நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் மாலையில் வீடு திரும்பியபோது சந்தியா வழக்கம் போல வாசலில் காத்திருக்கவில்லை‌. பெருமூச்சோடு அவன் உள்ளே சென்ற போது அவள் ஹாலில்தான் அமர்ந்திருந்தாள்‌. ஆனால் திரும்பி கூட பார்க்கவில்லை.

'சின்ன தவறுதானே.? இன்னும் இரண்டு நாளில் சரியாகி விடுவாள்' என நம்பினான் இனியன்.

இரவு முதுகு காட்டி படுத்துக் கொண்டவளிடம் பேசும் சக்தி இனியனுக்கும் வரவில்லை‌.
ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவன் இப்போது இவள் முகத்தை தூக்கி வைத்து கொள்ளவும் பயந்து போனான். தனது இயல்பையே அவள் மாற்றி விட்டாள் என்பதை அவனும் அறியவில்லை. அவளும் அறியவில்லை.

மறுநாள் வேலைக்கு கிளம்பியவன் "நான் போயிட்டு வரேன் சந்தியா.." என அனைவர் முன்னிலையிலும் சொன்னான். ஆனால் அவள் தான் சாப்பிடும் தட்டை விட்டு பார்வையை நிமிர்த்தவில்லை.

அவன் வாடிய முகத்தோடு வேலைக்கு கிளம்பி போனான்.

"உனக்கு என்னடி வந்துச்சி.? அவன் வேலைக்கு போறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லி வழியனுப்பி வைக்க முடியாதா உன்னால.?" பாட்டி திட்டினாள். ஆனால் சந்தியா ஏதும் சொல்லவில்லை. சாப்பாட்டை தள்ளி வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.

தனது ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு அவள் தனது பார்ம்க்கு கிளம்பி போனாள்.
அவளது நடவடிக்கையை கண்டு மகேஷும் சக்தியும் குழம்பி போனார்கள்.

"இவளுக்கு என்ன ஆச்சி.?" இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கேட்டுக் கொண்டனர். ஆனால் இருவரிடமுமே பதில் இல்லை.

சந்தியா அன்று முழுக்க வயலில் வேலை செய்தாள். வயலில் பெரிய வேலை ஏதும் இல்லை. ஆனாலும் நித்யரூபா அழைப்பதை கூட காதில் வாங்காமல் வெயிலில் வேலை பார்த்தாள். இருக்கும் களைகளை அப்புறப்படுத்தி முடித்தவள் மதிய உணவு உண்ண கூட நித்யாரூபாவோடு இணையவில்லை.

"இவ என்ன பைத்தியமா.?" என யோசித்தாள் அவள்.

"ஏய் லூசு நீ களை பறிச்சது போதும் எழுந்து வா.. மணி அஞ்சி ஆக போகுது.. வீட்டுக்கு கிளம்பலாம்.." மாலை நேரத்தில் அழைத்தாள் நித்யரூபா.

"நீ கிளம்பு ரூபா.. நான் அப்புறமா வீட்டுக்கு போயிக்கிறேன்.." சந்தியா இப்படி சொன்னதும் அதற்கு மேல் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவள் முன்னே சென்று நின்றாள் நித்யரூபா.

"லூசாடி நீ.? அவ உன் புருசன்கிட்ட லவ்வை சொன்னதுக்கு நீ ஏன் இப்படி கோபமா இருக்க.?" என்றாள் எரிச்சலோடு.

சந்தியா செய்யும் வேலையை விட்டுவிட்டு எழுந்து நின்றாள்.

"யார் லவ்வை சொன்னாங்க.?" என்றாள் குழப்பத்தோடு.

சந்தியாவை விட அதிகமாக நித்யரூபா குழம்பி போனாள். "உனக்கு தெரியாதா.?" தனது ஃபோனை எடுத்து அதில் ஒரு வீடியோவை இயக்கி அவள் முன் காட்டினாள்.

"சாகும் முன் தன் புனித காதலை காதலனிடம் வெளிப்படுத்திய பெண்.." என்று டைட்டில் வாசித்து அடுத்ததாக மேகலை இனியனிடம் தன் காதலை சொன்னது வீடியோவில் ஒளிப்பரப்பானது.

அதை பார்த்த சந்தியாவிற்கு சிரிப்புதான் வந்தது. "சந்தியா மேடம் இடத்துல நான் இல்லையேன்னு நினைச்சி பீல் பண்ணி இருக்கேன் சார்.." மேகலை இப்படி சொல்லுவதை கேட்டு வாய் விட்டு சிரித்தாள் சந்தியா.

ஃபோனை அணைத்து தோழியிடம் தந்தவள் "சாகறதுக்கு முன்னாடி டிராமா பண்ணிட்டு செத்து போயிருக்கா அவ.. அதை இவங்க புனித காதல்ன்னு வைரலாக்கிட்டு இருக்காங்களா.? இந்த கூத்தை பார்க்காம மயங்கி கிடந்துட்டேனே நான்.." என சலித்துக் கொண்டாள்.

"சாகாம உயிரோடு இருந்திருந்தா நானே அவ கையையும் இவன் கையையும் ஒன்னா சேர்த்து வச்சிட்டு எங்கிருந்தாலும் வாழ்கன்னு வசனம் பேசியிருப்பேன்.. ச்சே.. செத்துட்டாளேன்னு ரொம்ப கவலையில் இருந்தேன்.. ஆனா அவளை பத்தி கவலைபட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது.."

அவளது குணம் வித்தியாசமாக இருப்பது தோழிக்கும் புரிந்தது. "உனக்கு என்னடி ஆச்சி.? ஏன் இப்படி லூசு மாதிரி பேசுற.?" என்று அவளை பிடித்து உலுக்கினாள்.

"எனக்கு என்ன ஆச்சி.?" திருப்பி கேட்டாள் சந்தியா.

"அவன் மேல உள்ள பொசசிவ்னெஸ்ல பைத்தியமாயிட்ட நீ.." என்று தனது கணிப்பை சொன்னாள் நித்யரூபா.

சந்தியா அதற்கு பதில் சொல்லவே இல்லை. "நீ வீட்டுக்கு கிளம்பு ரூபா.. நீ லேட்டா போனால் உங்க வீட்டுல திட்டுவாங்க.."

"நீ கிளம்பலையா‌.?" சந்தேகத்தோடு கேட்டாள் அவள்.

"இதோ ஒரு பத்து நிமிஷம்.. நீ கிளம்பு.. இந்த பத்து நிமிச வேலை முடிஞ்சதும் நான் கிளம்பறேன்.." என்றவள் நித்யரூபா அங்கிருந்து சென்றதும் அருகிலிருந்த வரப்பின் மீது அமர்ந்தாள்.

அவளது கண்களில் கண்ணீர் திரண்டது. தூர பார்வை பார்த்து அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.
இருள் சூழ்ந்த வேலையில் அங்கு வந்து சேர்ந்தான் இனியன்.

"சந்தியா.." என்றபடி அவன் வர சந்தியா சட்டென எழுந்து நின்றாள். தனது கன்னத்தை துடைத்து கொண்டாள். பார்ம் கட்டிடத்திற்கு வந்தவள் அங்கிருந்த தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

"சந்தியா.." இனியன் அழைப்பதை காதில் வாங்காதவள் பார்மை பூட்டிவிட்டு நடந்தாள்.
அவளுக்கு முன் ஓடி சென்று தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான் இனியன். அவனது பைக்கை கண்டுக் கொள்ளாமல் நடந்தாள் சந்தியா.

"சந்தியா வந்து பைக்கில் ஏறு.." என்றவன் அவள் முன்னால் குறுக்காக பைக்கை நிறுத்தினான்.

"எனக்கு உன் லிஃப்ட் தேவையில்ல.. என்னை விட்டுடு.. ப்ளீஸ்.. உன் பைக்கில் ஏறாம வழியில் வேற எவனோடாவது கிளம்பிடுவேன்னு நீ நினைச்சா இந்த போன்லயும் ஹேக்கிங் செட் பண்ணி வச்சிக்க.." என்று அமைதியாக சொன்னவள் அவன் முன் தன் ஃபோனை நீட்டினாள்.
இனியன் கண்களை மூடி பற்களை கடித்தான். "நான் செஞ்சது தப்புதான்.. உன்னை கேட்காம உன் ஃபோன்ல இப்படி செட் பண்ணது தப்புதான்.. சாரி.. இப்போதாவது வந்து பைக்கில் உட்காரு.."

சந்தியா முடியாதென தலையசைத்தாள். "நான் உன்னோடு ஏன் வரணும்.? அடிப்படை நம்பிக்கையே இல்லாத உன்னோடு.." அவள் மேலும் பேசும் முன் அவள் முன் கை காட்டி நிறுத்தினான் இனியன்.

"இதான் லாஸ்ட் வார்னிங்.. நீ இப்ப என்னோடு பைக்ல வரலன்னா அப்புறம் எனக்கும் எந்த கவலையும் இல்லன்னு இருந்திடுவேன்.. எனக்கு யார்க்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்கறது பிடிக்காதுன்னு உனக்கே ரொம்ப நல்லா தெரியும்.. என் ஈகோவை விட்டுட்டு உன்கிட்ட நான் சாரி கேட்டுட்டேன்.. இதுக்கு மேலயும் என் பொறுமையை சோதிக்காத.."

தனது கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள் சந்தியா. "நீ இங்கிருந்து கிளம்பு.. எனக்கு உன் லிப்டும் தேவையில்ல.. உன் உலகப்புகழ் பெற்ற ஈகோவை விட்டுட்டு நீ கேட்கற சாரியும் தேவையில்ல.‌. உன் நடிப்பை வேற எவக்கிட்டயாவது போய் காட்டு.. சாகும்போது கூட நீ யாருன்னு தெரிஞ்சிக்காம ஐ லவ் யூ சொல்லி முத்தம் தந்துட்டு போகட்டும்.." என்றவள் சரக்கென திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

இனியன் நெற்றியில் அடித்துக் கொண்டான். "இவ சலங்கை கட்டி ஆட இன்னொரு காரணம் கிடைச்சிடுச்சாம்.. ஆனா அவ லவ்வை சொன்னாளே தவிர நான் ஏதாவது சொன்னேனா.? இது ஏன் இவளுக்கு புரிய மாட்டேங்குது.? என் பொறுமை கரை கடந்துடுச்சி சந்தியா.." என்று வாய்க்குள் முனகியவன் பைக்கை முறுக்கினான்.

அவன் வீட்டிற்கு வந்து கால் மணி நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தாள் சந்தியா.

"ஏன்ம்மா இவ்வளவு லேட்டு.?" கரிசனத்தோடு கேட்டான் மகேஷ்.

சந்தியா பதில் சொல்ல இருந்த நேரத்தில் இனியன் குறுக்கில் புகுந்தான்.

"அவக்கிட்ட ஏன்ப்பா இதை கேட்கறிங்க.? அப்புறம் என்னையே கேள்வி கேட்கறிங்களான்னு புதுசா ஒரு நாடகத்தை ஆரம்பிப்பா அவ.." இனியனது வாய் அவனுக்கே எதிரியாக மாறிக் கொண்டிருந்தது.

சந்தியா இனியனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு படிகளில் ஏறினாள்.

"மாமன் கேள்வி கேட்கறான். நீ ஏன்டி பதில் சொல்லாம போற.?" பொன்னி கோபத்தோடு கேட்டாள்.

சந்தியா நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்தாள். "அதுதான் எனக்கு பதிலா உன் பேரனே பதிலை சொல்லிட்டானே. அதுவும் இல்லாம அவன் ஒரு பதிலை சொன்ன பிறகும் இங்கே என் பதில் முக்கியமா என்ன..?" என்றவள் உன் பேரன் என்ற சொல்லில் அதிகமாகவே அழுத்தத்தை தந்திருந்தாள்.

இனியன் அவளை கடுப்போடு பார்த்தான். ஆனால் அவள் முகத்தில் கோபம் ஏதும் இல்லை. அவனை ஏதோ ஒரு வேதனையோடு பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
"என்னடா பண்ண.?" இனியனின் முதுகில் பளீரென ஒரு அடியை விட்டுவிட்டு கேட்டாள் சக்தி.

"அம்மா.." தன் முதுகை தேய்த்து விட்டு கொண்டவன் "நான் என்ன பண்ணேன்.? அவளுக்குதான் ஆணவம் தலைக்கேறி போச்சி.. அதுக்கு என்னை ஏன் அடிக்கிற.?" என்றான்.

"ஆணவம் அவளுக்கு என்னைக்குமே இருந்தது இல்ல.. ஆனா உனக்குதான் எக்கச்சக்கமா இருக்கு.." என்றாள். அவனை அடிக்க மீண்டும் கையை ஓங்கினாள்.

"ஆம்பள பையனை அடிக்கதான் உங்க வீட்டுல சொல்லி தந்தாங்களா.?" என எரிச்சலோடு பொன்னி கேட்கவும் பல்லை கடித்தபடி தன் கையை கீழிறக்கினாள் சக்தி.

'இதுல என்ன ஆம்பள பொம்பள அத்தை.?' என கேட்க சக்தியின் நா துடித்தது. ஆனால் புரிந்து கொள்ள மாட்டேன் என்று இருப்பவர்களிடம் எதை சொன்னாலும் வீண்தான் என அறிந்திருந்தவள் அமைதியாக இருந்து கொண்டாள்.

இனியன் மறுநாள் வேலைக்கு சென்றதும் மேகலையின் வீடியோ எப்படி வெளியானது என விசாரித்தான்.

"சார்.. மேகலை செத்த இடத்துல நீங்க இருந்தும் அவங்களை நீங்க காப்பாத்துலன்னு மீடியாவுக்கும் பப்ளிக்கும் தெரியும் சார்.. போலிஸ்காரன் ஏன் ஒரு பெண்ணை காப்பாத்தலன்னு தேவையில்லாத கேள்வியை நம்ம முன் வைப்பாங்க சார் அவங்க.. அந்த பொண்ணை நீங்க காப்பாத்த டிரை பண்ணது தெரியணும்ன்னுதான் முழு வீடியோவையும் தந்தோம் சார்.. ஆனா இது இப்படி வைரலாகும்ன்னு யாருமே எதிர்பார்க்கல.." தேவன் சொன்னதை கேட்டபிறகு இனியனுக்கும் கை மீறி போன விசயத்தை இனி தடுக்க முடியாது என புரிந்து கொண்டான்.
இனியன் சந்தியா தன்னிடம் பேச வருவாள் என காத்திருந்தான். ஆனால் அவள் அவனை திரும்பி பார்க்கவும் மறுத்தாள். அவனாக ஒன்றிரண்டு முறை சென்று பேச்சு தந்தான். ஆனால் அவளோ சிலையினை போல உணர்வுகள் எதையும் காட்டாமல் இருந்தாள்.
இவர்களது இந்த பிரச்சனையே முடியாத சூழலில் அங்கு ரியாவும் வந்து சேர்ந்தாள். அவளோடு அவளது அம்மா புவனாவும் வந்திருந்தாள்.

"மாமா.." மாலை வேளையில் சந்தியா அமர்ந்திருந்த நாற்காலியின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அவளோடு பார்வையில் போர் புரிந்து கொண்டிருந்தவன் ரியாவின் குரல் கேட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தான்.

"அட.. ரியா குட்டி.." என்று எழுந்து நின்றவனை ஓடி வந்து கட்டி கொண்டாள் அவள்.

"ஐ மிஸ் யூ மாமா.." என்றவளின் தலையை வருடி தந்தான் இனியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1044
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN