நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மருத்துவர் இனியனை கண்டதும் தனக்கு முன் இருந்த நாற்காலியை கை காட்டினார்.

"நான் ரேகா.." மருத்துவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

"நான் இனியன் மேடம்.. என் வொய்ப்க்கு என்ன ஆச்சி.?" தயக்கத்தோடு கேட்டவனை குழப்பமாக பார்த்தாள் ரேகா.

"உங்களுக்கு தெரியாதா.? அவங்களுக்கு மிஸ்கேரியேஜ் ஆயிடுச்சி.. நீங்களே புரிஞ்சிட்டு இருந்திருப்பிங்கன்னு நினைச்சேனே..‌" ரேகா யோசனையோடு சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு இனியனின் முகத்தில் இருந்த மொத்த இரத்த ஓட்டமும் அப்படியே நின்று போனது. அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை.
"என் வொய்ப் பிரகனென்டா இருந்தாளா.?" சில நொடிகள் தயங்கிய பிறகு கேட்டான்.
ரேகா அவனை இன்னும் குழப்பத்தோடு பார்த்தாள். "ஏழு வாரங்கள் கர்ப்பம்.. ஆனா உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றிங்க. நீங்க உண்மையிலேயே அவங்களோட ஹஸ்பண்ட்தானா.?" அவள் சற்று எரிச்சலோடு கேட்டாள்.

'ஏழு வாரம்..' இனியனுக்கு இதயத்தில் ஊசி செருகப்பட்டது போல வலித்தது.
வரையப்படாத ஓவியம் ஒன்று அப்படியே கருகி போனதை போன்று துக்கம் அவன் நெஞ்சை அடைத்தது. ஆரம்பிக்காத கனவு இப்படி முடியும் என்று அவன் உறக்கத்தில் கூட நினைத்து பார்க்கவில்லை.

"சாரி டாக்டர்.. அவ என்கிட்ட சொல்லல.. மூணு வாரம் முன்னால் ஒரு சின்ன சண்டை. அதிலிருந்து அவ என்னோடு பேசுறது இல்ல.." என்றவனின் கண்களின் ஓரம் ஈரம் படர்ந்தது. பற்களை கடித்தபடி கண்களை சிமிட்டிக் கொண்டான்.

ரேகா எதையோ புரிந்துக் கொண்டது போல காணப்பட்டாள்.

"ஓ.. இந்த காலத்து பசங்களை புரிஞ்சிக்கவே முடியல.. சண்டை வந்தா இப்படி ஒரு விசயத்தை கூடவா சொல்லாம இருப்பது.? சரி நீங்க போய் வேற யாரையாவது வர சொல்லுங்க.. நான் மீதியை அவங்களோடு பேசிக்கிறேன்.."

"எதுவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க டாக்டர்.." சிறு குரலில் கேட்டான்.

"அவங்க தன் பிரகனென்சியை உங்ககிட்ட சொல்லலன்னா கண்டிப்பா இது வேற மாதிரி பிரச்சனையாதான் இருக்கும்.. ஐ திங் நீங்க அவங்களை கொடுமை ஏதும் பண்ணி இருப்பிங்க.. அதான் அவங்க சொல்லல போல.. அவங்களோட அம்மா அப்பா இருந்தா வர சொல்லுங்க.. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.." என்றவள் அருகில் இருந்த நர்ஸை பார்த்து சைகை காட்டினாள்.

"டாக்டர் ப்ளீஸ்.. இந்த விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா எல்லோரும் பீல் பண்ணுவாங்க.."

"சார் நீங்க என்ன வகையான மனுசன்.? அந்த பொண்ணு சாகாத குறையா பெட்ல இருக்கா. இந்த விசயத்தை வீட்டுல சொல்லாதிங்கன்னு சொல்றிங்க நீங்க.. அந்த பொண்ணோட ஹெல்தை விட உங்க பீலிங் பெருசா.? இதை வீட்டுல சொல்லன்னா அந்த பொண்ணை யார் நாளைக்கு கவனிச்சிப்பாங்க.?" என்று கோபமாக அவள் கேட்டபொழுது சக்தியும் மகேஷும் அந்த அறைக்குள் வந்தனர்.

"டாக்டர்.. சந்தியாவுக்கு என்ன ஆச்சி.?" சக்திதான் கேட்டாள்.

"நீங்க யார் அவங்களுக்கு.?"

"அவ என் மருமக டாக்டர்.."

ரேகா சக்தியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தாள். 'இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய பையனா‌.?'

"அந்த பொண்ணோட அம்மாவை வர சொல்லுங்க.. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்.." என்றவள் மகேஷை மேலும் கீழும் பார்த்தாள்.

"அவளுக்கு அம்மா இல்ல டாக்டர்.. இறந்துட்டாங்க.. அவளுக்கு எல்லாமே நாங்கதான்.. எதுவா இருந்தாலும் எங்ககிட்டயே சொல்லுங்க.." என்ற மகேஷ் இனியனின் நொந்து போன முகத்தை பார்த்தான்.

"அந்த பொண்ணுக்கு மிஸ்கேரியேஜ் ஆகியிருக்கு. ஆனா இவரை கேட்டா அவங்க பிரகனென்சியை பத்தி கூட எதுவுமே தெரியாதுன்னு சொல்றாங்க.. அதுனாலதான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு வர சொன்னேன்.."

மகேஷும் சக்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"அவளோட பிரகனென்சி பத்தி எங்களுக்கும் தெரியாது டாக்டர்.. மூணு வாரமா முகம் வாடி போய்தான் இருந்தா.. யார் கூடவும் அதிகம் பேச கூட இல்ல.." என்ற சக்தி இனியனை பரிதாபத்தோடு பார்த்தாள்.

"பிரச்சனையே அதுதான்.. அவங்களுக்கு உடம்புல ஒரு பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு ஸ்ட்ரெஸ்னாலதான் இப்படி ஆகியிருக்கு.. தாங்க முடியாத மன அழுத்தம் இந்த மாதிரியான விளைவைதான் தரும்.. ஒரு சின்ன பொண்ணுக்கு எதுக்காக இவ்வளவு மன அழுத்தம்.?" ரேகா இதை கேட்கவும் இனியனுக்கு தன்னையே கொட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. சிறு தவறு கொண்டு வந்து தந்த முடிவை நினைத்து தன் மீதே ஆத்திரம் கொண்டான்.

"நான் அவளை பார்க்கலாமா.?" கரகரத்த குரலில் கேட்டான் இனியன்.

"அவங்க கண் விழிச்சதும் போய் பாருங்க.." இனியனை ரேகாவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

"தேங்க்ஸ் டாக்டர்.." என்ற மகேஷ் இனியனை தன்னோடு அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"இதெல்லாம் ஒரு துர்லாபம்தான்டா.. மத்தபடி வேற ஏதும் இல்ல.. இதுக்காக ஏன் கவலைப்படுற.? உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு.. உங்களுக்கு குழந்தையே பிறக்காமலா போக போகுது.? இந்த குழந்தைக்கு விதி இல்ல. அவ்வளவுதான்.. இதுக்கப்புறம் பெத்துக்கிட்டா போச்சி விடு.." மகேஷ் தன்னால் முடிந்த ஆறுதல் என்று தன் மனதில் தோன்றியதை சொன்னான்.

மகேஷிடமிருந்து விலகி நடந்தான் இனியன். 'குழந்தைக்கு விதி இருந்தது. ஆனா எங்களுக்குதான் விதி இல்ல..' என நினைத்தவனுக்கு மனம் முழுக்க பாரம் மட்டுமே இருந்தது.

பாட்டி நடந்ததை கேட்டு மனம் வருந்தினாள். சக்தியும் மனம் வாடி போய்தான் இருந்தாள்.
இனியன் தேவனிடம் ஃபோன் செய்து இன்று தன்னால் வேலைக்கு வர முடியாது என்று சொல்லி விட்டான்.

மூன்று மணி நேரம் கடந்து விட்டிருந்தது. நர்ஸ் வந்து சக்தியை அழைத்தாள். இனியனும் அவளோடு சேர்ந்து போனான்.

மீண்டும் அதே டாக்டர் அவர்களை அமர சொல்லி சைகை காட்டினாள்.

"அந்த பொண்ணு கண் விழிச்சிட்டா.." ரேகா சொல்லவும் அவசரமாக எழுந்தான் இனியன்.
"உட்காருங்க மிஸ்டர்.. நான் இன்னும் முழுசா சொல்லல.." ரேகாவின் குரலில் அமைதியாக அமர்ந்திருந்தான் இனியன்.

"இந்த மிஸ்கேரியேஜ் பத்தி அந்த பொண்ணுக்குமே தெரியல.. ஏதோ மன்த்லி பீரியட்ஸ்ன்னு நினைச்சிட்டு இருந்திருக்கா.. நேத்து சரியா சாப்பிடாததால மயக்கம்ன்னு நினைச்சிட்டு இருந்திருக்கா.. நான் நடந்ததை சொன்னதும் அப்படியே சிலை மாதிரி ஆகிட்டா.. ஏதும் பேச கூட இல்ல.. எந்த ரியாக்சனும் பண்ணல.. அழுகலன்னா கூட பரவால்ல.. ஆனா சின்ன வருத்தம் கூட முகத்துல இல்ல.. ஜஸ்ட் ஷாக் மட்டும்தான் இருந்தது.."

"என் மேல இருக்கற கோபத்துல அப்படி இருப்பா டாக்டர்.." சிறு குரலில் சொன்னான் இனியன். அவனை குழப்பத்தோடு பார்த்தாள் சக்தி.

ரேகா அவனை பார்த்து முறைத்தாள். "அப்படி இல்ல.. இந்த பொண்ணை நல்ல சைக்யாட்ரிஸ்ட்க்கிட்ட காட்டுவது நல்லது.." என்றாள் உணர்ச்சியில்லா குரலில்.

இனியனுக்கு உடனடியாக கோபம்தான் வந்தது. "என் பொண்டாட்டி ஒன்னும் பைத்தியம் கிடையாது.." என்றான் அழுத்தமாக. ரேகாவை கொலை வெறியோடு முறைத்தான்.

"உங்க பொண்டாட்டி பைத்தியம்ன்னு நானும் சொல்லல.. ஆனா அவங்களோட மன அழுத்தம் தானா சரியாகாது.. நீங்க சைக்யாட்ரிஸ்கிட்ட அவங்களை கூட்டி போகலன்னா அப்புறம் கூடிய சீக்கிரமே அவங்க பைத்தியமாதான் ஆவாங்க.." என்றவளிடம் "நீங்க சொன்னது போலவே செய்றோம் டாக்டர்.." என சொல்லி விட்டு இனியனை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள் சக்தி.

"என்ன ஆச்சி சக்தி.?" என்றபடி எழுந்து வந்தான் மகேஷ். அவனை கை காட்டி நிறுத்தியவள் இனியனை அருகிலிருந்த காலி வராண்டாவிற்கு இழுத்து சென்றாள். மகேஷும் ஒன்றும் புரியாமல் அவர்களை பின்தொடர்ந்தான்.

"அம்மா என் கையை விடு.. நான் போய் சந்தியாவை பார்க்கணும்.." என்றவனின் கையை விட்டவள் "அவளோட ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்ன.?" என்றாள்.

"எனக்கு எப்படிம்மா தெரியும்.?" என்றவன் அவளை நேராக பார்க்க மறுத்தான்.

"உனக்கு தெரியாம இங்கே எதுவும் நடக்காது.. அவளை முழுசா ஆட்டி வைக்கிறவனே நீதான்னு எனக்கு நல்லா தெரியும்.. அவளை என்ன திட்டி வச்ச.? இல்ல அடிச்சி ஏதும் வச்சியா.? இந்த மூணு வாரமா என் வொர்க்கை பார்த்துட்டு அவளை சரியா கவனிக்காதது என் தப்பும்தான். ஆனா அவளோட மன அழுத்ததுக்கு என்ன காரணம்ன்னு இப்ப நீ சொல்லு.. நான் அவக்கிட்ட ஏதாவது பேசி சரி பண்றேன்.."

"ம்மா.. எனக்கு நிஜமாவே ஏதும் தெரியாது.."

"அவன் என்ன இன்னும் சின்ன குழந்தையா.? விடு சக்தி.. தவறுதலா லாஸ் ஆகிட்ட விசயத்துக்காக இவனை ஏன் இப்படி கேள்வியா கேட்கற.?"

"பையனுக்கு சப்போர்ட் பண்றேன்னு வரிஞ்சி கட்டிட்டு வந்தின்னா அப்புறம் நான் மனுசியாவே இருக்க மாட்டேன் பார்த்துக்க.. நீ கொடுத்த செல்லம்தான் இவன் இப்படி குட்டி செவரா கெட்டு போய் இருக்கான்.." சக்தியின் திட்டில் மகேஷ் தன் வாயை மூடிக் கொண்டான்.

"நான் அவளை பார்க்க போறேன்.." என்றவன் தன் கை பிடித்து நிறுத்திய சக்தியின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டு நடந்தான்.

"இனியா.." அவனை பின் தொடர இருந்தவளை நிறுத்தினான் மகேஷ்.
"விடும்மா.. லாஸ் அவளுக்கு மட்டுமா.? இவனுக்கும்தானே.? வருத்தத்துல இருக்கறவன்கிட்ட ஏன் சண்டை பண்ற.?" என்றான். சக்தி அவனை முறைத்தாள். ஆனால் அவன் உன் கோபம் என்னை என்ன செய்யும் எனும்படி நின்றான்.

சந்தியா இருந்த அறைக்குள் நுழைந்தான் இனியன். சுவரை பார்த்து படுத்திருந்தாள் அவள். இவன் வந்த அரவம் கேட்டும் கூட அவள் திரும்பவில்லை. அவள் படுத்திருந்த பக்கம் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அவன். அவள் தன் பார்வையை திருப்பவே இல்லை.

"சந்தியா.." இனியன் அழைத்ததும் மெல்ல தன் பார்வையை அவன் பக்கம் திரும்பினாள்.

"ஐயம் சாரி.." என்றவன் அவளது கையை பற்றினான். அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே அவன் முகத்தை பார்த்தாள்.

"என்னாலதான் இப்படி ஆச்சி.. நம்ம குழந்தை நம்மகிட்ட இல்லாம போக நான்தான் காரணம்.." என்றவன் அவளின் கையில் தன் முகத்தை புதைத்தான்.

"உனக்கு தேவையில்லாத தொல்லையை தந்துட்டேன் நான்.. என்னை என்ன வேணாலும் திட்டு.. ஆனா இப்படி பேசாம இருக்காத.." என்றவன் நிமிர்ந்து பார்த்தான்

"நீ என் மேல கொலை வெறியில் இருப்பன்னு தெரியும் சந்தியா.. என்னை உன் கையாலயே கூட அடிச்சி கொன்னுடு.. ஆனா ப்ளீஸ் ஏதாவது பேசு.." என்றான் கெஞ்சலாக.

அவள் மௌனமாகவே இருந்தாள். மருத்துவர் சொன்னது உண்மைதானோ என நினைத்து பயந்து போனான் இனியன். 'சைக்யாட்ரிஸ்ட்க்கிட்ட கூட்டி போகும் அளவுக்கு விசயம் கை மீறிடுச்சா.?"

"சந்தியா.." என்றான் மீண்டும் கெஞ்சலாக. அவள் அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் எதுவுமே பேசவில்லை.

அவளிடமிருந்து வேறு பக்கம் திரும்பி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான் அவன். கை நழுவி சென்று உடைந்து விட்டதை திருப்பி கொண்டு வரும் வழியும் அவனுக்கு தெரியவில்லை. இப்போது வழி தவறும் விசயத்தை சரி செய்யும் வழியும் அவனுக்கு தெரியவில்லை.

வெகுநேரம் அவள் அருகில் அமர்ந்திருந்தான் இனியன். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனைத்தான் பார்த்தாள். ஆனால் மௌனம் மட்டுமே காத்தாள்.

சந்தியா சற்று நேரத்தில் உறங்கி போனாள்.

அவள் மீண்டும் கண் விழித்தபோது மகேஷ் அவளோடு பேச முயற்சித்தான். ஆனால் அவள் வாயை திறக்கவேயில்லை.

சக்தி அவளை பார்த்து வேதனைப்பட்டாள். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
"ஒன்னுமில்லம்மா.. எல்லாம் சரியாகிடும்.." என்றாள். தனது கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டாள் அவள்.

"எனக்கு ஒன்னும் இல்ல அத்தை.. நீங்க அழாதிங்க" சிறு குரலில் சந்தியா சொன்னாள்.
அவள் தன் தாயோடு மட்டும் பேசியது இனியனுக்கு வலியை தந்தது. அவளின் வெறுப்பை மட்டும் தான் சம்பாதித்து வைத்துள்ளோம் என நினைத்து உள்ளம் நொந்தான்.

Don't judge a book by it's cover😉 இது எதுக்குன்னு அடுத்தடுத்த அத்தியாங்களில் தெரிய வரும்.😊

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1119
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN