முகவரி 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அதன் பின் நாட்கள் விரைய... ஒரு நாள் அனு தன் மகளுடன் பிரதோஷம் அன்று கோவில் சென்றிருந்தால்… கொஞ்சம் கூட்டம் என்பதால் இவளும், மகளும் சாமி தரிசனம் முடித்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த நேரம் அழுது கொண்டே ஒரு பிஞ்சுக் கரம் “அனும்மா” என்று அனுவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளவும்... அதில் திடுக்கிட்டு இவள் யார் தன்னை கட்டி கொண்டவர் என்று பார்க்க... அழுது அழுது முகம் எல்லாம் சோர்ந்து போய் அவளின் தோளில் சாய்ந்தான் அந்த பிஞ்சு கைக்கு சொந்தகாரனான ஜீவா.

ஆமாம்… அது சாட்சாத் மிருடவாமனின் மகன் ஜீவாவே தான்! இதுவரை அனு, மிருடனை சந்திக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் அவன் மகன் ஜீவா மட்டும் அடிக்கடி அனு வீட்டிற்கு மான்வியுடன் விளையாட சென்று அவனே வந்து விடுவான். இல்லை என்றால் அவன் அழும் குரல் கேட்டதும் பார்வதி போய் தூக்கிக் கொண்டு போய் விடுவார்.

அனு வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்பதால், மான்வி விளையாடவும் பார்வதிக்கு பொழுது போகவும் ஜீவா தங்கள் வீட்டுக்கு வருவதை இவள் தடுக்கவில்லை. அதுவும் இல்லாமல் ஜீவா குழந்தை தானே! அதனால் தானும் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஜீவாவையும் பார்த்துக் கொள்வாள் அனு.

அதன் விளைவு தான் இன்று கோவிலில் அவளைப் கண்டதும் அனும்மா என்று அவளைக் கட்டிக் கொண்டான் அவன். என்ன… அவன் அழுது கொண்டிருப்பது தான் இவளுக்குள் நெருட, “என்ன டா ஜீவா குட்டி, அழுதீயா யார் கூட கோவில் வந்த? எதுக்கு இப்போ அழற?” இவள் அடுத்தடுத்து விசாரிக்க, அவனோ உதடு பிதுக்கி இன்னும் அழவும். அதில் கலவரமானவள், “டேய் எங்கேயாவது விழுந்திட்டியா… காலை காட்டு… என்ன டா செய்து உனக்கு?” இவள் மறுபடியும் விசாரிக்க

அவனோ இப்போது, “டாடி... அத்த... ஸ்ரீ அக்கா....” என்று ராகம் போட்டு பெரும் குரல் எடுத்து அழவும், இவளுக்குப் புரிந்தது போனது... கோவிலுக்கு என்று வந்த இடத்தில் ஜீவாவை அவன் குடும்பத்தார் தொலைத்து விட்டார்கள் என்று. அதாவது இவன் அவர்களை விட்டு பிரிந்து விட்டான் என்று.

உள்ளுக்குள் படபடப்பு எழவும், “டேய்... உன் அப்பாவை விட்டுட்டு வந்துட்டியா? எங்கே இருக்கிறாங்க சொல்லு… நான் அங்கேயே கூட்டிட்டுப போறேன்” அனு கேட்க… அவனோ அழுகையை நிறுத்தினபாடுயில்லை,

“ஜீவா, அப்பாவை காணோமா? எங்க சொல்லு… நாமே அங்கே போகலாம்” தாய் கேட்டதையே தற்போது மான்வி பெரிய மனுஷியாய் மாறி அவனை சமாதானப் படுத்த... கேட்க அதற்கும் அவனிடம் பதில் இல்லை…. அனுவுக்கோ மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாத நிலை. அங்கு இன்னும் கூட்டம் அதிகமாய் கூடவும்... இவள் சுற்றும் முற்றும் ஜீவாவின் குடும்பத்தார்களை தேடியவள், அப்படி இவனைத் தேடி யாரும் அங்கு வரவில்லை என்றதும், ஜீவாவின் அழுகை அதிகமாவதைப் பார்த்தவள் வேறு வழியில்லாமல் அவனைத் தங்களுடனே தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல நினைத்தவள்...

எதற்கும் இருக்கட்டும் என்று இவள் கோவில் நிர்வாக அறைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் ஜீவா என்ற பெயரில் இந்த வயதில் இந்த நிற ஆடையில் இப்படியான ஒரு தெருவில் வசிக்கும் ஐந்து வயது பையன் இங்கிருப்பதாகச் சொல்லி… அவனைத் தேடும் குடும்பத்தார் இங்கு வந்து ஜீவாவை அழைத்துச் செல்லலாம் என்ற முறையில் இவள் மைக்கில் சொல்ல சொல்ல... அதன் படியே கோவில் ஊழியர்கள் செய்ய... அடுத்த நொடி ஒரு வித படபடப்புடன் அங்கு வந்து சேர்ந்தாள் வெண்பா.

அத்தையைப் பார்த்ததும் அதுவரை அனுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த ஜீவா, “அத்த...” என்று வெண்பாவிடம் தாவ…

“என் தங்கம், எங்க டா அத்தையை விட்டுப் போன... ரொம்ப பயந்திட்டியா தங்கம்?” என்று வெண்பா ஜீவாவை சமாதானப் படுத்தியவள்

“ரொம்ப தேங்க்ஸ் ங்க... நீங்க யாரோ... ஆனா சாமி மாதிரி வந்து எங்க வீட்டுப் பிள்ளையை மீட்டுக் கொடுத்திருக்கீங்க...” வெண்பா நெகிழ்ச்சியுடன் சொல்லவும்

அனு, “ஜீவாவை எனக்குத் தெரியுங்க... என் வீட்டுப் பக்கத்தில் தான் இவன் வீடு இருக்கு... நீங்க வரலனா அவனை என் வீட்டுக்கு அழைச்சிட்டுப்போயிடலாம்னு தான் இருந்தேன். ஒன்னும் பயப்படாதீங்க, அதான் குழந்தை கிடைச்சிட்டானே...”

“என்னமோ போங்க... ஏதாவது நடந்திருந்தா இவன் அப்பனுக்கு என்னால பதில் சொல்ல முடியாதுங்க. மகன் மேலே உயிரே வைத்திருக்கான் என் தம்பி. உங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கிற வீட்டை வாங்கியிருக்கான் அந்த வீட்டிற்கு தான் பால் காய்ச்சனும் வா அக்கானு கூப்பிட்டான்... அதான் வந்தேன். சரி இன்னைக்கு பிரதோஷமாச்சேனு பசங்களோட கோவிலுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்திலே என்னை கதிகலங்க வைச்சிட்டாங்க இந்த போக்கிரி” வெண்பா அனுவிடம் இயல்பாய் பேச

அனு, “குழந்தைங்கனா அப்படி தாங்க... இதே மாதிரி இரண்டு முறை மான்வியும் இப்படி தான் தொலைந்து போயிருக்கா... அதிலிருந்து நான் எங்கே போனாலும் அவள் கையை விடறது இல்லை”

“இவ உங்க மகளா? ஹாய் மானு பேபி!” என்று மான்வியைக் கொஞ்சிய வெண்பா, “நான் நேற்று தான் ஊரிலிருந்து வந்தேன், அதான் உங்களை எனக்கு தெரியல. வாங்களேன், நானும் வீட்டுக்கு தான் போகிறேன்… என் மற்ற பிள்ளைகள் எல்லாம் காரில் இருக்காங்க. நம்ம காரிலேயே போயிடலாமே” இவள் அனுவை அழைக்க

“இல்லைங்க… நான் வண்டியில் வந்தேன். அதனாலே நான போய்டுவன்… கிளம்பறங்க... ஜீவா பயந்துட்டான் பாருங்க... நீங்க கிளம்புங்க”

“சரி.. ஆனா ஒரு நாள் வீட்டுக்கு வரணும். எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கீங்க!” என்ற வெண்பாவுடனே அனுவும் வெளியே வர... அங்கு அவள் வண்டியோ பஞ்சராகி இருந்தது. அதைப் பார்த்த வெண்பா, “அச்சச்சோ! வண்டி பஞ்சர் ஆகி இருக்கு போல? சரி, என் காட்ஸ் யாரயாவது விட்டு ரிப்பேர் செய்து உங்க வண்டியை எடுத்து வரச் சொல்கிறேன். நீங்க இப்போ என் கூடவே காரில் வாங்க” வெண்பா மிக இயல்பாய் அழைத்தாலும் வற்புறுத்தி அழைக்க... பக்கத்து பக்கத்து வீடு என்பதால்… வண்டியும் இப்படி சொதப்பி விட… மறுக்க முடியாமல்.. அழைப்பை ஏற்று அனுவும் அவளுடன் கிளம்ப... இவர்கள் இருவரும் வீடு வந்து சேர்வதற்குள் அனு, வெண்பாவை அக்கா என்றும்.... வெண்பா, அனுவை அனும்மா என்றும் அழைக்கப் பழகி இருந்தார்கள்.

அதாவது, அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் நட்பால் நெருங்கி இருந்தார்கள். இவர்கள் நட்பு அதன் பிறகு வந்த நாளிலும் தொடர்ந்தது என்னமோ உண்மை தான். அதன் பிறகு வந்த நாட்களில் மிருடன் பால் காய்ச்சும் வைபவத்திற்கு முந்தின இரண்டு தினமுமே அனுவுக்கு வேலைகள் நெட்டித் தள்ளியது. அதிலும் மிருடன் பால் காய்ச்சும் தினத்திற்கு முந்தின தினம் இவளிடம் ஒரு பெரிய பொறுப்பை விட்டுச் சென்றார் இவள் எப்போதும் சென்று வரும் ஹோமை நிர்வகிக்கும் மதர்.

இம்முறை ஒரு தனியார் நிறுவனம் சிறுவர்களுக்கான பூங்காவை ஓர் இடத்தில் அமைக்க இருக்க... அங்கு நட இருக்கும் செடிகளுக்கான முழுப்பொறுப்பும் அனுவிடம் வந்து சேரவும்... எப்போதும் அவளுடன் செல்லும் முனீஸ்வரனுக்கு கூட இன்று ஓய்வு கொடுத்து விட்டுத் தான் மட்டுமே கிளம்பிச் சென்றாள் அனு.

அப்படி வேலை என்று வந்தவளுக்கு இன்றைய தினம் அவளுக்கான வேலைகள் முடியாமல் நீள... வீட்டிற்கும் சென்று விட்டுத் திரும்ப வருவதற்கான கால நேரம் அதிகம் என்பதால்... இவள் வேறு வழியில்லாமல் மதர் நடத்தும் ஹோமிலேயே தங்கிக் கொண்டாள். அனு, பிறந்ததிலிருந்து வீட்டைத் தவிர வெளி இடத்தில் எங்கும் தங்கியது இல்லையா என்று கேட்டால்... அது தான் இல்லை.

ஆனால் மகள் பிறந்த பிறகு இன்று தான் மகளை விட்டு இவள் மட்டும் தனியாக வெளியே தங்குகிறாள். அதனால் தானோ என்னவோ மகளிடம் அன்று இரவு பேசும் போது அழுகை முட்டியது அந்த தாய்க்கு. மகள் தன்னைத் தேடினாலும் அழவில்லை என்ற சமாதனம் ஒரு புறம் இருந்தாலும்... அதை எல்லாம் தவிர்த்தவளுக்கு மகளைப் பிரிந்ததே அவள் மனதில் பாரத்தை ஏற்றியது என்றே சொல்ல வேண்டும். என்னவென்று சொல்ல முடியாத அளவுக்கு அவள் மனதில் வலியும் வேதனையும் அவளை அழுத்ததான் செய்தது…

கூடவே, அவள் வாழ்வில் ஏதோ சரியில்லாத ஒன்று நடக்கப் போவது போலவும்.. மகளை அவளிடமிருந்து யாரோ பிரிக்க இருப்பதாக அவளுக்குத் தோன்றியதில்... அவளால் இரவு முழுக்க கண் மூடவே முடியாத நிலை. இவளை இங்கே இப்படி துடிக்க வைத்தவனோ அங்கு அவன் வீட்டு விழாவில் மகிழ்வாக இருந்தான்... அவன் தான் மிருடவாமணன்!

விழா அன்று மிருடன் வீடோ கோலாகலம் பூண்டது. தன் வயது பிள்ளைகளைக் கண்டதில்... மான்விக்கு அப்படி ஒரு சந்தோஷம்! அதிலும் வெண்பாவிடம் ‘அத்த’ என்று அவள் ஒட்டிக் கொண்டதில், “பாரு டா... என் கிட்ட வரீயான்னு முதல் நாள் சும்மா கேட்டதுக்கு... இவ உடனே அத்தைன்னு என் கிட்ட தாவிட்டா டா...” வெண்பா மிருடனிடம் சிலாகிக்க...

“நீங்க வருவீங்கனு எப்போதும் மனு கிட்ட சொல்வேன் க்கா. அப்போ எல்லாம் யார்… யார்னு… ரொம்ப கேள்வி கேட்பா. அதான், உங்க எல்லோருடைய போட்டோவையும் காட்டி.. குறிப்பா உன்னைய இவங்க உனக்கு அத்தைன்னு சொன்னேன்... அதான் உன் கிட்ட ஒட்டிகிட்டா” மிருடனின் பதிலில்

“ம்ம்ம்... யாரும் இல்லாம தனியே இருந்திருப்பா போல... அவ வயசுப் பிள்ளைங்களைப் பார்த்ததும் அப்படி ஒரு ஆட்டம்! மான்வி... பெயர் கூட அழகா இருக்கு டா மிருடா. பார்க்கவும் அவ்வளவு அழகு டா அந்த தேவதை. இன்றைக்கு எல்லாம் அவ பேச்சை கேட்டுட்டே இருக்கலாம் போல”

“ஹா... ஹா... என்னக்கா இப்படி அடுக்கிகிட்டே போற! அதிலும் பார்த்த முதல் நாளிலே.... விட்டா மான்வியை நம்ம கூடவே கூட்டிட்டுப் போகலாம்னு சொல்லிடுவ போல”

“ஸ்ரீ கூட இதைத் தான் டா சொல்றா. மான்வி அம்மா வர சம்மதித்தா… அவங்க இரண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்க வைத்து அனுப்பணும் என்று” வெண்பா தங்கள் ஆசையை சொல்ல…

“அக்கா.. அக்கா... மான்வியை வைத்து அவ அம்மாவை நினைக்காத. அவ அம்மா வேற மாதிரி. மான்வி அப்படியே அவ அப்பா மாதிரி...” இவன் சிரித்துக் கொண்டே சொல்ல

“ரொம்ப தெரிந்த மாதிரி சொல்ற... மான்வி யோட அம்மா அப்பாவை உனக்கு முன்பே தெரியுமாடா?”

வெண்பாவின் கேள்வியில் ஒரு நிமிடம் தடுமாறியவன், பின் “நான் ஒரு பிசினெஸ் மேன்... இந்த இடத்தை வாங்க இருக்கேனா. அப்ப அக்கம் பக்கம் இருக்கிறவங்களை பற்றி எதுவும் விசாரிக்காம இருப்பேனா?” என்று மிடுக்காக பதில் தந்தான் மிருடன்.

அன்று பிள்ளைகளைப் பார்வதியிடம் அவர்கள் வீட்டில் விட்டு விட்டுத் தான் வெண்பா வெளியே சென்றாள். இரவு மான்வி தன் தாயிடம் பேசி முடித்ததும்... மிருடன் அவளைத் தங்கள் வீட்டில் தங்க வைத்து கொள்வதாக அழைக்க… பார்வதி தயங்க, “விடு பாரு... அவங்க வீட்டிலும் பசங்க இருக்காங்க தானே? அப்புறம் அனும்மா வேற இங்கே இல்ல... அதனால் இரவில் எழுந்து பாப்பா அனும்மாவை தேடி அழப் போறா... அங்கேயாவது பசங்க கூட இருப்பா” கணவனின் பதிலில் சரி என்று மான்வியை மிருடனுடன் அனுப்பி வைத்தாள் பார்வதி. ஆனால் அனுவிடம் இதைச் சொல்லவில்லை. தாய் அல்லவா? அதான்... அவளுக்கு யாரும் சொல்லாமலே அவள் உள்ளுணர்வு அவள் மனதை ஏதோ செய்கிறது.

விழா அன்று காலையில் மற்ற பிள்ளைகளோடு பிள்ளையாய் மான்வி சிரித்த முகமாய் நிற்பதைப் பார்த்ததும் ஏதோ மனதிலிருந்த சிறு சுணக்கம் கூட பார்வதிக்குப் பிறகு இல்லாமல் போனது. வெண்பாவும் கஜேந்திரனும் தான் பூஜையில் அமர்ந்தார்கள். ஐயர் மந்திரம், மேல சத்தம், அதிக கூட்டம் இல்லை என்றாலும் ஒரு சில மனிதர்களின் நட மாட்டம் என்று விழா இடம் இருக்க... அதனால் மான்வி முதல் கொண்டு மற்ற பிள்ளைகளும் தூங்காமல் விழித்திருந்தனர்.

ஆனால் பூஜை முடிந்ததும் அதன் பிறகு... மிருடனின் மடியை விட்டு இறங்காமல் அவனின் மடியிலே துயில் கொண்டாள் மான்வி. அப்போது எல்லாம் ஜீவாவை வெண்பா தான் பார்த்துக் கொண்டார்.

இன்று முழுக்க மிருடன் வீட்டில் இருந்ததால்... அனு அழைக்கும் போது எல்லாம் மான்வியால் தாயிடம் பேச முடியாமல் போகவும் மனதால் அதிகம் நொந்தே போனாள் அனு.

மாலை இவள் வீட்டிற்கு வர... ஓடி வந்து தாயின் காலைக் கட்டிக் கொண்டாள் மான்வி. அதில் மகளின் உயரத்திற்கு தானும் மண்டியிட்டு அமர்ந்தவள், சொல்லொனாத மன வேதனையில் இவள் மகளைக் கட்டிக் கொண்டு அழவும்... அதே நேரம் உள்ளே வந்த வெண்பா,

“மானு அம்மா இதுவரை மானுவை பிரிந்தது இல்ல போல! அதான்.. அழறா... நானும் என் பசங்களை பிரிந்தா இப்படி தான். ஏன்... என் தம்பி கூட ஊருக்குப் போயிட்டு வந்தா இப்படி தான் ஜீவாவைக் கட்டிப்பான்” இயல்பாய் சொல்ல

இவளோ கண்களைத் துடைத்துக் கொண்டு வெண்பாவை சங்கடமாய் பார்க்க, “அட விடு அனு... இன்று முழுக்க மானு எங்க கூடத்தான் இருந்தா. சமர்த்துப் பொண்ணு... ஆனா பாரு பசங்க எங்க கூட எல்லாம் இருக்கவோ அவளுக்கு உன் ஏக்கமே இல்லை அவள் முகத்தை நீயே பாரு...” என்று வெண்பா எடுத்துக் கொடுக்க

இவள் மகளைப் பார்க்க... அதை அமோதிப்பது போல் மான்வி முகத்தில் அத்தனை வித மலர்ச்சி. ‘நாம் தான் யாரும் இல்லாமல் தனியா இருக்கோம். மகளையும் அப்படி வளர்த்தது தப்போ?’ என்ற கேள்வி முதல் முறை அனுவின் மனதில் உதயமானது.

“ஊருக்கு கிளம்பறோம் அனு... நாளைக்குப் பசங்களுக்கு ஸ்கூல். அதான் உன்னைப் பார்த்து சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். நீ இன்றைக்கு விழாவில் இல்லை என்றது தான் குறை. மத்தபடி இங்கு வந்து உன்னையும் மான்வியையும் சந்தித்தது வரை சந்தோஷம் தான்….ஒரு நாள் ஊருக்கு வா அனு” என்ற வெண்பாவிடம்

“மம்மி, மானுவையும் நம்ம கூட அழைச்சிட்டுப் போகலாமா?” மகள் ஸ்ரீ கேட்க

“போகலாமே.. ஆனா இப்போ இல்லை” என்று மகளுக்குப் பதில் தந்தவள், “சென்னையில் எங்க வீட்டிலே மாடித் தோட்டம் போடலாம்னு எனக்கு ஆசை அனு. நீ வந்து செய்து தர முடியுமா? அப்போ மானுவையும் அழைச்சிட்டு வந்தா… பசங்களும் சந்தோஷப் படுவாங்க. இதை நான் ரொம்ப நாளா சொல்லணும்னு நினைத்தேன். இப்போ ஸ்ரீ கேட்கவோ சொல்லிட்டேன்” வெண்பா இயல்பாய் அழைக்க

‘சென்னையா!’ அந்த பெயரிலேயே விதிர்விதிர்த்துப் போனாள் அனு.

“என்ன டா பார்த்த முதல் நாளிலிருந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கறாளேனு யோசிக்கிறீயா அனு? உண்மையை சொல்லணும்னா எங்களுக்கு உன் மக மான்வியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ எங்க வீட்டுக்கு வரணும். அதான்... இப்போ எங்க வீட்டில் மாடித் தோட்டம் போட நீ வந்தா அவளும் வருவா இல்ல?”

‘இவ்வளவு வெளிப்படையாய்... இல்லாத ஆசையை இருப்பதாகச் சொல்லி... தனக்காக ஒரு வேலையை உருவாக்கி தன்னையும் தன் மகளையும் அழைக்கிறார்கள் என்றால்... இவர்களுக்கு அந்தளவிற்கா என் மகளைப் பிடித்திருக்கு? இது எப்படி சாத்தியம்?’ விழிகள் விரிய அனு நிற்கவும்

“என்ன அனும்மா, வந்தவங்களை வாங்கனு கூப்பிடாம வரேனு சொல்லாம இப்படியே நிற்கிற?” டீ மற்றும் பலகாரத்துடன் அங்கு வந்த பார்வதி மொழியவும்

“சாரி க்கா.. ஊரிலிருந்து வந்த சோர்வில்... நீங்க திடீர்னு வந்து இவ்வளவு பேசவும்... கொஞ்சம் அப்படியே நின்னுட்டேன். வாங்க வந்து உட்காருங்க... இதோ ஃபிரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவள்

சொன்னபடியே அனு சிறிது நேரத்திற்கு எல்லாம் வெளியே வரவும், பிள்ளைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெண்பா, தன் பிள்ளைகள்... அவர்களின் படிப்பு.. கணவனின் வேலை என்று முன்பு விட்டதை எல்லாம் இப்போது சொல்ல…

அனுவும், அவளைப் பற்றி சிலதைச் சொல்ல... நேரம் யாருக்கும் காத்திருக்காமல் நகர்ந்தது. அனுவுக்கும் என்னவோ வெண்பாவை நிரம்பவே பிடித்திருந்தது.

அந்நேரம் வெண்பாவுக்கு அழைப்பு வர, “தம்பி தான்” என்ற குறிப்புடன் அழைப்பை எடுத்தவள் “சொல்லு டா” என்க...

“....”

“ஹான்... ஹான்... கிளம்பிட்டோம் டா”

“....”

“சரி சரி.. இதோ வரேன்” அழைப்பைத் துண்டித்தவள்…

“வரேன் அனு... அங்கே தம்பி நேரம் ஆகுதுன்னு கத்தறான். அவனுக்கு எல்லாத்திலும் கரெக்டா டைமுக்கு நடக்கணும். வரட்டுமா…” என்றவள் பின் “ஹான்... சென்னைக்கு வருவதைப் பற்றி நீ ஒன்றும் சொல்லலையே அனு?” என்று மறுபடியும் கேட்க

இவளுக்கோ தர்ம சங்கடமான நிலை! ‘பழகின கொஞ்ச நாட்களிலே ஒருவரால் இவ்வளவு அன்புடனும், பாசத்துடனும், அந்நியோன்யமாகப் பேசிப் பழக முடியுமா? அதிலும் என்னால் முகத்தில் அடித்த மாதிரி முடியாது என்று சொல்ல முடியாத அளவுக்கு!’ என்ற யோசனையுடன் அனு தயங்கியவள், “அது... வந்து... யோசித்து சொல்கிறேன் க்கா” என்று பட்டும் படாமலும் அப்போதைக்கு பதில் தர

“இது போதும் அனு. நீ யோசிச்சே சொல்லு... ஆனா நீயும் மானுவும் வர்றோம் என்றதை மட்டும் சொல்லு போதும்” இவ்வளவு நாள் பழக்கத்தில் அனுவை ஒருமையில் அழைப்பதில் மாறியிருந்த வெண்பா, முகம் கொள்ளா மகிழ்வுடன் கிளம்ப... இவர்களைப் பிரிய முடியாமல் மான்வியோ உதட்டைப் பிதுக்கி அழ ஆரம்பிக்கவும்...

அனு மகளை சாமாதானம் செய்ய... அதற்கு எல்லாம் அவள் அசரவில்லை என்றதும், “கொஞ்ச நாளா எங்க கூடவே இருந்துட்டா இல்ல... அதான் அழறா.... அவ மட்டுமா? இதோ பாரு இந்த நாலும் கண்ணில் தண்ணி வச்சிட்டு நிற்பதை” வெண்பா சொல்ல

உண்மையிலேயே பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கையைப் பிணைத்த படி அழுது கொண்டு தான் இருந்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு தாய்மார்களும் முழித்துக் கொண்டு நிற்க… அந்நேரம் வெண்பாவுக்கு மிருடனிடமிருந்து மறுபடியும் அழைப்பு வரவும்,

“டேய்.. நாங்க கிளம்பிட்டோம் டா. ஆனா மானுவை விட்டு வர மாட்டேன்னு பசங்களும், ஏன்… மானுவும் கூட ஒரே அழுகை” வெண்பா அழைப்பை ஏற்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனை வாங்கிய மான்வி,

“friend, நானும் வரேன்… pls…” என்ற படி தேம்பவும்... அங்கு அவன் என்ன சொன்னானோ…

இவள் போனை வெண்பாவிடம் தர, “சொல்லுடா...” வெண்பாவின் குரலில்

“....”

“என்னது... அது எப்படி டா அப்படி செய்ய முடியும்? அது வந்து டா...”

“.....”

“எதுக்கு டா அதுக்கு இப்படி கத்துற? மானு அழாமல் தான் இருக்கா சரி சரி... இதோ வரோம்” என்று தம்பிக்கு பதில் தந்தவள்...

அனுவிடம் திரும்பி, “தம்பியும் எங்க கூட கொஞ்ச தூரம் வரானாம். பிறகு அவன் திரும்பும் போது மானுவையும் அழைச்சிட்டு வந்திடுவானாம். உன்கிட்ட சொல்லச் சொன்னான். அப்போ, அதனால் நான் மானுவை அழைச்சிட்டுப் போறேன் அனு” என்றவள் அனுவின் பதிலை எதிர்பார்க்காமல், “வா மானு” என்று மான்வியை அழைத்துக் கொண்டு வெண்பா வெளியே செல்ல

சிலையென நின்று விட்டாள் அனு. ‘இதென்ன அராஜகம்! பெற்ற தாய் என் கிட்ட கேட்காம... இவங்க தம்பிக்கு எப்படி என் மகளுக்கான முடிவை எடுக்க யார் அதிகாரம் கொடுத்தது? அதையும் இவங்க ஏற்று கொண்டு என் கிட்ட தகவல் சொல்லிட்டுப் போறாங்க! யார் அவன்? என் மகளை என் கிட்ட இருந்து இந்த மூன்று நாள் பிரித்தது மட்டும் இல்லாமல்…. இன்று உரிமையாய் என் மகளை அழைச்சிட்டு போக அவன் யார்? ஒருவேளை நிரந்தரமாக என் மகளை என்னிடமிருந்து பிரித்திடுவானோ? ஆனா அது முடியாது...

இந்த அராஜக காரனுக்கு எல்லாம் அடங்கிப் போகிறவள் நான் இல்லை. எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தா என் மகள் விஷயத்தில் இனி அவளை விட்டு விலகுனு சொல்கிறேனா இல்லையா பாரு’ என்று எல்லாம் மனதிற்குள் குமுறிய அனுவால் மறுநாளே மிருடவாமணனை சந்திக்க நேர்ந்த போது இப்படி எல்லாம் அவனிடம் சொல்ல முடிந்ததா இவளால்?...
 
Last edited:
இந்த மானு kutty enna இப்படி ottikita avangaloda.... அணு தான் avala thedra but ava romba santhoshamaa thaan irukkaa ava வயது kuzhanthai galai paakkavum avaluku avanga vittutu irukka mudiyala.... Ivan edukurathu thaan முடிவா அது என்ன.... Ava அம்மா vuku இல்லாத urimai..... Avaluku avvallavu kovam..... ஜீவா vum iva kita நல்லா ottikitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Correct ah sketch போட்டு தான் onnum onnum பண்றான்... Super Super maa
 
OP

நன்றிங்க சித்து சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝 smilie 15 smilie 15 smilie 15 smilie 13smilie 13smilie 13smile 10smile 10smile 10smile 10
 
V

Vasumathi

Guest
Wowwww dr semmaya pothu 😍 antha vaamanan 3 aadila ulagai alanthan.🙂entha mirudavaamanan ( super name) maanu and anu ahe aalavida poranoo😉 sema twist😎
 
R

RadhikaMani

Sema sema sis..interesting ah kondu poringa.. Nxt step guess panave mudila..nice..keep going👏🏻👏🏻
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wowwww dr semmaya pothu 😍 antha vaamanan 3 aadila ulagai alanthan.🙂entha mirudavaamanan ( super name) maanu and anu ahe aalavida poranoo😉 sema twist😎
நன்றிங்க சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN