நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 16

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிராவின் யோசனையை அவளது முகத்தை பார்த்தே சுலபமாக படித்தான் முகில்.

யதிரா கண்களை துடைத்தபடி நிமிர்ந்து முகிலை பார்த்தாள். "எனக்கு இண்டர்வியூ முடிஞ்சிடுச்சி மாமா.. ஆனா செலக்ட் ஆக போறேனான்னு தெரியல.." என்றாள்.

"பார்க்கலாம் விடு.." என்றான் அவன் சிறு அலட்சியத்தோடு.

"இருங்க மாமா.. நான் டிக்காசன் போட்டு கொண்டு வரேன்.." என்று சமையலறைக்குள் ஓடினாள்.

சிறிது நேரத்தில் டிக்காசனை கொண்டு வந்து இவனிடம் தந்தாள். அவன் எப்போதும் போல அவளை தன் மடியில் இருத்திக் கொண்டு டிக்காசனை பருக ஆரம்பித்தான்.

யதிரா அவனது நெஞ்சில் சாய்ந்து அவனது இதயத்துடிப்பை கேட்டாள். அவனது சட்டையோடு விளையாடினாள்.

"யதிம்மா.." அவன் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"நீ இந்த மூணு வருசமா என்ன நம்பிக்கையில் காத்திருந்த.? நான் வருவேன்னு எப்படி நம்பின.?" என்றான்.

அவள் தலை கவிழ்ந்தாள். "என்னை விட்டுட்டு நீங்க இருக்க மாட்டிங்கன்னு நினைச்சேன் மாமா.. நீங்க இன்னைக்கு திரும்பி வருவிங்க.. நாளைக்கு திரும்பி வருவிங்கன்னு தினம் என் மனசுக்குள்ள குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அண்ணனும் சௌந்தர்யா அண்ணியும் மனசு மாறி உங்களையும் என்னையும் சேர்த்து வச்சிடுவாங்கன்னு நினைச்சேன்.‌." என்றாள் சிறு குரலில்.

துக்கத்தோடு அவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான் முகில். 'நீ ஏன் இப்படி இருக்க யதிரா.?' என்று கேட்டது அவன் மனம்.

அவன் வீட்டு பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிழவி இருந்தாள். இராணுவத்துக்கு சென்ற அவளின் மகன் வேறு நாட்டு இராணுவத்தால் பிடித்து செல்லப்பட்டு கொல்லப்பட்டான். ஆனால் இறந்தது தன் மகன் அல்ல என்று நம்பிய கிழவி தன் மகன் விரைவில் தன்னிடம் வருவான் என்று நம்பிக்கையோடே சாகும் வரையிலும் காத்திருந்தாள். சாகும்போது கூட 'என் மகன் வராம என்னை புதைச்சிடாதிங்கப்பா..' என்று சொல்லி விட்டுதான் இறந்தாள்.

யதிராவை பார்க்கும்போது அவனுக்கு அந்த கிழவிதான் நினைவுக்கு வந்தாள். விழியோர ஈரத்தை துடைத்துக் கொண்டவன் அவள் தோளில் தன் முகம் புதைத்தான்.

'லவ் யூ யதிரா..' என்றான் மனதுக்குள்.

மறுநாள் காலையிலேயே அவளது போனுக்கு மெஸேஜ் வந்தது.

"மாமா நான் வேலையில் செலக்ட் ஆகிட்டேன்.." என்று குதூகலமாக சொன்னவள் அவனது கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டாள்.

"ஓ.. கன்கிராட்ஸ்.." என்றான்.

"தேங்க்ஸ் மாமா.." என்றாள் அவள்.

"சரி என்னை விடு.. நான் ரெடியாகணும்.." என்று விலகி கொண்டான்.

"தினமும் ஆட்டோவுல போகாதே.. பஸ்லதான் போகணும் நீ.. யாராவது லேடிஸ் ரோட்டை கிராஸ் பண்ணும்போது அவங்க பின்னாடியே நீயும் ரோடு கிராஸ் பண்ணு.. ரோட்டு கடையிலெல்லாம் நிற்காத.. ஏதாவது லாரி உன் பக்கத்துல வந்து ஹாரன் அடிச்சா கூட கண்டுக்காமதான் இருப்ப நீ.. அதனால்தான் சொல்றேன்.. அப்புறம் ஆபிஸ்ல ஜென்ஸ்கிட்டயெல்லாம் தேவையில்லாம பேசாத.. எவன் என்ன மீனிங்கல பேசுறான்னு கூட உன் முட்டாள் மூளைக்கு தெரியாது.. வேலைக்கு போனா உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.. பொண்ணுங்களை பிரெண்ட்ஸ் பிடிக்காத.. பார்ட்டி ஷாப்பிங்கன்னு நீ அவங்களோடு சுத்த நினைச்சா அப்புறம் நான் கடுப்பாகி உன்னை வீட்டோடு நிறுத்திடுவேன்.." என்றான் கண்டிப்பு நிறைந்த குரலில்.

அவள் எல்லாவற்றிற்கும் சரியென்று தலையசைத்தாள்.

முகில் வேலைக்கு புறப்பட்டான். யதிரா அவனை வழி அனுப்பி விட்டு தனது காய்கறிகள் செடி அருகே வந்தாள். "தினம் வேலை முடிச்சி வந்தா மறக்காம செடிகளுக்கு தண்ணீர் விடணும்.. மறந்துடாத யதி.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வந்து வேலையில் சேரும் படி செய்தியில் அனுப்பி இருந்தார்கள். அதனால் இந்த இரண்டு நாளும் வீட்டை சுத்தம் செய்யலாம் என நினைத்தாள். ஒரே அறையை நான்கு முறை கூட்டினாள். ஒரே பாத்திரத்தை ஆறு முறை விளக்கினாள்.

அதன் பிறகு பொழுது போகவில்லை. அம்மாவுக்கு மிஸ்ட் கால் தந்தாள். அம்மா உடனே அழைத்தாள்.
இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அம்மா பேசி முடித்து ஃபோனை வைத்த பிறகு அவளுக்கு வேறு வேலையே இல்லாமல் போய் விட்டது. பாயை விரித்து உறங்க ஆரம்பித்தாள்.

கே.கேவின் காதுகளில் பாடல் ஒலித்தது. அவள் மரத்தில் அமர்ந்தபடியே போனில் எதேதோ நோண்டிக் கொண்டிருந்தாள். அன்றைய நாளும் அதற்கடுத்த நாளும் அப்படியே போனது.

யதிரா வேலைக்கு செல்லும் நாள் வந்தது. யதிராவுக்கு வீட்டிலேயே கை கால்கள் நடுங்கியது. 'கடவுளே.. எனக்கு தைரியத்தை கொடுப்பா..' என்று வேண்டிக் கொண்டாள்.

முகில் அவளுக்கும் முன்பே கிளம்பி சென்று விட்டான். இவள் தனது ஹேண்ட் பேக்கை எடுத்து தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள். அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் சென்று பேருந்தில் ஏறினாள்.

அவள் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பேருந்தின் இருக்கை ஒன்றில் அமர்ந்த நேரத்தில் "டேய் தம்பி படியில நிற்காம உள்ளே ஏறி வாடா.." என்று கண்டக்டர் குரல் கொடுத்தார்.

படியில் நின்று கொண்டிருந்த கே.கே யதிரா தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளே வந்தாள். யதிராவை விட்டு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.
பேருந்து நின்றதும் யதிரா இறங்கிய பின் கீழே இறங்கினாள் கே.கே.

யதிராவுக்கு புன்னகையோடு கேட்டை திறந்து விட்டார் அன்றிருந்த அதே வாட்ச்மேன். யதிரா உள்ளே நுழைந்து ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உள்ளே வந்தாள் கே.கே.

"மார்னிங் மேடம்.." என்றார் வாட்ச்மேன். கே.கே பதில் வணக்கமும் வைக்கவில்லை. அவர் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. கால்சட்டையின் இரண்டு பக்க பாக்கெட்டுகளிலும் இரண்டு கைகளையும் விட்டபடி நடந்து போனாள். சூயிங்கம் அவளது பல்லில் அரைப்பட்டுக் கொண்டிருந்தது. கட்டிடத்திற்குள் வந்ததும் தன் கண்ணில் இருந்த கருப்பு கண்ணாடியை கழட்டி சட்டையில் சொருகி கொண்டாள். அதே வேளையில் அவளை பின்னால் இருந்து வந்து மோதியது ஒரு உருவம். கண்களை சுழற்றியபடி திரும்பி பார்த்தாள்.

"சாரி சார்.." என்று சொல்லிய மங்கை ஒருத்தி அவளை தாண்டிக் கொண்டு ரிசப்ஷனிஸ்டிடம் ஓடினாள். கே.கே அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு உள்ளே நடந்தாள்.

யதிராவின் இருக்கையை கை காட்டினான் குரு. அவனது அறையை ஒட்டி இருந்தது அவளது சிறு கேபின். இயல்பாய் இருக்க முயன்றவளிடம் அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் என சொல்லி விட்டு தனது இருக்கைக்கு வந்தான் குரு.

முகிலின் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தாள் ஒரு மங்கை.

"குட் மார்னிங் சார்.. நான் ஓவியா.." என்றாள்.

தனக்கு முன் இருந்த இருக்கையை கை காட்டினான் முகில்.

"நீங்க உங்க வேலையை கரெக்டா செய்யும் வரைக்கும் நான் ரொம்ப நல்ல பாஸ்தான். அதனால ரொம்ப டென்சன் ஆகாதிங்க.." என்றான்.

"தேங்க்ஸ் சார்.." என்றாள் அவள்.

"எனக்குன்னு கொஞ்சம் ரூல்ஸ் இருக்கு.. கதவை தட்டினா மட்டும் போதாது. நானும் குரல் தரணும். அப்புறமா உள்ளே வாங்க.. நான் எப்போது வேணாலும் உங்க கேபினுக்கு ஃபோன் பண்ணுவேன். அதனால உங்களோட வேலையை மறந்து மத்த கொலிக்ஸோடு பேசிட்டு இருக்காதிங்க.. பதினொரு மணிக்கும் மதியம் இரண்டு மணிக்கும் எனக்கு காப்பி வேணும். கேன்டின் போய் வாங்கிட்டு வந்துடுங்க.. எவ்வளவு எக்ஸ்ட்ரா வேலை இருந்தாலும் அதை ஓவர் ஷிப்ட் பார்க்க தேவையில்ல. மறுநாள் வந்து பாருங்க.. சாயங்காலம் ஆறுக்குள்ள ஆபிஸை விட்டு நீங்க வெளியே போயிடலாம்.." என்றான்.
அவன் சொன்னது விசித்திரமாக இருந்தது அவளுக்கு. அவள் முன்பு வேலை பார்த்த இடத்தில் இரவு மணி எவ்வளவு ஆனாலும் அன்றைய வேலையை அன்றைக்குள் முடித்து தர வேண்டும் என்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர இப்படி யாரும் சொன்னதில்லை. ஒருவேளை முதல் நாளிலேயே அலுவலகத்தை பற்றி தன் மனதில் எதிர்மறை எண்ணம் தோன்ற கூடாது என்று நினைக்கிறார்களா என்றெண்ணி குழம்பினாள்.

அவள் குழம்பி கொண்டிருந்த வேளையில் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கே.கே. தட்டி விட்டு வந்த தனக்கே ரூல்ஸை சொன்னவன் இவனிடம் என்ன கத்த போகிறானோ என்று வருத்தப்பட்டாள் ஓவியா. அவள் வருத்தத்தோடு சரியாக பார்த்தப்போதுதான் அது ஆண் அல்ல பெண் என்று தெரிந்தது.

"வா கே.கே.. உனக்கு சீட் அங்கே இருக்கு.." என்று தனது அறையின் ஒரு மூலையை கை காட்டினான் முகில். அந்த அறையினுள்ளேயே மரப்பலகைகளை கொண்டு அமைந்திருந்தது ஒரு கேபின். கே.கே அவனுக்கு தலையசைத்து விட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். சீட்டில் சாய்ந்து அமர்ந்தவள் ஷீவோடு கால்கள் இரண்டையும் டேபிள் மீது வைத்தாள். அங்கிருந்த லேப்டாப்பை ஆன் செய்தாள்.

கே.கேவை கண்கள் விரிய பார்த்திருந்த ஓவியாவின் முன் விரலை சொடுக்கினான் முகில்.

"நீங்க இப்ப போகலாம்.." என்றான்.

"ஓகே சார்.. தேங்க்ஸ் சார்.." என்றவள் கே.கேவை பார்த்தபடியே அங்கிருந்து வெளியே நடந்தாள்.

முகில் தன் இருக்கையை சுற்றினான். கே.கேவை பார்த்தான்.

"கே.கே.." என்றான்.

"சொல்லுங்க சார்.." என்றாள் அவள் லேப்டாப் திரையிலிருந்து பார்வையை திருப்பாமல்.

"என் அக்காவும் ரூபனும் ஏன் பிரிஞ்சாங்கன்னு கண்டுபிடிச்சியா.?" என்றான்.

"இன்னும் இல்ல சார்.. இன்பர்மேசன் தெரிஞ்ச உடனே உங்களுக்கு சொல்றேன்.." என்றாள்.

முகில் கே.கேவை பார்த்து பெருமூச்சு விட்டான். பின்னர் திரும்பி அமர்ந்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

யதிரா தன் முன் இருந்த பைல்களை பார்த்தாள். கணினியில் பதிந்து வைக்க வேண்டியதையெல்லாம் தனியே எடுத்து வைத்தவள் ஒவ்வொன்றாக எடுத்து தட்டச்சு செய்து பதிய வைக்க ஆரம்பித்தாள்.

முதல் நாளின் தயக்கம் காரணமாக அனைத்தையுமே மெதுவாகத்தான் செய்ய முடிந்தது அவளால். மெயில் அனுப்ப வேண்டியதை எல்லாம் சரி பார்த்து ஒவ்வொரு வரியும் படித்து பார்த்து அனுப்பினாள்.

"இதை ஜி.எம்கிட்ட கொடுத்துடுங்க.." என்று சொல்லி மற்றவர்கள் தந்து சென்ற பைல்களை அவ்வப்போது கொண்டு போய் குருவிடம் தந்தாள். குரு தந்த பைல்களை கொண்டு சென்று ஏ.ஜி.எம் சிவராமிடம் தந்து வந்தாள். அவர் இவளை காணும் ஒவ்வொரு முறையும் புன்னகைத்தார். அவரது புன்னகை முகம் யதிராவுக்குள் இருந்த கலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறைய செய்தது.

மதிய உணவு நேரத்தில் மற்ற பணியாளர்கள் இவளிடம் வந்து தங்களை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டனர். யதிராவை பற்றியும் விசாரித்தார்கள்.

"ஹாய் நான் வர்சன்.." என்றான் ஒரு இளைஞன் அவளிடம்.

யதிரா தனது பெயரை சொன்னாள்.

அவளது கழுத்தையும் கை விரல்களையும் கவனித்து பார்த்தான் அவன்.

"உங்க மொபைல் நம்பர் தரிங்களா.?" என்றான்.

யதிரா திருதிருவென விழித்தாள். பார்த்த இரண்டாம் நொடியே மொபைல் எண் கேட்போரையெல்லாம் எந்த பட்டியலில் சேர்ப்பதென்று யோசித்தாள்.

"இங்கே என்ன நடக்குது.?" குருவின் குரல் காட்டமாக ஒலித்தது.

"சும்மா பேசிட்டு இருந்தோம் சார்‌‌.." என்ற வர்சன் அங்கிருந்து நகர்ந்தான்.

'பேசிக் கொண்டிருப்பதற்காக சம்பளம் தரவில்லை..' என்று அவன் கத்துவானோ என பயந்தாள். ஆனால் அவன் அமைதியாக அங்கிருந்து போய் விட்டான்.

குரு அந்த பக்கம் சென்றதும் மீண்டும் சிலர் இவளிடம் வந்து பேச்சு தந்தனர். தங்களை பற்றியும் அந்த அலுவலகம் பற்றியும் சொன்னார்கள்.

அந்த நிறுவனத்தை புதிதாக வாங்கி உள்ளவன் ஒரு ரோபோட் தலையன் என்று சொன்னார்கள் அவர்கள். அவர்கள் தங்களின் முதலாளிக்கு வைத்துள்ள பெயர் கண்டு யதிராவுக்கு வியப்பாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1109
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN