முகவரி 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருடனின் எகத்தாளமான பதிலில், “இவனா! அப்போ இவன் தான் என்னைக் கடத்தினவனா!” அனுவின் அதிர்ந்த வார்த்தையில்,

“அன்றும் இல்லை, இன்றும் இல்லை, எப்பொழுதும் நான் தான் உன்னையைக் கடத்திறவன்! ஏன்னா, நீ அந்த குணம் கெட்ட நாய் குணநாதனின் ஒரே செல்ல மகள் என்றது ஒரு காரணம்னா... அன்று நீ என் கிட்ட நடந்துகிட்டதுக்கு நான் திரும்ப பதிலடி கொடுக்க வேண்டாம்?”

அவன் சொல்லி கொண்டு இருந்த வார்த்தைகளைக் காதில் வாங்குவதை விட, ‘இவன் எப்படி பூட்டிய அறைக்குள்?’ என்று இவள் நினைத்திருக்க... அதை அவள் முகத்திலிருந்து அறிந்தவன்,

“இந்தப் பக்கம் wall hide lock ஒன்று இருக்கு. அதாவது சுவரோடு பதிக்கப் பட்ட கதவு. அது வழியா தான் வந்தேன்” அவள் முறைக்க, “என்ன டி முறைக்கிற? இன்னொன்னு தெரியுமா... நீ உள்ள என்ன என்ன செய்திட்டு இருக்கேனு hiden camera வழியா பார்த்திட்டு தான் இருந்தேன்” இவன் ஏதோ சாதனை செய்தது போல் பெருமையாய் சொல்ல

“பொறுக்கி... செய்தது பொறுக்கித் தனம்... இதில் பெருமை வேற! எதுக்கு டா என்னைக் கடத்தின?”

“பொறு... பொறு... சொல்கிறேன். அதை சொல்லத் தானே உன்னைக் கடத்தினேன்?” என்றவன் பின் சொடக்கிட... உடனே இவன் அமர அந்த அறைக்குள் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டான் ஒரு அடி ஆள். அதில் தெனாவட்டாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்...

“ம்ம்ம்... என்ன சொன்ன? குணநாதன் பொண்ணு... அதிலும் செல்லப் பொண்ணு. ப்பா! உன் அப்பன் செத்தாலும் அவன் அதிகாரத்தை வைத்து தப்பிக்கணும்னு நினைத்த பார்? அதற்கே உன்னை இன்னும் அடைத்து வைத்து கொடுமைப்படுத்த எனக்குள் வெறி வருது. என்ன, செய்யவா?” இவன் அதிகாரமாய் கேட்க

“நீ என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்திக்கோ... அதற்காக நான் குணநாதன் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது. இந்த ஜென்மத்தில் அவர் தான் என் அப்பா... அதை யார் எங்கு கேட்டாலும்... கேட்காவிட்டாலும் நான் சொல்லுவேன் தான். நான் குணநாதன் மகள் தான்...” இவளும் அதிகாரமாய் தலை நிமிர்ந்து பதில் தர

அதில் கோபத்தில் எழுந்து வந்து இவன் ஒரு அரை விட… அதில், “ம்ம்மா....” என்ற படி சுருண்டு விழுந்தவளை

“நீ குணநாதன் மகள் இல்லல... என் முன்னாடி இப்படி சொன்னா உனக்கு இது தான் கிடைக்கும்… ஜாக்கிரதை!” இவன் விரல் நீட்டி எச்சரித்ததில் அவளுக்குள்ளும் கோபம் எழ,

“என்னை அப்படி சொல்லக் கூடாதுன்னு சொல்ல நீ யார்? அப்பா... மகள் பாச உறவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? முதலில் குடும்பம்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? அங்கே பரிமாறிக்கபடுகிற அன்புனா என்னன்னு உனக்குத் தெரியுமா டா? அதெப்படி உனக்கு தெரியும்.. நீ தான் அநாதையாச்சே! உனக்கு தான் பெற்ற அப்பா, அம்மா கூட யாருனு தெரியாதே... யாரோ பிச்சை போட்ட அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் தானே நீ?”

அவள் பேசப் பேச... உள்ளுக்குள் இவனுக்கு ரௌத்திரம் ஏற, கொலைவெறியுடன் நாற்காலியை விட்டு எழுந்தவன், “ஏய்...” விழுந்திருந்த அவளின் தலைமுடியைப் பற்றித் தூக்கி, இன்னும் அவளை இரண்டு அரை விட, “ப்ப்பா...” என்று சுருண்டு மூலையில் விழுந்தாள் அனு.

“என்ன டி, பெரிசா அப்பா... அப்பான்னு உருகிற! அந்த நாதாரி நாயும் நானும் ஒண்ணா? அவன் பொம்பளப் பொறுக்கி டி. ஆனா நான் அநாதையா இருந்தாலும் எனக்கு தாய், தந்தையர் யார்ன்னு தெரியலனாலும்... இன்று வரை நான் ஒழுக்கத்தில் ஸ்ரீ ராமன் டி! என் மனைவியைத் தவிர வேறெந்த பெண்ணையும் ஒரு தவறான பார்வை கூட நான் இதுவரை பார்த்தவன் இல்லை டி. என்னைப் போய் என்ன சொல்லிட்ட!” என்ற கர்ஜனையுடன் இவன் அவளை இன்னும் நெருங்க...

அவளோ, கண்ணில் பீதியுடன் சுவரோடு ஒன்றினாள். அதில் ஒரு வினாடி தயங்கியவன் பின் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்க.. அவள் உதட்டோரம் கிழிந்து ரத்தம் கசிவதை பார்த்தவன், அவளைத் தூக்கித் தன்னிடம் இருந்த கைக்குட்டையால் அந்த ரத்தத்தைத் துடைத்து விட்டவன், “சொல்கிறதை கேட்டு ஒழுங்கா நடந்துக்க... இல்லைனா வீணா அடி வாங்கியே செத்துடுவ...” இவன் எச்சரிக்க

அவனுடைய பிடி இவளுக்கு வலியைக் கொடுக்க... கூடவே மிருடனின் அண்மை அவளுக்குப் பிடிக்காமல் போக, “எது சொல்கிறதா இருந்தாலும்... என்னை விட்..டு இரண்டு அடி தள்ளி நின்... றே... பேசு...” இவள் அருவருப்புடன் முக சுளிப்புடன் திக்கித் திணறி சொல்ல

அவள் அருவருப்பில் எரிமலை ஆனவன், “என்ன டி பெரிதா அருவருப்பு படரபடற? உன் புருஷன் தொடும்போது இனித்த உனக்கு... நான் தொட்டா மட்டும் கசக்குதா? அவன் என்ன பெரிய உத்தமனா? அந்த திரு…” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அனு... இப்போது கணவனைப் பற்றி இவன் பேசவும்... அதுவும் அவன் பெயரை இவன் உச்சரிக்க வரவும்

இவ்வளவு நேரம் இருந்த சோர்வு விலக, ஒரே தள்ளலில் அவனை தன்னிடம் இருந்து விலகியவள், “டேய்... என் புருஷன் பேரை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை டா...” என்று இவள் விரல் நீட்டி எச்சரிக்க,

அதில், கண்ணில் ஒரு வித ஒளியுடன் அவளை நோக்கியவன், பின் அவள் கையைச் சுண்டி விட்டு தன்னிடம் இழுத்து கொண்டவன், “ம்ம்ம்.. அப்படியா? அந்த மகா பிரபு பெயரை நான் சொல்லக் கூடாதோ? சரி சொல்லலை... ஆனா அவனுக்கு சொந்தமான ஒன்று இந்த வினாடி எனக்கு சொந்தமாக போகுது. அப்போ என்ன செய்ய போற பார்க்கிறீயா?” இவன் பவ்வியமாய் கேட்க

அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “என்ன புரியலையா? அவனுக்கு சொந்தமான ஒன்று நீ தான்னு சொல்ல வரேன்...” இவன் தன் வலது கையை அவளின் உயரத்துக்கு அளவிட்டு சொல்ல…

அனுவின் கண்களோ பீதியில் விரிந்தது. இருந்தாலும், அதை மறைத்தவள், “சும்மா... மிரட்டாத டா... உன்னாலே என்னை ஒன்றும் செய்ய முடி...” அவள் வார்த்தைகள் பாதியில் தேங்கி நிற்க... அப்படி நிற்க காரணமாக அவளின் இதழ்களைத் தன் வசம் ஆக்கியிருந்தான் மிருடன். அதுவும் அவனுடைய அழுத்தமான இதழ் தீண்டுதலால்!

அவன் செயலில் முதலில் ஒன்றும் புரியாமல் தவித்து விழித்தவள் பின் மிரட்சியுடன் இவள் அவனை நோக்க... அதில் அவளிதழில் தன் அதரத்தை இன்னும் அழுத்த பதித்தான் மிருடன்.

அவன் கொஞ்சம் அசந்த நேரம், இவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனை உதறியவள்... அவனை அடிக்க கை ஓங்க... அவள் தள்ளி விட்டதில் சற்றே தடுமாறி நின்றவன், பின் ஒரு வித உல்லாசத்துடன் அவள் கையைப் பிடித்து மென் நகையுடன் இவன் அவளை நோக்க... இவளோ ருத்தரதேவியாய் அவனை முறைத்தவள்... அவன் பார்வையில் கூசிக் குறுகி,

“ச்சீ...” என்ற படி கையை விலகிக் கொண்டு இவள் விலக எத்தனிக்க, அதில் கோபத்துடன் இவன் அவளை எட்டிப் பிடிக்க நினைக்க... அவள் திரும்பிய நேரம் அவளின் வலது புற ஜாக்கெட்டைக் கிழித்தது மிருடனின் விரல்கள். இது எதிர்பாராமல் நடந்தது தான். சத்தியமாய் இவன் இதை திட்டமிட்டுச் செய்யவில்லை. ஒரு பெண்ணின் ஆடையைக் கிழிக்கும் அளவுக்கு மிருடன் ஒன்றும் காமக் கொடூரனும் இல்லை. ஆனால் இவனின் செயல் அவளுக்குள் அவமானத்தை ஏற்படுத்த... அதில் அவன் முன் நிற்க முடியாமல் சேலையால் தன் தோளை மூடியவள்... அவனைப் பார்க்க முடியாமல் திரும்பி நின்றவள்,

“ப்ளீஸ்! உன்னைக் கை எடுத்து கும்பிடுறேன். ஏன் என்னை இப்படி அசிங்கப் படுத்தற? நீ கேட்ட மரங்களைத் தான் நான் கொடுத்திட்டேன் இல்லை... இன்னும் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற?” இவள் குரல் கமர கெஞ்ச

அவளின் வார்த்தையிலும்... செயலிலும் இவனிடம் ஒரு வித எஃகுத் தன்மை வந்து குடிகொள்ள... பழையபடி அங்கிருந்த சேரில் தெனாவட்டாக அமர்ந்தவன் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை நோக்க...

அவனின் எக்ஸ்ரே கண்களின் கதிர் வீச்சில்... அவனைத் திரும்பிப் பார்க்காமலே அனுதிஷிதாவின் உடலோ அருவருப்பில் நடுங்கியது. அவள் நடுக்கத்தை நோக்கியவனின் உள்ளமோ ஒரு வித குரூரத்துடன்... அடுத்த கணமே எதையோ மனதிற்குள் திட்டம் போட்டது. அதை செயலாக்க நினைத்தவன்

“well... என்னை என்னன்னு நினைத்திட்ட? ஆப்ட்ரால் ஒரு மரத்திற்க்காக உன்னைக் கடத்தி வந்து டார்ச்சர் செய்கிறவனா?” அவனின் பதிலில் சடார் என்று இவள் திரும்பிப் பார்க்க, “என்ன பார்க்கிற... நான் மரத்திற்க்காக உன் வீட்டுப் பக்கத்தில் குடி வரலை. நீ குணநாதனின் மகள்னு தெரிந்து தான் உன் பக்கத்து வீட்டில் குடி வந்தேன்” அவள் கேள்வியாய் நோக்க

“எதற்குனு கேட்கிறீயா? உன் ஃப்ராடு அப்பா குணநாதனுக்கும், எனக்கும் சில பைசல் இருக்கு. ஓப்பனா சொல்லணும்னா... அந்த ஆள் கிட்ட ஒரு முக்கியமான பேப்பர் இருக்கு… அது எனக்கு வேண்டும். அந்த ஆள் இப்போ உயிரோட இல்லாததால்... அவன் மகளான உன் கிட்ட தானே அது இருக்கணும்? சோ, எனக்கு அந்த பேப்பர் வேண்டும்”

அவனின் பதிலில் இவளுக்கு தலை சுற்றியது. உடனே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தரையில் அமர்ந்து தன் கால் முட்டிகளின் மேல் முகத்தை புதைத்தவள், “நீ எதைக் கேட்கிறேனு எனக்குப் புரியல... ஆனா எதுவா இருந்தாலும் என் அப்பா சம்மந்தப் பட்டது எல்லாத்தையும், நான் என் சித்திகிட்டேயும் அவங்க தம்பிகிட்டேயும் கொடுத்திட்டு வந்துட்டேன். இனி எதுவா இருந்தாலும் நீ அவங்ககிட்ட கேட்டுக்க...” இவளின் சோர்ந்த பதிலில்

“அவங்க இரண்டு பேர்கிட்டேயும் கேட்டாச்சு... உன்கிட்ட தான் இருக்கிறதா அதுங்க வாக்குமூலம் கொடுத்திருக்குங்க. சோ, நீ தான் தரணும்...”

“என் கிட்ட என் அப்பா சம்மந்தப்பட்டது எதுவும் இல்லை...”

“இதை நான் நம்ப மாட்டேன். உன் அப்பாவோட சொந்த ஊரான இந்த ஊரில்… அதாவது, இந்த நெடுவாசல் கிராமத்திலே காப்பர் ஃபாக்டரி வரத்தான் உன் அப்பா எல்லா தகிடு தத்தமும் செய்திருக்கான். அவன் கனவு, லட்சியப் படியே ஆலைக்கு அடிக்கலும் நாட்டி இருக்கான். ஆனா அதன் பிறகு அங்கு வேலைகள் நடக்கலை... அப்போ M.Pயா இருந்த உன் அப்பன் தான் ஏதோ செய்திருக்கான்.

யார்கிட்ட எவ்வளவு பணம் வாங்கி இந்த வேலையை நிறுத்தினானு தெரியல... அவன் இறந்து இப்போது அது தொடர்பான வேலைகள் மேற்கொண்டு தொடர முடியாத அளவுக்கு... உன் அப்பாகிட்ட ஒரு ஃபைல் சிக்கியிருக்கு. எனக்கு அது வேண்டும்... எனக்கு என்பதை விட PMக்கு வேணும். சோ, ஃபைல கொடுத்துவிடு” இவனின் நிறுத்தி நிதானமான வார்த்தையில் மறுபடியும் அவளுக்குத் தலை சுற்றியது.

“என்கிட்ட அப்படி எதுவும் இல்லை” இவள் உண்மையை உரைக்க

“ஏய்... நல்ல விதமா கொடுத்திடு. இதில் P.M சம்மந்தப்பட்டு இருக்கார். நான் இங்கே வருவதற்கு முன்பு, அவர் கூட மீட்டிங் முடித்துவிட்டு தான் வந்து இருக்கேன். அப்போ அவர் சொன்ன வார்த்தை... அந்த ஃபைலுக்காக நீ என்ன வேண்டுமேன்றாலும் செய் மிருடன் என்பது தான். நான் இன்னும் முழுசா இறங்கலை... என்னை என்ன வேணாலும் செய்ய வச்சிடாத... got it?” இவன் தன் பிடிவாதத்திலேயே நிற்க

“ஐயோ! சத்தியமா என் கிட்ட file இல்லை சார். என்னை நம்புங்க.... இதைத் தவிர அது சம்மந்தமா நீங்க வேற என்ன உதவி கேட்டாலும் செய்கிறேன் சார்”

“ஏய்... சும்மா சும்மா பொய் சொல்லாத. உன் கிட்ட தான் அந்த ஃபைல் இருக்குன்னு உன் சித்தியும் அவங்க தம்பியும் சொல்லிடாங்கன்னு நான் தான் முன்பே சொன்னனே... பிறகு எதுக்கு இந்த நடிப்பு? உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு… PM கிட்ட சொல்லி வாங்கித் தரேன்” இவன் பேரம் பேச

“இல்லை சார்... என் கிட்ட இல்ல... அதுங்க பொய் சொல்லுதுங்க... எனக்கு என்னமோ அதுங்க கிட்ட தான் இருக்கனும்னு தோணுது. அதனாலே தான் என் மேல் பழி போடுதுங்க. நிச்சயமா என் கிட்ட இல்லை சார்....” இவள் உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது போல் கெஞ்ச

“மறுபடியும்... மறுபடியும்... பொய் சொல்ற. இதை நான் நம்பத் தயாரா இல்லை...” நம்பிக்கையின்மையில் இவன் காட்டமாக பதில் தர

“சத்தியமா என் கிட்ட இல்லை சார்... இதற்கு தான் நீங்க என்னை கடத்தி இருக்கீங்கனா? இப்போ உங்க டைம் தான் வேஸ்ட்... நான் என் மகள் மேல் உயிரையே வச்சிருக்கேன்... அவ மேலே சத்தியமா என் கிட்ட இல்லை சார்... என் சித்தி கிட்ட தான் சார் இருக்கும்... நான் ஃபைலை வாங்கித் தர உதவி செய்கிறேன். இல்லனா இதற்கு பதில் நீங்க வேற என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன் சார்...” இவள் தன்னிலை மறந்து அவசரபட்டு வாக்கு கொடுக்க

அவளை கூர்ந்து நோக்கியவன், “உண்மையாவா? சொன்ன வாக்கை காப்பாற்றுவீயா? ஏமாற்றிட்டு, பின்வாங்க மாட்டியே!” இவன் ஆழ்ந்த குரலில் கேட்க

அவன் குரலின் பேதத்தை உணராமல் இவளோ... “நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் சார்... இது என் மகள் மேல் சத்தியம் சார்... நம்புங்க” இவள் கைகேயிக்கு வாக்கு கொடுத்த தசரதன் போல் வாக்கு கொடுக்க..

“ம்ம்ம்...” தன் தாடையை விரல்களால் நீவியவன்... “அப்போ நீ எனக்கு வேணும்… அதாவது ஒரு நாள் முழுசா நீ எனக்கு வேணும்” கண்ணில் வேட்டையாடும் வெறியோடு இவன் அவளிடம் கேட்க

ஒரு வித அதிர்வுயுடன் அவனை நோக்கிய ஷிதாவோ... தான் கொடுத்த வாக்குக்காக அக்னி பரீட்சைக்குத் தயாரானாள் அவள்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN