நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை நேரம்..

இனியன் தன் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான்.

"தேவன் நான் கிளம்புறேன்.. நீங்க நாளைக்கு காலையில் குருவோட காலேஜ்க்கு போய் அவன் சம்பந்தப்பட்ட இன்பர்மேசனை கலெக்ட் பண்ணிட்டு வாங்க.." என்றவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணி கிளம்பினான்.

அந்த நாள் முடியும் முன்பே அடுத்த நாளுக்கான வேலையை தரும் இனியனை மனதுக்குள் திட்டியபடியே தேவனும் அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சந்தியாவின் பார்ம்க்கு வருவதாக சொன்னது அவனின் நினைவிற்கு வந்தது. பைக்கை திருப்பிக் கொண்டு பார்மை நோக்கி கிளம்பினான். ஆனால் சில நொடிகளில் எதிர் பக்கம் இருந்து நான்கைந்து மோட்டார் சைக்கிள்கள் அவனை நோக்கி வந்தன.

பைக்கிலிருந்து இறங்கியவர்கள் ஆளுக்கொரு உருட்டுக்கட்டையை கையில் எடுத்தபடி அவனை சுத்தி நின்றனர்.

அதிலிருந்து ஒருவனை இனியன் பார்த்தவுடன் அடையாளம் கண்டுக் கொண்டான்.
அவன்தான் தேவ சுந்தரி வீட்டின் முன் தீக்குளிப்பதாக சொல்லி இவனை பற்ற வைக்க இருந்தவன்.

கோர்ட்டில் அவனுக்கு அபராதம் மட்டும் விதித்து விடுவித்தது எவ்வளவு தவறென இனியனுக்கு இப்போதுதான் புரிந்தது.

பைக்கிலிருந்து இறங்கி நின்று தன் சட்டையின் கைகளை மடித்து விட்டுக் கொண்டான் இனியன்.

"யாருடா நீ.? அன்னைக்கு தேவசுந்தரி வீட்டு முன்னாடி தீக்குளிக்கறேன்னு சீன் போட்ட.. இப்ப கையில் கட்டையை எடுத்துக்கிட்டு‌ நாலஞ்சி பேரை சண்டைக்கு கூட்டி வந்திருக்க.?" தனது வழக்கமான நக்கலோடு கேட்டான் இனியன்.

அங்கிருந்தவன் பதிலை நேரடியாக சொல்லாமல் சிரித்தான்.

"இன்னைக்கு உனக்கு சோதனை காலம்.." என சொல்லி சிரித்தான் அவன்.

"பைத்தியமா நீ.. நான் கேட்ட கேள்வி என்ன.? நீ சொல்லும் பதில் என்ன.? அன்னைக்கு உன்னை சும்மா விட்டது என் தப்புதான்.. இன்னைக்கு உன் கை காலை தனி தனியா பிரிச்சி எடுக்கிறேன் இரு.." என்றவன் கையை முறுக்கி கொண்டு அவனை நோக்கி நடந்தான்.

அங்கிருந்தவர்கள் சட்டென அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை சும்மா விட கூடாது என்ற எண்ணத்தோடு இனியனும் அவர்களை துரத்திக்கொண்டு ஓடினான்.

சாலையின் ஒரு ஓரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றின் பின்னால் சென்ற பின் தன் ஓட்டத்தை நிறுத்தியது அந்த கும்பல்.

"ரோட்டுல அடி வாங்க பயமா.?" என கேட்டபடி பெட்ரோல் பார்ட்டியை நெருங்கினான் இனியன்.

அதே வேளையில் இனியனின் பின்னாலிருந்து தாக்க முயன்றான் ஒருவன். சட்டென திரும்பி அவனின் கட்டையிலிருந்து நகர்ந்து அடியிலிருந்து தப்பிய இனியன் அவனுக்கு ஓங்கி ஒரு உதையை தந்து விட்டு பெட்ரோல் பார்டியின் கழுத்தில் குத்து விட்டான்.

"யூனிப்பார்ம்ல இருக்கற போலிஸ்க்கிட்ட இவ்வளவு தைரியமா வந்து வம்பு பண்றிங்களா நீங்க.? உங்கள்ல ஒருத்தனும் காலத்துக்கும் ஜெயிலை விட்டு வெளிவராத மாதிரி பண்றேன் இருங்கடா.." என்றவன் அங்கிருந்த மற்றவர்களுக்கும் அடிகளை தந்தான்.

இனியன் வேகத்தை அங்கிருந்த யாரும் அறியவில்லை. அவர்கள் அசந்திருந்த சில நொடிகளில் மொத்த பேரையும் தரையில் படுக்க வைத்து விட்டான் இனியன்
பெட்ரோல் பார்ட்டியின் முன்னால் வந்து நின்றவன்‌ தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்து "நடடா ஸ்டேசனுக்கு.." என்றான்.

அவன் கலகலவென சிரித்தானே தவிர பயப்படுவதாக காட்டிக் கொள்ளவில்லை.

"நான் யாருன்னு உனக்கு சொல்றேன் இரு.." என்றவன் அவன் துப்பாக்கி முனையிலிருந்து சற்று தள்ளி நின்றான்.

"நான் மேகலைக்கு ஒன்னு விட்ட பெரியப்பா மகன்.. அவளை பலி தந்தாதான் எங்க குடும்பம் முன்னேறும்.." என்று சொல்லி சிரித்தவனை பைத்தியமோ என எண்ணினான் இனியன்.

"உன்னையும் உன் குடும்பத்தையும் எவ்வளவு நாளா நான் பாலோவ் பண்றேன் தெரியுமா.? நீ எப்ப தேவ சுந்தரி கேஸ்ல இன்வால்வ் ஆனாயோ அன்னையிலிருந்து உன் மேல வெறுப்பு எனக்கு. கேஸை திசை திருப்ப நான் பெட்ரோல் சீன் போடல.. அந்த கேஸ் பெரிய கேஸா மாறி மேகலை அரெஸ்ட் ஆகணும்ன்னுதான் செஞ்சேன்.. ஆனா என் திட்டத்தையெல்லாம் உன் மேலதிகாரிகள் கேஸை உன் கையில் தந்ததால வேஸ்டா போயிடுச்சி.. மேகலையும் கேஸ்ல மாட்டாம வெளியே வந்துட்டா.. அவளோடு பிறந்த சாபம் எங்களை எப்படி வாழ விடும்.? அவளை சாகாம நீ தடுக்கல.. உனக்கு நீயே பெரிய குழியா வெட்டிக்கிட்ட.." என்றவன் மீண்டும் சிரித்தான்.

"உன்னையும் உன் குடும்பத்தையும் இவ்வளவு நாளா பாலோவ் பண்ணவன் இன்னைக்கு உன்னை இந்த இடத்துல நிறுத்தி வைக்க காரணம் என்ன தெரியுமா.?" என்றவனை இனியன் கோபத்தோடு பார்த்தான்.

அவன் பேச்சை வளர்ப்பது புரியாமல் நின்று விட்ட இனியனின் தலையில் படீரென விழுந்தது ஒரு அடி. தன் தலையை பிடித்தபடி திரும்பி பார்த்தான். அவன் அடித்து போட்டிருந்தவர்களில் ஒருவன்தான் கட்டையோடு நின்றுக் கொண்டிருந்தான். அவனை கொலை வெறியோடு நெருங்கினான். ஆனால் அவனை தொடும் முன்னே மயங்கி தரையில் சரிந்து விழுந்து விட்டான்.

இனியன் மீண்டும் கண் விழித்த போது இருள் சூழ்ந்து விட்டிருந்தது. அந்த பாழடைந்த கட்டிடத்தின் அருகே இருந்த மின்கம்பத்தில் மட்டும் ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. இனியனுக்கு தலை விண்ணென்று வலித்தது. தலையை பிடித்தபடி எழுந்து நின்றான். அவன் காலடியில் கசங்கிய நிலையில் பேப்பர் ஒன்று கடந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தான்.

'மேகாவை எங்ககிட்ட தந்துட்டு உன் மனைவியை நீ கூட்டி போ..' என்று எழுதியிருந்ததை கண்டவனுக்கு கோபம் வெறியாக மாறியது. அந்த கையெழுத்தும் அவனுக்கு இத்தனை நாளாக வந்த மொட்டை கடுதாசியும் ஒரே கையெழுத்தை கொண்டிருந்தது.

அவசரமாக தன் ஃபோனை எடுத்தான். ஆனால் ஃபோன் சார்ஜ் இல்லாமல் காலியாகி இருந்தது.

"அட ச்சை.." தலையை பிடித்தபடி தனது வண்டி இருந்த இடத்திற்கு ஓடினான்.

வண்டியை ஸ்டார்ட் செய்வதன் காற்றாக வண்டியை ஓட்டினான்.

"சந்தியாவும் இனியனும் வயல்ல இன்னும் என்ன பண்றாங்க.?" மகேஷ் சக்தியிடம் கேட்ட நேரத்தில் வீட்டிற்குள் ஓடி வந்தான் இனியன்.

"சந்தியா எங்கே.?" என்றான்.

அவனது கேள்வியில் குழம்பி போனார்கள் சக்தியும் மகேஷும். அவனது கசங்கிய உடை, புழுதி படிந்த மேனி, பரபரப்பான முகத்தை கண்ட பொன்னி "உனக்கு என்னடா ஆச்சி.?" என்றாள்.

"சந்தியா எங்க பாட்டி.?" என்றவன் அங்கிருந்து சார்ஜரில் தன் ஃபோனை இணைத்தான்.

"அவ இன்னும் வீட்டுக்கு வரல.. நீயும் வரல.. அதனால்தான் இரண்டு பேரும் எங்கேயாவது சேர்ந்து சுத்த போயிட்டிங்களோன்னு நினைச்சேன்.." என பொன்னி சொல்ல இனியன் தன் நெற்றியை தேய்த்து விட்டு கொண்டான்.

"என்னடா ஆச்சி.?" மகேஷ் அவனது தோளை பிடித்து கேட்டான்.

"மேகலையோட ஃபேமிலி சந்தியாவை கடத்திட்டாங்கன்னு நினைக்கிறேன் அப்பா.." என்றவன் தன் கையிலிருந்த கடிதத்தை மகேஷிடம் தந்தான்.

"மேகலை.. மேகலை.." இனியனின் குரல் கேட்டு ஓடி வந்தாள் அவள்.

"என்னாச்சி சார்..?"

"என்னோடு வா.." என்றவன் சக்தியின் கையில் இருந்த போனை வாங்கி அதிலிருந்து சந்தியா போனுக்கு அழைத்தான்.

ஃபோன் ரிங் ஆகியதே தவிர யாரும் எடுக்கவில்லை.

"எங்கே போறோம் சார்.?" மேகலை ஒன்றும் விளங்காதவளாக கேட்டாள்.

இனியனது முடிவு மகேஷ்க்கு சரியென பட்டது‌. ஆனால் சக்தி சரியாக படவில்லை.

"இவளை கொண்டு போய் அவங்ககிட்ட விட போறியா.?" பயத்தோடு கேட்டாள் அவள். சக்தி சொன்னது கேட்டு பிறகு மேகலைக்கும் பயமாக இருந்தது.

"என்ன ஆச்சி சார்.?'' மீண்டும் கேட்டாள் மேகலை.

இனியன் பதட்டம் குறையாமல் இருந்தான். சார்ஜ் கொஞ்சமாக ஏறி விட்ட தனது ஃபோனை எடுத்து அதில் எதையோ தேட ஆரம்பித்தான்.

"உங்க பேமிலியை சேர்ந்தவங்க சந்தியாவை கடத்திட்டாங்க.. உங்களை அவங்ககிட்ட கொண்டு போய் சேர்த்தாதான் அவங்க சந்தியாவை விடுவாங்க.." என்றவன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மேகலையின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"இனியா எதுவா இருந்தாலும் சட்டபடி பண்ணலாம்.." சக்தி அவனருகே ஓடி வந்து சொன்னாள்.

"அதுக்குள்ள சந்தியாவுக்கு ஏதாவது ஆகிட்டா நான் என்ன பண்றது.?" என்றவன் அவள் நினைவில் கை விரல்களை இறுக்கினான்.

"எவனாவது அவளோட சுண்டு விரல் நகத்தை தொட்டு இருந்தா கூட அவனை கொல்லாம விட மாட்டேன்.." என்றவன் ஆத்திரத்தோடு அங்கிருந்து புறப்பட்டான்.

"டேய் இன்றைய ஹீரோ நானும் நேற்றைய ஹீரோதான்.. இருடா நானும் உன்னோடு வரேன்.." என்ற மகேஷ் தனது அறைக்கு சென்று தனது கத்தியை எடுத்து இடுப்பில் சொருகினான்.

அவன் பின்னால் தொடர்ந்து ஓடி வந்திருந்த சக்தி இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைத்தாள்.

"அவன் பண்றதே தப்பு.. இதுல நீயும் தப்பு பண்ணிட்டு இருக்கியா.? நான் போய் சந்தியாவை கூட்டி வரேன்.. நீ கத்தியை வச்சிடு.." என்றாள் ஒரே முடிவாக.

"லூசு மாதிரி பேசாத சக்தி.. சட்டபடி போகும் முன்னாடி சந்தியாவுக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது.? நான் கூட போறது சந்தியாவை கடத்தியவனை கொல்லுறதுக்கு இல்ல.. என் மகன் வேஸ்டா கொலை கேஸ்ல ஜெயிலுக்கு போக கூடாதுன்னு தான்.." என்றவன் அவசரமாக வாசலுக்கு வந்தான்.

"சந்தியா இருக்கற இடத்தை சொன்னாங்களாடா.?" என்ற மகேஷ் தனது காரை ஸ்டார்ட் செய்தான். அவனருகே அமர்ந்த இனியன் "அவ இருக்கற இடம் எனக்கு தெரியும்.." என்றவன் இடத்தை சொன்னான்.

காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த மேகலைக்கு கண்ணீர் திரண்டது. அவளை மீறி அவளது உதடுகளில் விம்மல் ஒன்று புறப்பட்டது. இனியன் தலையை கோதியபடி பின்னால் திரும்பி பார்த்தான்.

"என் மேல நம்பிக்கை வைங்க.. சிரமப்பட்டு நான் உங்களை அந்த கேஸ்ல இருந்து காப்பாத்தியது பலி தரதுக்காக இல்ல.. உங்களுக்கு ஏதும் ஆகாது.. அதுக்கு நான் கேரண்டி.." என்று அவளுக்கு சமாதானம் சொன்னவன் "அப்பா கொஞ்சம் ஸ்பீடா போங்க.." என்றான்.
சந்தியா தன் மயக்கத்தில் இருந்து விழித்தபோது தான் நாற்காலி ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தாள்.

அவளெதிரே இருந்த மேஜைக்கு அந்த பக்கம் ஏழெட்டு பேர் நாற்காலிகளை வட்டமாக போட்டு அமர்ந்திருந்தனர்.

அதில் ஒருவன் சந்தியாவின் போனில் கேம் ஒன்றை ஆடிக் கொண்டிருந்தான்‌.

மயக்கத்தில் இருந்து விழித்த சந்தியா சுற்றிலும் பார்த்தாள். அந்த கடத்தல்காரர்களை கண்டவளுக்கு தனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை வருகிறது என எண்ண தோன்றியது. அறையின் வெளிச்சம் பளிச்சிட்டது. ஆனால் ஜன்னல் வழி தெரிந்த இரவின் நிழல் சந்தியாவுக்கு சிறு பயத்தை தந்தது.

"உங்களுக்கு என்ன வேணும்.?" வறண்ட நாவோடு சிரமப்பட்டு கேட்டாள்.

அந்த கூட்டம் இவளின் குரல் கேட்டு திரும்பி பார்த்தது.

"என்னடா அதுக்குள்ள கண் விழிச்சிட்டா.." என கேட்ட பெட்ரோல் பார்டி எழுந்து அவளருகே வந்தான். அவனை எங்கேயோ பார்த்த நினைவு சந்தியாவுக்கு இருந்தது. ஆனால் யார் என்றுதான் சரியாக தெரியவில்லை.

அவளருகே வந்தவன் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான். "அப்பா.." என்று கத்தலோடு சந்தியா மீண்டும் மயங்கி போனாள்.

"இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் அந்த போலிஸ்காரனை அலற விட போறேன்.. அப்புறம்தான் இடத்தையே சொல்ல போறேன்.. எப்படி பதறியடிச்சிட்டு ஓடி வந்து நிக்க போறான்னு பாருங்க.. அவனே மேகலையை கூட்டி வந்து என் கையில் ஒப்படைக்க போறான்.." என அந்த பெட்ரோல் பார்ட்டி சொல்லி முடித்த கணம் அந்த கட்டிடத்தின் கதவை உதைத்து தள்ளியபடி உள்ளே வந்தான் இனியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1101
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN