13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலையில் வீடு திரும்பிய முகில் வாசலின் ஓரத்தில் இருந்த செடிகளை கண்டு வியந்தான்.'சந்தர்ப்பங்கள் சரியாக அமைஞ்சா என் பொண்டாட்டியும் புத்திசாலிதான் போல..' என நினைத்தபடி சென்று கதவை தட்டினான்.அருகிலிருந்த ஜன்னலை திறந்து வெளியே பார்த்த யதிரா இவனை கண்டதும் அவசரமாக வந்து கதவை திறந்தாள்."மாமா.." என்றாள் வழக்கமான கொஞ்சலும் சிணுங்கலும் நிறைந்த குரலில். அந்த ஒரே வார்த்தையில் முகிலுக்கு மனம் நிறைந்து போனது."மார்கெட் போய்ட்டு வந்தியா.?" என்றான்."ம். போனேன். மாமா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா.? மார்கெட்ல நுழைவாயில் பக்கத்துல இருக்கற கடைக்காரங்க நிறைய பேர் காய்களுக்கு அதிக விலை பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்க. ஆனா உள்ளே கொஞ்ச தூரம் போன பிறகு அதே காய்கள் பத்து ரூபா கம்மியா இருக்கு. இரண்டு வாரமா ரொம்ப ஏமாந்துட்டேன் மாமா.." என்றாள் வருத்தமான குரலில் அவள்."விடும்மா இரண்டு வாரம்தானே.?" முகில் குளியலறைக்குள் நுழைந்தபடி சொன்னான்."நான் ரொம்ப ஏமாளி மாமா.. அந்த முன்னாடி கடையில் இருந்த காய்களெல்லாம் ஏற்கனவே வாடிதான் இருந்திருக்கு. ஆனா உள்ளே கொஞ்ச தூரத்துல ப்ரஷான காய்களை வச்சிருந்திருக்காங்க.." என்றாள் இன்னமும் வருத்தம் தீராமல்.'நீ ஏமாளின்னு இப்போதாவது புரிஞ்சதே..' என நினைத்தபடி துண்டால் முகத்தை துடைத்தபடி குளியலறையிலிருந்து வெளியே வந்தான் முகில். "அதெல்லாம்தான் மார்கெட்டிங்கே.. நிறைய பேர் மார்கெட்டுக்குள்ள போக டைம் இல்லாம அவசரத்தோடு ஓரங்களிலேயே வாங்கிட்டு போயிடுவாங்க. அதனால எந்த மார்கெட்டா இருந்தாலும் மக்கள் கண்ணில் முதல்ல தென்படுறவங்களுக்கு க்ரேஷ் இருக்கத்தான் செய்யும். அந்த வாய்ப்பிலும் தரமான பொருட்களை விற்பனை செய்யறவங்க நிறைய இருக்காங்க. ஆனா அதை விட அதிக பேர் அந்த வாய்ப்பை தன் கையில் வச்சிருக்கும் ஒரே காரணத்துக்காக இரண்டு மடங்கு விலை வச்சி பொருட்களை விற்கதான் செய்றாங்க. நாம நுகர்வோர்தான் எச்சரிக்கையோடு எல்லாத்தையும் வாங்கணும்.." என்றான்."இந்த மக்குக்கு அதெல்லாம் தெரியவே இல்ல மாமா.. இப்ப யோசிச்சி பார்த்த பிறகுதான் நான் வேலை செஞ்ச நகைக்கடை கூட அப்படிதான்னு புரியுது. எங்க கடை பின்னாடி இன்னொரு கடை இருக்கும். ஆனா நிறைய பேர் அங்கே போகாம இங்கேதான் வருவாங்க. பின்னாடி கடையை விட எங்க கடையில் எப்பவும் செய்கூலி சேதாரம் கணக்கு வேற மாதிரி அதிகமாகதான் இருக்கும்.." என்றாள் யோசனையோடு.முகில் சிரித்தபடி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளது நெற்றி கேசம் ஒதுக்கி முத்தம் தந்தான். "நீ மக்கு இல்ல. அறிவாளி பொண்ணுதான்.." என்றான்.இரவில் உணவை உண்ணும்போது முகம் நிறைய கவலையோடு தட்டில் கோலம் போட்டபடி இருந்தாள் யதிரா."ஏன் யதி.. பசிக்கலயா.?" அவளது முகத்தை பார்த்து கேட்டான் முகில்."எனக்கு முருங்கை மரம் தண்டு ஒன்னு எங்கிருந்தாவது உடைச்சி வந்து தரிங்களா.? வீட்டு ஓரம் வச்சி வளர்த்துக்கறேன்.." என்றாள் தயக்கமாக."சரிம்மா.." என்று அவன் சொன்னதும் முகத்திலிருந்த கவலை நீங்கி உணவை உண்ண ஆரம்பித்தாள் யதிரா.நான்கு நாட்கள் நகர்ந்தது."மாமா என் ஃபோன் பேலன்ஸ் தீர்ந்துடுச்சி.." என்று சொன்னாள் யதிரா.முகில் உதட்டை கடித்தபடி தயக்கமாக அவளை பார்த்தான். "சாரிம்மா என்கிட்ட இப்போதைக்கு காசு இல்ல.. மினிமம் பேலன்ஸ் போட்டு விடுறேன். நீ மிஸ்டுகால் கொடு. நான் கால் பண்றேன். உனக்கு வேற யார் கூடவாவது பேசணும்ன்னா நைட்ல என் போன்ல இருந்து பேசு.." என்றான். அவள் சரியென தலையசைத்தாள்.அவன் பணம் இல்லை என சொல்லும் ஒவ்வொரு முறை தான்தான் அவனுக்கு பாரமாக உள்ளோம் என்று எண்ணி கவலை கொண்டாள்.வீட்டில் தனித்து இருந்து பொழுதை கழிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.அந்த வாரத்தின் இறுதி நாளில் காலண்டர் தேதியில் வட்டம் போட்டாள். முகில் அறியா வண்ணம் மூன்று நாட்களை கடப்பது எப்படி என்று பயந்தாள். இரவு வீடு திரும்பிய முகில் அவளது வெளிறிய முகம் கண்டு பயந்து போனான்."யதி என்ன ஆச்சி உனக்கு.? உடம்பு சரியில்லையா.?" என கேட்டு அவளது நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்த்தான். உடலில் சூடு இல்லை. நெற்றியில் மட்டும் அனலடித்தது."தலைவலியா.? வா ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்று அழைத்தான்."இல்ல மாமா. டேட் ஆகிட்டேன். அதனாலதான் லேசா தலைவலி.. கொஞ்சம் வயித்து வலி.." என்றவள் வயிற்றின் வலி எந்த அளவுக்கு உள்ளது என்பதை அவனிடம் சொல்லவில்லை."டேட் ஆனால் வயித்து வலி உனக்கேன் வருது.? உனக்கு இதுவரைக்கும் அந்த பிரச்சனையே இல்லையே.." என்று சந்தேகமாக கேட்டான் அவன்.அவனது வீட்டில் சௌந்தர்யாவுக்கு அந்த வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது‌. மாதத்தில் மூன்று நாட்கள் வீட்டையே தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு இருக்கும் அவளது செய்கை. அமர்ந்த இடத்திலேயே உணவு தண்ணீர் என அனைத்தும் வேண்டும் அவளுக்கு. அவளது கத்தலும் திட்டும் அதிகமாகவே இருக்கும் அந்த நாட்களில். அம்மா வெளியே சென்றிருக்கும் பல நேரங்களில் இவனே அக்காவிற்காக புத்தகங்களை படித்து கசாயமெல்லாம் வைத்து தந்திருக்கிறான். பெண்களுக்கே முழுவதும் அப்படிதான் என நினைத்து இருந்தவனுக்கு முதன் முதலில் அப்படி ஒரு வலி இல்லை என்று அறிமுகமானவள் யதிராதான். ஆனால் இன்று அவளும் அப்படி வலி என்று சொல்லவும் அவனுக்கு வருத்தம் அதிகமாகி போனது."விவஸ்தையே இல்லாம கேள்வி கேட்காதிங்க மாமா.. நான் என்ன இன்னும் சின்ன பொண்ணா.? மூணு வருசத்துல வளர்ந்துட்டேன் இல்ல.." என கேட்டவள் அவனிடமிருந்து விலகி சமையலறையை நோக்கி நடந்தாள்.வாழை நாராக துவண்டு விழும் உடலும், எதையும் யோசிக்க கூட முடியாத அளவுக்கு, வாய் திறந்து பேசவும் முடியாத அளவுக்கு இருக்கும் தலைவலியும், கத்தி ஒன்றை சொருகி சொருகி எடுப்பது போல் வலிக்கும் வயிறும், இரவுகளில் உறங்கவும் விடாத இடுப்பு வலியை பற்றியும் அவனிடம் சொல்ல பயந்தாள் அவள். மூன்று வருடங்களுக்கு முன்னால் குழந்தையை பறி தந்துவிட்டு வீடு வந்தவளுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு தேதி வட்டமிடும் வேலை இல்லாமல் போனது. ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு மாதத்திலும் அந்த மூன்று நாட்கள் மரணத்தை தந்தபடிதான் கடந்துக் கொண்டிருந்தது. அம்மா தன் மகனிடம் இவளை மருத்துவமனைக்கு கூட்டி போக சொன்னாள். இவளது அழுத முகத்தை கண்டு வெறுத்த ரூபன் அம்மாவின் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ள மறுத்துவிட்டான். மாதத்தில் மூன்று நாட்கள்தானே என்று யதிராவும் பற்களை கடித்தபடி இருந்துக் கொண்டாள். இப்போது இதை முகிலிடம் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. பணமில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவனுக்கு இதனால் செலவு வேண்டாம் என நினைத்தாள். அதுவும் இல்லாமல் பரிசோதிக்க செல்லும் மருத்துவர் என்றிலிருந்து இப்படி வலி என கேட்டு, தான் கருகலைப்பு பற்றி சொல்ல நேர்ந்து, அதை முகில் காதில் கேட்டால் மனம் வருந்துவான் என்று கவலை கொண்டாள். 'மூன்று நாட்களுக்கு கூட வலியை தாங்க இயலவில்லை என்றால் பெண்ணாய் பிறந்து என்ன பயன்.?' என எண்ணி பெருமூச்சி விட்டாள்.அம்மாவின் வீட்டில் இருந்தவரை பற்களை கடித்தபடி கட்டிலை விட்டு கீழே இறங்காமல் கண்ணீரோடும் வலியின் முனகலோடும் நாட்களை கடத்தி விட்டவளுக்கு இங்கு முகில் முன்னால் நடமாடவே கடினமாக இருந்தது. மறுநாள் காலையில் அவன் வேலைக்கு செல்லும் வரை பொறுத்துக் கொள்ள வேண்டுமென மனதுக்கு அறிவுரை கூறி கொண்டாள்.முகிலுக்கு அவளது முகத்தை பார்க்கும் போதெல்லாம் வேதனையாக இருந்தது. "ஹாஸ்பிட்டல் போகலாம்.. வா யதி.." என்று அழைத்தான் நிமிடத்திற்கு ஒருமுறை."அவ்வளவா வலி இல்ல மாமா.." என்று சொல்லி தட்டி கழித்தாள் அவளும்.இரவில் சுவர் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டவளுக்கு வலியின் தாக்கத்தால் அழுகை வந்தது. ஆனால் முகில் முன்னால் அழ கூடாது என்று வீராப்பாக பற்களை கடித்துக் கொண்டாள்.அவள் சின்ன வலி என்று சொல்லி தட்டி கழித்து விட்டாலும் கூட அவளின் முகத்தில் இருந்த சோர்வும் வேதனையும் முகிலையும் சேர்த்து வாட்டி எடுத்தது.மறுநாள் வேலைக்கு கிளம்பியவன் "எதுவா இருந்தாலும் உடனே மிஸ்டுகால் கொடு. வயிறு வலிக்கும் போதெல்லாம் அடுப்பில் வச்சிருக்கும் கசாயத்தை சூடு பண்ணி குடி.. வலி அதிகமா இருந்தா உடனே மிஸ்டுகால் கொடு.." என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை அவனுக்கு. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஃபோன் செய்து அவளிடம் விசாரித்தான். இவனிடம் ஃபோனில் உரையாடுவதற்கு சக்தி இல்லாதவளுக்கு வலியோடு போராடுவதே பரவாயில்லை என்று தோன்றியது.மூன்று நாட்களும் இப்படியே கடந்தது. அதன் பிறகு பழைய யதிராவாக மாறி விட்டாள். வேதனையில்லா அவளது புன்னகை முகம் கண்ட பிறகே முகிலுக்கும் மனதின் பாரம் நீங்கியது போல இருந்தது.ஒருவாரம் ஓடியது."மாமா நான் எங்கேயாவது வேலைக்கு போகட்டா.?" என்று தயக்கமாக ஆரம்பித்தாள் யதிரா.முகில் அவளை முறைத்து பார்த்தான். "கை பிடிச்சி கூட்டி வந்தவனுக்கு சோறு போட கூட வக்கில்ல. அதனால வேலைக்கு போறேன்னு சொல்றியா.?" என கோபமாக கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான். அன்று முழுக்க அவளிடம் பேசவே இல்லை அவன்.மறுநாள் இவளே சென்று அவனது கையை பற்றினாள். "வீட்டுலயே இருக்கு போரடிக்குது மாமா.. அதனாலதான் கேட்டேன்.." என்றாள்."கடன் வாங்கி டிவி வாங்கி மாட்டி விடுறேன். தினம் சீரியல் பாரு. டைம் போயிடும்.." என்றான் அவன் முடிவெடுத்தது போல."கடன் ஏன் மாமா வாங்கறிங்க.? ஏற்கனவே என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்.." என்றவள் "பூமியில பிறந்ததுக்கு எதையும் சாதிக்க கையாளாகலனாலும் சாப்பிடுற சாப்பாட்டுக்காவது உழைக்கணும்ன்னு தோணுது மாமா.." என்றாள்."அதுதான் வீட்டுல தினம் சாப்பாடு செய்ற.. வீட்டை பார்த்துக்கற.. இது போதாதா.? இதுக்கு சம்பளம் வேணும்னா சொல்லு தரேன்.." என்றான் அவனும் விடாப்பிடியாக.யதிரா அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள்.மறுநாள் இரவு உறங்கும் வேளையில் "நானும் வேலைக்கு போனால் வீட்டு செலவை இன்னும் கொஞ்சம் நல்லா செய்யலாம் இல்லையா.?" என்றாள் அவனிடம்."அதுக்கென்ன.. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க.. அடுத்த வருசம் எனக்கு சம்பளம் அதிகமாக்கிடுவாங்க. அப்போது நல்லா செலவு பண்ணிக்குவ.." என்றான்.யதிரா மறுவார்த்தை பேசாமல் சுவர் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள். அவனுக்கு சிரிப்பாக வந்தது.அதற்கடுத்த நாள் அவனுக்கு உணவு பரிமாறியவள் "என் அம்மாவோட செலவுகளுக்கு நானும் பணம் தர ஆசைப்படுறேன் மாமா.. அந்த காசு என் சொந்த காசா இருக்கணும்ன்னு மனசு ஆசைப்படுது.." என்றாள்."என் காசும் உன் காசுதானே.? இதுல ஏன் பிரிச்சி பார்க்கற.?" என்று திருப்பி கேட்டான் அவன். 'வாரா வாரம் தர இருநூறுல நான் எதை என் அம்மாவுக்கு தரட்டும்.?' என கேட்க நினைத்தது அவள் மனம்.இன்னும் இரண்டு நாட்கள் ஓடியது. "மாமா நான் வேலைக்கு போகணும்.." என்றாள் மீண்டும்."எதுக்கு.?" அவனும் வழக்கம் போல் கேட்டான்."நீங்க வேலைக்கு போகும்போது நான் வேலைக்கு போக கூடாதா.?" என்று கேட்டவளின் கன்னம் தட்டியவன் "பெமினிசம் பேசாதம்மா.. மாமாவுக்கு பிடிக்காது.." என்றான். அவள் மூக்கு சிவக்க அவனை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.இரவு உணவு உண்ணும்போது வெறும் சாதத்தை மட்டும் பரிமாறிக் கொண்டவளை வியப்பாக பார்த்தான் முகில். "குழம்பு வேண்டாமா.?" என்றான்."வேணாம்.." என்றவள் புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டாள். "நானே வெட்டியா இருக்கற தண்டச்சோறு.. எனக்கு குழம்புதான் குறைச்சலா.? ஒரு குழந்தை இருந்து அந்த குழந்தையை பார்த்துக்கணும் அதனால வேலைக்கு போக முடியலன்னு காரணம் சொன்னா ஆகும்.. மாமனார் மாமியாரோ, அம்மா அப்பாவோ முடியாம கட்டிலோடு இருந்து அவங்களை பார்த்துக்க வீட்டோடு இருக்கேன்னு சொன்னா ஆகும்.. எந்த காரணமும் இல்ல.. வீட்டுல எனக்கு எந்த வேலையும் இல்ல.. வெட்டியா நாலு சுவரை பார்த்துட்டு இருக்கறவளுக்கு குழம்பு வேறு என்னத்துக்கு.. அனாவசியம்தானே.?" என கேட்டவள் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டாள்."மறுபடியும் ஆரம்பிச்சிடியா.?" என கேட்டவன் உணவை அப்படியே விட்டுவிட்டு எழுந்து கொண்டான்."மாமா சாப்பிட வாங்க.." என்று அழைத்தாள் அவள்."நீயே கொட்டிக்க.." என எரிந்து விழுந்து விட்டு சென்றான் அவன்.யதிராவுக்கு அழுகையாக வந்தது. "சரி இனி நான் வேலைக்கு போகறேன்னு சொல்லல.. அதுக்கு பதிலா தினம் ஷாப்பிங் போக போறேன்.. எனக்கு தினம் இருபதாயிரம் ரூபா வேணும்.." என்றாள் எழுந்து நின்று.அவன் இவள் பக்கம் திரும்பி நக்கலாக பார்த்தான். "அதுக்கு நீ பணக்காரனை பார்த்து கை பிடிச்சிருக்கணும். நான் கூலிக்காரன்.." என்றான்."ஏன் மாமா இப்படி பண்றிங்க.? நான் ஒரு உதவாக்கரைன்னு பீல் பண்றது உங்களுக்கு புரியவே இல்லையா.? உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா சொல்லுங்க. நான் வெளியே வேலைக்கு போனால் வேற எவனையாவது இழுத்துட்டு ஓடிருவேன்னு தோணினா அதை நேரா சொல்லிடுங்க.. நான் புரிஞ்சிக்கறேன்.." என்றாள் கண்ணீரை துடைத்தபடி."பெண்கள் நிலாவுக்கு கூட போய்ட்டு வராங்க.. ஆனா என்னை ஒரு வேலைக்கு அனுப்ப மாட்டேங்கிறிங்க.. எனக்கு வீட்டுல சும்மா இருக்க பிடிக்கல.. நீங்க வெளியே வேலைக்கு போனதும் கதவை பூட்டிக்கறவ நீங்க திரும்பி வர வரைக்கும் நாலு சுவத்தையே பார்த்துட்டு அந்த சுவருங்க கூடவே பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏன் வருத்தம் புரிய மாட்டேங்குது.? சௌந்தர்யா அண்ணி மாதிரி அலங்காரத்துல விருப்பம் இருந்திருந்தா தினம் நாலு முறை தலைசீவி தினம் ஆறு புடவை மாத்தி கட்டிட்டு கண்ணாடிக்கு மட்டுமாவது கண்காட்சி நடத்திட்டு இருந்திருப்பேன். இல்ல நீலா அண்ணி மாதிரி சமையலில் இன்ட்ரஸ்ட் இருந்திருந்தா கூட தினம் பத்து வகை பலகாரங்களை செஞ்சு பார்த்து கத்துக்கிட்டு இருந்திருப்பேன். எனக்கு இந்த இரண்டுமே வர மாட்டேங்குது.. எங்க அம்மா மாதிரி சீரியல் பார்த்துட்டு இருக்கவும் விருப்பம் இல்ல.. உங்க அம்மா மாதிரி கோலம் போட்டுக்கிட்டு எம்பிராய்டரி போட்டுட்டு இருக்கவும் விருப்பம் இல்ல.. நீங்களே என்னை புரிஞ்சிக்கலன்னா நான் என்ன பண்ண முடியும்.? கேளுங்கள் கொடுக்கப்படும்ன்னு சொன்னார் ஆண்டவர். அவர்கிட்ட கேட்காம உங்ககிட்ட நான் வேலைக்கு போக அனுமதி கொடுங்கன்னு கேட்கறேன் . நான் மத்த பெண்களை போல என் இஷ்டம் நான் வேலைக்கு போவேன்னு எதிர்த்து பேச மாட்டேன். நான் என்ன பண்ணாலும் அதோட ஆதி அந்தம் நீங்களா இருக்கும்ன்னுதான் நினைக்கிறேன்.. என் வாழ்க்கையே நீங்கதான்னு முடிவு செஞ்சிட்ட பிறகு நான் உங்களை வெறுத்து ஒதுக்கிட்டு போய் சாதிச்சாலும் அதுக்கு எந்த பலனும் இல்ல.. நான் பத்து ரூபா உழைச்சி சம்பாதிச்சாலும் அதை உங்க கையில் தந்து சந்தோசப்படத்தான் ஆசைப்படுறேன். ஒருவேளை நான் எதையாவது பெருசா சாதிச்சாலும் கூட அந்த சாதனை முடிஞ்ச பிறகு உங்க நெஞ்சுல வந்து சாயதான் ஆசைப்படுறேன்.." என்றவள் அவனது மௌனத்தை கண்டு விட்டு தோற்று போனதை போல் உணர்ந்தாள்."சில பெண்கள் நாலஞ்சி ஆண்களை கூட கரெக்ட் பண்ணி அவங்க நினைச்சதையெல்லாம் சாதிக்கறாங்க.. ஆனா என்னால உங்க ஒருத்தரையே கூட ஒழுங்கா கரெக்ட் பண்ண முடியல. இப்படியெல்லாம் ஏன் தண்டமா வாழணும்.?" என்று புலம்பி விட்டு முகத்தை துடைத்தபடி சமையல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி நடந்தாள்."எப்படிதான் சௌந்தர்யா அண்ணியெல்லாம் பேசியே சாதிக்கறாங்களோ.? நாம அழுதா கூட இங்க மனசு கரைய மாட்டேங்குது.. அதெல்லாம் ஒரே தனி கலை போல.. நமக்குதான் எந்த எழவும் வரமாட்டேங்குது.. அந்த கருமம் இருந்திருந்தா நான் ஏன் தாலியை எவனோ கழட்டுற வரைக்கும் விடப்போறேன்.?" என புலம்பியபடியே பாத்திரங்களை வைத்து விட்டு வெளியே நடந்தாள்.'அடேங்கப்பா.. பெண்கள் சிலர் பேசியே சாதிச்சிடுவது கூட என் பொண்டாட்டிக்கு புரிஞ்சிடுச்சி போல..' என நினைத்த முகிலுக்கு அவளது புலம்பலை கண்டு சிரிப்பாக வந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1540VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN