முகில் தன் கையிலிருந்த பேனாவை உருட்டியபடியே யோசனையில் இருந்தான்.
"தன் அப்பாவை தன் அண்ணனே கொன்னுட்டான்னு தெரிஞ்சா யதிரா எப்படி பீல் பண்ணுவா கே.கே.?" என்றான் தன் முன் அமர்ந்திருந்தவளிடம்.
கே.கே சோகத்தோடு அவனை பார்த்தாள். "ரொம்ப பீல் பண்ணுவாங்க சார்.. நிஜமா உடைஞ்சிடுவாங்க.." என்றாள்.
முகிலுக்கு யதிராவை நினைத்து கவலையாக இருந்தது.
"அவங்க இரண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி ஆகணும் கே.கே.. கொலைக்காரங்க எங்கே இருக்கணுமோ அங்கேதான் இருக்கணும் இவங்களும்.." என்றான் கோபத்தோடு.
"ஆதாரம் வேணும் சார்.. ஆதாரம் இல்லாம நாம கேஸ் பைல் பண்ண முடியாது.. சுபாகிட்டயும், ரூபன் அன்ட் சௌந்தர்யா மெம்பர்ஸா இருந்த க்ளப்ஸ்லயும் விசாரிச்சதிலயும்தான் அவங்களோட கடன் பத்தியும் அவங்க கடன் கட்ட உதவிய பணத்தை பத்தியும் தெரிஞ்சது.. உங்க பாதர் இன் லாவுக்கு போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் தந்த டாக்டரோட அசிஸ்டென்ட் போதையில உளறியதை வச்சிதான் உங்க பாதர் இன் லா மர்டரான விசயம் தெரிஞ்சது.. ஆனா இதுக்கெல்லாம் பக்காவான ஆதாரம் வேணும்.. நாம சந்தேகத்தால கேஸ் தந்தா ஐம்பது லட்சம் வாங்கிட்டு ஆதாரத்தை அழிச்ச போலிஸ் அவரோட வாழ்க்கையை காப்பாத்திக்கவாவது வந்து நம்மளை டிஸ்டர்ப் பண்ணுவாரு.. எவிடென்ஸ் இல்லாம ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது சார்.. எவிடென்ஸ் என்னன்னு கண்டுபிடிக்க கூட சில மாதங்கள் ஆகலாம்.. எவிடென்ஸை கண்டுபிடிச்சி அழிச்ச போலிஸையும் கண்டுபிடிக்கணும்.." என்றாள் வருத்தமாக.
முகில் யோசித்தான். ஆதாரங்களின் தேவை ஒருபக்கம், யதிராவின் எதிர்காலம் ஒருபக்கம் என்று அவன் மனம் பாடாய் பட்டது.
யதிராவுக்கு இப்போது இருக்கும் மனநிலையில் தனது தந்தையின் கொலை தெரிந்தால் கூட அடுத்த நொடி யோசிக்காமல் தனது அண்ணனை மன்னித்து விடுவாள் என்று அவனுக்கே புரிந்தது. மன்னிப்பு என்பது இரண்டாம் பட்சம். ஆனால் துரோகத்தை புரிந்துக் கொள்ளும் திறன் அவளிடம் இருக்குமா என்று சந்தேகித்தான்.
"எனக்காக ஒரு உதவி பண்ணு கே.கே.." என்றான் முகில் தலையை பிடித்தபடி.
"சொல்லுங்க சார்.." என்றவளிடம் தனக்கு என்ன உதவி வேண்டும் என அவன் கூற அவள் திகைத்து எழுந்து நின்றாள்.
"முட்டாள் மாதிரி யோசிக்காதிங்க சார்.." என்றாள் கோபமாக.
முகில் எழுந்து நின்றான். "உனக்கு என் பிரச்சனை புரியலையா கே.கே.. யதிரா பாவம்.. அவ ரொம்ப மென்மையான கேரக்டரா இருக்கா.. வாழ்வியலை கூட கத்து தரலாம்.. ஆனா கேரக்டர் சேஞ்ச் எப்படி பண்றது.? இப்ப கூட அவ வேலைக்கு வர காரணம் நான் பணமில்லாம கஷ்டப்படுறதா நம்புறதாலதான்.. தைரியம் கிடையாது அவளுக்கு. தன் புருசனோட கஷ்டத்தை பார்க்க முடியலங்கற காரணம் மட்டும்தான்.. அவளோட இன்னைக்கு மைன்ட் செட்டுக்கு அவளோட அப்பா இறந்தது தெரிஞ்சா அழுவா.. அழ மட்டும்தான் செய்வா.. ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு கூட அவ மூளைக்கு தெரியாது.. இதுதான் நிஜம்.. அவளோட மூளையில் உள்ள உணர்வுகள் அத்தனையும் வெளிப்படணும்.. அதுக்கு நான் என் ரூட்டை பயன்படுத்திதான் ஆகணும்.." என்றான்.
கே.கே மறுப்பாக தலையசைத்தாள். "இது உங்க லவ்வுக்கு டெட் என்டா மாறிட நிறைய சான்ஸ் இருக்கு.." என்றாள் கோபமாக.
"அதுக்காக நான் அமைதியா இருக்க முடியாது கே.கே.. நான் அவளை ரொம்ப விரும்புறேன்.. என்னோட உயிர் அவ.. ஆனா அவளை பேன்டஸியிலயும் லவ்ங்கற மாயத்திலயும் வச்சிருந்து அவ லைப்பை அப்படியே கொண்டு போக விருப்பமில்லை எனக்கு. ரியாலிட்டியை எதிர் கொள்ள தயாரா இல்லாதவங்களுக்கு இந்த உலகம் நரக வாழ்க்கையைதான் பரிசா தரும்.. அது என் யதிராவுக்கு வேணாம்னு நான் நினைக்கிறேன்.. அவளோட வாழ்க்கைக்கு அவளே எதிரியாகமா இருக்கணும்ன்னா எனக்கு இதை தவிர வேற வழி இருக்கறதா தெரியல.." என்றான் பெரு மூச்சோடு.
கே.கேவிற்கு அவனது மனநிலை புரிந்தது. ஆனால் அதே அளவிற்கு யதிராவை நினைத்து கவலையாக இருந்தது. இந்த இரண்டரை மாத பழக்கத்தில் யதிராவை நன்கு புரிந்து வைத்து விட்டிருந்தாள் கே.கே. யதிரா என்பவள் அப்பாவி தனத்தின் ஓவர் லோட் என்பது கே.கே அறிந்ததுதான்.
அடுத்து என்ன செய்வதென யோசித்தபடியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் கே.கே.
குரு தனது கையில் இருந்த பைல்களை கொண்டு வந்து யதிராவின் மேஜை மீது அடுக்கினான். யதிரா அவற்றை கலக்கமாக பார்த்தாள். இப்போதெல்லாம் குரு தனக்கு மட்டும் வேலையை நான்கு மடங்கு அதிகமாக தருவதை போலிருந்தது அவளுக்கு.
யதிராவுக்கு அளவுக்கு அதிகமான வேலைகளை தரும்படி குருவுக்கு முகில் உத்தரவு பிறப்பித்திருந்தான். யதிராவால் எவ்வளவு தாக்கு பிடிக்க முடியும் என்று கண்டறிய இருந்தான் முகில்.
தீர தீர வேலைகள் இருந்துக் கொண்டே இருந்தது.
"இன்னைக்கு நீங்க ஓவர் ஷிப்ட் பார்த்தாகணும் யதிரா.." என்று சொல்லி விட்டு கிளம்பினான் குரு.
"சார்.. நான் இதை வீட்டுல கொண்டு போய் பார்க்கட்டா.?" என்றாள்.
குரு அவளை திரும்பி பார்த்தான். "இதெல்லாம் ரொம்ப இம்பார்டண்ட் பைல் யதிரா.. ஆபிஸை விட்டு வெளியே எடுத்துட்டு போக கூடாது.." என்று சொன்னவன் கிளம்பி செல்ல, யதிரா நேரம் என்ன என்று பார்த்தாள். எவ்வளவு அவசரமாக முடித்தாலும் தான் இன்று வீட்டுக்கு செல்ல மணி பத்தை தாண்டி விடும் என்பது புரிந்து போனது அவளுக்கு.
இருக்கையை விட்டு எழுந்தாள். ஆட்கள் அதிகம் வராத அலுவலகத்து படிகளில் இறங்கினாள். முகிலுக்கு ஃபோன் செய்தாள். அவன் இரண்டாவது முறை அழைக்கும் போதுதான் ஃபோனை எடுத்தான்.
"ஹலோ மாமா.. இன்னைக்கு நைட் வீட்டுக்கு வர லேட்டாகும் போல.. நைட் பத்து மணிக்கு வந்து என்னை கூட்டிப்போறிங்களா.?" என்றாள்.
"இதுக்குதான் நான் உனக்கு எந்த வேலையும் வேணாம்னு சொன்னேன்.. என் பேச்சை நீ எப்போதாவது கேட்கறியா.? நைட் பத்து மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன..? உன்னை கூட்டி வர என்கிட்ட பைக் கூட இல்ல.. அப்புறம் எப்படி நான் வருவேன்.. பஸ்ல வா.. நான் நம்ம பஸ் ஸ்டேன்ட்ல நிக்கிறேன்.." என்றவன் ஃபோனை வைத்து விட்டான்.
யதிரா பெருமூச்சோடு தனது கேபினுக்கு நடந்தாள். ஏன் இத்தனை கஷ்டங்கள் வருகிறது என்று மனதுக்குள் புலம்பினாள்.
அன்று இரவு பத்து மணிக்குதான் அவளுக்கான வேலைகள் முடிந்தது. கம்பெனி வாசலில் இருந்த வாட்ச்மேனை துணைக்கு அழைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் சென்று பேருந்தில் ஏறினாள்.
பேருந்தை விட்டு இறங்கும்போது பேருந்து நிறுத்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த முகில் அவளருகே எழுந்து வந்தான். பேருந்தின் பின் பக்க கதவின் வழி இறங்கிய கே.கே முகிலுக்கு கை அசைத்து விட்டு நடந்தாள்.
முகிலின் முகம் களைத்து போய் இருந்தது. "என்ன ஆச்சி மாமா.? ஏன் சோகமா இருக்கிங்க.?" என்றாள் யதிரா வருத்தமாக.
"வொர்க் டென்சம்மா.." என்றவன் அவள் கைப்பிடித்து வீடு நோக்கி நடந்தான்.
விண்மீன்கள் பார்த்திருக்க நிலா வானில் உலா சென்றுக் கொண்டிருந்தது.
முகிலின் கையை பற்றியிருந்த யதிரா அவனது கை குளிர்ந்திருப்பதை கண்டாள். "ரொம்ப நேரம் குளிருல உட்கார்ந்திருந்திங்களா மாமா.?" என கேட்டவள் அவனது கையை வாய்க்கருகே கொண்டு வந்து தனது சுவாச காற்றை ஊதினாள்.
"எனக்கு குளிரல யதி.. உனக்குதான் குளிரும்.." என்றவன் அவளை தனது கை அணைப்பிற்குள் கொண்டு வந்தான். அவன் தோளில் சாய்ந்தபடி நடந்தவள் "லேட்டா வந்ததுக்கு சாரி மாமா.." என்றாள்.
"பரவால்ல விடு.." என்றவனை கண்டு அவளுக்கு குழப்பமாக இருந்தது. மதியம் போனில் கோபப்பட்டவன் இப்போது சகஜமாகி விட்டதன் காரணம் அவளுக்கு புரியவில்லை.
இரவு உணவை அவனே சமைத்து வைத்திருந்தான். அவளுக்கு அவனே ஊட்டியும் விட்டான். இரவில் அவளை தன் நெஞ்சில் சாய்த்து உறங்க வைத்தான். யதிராவுக்கு இன்றைய நாள் பிடித்திருந்தது. அவன் முதுகில் தட்டி தர இவள் அப்படியே உறங்கி போனாள்.
முகில் விடிய விடிய உறங்கவே இல்லை. அவளது முகம் பார்த்தபடியே படுத்திருந்தான். அவளது முகத்தை வருடிக் கொண்டும் அவளது கூந்தலில் விளையாடியபடியும் இருந்தான்.
மறுநாள் வேலைக்கு கிளம்பியவளின் நெற்றியில் முத்தமிட்டவன் "சன்டே எங்கேயாவது போகலாமா.?" என்று கேட்டான்.
யதிரா உடனே சரியென தலையசைத்தாள்.
அலுவலகத்தில் அன்றைய நாளும் அதிக வேலை இருந்தது. தினமும் அளவுக்கு மீறியே வேலை இருந்தது. இதற்கிடையில் வர்சன் வேறு சொல்ல சொல்ல கேட்காமல் தொல்லை செய்துக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் உள்ள பலரும் அவளை காணும் போதெல்லாம் திருமணம் செய்யாமல் காதலனோடு வாழ்க்கிறாள் என்று புறம் பேசிக் கொண்டிருந்தனர்.
'அவங்கவங்க தன் சொந்த வேலையை பார்க்க மாட்டாங்களா.? நமக்கெல்லாம் நம்ம வேலையே தீர மாட்டேங்குது.. இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் புறம் பேசுற அளவுக்கு டைம் இருக்கோ..?' என்று மனதுக்குள் புலம்பினாள்.
அந்த வாரம் முழுக்க வேலை அவளை அநியாயத்திற்கு பழி வாங்கியது. ஒரே பைலை நான்கு முறை பார்க்க வைத்தான் குரு. அவள் சரி பார்த்து அனுப்பிய அத்தனையிலும் ஏதாவது குறைகளை சொன்னான் அவன். யதிராவுக்கு தவறுகள் எப்படி நடக்கிறது என்பதே புரியவில்லை.
ஓயாத வேலைகளை தந்த அந்த வாரம் முடிந்ததும் யதிராவுக்கு துள்ளி குதிக்க தோன்றியது.
சனிக்கிழமை இரவு தன் வீட்டு வாசலில் நின்றிருந்த பைக்கை பார்த்து குழம்பிய யதிராவிடம் "இது குருவோட பைக்.. நான் ஓசி வாங்கிட்டு வந்தேன்.. நாளைக்கு ஊர் சுத்த போகலாம்.." என்று சொன்னான் முகில்.
யதிராவுக்கு வருத்தமாக இருந்தது. முகில் தன் வீட்டில் இருந்திருந்தால் இப்போது சிறப்பாக வாழ்ந்திருப்பான் என்று எண்ணினாள். தன்னோடு வந்ததால்தான் அவனுக்கு இவ்வளவு சிரமம் என்று வருத்தப்பட்டாள்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் தயாராகி கிளம்பினர். முதலில் கோவில் ஒன்றுக்கு அழைத்து போனான் முகில். அவர்களுக்கு திருமணம் நடந்த கோவில் அது. மீண்டும் இதே கோவிலில் திருமணம் செய்துக் கொள்ள கூட்டி வந்துள்ளானோ அவன் என்று ஆசையோடு ஒரு நொடி எண்ணாமல் இருக்க முடியவில்லை யதிராவால்.
அவளின் அருகே நின்று கடவுளை வணங்கினான் முகில். யதிராவின் நெற்றியில் திருநீறு வைத்து விட்டான். அவளின் கை பிடித்து கோவிலை சுற்றி வந்தான். அவர்கள் திருமணம் முடிந்து இதே போல சுற்றி வந்தது யதிராவுக்கு நினைவில் வந்து போனது.
அதன் பிறகு தன் நண்பன் வளர்த்து வரும் பூந்தோட்டம் ஒன்றிற்கு அவளை அழைத்துப்போனான் முகில். ஒரு புறம் சாமந்தியும் ஒரு புறம் சூரிய காந்தியும் மஞ்சள் கொழித்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஆரஞ்சு நிற சாமந்தி ஒரு பக்கம் தலையசைத்துக் கொண்டிருந்தது.
முகில் அவளை அழைத்துக் கொண்டு மேலும் நடந்தான். அரளிப்பூக்கள் சிறு இடத்தில் பூத்து குலுங்கி கொண்டிருந்தது. பூக்களை ஆசையோடு பார்த்துக் கொண்டே நடந்தாள் அவள்.
ஒரு வரப்பில் மல்லிகையும் அடுத்த வரப்பில் சம்பங்கியும் வாசத்தில் நாசி மயக்கிக் கொண்டிருந்தது.
யதிராவின் கை பிடித்து தோட்டத்தின் உள்ளே அழைத்து சென்றான் முகில். பூக்களின் வாசத்திலும் வண்ணத்திலும் அவளுக்கு மனம் குதூகலித்தது.
ஆளுயர நாட்டு ரோஜாக்களில் இருந்த பூக்கள் வீசிய காற்றில் வாசத்தை அனுப்பியது. யதிரா வாசங்களின் மயக்கத்தில் கண் மூடி ஆழ்ந்து சுவாசித்தாள்.
"இந்த இடம் பிடிச்சிருக்கா யதிம்மா.?" என கேட்ட முகிலின் கழுத்தை கட்டிக் கொண்டாள் யதிரா.
"ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. செமையா இருக்கு இந்த இடம்.." என்றாள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1105
VOTE
COMMENT
SHARE
FOLLOW