முகவரி 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருடன் ஒன்றை நினைத்து விட்டால் அதை செயல்படுத்தாமல் விடுபவன் இல்லையே! ஒரே ஒரு நொடி தான் இங்கு வந்தது சரியோ என்ற நிலையில் அவனுள் நடுக்கம் ஓடினாலும் அதைத் தகர்த்து எறிந்தவன், தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க… மறுபுறம் எடுக்கப் பட்டதும், “டாக்டர், now i am going to see the patient” இவன் கட்டளையிட

மறுபுறம் வந்த பதிலில், “yes... Now i am in car parking area only” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை M.D அறைக்குள் இவன் நுழைய...

“ஹலோ Mr. வாமணன்! வாங்க வாங்க... தற்போது நீங்க பார்க்க வந்த நபரின் நிலை கொஞ்சம் மோசமாக தான் இருக்கு. Anyway, come… let's see the patient. அங்கே போய் மற்றதை பேசலாம் வாங்க” md வரவேற்க

“டாக்டர் பேஷண்ட்ட என் மகன் பார்க்கணும். That's only i came now” இவனின் பதிலில்

“patient is not well... Mr. வாமணன் ரெண்டு நாளா அவங்களுடைய பிஹேவியர் மோசமா இருக்கு. அதனால் இப்போ அவங்களை உங்க மகன் பார்க்கணுமான்னு யோசிக்கிறேன்”

“என் மகனை நான் அவன் பக்கத்திலியிருந்து பார்த்துக்கிறேன் டாக்டர். I will be response for anything” இவனின் அதிரடியான பதிலில்

“ஓகே லெட்ஸ் கோ”

டாக்டர் முன்னே நடக்க, இவன் தன் மகனுடன் பின் தொடர... தங்கக் கூண்டே என்றாலும் கிளிகளுக்கு கூண்டு என்பது சிறை தானே! அதே போல தான் இந்த மருத்துவமனையும். என்ன தான் பணம் காசைக் கொட்டிக் கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இங்கிருக்கும் நோயாளிகளுக்கு பல சலுகைகள் செய்து கொடுத்து உறவினர்கள் பார்த்துக் கொண்டாலும் இங்கு இருப்பவர்கள் அனைவரும் மனநலம் பாதிப்படைந்த நோயாளிகள் தானே?

பின்னே இவர்களை மட்டும் அவர்கள் எப்படி நடத்துவார்கள்? இல்லை அவர்களும் தான் என்ன மனநிலையில் இருப்பார்கள்? இவர்கள் மூவரும் வராந்தாவை கடந்து செல்ல… இருபுறம் இருந்த அறைகளில் ஒரு அறைக்கு ஒரு நோயாளி என்று மனிதர்கள் இருந்தாலும் அதில் அதிகமானோர் கத்தலும், கூச்சலும், அழுகையுமாகத் தான் இருந்தார்கள். அதைப் பார்த்த ஜீவா பயத்தில் தந்தையை ஒட்டிக் கொண்டான். தற்போது இவர்கள் மூவரும் ஓர் அறை வாசலில் வந்து நிற்க...

“இது தான் அவங்க அறை. அநேகமா உள்ள தான் இருக்கணும்” மருத்துவர் காட்டிய அறை ஆள் அரவம் அற்ற அறை போல் தெரிந்ததால் டாக்டர் இப்படி சொல்ல

“ஓப்பன் தி டோர் டாக்டர்” மிருடன்

மிருடன் பெரிய ஆள் என்பதால் தான் மருத்துவர் இவனுடனே வந்தார். அதற்காக இவன் சொல்வதை எல்லாம் அவரால் கேட்க… செய்ய முடியுமா? அதுவும் நோயாளி இப்போது இருக்கும் நிலையில் மருத்துவர் தயங்க…

மகனோ, “டாடி, மம்மி இங்கயா?” என்று நடுக்கத்துடன் மிருடனிடம் கேட்க

“Mr. வாமணன், உள்ள இருக்கிறவங்க உங்க மனைவியா?” டாக்டருக்கு இது புதிய செய்தி என்பதால் ஆச்சரியத்துடன் அவர் கேட்க…

“நோ... நோ.. ஆனா அவங்க தான் என் மகனுடைய அம்மா” இவன் பதில் தந்த அடுத்த நொடி

“ஹெஈஈஈஈ....... ஹீஈஈஈ..... நான் வர மாட்டேன் போ. ஹீஈஈஈஹூஊஹாஆ.... நான் வரல.” மூடியிருந்த இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் உருவம் உள்ளிருந்து அதீத கூச்சலில் கத்தவும்

பயத்தில் உடல் தூக்கி வாரிப் போட… திகிலுடன் உதடு துடிக்க... முகம் அழுகையில் கரைய, “வேணாம் டாடி... மம்மி வேணாம் டாடி... வேணாம் டாடி...” என்ற ஜீவா தன் தந்தையின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அரற்றவும் அந்த இடமே திகிலானது.

“சார்... இட்ஸ் நாட் குட். அவங்க இப்போது அமைதியான மனநிலையில் இல்லை. சோ, பையனை அழைச்சிட்டு நீங்க கிளம்புங்க. இன்னோர் நாள் அவங்க நார்மலா இருக்கும் போது நான் உங்களை அழைத்து சொல்கிறேன்... அப்போது வாங்க” மருத்துவரின் கெஞ்சலுக்கு அடுத்த நொடி அந்த இடத்தை விட்டு மகனுடன் அகன்றிருந்தான் மிருடன்.

இவன் காரில் வந்து அமர்ந்த பிறகும் தந்தையின் மார்பில் தன் முகத்தைப் புதைத்த ஜீவா, “நோ டாடி... நோ டாடி... மம்மி வேணாம்” என்று அரற்ற

தன் பிடிவாதத்தால் அக்காவிடம் வைத்த வீம்பால் தற்போது மகன் அனத்தும் அனத்தலை காண முடியாமல் தான் செய்த தவறின் வீரியம் புரிய துடித்தான் மிருடன்.

ஆனால் இப்போது உணர்ந்து என்ன செய்வது? மகன் துடிக்கிறானே! சிறிது நேரம் மகனை அணைத்தபடியே அமர்ந்து இருந்தவன், “நோ பேபி... நோ டா தங்கம். அப்பா இருக்கேன்… டா…” இப்படியான வார்த்தைகளால் மகனை சமாதானம் செய்தவன் பின் தான் இருக்குமிடம் உணர்ந்து தன் காருக்குப் பின்னேயிருந்த மெய்காப்பாளரில் ஒருவனை அழைத்து காரை எடுக்கச் சொல்ல... இதை எதையும் உணராமல் கண்களை இறுக்க மூடி தந்தையை இருக்க அணைத்து அனத்தி கொண்டே இருந்தான் ஜீவா.

இவர்கள் கார் வீட்டு வாசலில் வந்து நிற்கவும், “ஜீவா...” என்ற அழைப்புடன் ஒடி வந்து அவனைத் தூக்கிக் கொண்டார் வெண்பா.

அத்தையிடம் போனதும், “அத்த... பூச்சாண்டி... பூச்சாண்டி... அத்த... நோ அத்த...” இவன் இன்னும் தேம்ப

“இல்ல டா தங்கம்... இல்ல டா... அத்த இருக்கேன் டா” இவளின் சமாதானத்தில் பின் அவள் மடியிலேயே துயில் கொண்டான் அந்த வாண்டு.

அவனின் அனத்தல் நின்று ஜீவா தூங்கும் வரை அங்கு யாரும் யாரிடமும் பேசவில்லை. மிருடனும் மகனை விட்டு சற்றும் நகரவில்லை. அந்நேரம் அவனுக்கு அவன் பி.ஏ ஆதியிடமிருந்து அழைப்பு வரவும், மகனைப் பார்த்துக் கொண்டே இவன் சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்க... எதிர்புறத்தில் அவன் சொன்ன செய்தியில் கல்லென இவன் முகத்தில் கடினம் ஏற, பின் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்தவன்…

“அக்கா... நான் இப்பவே டெல்லி கிளம்பறேன். P.M கூட ஒரு மீட்டிங். நாளைக்கு தான் திரும்ப வருவேன். அதுவரை என் மகனைப் பார்த்துக்க க்கா” தந்தை என்ற பாசத்தில் இவன் கேட்க

‘என் பிள்ளையப் பார்த்துக்கச் சொல்லி இவன் கேட்கிறான்... பிறந்ததிலிருந்து இவன் தான் பார்த்துக்கிறான் பாரு...’ வெண்பாவுக்கு கோபம் ஏற, சுள்ளென தம்பியின் முதுகில் ஒரு அடி வைத்தவள்... பின் முகத்தைத் திருப்பிக் கொள்ள…

கஜேந்திரன் தான், “நீ போய் வா மிருடா. நாங்க இருந்து ஜீவாவைப் பார்த்துக்கிறோம்” என்க

மகனின் கேசம் வருடி அவன் நெற்றியில் முத்தமிட்டவன் பின் அரை மனதாக அங்கிருந்து கிளம்பிச் சென்றான் மிருடன்.

தன் வேலை முடித்து இவன் மறுநாள் காலை வீட்டிற்குள் வர... தந்தையைப் பார்த்ததும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஜீவா, முகம் கொள்ளா சிரிப்புடன்,

“டாடி” என்ற குதூகல அழைப்புடன் ஓடி வந்து இவன் காலைக் கட்டிக் கொள்ளவும், இவன் முகமும் கவலைகள் அற்று பிரகாசம் ஆனது. அதில் மகனைத் தூக்கி,

“மை சன்” என்று உச்சி முகர்ந்தவன் “டாடியை தேடினீங்களா தங்கம்?” என்று இவன் கேட்க

“ரொம்ப்ப்பப்ப்ப்ப” என்றது அந்த வாண்டு தன் கைகள் இரண்டையும் அகல விரித்து காட்டி.

அதில் நேற்றைக்கும் இன்றைக்குமான தன் மகனின் மனநிலையின் மாற்றத்தை உணர்ந்தவனோ அதற்கு காரணமானவளைத் தேட, அவளோ அங்கு தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருக்க… மகனுடன் தமக்கையிடம் சென்றவன்,

“தேங்க்ஸ் க்கா!” உளமாற சொல்ல...

“போடா போக்கிரி” என்றவள் தன் தம்பியின் தலை முடியைக் கலைத்து விட்டு, “போய் குளிச்சிட்டு வா மிருடா. சாப்பிடுவ…” என்க, அந்த பாசத்தில் நெகிழந்தவனாக இவன் அவள் மடியில் தலை சாய்த்துக் கொள்ள...

அதில் ஜீவாவும், கமலும் “நானு… நானு” என்ற படி அங்கிருந்த நாற்காலியில் ஏறி மிருடன் மேல் படுத்துக் கொண்டார்கள். அதில் தன் மனம் நிம்மதி அடைய, அதன் பிறகு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான் மிருடன்.

இவன் உள்ளே நுழையவும், “குட் மார்னிங் பாஸ்” என்ற படி அவன் முன் ஆதி சில கோப்புகளை வைக்கவும், அதைப் பார்வை இட்டவனின் முகம் பிரகாசம் ஆக, இவன் ஆதியை மெச்சுதலாய் நோக்க…

“எஸ் பாஸ்... நீங்க நேற்று டெல்லி போயிருந்த நேரம் சாமுவேல் சார் நம்ம டீலுக்கு ஒத்துக்கிட்டார். சோ, அதை முடிச்சிட்டேன் பாஸ்” இவன் ஆனந்தமாய் சொல்ல

“குட் ஆதி... குட்....” இவன் மனதார பாராட்ட

அதில் ஆதியின் முகம் பிரகாசம் ஆனது, “நீங்க போன P.M மீட்டிங் வெற்றிகரமா முடியும்னு தெரியும் பாஸ். அதான் சாமுவேல் விஷயத்தை நானே இங்கே சீக்கிரம் முடிச்சிட்டேன்” இவன் விளக்கம் தர

“ம்ம்ம்....” என்றவன் முன் இன்னும் சில பேப்பர்களை வைத்தான் ஆதி. அதில் கேள்வியுடன் மிருடனின் பார்வை பதியவும்… “இவங்க பெயர் அனுதிஷிதா பாஸ். மான்வி நர்சரி பிளான்ட் வைத்திருக்காங்க. அம்மா, அப்பா, ஏன்… கணவன் இப்படி எந்த உறவுமே இவங்களுக்கு இல்லை. ஷி இஸ் எ விடோ.

சொந்தம்னு பார்த்தா ஐந்து வயதில் ஒரு மகள்… பெயர் மான்வி. ஒரு வயதான தம்பதி இவங்க வீட்டில் தான் தங்கி இருக்காங்க. எப்போதாவது அங்கு ஊரில் இருக்கிற சில பேர் இவங்க தோட்டத்துக்கு வந்து வேலை செய்து கொடுத்திட்டுப் போவாங்க… அவ்வளவு தான் பாஸ்” என்றபடி சில பல தான் சேகரித்த தகவல்களை தன்னுடைய ஒவ்வொரு அறிமுகத்துக்கும் அறிமுகப்படுத்திய நபர்களின் புகைப்படத்தை மிருடனின் முன் வைத்தான் ஆதி.

பின் அவனே, “சாமுவேல் சார் வீட்டுக்குப் பக்கத்தில் தான் பாஸ் இவங்க வீடு. இரண்டு வீட்டுக்கு இடையிலும் பொதுவா தோட்டம் தான் பாஸ். சோ, ஈசியா இவங்க இடத்தை வாங்கிடலாம். நீங்க அனுமதி தந்தா அதற்கான வேலையில் இப்பவே இறங்கிடுறேன் பாஸ்” ஆதி கடமையே கண்ணாய் இருக்க

“ம்ம்ம்... என்னை விட fast ah இருக்கீயே ஆதி… குட்… சாமுவேல் வெளிநாட்டுக்குச் சென்று அவர்கள் பிள்ளைகளோட செட்டில் ஆகப் போறார். சோ, நாம் கேட்ட விலைக்கு அவர் இடத்தை விற்றுவிட்டார். ஆனா இந்த லேடி எப்படி? நாம் கேட்டதும் இவங்க இடத்தை கொடுத்திடுவாங்களா?” தன் முன் இருந்த அனுதிஷிதாவின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே இவன் கேட்க

“என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க? அந்த இடத்தைக் கேட்கப் போறது யாரு? தி கிரேட் பிசினெஸ் மென் மிருடவாமனின் பி.ஏ.வாச்சே! அவங்க தரலைனா அவ்வளவு சீக்கிரம் என் M.D விட்டுவிடுவாரா என்ன பாஸ்?” இவன் மிருடவாமணனைப் புகழ

அதில் உதடு பிரியாமல் புன்னகைத்தவன், “இந்த லேடி எப்படி ஆதி? நல்லா விசாரிச்சிட்டியா?” என்று கேட்டவன் எழுந்து சென்று அங்கு அறையில் இருந்த வெள்ளை போர்ட் முன் நிற்க

“எஸ் பாஸ்... முன்னாள் M.P குணநாதனின் ஒரே மகள் தான் இந்த அனுதிஷிதா. சொந்த ஊர் நெடுவாசல் தான். ரொம்ப சாப்ட் அண்டு சைலண்ட்... ஆனா குணநாதன் கிட்ட இல்லாத நீதி, நேர்மை, நியாயம் இவங்க கிட்ட பார்க்கலாம். எதிலும் வாக்கும் கையும் சுத்தம்... அதை விட நெருப்பு! தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற டிபிக்கல் மிடில் கிளாஸ் பெர்சன்”

ஆதியின் பதிலில் மார்க்கரால் அவளின் தகுதியாக ஒவ்வொரு கோடாக ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு வந்த மிருடன், “nine strengthness... எதிரி கிட்ட ஒன்பது அம்ச பலம் இருக்கே ஆதி!” இவனின் கேள்வியில்

“பாஸ்... எல்லாம் இருந்தாலும், எவ்வளவு பலம் இருந்தாலும் அவங்களுக்கு கோபமும், அவசரமும் அடிக்கடி எதிலும் வரும் பாஸ். கோபம் வந்தா முதலில் அவங்களுக்கு கை தான் பேசும் பாஸ். அதனாலேயே...”

ஆதியை முடிக்க விடாமல், “அதனாலேயே அவங்க நெடுவாசல் பஜாரி! அதாவது பெண் ரவுடி... Am i கரெக்ட்?” இவனின் கேள்வியில் அவன்

“எஸ் பாஸ்...” என்று ஒத்துக் கொள்ள

“வேற?” மிருடன்

“பொண்ணு மேல் ரொம்ப பாசம். அவங்க நமக்கு ஒத்து வரலனா... மகளை வைத்து முடித்திடலாம் பாஸ்”

இப்போது தன் அறையின் ஜன்னல் கண்ணாடி வழியே வானத்தை வெறித்த மிருடன், “well... அப்படி தான் செய்யணும் ஆதி. நமக்கு வேண்டியது அந்த இடமும் அதனுள் இருக்கும் மரங்களும். சோ, அது கிடைக்க ஒரு பிசினெஸ் மேனா என்ன வேணாலும் செய்யலாம்” இவனின் ஆழ்ந்த நிதானமான பதிலில்... தான் சொன்னதை செய்வேன் என்ற உறுதி இருக்க... ஆதிக்கும் அது புரிந்து தான் இருந்தது. அப்படி அவன் என்ன சொன்னாலும் செய்ய இவனும் சித்தமாய் தான் இருந்தான்.

தான் வந்த வேலை முடிந்தது போல் ஆதி சில கோப்புகளை எடுத்துக் கொண்டு விலக நினைக்க, “நெடுவாசல்க்கு எப்போ போகிறோம் ஆதி?” இவன் திரும்பாமலே கேட்க

“இந்த மாதக் கடைசியில் பாஸ். அதற்குள்ள நீங்க தங்க சாமுவேல் சார் கிட்ட வாங்கின வீட்டைக் கிளீன் செய்து எல்லாம் தயாரா செய்ய சொல்லிட்டேன் பாஸ்”

“ம்ம்ம்... அவ்வளவு நாள் தள்ள வேண்டாம் ஆதி. பத்து நாளில் நான் நெடுவாசலில் இருக்கணும். be quick” இவனின் கட்டளையில்,

“எஸ் பாஸ்” என்ற சொல்லுடன் துரிதமாக செயல்பட வெளியேறினான் இவனின் பி.ஏ. ஆதி

மிருடவாமணனுக்குப் பல தரப்பட்ட தொழில்கள் இருந்தாலும் அவனின் முக்கியத் தொழிலாக இருப்பது ஜீவா பர்னிச்சர் தான். தமிழ்நாடு முழுக்க இதற்கான கிளைகள் இருக்க... அங்கு கட்டில், பீரோ, ஷோஃபா, கதவு, ஜன்னல் என்று ஆரம்பித்து சிறு சிறு கைவினைப் பொருட்கள் வரை இருக்கும். அதாவது அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி தொழில் செய்கிறான் இவன்.

இப்போது இவனின் தொழிலுக்குப் பெரும் உதவியாக பலம் சேர்ப்பது போல் நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் என்பவர் அவர் தன் இடத்தை தோட்டத்துடன் இவனுக்கு விற்க… அந்த இடத்துடன் பக்கத்தில் இருக்கும் அனுதிஷிதாவின் இடமும் இவன் கண்ணில் பட்டுவிட... அதை அவளிடமிருந்து வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறான் இவன்.

இவன் திரும்ப வந்து இருக்கையில் அமர, அவன் முன் அனுதிஷிதாவின் புகைப்படம் இருக்கவும்… அவளை ஆழ்ந்து நோக்கியவன், “அதாவது, மரத்தையும், தோட்டத்தையும் உயிராய் நேசிக்கும் அனுதிஷிதாவுக்கும்… மரங்களை வெட்டி வீழ்த்தி காட்டை அழிக்கும் தி கிரேட் பிசினெஸ் மேன் மிருடவாமணனுக்கும் போர் நடக்கப் போகிறது! அப்படி தானே?” என்றவன்


“குணநாதனின் மகள் அனுதிஷிதா. ம்ம்ம்... அந்த ஆளின் மகள் நீ என்பதாலேயே உன்னை நான் விட மாட்டேன். Well… i am eagerly waiting for the war...” என்ற சொல்லுடன் தன் கையில் உள்ள பேனாவால் அனுவின் முகத்தில் வட்டமிட்டான் மிருடவாமனன்.
 
Last edited:
இது எல்லாம் anniyaayam naa எல்லன் daily padichitu comment panren..... Appo ஜீவா அவன் பையன் la அந்த மனநிலை மருத்துவ மனை la irukaravanga loda பையன் right..... ஜீவா romba romba payanthutaan...... சாமுவேல் அவரு வெளிநாட்ல போய் செட்டில் aagarathu naala avarodaya thottam ah avanuku கொடுக்க poraaru அவரு பக்கத்து thottathula தான் அணு odayathuyum so ava kita இருந்தும் அந்த இடத்தை ava பொண்ணு ah vechi miratti வாங்க poraan... Paakalam enna aaga pooguthunu... Super Super maa... Semma semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இது எல்லாம் anniyaayam naa எல்லன் daily padichitu comment panren..... Appo ஜீவா அவன் பையன் la அந்த மனநிலை மருத்துவ மனை la irukaravanga loda பையன் right..... ஜீவா romba romba payanthutaan...... சாமுவேல் அவரு வெளிநாட்ல போய் செட்டில் aagarathu naala avarodaya thottam ah avanuku கொடுக்க poraaru அவரு பக்கத்து thottathula தான் அணு odayathuyum so ava kita இருந்தும் அந்த இடத்தை ava பொண்ணு ah vechi miratti வாங்க poraan... Paakalam enna aaga pooguthunu... Super Super maa... Semma semma episode
ஹா... ஹா... :love::love::love::love:சித்து ம்மா... heart beatheart beatheart beatheart beatu always support me... kiss heartkiss heartkiss heartkiss heartநன்றிங்க சித்து ம்மா smilie 15smilie 15smilie 15smilie 15
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN