செங்கா 47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதியனின் அப்பா தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.

ரக்சனா பக்கம் விரல் நீட்டினார். "உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு சம்மதம்மா.. மதம் மாறி இருந்தா பரவால்ல.. எல்லாமே சாமிதானே.." என்றார்.

செழியன் மகிழ்ச்சியோடு எழுந்து நின்று துள்ளிக் குதித்தான்.

"தேங்க்ஸ் அப்பா.." என்றபடி சென்று அவரை கட்டிக் கொண்டான்.

அப்பா அவனது தோளில் தட்டி தந்தார். ரக்சனா வெட்கத்தோடு தலையை குனிந்துக் கொண்டாள்.
செங்கா அவர்களை பார்த்தபடி அமைதியாக நின்றாள்.

அப்பா செழியனை விலக்கி நிறுத்தினார். "அடுத்த வாரத்துல பொண்ணு வீட்டுக்கு பேச போகலாம்.." என்றார்.

"தேங்க்ஸ் ப்பா.." என்ற செழியன் மீண்டும் ஒருமுறை அவரை கட்டிக் கொண்டான். பின்னர் விலகி நின்றான். ரக்சனாவை பார்த்து புன்னகைத்தான்.

அப்பா அதியனை பார்த்தார். "நீ இப்படி செய்வன்னு நான் நினைச்சி கூட பார்க்கலடா.." என்றார்.
"அப்பா.. எனக்கு இவளை பிடிச்சிருக்கு.." என்றான் அவன்.

அப்பா அவனை முறைத்து விட்டு செங்கா பக்கம் பார்த்தார்.

"யம்மாடி.. இங்க பாரு.. நான் ரொம்ப நல்ல மனுசன்தான்.. ஆனா நீ தேர்ந்தெடுத்தது ஒரு கெட்டவனை.. அஞ்சி வருசத்துக்கு முன்னாடியே நாங்க இவனுக்கு நிச்சயம் பண்ணிட்டோம்.. ஆனா இவன் எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு போயிட்டான்.. ஆனா அந்த பொண்ணு நிச்சயம் செஞ்சதை நம்பி இன்னும் இவனுக்காக காத்துட்டு இருக்கு.. அதை விட முக்கியமா இவங்களுக்கு கல்யாணம் நடக்கும்ன்னு நான் வாக்கு தந்துட்டேன்.. கொடுத்த வாக்கை திருப்பி வாங்குறது எவ்வளவு கஷ்டமான விசயம்ன்னு உனக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன்.." என்றார் அவர்.

செங்கா குழப்பத்தோடு அதியனை பார்த்தாள். அவள் முகத்தில் ஏமாற்றம் குடியேற ஆரம்பித்து விட்டது.

"அப்பா இது ரொம்ப ஓவர்.. கிட்டத்தட்ட அஞ்சி வருசமாகியும் இந்த நிச்சயம் அப்படியே இருக்குன்னு நான் நம்பமாட்டேன். அதுவும் இல்லாம இந்த அஞ்சி வருசத்துல நீங்க ஒருமுறை கூட இந்த நிச்சயத்தை பத்தி என்கிட்ட பேசியது இல்ல.. அதை விட முக்கியமா நான் இந்த சம்பந்தம் பிடிக்கலன்னு சொல்லிட்டுதான் இந்த நாட்டை விட்டே போனேன்.." என்று கோபத்தோடு சொன்னான் அதியன்.

"நான் உன்கிட்ட பேசலடா. அந்தப் பொண்ணுக்கிட்டதான் பேசுறேன்.." என்ற அப்பா செங்காவை பார்த்தார். அவள் குழப்பத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து செழியனும் ரக்சனாவும் கூட குழம்பிதான் இருந்தனர்.

"பொண்ணு வீட்டுக்காரங்க நேத்து கூட ஃபோன் பண்ணி என்கிட்ட பேசினாங்க.. நான் இவன்கிட்ட பேசிட்டு நாள் குறிக்கறதா சொல்லியிருக்கேன்.. ஒரு தகப்பனா நான் இவனுக்குன்னு ஒரு இடத்துல பொண்ணு பார்த்து பேசி வச்சி அதுவும் இவன் முன்னாடியே நிச்சயமெல்லாம் செஞ்ச பிறகு இவன் இப்படி வந்து சொன்னா நான் என்ன பண்ணட்டும்.? பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி தலை குனிஞ்சி மன்னிப்பு கேட்க நான் தயார்.. ஆனா இத்தனை வருசமா இவனையே புருசனா மனசுல நினைச்சிட்டு இருக்கற அந்த பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.? அவளும் பொண்ணுதானே.?" என்றார் அவர்.

செங்கா கண்ணீரை அடக்க முயன்றாள்.

"அப்பா.. இது சுத்த நான்சென்ஸா இருக்கு.." என்றான் அதியன்.

"ஆமான்டா.. உன்னை மாதிரி ஒரு உதவாக்கரையை பெத்ததே பெரிய முட்டாள்தனம்தான்.. இவ்வளவு பெரிய வீட்டுல பெத்தவங்க நாங்க உயிரோடு இருக்கும்போதே நீ தனியா போய் வாழ்ந்துட்டு இருக்க.. உன் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு எங்களுக்கும் தெரியல.. இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியல.. நமக்குள்ள இருக்கற உறவு ரொம்ப விரிசலோடிப் போய்தான் இருக்கு.. அதனாலதான் சொல்றேன்.. உன்னை மாதிரி சுயநலவாதியை பெத்தது முட்டாள்தனம்ன்னு.." என்றார் கசந்த சிரிப்போடு.

செங்கா வாசலை நோக்கி நடந்தாள். அதியன் சட்டென அவளது கையை பற்றினான்.
"நான் சொல்வதை ஒரு நிமிசம் கேளேன்.." என்றான் கெஞ்சலாக.

செங்கா மறுப்பாக தலையசைத்தாள். "அஞ்சி வருசமா ஒரு புள்ளைக்கிட்ட நம்பிக்கையை தந்துட்டு ஏமாத்துறது ரொம்ப தப்பு.. நீ அந்த புள்ளையை போய் பாரு.. அந்த பொண்ணு மனசுல உன் மேல எந்த நேசமும் இல்லன்னா அப்பாறம் எங்கவூட்டுக்கு வந்து பொண்ணு கேளு.. இல்ல அந்த பொண்ணு நீ தந்த நம்பிக்கையில இன்னும் உன்னை நெனைச்சிட்டே இருந்தா நீ அந்த புள்ளையையே கட்டிக்க.." என்றவள் ரக்சனா பக்கம் பார்த்தாள்.

"என்னைய வூட்டுக்கு கூட்டிப்போறியா.?" என்றாள்.

ரக்சனா அதியனின் பெற்றோரை தயக்கமாக பார்த்துவிட்டு செங்காவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அதியன் கோபத்தோடு அப்பாவை பார்த்தான். "அப்பா.. ஐ ரியலி ஹேட் யூ.. அஞ்சி வருசம் முன்னாடி நீங்க என் விருப்பம் இல்லாம நிச்சயம் செஞ்சதாலதான் நான் இந்த வீட்டை விட்டே போனேன். ஆனா இப்பவும் அதையேதான் செய்றிங்க.. என்னோட பீலிங்க்ஸ்க்கு மரியாதையே தர மாட்டேங்கறிங்க.." என்றான் ஆதங்கத்தோடு.

"பெத்தவங்களை மதிக்காத உன் உணர்வுகளை நான் ஏன் மதிக்கணும்.?" என்றவர் தனது அறையை நோக்கி நடந்தார்.

அதியன் கை விரல்களை முறுக்கியபடி நின்றான். "இவர் என்ன லூசாம்மா.? அஞ்சி வருசத்துக்கு முன்னாடி யாருக்கோ தந்த வாக்குக்காக என் காதலை பலி தர சொல்றாரு.." என்றான் அம்மாவிடம்.
அம்மா என்ன சொல்வதென புரியாமல் குழம்பினாள்.

செழியன் அண்ணனின் தோளை பற்றினான். "பொறுமையா இருண்ணா.. அந்த பொண்ணு வீட்டுல நாமளே போய் பேசி பார்க்கலாம்.." என்றான்.

"அட போடா.. இந்த வீட்டுக்கு எப்ப வந்தாலும் ஏதாவது இம்சையைதான் இழுத்து விடுறாங்க.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான். செழியன் அம்மாவை சோகமாக பார்த்துவிட்டு அண்ணனை தொடர்ந்து ஓடினான்.

அதியனும் செழியனும் விஷ்வாவின் வீட்டிற்கு வந்தபோது செங்காவும் ரக்சனாவும் இன்னும் அந்த வீட்டிற்க்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.

அதியன் தலையை பிடித்தபடி வந்து சோஃபாவில் அமர்ந்தான்.

"ஏன்டா என்ன ஆச்சி.?" என்று விசாரித்தான் விஷ்வா.

"அஞ்சி வருசம் முன்னாடி என் சம்மதம் இல்லாம எனக்கு ஒரு திருமண நிச்சயம் நடந்துச்சே.. உனக்கு நியாபகம் இருக்கா.?" என்று சோகமாக கேட்டான்.

"ஆமா.. அதை ஏன் இப்ப கேட்கற.?" குழப்பமாக கேட்டான் விஷ்வா.

"அந்த பொண்ணு என்னை நினைச்சி வாழுறாளாம்.. அவளை நான் கட்டிப்பேன்னு நம்பிக்கையோடு காத்திருக்காளாம்.." என்றான் அதியன்.

இதை கேட்டு விஷ்வாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "இது எப்படிடா.? அந்த பொண்ணை பத்தி அஞ்சி வருசமா எந்த தகவலுமே இல்ல.. இப்ப திடீர்ன்னு எதுக்கு இப்படி ஒரு விசயத்தை சொல்லியிருக்காரு உங்க அப்பா..? அவருக்கு உன் வாழ்க்கையை பார்த்தா விளையாட்டா இருக்கா என்ன‌.?" கோபமாக கேட்டான் விஷ்வா.

"எங்க அப்பாவுக்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கல.." என்று சோஃபாவில் சாய்ந்தவனை பரிதாபத்தோடு பார்த்தான் அவன்.

"ரக்சனாவும் செங்காவும் எங்கே.?" விஷ்வா கேட்கவும் அந்த வீட்டை சுற்றி பார்த்தான் செழியன்.

"அவங்க இன்னும் வரலையா.? எங்களுக்கும் முன்னாடியே கிளம்பினாங்களே.." என்று குழப்பமாக சொன்னான் செழியன்.

"ஆட்டோ பிடிச்சி வர லேட்டாகும்.. விடுடா.." என்ற அதியன் சோகத்தோடு நெற்றியை தேய்த்தான்.

"அந்த பொண்ணுக்கிட்ட போய் நான் என்னன்னு பேசுறது.?" என்றான் கூரையை பார்த்தபடி.

"அஞ்சி வருசமா ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை தருவது ரொம்ப தப்புடா அதியா.. உங்க அப்பா நிஜமாவே ஓவரா பண்ணிட்டாரு.. நீயும் உங்க அப்பாவும் ஒரு நாள் கூட அப்பா மகன் மாதிரி இருந்ததே இல்ல.. அதனாலதான் இத்தனையும்.. உன் லைஃப் பத்தி நீயும் அவர்க்கிட்ட சொல்றது இல்ல.. அவரும் கேட்கறது இல்ல.." என்று புலம்பலாக சொன்ன விஷ்வாவுக்கு முன்பின் பார்த்திராத அந்த பெண்ணின் மீதும், செங்காவின் மீதும், தன் நண்பனின் மீதும் பரிதாபம் வந்தது.

ரக்சனாவோடு ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த செங்கா சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்.

"வேற புள்ளை கூட நிச்சியம் பண்ணி அஞ்சி வருசம் ஆகியிருக்கு. ஆனா இந்த மனுசன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல.." என்று புலம்பியவளுக்கு மனம் முழுக்க சோகமாக இருந்தது.

செழியனும் அதியனும் வீட்டிலிருந்து சென்றதும் கவலையாகி போன அவர்களின் அம்மா தன் கணவனை தேடி போனாள்.

"எதுக்குங்க தேவையில்லாததை பேசுறிங்க.? நாம பேசி வச்சிட்டு வந்த பொண்ணுக்கு கல்யாணமாகி மூணு வயசுல குழந்தை இருக்கு.. நீங்க ஏன் பையன் மனசை இப்படி உடைக்கிறிங்க.?" என்று வருத்தத்தோடு கேட்டாள் அம்மா.

"இவன் கூட்டி வந்த பொண்ணு சுத்த மோசமான கேரக்டர்.. இவளை மருமகளா ஏத்துக்கறதுக்கு பதிலா இவனை சன்னியாசமே அனுப்பலாம்.. அவளை பத்தி பசங்க முன்னாடி சொல்ல பிடிக்காமதான் இப்படி வாயில் வந்த ஒரு பொய்யை சொன்னேன்.." என்றார் அவர்.

அம்மா அதிர்ச்சியோடு அப்பாவை பார்த்தாள். "நிஜமாவா.? ஆனா பார்க்க நல்ல பொண்ணா தெரிஞ்சாளே.‌." அம்மா சந்தேகத்தோடு கேட்க, அப்பா அவளை முறைத்தார்.

"அப்படின்னா நான் பொய் சொல்றேனா.? இந்த பொண்ணும் உன் மகனோட பிரெண்டு விஷ்வாவும் நடுரோடுன்னு கூட பார்க்காம கட்டிப்பிடிச்சிட்டு நின்னதை நானே என் கண்ணால நிறைய முறை பார்த்திருக்கேன்.. கட்டிப்பிடிக்கறதை கூட இந்த நட்புல கொண்டு வந்துடுவாங்கன்னு வச்சிக்க.. ஆனா ஒருமுறை ஹோட்டல் ஒன்னுக்கு நானும் என் பிரெண்டும் காப்பி சாப்பிட போயிருந்தபோது இவளும் அந்த விஷ்வாவும் அந்த ஹோட்டல் ரூம் கார்னர்ல உட்கார்ந்து முத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க.. அதை நானே என் இரண்டு கண்ணால பார்த்தேன்.. நேத்து வரை அவன் பிரெண்ட் கூட சுத்தியவ இன்னைக்கு இவனை கட்டிக்கப்போறதா வந்து என்கிட்ட சொல்லுறா.. பத்து பைசா சீரா கொண்டு வரலானாலும் பரவால்ல, கல்யாணத்துக்கு பிறகு கூலி வேலை செஞ்சி கூட அந்த காசை சம்பாதிச்சிக்கலாம்.. படிக்காத பாமரமா இருந்தா கூட நாலு விசயம் சொல்லி கொடுத்து புரிய வைக்கலாம்.. ஆனா இப்படி குணம் கெட்டவளை வீட்டுக்கு கொண்டு வந்தா அப்புறம் வீடு நாசமாகிடும்.. அவ அப்பிராணி மாதிரி பேசியதை வச்சி நீ மயங்கிடாத.. அவ இங்கே பேசியது அத்தனையும் நடிப்பு.. அந்த நடிப்பாலதான் உன் மகனையும் மயக்கி வச்சிருக்கா.. இவளை விஷ்வா கூட நான் பார்க்கலன்னா வையேன்.. இன்னேரம் இவ பேசியதுக்கு மயங்கி உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேன்.. அந்த அளவுக்கு பேசி மயக்கறா.. நல்லா நடிக்கறா.." என்றார் அவர் கோபத்தோடு.

"இதை அவன்க்கிட்டயே சொல்லியிருக்கலாம்.." என்று சலிப்போடு சொன்னாள் அம்மா.

"அது தப்பாகும்.. உன் பையன் என்னை நல்ல நாளுலயே நம்ப மாட்டான்.. எனக்கு விஷ்வா மேல நம்பிக்கை இருக்கு. இவதான் இரண்டு பேருக்கிட்டயுமே நடிக்கறான்னு தோணுது. அதுவும் இல்லாம ரக்சனா நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணு.. இன்னைக்கு இவ இப்படி விஷ்வா கூடவும் அதியன் கூடவும் ஏமாத்தி நடிக்கிறது தெரிஞ்சா அது ரக்சனாவுக்கும் செழியனுக்கும் நடுவுல சண்டையை கொண்டு வந்துடும்.. அதியனும் விஷ்வாவும் பல வருசமா பழகுறவங்க.. அவங்க நட்பும் உடையும்.. அதனால அவளை பத்திய உண்மையை பொறுமையாதான் எல்லார்க்கிட்டயும் சொல்லணும்.. நான் எப்பவும் கடவுளைதான் நம்புவேன்.. இவ இப்படி ஏமாத்துறதுக்கு கண்டிப்பா ஒரு நாள் தண்டனை கிடைக்கும் பாரு.." என்றார் அவர். அம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் பெருமூச்சு விட்டாள்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்கள
Word count 1082
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN