முகில் கூரையை பார்த்தபடி கட்டிலில் விழுந்தான். அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டான்.
"மாமா.. மாமா.." என்ற யதிராவின் குரல் ஓயாமல் செவிகளில் ஒலித்தது. அவளை பார்த்த முதல் நாள் நினைவுக்கு வந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒருநாள்..
சௌந்தர்யா தான் ஒருவனை காதலிப்பதாக வீட்டில் சொன்னாள். அம்மா முதலில் கத்தினாள். ஆனால் சௌந்தர்யா அப்பாவின் செல்ல மகள் என்பதால் அப்பா சிறிது தயக்கத்திற்கு பிறகு அவளது காதலை ஏற்றுக் கொண்டார்.
அதே வேளையில் ரூபனும் தன் வீட்டில் தனது காதலை சொன்னான். அப்பா அம்மாவும் மகன் மீது இருந்த நம்பிக்கையில் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டார்கள்.
அடுத்து வந்த வாரத்தில் சௌந்தர்யாவை பெண் கேட்டு ரூபன் வீட்டிலிருந்து வந்தார்கள்.
அப்போது முதுகலை கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான் முகில். அவன் படிப்பில் சுட்டி. ஆனாலும் புத்தகத்தை எப்போதுமே புரட்டி கொண்டிருப்பான். அப்படி அவன் வாசலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருந்த நேரத்தில்தான் ரூபனின் குடும்பம் அங்கு வந்தது. தனது பெரிய கண்ணாடியை கழட்டி புத்தகத்தின் இடையே வைத்துவிட்டு எழுந்து நின்றான் முகில்.
"வாங்க.. வாங்க.." முகிலின் அம்மாவும் அப்பாவும் ரூபனின் குடும்பத்தை ஆவலோடு வரவேற்றனர்.
ரூபனின் அப்பா முகிலை பார்த்து புன்னகைத்தார்.
"எங்க பையன்தான்.. எப்பவும் புத்தகமும் கையுமாதான் இருப்பான்.." என்று சொன்ன முகிலின் அம்மா அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.
ரூபனும் அவனது பெற்றோரும் உள்ளே சென்ற பிறகு அவர்களை பின்தொடர்ந்து நடந்தான் முகில். அவன் வீட்டின் வாசற்படியில் கால் எடுத்து வைத்த நேரத்தில் "ஸ்ஸ்.." என்றொரு திணறலாய் ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தான். காரிலிருந்து ஒரு பெண் இறங்கிக் கொண்டிருந்தாள். இறங்கி கொண்டிருந்தாள் என்பதை விட இறங்க முயற்சித்து கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம். கையில் பழத்தட்டை வைத்திருந்தவளின் காலுக்கடியில் அவளின் துப்பட்டா சிக்கி கொண்டதில் காலை அப்படியும் இப்படியுமாக திருப்பி திருப்பி அந்த துப்பட்டாவை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இரு கையிலும் பிடித்திருந்த பழத்தட்டு ஒரு பக்கமாக சாய்ந்துக் கொண்டிருந்ததை கூட அவள் கவனிக்கவில்லை. அந்த தட்டில் இருக்கும் பழங்கள் கீழே விழும் நிலையில் இருப்பதை கண்டு புத்தகத்தை தான் முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் வைத்து விட்டு அவசரமாக வாசலுக்கு ஓடினான் முகில். பழத்தட்டை தன் கையில் வாங்கி கொண்டான். பழத்தட்டு தன் கையை விட்டு பறி போனதில் அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்.
முகிலுக்கு பெண் பிள்ளைகள் மீது அவ்வளவாக எந்த ஈடுபாடும் கிடையாது. குண்டு பையா என்றும் கருவா பையா என்றும் அவனுக்கு பட்டப்பெயர்கள் இருந்தது. பெரிய சைஸ் கண் கண்ணாடி அணிந்து கொண்டு இருந்தவனை பெண்களும் சுத்தி வந்து ரசிக்கவில்லை. அதனால் அவனுக்கு இந்த காதலை பற்றி யோசிக்க ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
தனது கையிலிருந்த பழத்தை வாங்கி கொண்ட முகிலை நிமிர்ந்து பார்த்த யதிரா சிறு வெட்க புன்னகையோடு "தேங்க்ஸ்.." என்றாள் மெல்லமாக. அவள் சொன்னது அவன் காதில் விழவே இல்லை. அவ்வளவு மெல்லமாக சொல்லியிருந்தாள் அவள். அவளது உதட்டசைவை வைத்து அதை தேங்க்ஸ் என யூகித்திருந்த முகில் ஓகே என தலையசைத்தான்.
யதிரா தனது துப்பட்டாவை காலின் சிக்கலில் இருந்து எடுத்து கழுத்தை சுற்றி சரியாக போட்டு கொண்டு கீழே இறங்கினாள். முகில் அவளது கையில் பழத்தட்டை தந்து விட்டு உள்ளே நடந்தான்.
யதிராவுக்கு அப்பாவையும் அண்ணனையும் தவிர வேறு ஆண்களோடு அதிகம் பழக்கம் கிடையாது. எப்போதும் அப்பாவின் சட்டையை பிடித்துக் கொண்டு சுற்றுபவள் அவள். அக்கம்பக்கத்து கடைக்கு செல்வதென்றால் கூட அப்பாவை அழைத்துக் கொண்டுதான் செல்வாள். அப்பாதான் தினம் பள்ளியில் கொண்டு சென்று விட வேண்டும். மீண்டும் கூட்டி வர வேண்டும். தன் தந்தையின் நிழலில் முழுக்க முழுக்க தந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே சார்ந்து வாழ்ந்தவள் அவள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதை விட தன்னிசையாக ஏன் செயல்பட வேண்டும் என்று எண்ணுபவள் அவள்.
முகில் பெண் கேட்டு வந்தவர்களை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டான். மீண்டும் அக்காவின் திருமண நாள் அன்று மண்டபத்தில்தான் யதிராவை பார்த்தான் அவன். அவளின் அப்பாவின் சட்டையின் கையை பிடித்தபடி அவளது அப்பாவின் வாலை போல சுற்றிக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அவ்வப்போது கண்ணில் படுபவளை மீண்டும் திரும்பி பார்க்க தோன்றவில்லை முகிலுக்கு.
அக்காவிற்கு திருமணம் முடிந்தது. அடுத்து வந்த சில நாட்களில் முகில் படிப்பு முடிந்து வேலை தேட ஆரம்பித்தான். யதிரா அந்த வருடத்தில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.
முகிலுக்கு விரும்பியபடியான வேலைகள் கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஈடுபாட்டோடு செய்வோம் என்ற நம்பிக்கையும் இல்லை அவனுக்கு. அதையும் மீறி அந்த வேலைகளில் சேர்ந்தாலும் கூட சில மாதங்களில் அந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலையை தேட ஆரம்பித்தான். தனக்கு பிடித்த வேலை எதுவென்று தேடிக் கொண்டிருந்தான் அவன்.
அந்த வருடம் முடிய இருந்த நேரத்தில் சௌந்தர்யா முகிலுக்கு யதிராவை திருமணம் செய்து வைக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்தாள். முகிலுக்கு திருமணம் பற்றி அவ்வளவாக கனவில்லை. அதனால் தனக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்த பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் என்று சொன்னான். ஆனால் அக்கா திருமணம் முடித்த பிறகு ராசி கூடி வரும். வேலை கிடைக்கும் என்று சொன்னாள். அவனுக்கு இந்த ராசியின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் அக்காவின் பேச்சில் அம்மாவும் அப்பாவும் கரைந்து போனார்கள்.
யதிரா சின்னபெண். அவளை நிறைய படிக்க வைக்க தனக்கு ஆசையுள்ளதாக அவளின் அப்பா சொன்னார். "அதுக்காக காலம் முழுக்க வீட்டுலயா வச்சிருக்க முடியும்.? அவளை முகிலுக்கு கட்டி வைங்க அப்பா. கல்யாணம் முடிஞ்ச பிறகு படிக்கட்டுமே. அதுல என்ன போயிடபோகுது.? முகிலை மாதிரி ஒரு நல்ல பையன் மறுபடி கிடைப்பானா.?" என்று கேட்டான் ரூபன்.
"நல்ல பையன்தான்.. இன்னும் மூணு நாலு வருசம் போன பிறகு கல்யாணம் நடத்தி வைக்கலாமே.." என்றார் அப்பா.
ஆனால் தினம் ரூபன் அதையே பேச ஆரம்பித்தான். முகிலை பற்றியே இந்த வீட்டில் பேச்சு ஓடியது. முகிலின் வீட்டில் யதிராவை பற்றியே பேச்சு ஓடியது.
சௌந்தர்யாவும் ரூபனும் நினைத்தபடியே விரைவிலேயே இரு வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதித்து யதிரா முகில் திருமணத்தையும் நடத்தினர்.
முகிலும் யதிராவும் பெற்றோர் ஆட்டி வைத்த பொம்மையாகதான் அதுநாள் வரையிலுமே இருந்தனர். அவர்களது வாழ்க்கையை பற்றி இருவருமே நொடிநேரம் கூட சுயமாக சிந்தித்தது கிடையாது. நடப்பது நடக்கட்டும். நடத்துபவர்கள் நடத்தட்டும் என்ற ஒரு மனநிலையில் இருந்தனர் இருவரும். பெற்றோர் மீது கொண்ட நம்பிக்கையா இல்லை வாழ்வின் மீது கொண்ட பற்றற்ற நிலையா என்று அவர்கள் இருவருக்குமே தெரியாது.
யதிரா எதற்காய் தன்னை திருமணம் செய்தாள் என்று கேள்வியை திருமணம் முடிந்த நான்காம் நாள்தான் கேட்டான் முகில். "ஏனா எங்க அப்பாவுக்கு உங்களை பிடிச்சிருந்தது. அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு. அதான் கட்டிக்கிட்டேன்.." என்று சொன்னாள் அவள். அந்த இடத்தில் அவளின் அப்பா யாரை கை காட்டி இருந்தாலும் அவள் கல்யாணம் செய்திருப்பாள் என்பது அவனுக்கும் புரிந்தது.
இருவருமே பல விசயங்களில் ஒரே மாதிரியான குணாதிசயங்களை கொண்டிருந்ததை அடுத்து வந்த நாட்களில் புரிந்து கொண்டனர்.
பெற்றோரின் ஆசைக்காக திருமணம் செய்துக் கொண்டவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களிலேயே ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்து விட்டனர். இயல்பாய் அமைந்த காதலில் அவர்களின் ஒவ்வொரு நொடியும் அழகாகிக் கொண்டிருந்தது.
வேலை தேடி அலைந்தான் அவன். அவளோ கல்லூரியை தேடி ஓடினாள். மீதி இருந்த நேரங்களில் சலிக்காத கதைகளை பேசினர் இருவரும். பேச பேச அவனை அதிகமாக பிடித்து போனது அவளுக்கு. பார்க்க பார்க்க, பழக பழக அவளை அளவுக்கு அதிகமாகவே பிடித்து போனது அவனுக்கு.
அவர்களின் திருமணம் முடிந்த ஆறாம் மாதம் அவளின் தந்தை மாரடைப்பில் இறந்து போனார். அவள் அதிகம் சார்ந்திருந்த தந்தை இறந்ததில் அதிகம் உடைந்து போனவள் தோள் தந்த கணவனிடம் முழுமையாக சார்ந்து போய் விட்டாள். பார்ப்பவர் கண்களுக்கு ஒட்டுண்ணி போல் இருந்தது அவள் முகிலோடு கொண்ட சொந்தம். வாழ்வியலையோ அனுபவத்தையோ அதிகம் கற்றிறாத யதிராவுக்கு தான் முகிலோடு கொண்ட பந்தம் எத்தகையது என்று அப்போது புரியவில்லை.
அடுத்து வந்த ஆறாவது மாதத்தில் சௌந்தர்யாவும் ரூபனும் விவகாரத்தை வாங்கி கொண்டனர். தாய் வீடு வந்து சேர்ந்த சௌந்தர்யா யதிராவை முறைக்க ஆரம்பித்தாள். யதிராவும் முகிலும் சிரித்து பேசுவது அவளுக்குள் அனலாய் எரிந்தது. தனக்கு வாழ்க்கை பாலையாய் ஆனதாலோ என்னவோ யதிராவின் சிறு சிரிப்புகளையும் சிணுங்கல்களையும் சௌந்தர்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் வெறுத்து வந்த ஒருத்தனை தினம் தினம் நினைவுபடுத்திக் கொண்டிருந்த யதிராவை வீட்டிலிருந்து வெளியேற்ற நினைத்தாள் அவள்.
அதற்காய் அவள் போட்ட திட்டம்தான் கேன்சர் என்றொரு பொய். ஜீரண கோளாறால் மருத்துவமனை சென்றவனுக்கு தான் பேசி வைத்த மருத்துவர் மூலம் ரத்த மாதிரி எடுக்க வைத்து கேன்சர் என்று ஒரு ரிப்போர்ட்டை தர வைத்தாள் அவள். தனக்கு கேன்சர் உள்ளதாக அக்காவிடம் அழுது புலம்பினான் அவன். 'இனி எப்படி யதிராவோடு வாழ முடியும்' என்று கேட்டு அழுதான். அப்போது அவள் சொன்ன யோசனைதான் விவாகரத்து. 'என் அக்கா வாழாத வீட்டின் பெண்ணை என்னால் மனைவியாக வைத்து கொள்ள முடியாது என்று சொல்லி விவாகரத்து செய்து விடு..' என்றாள் அவள்.
சுய புத்தியை அதிகம் செலவிடாமல் எப்போதும் பெற்றோர் மற்றும் சகோதரியின் அறிவுரையிலேயே வாழ்ந்து வந்தவன் அன்றும் அப்படி ஒரு அறிவுரையைதான் கேட்டான்.
யதிரா தன்னை எந்த அளவு சார்ந்து வாழ்கிறாள் என்பதை அவன் நன்றாக அறிவான். தந்தையின் இறப்பையே தாங்காதவள் தான் இறந்தால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டாள் என்று பயந்தான். அதையும் மீறி அவள் இங்கு வாழ்ந்தாலும் கூட அம்மாவும் அக்காவும் அவளை ஏதாவது திட்டி தீர்ப்பார்கள் என்று மனம் நொந்தான். அவன் கண்ணெதிரிலேயே அவள் பலநாள் திட்டு வாங்கியுள்ளாள். காதலினால் அவள் வாங்கும் திட்டில் முழு வலியை இவனும் உணர்ந்தாலும் கூட அவளை போலவே இவனும் ஏதும் எதிர்த்து பேசாத அளவுக்கு அப்பாவியாகதான் இருந்தான். இறப்பால் பிரிவதை விட இப்படி பிரிந்தால் தன் மீது உள்ள கோபத்திலாவது அவள் நல்வாழ்வு வாழ்வாள் என்று நம்பிக்கை கொண்டான். அது போலவே அவளை விவாகரத்து செய்து விட்டு ஊரை விட்டே ஓடிப்போனான். தனது செயலின் ஆரம்பமே தவறு என்று விரைவில் புரிந்துக் கொண்டவன் அந்த ஆரம்பத்தின் தவறு ஒரு சதி என்று எப்போது அறிவானோ.?
"முகில்.. முகில்.." அம்மாவின் குரலில் எழுந்தான். யதிராவை பற்றிய நினைவில் உறங்கி போனதை கண்டு சின்னதாக சலித்துக் கொண்டான். அறை கதவை சென்று திறந்தான். அம்மா நின்றுக் கொண்டிருந்தாள்.
"குளிக்க போனவனை ஆளே காணமேன்னு தேடி வந்தேன்டா.." என்றாள் அம்மா.
"தூங்கிட்டேன்ம்மா.. கொஞ்ச நேரத்துல குளிச்சிட்டு வரேன்.." என்று மீண்டும் உள்ளே நடந்தான். துண்டு ஒன்றை எடுத்து கொண்டு குளிக்க சென்றான். குளித்து முடித்து வந்தவன் அலமாரியை திறந்த பிறகே அங்கிருந்த அனைத்து உடைகளும் அளவில் பெரியது என்ற நிதர்சனம் உணர்ந்தான்.
"அக்கா.." இவனது அழைப்பில் "ஏன்டா..?" என குரல் தந்தாள் அவள்.
"என் சூட்கேஸை கீழேயே விட்டுட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வாயேன்.." என்றான்.
டவலோடு நிலை கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தை பார்த்தான். ஜீவனிழந்த விழிகள் கண்ணாடியில் பிரதிபலித்தது. சில நொடிகளுக்கு பிறகு கதவு தட்டப்பட சென்று கதவை திறந்தான். இளம்பெண் ஒருத்தி வெட்கத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள்.
"அண்ணி இதை உங்ககிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க.." என்று தரையிலிருந்த சூட்கேஸை கண் காட்டினாள். அவன் சூட்கேஸை உள்ளே எடுத்துக் கொண்டு கதவை மூட இருந்த வேளையில் "உங்க ரூமை பார்க்கலாமா.?" என்று கேட்டாள் அவள்.
"இங்கே பொருட்காட்சி நடக்கல.." என்றவன் கதவை சத்தமாக சாத்தினான்.
"யார் இந்த அதிக பிரசங்கி.?" என கடுகடுத்தபடியே உடையை மாற்றினான். சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. இந்த முறை அக்கா வந்திருந்தாள்.
"நகை கடைக்கு வரியாடா.?" என்று கேட்டாள் அவள்.
"அங்க வேற நான் எதுக்கு.?" என கேட்டவன் சூட்கேஸில் இருந்த பர்ஸை எடுத்து வந்தான்.
"கிரெடிட் கார்ட் தரேன்.. நீயே பார்த்துக்க.." என்று கார்டை அவளிடம் நீட்டூ விட்டு திரும்பி நடந்தான்.
"நான் உன்கிட்ட பணத்துக்காக வந்தேன்னு நினைக்கிறியா.?" கோபமாக கேட்டாள் அக்கா. அவன் சலிப்போடு திரும்பினான். "வெளியே வர பிடிக்கலக்கா.." என்றான்.
"எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பியா நீ.? கலகலப்பா மனுசங்களோடு பழகி நாலு இடம் சுத்தி வந்தா என்ன குறைய போற.?" என்று திட்டினாள்.
அவளிடம் சமாதானம் சொல்ல முடியாது என்று எண்ணியவன் "சரி விடு நானும் வரேன்.." என்றான்.
நகைக்கடை ஒன்றின் முன் காரை நிறுத்தி விட்டு அக்காவும் அந்த அதிக பிரசங்கி பெண்ணும் முன்னால் நடக்க அவர்களை பின்தொடர்ந்து நடந்த முகில் அந்த கடையில் யதிராவை மீண்டும் பார்ப்போம் என்று நினைத்து கூட பார்க்கவேயில்லை.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
Word count 1307
VOTE
COMMENT
SHARE
FOLLOW