முகவரி 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சென்னை... சாலிகிராமம்...

அந்த புகழ் பெற்ற கோவிலில் நடக்கும் பூஜையை வி.ஐ.பி. தரிசன பகுதியில் அமர்ந்து கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார்கள் வெண்பா, கஜேந்திரன் தம்பதியும் அவர்கள் பிள்ளைகளும். பூஜை முடியவும், தீபராதனை தட்டுடன் பூ மாலைகள் சகிதம் வெளியே வந்த குருக்கள், கஜேந்திரன் கழுத்தில் கொண்டு வந்த பூ மாலையை அணிவிக்க எத்தனிக்க…

“இன்று என் மச்சான் மகன் ஜீவாவிற்கு ஐந்தாம் வருட பிறந்த நாள். அதனால் முதலில்
அவனுக்கு மாலை அணிவித்து ஆசீர்வதியுங்க” என்று கஜேந்திரன் அன்பாய் சொல்ல, அதன்படியே அவரின் கையில் இருந்த பிள்ளையான ஜீவாவுக்கு குருக்கள் செய்யவும், வெண்பாவின் கையிலிருந்த இவர்களின் மகன் கமலோ,

“அப்பா, எனக்கு?” என்று கேட்கவும், சிரித்தமுகமாக கேட்ட அந்த ஐந்து வயது வாண்டான கமலுக்கும் மாலை அணிவித்தார் குருக்கள்.

“என்ன சொல்றது? தம்பி பிள்ளையையும் தன் பிள்ளையைப் போல் பார்த்துக்கிறது எல்லாம் எங்கே நடக்கிறது? அதிலும் உங்க ஆத்துக்காரரும் சேர்ந்து உங்களுக்குத் துணை இருக்காரோன்னோ வெண்பா ம்மா... அது பெரிய விஷயம் தான். நிச்சயம் உங்க தம்பியும் அவர் பிள்ளையான்டானும் உங்களை மாதிரி அக்கா, அத்திம்பேர் வாய்க்க கொடுத்து வெச்சவா தான்... ஷேமமா இருங்கோ. என்ன… தன் குழந்த பிறந்த நாள் பூஜைக்கு உங்க தம்பியும் வந்திருந்தா நன்னா இருந்திருக்கும்...” குருக்கள் மனதார வாழ்த்தி பின் குறையோடு முடிக்க

வெண்பா சங்கடத்தோடு தன் கணவனைப் நோக்க.… அவரோ, “அவனுக்கு நிறைய வேலை… அதான் வர முடியல. அப்போ நாங்க கிளம்புறோம்” என்ற பதிலுடன் நாசுக்காய் கஜேந்திரன் அங்கிருந்து விலகிக் கொண்டவர் தங்கள் பிள்ளைகளுடன் சுற்றுப் பிரகாரத்தில் இவர் வந்து அமர

“டாட், நாங்க குளத்தில் இருக்கிற மீனுக்கு ஃபுட் போடப் போறோம்... போகட்டுமா?” அவருடைய பத்து வயது முத்த மகள் சுபஸ்ரீ இப்படி கேட்க

உடனே இவர் தங்கள் இரண்டாவது மகளான ஏழுவயது ரவீனாவைப் பார்க்கவும்... அவள் விழிகளிலோ ஆர்வம் அப்பட்டமாய் அப்பி இருந்தது. “சரி… ஸ்ரீ பாப்பாவையும் தம்பிகளையும் பத்திரமாய் பார்த்துக்க” என்று அனுமதி தந்தவர் திரும்பி சற்று தூர நின்றிருந்த காவலர்களைப் பார்க்க, அங்கு இருந்தவர்களில் ஒருவன் நெருங்கி இவரிடம் வரவும், “பிள்ளைகள் குளக்கரைக்கு போகணும்னு ஆசைப் படறாங்க. அழைச்சிட்டுப் போங்க. be careful” இவர் கட்டளையிட…

ஜீவாவையும், கமலையும் இரண்டு காவலர்கள் தூக்கிக் கொள்ள, அவர்களைப் பின் தொடர்ந்தார்கள் பெண் குழந்தைகள் இருவரும்.

பிள்ளைகள் விலகிச் சென்ற பிறகும் எதுவும் பேசாமல் யோசனையுடனே அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்த கஜேந்திரன், “என்ன வெண்பா... அப்படி என்ன பலத்த யோசனை? குருக்கள் கேட்டதை வைத்து உன் தம்பியை நினைத்து யோசிக்கிறீயா? அவன் என்ன தெய்வம் இல்லைனு சொல்கிற நாத்திகவாதியா? என்ன? எல்லாம் சாமி பக்தி உள்ளவன் தான். வருடா வருடம் கடுமையா விரதம் இருந்து சபரிமலைக்குப் போறவன் அவன். இன்று ஏதோ நம்மளோட வர முடியல விடு. அடுத்த வருடம் ஜீவா பிறந்தநாள் அப்ப அவன் தான் தன் மகனை கோவிலுக்கு அழைச்சிட்டு வருவான் பாரு” இவர் ஆரூடம் சொல்ல…

அதேநேரம் “டங்” என்ற சப்தத்துடன் கோவில் மணி ஒலிக்கவும், கண்களும் முகமும் பிரகாசிக்க தன் கணவனை நோக்கிய வெண்பா பின் முகம் சுருங்க, “அவன் நாத்திகவாதி இல்லைனு எனக்குத் தெரியுங்க. அவன் மலைக்கு மட்டுமா போறான்? கடந்த ஆறு வருடமா உணவில் உப்பு சேர்க்காம, இனிப்பு சாப்பிடாம கடுமையா விரதம் இருக்கான். என்னடா இப்படின்னு கேட்டா அவன் வாழ்வில் இழந்த சொத்தை திரும்ப அடையணும்னு சொல்றான். ரொம்ப கடுமையா இருக்காங்க.

ஆனா என்ன… ஒவ்வொரு வருடமும் ஜீவா பிறந்த நாள் அன்று மட்டும் கோவிலுக்கு வர மாட்டேங்கிறான். அது மட்டுமா? அன்று முழுக்க தன் அறையை விட்டு வெளியே வராமல், யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல், உடம்புக்கு கெடுதலான அந்த மதுவை மட்டுமே குடிச்சிட்டு இருக்கான். நாள் முழுக்க யார் சொல்லி அவன் மாறுவான்? இல்ல… யாராவது ஏதாவது எடுத்துச் சொல்ல அவனிடம் நெருங்கத் தான் விடறானா? அதையும் மீறி இன்று அவன் அறைக்கு யாராவது போனா உயிரைக் கையில் பிடித்து தான் வெளியவே வர வேண்டியிருக்கு.

சரி… ஜீவாவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் வைத்தா அவன் மாறுவான்னு நினைத்து அதற்கு நாம் ஏற்பாடு செய்தா பகல் முழுக்க குடிச்சிட்டு விழா ஆரம்பிக்கும்போது மட்டும் டிப்டாப்ப்பா டிரஸ் செய்திட்டு இந்த புலியும் சரக்கு அடிக்குமா என்ற ரேஞ்சுக்கு வந்து நிற்கிறான். அவன் வாழ்வில் ஏதோ நடந்து இருக்குங்க. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறான். என்னால முடியலங்க… கடந்த ஐந்து வருடமா இதே நிலை தான். அடுத்த வருடமாவது அவன் வாழ்வில் மாற்றம் வருமான்னு பார்ப்போம். பார்ப்போம் என்ன பார்ப்போம்? அவன் வாழ்வுக்கு ஏதாவது செய்யணுங்க. பேசாம நம்ம சுஜியை...”

“ஷ்ஷ்... வெண்பா என்ன இது? இப்படி மூச்சு விடாமா பேசிகிட்டு போற! உன் தம்பி மேல் உனக்கு பாசம் அதிகம் தான். அதற்காக இப்படியா? கொஞ்சம் மூச்சு விட்டு பேசு வெண்பா. அவன் உனக்கு தம்பினா எனக்கு மச்சான். அவன் வாழ்க்கைய சீர் செய்ய எனக்கு தெரியும். அது என் கடமையும் கூட. அதனால் உன் மனசையும், உடம்பையும் போட்டு இப்படி அலட்டிக்காமா இரு. இந்தா… இந்த ததண்ணியை குடி. வா, நாமளும் அப்படி குளத்துப் பக்கம் போய் பிள்ளைகளோடு இருந்து வருவோம்” அவர் கண்டிப்புடன் மொழியவும், கணவனின் பேச்சைத் தட்ட முடியாமால் அவருடன் எழுந்து சென்றாள் வெண்பா.

கஜேந்திரன் மற்றும் வெண்பா… இருவரும் நடுத்தர வயதுடைய தம்பதிகள். வெண்பா, வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ள, கஜேந்திரன் வருமான வரி அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முத்தவள் சுபஸ்ரீ ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். இளையவள் ரவீனா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இவர்களின் கடைக்குட்டி பிள்ளை கமலோ ukg படிக்கிறான். இவனுடன் தான் ஜீவாவும் படிக்கிறான். அதனால் அவனின் முழு பொறுப்பும் இப்போது அத்தையான வெண்பாவிடம் வந்து சேர்த்து விட்டது. பொறுப்பு அக்காவிடம் செல்லவும் இவளின் தம்பியோ சுதந்திரமாக காட்டுப் பறவை என சுற்றிக் கொண்டிருக்கிறான்.

வெண்பாவின் குடும்ப வசதி எல்லாம் உயர் நடுத்தர வர்க்கம் தான். ஆனால் அவள் தம்பி தான் பெரிய தொழில் அதிபர்… கூடவே மல்டி மில்லினியர். அதனால் அவன் மகனான ஜீவாவுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை இவர்களுக்கும் தருவார்கள் பாதுகாவலர்கள். அதற்கு எல்லாம் கஜேந்திரனும் பெரிதாக மறுப்பு எல்லாம் சொல்ல மாட்டார். முழுக்க முழுக்க ஜீவா தங்கள் பொறுப்பு என்னும்போது தங்களுக்கும் அந்த பாதுகாப்பு தேவை தான் என்று உணர்ந்து கொள்பவர் அவர்.

இங்கு கோவில் பூஜைகள் முடிய, அடுத்து இவர்கள் சென்றது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்புக்குத் தான்.

அங்கு சென்று அங்குள்ள நிர்வாகத்தாரை சந்திக்க, “வாங்க... வாங்க... ஜீவா பிறந்தநாளுக்கு நீங்க வருடா வருடம் இங்கு வருவது வழக்கம் தானே? வாமணன் தம்பி இங்க வரலைனாலும் அதற்கான ஏற்பாட்டை எல்லாம் பக்காவா செய்யச் சொல்லிடுவார். அதனாலே எல்லாம் ரெடியா தான் இருக்கு” என்று ஹோம் நிர்வாகி இவர்களை அன்புடன் வரவேற்றவர், “வாமணன் தம்பி இங்க வருவது இல்லைனாலும் இங்க இருக்கற பிள்ளைகளுக்கு வேண்டியதை கேட்டு கேட்டு செய்திட்டு தான் ம்மா இருக்கார்” கூடுதல் தகவலை அவர் சொல்ல, கணவன் மனைவி இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

அதன் பின் அங்குள்ள பிள்ளைகளுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்கள் அனைவரும். இதெல்லாம் ஜீவாவின் பிறந்த நாளுக்காக அவன் தந்தை வருடா வருடம் செய்யும் ஏற்பாடுகளில் ஒன்று.

பிள்ளைகளோடு பிள்ளைகளாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜீவா திடீரென ஓடி வந்து வெண்பாவின் காலைக் கட்டிக் கொண்டவன், “அத்த... டாடி ஏன் என்ன காலைலிருந்து பார்க்கல? என்று முகம் நிமிர்த்தி கேள்வி கேட்க

அந்த பிஞ்சின் ஏக்கத்தைப் புரிந்தவளோ, தன் முகம் சுண்ட ஏதோ சொல்ல வரும் நேரம், “ஐயா ராசா! இப்போ தான் டா உன் அத்தையை மலை இறக்கினேன். நீ மறுபடியும் வந்து ஏற்றிடாத டா” என்று வாய் விட்டே நொந்த கஜேந்திரன் அவனைத் தூக்கி தன் மடியில் அமர வைத்து,

“உன் அப்பனுக்கு வேலை டா. அவன் என்ன ஒரு பிஸினெஸ்ஸா செய்றான்? எதைப் பார்க்கிறானோ எதை நினைக்கிறானோ அதில் எல்லாம் நுழைகிறான். அதனாலேயே உன் அப்பாவால் சரியா சாப்பிட கூட முடியறது இல்லை. பாவம் தானே உன் டாடி? இப்போ உங்களுக்கு என்ன வேணும்? மாமா கிட்ட கேளுங்க வாங்கி தரேன். ஈவினிங் பார்ட்டி அப்போ உன் டாடி டான்னு வந்திடுவான்… உனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு” அவனுக்கு இவர் சமாதானம் சொல்லவும்...

“ம்ம்ம்... மாமா, என்கிட்ட டாடி மம்மியை பார்க்க போலாம்னு சொன்னார். எப்போ கூட்டிட்டு போவார்?” தான் தன் தந்தையைத் தேடிய காரணத்தை அந்த வாண்டு போட்டு உடைக்கவும்…

கணவன் மனைவி இருவரும் ஒரு அர்த்த பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அதுவும் இல்லாமல் என்ன தான் தாங்கள் தன் பிள்ளை போல் ஜீவாவை வளர்த்தாலும் அவனுக்குத் தாய் மேல் பாசமும் ஏக்கம் உள்ளதை இருவரும் அறிந்து உணர்ந்து தான் இருந்தார்கள்.

அதனால், “ஜீவா குட்டி... டாடி இன்று உன்னுடைய பர்த்டே பார்ட்டி முடிந்ததும் நாளைக்கு உன்னைய அழைச்சிட்டுப் போவார் செல்லம். அதுவரை சமர்த்தா டாடியை தேடாம, மம்மியை பார்க்கணும்னு அடம்பிடிக்காம விளையாடுவீங்களாம்... சரியா?” அந்த பிஞ்சுக்கு மாமனான இந்த நாற்பது வயது மனிதர் ஆசை காட்டி அவனை சமாதானம் செய்ய...

நாளைக்கு என்ற சொல்லில் நிச்சயம் தன் மம்மியைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எப்போதும் போல் மாமனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு விளையாட ஓடினான் அந்த சின்ன வாண்டு.

“என்ன வெண்பா... ஜீவா இப்படி சொல்றான்! நீ என்னமோ உன் தம்பிக்கு இரண்டாவதா சுஜியை கட்டிவைக்கணும்னு நினைக்கிற. என்ன உன் தம்பிக்கு காதலா? அதுக்கு நீயும் உடந்தையா? கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து என்ன ஒதுக்கிட்டீங்க இல்ல?” அன்று கஜேந்திரன் நாக்கில் என்ன இருந்ததோ அவர் எதார்த்தமாய் கேட்க

“என் வாயில் அப்புறம் நல்லா வந்திடும்… என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? அவனை மாதிரியே அழுத்தக்காரினா? எனக்கு எதுவும் தெரியாததுனால தானே இன்று கூட சுஜியை கட்டி வைக்கிறதை பற்றி பேசினேன்?” என்று கோபத்துடன் முகத்தைச் சுழித்தவள், “அவன் இந்த ஜீவா பயலை பிறந்த ஒரு நாள் குழந்தையா இருக்கும் போது தூக்கிட்டு வந்த அன்று என்ன சொன்னான் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” என்று கேட்டவள்,

“என் வாழ்க்கையில் நடந்ததை பற்றி எதுவும் கேட்காத க்கா... இனி என் மகனுக்கும் எனக்கும் நீ தான் க்கா எல்லாம்னு வந்து நின்றபோது நீங்களும் தானே கூட இருந்தீங்க?” என்று அன்றைய நிகழ்வை நினைவு கூர்ந்தவள், “அன்றிலிருந்து இன்று வரை அந்த வாக்கை நான் எப்போது மீறி இருக்கேன்? ஆனா இனி நான் அப்படி இல்லங்க... இன்று நான் அதை மீறத் தான் போறேன். வீட்டுக்குப் போய் நானா அவனா என்று பார்க்கத் தான் போறேன்” வெண்பா கோபத்திலும் இயலாமையிலும் படபடவென்று பொரிய... கஜேந்திரனுக்கோ மனைவியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாத நிலை.

ஜீவா தான் இப்படி கிளப்பி விட்டு போனான் என்றால் அங்கு ஹோமுக்கு வந்த புகழ் பெற்ற நீதிபதியும் அவர் மனைவியும், பேச்சுவாக்கில் “என்ன வெண்பா... உன் தம்பிக்கு தான் இந்த வருட சிறந்த தொழில் அதிபருக்கான விருது கிடைத்திருக்கு போல... நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். அப்படி விருது வாங்க ஓடத் தெரிந்த உன் தம்பிக்கு தன் மகன் பிறந்த நாளுக்கு அவன் கூட இந்த ஹோமுக்கு வரணும்னு தெரியல பார்த்தியா…” நீதிபதி மனைவி தன் வயிற்றெரிச்சலைக் கொட்டி விட்டுப் போக…

மனைவியின் முகம் வாடுவதைப் பார்த்தும், “இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லல போல...” என்ற முணுமுணுப்புடன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் கஜேந்திரன்.

இப்படி தான் பெற்ற மகன் பாசத்தில் தேட, அவனுடைய கூடப் பிறந்த அக்காவும் மாமாவும் அவன் வாழ்வை நினைத்து கவலையில் அமர்ந்திருக்க... அவனுடைய எதிரிகள் அவன் பெற்ற விருதை நினைத்து வயிறு எரிந்திருக்க... அவனுடைய நண்பர்களோ அதை விழாவாக கொண்டாட... தொழில்துறை சாம்ராஜ்யத்தில் ராஜாதிராஜனாக திகழும் வெண்பாவின் தம்பி... ஜீவாவின் தந்தை உயர்திரு.மிருடவாமணன் அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

தன் அறையில் உள்ள பாரில் எவ்வளவு குடித்தாலும் நிதானம் இழக்காதவன் என்ற பெயரை மெய்ப்பிப்பவன் போல் வரைமுறை இல்லாமல் குடித்துக் கொண்டும் வாயில் வந்ததை உளறிக் கொண்டும் இருந்தான் அந்த முப்பது வயது மாமனிதன்!
 
Last edited:
Appo namba அணு vukum vaamanam nukum எதோ சம்மந்தம் irukku nu நினைகிறேன்.... அவனும் ஒரு வயசு kuzhanthai யா thukikitu வந்து இருக்கான்... அவன் அக்கா kita ethuyum கேக்க kudathu nu vera solli இருக்கான்... Ethuku avan birthday annaiki avvallavu குடி குடிக்கிறான்.... Appo அணு அந்த பேப்பர் ல பாத்தது avana தானா... Super Super maa... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Appo namba அணு vukum vaamanam nukum எதோ சம்மந்தம் irukku nu நினைகிறேன்.... அவனும் ஒரு வயசு kuzhanthai யா thukikitu வந்து இருக்கான்... அவன் அக்கா kita ethuyum கேக்க kudathu nu vera solli இருக்கான்... Ethuku avan birthday annaiki avvallavu குடி குடிக்கிறான்.... Appo அணு அந்த பேப்பர் ல பாத்தது avana தானா... Super Super maa... Semma episode
wowwwww.... semma sis... heart beat heart beat heart beat
நன்றி... நன்றி சித்து சிஸ்... boy fly kissboy fly kissboy fly kissboy fly kiss
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அப்போ நம்ம‌ ஷிதாவும் வாமணனும் தான் ஹுரோ ஹீரோயின் ஆ😎❤️😀
நன்றிங்க சிஸ்💜💜💜🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍💝💝💝💝💝💝🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN