நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தன் முன் அமர்ந்து டீயை குடித்துக் கொண்டிருந்த முகிலை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் பார்க்கும்போது சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள். அவளை கண்டு முகிலுக்கு சிரிப்பாக இருந்தது.

"யதி.."

அவனது அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.

"ஏன் மாமா.?"

"நீ வீட்டை விட்டே வெளியே போக மாட்டியே.. அப்புறம் எப்படி வேலைக்கெல்லாம் போற.?" என்றான் சூடான டீயை பருகியபடியே.

"அண்ணன்தான் அனுப்பி விட்டான் மாமா.. காலேஜ் முடிச்ச பிறகு வீட்டுல தினம் அழுதுட்டே இருக்கேன்னு வேலையில் சேர்த்து விட்டான். அது நீலா அண்ணியோட பெரியப்பா கடைதான்.. அண்ணியோட பெரியப்பாவுக்கு ஒத்தாசையா இருந்தா போதும்ன்னு சொன்னாங்க.." என்று அவள் சொல்ல 'அதானே பார்த்தேன்.. நான் கூட நீ தைரியம் வந்து சொந்த கால்ல நிற்க ஆசைப்பட்டு வேலைக்கு போனியோன்னு ஒரு நிமிசம் நினைச்சிட்டேன்..' என்று எண்ணினான்.

"நான் போக மாட்டேன்னுதான் முதல்ல சொன்னேன். ஆனா அப்புறம் வீட்டுல அழுதுட்டே இருக்க பிடிக்காம போக ஆரம்பிச்சிட்டேன்.." என்றவளை கவலையோடு பார்த்தான் முகில்.
அவள் தினமும் அழுதிருக்கும் பொழுதுகளை நினைத்து பார்க்கையில் மனம் வாடியது.

"இனி எப்படி வேலைக்கு போறதுன்னு தெரியல மாமா.. நான் உங்களோடு வந்தது அண்ணனுக்கு பிடிக்காது.. அங்கே வந்து கத்தப் போறான்.." என்றாள் பயம் நிறைந்த குரலில்.

முகில் யோசித்து பார்த்தான். ரூபன் கடைக்கு வந்து இவளை இழுத்து செல்ல தயங்க மாட்டான் என்பது புரிந்தது.

"நீ வேலைக்கு போகாதே.. வீட்டுலயே இரு.." என்றான் ஒரு புது யோசனையோடு.

யதிரா தயங்கினாள். ஆனால் மறுத்து பேசவும் மனமில்லை. அங்கே வேலைக்கு செல்லவும் கூட விருப்பமில்லை.

"சரி மாமா.." என்றாள்.

"அந்த கார் யாரோடது மாமா.?" யோசனையோடு கேட்டாள்.

"என் பிரெண்டோடது.. அவன் பாரின் போயிருக்கான்.. அதனால இதை என்னை யூஸ் பண்ணிக்க சொல்லிட்டான்.." என்று உடனடியாக ஒரு பொய்யை சொன்னான்.

அவள் சமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டு வாசலில் ரூபனின் குரல் கேட்டது. பயத்தோடு சென்று எட்டிப்பார்த்தாள்.

ரூபன் கோபத்தோடு நின்றிருந்தான். அவனை நக்கலாக பார்த்தபடி அவனெதிரே நின்றிருந்தான் முகில். அண்ணனின் முகத்தில் இருந்த காயம் கண்டு வருந்தினாள் யதிரா.

"என் தங்கச்சியை வெளியே வர சொல்லு.." என்று கர்ஜனையோடு கேட்டான் ரூபன்.

அதே நேரத்தில் அங்கு முகிலின் குடும்பமும் வந்து சேர்ந்தது.

ரூபனை முறைத்தபடியே வீட்டுக்குள் நுழைய முயன்றாள் சௌந்தர்யா. வாசற்படியில் கை கட்டி நின்றிருந்த முகில் அவளுக்கு வழி விடாமல் நின்றான்.

"வழியை விட்டு தள்ளி நில்லுடா.. அந்த உதவாக்கரையை எதுக்கு மறுபடியும் கூட்டி வந்து வச்சிருக்க.?" என்று எரிந்து விழுந்தாள்.

முகில் யதிரா பக்கம் பார்த்தான். அவள் பயத்தோடு ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் தடுமாற்றமாக பதில் புன்னகை தந்தாள்.

அக்கா பக்கம் திரும்பினான். "அந்த உதவாக்கரைக்கு இந்த உதவாக்கரையை பிடிச்சிருக்கு. இந்த உதவாக்கரைக்கும் அந்த உதவாக்கரையை பிடிச்சிருக்கு.. அதனாலதான் கூட்டி வந்துட்டேன்.." என்றான்.

"இப்ப நீ அவளை வெளியே அனுப்பலன்னா அப்புறம் நான் போலிஸ்க்கு ஃபோன் பண்ணுவேன்.." என்று எச்சரித்தான் ரூபன். அவன் சொன்னது கேட்டு முகிலுக்கு சிரிப்புதான் வந்தது.

"பண்ணுடா.. வந்து இந்த டிராப்பிக்கை கிளியர் பண்ணட்டும்.." என்று சொல்லி சிரித்தான். "போலிஸ்ல ஏற்கனவே நாங்க எழுதி கொடுத்துட்டுதான் வந்திருக்கோம்டா.. நானும் இவளும் மனமொத்து காதலிக்கறதையும் அதுக்கு தடையா நீங்க எல்லோரும் இருக்தறதையும் எழுதி தந்திருக்கோம்.. எங்களுக்கு ஏதாவது ஆனால் அதுக்கு நீங்கதான் காரணம்ன்னும் எழுதி தந்திருக்கோம்.. அதனால எங்களை பிரிச்சி விடுற வேலையை விட்டுட்டு போய் உங்க வேலையை பாருங்க.. கொஞ்ச நாளுக்காவது சந்தோசமா இருங்க.." என்றான் கிண்டலாக.

சௌந்தர்யா அவனை கோபத்தோடு முறைத்தாள். "பைத்தியம் முத்தி போய் திரியாதே.. அவளுக்கும் நமக்கும் ஒத்து வராது.. மரியாதையா அவளை அனுப்பிட்டு நம்ம வீட்டுக்கு வா.." என்றாள்.

"இந்த நாடகக்காரியோடு எதுக்குடா சகவாசம்.? வாடா நம்ம வீட்டுக்கு போகலாம்.." என்று கண்ணீரோடு அழைத்தாள் அம்மா. அப்பா ஒரு ஓரமாக நின்று இவனை முறைத்தார்.
ஆனால் எதுவும் பேசவில்லை. முகம் நிறைய காயங்களோடு இருந்த சௌந்தர்யாவின் கணவன் ரூபனை முறைத்தபடி நின்றான். ரூபனின் முகத்தையும் அக்கா கணவன் முகத்தையும் மாறி மாறி பார்த்த முகில் நடந்ததை யூகித்து பார்த்து புரிந்துக் கொண்டான். சிரிப்பாக வரவிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

"நீங்க எல்லாம் இங்கே என்ன பண்றிங்கன்னு தெரியல.. இந்த வீட்டுல நானும் என் கேர்ள் பிரெண்டும் தனியா வாழலாம்ன்னு வந்திருக்கோம்.. எங்களுக்குள்ள ஒத்து வந்து கல்யாணம் பண்ணிக்கற நினைப்பு வந்த பிறகு தேதி முடிவு பண்ணிட்டு உங்களை வந்து அழைக்கிறோம். அப்ப எல்லோரும் கல்யாணத்துக்கு வருவிங்க.. இப்ப அமைதியா கிளம்பி போங்க.." என்றான்.

அவன் சொன்னது கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் கோபம் வந்தது.

"யதி.. மரியாதையா வெளியே வா.. இவன் ஒரு பச்சோந்தி.. நாளைக்கே கூட உன்னை விட்டுட்டு போயிடுவான்.. என்னோடு வா.." என்று உள்ளே பார்த்து கத்தினான் ரூபன். இவனது கத்தல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் குடியிருந்தவர்கள் காம்பவுண்ட் தாண்டி எட்டி பார்த்தனர்.

யதிராவின் விம்மல் சத்தம் முகிலின் காதில் விழுந்தது. "இவ ஒருத்தி.." என்று சலித்துக் கொண்டவன் "உன்னை விடவும் நான் ஒன்னும் பெரிய பச்சோந்தி இல்ல.. பொண்டாட்டி சிரிச்சி பேசியவுடனே உன் தங்கச்சியை எனக்கு கட்டி வச்சவன்தானே நீ.? அப்புறம் இவளும் நீயும் பிரிஞ்சி நாசமா போனதுக்கு தேவையே இல்லாம எங்களையும் சேர்த்து பிரிச்சி விட்டவங்கதானே நீங்க.. நான் நல்ல மூட்ல இருக்கும்போதே மரியாதையா இங்கிருந்து போயிடுங்க.." என்றான் பற்களை கடித்தபடி.

"அவளோடு நீ வாழ்ந்தா அப்புறம் நான் எப்படிடா உன்னோடு இருக்க முடியும்..? உனக்கு ஏன்டா என் பீலிங் புரியல.. இவளோடு நீ வாழ்ந்தா அப்புறம் அவளை பார்க்க அவ அண்ணன் வருவான்.. நான் எப்படி இவன் முகத்துல விழிக்க முடியும்..? நாங்க இரண்டு பேரும் எங்களுக்குள்ள ஒத்து வராம டைவர்ஸ் வாங்கி இருக்கோம்.. இப்ப நீயும் அவளும் ஒன்னா வாழ்ந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்.?" என்று தலையை பிடித்தபடி கேட்டாள் சௌந்தர்யா.

முகில் கையை கட்டியபடி கதவின் மீது சாய்ந்து நின்றான். "நீயும் அவனும் ஒருத்தரோட முகத்தை ஒருத்தர் பார்க்க கூடாதுன்னு நினைச்சா இரண்டும் பேரும் ஆளுக்கொரு கான்டினென்ட் போய் செட்டில் ஆகுங்க.. உங்களை யார் எங்க வீட்டுக்கு வந்து ஒருத்தரோட முகத்துல ஒருத்தரை விழிக்க சொன்னது.? தம்பி முக்கியம்ன்னு தோணினா நீ அட்ஜஸ்ட் பண்ணு.. உங்க உதவாத காரணத்துக்காக நான் ஏன் என் உயிரை பிரியணும்.?" என கேட்ட முகிலை ஆத்திரத்தோடு பார்த்தாள் சௌந்தர்யா.

"ஒரே நைட்ல உனக்கு அவ சொக்குப்பொடி போட்டுட்டாளா.?" என்றாள் எரிச்சலோடு.
முகிலுக்கு ரத்தம் கொதிப்பது போல இருந்தது. தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அக்காவை பார்த்தான். "ஆமா.. சொக்குப்பொடி போட்டிருக்கா.. நீ உன் புருசனுக்கு போட மாட்டியா என்ன அந்த சொக்குப்பொடியை..?" என்று கேட்டு சிரித்தான்.
சௌந்தர்யா முகம் கருத்து போய் தம்பியை முறைத்தாள்.

"உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னிங் யதிரா.. மரியாதையா வெளியே வா.." என்று கத்தினான் ரூபன்.

"இப்ப நீ அவளை வெளியே அனுப்பலன்னா அப்புறம் ஜென்மத்துக்கும் நான் உன் முகத்துல விழிக்க மாட்டேன் முகி.." என்று உடைந்து போன குரலோடு கண்களை கசக்கிக் கொண்டு சொன்னாள் சௌந்தர்யா. அம்மாவும் இவளை கண்டு அதிகமாய் அழுதாள்.

'டிராமா குயின்..' என்று மனதுக்குள் கருவினான் முகில். "யதிராவை நீ என் கேர்ள் பிரெண்டா ஏத்துக்கலன்னா அப்புறம் நான் உன் முகத்துல விழிக்க மாட்டேன் அக்கா.." என்றவன் பொய்யாக தன் கண்ணை துடைத்துக் கொண்டான். இவன் செய்கை கண்டு சௌந்தர்யாவுக்கு எரிச்சலாக வந்தது.

முகத்தை திருப்பி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்‌. இரண்டடி சென்று விட்டு திரும்பி பார்த்தாள். "இவளை இப்படி கூட்டி வந்து வச்சிட்டு இருக்கறதுக்கு நீ ரொம்ப பீல் பண்ண போற.." என்று விட்டு அங்கிருந்து சென்றாள். அம்மா அழுதபடி மகனை பார்த்துவிட்டு மகளை பின்தொடர்ந்தாள். அப்பா அவனை வெறுப்பாக பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றார். சௌந்தர்யாவின் கணவனும் ரூபனும் ஒருவரையொருவர் முறைத்தபடி நின்றனர்.

"எக்ஸ்க்யூஸ்மீ.. நீங்க இரண்டு பேரும் சண்டை போடுறதா இருந்தா தெருவுல போய் போடுங்க.. இது எங்க பிராப்பர்டி ஏரியா.." என்று நாக்கை சுழற்றியபடி சொன்ன முகில் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டான்.
யதிரா அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டாள். அருகில் வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் முகில்.

"இவங்க சொன்னது எதையும் காதுல போட்டுக்காத யதி.." என்றான்.

"ஆனா பாவம் அத்தை அழுதாங்க.." என்றாள் விம்மலாக.

அவளது முதுகை வருடி விட்ட முகில் "அவங்க தன் பொண்ணு பேச்சை கேட்கறாங்க. அதனால அழறாங்க.. அவங்களுக்கு நான் முக்கியமா இருந்தா அழ மாட்டாங்க இல்லையா.? அவங்க மகள் இரண்டு பேரை கல்யாணம் பண்ணிக்கும்போது ஏத்துக்கிட்டவங்க என்னை ஏத்துகலன்னா அது அவங்க தப்புதான்ம்மா.. இதுல என் தப்பு ஏதும் இல்ல.. உனக்கு எங்க அம்மாவை பார்த்து கில்டி பீல் ஆனா அதை விட்டுடு.. நீ என்னை நினைச்சி தினம் அழும்போது அவங்க சிரிச்சிட்டு சந்தோசமாதானே இருந்தாங்க.. அவங்களுக்கே கில்டி பீல் ஆகல.. அப்புறம் ஏன் நீ பீல் பண்ற.?" என கேட்டான்.

முற்பகல் வேளையில் தயாராகி வெளியே கிளம்பினான் முகில். "நான் கொஞ்சம் வேலையா வெளியே போறேன்.. இது உன் ஃபோன்.. என் நம்பர் இதுல இருக்கும்.. கதவை நல்லா பூட்டிக்கோ.. யாராவது வந்து கதவை தட்டினால் கதவை திறக்காதே.. எனக்கு போன் பண்ணு.. சரியா.?" என்றான்.

அவள் சரியென தலையசைத்தாள். அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே நடந்தான். யதிரா கதவை உள் பக்கம் பூட்டிக் கொண்டாள்.

அந்த தெருவின் கடைசியில் காரை நிறுத்தினான் முகில். அவனை நோக்கி ஓடி வந்தாள் ஒரு இளம்பெண்.

"என் வீட்டுக்குள்ள யாரும் நுழைய கூடாது கே.கே.. அப்படி யாராவது உள்ளே நுழைஞ்சா அடிச்சி கை காலை உடைச்சி வை.. நான் பேசிக்கறேன்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

யதிரா வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்திற்கு வந்தாள் கே.கே. அங்கிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி இலைகளின் மறைவில் அமர்ந்தாள். செல்போனில் பாடலை ஒலிக்க விட்டு ஹியர்போன் ஒயரை காதில் மாட்டிக் கொண்டாள். மரத்தின் கிளை ஒன்றில் சாய்ந்து படுத்தபடி யதிரா இருந்த வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1045
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN