நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதல் சர்வாதிகாரி 54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா மருத்துவர் சொன்ன அனைத்திற்கும் சரியென தலையசைத்தாள்.

"இனியன் உன்னை காதலிச்சி ஏமாத்திட்டான்னு நீ நினைக்கிறது தப்பு.." என மங்கை சொல்ல ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள் சந்தியா.

"நீ அவன் மேல கோபப்பட்ட முதல் இடமே தப்புதான். ஏனா இனியன் பழி வாங்க உன்னை யூஸ் பண்ணல.. அவனோட காதல் நீதான்னு சரியா புரிஞ்சிக்காம தனக்குள்ளேயே மிஸ்அண்டர்ஸ்டேன்ட் ஆகிட்டான்.."

டாக்டர் சொல்லியதை சந்தியாவால் நம்ப முடியவில்லை.

"நான் தெளிவாவே உனக்கு சொல்றேன்.. அவனுடைய பகை உன் மாமாதான்.. அவன் நினைச்சிருந்தா உங்க வீட்டுல உள்ள எல்லோரையுமே வகுந்திருக்கலாம்.. ஆனா அவன் அதை செய்யாம உன் பின்னாடி லவ்வுன்னு சுத்தியது அவனோட உண்மையான லவ்வாலதான்.. ஆனா அதை அவனே புரிஞ்சிக்கல.‌." கொஞ்சம் குழப்பமாக இருந்தது சந்தியாவுக்கு.

மங்கை தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.

"சக்தி இனியன் வளர்ந்த சூழ்நிலையை பற்றி சொன்னாங்க.. அவனோட மாமா பொண்ணு ரியாவோடு சாதாரணமா பேசினாலே அவங்க அத்தை இனியனை பயங்கரமா திட்டி இன்சல்ட் பண்ணது பத்தி உனக்கும் தெரிஞ்சிருக்கும்.. உண்மையிலேயே இனியனுக்கு பழி வாங்குற மனசு இருந்தா உன்னை லவ் பண்ணியிருக்க மாட்டான்.. ரியாவைதான் பழி வாங்கி இருப்பான்.. இல்லன்னா உன்னை லவ் பண்ண மாதிரி ரியாவையும் காதலிக்கறதா சொல்லி ஏமாத்தி இருப்பான்.. இதை நீ யோசிச்சி பார்த்தா உனக்கே தெரியும்.. தன்னோட உண்மையான காதலை அவன் ரியலைஸ் பண்ண சரியான சந்தர்ப்பம் அமையும் முன்னாடியே தான் உன்னை ஏமாத்த நினைச்சதா உன்கிட்ட சொல்லிட்டான். அவன் நினைச்சிருந்தா தன் மனசுல இருந்ததை சொல்லாம விட்டிருக்கலாம்.. அப்படி இல்லாம ரொம்ப நியாயமான் மாதிரி தன்னோட காதல் என்னன்னு கூட தெரிஞ்சிக்காம முந்திரிக்கொட்டை தனமா அவன் மனசுல பட்டதை உன்கிட்ட சொன்னதுதான் அவன் செஞ்ச முதல் தப்பு.."

சந்தியாவின் மனதில் யோசனைகள் ஏராளமாக வந்தது.

"உன் கண்ணுல என் மொத்த உலகமும் இருப்பதா பீல் பண்றேன்.."

இனியனின் வார்த்தைகள் இன்றும் செவியோடு ஒலித்தது.

"அவனோடு பேசியதில் நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விசயம் அவன் பேசுறதுல பாதி விசயம் இட்டு கட்டுறதுதான்.. உன்னை மிரட்டவும் உன்னை தன் வழிக்கு கொண்டு வரவும் அவன் யூஸ் பண்ற ஆயுதம் அதுதான்.. அதெல்லாம் பொய்யுன்னு நீ தெரிஞ்சிக்கிட்டாலே அவனை நீ ஈஸியா சமாளிச்சிடலாம்.. சாப்பிடாத குழந்தைங்ககிட்ட எப்படி பூச்சாண்டி வந்து பிடிச்சிட்டு போயிடுவான்னு சொல்லி சோறு ஊட்டுறாங்களோ அதுபோல்தான் அவனும் உன்னை தன் வழிக்கு கொண்டு வர இல்லாத மிரட்டலை பயன்படுத்தி இருக்கான்.. இதுல காமெடி என்னன்னா பூச்சாண்டின்னு சொன்னா குழந்தைங்க கூட பயப்படாது.. ஆனா நீ குழந்தைகளை விட மோசமா அவனோட சின்ன பிள்ளை தனமான மிரட்டலுக்கு பயந்திருக்க.."

சந்தியாவின் எண்ணங்கள் அதிகமாவது மங்கைக்கு புரிந்தது.

"நான் சொன்னதை பத்தி நல்லா யோசனை பண்ணி பாரு.. இன்னும் நாலு கழிச்சிட்டு மறுபடியும் இங்கே வா.."

சந்தியா புரிந்தவளாக தலையசைத்தாள்.

சந்தியா வீட்டிற்கு வந்தபோது இனியனும் வேலை முடித்து வந்துவிட்டிருந்தான்.

சந்தியா அறையில் தனியாக இருப்பதை கண்டவன் கதவை தாளிட்டு விட்டு அவளருகே வந்தான்.

சந்தியா ஜன்னல் வழி தெரிந்த வானத்திற்கு தன் பார்வையை பறி தந்துவிட்டு நின்றிருந்தாள்.

"சந்தியா.." அவளருகே வந்து தயக்கமாக அழைத்தவனை திரும்பி பார்த்தாள்.

"இந்த கவுன்சிலிங் எனக்கு பிடிக்கவே இல்லை. உனக்கும் பிடிக்கலன்னு தெரியும்.. அந்த டாக்டர் எப்பவும் பர்சனல் விசயமாவே கேட்கறாங்க.. எனக்கே ஒரு மாதியா இருக்கு.. உனக்கும் இது செட்டாகாதுன்னு தெரியும்.." என்றவன் தான் சொல்ல வந்ததை சட்டென சொல்ல இயலாமல் தயங்கினான்.

"டாக்டர்கிட்ட போகறது பிடிக்கலன்னா வேற என்ன செய்யலாம்.?" என்றாள் ஆவலோடு அவள்.

அவள் சட்டென அவனோடு பேசி விட்டது அவனுக்கு சிறு ஆனந்த அதிர்ச்சியை தந்துவிட்டது.

"அ.. அது.." வார்த்தைகள் வர தடுமாறியது அவனுக்கு.

சந்தியா நேராக திரும்பி நின்றாள். அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். தனக்கு மிக அருகில் அவள் இருக்கவும் அவனுக்கு மூச்சு தடுமாறியது.

"சொல்ல வந்ததை சொல்லாம ஏன் தயங்கற.?" என கேட்டவளை படபடக்கும் நெஞ்சத்தோடு பார்த்தான் இனியன்.

"நா.. நாம இரண்டு பேரும் எங்கேயாவது ஓடி போயிடலாமா.?"

இனியன் கேட்டது சந்தியாவிற்கு சிரிப்பை தந்துவிட்டது.

"ஓடி போகலாமா.?" என்று யோசனை செய்தவள் சில நொடிகளுக்கு பிறகு முடியாதென தலையசைத்தாள்.

"நான் எங்கேயும் வர மாட்டேன்.. எனக்கு இந்த வீட்டுல இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.. பாட்டி அத்தை மாமான்னு இவங்களோடு இருப்பதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.."

"ஓ.. ஓகே.." என்று தலையாட்டினான் இனியன்.

"அந்த டாக்டர்கிட்ட போக பிடிக்கலன்னா என்கிட்ட சொல்லு.. நான் அம்மாக்கிட்ட பேசி பார்க்கறேன்.."

"தேவையில்ல.. அவங்க என் அத்தை.. என் மாமியார்.. எனக்கு ஒரு விசயம் பிடிக்கலன்னா அதை நானே அவங்ககிட்ட சொல்லிப்பேன்.. நீ நடுவுல தூது போக வேண்டிய அவசியம் இல்ல.."

இனியனுக்கு அடுத்து என்ன சொல்வதென தெரியவில்லை. மௌனத்தோடு திரும்பியவன் தான் பார்க்க வேண்டிய பைல் ஒன்றை எடுத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.
பைலை புரட்டியவனின் மனம் முழுக்க சந்தியாவின் இந்த திடீர் மாற்றத்தை பற்றியே இருந்தது. கண்கள் மட்டும் பைலில் இருந்தது. அலைபாயும் மனதோடு அமர்ந்திருந்தவனின் முன்னால் வந்து நின்றாள் சந்தியா.

"எனக்கு பூ வேணும்.. தோட்டத்துல மல்லிகை இருக்கும். போய் பறிச்சிட்டு வா.."

இனியனின் பைலில் இருந்து பார்வையை நிமிர்த்தினான்.

"நானா.? ஆனா எப்படி.‌."

"பசங்க பூ பறிக்க கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா.. அப்படி இருந்தா அதை நான் மாத்தி எழுதிடுறேன்.. இருட்டா இருக்கு.. என்னால இந்த முன்பனி குளிரை அட்சஸ்ட் பண்ணிக்க முடியாது.. எனக்கு உடம்பும் இன்னும் சரியாகல.. அதனால இப்ப போய் நீ பூ பறிச்சிட்டு வா.." என்றவள் கட்டிலில் அமர்ந்தாள்.

இனியன் பைலை வைத்து விட்டு எழுந்து வெளியே நடந்தான்.

"ஒரு காலத்துல என்னை லிட்டில் பிரின்சஸ்ன்னு சொல்லி ரொம்ப பாடா படுத்தின இல்ல..? என்னோட ஒரிஜினல் ரூபத்தை இனிதான் நீ பார்க்க போற.." என்றவள் பூ கட்டும் நூலை தேடி எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

கால் மணி நேரம் முடிந்த பிறகு பூக்களோடு வந்தவனிடம் "இந்த பூவை இரண்டு இரண்டா சேர்த்து அடுக்கி வை.." என்றாள்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது.

"எனக்கு வேலை இருக்கு.."

"எனக்கும்தான் வேலை இருக்கு.. நான் ஒன்னும் உன்னை மாதிரி மைக் போட்டு சொல்லிட்டு இருக்கல.."

இனியன் அவள் சொன்னது போல பூக்களை எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தான். பூக்களை தொடுத்து முடித்தவள் "இதை வச்சி விடு.." என்று தன் தலையை காட்டினாள்.
இனியனுக்கு முகம் சட்டென பளிச்சிட்டது. பூ மாலையை அவளது தலையில் அணிவித்தான்.

சந்தியா அவன் புறம் திரும்பினாள்.

"இதுதான் நான்.. எனக்கு நீ பூ வச்சி விட நினைச்சா நீதான் பூ பறிச்சி கொண்டு வரணும். அதை தொடுக்கவும் உதவி செய்யணும்.. இதுதான் நான்.. என் பாட்டியோட என் மாமாவோட என் அத்தையோட பர்ஸ்ட் பிரியாரிட்டி நான்தான்.. ரொம்ப நாள் கழிச்சி கிடைச்ச பையன்னு உன் மேல கொஞ்சம் அதிகமா பாசம் காட்டுறதால நீதான் அவங்களுக்கு எல்லாமேன்னு நினைச்சிக்காத.. உன்னோட சின்ன புள்ளை தனமான கோள் மூட்டி வேலையெல்லாம் இனி வச்சிக்காத.. அப்புறம் நானும் உன்னை மாதிரியே சின்ன புள்ளை தனமா கோள் மூட்டுவேன்.. இனி நான் இப்படிதான். இஷ்டமா இருந்தா எனக்கு புருசனா இரு. இல்லன்னா டைவர்ஸ் பண்ணிட்டு போய்க்கிட்டே இரு.. அப்பவும் இது என் வீடுதான்.. உனக்கு தேவைன்னா நீதான் வெளியே போகணும்.." என சொல்லி விட்டு அவள் அங்கிருந்து செல்ல இனியன் பிரமை பிடித்தவன் போல நின்றான்.

"குட்டி இளவரசிக்கு ரோசம் வந்துடுச்சி போல.. ஆனா இப்படி மிரட்டுறதே சின்ன புள்ளை தனம்தான்னு இவளுக்கு ஏன் தெரியல.." என யோசித்தவன் கீழே சென்றபோது பொன்னி சந்தியாவுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

சந்தியாவின் அருகில் வந்து அமர்ந்தான் இனியன். சந்தியாவுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த பொன்னி அவனுக்கும் ஒரு வாய் ஊட்டினாள். அவன் கிண்டலோடு சந்தியாவை பார்த்தான். அவளும் சிறு முறைப்போடு பாட்டி ஊட்டிய உணவை உண்ண ஆரம்பித்தாள்.

"இதுங்க இரண்டும் இன்னும் வளரவே இல்ல மகேஷ்.." கணவனிடம் கிசுகிசுப்பாக சொன்னாள் ஹாலில் அமர்ந்திருந்த சக்தி.

"ஆமாப்பா.." என தலையசைத்தவன் "ஆனா உனக்கு என் மேல ஏன் பாசமே இல்ல சக்தி.? நான் ஒரு குழந்தை பையன்தானே.? எனக்கு என்னைக்காவது ஊட்டி விட்டிருக்கியா நீ.?" அவன் இப்படி கேட்கவும் திடுக்கிட்டு போய் எழுந்து நின்றாள் அவள்.

"உன்னை நான் இப்பவும் கூட ஏன் கொல்லாம இருக்கணும்ன்னு நல்ல காரணம் சொல்லு பார்க்கலாம்.." என்றாள் எரிச்சலோடு.

அவளை நக்கலாக பார்த்தபடி எழுந்து நின்றான் மகேஷ்.

"போலிஸான உனக்கு சரியான போட்டி வேணுமே.?" என்றான்.

சந்தியாவும் இனியனும் வயிறு முட்ட உண்டு விட்டு எழுந்தனர்.

பொன்னியும் எழுந்து நின்றாள். "மல்லி இன்னைக்கு வீட்டுல வேலை இருக்குன்னு சாயங்காலமே கிளம்பிட்டா.. கிச்சன் சிங்க்ல கொஞ்சம் பாத்திரம் இருக்கும். இரண்டு பேரும் சேர்ந்து அந்த பாத்திரங்களை தேச்சி வச்சிடுங்க.. வயசான காலத்துல எல்லா வேலையும் ஒருத்தியே செய்ய முடியல.." என்றவள் தன் இடுப்பை பிடித்து கொண்டாள்.
இருவரும் அதிர்ச்சியோடு பாட்டியை பார்த்தனர்.

"நானா.?" இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"நீங்கதான்.. உங்களுக்கு நான் சாப்பாடு ஊட்டி விட காரணம் நான் உங்க மேல வச்ச பாசம்தான்.. அதுபோல நீங்க எனக்கு செய்ற உதவியும் நீங்க என் மேல வச்சிருக்கும் பாசம்தான்.. சின்ன பசங்களுக்கு செல்லம் கொடுக்கறது தப்பில்ல.. ஆனா அவங்களோட பொறுப்புகள் என்னன்னு புரிய வைக்காம வளர்த்துட்டதுதான் எங்க தப்புன்னு லேட்டாதான் புரிஞ்சது.. உங்களோட செல்லம் எவ்வளவு வேணாலும் இருக்கட்டும்.. ஆனா இந்த வீட்டுல உங்களுக்குன்னு சில வேலைகள் இருக்கு.. பொறுப்புகள் இருக்கு.. அதையும் நீங்கதான் இனி பார்த்தாகணும்.." சந்தியாவும் இனியனும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"மல்லியை வேலையை விட்டு நிறுத்திடலாம்ன்னு நினைக்கிறேன் நான்.." என்றவள் இனியனை பார்த்தாள்.

"உனக்கு நல்லா சமைக்க வரும்ன்னு சொன்ன இல்ல.. இனி நீயே எல்லோருக்கும் சமைச்சிடு.. சமைக்கிற நேரத்துக்கும் உன் வேலை நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதனால வேலைன்னு சொல்லி சமாளிக்காத.." என்றவள் சந்தியாவை பார்த்தாள்.

"உனக்கு தோட்ட வேலை மேல ரொம்ப பிரியம்ன்னு எனக்கு தெரியும்.. அதனால்தான் நம்ம தோட்டகாரரை நிறுத்திடலாம்ன்னு இருக்கேன்.. பெண்கள் ரொம்ப பலம் வாய்ந்தவங்க.. நீ உன் பலத்தை நம்ம தோட்டத்தை சரி பண்ணுறதுல காட்டு.. நீ உன் பார்ம்க்கு போகும் முன்னாடியும் பார்ம்ல இருந்து திரும்பி வந்த பின்னாடியும் நம்ம தோட்டத்து வேலைகளை கவனி.."

பொன்னி சொன்னது கேட்டு இருவருக்கும் ஏமாற்றத்தில் முகம் வாடியது.

"எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்க போறேன்.. நீங்க போய் சீக்கிரம் கிச்சன் பாத்திரத்தை கிளீன் பண்ணிடுங்க.." என்றவள் தனது அறையை நோக்கி நடந்தாள்.

ஏமாற்றம் நிறைந்த முகத்தோடு இருவரும் கிச்சனுக்கு கிளம்பினர். கிச்சன் வாசலில் ஒரு விசயம் பற்றி நினைவு வந்து திரும்பினாள் சந்தியா.

"பாட்டி.."

"என்னடி.?" என்றபடி திரும்பி பார்த்தாள் பொன்னி.

"ஏன் நீங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் எந்த வேலையையும் தரல.." சந்தியா கேட்க நினைத்ததை இனியன் கேட்டான்.

"நாம தனிக்குடித்தனம் போகலாமா.?" சக்தி அவசரமாக மகேஷிடம் கேட்டாள்.

"என்னை பட்டினி போட்டே சாகடிக்க முடிவு பண்ணிட்டியா நீ.?" என்று கேட்டவன் தன் அம்மாவை பார்த்தான்.

"அம்மா நாங்க.." மகேஷ் முழுசாக பேசும் முன் பொன்னி அவர்களை கை காட்டி நிறுத்தினாள்.

இனியன் பக்கம் பார்த்தவள் "அவங்களுக்கும் முக்கியமான வேலை இருக்கு.. ஆனா அந்த வேலை இப்போதைக்கு அவங்களுக்கு இருக்காது.. வேலை வரும்போது தானா செய்வாங்க.." என்று சொன்னாள்.

இனியனும் சந்தியாவும் தங்களது ஏமாற்றத்தை முகத்தில் வெளிக்காட்டியபடியே கிச்சனுக்குள் புகுந்தனர்.

பொன்னி தன் கட்டிலில் அமர்ந்தபடி தான் மங்கையை சந்தித்த போது அவள் சொன்ன பல விசயத்தில் ஒன்றை நினைத்து பார்த்தாள்.

"இந்த பசங்க இரண்டு பேரும் ரொம்ப சுயநலத்தோடு காதலிக்கிறங்க.. வரும் காலத்துல கூட இவங்களுக்கு தங்களோட காதலை சரி செய்யவும் அவங்களுக்குள்ள சண்டை போட்டுக்கறதை பத்தியும் கொஞ்சிக்கறதை பத்தியுமே அவங்களோட முழு கவனமும் இருக்கும்.. இன்னும் சொல்ல போனா அவங்களுக்கு குழந்தை பிறந்தா அதை கூட இவங்க சரியா கவனிக்க மாட்டாங்க.. அந்த அளவுக்கு இரண்டு பேருமே சுயநலமா இருக்காங்க.. அவங்களுக்கு குழந்தை பிறந்தா அந்த குழந்தை முழு பாதுகாப்போடு முழு அக்கறை நிறைந்து வளரணும்ன்னு ஆசைப்பட்டா கண்டிப்பா அந்த குழந்தையை நீங்கதான் பார்த்தாகணும்.. இப்ப கூட அந்த பொண்ணுக்கு மிஸ்கேரியேஜ் ஆச்சி. ஆனா மிஸ்ஸாகிட்ட அந்த குழந்தையை இரண்டு பேருமே துளி கூட கவலைப்படல.. அவ என்னை புரிஞ்சிக்கல.. அவன் என்னை புரிஞ்சிக்கலன்னு கம்ப்ளைண்ட் மட்டும்தான் பண்ணாங்களே தவிர கருவுலேயே இறந்து போன குழந்தையை பத்தி யோசிக்க கூட அவங்களுக்கு நேரம் இல்ல.. ஒன்னு அவங்க தங்களோட அடவாதம் பிடிவாதத்துல இருந்து வெளி வரணும்.. இல்லன்னா அவங்க எப்படியோ இருக்கட்டும்ன்னு விட்டுட்டு குழந்தைகளை நீங்க வளர்க்கணும்.. உங்களுக்கு இருக்குற இரண்டே ஆப்சன் இது மட்டும்தான்.."

"இரண்டு திட்டமும் எனக்கு ஓகே டாக்டர்.. அவங்களோட பொறுப்புக்களையும் நான் புரிய வைக்கிறேன்.. பிறக்கற குழந்தைகளை கவனிச்சிக்கவும் ஆள் ரெடி பண்றேன்.. ஏனா புருசன்தான் முக்கியம்ன்னு புள்ளையை அனாதையா விட்டுட்டு வந்த ஒருத்திக்கும் நான் ஒரு சந்தர்ப்பம் தரலாம்ன்னு இருக்கேன்.." என்று பதிலுரைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் பொன்னி.

"என் பேரனையா அனாதையா விட்டு வந்த.? இருடி மகராசி.. என் பேரனும் பேத்தியும் பத்து பிள்ளைங்க பெத்து தருவாங்க.. எல்லா குழந்தைகளையும் உன்னையும் உன் புருசனையும் வச்சே வளர்த்தி காட்டுறேன்.." என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள் பொன்னி.
இனியன் விளக்கி தந்த பாத்திரங்களை தண்ணீரில் கழுவி கொண்டிருந்தாள் சந்தியா.
"பாட்டி இப்படி கவுத்துட்டாங்களே.." என்று உச்சு கொட்டியவள் தனது கையில் இருந்த தண்ணீரை உதறினாள். அவள் உதறிய நீர் இனியனின் முகத்தில் தெறித்தது.

"ச்சை.." என்று சலித்துக் கொண்டவனை கிண்டலாக பார்த்தவள் கை நிறைய தண்ணீர் அள்ளி அவன் மீது வீசினாள்.

முகமெல்லாம் தண்ணீரோடு இருந்தவன் அவனும் தண்ணீரை பிடித்து அவள் மீது விசிறி அடித்தான். கிண்டலோடு ஆரம்பித்து சற்று நேரத்தில் விளையாட்டாக மாறி போனது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1432
VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN