15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தன் முன் இருந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள். உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது‌. கால்கள் வேறு நடுங்கியது."உன்னால முடியும் யதி.. நீ இதுக்காக மாமா கூட எவ்வளவு சண்டை போட்டன்னு நினைச்சி பாரு.. ரொம்ப சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்திருக்க நீ.. உன் பயத்தால மொத்தத்தையும் கோட்டை விட்டுடாதே.." என்று மனதுக்கு நம்பிக்கை சொல்லிக் கொண்டாள்.அவளுக்கு கதவு திறந்து விட்ட வாட்ச்மேன் அவளை கண்டு மரியாதையோடு புன்னகைத்தார். அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சமாக மறைந்து போனது.கட்டிடத்திற்குள் நடந்தாள்."வணக்கம். சொல்லுங்க.. என்ன வேணும்.?" என்றாள் ரிசப்சனிஷ்ட்.யதிரா மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். "இண்டர்வியூ வந்திருக்கேன்.." என்றாள்."அதோ அந்த வரிசையில் போய் உட்காருங்க.. கூப்பிடுவாங்க.." என்று வரிசையாக இருந்த இருக்கைகளை கை காட்டினாள் ரிசப்ஷனிஸ்ட்.ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த ஆண்களையும் பெண்களையும் பார்த்தபடி காலி நாற்காலியில் சென்று அமர்ந்தாள் யதிரா."உன் பொண்டாட்டிக்கு நெத்தியில் வேர்க்குதுடா.." என்றான் குரு ஜன்னல் வழியே கீழே எட்டிப் பார்த்தபடி."கிண்டல் பண்ணாதடா.." என்ற முகில் எழுந்து வந்து ஜன்னலை விலக்கி யதிராவை பார்த்தான்.உள்ளங்கை வியர்வை ஈரத்தை அடிக்கடி புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டாள் யதிரா."மை ஸ்வீட்டி கேர்ள்.. உனக்கு ஏன் இப்படி வேர்க்குது.? ஏன் இவ்வளவு பயம்.? இதென்ன சிங்கம் புலி இருக்கும் காடா.? உன்னை போல மனுசங்க இருக்கும் கட்டிடம்தானே.?" என்றான்‌ இங்கிருந்தபடி."இதை போய் நேர்ல சொன்னா கூட அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இங்கிருந்து சொன்னா எப்படிடா அவளுக்கு கேட்கும்.?" என்று சிரித்தபடி கேட்டான் குரு."கிண்டல் பண்ணாதடா.." என்றவன் தன் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.கே.கே உள்ளே வந்தாள். குரு அவளை குழப்பமாக பார்த்தான்."இவதான் நான் சொன்ன கே.கே.." என்று அவளை நண்பனிடம் அறிமுகப்படுத்தினான் முகில். கே.கேவை பார்த்தவன் "இதுதான் நான் சொன்ன என் பிரெண்ட் குரு.." என்றான் அவளிடம்.குரு தன் கையை அவள் முன்னால் நீட்டினான். அவள் யோசனையோடு அவனது கையை பற்றி குலுக்கினாள்.குரு அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். ஒட்ட வெட்டிய தலைமுடி, கருப்பு லெதரில் பல வளையங்களை கொண்ட ஜாக்கெட்டும் அதே கருப்பில் பேண்டும் அணிந்திருந்தாள். கண்களில் கருப்பு மையை சற்று அதிகமாகவே பூசியிருந்தாள். முன் பற்களை அசைத்துக் கொண்டே இருந்தாள்‌. சூயிங்கம் மெல்லுகிறாள் என்று புரிந்துக் கொண்டான் குரு.தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு நண்பன் பக்கம் திரும்பினான் முகில்."டைம் ஆச்சி.. நீ போய் இண்டர்வியூவை ஆரம்பி.." என்றான்.இண்டர்வியூ நடக்கும் அறைக்குள் சென்று விட்டு வரும் ஒவ்வொருவரையும் பயத்தோடு பார்த்தாள் யதிரா."நெக்ஸ்ட் நீங்க வாங்க.." கதவருகில் நின்றிருந்த ஒரு பெண் யதிராவை அழைத்தாள். யதிரா தனது சர்பிகேட்ஸ் இருக்கும் பைலை இறுக்கமாக கைகளில் பிடித்தபடி நடந்தாள்.அறையினுள் குரு மட்டும்தான் அமர்ந்திருந்தான். அவனை அண்ணா என்று அழைப்பதா இல்லை சார் என்று அழைப்பதா என ஆரம்பத்திலேயே குழப்பம் வந்தது அவளுக்கு. முகிலோடு அவள் வாழ்ந்த நாட்களில் மிகவும் சொற்பமான முறைகள்தான் குருவை அவள் பார்த்திருக்கிறாள். இருந்தாலும் அப்போது அண்ணா என்றுதான் அழைத்திருக்கிறாள்."மா.. மார்னிங் சார்.." என்றாள். உளறியதை நினைத்து நொந்தாள். 'ஆரம்பத்துலயோ சொதப்பாத யதி..' என்றது அவளது மனசாட்சி.யதிராவின் முன் தனது கையை நீட்டினான் குரு. யதிரா அந்த கையை குழப்பமாக பார்த்தாள். ஆனால் உடனே புரிந்து கொண்டு தனது பைலை அவன் கையில் தந்தாள்."நீங்க இங்கே இண்டர்வியூ வருவதா முகில் சொன்னான். எனக்கு ரெகமன்டேசன் பிடிக்காதுதான். ஆனா முகில்கிட்ட மறுத்து பேச முடியல.. அதனால்தான் சரின்னு சொன்னேன்.." என்றவன் அவள் தந்த பைலை புரட்டி பார்த்தான்.அவன் சொன்னது கேட்டு யதிராவுக்கு முகம் கறுத்து விட்டது. தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்திற்கே வேலை கேட்டு சென்றிருக்கலாம் என்று நொந்துக் கொண்டாள்.குரு பைலை வைத்து விட்டு நிமிர்ந்தான். யதிராவும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் வேலை சம்பந்தமான சில கேள்விகளை கேட்டான். அவள் தடுமாறினாலும் கூட அவனது கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதிலை சொன்னாள்.குரு யோசித்தான். "இந்த இண்டர்வியூவில் நீங்க செலக்ட் ஆனா நாளைக்கு ஈவினிங்குள்ள உங்க நம்பருக்கு மெஸேஜ் வரும். நாளைக்கு ஈவினிங்குள்ள மெஸேஜ் ஏதும் வரலன்னா நீங்க வேற வேலையை தேடுங்க.." என்றான்.அவள் எழுந்து நின்றாள். "ஓகே சார்.." என்றவள் அவன் நீட்டிய பைலை வாங்கிக் கொண்டு வெளியே நடந்தாள்.மூன்று வருடங்களுக்கு முன்பு முகில் தினமும் வேலை தேடி செல்வான். அவனது தேடல் எவ்வளவு மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பதை அவள் இன்று வரையிலும் கூட முழுதாக அறிந்ததில்லை. ஆனால் அவன் மிகவும் போராடி உள்ளான் என்பதை மட்டும் இந்த ஒரே நாளில் புரிந்துக் கொண்டாள்.முகில் தன் அருகே ஒலித்த ஃபோனை எடுத்து பேசினான். யதிரா இண்டர்வியூ முடித்து கிளம்பி விட்டதாக தகவலை சொன்னான் குரு.முகில் திரும்பி பார்த்தான். கே.கே அவனுக்கு பின்னால் இருந்த ஜன்னலை திறந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்."கே.கே.." அவனின் குரல் கேட்டு திரும்பினாள் அவள்."யதிரா வீட்டுக்கு கிளம்பிட்டா.." என்றான்.கே.கே தலையசைத்து விட்டு வெளியே நடந்தாள். அவளை பார்த்து பெருமூச்சி விட்டான் முகில்.யதிராவின் பாதுகாப்புக்காக அவளை பின்தொடர ஆரம்பித்தாள் கே.கே.குரு முகிலின் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான்."வந்ததுல இன்னொரு பொண்ணும் ரொம்ப நல்லா இண்டர்வியூ அட்டென்ட் பண்ணியிருக்கா முகில்.." என்றான் சோகமாக.முகில் யோசித்தான். "அப்படின்னா அந்த பொண்ணை எனக்கு பி.ஏவா அப்பாயிண்மெண்ட் பண்ணு.." என்றான்.குரு சரியென தலையசைத்தான்.வீட்டின் முன்னால் ஆட்டோ நின்றதும் இறங்கினாள் யதிரா. ஆட்டோவிற்கு பணத்தை தந்துவிட்டு திரும்பினாள். முகில் பணத்தை எண்ணி தந்திருப்பான் போல. ஆட்டோவிற்கு தந்த பிறகு பத்து ரூபாய்தான் மீதி இருந்தது அவளிடம்.வீட்டின் கேட்டை திறக்க முயன்றவள் "யதிரா.." என்ற குரல் கேட்டு திரும்பினாள்‌. வைபவ் நின்றிருந்தான்.அவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அண்ணன்தான் அவளுக்கும் வைபவ்க்கும் முடிச்சி போட்டு பேசிக் கொண்டிருந்தான். ஆனால் இவள் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை. எப்போதாவது வைபவ் வீட்டிற்கு வருவான். அது தெரிந்தாலே இவள் தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்துக் கொள்வாள்."நீங்க.." தடுமாற்றமாக பேசியவளின் அருகே வந்தான் அவன்."நீ ஏன் இப்படி செஞ்சிட்ட யதிரா.? உன் மேல உன் அண்ணன் வச்சிருந்த நம்பிக்கையை முழுசா உடைச்சிட்ட நீ.. மூணு வருசமா அவன் உன்னை பாதுகாப்பா பார்த்துக்கிட்டான்.. அவனுக்கு எத்தனையோ கடன் இருந்தாலும் கூட உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சான்.. தன்னோட சாப்பாடு ருசியா இருக்கான்னு கூட பார்த்ததில்ல அவன். ஆனா நீ மூணு வேளையும் சாப்பிட்டியான்னு கவனிப்பான். அவனுக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது.? அதுவும் உன்னை விட்டுட்டு போன ஒருத்தனையே மீண்டும் நம்ம உனக்கு எப்படி தைரியம் வந்தது.? இவன் ஒரு பச்சோந்தி.. திரும்பவும் உன்னை விட்டுட்டு போக மாட்டான்னு எப்படி நம்புற நீ.? உன்னை ஒரு பொம்மையா நினைச்சி உன் வாழ்க்கையோடும் உன் பீலிங்க்ஸோடும் விளையாடுறான் இவன். இது ஏன் உனக்கு புரியல.? படிச்ச பொண்ணு நீயே இப்படி முட்டாள்தனமா மீண்டும் மீண்டும் படுக்குழியில் விழலாமா.?" என்றான் சோகமாக.யதிரா ஏதும் சொல்லவில்லை. என்ன சொல்வதென்றும் அவளுக்கு தெரியவில்லை. எச்சில் விழுங்கியபடி குழம்பிபோய் நின்றாள்.அந்த வீட்டு காம்பவுண்ட் சுவரின் ஒரு ஓரமாக மறைந்து நின்றிருந்த கே.கே தன் ஃபோனை தன் பக்கம் திருப்பினாள். ஃபோன் திரையில் தெரிந்த முகிலின் முகத்தில் கோபமும் ஆத்திரமும் இருந்தது."என்ன பண்ணட்டும் சார்.?" என்று கேட்டாள் கே.கே."கொஞ்சம் வெயிட் பண்ணு கே.கே.." என்றான்.யதிரா பதில் சொல்லமாட்டாள் என்பது முகிலுக்கு புரிந்தது. ஆனாலும் இதுவும் அவளுக்கான ஒரு பரிட்சைதான் என்று எண்ணினான் அவன்.யதிராவின் பதிலுக்காய் போனை பார்த்தபடி காத்திருந்தான் முகில். யதிராவின் முன்னால் நின்றுக் கொண்டிருந்த வைபவும் அவளது பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.யதிரா அமைதியாக தரையை பார்த்தாள்."நீ ரொம்ப அப்பாவி யதிரா.. இதனால்தான் உன் எக்ஸ் ஹஸ்பண்ட் உன்னை இன்னைக்கு வரைக்கும் ஏமாத்துறான்.. இனியாவது புத்திசாலியா இருக்க பாரு. இவனை விட்டுடு. அடிப்படை நம்பிக்கையே இல்லாம ஒரு குருட்டு தைரியத்தோடு இவனோடு வாழ உனக்கு என்ன தலையெழுத்தா.? நான் உன் மேல இருக்கற அக்கறையிலதான் இதை சொல்றேன் யதிரா. சுயமரியாதையை அடமானம் வச்சிட்டு இவனோடு வாழாதே.." என்றவன் அவளது மௌனத்தை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.யதிரா விழியோரம் துளிர்த்த நீர் துளிகளை துடைத்துக் கொண்டு கேட்டை திறந்து உள்ளே நடந்தாள்.கே.கே அவளை பரிதாபமாக பார்த்தாள். "சார் அவனை ஒரு கை பார்க்கட்டுமா.?" என்றாள் வீடியோ காலில் இருந்த முகிலிடம்."வேணாம் கே‌.கே.." என்று மறுத்து தலையசைத்தான் முகில்."அவன் சொன்னதுல பாதி விசயம் நிஜம்தான்.. இதை அவதான் புரிஞ்சிக்கணும். இவன் ஹெல்ப்தானே பண்ணியிருக்கான்‌ விடு.. இது யதிரா மனசுல விதையாவாவது விழும்ன்னு நம்புறேன்.. யாருக்கு எவ்வளவு சுயநலம் இருக்கு.. யாரெல்லாம் அவளை யூஸ் பண்றாங்க.. யாரெல்லாம் அவளை அடக்க பார்க்கறாங்கன்னு புரிஞ்சிக்கட்டும்.." என்று பெருமூச்சோடு சொன்னவன் ஃபோன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.யதிரா வீட்டுக்குள் வந்ததும் அழ ஆரம்பித்தாள். அண்ணன் தன் மீது வைத்த நம்பிக்கையை உடைத்து விட்டோமே என்று அழுகை வரவில்லை. ஆனால் தான் படிக்க அவன் உதவி செய்தான் என்ற விசயம் அவளுக்குள் குறுகுறுப்பை தந்தது. இருதலைக் கொள்ளி போல இருந்தது அவளின் மனம். அண்ணனின் மனதை ஏதோ ஒரு விதத்தில் உடைத்து விட்டோம் என்று எண்ணி கண்ணீர் விட்டாள்.முகில் வீடு வந்ததும் அவளது அழுது சிவந்த கண்களை பார்த்தான்."என்னாச்சி யதி.?" என்றான்."அண்ணன் பாவம்.." என்று சொன்னவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.'இதென்னடா வம்பு.? நாம ஒரு பக்கம் திருப்புனா அது ஒரு பக்கம் திரும்புது.. நான் இவளை யூஸ் பண்றேன்னு நினைச்சி அழுவான்னு பார்த்தா அண்ணன் பாவம்ன்னு அழுறா.. யதி.. நீ ஏன் இவ்வளவு அப்பாவியா இருக்க.?' என்று மனதோடு நொந்துக் கொண்டான்."சரி விடு அழாதே.." என்றவன் அவளின் அருகே வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்."உங்க அண்ணன் பாவம்தான் யதி.. உங்க தாத்தாவும் அப்பாவும் சம்பாதிச்சி வச்சிட்டு போன பணத்தை ஒழுங்கா செலவு பண்ண தெரியாம இருக்கான் இல்லையா.. அவன் பாவம்தான்.. நீயும் கூட பாவம்தான்.. தாத்தா சொத்துல பாதி உனக்குத்தான் சொந்தம். கோர்ட்ல கேஸ் போடுறன்னு சொன்னாலே பாதி சொத்தை உன் அண்ணன் தந்துடுவான்.." என்று ஏதோ ஒரு உளறல் மாதிரி உண்மையை சொல்ல முயன்றான் முகில்.யதிரா அழுகையை நிறுத்தி விட்டு யோசித்தாள். 'ஆமா இல்ல.. எல்லா காசும் தாத்தாவும் அப்பாவும் சம்பாதிச்சதுதானே.. என் படிப்புக்கு அந்த காசைதானே அண்ணன் செலவு பண்ணியிருப்பான்.? அப்புறம் ஏன் இந்த வைபவ் லூசு மாதிரி வந்து உளறினான்.. நானும் இவ்வளவு நேரம் பைத்தியம் போல அழுதுட்டேன்‌‌..' என நினைத்தபடி கண்களை துடைத்தாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1131VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN