முகவரி 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனுவிடம், ஒரு பெண் நடு வழியில் ஒரு முகவரியைப் பற்றி கேட்கும் போது... ஏதோ அசட்டையாகத் தான் அந்த பெண்ணுக்குப் பதில் தந்தாள் இவள். ஆனால் அவள் மயக்க மருந்து நெடியை இவள் மூக்கில் வைத்த நேரம் தான்… தான் கடத்தப் படுகிறோம் என்ற உள்ளுணர்வு இவளுக்கு உந்த... யார் தன்னைக் கடத்துகிறார்கள் என்பதைக் காண அனு தயங்க வில்லை.

ஆனால் அதில் யாரும் தெரிந்த முகம் இல்லை என்பது தான் பரிதாபம்... தற்போது இங்கு சுயநினைவு வந்த பிறகு... இவளின் அறிவு ஜோதி தான் தன்னைக் கடத்தியிருப்பான் என்று எச்சரிக்க... அதைப் பொய்யாக்குவது போல் நான் தான் உன்னைக் கடத்தியவன் என்று இவள் முன் வந்து நின்றான் மிருடவாமணன்.

தன் எதிரே தோன்றி, அவன் வாய் மொழியாக இவன் தன் கூற்றைச் சொல்லும் வரை... சத்தியமாக ஒரு துளி கூட மிருடன் மேல் சந்தேகம் கொள்ளவில்லை அனு. இப்படி இவன் கடத்தியது அதிர்ச்சி என்றால்... அவள் தந்தை குறித்து இவன் கேட்கும் ஃபைல் அதை விட அதிர்ச்சியை அவளுக்கு அளித்தது... இல்லாத ஃபைலை... அவளுக்குத் தெரியாத ஓன்றை பற்றிக் கேட்டால் அவளும் தான் என்ன செய்வாள்?

ஆனால் அவன் சொன்ன காப்பர் ஆலை பற்றி இவள் தந்தை இவளிடம் எப்போதோ சொல்லியதாக ஞாபகம்... அதனால் அவன் கேட்க வரும் ஃபைல் பற்றி அனுவுக்கு தற்போது கொஞ்சம் புரிந்தது. அது எப்படி பட்ட ஆலை என்பதையும் உணர்ந்தவள் என்பதால்... அந்த ஃபைலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவனால் தான் கடத்தபட்டுள்ளோம் என்பதையும் மறந்து உண்மையிலேயே அந்த ஃபைலைக் கண்டுபிடித்து இவனுக்கு தர உதவுவதாக தான் கூறினாள் அனு.

அதனால் தான் அவளையும் மீறி அவள் பேச்சில் அவனை சார் என்று அழைத்தது. அவன் கோப்பைக் கண்டுபிடித்துத் தரத் தான் உதவி கேட்பான் என்று இவள் நினைத்திருக்க... அவன் கேட்டதோ வேறு...

‘என்ன கேட்டு விட்டான்...’ இவளுக்கு விழிகள் சொருகிய நேரம்... தான் கேட்டது சரியோ என்பது போல் அதிர்ந்து அருவருத்து திகைப்புடன் இவள் அவனை நோக்க...

இதுவரை அவள் முகத்தையே அவதானித்து இருந்தவனின் உடல் கோபத்தில் நாண் ஏறிய வில்லாய் வளைய... கை விரல்களைத் தன் பலம் கொண்ட மட்டும் இறுக்கியவன்... “நீ கேட்டது சரி தான்... உனக்கு மறுபடியும் என் வாய் மொழியாய் சொல்லி கேட்கனும்னு ஆசை இருந்தா நல்லா கேட்டுக்கோ. நீ ஒரு நாள் முழுக்க எனக்கு வேணும்” ஒவ்வோர் வார்த்தையாய் இவன் நிறுத்தி நிதானமாகச் சொல்ல...

இந்த வினாடியே மிருடனின் குடலை உருவி மாலையாய் தன் கழுத்தில் சூட இவளுக்குள் வேகம் எழுந்தது... ஆனால் அவளுடைய உடலோ அதை செய்ய ஒத்துழைக்காமல் போக…

‘அப்போ இவனுக்கு என்னை நினைவிருக்கா? முதல் சந்திப்பில் தெரியாத மாதிரி நடந்து கொண்டானே! என்னை மறக்கலையா இவன்?’ இவளின் என்ன ஓட்டத்தைப் படித்தவனாக

“அது எப்படி நான் உன்னை மறப்பேன்? இந்தப் பிறவி முழுக்க நீ என் நினைவை விட்டுப் போக மாட்ட… ஏன்னா, உன் அப்பா செய்தது அப்படி! பிறகு நீ அன்று என்னிடம் நடந்து கொண்டது அதை விடப் பெரியது... சோ, உன்னை மறப்பேனா… அல்லது மன்னிப்பேனா?” எள்ளி நகையாடுவது போல் இவன் பதில் தர

இவளுக்கு உடலும் உள்ளமும் எரிந்தது. உடல் சோர்வடையவும், “நீ இன்னும் அதை மறக்கவே இல்லையா? அதான் என் அப்பாவை பழிவாங்கிறதா நினைத்து என் வாழ்க்கையையே அழிச்சிட்டியே... இன்னும் உனக்கு என்ன வேணும்?” இவள் குரலில் வெறுப்பு மண்டியிருந்தது.

“அதான் சொல்லிட்டனே... நீ தான் வேண்டும்னு! இன்னும் எத்தனை முறை என் வாய் மொழியா கேட்க ஆசைப்படுகிற டார்லிங்?”

“ஏய்...” அவன் கழுத்தை நெரிக்க இவள் சிரமப்பட்டு நெருங்க நினைக்க... ஏனோ... இவள் உடல் அந்தரத்தில் உள்ள வாடிய கொடியைப் போல் துவண்டது. அதில் தரையில் தொப்பென அமர்ந்தவள், “நான் திருமணம் ஆனவ டா… உனக்கும் மனைவி குழந்தைன்னு இருக்காங்க. என் கிட்ட இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லை?”

“so what? அதனால் என்ன?” தமிழ் இங்கிலீஷ் இரண்டிலும் இப்படியான கேள்வியைக் அவளிடம் கேட்டவன்… “அது அப்போ! இப்போ நீ யாரும் இல்லாத அநாதை”

“ஆனா நான் உன் எதிரியோட மகள்...”

“அதனால் தான் பழிவாங்க நினைக்கிறேன்”

“ஆனா... ஆனா.. என்னைத்தான் என் கணவர் கிட்டயிருந்து பிரித்து.. ஏற்கனவே நீ என்னைப் பழி வாங்கிட்டியே!”

“ஆமாம்... அதை யாரு இல்லைன்னு சொன்னா? இன்னும் சொல்லணும்னா... உன் புருஷனைக் கொன்னதே நான் தான். ஏன்... உன்னை மறுபடியும் பழிவாங்கக் கூடாதா?”

இவனின் எகத்தாளமான பதிலில், “ச்சீ...” என்று முகம் சுளித்தவள், “நீ உன் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன்னு சொன்ன?” இவள் அவன் சொன்ன வார்த்தையையே அவனுக்கு திரும்ப நினைவு படுத்த,

“ஆமாம்... ஆனா அதெல்லாம் நான் சொன்னது பெண்களுக்கு. ஆனா நான் தான் உன்னைப் பெண் இனத்திலேயே சேர்த்துக் கொள்ள வில்லையே? அதுவும் இல்லாமா நீ என்ன அடித்தவ....”

“அதற்காக இப்படியா? நீ என் கிட்ட அசிங்கமா நடந்துக்க நினைப்பது தவறு! வேண்டாம்… என்ன விட்டுடு” இவளால் வாய் திறந்து அவன் கேட்ட வார்த்தையை கூட திரும்ப சொல்ல நாக்கு கூசியவளாக நிறுத்த.

“என் தகுதிக்கு நீ ஈடு இல்லை தான். அதான் சொன்னனே... உன்னைப் பழிவாங்கன்னு...” என்று அதற்கும் கூலாய் பதில் தந்தவன், “எதுக்கு தேவையில்லாத பேச்சு? நான் கேட்டதை என்றைக்கு வைத்துக்கலாம் அதை மட்டும் சொல்லு...”

“ஓஹ்! நான் சம்மதிப்பேன்னு உனக்கு அவ்வளவு திண்ணமா?”

“ஆமாம்... பின்னே? உனக்கு தான் நான் வேற ஆப்ஷனே கொடுக்கலையே... நீ எனக்கு உடன்படும் வரை நான் உன்னை இந்த இடத்திலிருந்து விடுவிக்க மாட்டேன்” இவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல...

“ஆனா என் உயிர் போயிடும்... அதை உன்னால் பிடித்து வைக்க முடியாது... தெரியுமா?” இவளும் தன் மனதில் உள்ள திட்டத்தை குரலில் காட்டி பதில் தர

அதில் கோபம் தலைக்கு ஏற, “அப்போ சாகுடி... இப்பவே... இந்த வினாடியே... சாகுடி!” என்றவன் தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கிக் கொண்டு கொலை வெறியுடன் அவளை நெருங்க,

அவளோ கொஞ்சமும் பயம் இல்லாமல்… மனதில் திடத்துடன் கண்ணில் சோர்வுடன் அவனை வெறித்துப் நோக்க... அதில் நிதானத்திற்கு வந்தவன், “ச்சை...” கையில் இருந்த மர நாற்காலியை இவன் தூக்கி வீச... அதுவோ சுக்கு நுறாய் உடைந்து சிதறியது.

அதில் தன் உடல் அதிர, இவள் சுவரோடு ஒன்றவும்... அவள் முன் ஒரு காலை முழங்காலிட்டு அமர்ந்தவன்... சுட்டு விரலால் அவள் தாடையைப் பற்றி உயர்த்தி, “இப்போ நீ உயிரோட இருப்பதே நான் உனக்கு போட்ட உயிர் பிச்சைடி!” இவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல
அவளோ ஒன்றும் புரியாமல் விழிகளை விரித்தாள்.
“என்ன புரியலையா?”

“.....”

“நேற்று நீ கண் விழித்த பிறகு மறுபடியும் மயக்கத்துக்குப் போய்ட்ட. அதில் டாக்டரை அழைத்து வந்து பார்த்ததில் நீ ரொம்ப வீக்கா இருக்கிறதா சொல்லி, இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றினார் அவர். அதற்கு நான் அனுமதித்தனால் தான் இன்று நீ இவ்வளவு தெம்பா... தில்லா என் கிட்ட பேசுற! உன்னை எல்லாம் நேற்றே சாக விட்டிருக்கணும் டி” அவள் முகத்தை இறுக்கப் பற்றி தன் மூச்சுக் காற்று அவள் முகத்தில் உரசும்படி அவளிடம் நெருங்கியவன், “என்ன… உனக்கு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டு அதையும் செய்யவா?” இவன் குரூரமாய் கேட்க

அவன் கையை வெறுப்புடன் தட்டி விட்டவள், “நீ உணவே கொடுத்தாலும்... உன்னை மாதிரி ஒருத்தன் கொடுக்கிற உணவை நான் சாப்பிட மாட்டேன் டா” இவள் இறுமாப்பாய் சொல்ல

“ஏய்...” அவளைப் பிடித்துத் தள்ளி விட்டவன், “அது என்ன டி... என்ன மாதிரி? அந்த குணம் கெட்ட குனநாதனின் பொண்ணு நீன்னு நிரூபிக்கிறியா? பார்க்கலாம் டி... இதில் நீயா நானான்னு...” என்றவன் அவளை சட்டை செய்யாமல் வெளியே செல்ல இவன் எத்தனிக்க…

“ரொம்ப ஆடாத... இந்த ஜென்மத்தில்... என் விஷயத்திலே நீ நினைத்தது எதுவும் நடக்காது. நான் சாவைக் கண்டு பயப்படுகிறவ இல்லை. என் மகளைக் கூட என் புருஷன் பார்த்.....” அவ்வளவு தான் மேற்கொண்டு பேச முடியாமல் மயக்கத்தில் சரிந்தாள் அனு.

அவள் சொன்ன வார்த்தையை உள் வாங்கியபடி கண்ணில் கூர்மையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவள் நினைவை இழந்திருப்பதைப் பார்த்து... ஒரு வித திருப்தியுடன் அந்த அறையிலிருந்து வெளியேறினான் மிருடன்.

அதன் பிறகு அனுக்கு மயக்கம் தெளியவும்... அவளுக்கு வேண்டியதைச் செய்து பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் அவள் கூடவே இருந்தாள்... அனுவும் சுருண்டு படுத்த நிலையிலே இருந்தவள். உணவைக் கொடுத்தாலும் இவள் உண்ணாமல், ஏன்…. பச்சத் தண்ணியைக் கூட பல்லில் பட விடாமல் வீம்புக்கென்று இவள் படுத்திருக்க... இதை அறிந்ததும் மிருடனுக்கு கோபம் தலைக்கு ஏறியது, அவளை விட வீம்பென உணவை அவளுக்கு ஊட்டி விட எண்ணி அவள் அறைக்கு வந்தவன்... அவள் படுத்திருக்கும் நிலை... அவனை அப்படி செய்ய விடாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுக்க... அதில் தன் மீதே கோபம் கொண்டவனாக,

“என்ன… பட்டினி போராட்டமா இல்லை உண்ணாமல் இருந்து சாகத் திட்டமா? எதுவா இருந்தாலும் உனக்கு ஒன்று தெரியுமா? உனக்கு ட்ரிப்ஸ் ஏற்றியாவது தான் நினைத்ததை சாதிப்பான் இந்த மிருடவாமணன்... பார்க்கிறீயா?” இவன் அதிகாரமாய் சொல்ல

அவன் குரலில் அவனை நிமிர்ந்து நோக்கியவள்… ‘உன்னால் முடிந்ததை செய்துக்கோ’ என்பது போல் சவாலுடன் இவள் கண்களை மூடிக் கொள்ள, இன்னும் வெகுண்டான் மிருடன். ஆனால் வாழ்வில் இரண்டாம் முறையாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தான் போனான் மிருடவாமணன்.

அங்கிருந்து அவள் நிலையை மேற்கொண்டு பார்த்து சந்தோஷப் பட முடியாமல் இவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் வந்து சேர... அதை காணச் சென்று விட்டான் இவன். ஆனால் அனு தன் பிடிவாதத்தில் இன்னும் வீம்பாய் இருப்பதை அறிந்ததும் மறுநாளே இவன் அவள் முன் வந்து நிற்க... இரண்டு நாளாய் சோறு தண்ணி என்று எதுவும் வயிறுக்கு இல்லாததால் கிழிந்த நாராய் படுத்து இருந்தாள் அனு.

அவளின் நிலையைக் கண்டு கை முஷ்டி இறுக, சுவற்றில் ஓங்கி குத்தியவன்... பின் குனிந்து அவளைத் தன் கைகளில் ஏந்த... அவளுக்கோ யார் இவன் என்று அறியாததால் நிதானம் இல்லாமல் திமிர... “சும்மா இரு டி... இப்போ உன்னை நான் என்ன செய்தாலும் உனக்கு என்னன்னு கூட தெரியாது. அதை விட என்னை தடுக்க முடியாது. இதுல வீம்பு வேற...” என்று ஆத்திரம் கொண்டவன் வலுக்கட்டாயமாய் அவளைத் தன் காரில் அமரவைத்து அழைத்துச் செல்ல... எங்கோ தன் உடல் பறப்பது போல் இருக்கவும் கண்களை இருக்க மூடி சீட்டில் தலையை சாய்த்து கொண்டாள் அனு.

கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் அனு வீட்டு வாசலில் அவன் கார் வந்து நிற்கவும்... மறுபடியும் அவளைத் தன் கைகளில் ஏந்தியவன், அவள் வீட்ற்குள் நுழைந்து அவள் அறைக்குள் நுழைய... அங்கு டாக்டர், நர்ஸ் என்று அனைவரும் இருந்தனர். பின் அவளுக்கு வேண்டியதை கவனிக்க... மருந்தின் உபயத்தால் நீண்ட நேர தூக்கத்திற்குச் சென்றாள் அனு. இல்லை இல்லை… அப்படி சொல்லக் கூடாது. அந்த மயக்கத்திலும் தன் கூடு வந்து தாம் சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியில் துயில் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்!

இப்படியாக இவள் படுக்கையில் இருந்து எப்போதாவது கண் விழித்த இரண்டு தினமுமே... கையில் ஜூஸ் உடன் அவள் பக்கத்திலேயே பார்வதியும்... அனுவைப் பரிசோதிக்க ஒரு நர்ஸும் உடன் இருந்தனர். ஆனால் மகள் மான்வி மட்டும் எங்கும் எழுந்து விளையாட செல்லாமல்... எப்போதும் அனு படுக்கையில் தாயுடனே சுருண்டு படுத்திருந்தாள். இவளுக்கு கொஞ்சம் உடல் தேறவும்,

“மான்விக்கு என்ன ஆச்சு ஆன்ட்டி? ஏன்... எப்போதும் தூங்கிட்டே இருக்கா?” இவள் கவலையாய் கேட்க

“கண் முழிச்சிட்டியா அனும்மா? என்னமோ போ... எங்களை எல்லாம் என்னமா பயமுறுத்திட்ட... உன் அப்பாவுக்கு விரோதிகள் யாரோ உன்னையை கடத்திக் கொண்டு போனதாகவும்... அதிலே அங்கியிருந்து தப்பித்து சுயநினைவு இல்லாமல் நீ ரோட்டில் விழுந்திருந்ததால்... அப்போ அங்கே அந்தப் பக்கமா வந்த நம்ம பக்கத்து வீட்டு தம்பி தான் உன்னை பார்த்திட்டு காப்பாற்றி கூட்டிட்டு வந்துச்சு. இல்லைனா உன் நிலைமை என்ன ஆகியிருக்கும்? எல்லாம் உன் அம்மா செய்த புண்ணியம் தான்... நீ அந்த தம்பி கண்ணில் பட்ட... பெரிய மனுஷங்க பெரிய மனுஷங்க தான்! என்னமா அந்த தம்பி உன்னையும், நம்ம மான்வி பாப்பாவையும் பார்த்துகிட்டார் தெரியுமா?” இவள் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பார்வதி அடுக்கிக் கொண்டே போக…

இதெல்லாம் மிருடன் சொல்லி இருக்கும் கட்டுக் கதை என்பதில் கடுப்பானவள், “ஆன்ட்டி... நான் நம்ம மான்வி உடம்புக்கு என்னனு கேட்டேன்… அதைச் முதலில் சொல்லுங்க” இவள் அழுத்திக் கேட்க

“அது வந்து அனும்மா...” பார்வதி ஆரம்பிக்கும் நேரம்

அவள் அறைக்குள் நுழைந்த மிருடன், “உங்களை அங்கிள் கூப்பிடறார்… நீங்க போங்க” என்று பார்வதியை வெளியே அனுப்பியவன்

அங்கு துயில் கொண்டிருந்த மான்வியின் நெற்றியை வருடி... அவள் கழுத்தின் அடியில் கை வைத்து சுடு இருக்கிறதா என்று பார்த்தவன்... பின் கேசம் ஒதுக்கி... அவளுக்கு போர்வையைச் சரி செய்தபடி இவன் நிமிர...

மிருடனையே குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு. அதில் இவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, “என்ன?” என்று கேட்க,

“என் அனுமதி இல்லாமல் என் வீட்டுக்குள்ள... என் அறைக்குள்ளே வரீயே... இதற்கு என்ன பெயர் தெரியுமா?” இவள் கோபத்தில் பட்டென்று கேட்டு விட

,இவனோ கோபப்படாமல் அவள் கட்டிலில்... அவள் பக்கத்தில்... உரிமைக்காரன் போல் அமர்ந்தவன், “well...” என்ன கேட்ட என்பது போல் அவளை ஆழ்ந்து நோக்க... இவளோ பயத்தில் கட்டிலின் விளிம்பில் ஒதுங்கினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN