9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தனது அறைக்கு சென்று தனது சூட்கேஸை இழுத்து வந்தாள்."யதிரா வேணாம்மா.. இது சரி வராது.. நீ அமைதியா உள்ளே போம்மா.." என்று அவள் முன் நின்று தடுத்தாள் அம்மா.யதிரா தயக்கமாக முகிலை பார்த்தாள். முகில் யதிராவின் அம்மாவை தாண்டி சென்று யதிராவின் கையை பற்றினான்."சரி வருமா வராதான்னு நீங்க சொல்லாதிங்க.. நாங்களே வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்கறோம்.." என்றவன் யதிராவை அணைத்தபடி வெளியே நடந்தான்."அவளை கூட்டிட்டு போகாதிங்க தம்பி.. என் பையன் அவளை கொன்னு போட்டுடுவான்.." என்று கெஞ்சினாள் யதிராவின் அம்மா.அம்மாவை திரும்பி பார்த்த முகில் யோசனையோடு யதிராவை அழைத்துக் கொண்டு நடந்தான். அவளை காரில் அமர வைத்தவன் "நீ இங்கே உட்கார்ந்திரு.. நான் உங்க அம்மாவை சமாதானம் செஞ்சிட்டு வரேன்.." என்றான். யதிரா சரியென தலையசைத்தாள். புன்னகையோடு அவளின் கேசம் வருடி விட்டவன் திரும்பி யதிராவின் வீட்டுக்கு நடந்தான்.யதிராவின் அம்மா ரூபன் குளித்துக் கொண்டிருந்த குளியலறையின் கதவை தட்டினாள்."ரூபா சீக்கிரம் வாடா.. முகில் தம்பி வந்திருக்காரு.." என அவள் கதவை தட்டிக் கொண்டிருந்தவள் அந்த அறைக்குள் நுழைந்த முகிலை கண்டதும் அமைதியாகி கொண்டாள்.அம்மா சொன்னதை கேட்டதும் ரூபன் அவசரமாக டவல் ஒன்றை கட்டியபடி வெளியே வந்தான்.தன் முன் நின்ற முகிலை கண்டவன் கோபத்தோடு அவனை நெருங்கினான். தன்னை நெருங்கியவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் முகில். அடி பலம் என்பதால் ரூபனின் மூக்கில் இருந்து ரத்தம் உடனே கொட்டியது."அம்மா.." என்று அதிர்ச்சியோடு மகனை பார்த்தாள் அம்மா. நீலா தன் கணவன் பக்கம் செல்ல முயன்றாள். சட்டென்று அவளை பிடித்து நிறுத்தினாள் அம்மா.அவசரமாக தனது மூக்கை அழுத்தி பிடித்து கொண்டு முகிலின் மீது பாய்ந்தான் ரூபன். ஆனால் முகில் அவனுக்கு முன்னால் சுதாரித்து தன்னை நோக்கி பாய்ந்து வந்தவனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.ரூபன் மறுகையால் இடுப்பை பிடித்து கொண்டு முகிலை முறைத்தான்."ஒரு பொண்ணு வீக்கா இருந்தா அதுக்கு காரணம் அவளோட பிறந்த வீடுதான்.. ஒரு பொண்ணை வீக்கா வளர்த்துவதே தப்பு.. அதுல நீ அவ வீக்னெஸை பயன்படுத்தி அடிமைப்பண்ணி அடிக்கிறியா.?" என கேட்டவன் ரூபனின் தாடையில் ஒரு குத்து விட்டான்.ரூபன் ஆத்திரத்தோடு அவனை பார்த்தான். "உனக்கு ஹீரோன்னு நினைப்பாடா.? மூணு வருசமா கோமாவுக்கு போயிருந்தியோ.? உங்க அக்கா பேச்சை கேட்டு என் தங்கச்சியை அத்து விட்டு போனவன்தானடா நீ.? இப்ப ஏன் மறுபடி வந்திருக்க.?" என்றான்.கேள்வி கேட்டவனின் வாய் மீது ஒரு குத்து விட்டான் முகில். "பழியை ஒருத்தி மேலயே போட்டுட்டு நீ தப்பிச்சிடலாம்ன்னு பார்க்கறியா.? டேய்.. உன்னை பத்தியும் சௌந்தர்யாவை பத்தியும் நல்லா தெரியும்டா எனக்கு.. நீங்க இரண்டு பேரும் நல்லா வாழணும்ங்கறதுக்காக இருக்கற மத்த எல்லோருடைய வாழ்க்கையையும் அழிக்க தயங்க மாட்டிங்க.. உங்க இரண்டு பேருக்கும் இருக்குடா கச்சேரி.." என்றவன் அங்கிருந்து திரும்பி நடந்தான்."அவர் யதிராவை தன்னோடு கூட்டி போறாரு.." நீலா அவசரமாக சொன்னாள்.ரூபன் வேகமாக வெளியே ஓடினான். முன்னால் நடந்துக் கொண்டிருந்த முகிலின் தோளை பற்றி நிறுத்தினான்."டேய்.. மரியாதையா அவளை விட்டுடுடா.." என்று கர்ஜித்தான்.அவனது கையை தட்டி விட்டுவிட்டு விலகி நின்ற முகில் "இப்ப இவ என் கேர்ள் பிரெண்ட்.. அப்படியெல்லாம் நீ கேட்ட உடனே விட்டுட்டு போக முடியாது.. நாங்க இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழ முடிவு பண்ணியிருக்கோம்.. புருசன் பொண்டாட்டியா ஊரறிய கை பிடிச்சவங்களை பிரிச்சி விட்டிங்க இல்லயா.? இப்ப யாரை வச்சி பிரிச்சி விடுறிங்கன்னு பார்க்கலாம்.." என்றவன் அவனை நக்கலாக பார்த்துவிட்டு வந்து காரில் ஏறினான்.யதிரா அண்ணனை கண்டு பயந்து கண்கள் கலங்கியடி அமர்ந்திருந்தாள்."அவனை பார்க்காத.. அவனை பத்தி இனி எப்பவும் நினைக்காத.." என்ற முகில் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.வழியெங்கும் பயந்தபடியே பயணம் செய்தாள் யதிரா. "உங்க வீட்டுல என்னை சேர்த்துப்பாங்களா மாமா.? அண்ணியும் அத்தையும் என்னை திட்டுவாங்களே.. அவங்ககிட்ட என்ன சொல்ல போறிங்க.?" என்று தயக்கமாக கேட்டாள்."அங்கே போகல.." என்றவன் புது வீட்டின் முன்னால் வந்து காரை நிறுத்திவிட்டு இறங்கினான். யதிரா அந்த வீட்டை தயக்கமாக பார்த்தபடியே கீழே இறங்கினாள்."இனி இதுதான் நம்ம வீடு.." என்றவன் சென்று கேட்டை பூட்டி விட்டு வந்தான். வீட்டின் கதவை திறந்தான்"உள்ளே வா.. இனி இந்த வீடுதான் உன் வீடு.." என்று அழைத்தான்.அவள் அந்த வீட்டை ஆச்சரியமாக பார்த்தபடியே உள்ளே நடந்தாள்."காலையில் நானே அரை லிட்டர் பால் வாங்கி வந்து காய்ச்சி நானே குடிச்சிட்டேன்.. அதனால இனி எந்த சம்பிரதாயமும் தேவை இல்ல.." என்றவன் ஹாலின் விளக்கை ஒளிர விட்டான்.வீட்டில் பர்னிச்சர் ஏதும் இல்லை. காலியாகவே இருந்தது."அதோ அதுதான் நம்ம பெட்ரூம்.. போய் உன் சூட்கேஸை வச்சிட்டு பிரஷ்அப் ஆகிட்டு வா.." என்று கை காட்டி விட்டவன் சமையலறையை நோக்கி நடந்தான்.யதிரா படுக்கையறைக்கு வந்தாள். பாய் ஒன்று ஒரு மூலையில் சுருட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சுவரோடு இருந்த ஷெல்பில் கீழ் வரிசையில் இரண்டு தலையணைகளும் மடித்து வைக்கப்பட்ட ஒரு பெட்ஷீட்டும் இருந்தது. அதற்கும் மேலே இருந்த அடுக்கில் சில சட்டைகளும் கால்சட்டைகளும் இன்னும் சில உடைகளும் பொருட்களும் இருந்தது. யதிரா தன் சூட்கேஸிலிருந்து பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தாள். சூட்கேஸில் இருந்த துணிகளை எடுத்த பிறகு கீழே ஒரு புகைப்படம் இருந்தது. அதை கையில் எடுத்தாள். அவர்களின் திருமண புகைப்படம் பாதியாய் கிழிந்திருந்தது. அவள் பந்தம் பிரிந்து பிறந்த வீடு வந்த மறுநாள் சௌந்தர்யா யதிராவின் பொருட்களை அனுப்பி வைத்திருந்தாள். அதில் இந்த புகைப்படமும் ஒன்று. முகில் இருந்த பக்கத்தை கிழித்து வைத்துக் கொண்டு யதிரா இருந்த பாகத்தை மட்டும் கொடுத்து விட்டிருந்தாள். அந்த புகைப்படம் ஒன்றே யதிராவுக்கு பலநாட்கள் அழுகையை தந்திருக்கிறது.இன்றும் கூட அந்த புகைப்படத்தை காணும்போது கண்ணீர் தளும்பியது. அரையாய் இருந்த புகைப்படத்தை ஓரம் வைத்து விட்டு வெளியே நடந்தாள்.அருகே இருந்த அறையை திறந்து பார்த்தாள். குளியலறை என்று அறிந்து கொண்டவள் உள்ளே சென்று தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்தாள். முகத்தில் இருந்த காயம் தண்ணீர் பட்டதும் நெருப்பாக எரிந்தது.அவள் சமையலறைக்கு வந்தபோது அடுப்பில் குக்கர் இருந்தது."தக்காளி சாதம் வச்சிருக்கேன்.." இவள் பக்கம் பார்த்து சொன்னவனின் அருகே வந்தவள் அவனது சட்டை கையில் முகத்தை தேய்த்து ஈரத்தை துடைத்துக் கொண்டாள். பின்னர் உடனே விலகி நின்று "சாரி மாமா.." என்றாள்.சிறு புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டவன் மூன்று வருடங்கள் ஆனாலும் தன் பழக்கத்தை விடாமல் வைத்திருக்கிறாளே என்று எண்ணி சிறிது மகிழ்ச்சி அடைந்தான்."எதுக்கு சாரி சொல்ற.? உன் முகத்தை துடைக்க கூட உதவலன்னா அப்புறம் எதுக்கு எனக்கு சட்டை.?" என்று கேட்டான்.அவனது அணைப்பிலிருந்தபடியே அந்த சமையலறையை பார்த்தாள் யதிரா. ஒரு குக்கர், ஒரு வாணாலி, இரண்டு தட்டுகள், இரண்டு டம்ளர்கள், சில பாத்திரங்கள், ஒரு குடம், நான்கு கரண்டிகள் மட்டும் அங்கு இருந்தது."நாம தனி குடித்தனம் வந்திருக்கோமா மாமா.?" என்று அவனது முகத்தை பார்த்து கேட்டாள்.அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன் "ஆமா.. தனிக்குடித்தனம் வந்திருக்கோம்.. லேட்டா.. மூணு வருசம் ஆளுக்கொரு மூலையில் இருந்துட்டு இப்போது சேர்ந்து வாழணும்ன்னு தனியா வந்திருக்கோம்.." என்றான்.அவனது நெஞ்சில் சாய்ந்தவள் உடனே "ஸ்ஸ்.. ஆ.." என்றபடி விலகினாள்."என்ன ஆச்சி.?" என்றவன் அவளது கன்ன பகுதியை திருப்பி பார்த்தான்."கன்னம் வலிக்குதா.?" என்றவனிடம் மறுத்து தலையசைத்தவள் தனது கூந்தலை ஒதுக்கூ விட்டு காதை காட்டினாள்."நேத்து அண்ணன் அறைஞ்சதுல தோடு உடைஞ்சிடுச்சி. காதும் வலிக்குது.." என்றாள்."அப்புறமா மருந்து போட்டு விடுறேன்.. சரியா போயிடும்.." என்றவன் அவளது காது பகுதியையும் கன்னத்து பகுதியையும் மோதாமல் அணைத்துக் கொண்டான்."தேங்க்ஸ் மாமா.. நீங்க வரவே மாட்டிங்களோன்னு நான் ரொம்ப பயந்து போய் இருந்தேன்.. என் அண்ணன் வேற எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து இருந்தான். நல்லவேளை நீங்க வந்திங்க.. இல்லன்னா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி என் அண்ணன்கிட்ட அடி வாங்கியே செத்து போயிருப்பேன்.." என்றாள்.ரூபனை சில அடிகளோடு விட்டு வந்ததை எண்ணி வருத்தப்பட்டான் முகில்."அத்தையும் மாமாவும் உங்களை திட்டினாங்களா மாமா.?" பயத்தோடு அவனிடம் கேட்டாள்."எதுக்கு.?""இப்படி தனிக்குடித்தனம் வந்ததுக்கு.." என்றவளின் சிவந்திருந்த கன்னத்தை மென்மையாக வருடி விட்டவன் "இல்ல.. அவங்ககிட்ட நான் சொல்லல.. பெத்தவங்களுக்கு தொல்லை தர வயசை நான் தாண்டிட்டேன் யதிரா.. அதனால இனி அவங்க திட்ட மாட்டாங்க.." என்றான்.உணவு தயாரானதும் இருவரும் இணைந்து சாப்பிட்டு முடித்தனர்.படுக்கறையில் பாயை விரித்து தலையணையை எடுத்து வைத்த முகில் அறை வாயிலில் வந்து நின்றவளை பார்த்து புன்னகைத்தான்."பஞ்சு மெத்தை வாங்க என்கிட்ட காசு இல்லம்மா.. பஞ்சு மெத்தையை விட புசுபுசுன்னு இருந்த நெஞ்சும் என்கிட்ட இப்ப இல்ல.. இந்த பாயும் தலையணையும்தான் என்னால வாங்க முடிஞ்சது.. அட்ஜெஸ்ட் பண்ணிக்க.." என்றான்."பரவால்ல மாமா.. எனக்கு இதே போதும்.. எங்க வீட்டுல பஞ்சு மெத்தை இருந்தும் கூட உங்களை நினைச்சி எனக்கு தூக்கமே வராது.. எனக்கு நீங்க இருந்தா போதும்.." என்றவள் வந்து பாயின் மீது அமர்ந்தாள்.அவள் முன் வந்து அமர்ந்த முகில் தன்னை பார்ப்பவளை கண்டு கைகளை நீட்டினான். அவனது கைகளை பற்றிக் கொண்டாள் யதிரா."உங்ககிட்ட நிறைய பேசணும் மாமா.. நிறைய சொல்லணும்.." என்றாள்."என்கிட்ட கேட்க எந்த கேள்வியும் இல்லையா.?" ஆர்வமாக கேட்டான் அவன்.அவள் தயங்கினாள். "நீங்க இந்த மூணு வருசத்துல நிஜமா வேற எந்த பொண்ணையும் பார்க்கலதானே.?" என்றாள்.இல்லையென தலையசைத்தவன் அவளது முகத்தில் உண்டான நிம்மதி கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்."மூணு வருசமா எங்கே போனிங்க.?" என்றாள் அடுத்ததாக."ஹைதராபாத்ல என் பிரெண்ட் வீட்ல தங்கி இருந்தேன். அங்கிருந்து வேலைக்கு போய்ட்டு இருந்தேன்.." என்றவனின் கையை பிடித்து குலுக்கினாள்."வாழ்த்துக்கள் மாமா வேலை கிடைச்சதுக்கு.." என்றாள். அவன் சிரித்தான். அருகில் வா என்று கையை அசைத்தான். புரியாமல் மண்டியிட்டவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் "தேங்க்ஸ் நீ வாழ்த்து சொன்னதுக்கு.." என்றான்.அவள் புன்னகையோடு அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்."என்ன வேலை மாமா.." அவனது தோளில் முகம் பதித்தபடி கேட்டாள்."ஒரு தனியார் நிறுவனத்துல அசிஸ்டென்ட் மேனேஜரா இருந்தேன்.. இப்ப இங்கேயே ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்திருக்கேன்.. அப்புறம் இருந்த காசு எல்லாத்தையும் ஷேர் மார்கெட்ல இன்வெஸ்ட் பண்ணிட்டேன்.. அதனால்தான் என்கிட்ட அதிகமா காசு இல்ல.. உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்கும் அளவுக்கு என்கிட்ட காசு இல்ல.. ஆனா கம்பர்டபிளான ஒரு வாழ்க்கையை தர அளவுக்கு பணம் இருக்கு.." என்றான். 'நீ வாழ்வியல்ன்னா என்னன்னு படிச்சி முடிக்கும்வரை இந்த எளிமையான வாழ்க்கைதான் வாழ போற யதிரா..' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்."இட்ஸ் ஓகே மாமா.. எனக்கு நிஜமா இதே போதும்.." என்றாள் அவனுக்கு தேறுதல் சொல்லும் விதமாக.இரவு தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. சௌந்தர்யா அடிக்கடி வாசலை பார்த்தாள். காது குத்துக்கு வந்திருந்த சொந்தங்கள் கிளம்பி விட்டதால் வீடு வெறிச்சென்று இருந்தது."அம்மா உன் மகன் எங்கே.?" என்று கேட்டாள் சௌந்தர்யா."தெரியலடி.. காலையில் போனவன் இன்னும் வரல.. எங்கே போனான்னு தெரியல.. நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான்.." என்றாள் அம்மா.சௌந்தர்யா முகிலுக்கு ஃபோன் செய்தாள். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவள் எரிச்சலோடு ஃபோனை பார்த்த நேரத்தில் "சௌந்தர்யா.. ஏய் சௌந்தர்யா.." என்று வாசலில் குரல் கேட்டது."இவனா.?" என்று குரலை கேட்டு குழப்பமாக வாசலுக்கு வந்தவள் ரூபனை கண்டு திகைத்தாள். அவனது சிவந்த மூக்கை கண்டு சிரிப்பு வரும்போல இருந்தது."இங்கே ஏன் வந்திருக்க.?" என்றாள் திமிர் குரலில்."உன் தம்பியை முதல்ல வெளியே வர சொல்லு.. என் தங்கச்சியை இழுத்துட்டு வந்துட்டான்.." என்றான் எரிச்சலாக.குழம்பிய சௌந்தர்யா விசயம் புரிந்ததும் "அம்மா.. அப்பா.. உங்க பையன் அந்த மூதேவியை இழுத்துட்டு ஓடிட்டான்.." என்று உள்ளே பார்த்து கத்தினாள்.சௌந்தர்யாவின் கணவன் எட்டி பார்த்தான். "இவன் இங்கே என்ன பண்றான்.?" என்றான் எரிச்சலோடு."உன்னையும் உன் பொண்டாட்டியையும் விருந்துக்கு அழைச்சிட்டு போக வந்திருக்கேன்டா பொறுக்கி.." என்று ரூபன் சொல்ல இவன் கையை முறுக்கியபடி பாய்ந்தான்.முகிலிடம் பதில் அடி தராமல் விட்டுவிட்ட கோபத்தில் இருந்த ரூபன் இவனை சட்டையை பிடித்து தனது கையை ஓங்கினான்.சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு விட்ட சௌந்தர்யா என்ன செய்வதென தெரியாமல் "அம்மா.. அப்பா.. சீக்கிரம் வாங்களேன்.." என்று கத்தினாள்‌. யார் வந்தும் அவர்களின் சண்டையை நிறுத்த முடியவில்லை.அக்கம் பக்கத்தார் இதை பார்த்துவிட்டு காவல்துறைக்கு சேதி சொல்லினார்கள். காவல்துறை வந்து இருவரையும் விலக்கி அவர்களின் பிரச்சனையை கேட்டுவிட்டு "ஒன்னா சேர்ந்து வாழறவங்களை யாராலும் தடுக்க முடியாதுப்பா.‌. அவங்களுக்காக நீங்க ஏன் சண்டை போடுறிங்க.? இன்னொரு முறை இப்படி செஞ்சா கொண்டுப்போய் லாக் அப்ல போட்டுடுவோம்.." என எச்சரித்து விட்டு சென்றனர்."உங்க எல்லோருக்கும் ஒரு நாள் இருக்கு.." என்று ஆத்திரத்தோடு சொன்ன ரூபன் தன் உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்தபடி அங்கிருந்து கிளம்பினான்."உனக்கும் ஒருநாள் இருக்குடா.." என்று பற்களை அறைத்தாள் சௌந்தர்யா.இவர்கள் இங்கே களீபரம் செய்துக் கொண்டிருக்க தங்களது வீட்டில் முகிலின் அணைப்பில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள் யதிரா.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1373VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN