன்னகைத்தவன்


"நீ வருவ எனக்குத் தெரியும்" என்று கூற


"எப்படி "


"எனக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி நான் என்ன சொன்னாலும் கேட்பான்" எனக் கூறிக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.


பேயடித்தால் கூட இப்போது இருக்கும் பூஷனின் நிலைக்கு அருகில் வர முடியாது அப்படி ஒரு நிலையில் இருந்தான் இது என்னடா செத்து செத்து விளையாடலாம் அப்படிங்குற மாதிரில இருக்கு என புலம்பியவன்


"க்ராஃப் சர்க்கிள்ஸ் பத்தியா நம்ம ப்ராஜெக்ட் பண்ண போறோம்" என்றவனைக் கண்டு புன்னகைத்தவன்


" இல்லை இது அதுக்கும் மேல" என்று விக்ரம் ஸ்டைலில் கூறியவன் வெளியே சென்றான்.


❤❤❤❤காரிகை வருவாள்❤❤❤❤


பயிர் வட்டங்கள் பற்றி அதிகமாக கூறி போர் அடித்து விட்டேன்....கதையின் போக்குக்காக மட்டுமே....
இது ஒரு முக்கோணக் காதல் கதை...


உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும் உங்கள் தோழி❤❤
 

Attachments

  • IMG-20200622-WA0063.jpg
    IMG-20200622-WA0063.jpg
    494.8 KB · Views: 8

Author: im_dhanuu
Article Title: கானல் - 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Appo saahi pulla paavam illaya ....dei thimuru pidicha dhruv unaku antha alien pulla than venuma???pehhh
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top