11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குருவிற்கு வேலையே ஓடவில்லை. அவன் வேலை செய்துக் கொண்டிருந்த நிறுவனம் கை மாறி விட்டது. புதிதாக வாங்கியவர்கள் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு புது வேலையாட்களை தேர்வு செய்ய போகிறார்கள் என்று வேலை செய்பவர்கள் அனைவரும் காலையிலிருந்து பேசிக் கொண்டார்கள். நல்ல சம்பளம் தரும் இந்த நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு எங்கு வேலை தேடுவது என்று வருத்தத்தில் இருந்தான் அவன்."எம்.டி அவரோட ரூமுக்கு போயிட்டார்.. ஆனா நம்ம யாரையும் சந்திக்கல.." குருவின் கவலையை இன்னும் அதிகமாக்கியது அருகில் இருந்த சக பணியாளர் சொன்ன இந்த செய்தி.பத்து நிமிடங்களுக்கு பிறகு "எம்.டி உன்னை கூப்பிடுறாரு குரு.." என்று வந்து அழைத்தார் அவரது டீம் மேனேஜர் சிவராம்.குழப்பமாக சென்று எம்.டியின் அறை கதவை திறந்தான். முகில் மேஜைக்கு அந்த பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனை கண்டு அதிர்ந்தவன் நடந்ததை ஓரளவு யூகித்தான்."வாடா குரு.." என்று அழைத்தான் அவன்."முகில் என்னடா இது.?" என்று கேட்டவனை பார்த்து சிரித்தவன் "ஏன்டா உன் கம்பெனியை நான் வாங்க கூடாதா.?" என கேட்டு சிரித்தான் முகில்."இந்த நிறுவனம் நஷ்டத்துல ஓடுறதாகவும்.. கம்மி விலைக்கு விற்க போறதாகவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி நியூஸ் வந்ததுடா.. நாம படிச்சதுக்கு இப்போதாவது உருப்படியா எதையாவது நிர்வாகம் பண்ணலாம்னு தோணுச்சி.. என் பிரெண்ட்ஸ் சிலர்கிட்ட பேசினேன்.. இன்வெஸ்ட் பண்றதா சொன்னாங்க.. அதனாலதான் உடனே வாங்கிட்டேன்.. யதிரா நினைப்போடு இதே ஊர்ல இருந்து எப்படி இதை பார்த்துக்கறதுன்னு முன்ன கவலையா இருந்தது. ஆனா இப்ப அந்த கவலையும் இல்லாம இனி நானே இதை மேனேஜ் பண்ண போறேன்.. இப்ப உன்னை இங்கே கூப்பிட ஒரு காரணம் உண்டு.. இதை பிடி.." என்று ஒரு கவரை நீட்டினான் முகில்."வந்த உடனே என்னை வேலையை விட்டு தூக்கிட்டியாடா.?" என்று கவலையோடு கேட்டபடி பிரித்து படித்தான்."நீ இனி இந்த கம்பெனியோட ஜி.எம்.. என் பொறுப்பின் கீழே நீதான் இந்த நிறுவனத்தை முழுசா நிர்வாகம் பண்ண போற.." என்றான்.அவன் சொன்னதை கேட்டு கடிதத்தை கீழே போட்டான் குரு. "லூசு மாதிரி பேசாத முகில்.. எனக்கு அந்த அளவுக்கு வராது. நீ வேற நல்ல ஆளை பாரு.." என்றான்."இங்கே எவனும் தலைமையேற்கும் பொறுப்போடவே பிறக்கிறது கிடையாது.. எல்லாம் கத்துக்கறாங்க.. நீயும் கத்துக்கிட்டுதான் ஆகணும்.." என்றபடி தன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றான் முகில்."நான் என் வாழ்க்கையில் முன்னேற ஆசைப்படுறேன் குரு.. ஏதோ ஒரு நல்ல நேரம் என் நண்பர்கள் சிலர் பண உதவி பண்ணியிருக்காங்க.. அதுபோல இதுக்கு நீயும் உதவி செய்வன்னு நம்புறேன்.. இந்த நிறுவனத்தை நம்பி இனி எனக்காக பல கோடி ரூபா கடன் தரப் போறவங்களுக்கு நான் அதை திருப்பி கட்டணும்.. இந்த நிறுவனத்தை நம்பி வேலை செய்பவங்களுக்கு ஒரு நிலையான நம்பிக்கையை தரணும்.. உதவாக்கரைன்னு என்னை திட்டிய என் குடும்பத்து முன்னாடி எனக்கு என்ன திறமைன்னு காட்டியாகணும்.. என்னை நம்பி வந்த என்னவளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைச்சி தரணும்.. ஹெல்ப் மீ டா.." என்றான்.குரு தயக்கத்தோடு அந்த கடிதத்தை கையில் எடுத்தான். "நான் என்னால் முடிஞ்ச அளவுக்கு செய்றேன்டா.." என்றான்."இதான்டா உனக்கும் வேற ஒருத்தனுக்கும் உள்ள வித்தியாசம்.. அவன் சம்பளத்துக்கு ஏத்த மாதிரி வேலை செய்வான். ஆனா நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு செய்வ.." என்ற முகில் முகத்தில் நிம்மதி பிறந்தது.சிறு தயக்கத்தோடு அவன் முன் அமர்ந்தான் குரு. "நஷ்டத்துல ஓடுற கம்பெனின்னு சொன்னியேடா.. அப்புறம் ஏன்டா வாங்கின.?" என்றான் நண்பன் மீது இருந்த அக்கறையில்.முகில் புன்னகையோடு நண்பனை பார்த்தான். "இந்த நிறுவனம் சரியா ஓடாம இருக்க காரணமே இந்த நிறுவனத்தோட உற்பத்தி பொருட்களை இவங்க சரியான முறையில் டிஸ்ட்ரிப்யூட் பண்ணாம விட்டதுதான்.. ஆனா எனக்கு அந்த பிரச்சனையும் இல்ல.. எண்பது சதவீத உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி பண்ணி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறதா ஒரு பாரின் கம்பெனிக்கு ஏற்கனவே சைன் பண்ணிட்டேன்.. உற்பத்தி பொருட்களோட தரம் எப்படின்னு எல்லோரும் தெரிஞ்சிக்கணும்.. அதுக்கப்புறம் பாரு. இந்த நிறுவனம் எப்படி லிஃப்ட் போல மேல் ஏறுதுன்னு.?" என்றான் நம்பிக்கையோடு.நண்பனின் முயற்சி கண்டு குருவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட சிறிது பயமாகவும் இருந்தது. "நீ ஆழம் தெரியாம காலை விடல இல்ல.?" என்றான் தயக்காமாக.முகில் கலகலவென சிரித்தான். "நீச்சல் தெரிஞ்சவனுக்கு அது வெறும் தண்ணீரா இல்ல புதைக்குழியான்னு தெரிஞ்சா போதாதா.? எதுக்குடா ஆழமெல்லாம்.?" என்று கேட்டான்."நான் இங்கே உன்னை கூப்பிட இன்னொரு காரணம் இருக்கு குரு.." என்றவன் முகத்தில் இருந்த சிரிப்பை நீக்கிக் கொண்டு நண்பனை பார்த்தான்."எனக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்கா வேணும்டா.. அதுக்கு நீதான்டா உதவி பண்ணனும்.." என்றான்.அவனது பீடிகையை காணும்போதே குருவுக்கு பயமாக இருந்தது. "நான் இந்த நிறுவனத்தை கொஞ்ச நாளைக்கு மறைமுகமாதான் நிர்வாகம் பண்ண போறேன்டா.. அதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும்.. நீ என்ன செய்யணும்ன்னு தினம் நான் சொல்லிடுவேன். நீ அது படி செஞ்சாவே போதும்.." என்றான்.குரு குழப்பமாக அவனை பார்த்தான். "மறைமுகமா என்ன பண்ண போற.?" என்றான்."உன் நிழல்ல மறைஞ்சி இருந்தபடி இந்த நிறுவனத்தை நடத்த போறேன்.. உன்னையும் மேனேஜர் சிவராமையும் இன்னும் சிலரையும் தவிர இங்கே இருக்கும் வேறு யாருக்கும் இந்த நிறுவனத்தின் ஓனர் நான்தான்னு தெரிய போறதில்ல.. யாராவது இந்த நிறுவனத்தை பத்தி ஆராய்ச்சி செஞ்சாலும் கூட ஏதோ ஒரு முகில்ன்னு அமைதியா போக போறாங்க.." என அவன் சொல்ல குரு அதிர்ச்சி தாளாமல் எழுந்து நின்றான்."ஏன்டா இப்படி புத்தி கெட்டு இருக்க.?" என்றான் கோபமாக."டென்ஷன் ஆகாதே குரு.. நான் இந்த நிறுவனத்தை வாங்க என்ன காரணம்ன்னு முதல்லயே சொல்லிட்டேன்.. நான் ஒரு சாதாரண வேலையாளா என் மனைவி முன்னால இருந்தே ஆகணும். உழைப்போட அருமை அவளுக்கு புரியணும்..""அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்.? நீ தினமும் பனம்பழம் விக்கறதா யதிராக்கிட்ட சொல்லு.. இங்கே வந்து வேலையை பாரு.." என்றான்.சிரித்தான் முகில். "அவ இங்கே வேலைக்கு வர போறா.." என்றான் சிரிப்பினூடே."என்னடா சொல்ற.?" தலையை கீறியபடி கேட்டான் குரு."அவ இன்னும் கொஞ்ச நாளுல இந்த ஆபிஸ்க்கு வேலைக்கு வருவா.. அவளை இங்கே வேலைக்கு வர வைப்பேன் நான்.. அவ இங்கே வந்து வேலை செய்யும்போது இந்த நிறுவனம் அவளோட பாய் பிரெண்டுக்கு சொந்தமானதுன்னு தெரிய கூடாது இல்லையா.?" என்று புருவம் உயர்த்தி கேட்டான்."பாய் பிரெண்ட்.. கொடுமை.. ஒரு தாலியை கட்டிட்டாதான் என்ன குறையற.?" எரிச்சலோடு கேட்டான் குரு."கட்டிக்கலாம்டா.. எங்கே போயிட போறா.. மெதுவா கட்டிக்கலாம்.." என்றவன் மேஜை மேல் இருந்த போனை எடுத்து சில நம்பரை அழுத்தினான்."உள்ளே வாங்க.." என்றான்.சிவராமன் உள்ளே வந்தார்."இனி இவர் நம்ம நிறுவனத்தோட ஏ.ஜி.எம்மா பதவி உயர்வு ஆகிறார்.. உனக்கு அஸிஸ்டென்டா இருக்க போறாரு.." என்று முகில் சொல்ல அவசரமாக எழுந்து நின்றான் குரு."இவர் என் சீனியர்ப்பா.. ஏன் இப்படி பண்ற.?" என்றான்."அவர் சீனியர் மட்டுமில்ல நல்ல திறமைசாலியும் கூட.. ஆனா உனக்கு ஹெட்டா இருக்க மறுத்துட்டாரு.. அதனால தயங்காம நீ உன் போஸ்டிங்கை கவனிக்கலாம்.. அவர் உனக்கு எல்லாமும் சொல்லி தருவாரு.. உனக்கு இந்த மேனேஜ்மென்ட் பத்தி ஏதாவது டவுட் வந்தா கிளியர் பண்ணுவாரு.. நான் இந்த அறையை விட்டு வெளியே வரவே மாட்டேன்.. அதனால நீங்க இரண்டு பேரும்தான் மொத்த நிறுவனத்தையும் பார்த்துக்கொண்டாகணும்.. மத்தவங்ககிட்ட உங்களை அறிமுகம் பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கேன் நான்.. சாரி பார் தட்.. அதனால புன்னகை முகத்தோடு நீங்களே போய் உங்களோட போஸ்டிங்கை மத்தவங்ககிட்ட அறிமுகப்படுத்திகங்க.. என்னை பத்தியும் சொல்லுங்க.. ஆனா என் பெயர் வேணாம்.. நான் ரொம்ப கோபக்காரன்..‌ நான் யாரையும் பார்க்க விரும்பலன்னு சொல்லுங்க.. என்கிட்ட பேச விரும்புறவங்க யாரா இருந்தாலும் உங்ககிட்டயே பேசிக்கலாம்.. வேலையை ஒழுங்கா பார்க்கலன்னா உடனே வேலை வேணாம்ன்னு எழுதி தந்துட்டு வீட்டுக்கு கிளம்பலாம்ன்னு அவங்ககிட்ட ஸ்ரிக்டா சொல்லுங்க.. அப்புறம் என் ரூம் பக்கமோ, இந்த கம்பெனியில் நான் யூஸ் பண்ற பர்சனல் ரூட் பக்கமோ யாரும் வர கூடாதுன்னு மறக்காம சொல்லிடுங்க.." என்றான்.சிவராம் முகிலுக்கு கை தந்தார். முகில் புன்னகையோடு அவர் கை பற்றி குலுக்கினான்.சிவராமும் குருவும் சென்று அனைவர் முன்னிலையிலும் தங்களை அறிமுகப்படுத்தப்படுத்திக் கொண்டனர். அவர்கள் கையில் இருந்த கடிதத்தை கண்டு ஆச்சரியப்பட்டார்கள் அனைவரும். கை தட்டினார்கள். குருவின் நண்பர்கள் சிலர் வந்து அவனுக்கு வாழ்த்து கூறினார்கள். சிலர் இவனுக்கு எப்படி இப்படி திடீர் பதவி உயர்வு வந்தது என்று சந்தேகப்பட்டனர். அவர்கள் இருவரும் புது ஜி.எம் பற்றி விவரமாக சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதம் அனைவரும் மனதிலுமே முகிலை ஒரு முரடனாக பதிய வைத்தது.குரு தனது புது அறைக்கு மாறினான். அவன் முன் புது லேப்டாப் இருந்தது. அதனருகே புது பைக் சாவியும் இருந்தது. கிப்ட் என்று எழுதியிருந்த வண்ண காகிதம் அதோடு இணைந்து இருந்தது. முகிலுக்கு ஃபோன் செய்து "தேங்க்ஸ்டா.." என்றான் முழு மகிழ்ச்சியோடு."கொஞ்சம் அதிகமாவே இன்ட்ரஸ்டா வொர்க் பண்ணுடா.. அடுத்த வருசம் கார் பிரசண்ட் பண்றேன்.." என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் முகில்.ஆரம்பம் என்பதால் வேலை சற்று அதிகமாகவே இருந்தது முகிலுக்கு. மாலை இருள் சூழும் வேளையில் எழுந்து நின்றான். கை கால்களை நெட்டி முறித்தான்.'வாய்ப்புக்கள் அமைவதில்லை. உருவாக்கப்படுகின்றன..' என்ற வாசகம் அவன் முன் இருந்த சுவற்றில் கொட்டை எழுத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது."உருவாக்கலாம்.." என்று சிரித்தபடி கிளம்பினான்.அவன் வீட்டிற்கு திரும்பியபோது அவன் வீட்டு தெருவின் மூலையில் இருந்த பானிபூரி கடையில் நின்று பானிபூரி தின்றுக் கொண்டிருந்த கே.கே இவனை கண்டதும் பானிபூரிகாரனிடம் பணத்தை தந்துவிட்டு இவனிடம் ஓடி வந்தாள்.முகில் காரை விட்டு இறங்கி நின்றான்."யாரும் உங்க வீட்டு பக்கம் வரல சார்.. உங்க கேர்ள் பிரெண்ட் மட்டும் அரை மணி நேரம் முன்னாடி ஒரு முறையும் பத்து நிமிசம் முன்னாடி ஒரு முறையும் கதவை திறந்து வாசலை பார்த்தாங்க.." என்றாள்."காரை நாளைக்கு காலையில் எட்டரைக்கு கொண்டு வந்துடு கே.கே.." என்ற முகில் தனது லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்."ஓகே சார்.." என்றவள் டிரைவர் சீட் இருந்த திசைக்கு ஓடினாள்."கே.கே.."முகிலின் அழைப்பில் திரும்பி பார்த்தாள் அவள்."எஸ் சார்..""மேக்னா பத்தி நியூஸ் என்ன.?" என்றான்."இன்னும் மூணு மாசம் இருக்கு சார் அவங்களோட மெயின் எக்ஸாமுக்கு.." என்றாள் கே.கே. முகில் சரியென தலையசைத்தான். அவள் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பி போனாள். (கே.கே யாருன்னு வரும் காலத்துல சொல்றேன்ப்பா)யதிரா ஹாலின் விளக்கை அணைத்து அணைத்து ஒளிர விட்டுக் கொண்டிருந்தாள்.வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டதும் மின்னலாக எழுந்து ஓடி வந்து கதவை திறந்தாள். முகிலை கண்டதும் சட்டென அணைத்து கொண்டாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1123VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN