என் நெஞ்சுநேர்பவளே -16

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ENN-16

இளங்காலை பொழுதின் மெல்லிய ரீங்காரத்தில் ஜன சந்தடியில் இருந்து தப்பி பிழைத்து வெளியே ஜம்பமாய் அமர்ந்திருந்த தனி வீட்டின் படுக்கையறையில் வெது வெதுப்பான புதிய தலையணை ஒன்றில் முகம் புதைத்து உறங்கும் நினைவில் துயில் கொண்டிருந்தாள் ஆரதி...

விடியற்காலை பொழுதின் குளுமையில் மேலுமாய் தலையணையை ஒண்டிப் படுக்க அப்போது தான் உணர்ந்தாள் வித்தியாசத்தை.. இடையை அணைத்தபடி கிடந்த ஆதியின் கை இவள் அசைந்ததும் முதுகை லேசாய் தட்டிக் குடுக்க சட்டென விழித்த ஆரதி முதலில் கண்டது, இதுவரை தான் ஒட்டிக் கிடந்த அவன் மார்பைத் தான்..

அதிர்ச்சியில் இவள் விலக எத்தனிக்க,

"தூங்குடா ஆரு.."என்று அவள் தலையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மறுகையால் முதுகை வருட, ஒரு நிமிடம் அவள் விருப்பு வெறுப்பெல்லாம் மறந்து அவன் மார்பில் பாந்தமாய் ஒன்றி விட்டாள்..

மறு நிமிடமே அவன் நினைவுகள் குடுத்த வலியில் இறுகி போனவள் ஆதியை உதறிக் கொண்டு எழுந்தாள்.. மடத்தனமாய் ஒரு நிமிடம் அவனோடு ஒன்றியதை எண்ணி தன்மேலே கோவம் கொண்டாள்.. அந்த கோவம் அவன் மீது திரும்பியது..

அவள் விலகும் போதே எழுந்து விட்டிருந்த ஆதி கண் விழித்தால் கண்டம் செய்து விடுவாள் என அஞ்சி அவளின் எதிர்ப் புறம் திரும்பி தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்க, அவனை முழு வேகத்தில் கட்டிலில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தாள் ரதி..

"ஐயோ அம்மா!! "என்று கத்தியவாறே கீழே விழுந்தவன் இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றான்..

"எதுக்குடி தள்ளிவிட்ட.."என்று வலியில் அவளிடம் கத்த,

'நீ சுவரிடம் கேட்டுக் கொள் 'என்ற ரேஞ்சில் கண்டுகொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

'ரொம்ப பொங்காத ஆதி.. திரும்பி வந்து பினாயில மேல ஊத்திட போற.. 'என்று அவன் மனசாட்சி அடக்க பேசாமல் சோபாவின் கைப்பிடியில் தலை வைத்தவாறு படுத்துவிட்டான்...

குளியல் அறையில் இருந்து ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள் ஆரதி.. அவள் வெளியே வந்ததை கண்டவன் அவசர தேவைக்கு எழுந்து செல்ல முயல, அவனை தள்ளிவிட்டு மாற்றுடைகளுடன் உள்ளே புகுந்து கொண்டாள்..

"ரதிம்மா கொஞ்சம் அர்ஜன்ட் டா.. ப்ளீஸ் நான் போய்ட்டு வந்துடறேனே"என்று கதவை தட்டினான்..

எவ்வளவு கெஞ்சியும் தட்டியும் பயனே இல்லை.. கால்மாற்றி கால் வைத்து நின்றது தான் மிச்சம்.. கால் மணி நேரம் ஆயிற்று.. அரை மணி நேரமும் தாண்டிப் போனது.. அவள் வெளியேவே வர வில்லை..

ஒரு கட்டத்திற்கு மேல் நிற்க முடியாமல் சோபாவில் சென்று அமர்ந்து விட்டான்.. ஆரதியோ சும்மாவே அரைமணி நேரத்திற்கும் மேல் குளிப்பாள்.. இன்று இவனை பழி வாங்கவே மேலும் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து தான் வெளியே வந்தாள்..

குளியல் அறைக் கதவு திறப்பதை அறிந்தவன் "ராட்சசி "என்று ரதியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான்..

அவன் உள்ளே சென்ற வேகத்தில் ரதிக்குமே புன்னகை எட்டிப்பார்த்தது முகத்தில்.. தலையில் இருந்த துண்டை எடுத்து பெட்டில் போட்டவள் வேறு துண்டை எடுத்து தலைக்கு கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்..

மணி ஏழாகி இருந்தது.. வரவேற்பறையில் யாரும் இல்லை.. எல்லோரும் இன்னும் எழவில்லை போல் என நினைத்தவள் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.. இவள் பின்னாடியே வந்த அமுதா,

"என்னடாமா சீக்கிரம் எழுந்துட்டியா.."என்றவாறு உள்ளே நுழைந்தார்..

"ஆமாம் அத்தை.."

"ஆதி எழுந்துட்டானாம்மா..?"

"ம்ம்.. எழுந்துட்டாங்க அத்தை.."

"சரிம்மா.. உனக்கு காபியா டீயா.."

"காபி அத்தை.."எனவும் அடுப்பில் பாலை வைத்தார்..

சிறிது நேரத்தில் இருவருக்கும் காபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தனர்.. வராண்டாவில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தவாறு காபியை சுவைக்க ஆரம்பித்தனர்..

"எங்க வீட்டை பிடிச்சிருக்கா ரதிம்மா.."

"ம்ம் வீடு ரொம்ப அழகா இருக்கு அத்தை.."என்ற அவள் பதிலை கேட்டு புன்னகைத்த அமுதா,

"வீட்டுல இருக்குற மனுஷங்கள பிடிச்சிருக்கா.."

"உங்க பையனை தவிர எல்லோரையும் பிடிச்சிருக்கு அத்தை.."என்று அவள் சட்டென சொல்லவும், அதிர்ச்சி அடைய வேண்டிய அமுதாவோ,

"ஆனாலும் நீ இவ்ளோ ஓப்பனா இருக்க கூடாதுடா தங்கம்.."என்று சொல்லி சிரித்தார்..அவரின் இந்த பதிலையும் அணுகுமுறையையும் எதிர்பாராமல் திகைத்து போனது ரதி தான்..

"உங்க பையனை பிடிக்கலைனு சொல்லுறேன்.. உங்களுக்கு கோவம் வரலையா.."

"உனக்கு பிடிக்காத பையன நாங்க உன் கை காலை கட்டி வச்சு கல்யாணம் பண்ணலையே ரதிம்மா.. உனக்கு ஆதியை பிடிக்கலைன்னா தாரளமா எங்க கிட்ட நீ சொல்லி இருக்கலாமே.. உன்னை பத்தி கேள்வி பட்டவரைக்கும் நீ எதையும் உன் விருப்பத்தோடு நேர்மையா செயல்படுற பொண்ணு.. உனக்கு பிடிக்காததை நீ யாருக்காகவும் ஏத்துக்க மாட்ட... அப்பிடி இருக்கும் போது ஆதியை உனக்குப் பிடிக்காம கல்யாணம் பண்ணி இருக்கவே மாட்ட ரதிம்மா.."என்று அவளை புரிந்து கொண்டார்போல் பேச, அமைதியாய் அவர் மடியில் படுத்து விட்டாள்...

ரதியின் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து விட்டவர் முடியை துவட்டியவாறே தொடர்ந்தார்..

"ஆதிக்கும் உனக்கும் இருக்குற பிரச்சனையை நீங்க தான் சரி பண்ணிக்கணும் ரதிம்மா.. நான் அவன் பண்ணது சரி தப்புனு எதுவும் சொல்ல மாட்டேன்.. ஆனால் கோவத்துல இருக்கும் போது சில விஷயங்கள் கவனத்துல வராம போக வாய்ப்பு இருக்கு.. காதல் ரொம்ப அழகானது.. அதே நேரம் அதற்கான வயசும் தெளிவும் ரொம்ப முக்கியம்.."

"சரிங்க அத்தை.. நீங்க சொல்றது படி அந்த வயசுல விலகி வந்தாங்க.. ஆனால் இத்தனை..."என்று பேசிக்கொண்டிருந்தவளை அவள் வாயில் ஒற்றை விரல் வைத்து தடுத்தார் அமுதா..

"உன்னோட கேள்விக்கு விடை கண்டிப்பா உன் புருஷன் கிட்ட தான் இருக்கு.. அவன் கிட்ட ஏன்டா இப்படி பண்ணினன்னு சட்டையை பிடிச்சு கேளு.."என்று சொல்ல, அவள் அமைதியானாள்..

"என்னாச்சு பட்டாசு தண்ணி பட்ட மாதிரி நவுத்து போச்சு.."என்று ரதியின் தாடையை பிடித்து ஆட்டினார்..

"சரி ரதிம்மா உனக்கு எப்ப தோணுதோ அப்போ பேசு போதும்.. ஆனால் எங்க கிட்ட நீ இப்படி உம்முன்னு இருக்க கூடாது.. சரியா.."

"ம்ம்..சரிங்கத்தை "

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதி வெளியே வந்தான்..

"என்ன மாமியாரும் மருமகளும் காலைலயே கூட்டணி போட்டாச்சு.."என்றவாறு இருவரின் நடுவிலும் இடித்துக் கொண்டு அமர்ந்தான் ஆதி.. அவன் வந்து அமரவும் ஆரதி எழுந்து விட்டாள்..

"அத்தை நான் தோட்டத்தை பார்த்துட்டு வரேன்.."என்று விட்டு சென்று விட்டாள்..

அவள் போனதும் ஆதியின் தோளில் அடித்த அமுதா "எதுக்குடா அவ கிட்ட வம்பு பண்ற.."

"என்ன பண்ணி என்ன யூஸ்ம்மா.. இன்னும் என்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டிங்குறா.."

"என்ன பண்றது.. நீ நீதி நேர்மை நியாயம்ன்னு அவளை ரொம்ப ஹர்ட் பண்ணிருக்க.. சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிருக்க.. எங்கயும் உன்னோட காதலை நீ ரதி கிட்ட புரிய வைக்கவே இல்ல.. சுபிய காரணம் காட்டி கல்யாணம் பண்ணிருக்க.. அப்பிடி இருக்கும் போதும் ரதி கோவத்துலயும் நியாயம் இருக்குது தானே..கொஞ்சம் அவ இயல்புக்கு மாறட்டும்.. கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உன்னோட காதலை உணர்த்து..பேசி புரிய வைக்குறத விட நீ அவளை எவ்ளோ லவ் பண்றீன்னு உணர்த்துனாலே போதும்.."என்று சொல்ல அவரை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் ஆதி..

"போடா இன்னும் சின்ன பையனாட்டம்.."என்று அவனை விரட்டினார்.. அவனும் சிரித்துக் கொண்டே ரதியை தேடி தோட்டத்திற்கு சென்றான்..

அமுதா எழுந்து சமையல் அறைக்கு செல்ல சுரபி வந்தாள்..

"சாரி அத்தை லேட்டாகிடுச்சு "

"பரவாயில்லடா.. விது என்ன பண்றான்.."

"தூங்கறாங்க அத்தை.."

"சரிடாம்மா.."என்றவாறு அவளுக்கு காபியை நீட்ட அதை வாங்கி குடித்த சுரபியை பார்த்தார்..

அவரின் அனுபவம் அவள் முகத்தில் இருந்த பொலிவை கண்டு கொண்டது.. மனதில் சந்தோசம் நிறைந்தது..

தோட்டத்தில் ரதியை தேடிச் சென்றான் ஆதி.. வீட்டின் பின்புறம் இருந்த பன்னீர் ரோஜா செடியில் கொத்தாய் பூத்து கிடந்த மலர்களில் மூக்கை லேசாய் உரசியவாறே அதன் வாசனையை முகர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்..

அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு முனை மண்ணில் புரண்டு கொண்டிருக்க, விரித்து விட்டிருந்த முடிகள் முன்புறம் விழுந்து தொல்லை செய்யவும், இரு பக்க முடியையும் ஒற்றை விரல்களால் காதோரத்தின் பின்னே தள்ளியவள், கண்களை மூடியவாறு மென்மையான ரோஜா இதழ்களில் முகத்தை வைத்து வருட அதில் படிந்திருந்த பனித்துளிகள் ஜில்லிப்பில் முகம் நனைத்தாள்..

சுவற்றில் சாய்ந்தவாறு அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் மனக்கண்ணில் அந்த மலருக்கு பதில் தன் முகம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசிக்க, அதை கற்பனையே கோடி சுகம் தருவதை உணர முடிந்தது..

மூடியிருந்த விழிகளில் கற்றையாய் இருந்த இமைப் பீலிகள் இவன் கன்னத்தில் உரசுவதை நினைக்கும் போதே மயிர்க் கால்கள் கூச்செறிந்தது..

எப்பொழுதும் அவசர அவசரமாய் ரசிக்கும் அவனது மனம் இன்று முதல் முறையாய் மிக பொறுமையை அடி முதல் நுனி வரை வருடலை போலொரு ரசிக்கும் பாவத்தை கொண்டது.. அவள் முடியின் நுனியில் இன்னமும் காயாமல் ஒட்டிக் கொண்டிருந்த நீர் திவலைகளை இவன் உள்ளங்கைக்குள் ஏந்திட நினைத்தது மனம்..

உள்ளங்கையில் வடிந்திடும் நீர் திவலைக்கு பட்டும் படாமல் சிறு முத்தம் வைத்திடும் அளவுக்கு கிறுக்குத் தனம் செய்ய தூறல் போட்டது மனம்..

அவள் அணிந்திருந்த சுடிதாரின் பாட்டத்தையும் மீறி லேசாய் வெளிவந்து கிடந்த வெள்ளிக் கொலுசின் மணியை அவள் பாதம் ஏந்தி மூக்கால் நிரடிட தோன்றியது..

இத்தனை ரசனையை ஒருவன் வீசிடும் பொழுது அவளது கவனம் மலரினில் மட்டும் வீற்றிருப்பது சாத்தியமா என்ன!!.. உடலின் குறுகுறுப்பில் எதேச்சையாய் திரும்பியவள் ஆதியின் கண்களில் நிறைந்திருந்த தேடல் தனில் தன்னை தொலைத்தாள்..

அவளின் பார்வையை கண்டு நெருங்கிச் சென்றவன்,

நின்னிதழ் வரிகள்
என் நாவெண்ணும்
வரம் ஈயடி ஆருயிரே

என்று அவள் காதில் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, முதலில் புரியாமல் அவன் போவதை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருக்க சற்று நேரத்தில் பிடிபட்ட அர்த்தத்தில் லேசாய் சிவந்து தான் போனது பெண்ணவள் முகம்..

வெட்கத்தின் நன்றி நவிலும்
படலமாய் கன்னச்சிவப்பு....
பார்வையின் நாணமாய்
கவிழும் இமைக்குடை....
படபடப்பின் பரிசாய்
உள்ளங்கைக்குள்
ஒளிந்து கொள்ளும்
விரல் நுனிகள்...
தீண்டாமல் தீண்டல் தரும்
விழியே!
உன் இமைகளுக்குள் சரணம்
அடைந்து விடு!!
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN