நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காதலின் இழையில் 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நகரும் நொடிகள் அனைத்திலும் யதிராவை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் முகில். அவள் பூக்களோடு பூவாக அசைந்தாடுவதை கண்டு அவன் மனம் மகிழ்வுற்றது. இந்த நொடி முடிய கூடாது என்ற பேராவல் உண்டானது. வாழ்வு முடியும் நேரத்திலும் இந்த நொடி பொழுதுகள் கண்களை விட்டு மறைய கூடாது என்று எண்ணினான்.

யதிரா சம்பங்கி ஒன்றை பறித்துக் கொண்டு அவனிடம் ஓடி வந்தாள். "மாமா இதை முகர்ந்து பாருங்களேன்.. செம வாசமா இருக்கு.." என்றாள். முகில் பூவை பார்த்தான். ஆனால் அவளை அணைத்துக் கொண்டான். அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.

"லவ் யூ யதிம்மா.." என்றான்.

"நானும் லவ் யூ மாமா.." என்றாள் அவள்.

'ப்ளீஸ்.. இந்த ஒரு நாளுல மட்டும் நேரத்தை கொஞ்சம் அதிகமாக்கி கொடுங்களேன்..' என்று கடவுளிடம் கெஞ்சினான்.

"மாமா.. அந்த தோட்டத்துக்கு போகலாமா.?" என்று ஆவலாக கேட்டவளை விட்டு விலகி நின்றான்.

"போகலாம்மா.." என்றான். யதிரா சூரியகாந்தி தோட்டத்திற்கு துள்ளி ஓடினாள்‌. அவளது நடையில் இருந்த துள்ளல் கண்டு முகிலின் மனமும் துள்ளி குதித்தது.

சூரியகாந்தியின் செடிகளின் இடையே நின்று கை விரித்து சுற்றினாள். அந்த இடத்தில் இருக்க மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு.

முகில் ஓரமாய் இருந்த கரையோரம் அமர்ந்தான். அவளையே விழியெடுக்காமல் பார்த்தான். யதிரா அந்த தோட்டத்தின் கடைசி வரை சென்று சுற்றி விட்டு திரும்பி வந்தாள். நாட்டு ரோஜா ஒன்றை பறித்துக் கொண்டு வந்தவள் முகிலின் மடியில் வந்து விழுந்தாள்.

"ஐ லவ் யூ மாமா.." என்று ரோஜாவை அவனிடம் நீட்டினாள். முழுதாக மலர்ந்திருந்த அழகிய மலர் அது. அவன் புன்னகையோடு கை நீட்டி வாங்கிய நேரத்தில் சுழன்று அடித்த காற்றின் காரணமாக மலர் தனது முழு இதழையும் உதிர்த்து விட்டது. யதிரா முகம் சட்டென வாடி போனது.

முகில் அவள் கையிலிருந்த வெற்று காம்பை வாங்கி தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
"லவ் யூ டூ.." என்றான். அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

"காதலை கன்வர்ட் பண்ண ரோஜா தேவையில்லம்மா.. உன்னோட விழி பார்வை போதும்.." என்றவன் அவளது விழிகளின் மீது முத்தங்களை தந்தான்.

யதிரா அவனது கழுத்தை கட்டிக்கொண்டாள். "இங்கேயே இருந்துடலாமா மாமா.?" என்றாள்.
அவளது நெற்றியில் மோதி விளையாடிய கூந்தலை ஓரம் ஒதுக்கி விட்டவன் அவன் குங்குமம் வைத்த நெற்றி வெறுமையாக இருப்பதை கண்டு மனம் வருந்தினான். அவளது தாலியற்ற கழுத்து அவனுக்கு உறுத்தலாக இருந்தது.

'எல்லாமே என் முட்டாள்தனத்தோட விளைவு.. எல்லாமே என் இயலாமையோட பரிசு.. ஆனா இனியும் அப்படி இருக்க மாட்டேன்ம்மா.. என்னால என்னவெல்லாம் செய்ய முடியும்ன்னு சிலருக்கு காட்டப்போறேன்.. என் மனைவி என் காதலியோட பலம் என்னன்னு சிலருக்கு காட்டப்போறேன்.. இருக்கும் பகைக்களுக்கு நடுவுல நேரா மோத நேரம் இல்லம்மா.. கொஞ்சமா பொறுத்துக்க.. உன் மாமனுக்கு கொஞ்சம் நேரம் கொடு.. கொஞ்சமா வலிக்கும்.. பொறுத்துக்கம்மா..' என்று மனதோடு சொன்னவன் அவளையே அணைத்தபடியே அமர்ந்திருந்தான்.

மாலை பொழுதில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அந்த வீட்டை சோகத்தோடு பார்த்தான். சுவர்களை வருடினான்.

மறுநாள் யதிரா அலுவலகம் வந்தவுடன் குரு அவளின் வழக்கமான வேலைகளை செய்ய சொன்னான். யதிரா சற்று நேரத்தில் வேலைகளில் மூழ்கி போனாள்.

மதிய உணவு உண்ணும்போது வர்சன் தனது வழக்கமான தொல்லையை செய்யவில்லை. யதிராவுக்கு இன்றுதான் சற்று நிம்மதியாக இருந்தது.

"இன்னைக்கு எம்.டியோட பியான்சி ஆபிஸ்க்கு வர போறாங்களாம்.." என்று சொன்னாள் சுந்தரி.
காலையிலிருந்து அலுவலகம் முழுக்க பேசிக் கொண்டிருக்கும் விசயம்தான் அது. அனைவரும் அதைதான் பேசிக் கொண்டிருந்தனர். எம்.டியின் சொந்த வாழ்க்கையை பற்றி அக்கறை இல்லாத யதிராவுக்கு இந்த விசயத்தை பற்றி யோசிக்க தோணவில்லை.

உணவு முடித்துக்கொண்டு தனது கேபினுக்கு வந்து அமர்ந்தாள் யதிரா. அரை மணி நேரம் கடந்தபோது வேணியும் சுந்தரியும் இவளை தேடி வந்தனர்.

"என்ன அக்கா.?" என்று இருவரையும் மாறி மாறி பார்த்து கேட்டாள் யதிரா. அவர்கள் இருவரும் அவளுக்கு நேர் எதிரே இருந்த பாதையை கண் காட்டினர்.

"என் சீட்டுல உட்கார்ந்திருந்தா முகத்தை பார்க்க முடியாதுன்னு இங்கே வந்துட்டேன்.." என்ற சுந்தரி தங்களுக்கு நேராக நடந்து வந்த சுபாவை கண்டு ஆச்சரியத்தில் வாய் திறந்தாள்.

"வாவ்.. செம ஃபிகர்.. லண்டன் ஸ்டேஜ்ல நடக்கற மாடல் மாதிரி இருக்காங்க.." என்றாள் வேணி.

சுபாவை கண்ட யதிராவுக்கு அவளை எங்கேயோ பார்த்ததாக நினைவில் வந்து போனது. ஆனால் எங்கேயென நினைவுக்கு வரவில்லை.

நேராக நடந்து வந்த சுபா யதிராவை கண்டதும் ஒரு முறைப்பை வீசிவிட்டு வளைந்து நடந்தாள். அவள் அந்த பாதையின் கடைசியில் சென்று மறையும் வரையிலும் எம்.டியின் பியான்சி தன்னை முறைத்த காரணம் எதுவென்று யோசித்துக் கொண்டிருந்தாள் யதிரா. ஆனால் காரணம்தான் அவளுக்கு கிடைக்கவேயில்லை.

"எம்.டியை பார்க்கலன்னாலும் கூட நான் அடிச்சி சொல்வேன்.. மேடம் நம்ம எம்.டிக்கு கண்டிப்பா பொருத்தமா இருப்பாங்க.." என்றாள் வேணி.

"உங்களுக்கு எப்படிக்கா தெரியும்.?" என்று குழப்பமாக கேட்டாள் சுந்தரி.

"எல்லாம் மேடத்தோட முகராசி பார்த்துதான் சொல்றேன்.. சரி வா.‌. நாம நம்ம சீட்டுக்கு போவோம்.." என்ற வேணி முன்னால் நடந்தாள். சுந்தரி யதிராவுக்கு கை அசைத்து விட்டு தனது இருக்கைக்கு சென்றாள்.

யதிரா மீண்டும் தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். சுபாவை எங்கு பார்த்தோம் என்று யோசித்து குழம்பினாள்.

சற்று நேரத்தில் அவள் முன்னால் வந்த குரு அவளிடம் பைல் ஒன்றை தந்தான்.

"அர்ஜென்ட் வொர்க்.. சீக்கிரம் சரி பாருங்க.." என்று சொல்லி விட்டு சென்றான். அவனது குரல் தந்த அவசரத்தில் படபடவென பேப்பர்களை திருப்பிக் கொண்டிருந்த யதிரா கடைசி பக்கத்தில் இருந்த கையெழுத்தை கண்டு குழம்பினாள். இதுவரை அந்த நிறுவனத்தின் எம்‌.டி கையெழுத்திட்ட எந்த பைலும் இவளிடம் வந்ததே இல்லை. இன்று எம்.டியின் கையெழுத்தோடு வந்தது அவளுக்கு குழப்பத்தை தரவில்லை. அது முகிலின் கையெழுத்து என்பதுதான் குழப்பத்தை தந்தது. முகிலின் கையெழுத்து ஏன் இந்த அலுவலக பைலில் இருக்க வேண்டும், அதுவும் எம்‌.டியின் கையெழுத்து இருக்க வேண்டிய இடத்தில் ஏன் இருக்க வேண்டும் என்று யோசித்து குழம்பினாள்.

புரியாத நினைவோடு ஃபோனை கையில் எடுத்தாள். இதுவரை தனது நிறுவனத்தை பற்றிய தகவல் எதையுமே அவள் அறிந்து கொள்ள முயன்றதில்லை. இன்று அவளது விரல்கள் அந்த நிறுவனத்தின் பெயரை தேடலோடு உள்ளிட்டது. நிறுவனத்திற்கென்று இருந்த வெப்சைட் முதல் பக்கத்திலேயே வந்தது. புரியாத மனநிலையோடு உள்ளே சென்றாள். அந்த நிறுவனத்தின் உற்பத்தி காரணமும் அந்த நிறுவனத்தால் பயன்பெறுவோர் யாரென்றும் தகவல்கள் வந்தது. அதையெல்லாம் படிக்க நேரம் இல்லாமல் அடுத்தடுத்து சென்றுக் கொண்டே இருந்தாள். அவளின் விரல் தாண்டி ஓடிச் சென்ற புகைப்படத்தை கண்டவள் மீண்டும் பின்னோக்கி நகர்ந்தாள். நிறுவனத்தின் தலைவர் என்று முகிலின் புகைப்படம் இருந்தது. யதிராவால் அதை நம்பவே இயலவில்லை. புகைப்படத்தின் கீழே அவனை பற்றிய தகவல்கள் இருந்தது. அவனது பெயர், படிப்பு, வேலை அனுபவம் என்று தகவல் இருந்தது. கடைசி வரியில் அவனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சுபா என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிர்ச்சியில் அவளது ஃபோன் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தது. நிமிடங்கள் கடந்த பிறகு தரையிலிருந்த ஃபோனை கையில் எடுத்தாள். கலங்கும் விழிகளோடு மீண்டும் அந்த தகவல்களை பார்த்தாள். நம்ப இயலா எண்ணங்களை அள்ளி தரும் சிந்தனை அவளை நிலைகுலைய செய்தது‌.

அவளுக்கென்று தைரியம் கை சேரவே சில நிமிடங்கள் பிடித்தது.

போனையும் பைலையும் கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள்‌. இவளை போன்றவர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ள எம்.டியின் அறை நோக்கி சென்றாள்.

முகில் இருந்த அறை கதவை தட்டினாள். அவள் இரண்டாம் முறை தட்டும் முன் ஓவியா இவளிடம் ஓடி வந்தாள்.

"யதிரா.. இங்கே என்ன பண்றிங்க.?" என்றாள்.

ஓவியாவின் கேள்வியை காதில் போட்டுக் கொள்ளாமல் அந்த அறை கதவை திறந்தாள் யதிரா.

மேஜை மீது அமர்ந்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த முகிலின் தலையை கோதிக் கொண்டிருந்த சுபா கதவு திறந்த சத்தம் கேட்டு கோபத்தோடு திரும்பினாள்.

"இடியட்.. எங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னேன் இல்ல..?" எரிச்சலோடு திரும்பியவள் யதிராவை ஒய்யாரமாக தலையை சாய்த்து பார்த்தாள்.

"சாரி மேடம்.. யதிரா நான் சொல்ல சொல்ல கேட்காம உள்ளே வந்துட்டாங்க.." என்றாள் ஓவியா மன்னிப்பு கேட்கும் குரலில்.

யதிராவை கண்டதும் சலிப்போடு நாற்காலியில் இருந்து எழுந்தான் முகில்.

"யதிம்மா.." என்றான் தனது வழக்கமான கொஞ்சல் குரலில்.

யதிரா அவனையும் சுபாவையும் மாறி மாறி பார்த்தாள்.

"இங்கே என்ன நடக்குது மாமா.? இது எல்லாம் பொய்தானே.? ப்ளீஸ் மாமா.. உண்மையை சொல்லுங்க.." என்றாள் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி.

முகில் சுபாவை பார்த்தான். பின்னர் இவள் பக்கம் திரும்பினான். "என் அக்கா எனக்காக பார்த்து வச்ச பொண்ணு இவ.. அவ்வளவுதான்.." என்றான்.

யதிராவால் எதையுமே நம்ப முடியவில்லை. "நீங்க இந்த நிறுவனத்தோட சொந்தக்காரர்ன்னு என்கிட்ட ஏன் சொல்லல.? இவ உங்க அக்கா பார்த்து வச்ச பொண்ணுதானே.? ஆனா உங்க விருப்பம் இல்லாமலேயே எப்படி உங்க பியான்சியானா.? இவளை கட்டிக்க போறிங்கன்னு ஊருக்கே தெரியும். ஆனா இத்தனைநாளா என்னை ஏமாத்திட்டு இருந்திருக்கிங்க.." என்றவள் கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்தாள்.

முகில் மறுப்பாக தலையசைத்தான். "நான் உன்னை எப்பவுமே ஏமாத்தல.. யூ ஆர் மை பிரீசியஸ் ஜெர்ம்.. யூ ஆர் மை லவ்வபிள் கேர்ள் பிரெண்ட்.." என்றபடி அவளருகே வந்தான்.

யதிரா கண்ணீரோடு பின்னால் நகர்ந்தாள். "பொய் சொல்றிங்க.." என்றாள் அழுகையோடு.

முகிலுக்கு வேதனையாக இருந்தது. ஆனால் அதே வேளையில் யதிரா அப்பா கொலைக்கான சாட்சியங்களை தேட வேண்டிய அவசியமும், தான் செய்ய வேண்டிய வேலைகளும் கண் முன் வந்து போனது.

"யதிராம்மா.." என்று கொஞ்ச ஆரம்பித்தவனை தூர தள்ளி விட்டு யதிராவின் முன்னால் வந்து நின்றாள் சுபா.

"ஆமா இவர் பொய்தான் சொல்றாரு.. இவருக்கு உன்னை சின்ன வீடா வச்சிக்க ஆசையாம்.. அதுக்காகதான் வீட்டை விட்டு வெளியே வந்ததா உன்கிட்ட டிராமா பண்ணிட்டு இருந்தார்.. இந்த நிறுவனம் இவரோடதுதான். ஆனா பணத்தை உனக்காக செலவு செய்ய விருப்பமில்லை இவருக்கு. அதனாலதான் தான் எங்கே வேலை செய்றேன்னு கூட உன்கிட்ட சொல்லல.. உன்னோட தகுதிக்கு உன்னை ஏன் இவர் தன் செட்டப்பா தேர்ந்தெடுத்தார்ன்னு எனக்கும் தெரியல.. சௌந்தர்யா அண்ணி கல்யாணமாகிட்டா என் தம்பி அந்த மூதேவியை விட்டு வந்துடுவான் நம்புன்னு என்கிட்ட சத்தியம் பண்ணியிருக்காங்க.. இவரும் கூட சாட்டர்டே நைட் என்கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்காரு.." என்றாள்.
யதிரா தீராத கண்ணிரோடு முகிலை பார்த்தாள்.

"யதிம்மா.." என்றான் முகில்.

"உன் பொய்களை இத்தோடு நிறுத்து முகி.." என்றபடி அப்போது அந்த அறையினுள் வந்தாள் கே.கே.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1083
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN