முகவரி 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தற்போது அனுதிஷிதா வசிப்பது புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் கிராமம். இந்த மண்ணில் நெல்லைப் போட்டால் பொன்னாய் விளைவித்துத் தருபவள் இப்பூமி தாய். சுத்தமான காற்றுடன் விவசாயத்திற்கு வேண்டிய சகல வித அம்சத்துடன் விளங்கும் கிராமம் இது.

பனிரெண்டாவது வரை படித்திருந்த அனுவுக்கு இந்த ஊரிலிருக்கும் மண் அவள் வாழ்விற்கு வழி வகை செய்யவும் அதையே தன்னுடைய வருமானத்திற்குப் பற்றுக்கோளாய் பிடித்துக் கொண்டாள் அவள். பெரிய தோட்டத்துடன் அவள் வீடு அமையவும், இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என்று பயிரிட்டு அதை விற்பனை செய்வது மட்டுமில்லாமல் சிறிய அளவில் நர்சரி வைத்து அதன் கன்றுகளைச் சுற்றி உள்ள நகர்ப்புறங்களில் டோர் டெலிவரியும் செய்து வருகிறாள். மகள் தற்போது வளர்ந்து விடவும், B.Sc. தோட்டக்கலை படிப்பையும் பகுதிநேர படிப்பாக தொடர்கிறாள் அனு.

இன்று அவள் மகளுடன் போகவிருக்கும் ஆவுடையார் கோவில் அவள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேர பயணம் என்பதால் குளுமையான காற்றுடன் கூடிய இந்த இயற்கை பயணத்தை தாய் மகள் இருவருமே அதிகம் விரும்புவர்கள். ஆமாம்... இந்த கோவிலும், பயணமும் இருவருக்கும் ஒன்றும் புதிதல்ல.

ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் இவள் சென்று கொண்டிருந்த நேரம் இவள் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு ஜீப் இவளின் வண்டியை அடையாளம் கண்டுகொண்டு இவள் வண்டியின் வேகத்திற்கு தன் வேகத்தைத் குறைத்ததோடு இல்லாமல் அனுவைப் பயமுறுத்துவது போல் உரசியபடி பயணிக்கவும். அனுவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனால் அதை முகத்திலும் உடல் மொழியிலும் காட்டாமல் நேர்கொண்ட பார்வையுடன் பயணித்தாள் இவள்.

அவளின் நடுக்கத்தை உணர்ந்த அவளுக்குள் இருக்கும் நாயகனோ, வழக்கம் போல் ‘ஷிதா... பயப்படாதே. be strong… நான் உனக்குள் தான் இருக்கேன். be strong ஷிதா’ என்று கணவன் தைரியம் சொல்லவும், பதட்டம் குறைய தன் வண்டியை மிதமான வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தாள் அனு.

தாய் மகள் இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்தனர். அதனால் இருவரின் முகமும் ஜீப்பில் அமர்ந்து இருப்பவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ‘அனுவாவது பெரியவள் என்னைப் பார்க்காமல் செல்கிறாள். ஆனால் இந்த குட்டிப் பிசாசு திரும்புதா பார்!’ என்று நினைத்தான் அந்த ஜீப்பினுள் இருந்தவன். மற்ற குழந்தைகள் மாதிரி மான்வியும் அவனைத் திரும்பிப் பார்த்து சிரிக்கவோ கை அசைக்கவோ செய்பவள் தான் செய்தவளும் தான். ஆனால் அதன் பிறகு தாயிடம் வாங்கிய அடி கொஞ்சமா நஞ்சமா? தாயின் அடிக்குப் பயந்தே இப்போது எல்லாம் அவன் பக்கம் திரும்புவது இல்லை அந்த சின்ன வாண்டு. ஆமாம் ஐந்து வயது பிள்ளை என்றும் பாராமல் மகள் இந்த ஜோதியின் பக்கமோ அவன் ஆட்கள் பக்கமோ திரும்பினால் அடி வெளுத்து விடுவாள் அனு. என் மகளுக்கு நான் தானே பாதுகாப்பு என்ற எண்ணம் அவளுக்கு. அதுவே அனுவை இப்படியான செயலை செய்ய வைக்கும்.

தாய் மகள் இருவரும் தன்னைத் திரும்பி பார்க்கவில்லை என்றதும் கோபம் வர, “ஏய் அன்டங் காக்கா... தினமும் நீ எப்போ என்ன பார்ப்பன்னு நான் தேவுடு காத்துட்டு இருக்கணுமா? நீ தான் இப்படி னா... இதோ நீ பெத்த வெள்ள காக்காவும் ரொம்பத் தான் ராங்கி பண்ணுது. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு சொல்லிட்டேன். புருஷன் இல்லாத உனக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு வீராப்பு?” ஜோதி இன்னும் ஏதேதோ அவனுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் கத்திக் கொண்டே வரவும்...

ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க தன் வண்டியை அனு ஓரிடத்தில் நிறுத்தவும், அப்போது எதிர் புற சாலையிலிருந்து ஒரு போலீஸ் ஜீப் வரவும் அதை கண்டவன் தன் சீண்டலை நிறுத்தி விட்டுத் ஜீப்பை வேகமெடுத்து அந்த இடத்தை விட்டு பறந்திருந்தான் ஜோதி.

தன் போலீஸ் ஜீப்பை u turn எடுத்து அனுவின் பக்கத்தில் நிறுத்தச் சொன்னவன், அதிலிருந்து அலை அலையான கேசத்துடன், முறுக்கேறிய உடலுடன் போலீஸ்கே உள்ள மிடுக்குடன் குதித்து இறங்கினான் S.P பரணிதரன்.

அவனைப் பார்த்ததும், “ஹாய் பரணி அங்கிள்!” என்ற மான்வி வாய் கொள்ளா சிரிப்புடன் அவனைப் பார்த்து தூக்கச் சொல்லி தாவவும், அவளுக்கு நிகரான அதே முகம் கொள்ளா புன்னகையுடன் அவளை நெருங்கி அவளின் தலைக் கவசத்தைக் கழற்றியவன்,

“ஹாய் deer!” என்ற அழைப்புடன் அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவும்,

அவள் களுக்கி சிரித்து, “மேலே தூக்கு” என்று உத்தரவு இட, அதன் படியே இரண்டு முறை அவளை மேலே தூக்கிப் போட்டு பிடித்தவன், மான்வியின் சிரிப்பு சத்தம் சங்கீதமாய் ஒலிக்கவும் மனம் கொள்ளா உற்சாகத்துடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கங்காரு குட்டியைப் போல் அவளை தன்னுள் அணைத்துக் கொண்டான் இந்த முப்பது வயது முரட்டு போலீஸ்காரன்.

இவர்களுடைய கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு தான் அங்கு ஓரமாய் நின்றிருந்த அனு இவன் கண்களுக்குத் தெரிய வந்தாள், “ஹலோ மேடம்! எப்படி இருக்கீங்க? கோவிலுக்கா?” என்று இவன் கேட்க

‘இல்ல… களை எடுக்கப் போறேன். அதான் சரியான நேரம் பார்த்து வந்திட்டியே... அது எப்படி தான் நான் போற இடம் எல்லாம் வரீயோ! அதுவும் அந்த ஜோதி என் கிட்ட வம்பு வளர்க்கும் போது எல்லாம் சரியா வந்துடற. சினிமாவில் வருகிற மாதிரி முன்னாலே அவனை அனுப்பி விட்டு பின்னாலேயே நீ வரீயா?’

“ஹெல்லோ மேடம்... ஹெல்லோஓஓ....” இவன் சற்று அழுத்தி அழைத்தபடி அவள் முகத்தின் முன் கை அசைக்கவும்…

கையை கட்டிக் கொண்டு தன்னுள் மூழ்கி இருந்தவளோ,“ஆஹ்.... என்ன S.P சார் ?” என்று பதில் கேள்வி கேட்க

“போச்சுடா... இப்படி நின்றுகிட்டே தூங்கினா வண்டியை எப்படி ஓட்டறது? இது ஆள் அரவம் இல்லாத சாலை என்பதால் பரவாயில்லை... மான் குட்டியை வைச்சுகிட்டு இப்படி தான் தூங்கிறதா?”

விட்டால் இவன் இன்னும் பேசுவான் என்பதை உணர்ந்தவள், “சார், என்ன கேட்டீங்கன்னு சொல்லுங்க சார்” இவள் அதிலேயே குறியாய் இருக்க

அவளை ஆழ்ந்து பார்த்தவனோ “ஆவுடையார் கோவிலுக்கானு கேட்டேன்” இவனும் அழுத்திக் கேட்கவும்

“ஆமாம் சார்” என்ற இவள் பதிலின் அடுத்த நொடி

“அங்கிள் சாக்கி...” என்று அவனிடம் கேட்டிருந்தாள் அவளின் மகள்.

“இதோ டா...” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்கியை எடுத்து நீட்டவும்...

‘அது எப்படி எப்போதும் சாக்கலேட் ஸ்டாக் வைத்திருப்பானோ இல்லை சரியா எங்களை பார்க்க வருகிற நேரம் வாங்கி வருவானா?’ என்று அவனின் செயலை கண்டு மனதிற்குள் சொல்லி கொண்டாள் அனு. அவள் அப்படி நினைப்பதற்கும் காரணம் இருந்தது. எப்போதும் இதே போல் எதேச்சையாக இவர்கள் சந்திக்கும் தருணம் எல்லாம் அவன் கையில் மான்விக்காக சாக்லேட் இருக்கும்.

சாக்கியை கையில் வாங்கியதும் அடுத்த கட்டமாக, “அங்கிள் ஜீப்பில் போகலாம்” என்ற கட்டளையை குட்டி வாண்டு இடவும்...

“ஷ்... மான்வி, அங்கிளுக்கு வேலை இருக்கும்” தாய் தடை போட

“பெரிதா எனக்கு எந்த வேலையும் இல்லைங்க அனு. நான் கோவில் பக்கம் தான் போறேன். சோ, மான்வியை நான் ஜீப்பில் அழைச்சிட்டு வரேன். நீங்க முன்னாடி உங்க வண்டியில் போங்க நாங்க உங்க பின்னாடியே வரோம்” என்று கட்டளையாக சொன்னவன் மான்வியுடன் இவன் ஜீப்பில் ஏறவும், வேறு வழி இல்லாமல் அவன் சொன்ன படியே தன் வண்டியை ஓட்டி கொண்டு அவன் முன்னே சென்றாள் அனு.

அனு இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த ஐந்து வருடத்தில் அவசியம் இருக்கும் பட்சத்தில் யாரிடமும் அனாவசியமாக பேச மாட்டாள் அவள். அதிலும் ஆண்கள் என்றால் எட்டியே நில் என்ற எச்சரிக்கையை விடுப்பவள் அவள். ஆனால் அதெல்லாம் இந்த S.P பரணிதரனிடம் மட்டும் செல்லாது. அவனும் இந்த ஊருக்கு போஸ்டிங் வாங்கி வந்து ஐந்து வருடம் ஓடி விட்டது. முதல் இரண்டு வருடம் அவன் இந்த ஊர் S.P என்பதே அனுவுக்குத் தெரியாது.

ஒரு முறை, இரண்டு வயதில் இருந்த மான்விக்கு திடீரென இரவு முழுக்க வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட, அந்நேரம் ஒருவரின் துக்க வீட்டுக்கு முனீஸ்வரன் சென்றிருக்கவும்... தனியாக இருந்த இரண்டு பெண்களான அனுவும் பார்வதியும் என்ன செய்வது என்று புரியாமல் கலங்கி நிற்க… பின் அனு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மகள் படும் கஷ்டத்தைப் பார்க்க முடியாமல் இவளே மகளை அந்த நடு சாமத்தில் பார்வதியுடன் அழைத்துச் செல்ல இருந்த நேரம்... அவள் வீட்டுப் பக்கம் இரவு நேர ரோந்துக்காக அங்கு வந்த பரணிதரன் தான் தன் ஜீப்பில் மான்வியுடன் மற்ற இருவரையும் அழைத்துச் சென்றான்.

அதன் பிறகும் குழந்தை சரியான பிறகும் சரி முனீஸ்வரன் வரும் வரை கூட இருந்து பார்த்துக் கொண்டவன் இந்த S.P தான். அதன் பிறகு எதேச்சையாக பல முறை இவர்கள் இருவருடைய சந்திப்பும் நடந்திருக்கிறது. மகளைக் காப்பாற்றிய நன்றிக்காகவும், இவனிடம் பேசும் நேரம் ஜோதியின் வாலாட்டம் குறைந்திருப்பதாலும் இவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள் அனு. எல்லாவற்றையும் விட பரணியின் பேச்சிலும், பார்வையிலும், செயலிலும் ஒரு கண்ணியத் தன்மையை உணர்ந்தாள் இவள்.

ஜோதி என்பவன் வெறும் ஜோதி அல்ல. வெடிகுண்டு ஜோதி என்பது தான் அவன் பெயர். பெரிய ரவுடி... இந்த ஊரின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் வலது கை அவன். அவனுக்கு முறையாக தாரம் மட்டுமே நான்கு பேர். முறையற்ற தாரத்திற்கும், பிள்ளைகளுக்கும் கணக்கே இல்லை. ஆனாலும் அனுவின் மேல் அவனுக்கு ஒரு கண்.

அனுவோ அவனை செருப்பால் அடிக்காத குறையாகத் தான் துரத்துவாள். அதையெல்லாம் வாங்கிக் கொண்டு, பழம் தானாக கனிந்தால் தான் ருசி.... அடித்துக் கனிய வைத்தால் ருசி இல்லை என்று பெண்களைப் பழத்துடன் ஒப்பிட்டுப் பேசும் கேடுகெட்ட பொறுக்கி தான் இந்த வெடிகுண்டு ஜோதி. பெயருக்கு ஏற்றபடியே இவனுக்கு எதிரிகள் யாராக இருந்தாலும் வெடிகுண்டு வைத்து ஆளை தூக்கி விடுவான். இப்போது சில விஷயங்களில் மாட்டி இருப்பதால் S.P பரணிதரனிடம் சில பல நாட்களாகவே பம்மிக் கொண்டு இருக்கிறான் அவன்.

இதற்குள் கோவில் வந்து விட… அனு வண்டியை நிறுத்தி விட்டு வரும் வரை ஜீப்பில் மான்வியுடன் அமர்ந்து இருந்தவன்... அவள் வந்ததும் கீழே இறங்கி, “deer க்கு இன்று பிறந்த நாளா? நீங்க சொல்லவே இல்ல... சொல்லி இருந்தா கிப்ட் வாங்கி இருப்பேன். சரி… இன்று எனக்கு ஒரு ரெட் ரோஸ் கன்று வேணும். ஈவினிங் மான்வியோட அதை எடுத்துட்டு வாங்க. அந்த செடிய மான்வி தான் என் வீட்டுத் தோட்டத்தில் நடப் போறா...” இப்போதும் இவன் கட்டளையாகச் சொல்ல

“சார், போன வாரம் தான் சார் ரெட் ரோஸ் செடி ஒன்று கேட்டிங்கனு கொடுத்தேன்...” அனு நினைவு படுத்த

“இருக்கட்டுமே அனு... இன்று மான்வி பிறந்த நாள். சோ, இது எனக்கு ஸ்பெஷல் செடி” என்றவன் பேச்சு முடிந்தது போல் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஜீப்பில் ஏறி கிளம்பியே விட்டான் அவன்.

உள்ளே சென்று சாமி தரிசனம் முடிந்ததும் அங்கு கொடுத்த பூவையும், குங்குமத்தையும் மகளுக்கு வைத்து விட்டவள் தன்னுடைய நெற்றிக்கு விபூதியையிட்டு கொண்டு... பின் ஓரிடத்தில் அமர்ந்து மகளுக்குத் தான் கொண்டு வந்த காலை உணவை இவள் ஊட்ட.... அந்த வாண்டோ தன் பிஞ்சி கைகளால் தாய்க்கும் ஊட்டி விட்டு நானும் உனக்கு தாய் தான் என்று நிரூபித்தது. மகளின் பாசத்தில் கண்கலங்க, “அப்படியே நீ உன் அப்பா தான் டி” என்ற முணுமுணுப்புடன் மகளை வாரி அணைத்துக் கொண்டாள் அனு.

வீட்டிற்கு வந்ததும் அன்றைய வேலைகளை முடித்தவள் அதன் பின் அப்பாடா என்று அமர்ந்து அன்றைய செய்தித் தாளை எடுத்து புரட்டியவளின் பார்வையோ நிலை குத்தி ஓரிடத்தில் நின்றது. அடுத்த நொடியே, “விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் கேட்குதாம்! அப்படி தான் இருக்கு இவனுக்கு கொடுக்கற பட்டங்கள்! தாராள பிரபு... சமூக ஆர்வலர்.... கொடை வள்ளல்... இதெல்லாம் பத்தாதுன்னு இந்த வருடம் சிறந்த தொழில் அதிபருக்கான விருது இவனுக்காம். ச்சே… என்ன உலகம் இது! கெட்டவர்களையே புகழுது?” என்று வாய்விட்டே கோபத்தில் குமுறியவள், பின் அந்த நாளிதழை சுக்கல் சுக்கலாய் கிழித்து எறிந்தாள் அனு.

இப்படி இவள் கோபப்படும் அளவுக்கு அந்த நாளிதழில் அப்படி ஒரு விருதை வாங்கியது யார் என்று குறிப்பிட்டு இருக்கிறது? இவள் தந்தையின் எதிரியா அல்லது இவளின் எதிரியா?...
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Nice....
அந்த பத்திரிகையில் இருந்தது யாரு, ஏன் அதை கிழிச்சா 🤔🤔🤔🤔
நன்றிங்க சிஸ்.... heart beat heart beat heart beat
 
Ooooooo... அந்த jothi aale சரி இல்ல iva kita vaal aattran போல... வெடிகுண்டு jothi ah பெரிய rowdy vera... SP correct ah vanthutaaru avara பாத்த ஒடனே ஒரே ஓட்டம் ah ஓடிட்டான்.... Iva இந்த ஊருக்கு வந்த பொது தான் இவனும் posting la inga வந்து இருக்கான்.... Maanvi ku odambu seri illaatha appo avala correct time ku hospital kutikitu போய் ava குணம் ஆகிற வரை paathukitu இருந்து இருக்கான் அதுல அணு அவன் kita நல்லா nadanthukura.... அவன் வீடு ku செடி கொண்டு poganuma.... யாரு அந்த paper la irukarathu avvallavu kovam... Super Super maa... Semma semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Ooooooo... அந்த jothi aale சரி இல்ல iva kita vaal aattran போல... வெடிகுண்டு jothi ah பெரிய rowdy vera... SP correct ah vanthutaaru avara பாத்த ஒடனே ஒரே ஓட்டம் ah ஓடிட்டான்.... Iva இந்த ஊருக்கு வந்த பொது தான் இவனும் posting la inga வந்து இருக்கான்.... Maanvi ku odambu seri illaatha appo avala correct time ku hospital kutikitu போய் ava குணம் ஆகிற வரை paathukitu இருந்து இருக்கான் அதுல அணு அவன் kita நல்லா nadanthukura.... அவன் வீடு ku செடி கொண்டு poganuma.... யாரு அந்த paper la irukarathu avvallavu kovam... Super Super maa... Semma semma episode
சித்து சிஸ்... boy fly kiss boy fly kiss boy fly kiss boy fly kiss அழகா ஒரு எப்பியை உங்க ஸ்டைல்ல சொல்லிட்டிங்க சிஸ்... smile 10smile 10நன்றிங்க சிஸ்...kiss heartkiss heartkiss heart
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN