என் நெஞ்சுநேர்பவளே -15

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ENN-15

அதீத கோபத்தின் இடையினில் சிறிதான ஒரு ஆசுவாச தோன்றல் இல்லாமல் இல்லை.. அதை கண்டுகொள்ளாமல் பெருவாரியான உணர்வின் அடிப்படையில் இப்பொழுது ஆரதியின் மனதில் நிரம்பியிருப்பது முழுக்க முழுக்க ஆதிரன் மீதான கோவம் மட்டுமே...

திருமணம் முடிந்து இரு மணமக்களின் வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.. சுரபி விதுரன் ஜோடி பெரு மகிழ்வாய் நின்று கொண்டிருக்க அருகில் இருந்த மேடையில் நின்றிருந்த ஆரதி ஆதிரன் முகத்தில் வலுக்கட்டாயமாய் பிடித்து வைத்திருந்த புன்னகை முகத்தினில் ஒட்டிக் கிடந்தது..

ஆரதிக்கு எப்பொழுது எல்லாம் முடியும் என்றிருந்தது... இழுத்து வைத்த புன்னகை இப்பவோ அப்பவோ என்று விடைபெற முயல ரஞ்சி அவள் அருகில் வந்தாள்..

"ரதி மூஞ்சிய கொஞ்சம் சிரிச்ச மாதிரி வையிடி.. கீழிருந்து பார்க்க சகிக்கல.."

"இருக்குற கடுப்புல யார் மேல பாஞ்சு குதறலாம்னு இருக்கேன்.. வாண்ட்டடா வந்து சிக்காத ரஞ்சி.."

"அதை மொத்தமா சேர்த்து வையிடி.. என்கிட்ட ஏன் வேஸ்ட் பண்ற.. இன்னும் கொஞ்ச நேரம் சிரிச்ச மாதிரி இருந்தா சாப்பிடும் போது எக்ஸ்ட்ரா கேசரி வைக்க சொல்றேன்டி.."

"கொன்னுடுவேன் எரும..மரியாதையா ஓடிப்போ.."என்று விரட்ட, இதற்கு மேல் இருந்தாள் சட்னி ஆக்கி விடுவாள் என்றுணர்ந்த ரஞ்சி மேடையை விட்டு இறங்கப் போனாள்..

"ரஞ்சி..."என ரதி அழைக்கவும்,

"எதுக்குடி விரட்டிட்டு மீண்டும் கூப்புடுற.."என்றவாறே அருகில் வந்தாள் ரஞ்சி..

"யோசிச்சு பார்த்தா நீ சொன்ன டீல் எனக்கும் ஓகே தான்.."என்று ரதி சொல்ல,

"இது தான் ரதிங்கறது.. நம்மள பார்த்து மத்தவங்க தான் டென்ஷன் ஆகணும்.. நாம ஆக கூடாதுடி.."

"சரியா சொன்னடி என் செல்லக்குட்டி.."

"சரி சரி எல்லாரும் நம்மள கவனிக்குறாங்க.. நான் கீழ போறேன்.."என்று விட்டு கீழே சென்று விட்டாள் ரஞ்சி..

அருகில் இருந்த ஆதி இவர்கள் பேசிய ரகசியம் அறிய ஆர்வம் மேலிட்டதில், "ரெண்டு பேரும் அப்படி என்ன ரகசியம் பேசுனீங்க.."என்று தலை சாய்த்து கேட்க,

"ஹ்ம்ம்ம் சாப்பாட்டுல எத்தனை பேதி மாத்திரை கலக்கலாம்னு பிளான் பண்ணோம்.."என்று சொல்ல ஆதி 'அய்யயோ...'என்று மனதில் அலறினான்.. வயிற்றில் புளியைக் கரைத்தது.. கீழே இருந்த கார்த்தியை மேடைக்கு வர சொன்னான்..

"என்னடா.. ஏன் மூஞ்சி பேயடிச்ச மாதிரி இருக்கு.."

"அடேய் என் சாப்பாட்டுல பேதி மாத்திரை கலக்க பிளான் பண்றாள்கடா.. எதுக்கும் உன் ஆளு மேல கண்ணு வையி.. எதாவது மிஸ் ஆச்சு உன்னை பொறிச்சி ரஞ்சிக்கு ஸ்னாக்சா குடுத்துருவேன்.."

"எல்லாம் கொலைகார கூட்டம்டா சாமி.. உங்க கூட இருக்கறதுக்கு பேசாம கைலாஸாவுக்கு விசா வாங்கிட்டு செட்டில் ஆகிரலாம் போல.."

"அப்பிடியே போய் ஞானி ஆகிருவ.. போய் சொன்னதை செய்டா எரும .."என்று விரட்டி விட்டான்..

"போய் தொலையுறேன்.. வேதாளத்துக்கு வாக்கப்பட்டா தலைகீழா தொங்கித் தான ஆகணும் "என்று புலம்பிக் கொண்டே கீழிறங்கி சென்றான்..

இருவரும் இருவேறு மனநிலையில் வரவேற்பில் நின்று கொண்டிருக்க, மணமக்கள் நால்வரையும் சாப்பிட அழைத்துச் சென்றனர்.. இரு ஜோடிகளையும் அமர வைத்து பரிமாற ஆரம்பித்தனர்..

ஆதி அருகில் இருந்த கார்த்தியிடம்,"என்னடா சாப்பாட்டுல எதையும் கலக்கல தானே..?"என்று ரகசியமாய் கேட்க,

"அதெல்லாம் இல்லடா.. சும்மா உன்னை பதற வைக்க அப்பிடி சொல்லிருக்கு.. தைரியமா சாப்பிடு.."என்கவும் தான் நிம்மதியாயிற்று ஆதிக்கு..

ஆரதியோ 'ஹப்பாடா இப்பவாச்சும் சாப்பிட விட்டாங்களே..'என்று மனதில் நினைத்தவாறு தன் இலையில் சற்று அதிகமாகவே இருந்த கேசரியை எடுத்து வாயில் வைக்க போக,

"மேடம் வெயிட்.. ரெண்டு பேரும் ஊட்டி விட்டுக்குங்க.. போட்டோ எடுக்கலாம்.."என்று புகைப்படம் எடுப்பவர் சொல்லவும் அருகில் இருந்த ஆதிக்கு புரை ஏறியது,,

"இவன் ஏன்டா வில்லங்கத்தை வம்படியா எனக்கு பார்சல் பண்றான்.."என்று கார்த்தியிடம் பாவமாய் முணுமுணுத்தான்..

"எல்லாரும் இருக்காங்கடா.. தங்கச்சி ஒன்னும் செய்யாது.. தைரியமா சாப்புடு.. இன்னைக்கு இந்த சம்பவமாச்சும் உனக்கு உருப்படியா நடக்கட்டும் மச்சி என்ஜோய்..."என்று சொல்ல இவனும் அவள் கைபட்ட கேசரிக்காக வாயை தயார் செய்தான்..

ஆரதி பெரும் புகைச்சலில் இருந்தாள்.. அவள் டீல் போட்டு வாங்கிய கேசரியை இவன் வாயில் திணிக்க சொன்னால் புகையாமல் என்ன செய்யும்..

'அடேய் தகர டப்பா என் கேசரில ஏன்டா பிரச்சனை பண்ற.'என்று புகைப்படம் எடுப்பவனை முறைத்துக் கொண்டே, மனதில் நினைக்க, இவள் மனசாட்சியோ,

'அப்போ உனக்கு கேசரி போச்சேன்னு தான் பிரச்சனை.. ஆதிக்கு ஊட்ட சொன்னதுல இல்லை..'என்று தலையில் தட்டி கேட்க,

'ஆமா அதுவேற இருக்குல்ல..ம்ம்ம் முதல்ல இந்த பனைமரத்துக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் குடுக்கணுமே ' என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தாள்.. மற்றோரு ஜோடியோ காதல் மொத்தத்தையும் உணவின் வழி பரிமாறிக் கொண்டதை கிளிக்கிவிட்டு வந்த போட்டோக்காரன் ஆதியை ஊட்டச் சொல்ல, அவன் ரதியின் வாயருகே கேசரியை கொண்டு வந்தான்..

யோசனையில் இருந்த ரதியின் முன் கேசரி நீட்டப்பட, ரதிக்குத் தான் சாப்பாட்டின் முன் எதுவுமே தெரியாதே.. அதனால் சந்தோசமாகவே அவன் ஊட்டிய கேசரியை ஸ்வாகா செய்ய,

ரஞ்சி அடப்பாவி போஸில் இருந்தாள்..
பெரும் கலகத்தை எதிர்பார்த்த கார்த்திக்கு கூட அவள் புரியாத புதிராய் இருந்தாள்..

ஆதிதான் முழுதாய் பேச்சின்றி உறைந்திருந்தான்.. அவன் மேல் இருக்கும் கோவத்தில் மறுப்பாள் இல்லையேல் முறைத்துக் கொண்டே சாப்பிட்டது போல் பாவ்லா செய்வாள் என்றிருக்க,

ரசனையாய் அவன் விரல்களோடு சேர்த்து நாவிதழ் இரண்டும் அவன் கைகளில் மென்மையாய் பதிந்திட புன்னகை முகமாய் அவள் சுவைத்ததை கண்டு உடலும் உள்ளமும் நெகிழ்ந்து உணர்வுக் குவியலின் சங்கமமாய் ஆகியது..

செவ்விதழ்கள் தீண்டிய வேளைகளில் விரல் நுனிகளில் மோகங்களின் மொத்த பதங்களும் குவிந்து கிடந்தது..ஆனால் அந்த பாதிப்பை தந்தவளோ கேசரியின் சுவையில் மட்டுமே மயங்கியிருந்தாள்..

அடுத்து இவளை ஊட்ட சொல்லும் போது அந்த மயக்கம் தெளிந்து முகம் மீண்டும் புகைய ஆரம்பித்தது.. என்ன செய்வது என்று யோசித்தவள் இலையில் இருந்த கூட்டில் ஓரமாய் கிடந்தத பச்சை மிளகாயை பார்த்தவள் அதை நைசாக எடுத்து கேசரியில் ஒளித்து அவன் வாய்க்குள் ஊட்டுகிறேன் பேர்வழி என்று முழுதாய் திணித்து விட்டாள்..

அவள் திணித்ததை ஆசையாய் சுவைக்க ஆரம்பித்தவன் இடையில் சிக்கிய பச்சைமிளகாயை ஏதோ திராச்சை போல என்று நினைத்து கடித்து சுவைக்கும் போதுதான் புரிந்தது கேசரிக்குள் ஒளிந்து வாயில் வந்து புகுந்து கொண்டது சூனியம் என்று..

அந்த மிளகாய் வேறு அநியாயத்துக்கு காரமாய் இருந்து தொலைய அவசர அவசரமாய் விழுங்கி விட்டு அருகில் இருந்த நீரை மடமடவென உள்ளே சரித்தான்..

"என்னடா கேசரி சாப்பிட்டு பச்சை மிளகாயை கடிச்சவன் மாதிரி தண்ணி குடுக்குற.."என்று கார்த்தி கிண்டல் செய்ய,

"மாதிரி இல்லடா பச்சை மிளகாயே தான்.. "என்று சொல்ல கார்த்திக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.. சிரித்தால் தன் தலை சிதறு தேங்காய் என்று உணர்ந்தவன் வந்த சிரிப்பை விழுங்கிவிட்டு இலையை காலி செய்ய ஆரம்பித்தான்..

மிளகாய் கடித்ததில் மோகப் பதம் எல்லாம் தெறித்து ஓடிவிட எப்படி சமாளிக்க போறோம் என்று பயந்து வந்தது அவனுக்கு..

அப்படியும் இப்படியும் என ஒருவழியாய் மண்டபத்தை காலி செய்து ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தது இரு ஜோடியும்.. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து ஆதியின் வீட்டில் இருந்து கிளம்ப தயாராகினர் திருவும் மீனாவும் ரஞ்சி குடும்பத்தினரும்..

அதுவரை ஆதியின் மீதான கோபத்தில் மட்டுமே கவனமாய் இருந்தவள் முதன்முறையாய் தன் குடும்பத்தினரின் பிரிவை எண்ணி கலங்கினாள்..அழுது கொண்டிருந்த சுபியை அனைவரும் சமாதானம் செய்ய ரதி கண்கள் கலங்க அருகில் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவள் பின்னாடியே வந்த ரஞ்சி அறைக்குள் உடல் குலுங்க அழுது கொண்டிருந்த ரதியை கண்டு பதறி அவள் அருகில் வந்தாள்..

"ரதி.."என்று அவள் தோளில் கை வைக்க பாய்ந்து அணைத்துக் கொண்டாள்..சிறு தேம்பலாய் வெளி வந்த ஆராதியின் அழுகையில் தானும் உடைந்து போனாள்..

பிறகு சிறிது நேரம் கழித்து சுதாரித்த ரஞ்சி ரதியை ஆறுதல் படுத்தினாள்..

"என்னடா இது.. இப்படி அழுமூஞ்சி ரதிமாவை பார்க்கவே நல்லாவே இல்ல.."

"ஹ்ம்ம் நான் ஒன்னும் அழுகலை.."என்று கண்ணை துடைத்துக் கொண்டாள்.. அப்போது உள்ளே வந்தனர் திருவும் மீனாவும்...

அவர்களை கண்டதும் கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க இருவரையும் கட்டிக்கொண்டு அழுதவளை சமாதானம் செய்தனர் திருவும் மீனாவும்..

ஒரே நேரத்தில் இரு பிள்ளைகளையும் பிரிவது அவர்களுக்கும் சாதாரண விஷயம் அல்ல.. ஆனால் இங்கு இவர்கள் உடைந்தால் அது சுபி ரதியை மேலும் பலவீனமாக்கும் என்றே தங்களை கட்டுப்படுத்தி சிறியவர்களை சமாதானம் செய்தனர்..

அவர்களை சமாதானம் செய்து விட்டு அனைவரும் கிளம்ப ஆயத்தம் ஆகினர்.. அறையை விட்டு வெளியே வந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்ப,மீண்டும் அழத் தயாராகிய சுபியை விதுரன் வந்தணைத்து சமாதானம் செய்தான்..

ஆரதி கண்களை அழுந்த மூடித் திறந்து அழுகையை அடக்க அவள் அருகில் வந்த ஆதி அவள் கைகளை இணைத்துக் கொள்ள யாரும் பார்க்கா வண்ணம் சட்டென உதறியவள் தீயாய் அவனை சுட்டாள் விழிகளால்..

இந்நிலையிலும் விலக்கி நிறுத்துபவளை எங்கனம் சமாளிப்பது என்ற ஆயாசம் வந்தமர்ந்தாலும் அவனின் காதலின் மேல் நம்பிக்கை கொண்டான்.. இதற்குள் ஆரதியின் வீட்டினரும் ரஞ்சி வீட்டினரும் விடை பெற்று சென்று விட இரு மருமகள்களையும் இரவு சடங்கிற்கென தயார் படுத்தினார் ஆதி விதுவின் அன்னை அமுதா..

அமுதா அறிவழகன் தம்பதியருக்கு இரு மகன்கள் ஒரு மகள்.. அறிவழகன் மூன்று நட்சத்திர உணவு விடுதி ஒன்றை நடத்திட மூத்தவன் விதுரன் அவரை பின்பற்றி இன்னொரு உணவு விடுதியும் ரிசார்ட் ஒன்றையும் நடத்தி வந்தான்..

இரண்டாமவன் ஆதிரன் ஈரோட்டில் இரண்டு வருடங்களாக ஆராதனையை நடத்தி வருகின்றான்.. வீட்டின் கடைக்குட்டி கவிநிலா பிஇ முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.. குடும்பம் முழுதும் சென்னையில் இருக்க ஆதிரன் மட்டும் இரண்டு வருடமாக இங்கு தனியாக தான் இருந்து வருகிறான்..

இவர்களின் குடும்ப விவரம் கூட முழுதாய் ஏதும் அறியாமல் கீ குடுத்த பொம்மையை போல் அவர்கள் இழுத்த இழுப்பில் சென்று கொண்டிருந்தாள்... கவியின் கிண்டல்களைக் கூட ரசித்தாள் இல்லை.. அமுதாவின் அன்பான கவனிப்பையும் உணர்ந்தாள் இல்லை..

மனம் முழுதும் வெறுமையின் வாசமாய் போன்றொதொரு உணர்வில் இருந்த ஆரதியை அழைத்து சென்று ஆதியின் அறையில் விட்டு விட்டு சென்று விட்டார் அமுதா..

அறைக்குள் நுழைந்த ரதி சுற்றும் முற்றும் பார்க்க அதுவோ அவளைப் போலவே வெறுமையாய் இருந்தது..அப்பொழுது சட்டென தன் முதுகு பரப்பில் வெம்மையை உணர்ந்தவள் சுதாரித்து விலகுவதற்குள் அவளின் இடையில் கோர்த்து பின்னிருந்து அணைத்திருந்தான் ஆதி...

மல்லிகை தவழ்ந்த வெற்று தோள் பரப்பில் தன் தாடையை பதித்தவன் அவள் காதுகளில் மூச்சுக் காற்றின் வெம்மை பரவ,

"ஐ லவ் யூ ஆரு....."என்று சொல்லி முடிக்க, கிறங்கி போக வேண்டிய அவன் ஆருவோ இறுக்கிய கை விலக்கி அவன் புறம் திரும்பியவள் அவன் காது மடல் அதிர அறைந்திட்டாள் அவன் கன்னத்தில்..

அவளின் இந்த பதிலை முன்னமே எதிர்பார்த்தவன் போலொரு முக பாவத்தில் அவள் கை பிடித்து,

"சாரிடா ஆரு..."என்று இறைஞ்ச அந்த இரக்கமில்லாதவளோ இரு கன்னங்களிலும் விளாசி தள்ளிவிட்டாள்..

அவளின் கை ஓயுமளவு கன்னங்களை பழுக்க வைத்தவள், ஒரு விரல் நீட்டி எச்சரிக்கையை முறைப்பாய் வெளியிட்டுவிட்டு, மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்..

ஐந்து நிமிடத்தில் நைட் பேண்ட் சர்ட்டுடன் வெளியே வந்தவள் ஜம்பமாய் நடு மெத்தையில் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி படுத்து வவிட்டாள்..

அவள் அடித்த இடத்திலேயே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்த ஆதி ஒரு பெரு மூச்சுடன் சோபாவில் சென்று அமர்ந்து விட்டான்..ஆரதி இவ்வளவு நாளாக பட்ட மன உளைச்சலிலும் இன்றைய அலைச்சலிலும் மனதின் மூளையில் ஒட்டிக்கிடந்த நிம்மதியிலும் சட்டென உறக்கத்தை தழுவிக் கொண்டாள்..

ஆதி தன் கைபேசியை எடுத்து கார்த்திக்கு அழைக்க அதுவோ பிஸி என்றது...மீண்டும் மீண்டும் அவன் அழைக்க கடுப்பாகி போய் ரஞ்சியிடம் பத்து நிமிடம் கடன் வாங்கி ஆதியின் அழைப்பை ஏற்ற கார்த்தி..

"எங்கடா மொட்ட மாடியா..? நடு ரோடா...?"என்று கேட்டான் கிண்டலாய்..

"அவ்ளோ மோசம் இல்லடா.. இப்போதைக்கு சோபா தான்..."

"அடி கொஞ்சம் பலமோ.."

"அதெல்லாம்.. ரெண்டு கன்னமும் பிஞ்சு போச்சு.."

"அதுக்கு தான் முன்னாடியே சொன்னேன்.. அந்த புள்ள உள்ள வரும்போது நீ பால்கனி வழியா குதிச்சு தப்பிச்சுருன்னு.. கேட்டியா.. "

"எதுக்கு கீழ விழுந்து சாகவா.."

"உள்ள இருந்தாலும் எப்படியும் ஒரு நாள் டெத் கான்போர்ம் தான.."

"பரவாயில்ல டா.. செத்தாலும் என் ஆரு கையால தான் சாவேன்.."

"அப்போ சரி இப்பவே குழி வெட்டி ரெடியா வச்சுக்கலாம்.."

"அப்பிடியே பக்கத்துல உனக்கும் சேர்த்து வெட்டி வச்சுக்கோ மச்சி.."

"இப்படி உன் கூட பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தா என் ரஞ்சி செல்லம் எனக்கு சீக்கிரம் பாடைய ரெடி பண்ணிரும்.. நீ அந்த புள்ள கைல கைமா ஆகு இல்ல கஞ்சி சோறு ஆகு.. இப்போதைக்கு ஆள விடு "என்று போனை வைத்து விட்டான் கார்த்தி..

"எரும கடல போட ஓடிருச்சு.. "என்று திட்டிக் கொண்டே போனை சோபா மீது போட்டவன் பார்வை மீண்டும் ரதியை தோட்டது..

என்னதான் மெத்தையின் நடுவில் படுத்திருந்தாலும் இரு பக்கமும் இன்னொருவர் படுக்க இடம் இருக்கவே நைசாக அருகில் சென்று மெத்தையில் ஏறி படுத்துவிட்டான் ஆதி..

சூடியிருந்த மல்லிகையின் அளப்பரிய வாசம் போர்வையையும் தாண்டி இவன் மூச்சை அடைய இழுத்து வாசம் பிடித்தான் மலரோடு சேர்ந்த அவன் மனையாளின் வாசத்தை.. அது தந்த இதத்திலும் நிம்மதியிலும் கண் மூடி உறங்க முற்பட்டான்..

நடு இரவில் தன் மார்பில் சட்டென பதிந்த வெம்மையில் விழிப்பு வர கண் திறந்தவன் விழிகள் துள்ளி வெளியே விழாதது ஒன்று தான் மிச்சம்.. பின்னே கன்னம் சிவக்க அறைந்தவளின் கன்னமோ இவன் மார்பில் இடம் பெயர்ந்திருந்தது.. அறைந்த கைகளோ இவன் இடையை அணைத்திருந்தது.. அவள் கால்களோ இவன் கால்களை தலையணையாக்கி இருந்தது..

அவளின் நெருக்கத்தில் மனம் குழைந்தாலும் குழந்தையாய் தன்னை அணைத்திருந்தவளின் நிலையை ரசித்தான்.. குனிந்து அவள் உச்சியில் முத்தமிட்டவன் இடது கையை அவள் தலையில் வைத்து வலது கையை அவள் முதுகோடு அணைத்து உறக்கம் கொண்டான்..

உறக்கத்தில் கிடைக்கும்
அணைப்பும்
முத்தமும்
காமத்தில் சேர்த்தியில்லை..
மலரை சூடிடும் சுகத்தை விட
முகர்ந்திடும் இன்பம்
என்றும் அலாதிதானே...


ரொம்ப ரொம்ப சாரி பிரண்ட்ஸ்..🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ ரொம்ப நாள் காக்க வச்சுட்டேன்.. இனி சின்ன எபியா இருந்தாலும் சீக்கிரம் போட்டுடறேன்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN