19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
லிப்டை தவிர்த்து மாடி படிகளில் ஏறிக் கொண்டிருந்த யதிராவின் அருகே நடந்தான் வர்சன். அவன் லிப்டில் செல்வான் என்று எண்ணிதான் யதிரா படிக்கட்டில் ஏறியிருந்தாள். ஆனால் அவனும் இவளையே பின்தொடர்ந்து வருவான் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை."உங்க முழு பேரே யதிராவா.? உங்க பேர் செமையா இருக்கு.." என்றான்.யதிராவுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. 'இதுக்கு தேங்க்ஸ் சொல்லணுமா.? இல்ல உங்க பேரும் நைஸ்ன்னு சொல்லணுமா.?' என்று யோசித்து குழம்பினாள்.பர்கர் ஒன்றை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கே.கே திடீரென சிரித்தாள். முகில் குழப்பமாக அவள் பக்கம் திரும்பி பார்த்தான்."என்ன கே.கே.?" என்றான்."உங்க கேர்ள் பிரெண்ட்க்கிட்ட ஒருத்தன் கடலை போட்டுட்டு இருக்கான்.. அவனுக்கு ஒழுங்கா கடலை போடவே தெரியல.. இன்னும் பழைய ஸ்டைலே பாலோவ் பண்றான்.." என்றாள் சிரித்துக்கொண்டே.முகில் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்தான். படிக்கட்டு சுவற்றில் பொருத்தியிருக்கும் சி.சி.டிவியில் பதிவாகி கொண்டிருந்தது கே.கேவின் கணினி திரையில் ஓடிக் கொண்டிருந்தது. முகில் அருகில் வந்ததும் கே.கே. ஹெட்போனை கழட்டி விட்டு ஸ்பீக்கரை இயக்கினாள்."இதுவரைக்கும் ஒரு பொண்ணை பார்த்து கூட என் மைண்ட் இப்படி சடன் பிரேக் அடிச்சது இல்ல.. ஆனா எப்போது உங்களை பார்த்தேனோ அன்னைக்கே என்னோட மைண்ட் முழுக்க நீங்க மட்டுமே நிறைஞ்சிட்டிங்க.." என்று வர்சன் சொல்லுவது கேட்டு முகிலுக்கு கோபத்தில் முகம் சிவந்தது."உங்க கேர்ள் பிரெண்டை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு கத்துக்கங்க பாஸ்.." என்று சிரித்தாள் கே.கே."உன் காமெடி சென்ஸ் கேவலமா இருக்கு கே.கே.." என்று எரிந்து விழுந்தான் அவன்."கூலா இருங்க பாஸ்.. வாலிப வயசுல எல்லோரும் இப்படிதான் இருப்பாங்க.." என்று அவனுக்கு தேறுதல் சொல்ல முயன்றாள் கே.கே."நேத்து லிஃப்ட் தரேன்னு சொன்னவன் இன்னைக்கு ப்ரபோஸே பண்ணிட்டான். இவனை மாதிரிதான் நாமும் போல்டா இருக்கணும்.." என்று சொன்ன கே.கே குரலில் சிரிப்பு இழையோடியதை முகிலாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.மனைவி வாழ்வியலை கற்று கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு அவளிடம் ஒருவன் இப்படி கடலை போடுவதை கண்டு கோபம்தான் வந்தது."மேடம் இப்ப சொல்ற பதிலை வச்சிதான் அவங்க எந்த அளவுக்கு முன்னேறி இருக்காங்கன்னு புரிஞ்சிக்க முடியும்.." என்றாள் கே.கே.சிவந்து போன கண்களோடு கணினி திரையை உற்று பார்த்தான் முகில்."நா.. நா.." யதிராவிற்கு நாக்கு குழறியது."ஜீரோ மார்க்.." என்றாள் கே.கே தனது கட்டை விரலை கவிழ்த்து காட்டி."நான்.. நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்றேன்.." என்று சொன்னாள் யதிரா."இப்பவும் பெயில்.. மேடத்தோட திக்கலை பார்க்கும் போது யாரா இருந்தாலும் இது பொய்யுன்னுதான் நினைப்பாங்க. உண்மைன்னு நினைக்கும்படி அவங்க சொல்லி இருந்தாலும் கூட இது தப்பான ஆன்சர்தான். ஏனா எதிர்ல நிக்கிறவன் 'நானும் உங்களுக்கு இன்னொரு லவ்வரா இருக்கேன்'னு சொல்ல சான்ஸ் இருக்கு.." என்றாள் கே.கே."ரன்னிங் கமெண்ட்ரி தருவதை நிறுத்து கே.கே.." எரிச்சலோடு சொன்னான் முகில். ஏனென்றால் அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்து உண்மை அவனுக்கும் புரிந்துதான் இருந்தது. கற்பனைகளில் எதிர் பார்த்த பதில்கள் அனைத்தும் நிஜத்தில் அதே போன்ற விடைகளை தந்து விடுவதில்லை என்ற நிதர்சனம் அவனுக்குள் சிறு கோபத்தை தந்தது.யதிராவை கண்டு வயிற்றை பிடித்தபடி சிரித்தான் வர்சன்."உங்க பதில் செம காமெடி.. நான் முழுசா நம்பிட்டேன்.." என்றான் அவன்."நான்.. உண்மைதான்.." யதிரா மேலே சொல்லும் முன் அவளது கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்துவிட்டு படிகளில் மேலே ஏறினான் வர்சன்.ஐந்தாறு படிகள் ஏறிய பிறகு யதிராவை திரும்பி பார்த்தவன் "நான் நம்பிட்டேன் பேபி.. ஆனாலும் நீ நான் சொன்னதை கொஞ்சம் யோசனை பண்ணி பார்த்து பதில் சொல்லு.." என்றவன் சிலையாக நின்றவளை பார்த்தபடியே மேலே ஓடினான்.முகில் கை விரல்களை முறுக்கினான். பற்களை அரைத்தபடி திரையை பார்த்திருந்தவனுக்கு வர்சனை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்று வெறி வந்தது.சிலையாய் நின்ற யதிராவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் முகில். யதிரா தன் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள். உடனே உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்தாள். சத்தமில்லாமல் அழுதவளின் முக பாவத்தை கண்டதும் குபீரென சிரிப்பு வந்தது கே.கேவிற்கு."ஹஹஹ.. ஹஹ.." என சிரித்தவளின் சிரிப்பு குரல் முகில் காதில் நாராசமாக ஒலித்தது."சிரிப்பை நிறுத்த முடியல பாஸ்.. இவங்கக்கிட்ட இருந்து இப்படி ஒரு ரியாக்சனை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.. மேடத்தோட முகத்தை யார் பார்த்தாலும் கண்டிப்பா சிரிப்பாங்க. அதனால என்னை தப்பா எடுத்துக்காதிங்க.. சிரிச்சதுல வயிறு வலிக்குது பாஸ்.." சிரிப்புகளின் இடை இடையே இதை சொல்லி முடித்தாள் கே.கே.கண்ணீர் புரண்டோடும் யதிராவின் முகத்தை பரிதாபத்தோடு பார்த்தான் முகில். பாவமாக இருந்தது அவளை பார்க்கையில். விம்மி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள் அவள்.யதிராவின் அழுகை கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு கே.கேவின் சிரிப்பு எரிச்சலை தந்தது. பொறுக்க முடியாமல் அவளின் பின்னந்தலையில் ஒரு அடியை விட்டான். கே.கே சட்டென தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டாள். முகிலை முறைப்போடு பார்த்தாள். பின்னர் கணினி திரையை பார்த்தவள் யதிராவின் முகத்தை பார்த்ததும் சட்டென தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். யதிராவின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.யதிரா அழுதபடி படிக்கட்டில் அமர்ந்தாள். முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள். தனக்கு ஒருவன் முத்தம் தந்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.முகிலுக்கு கண்கொண்டு அவளது அழுகையை பார்க்க இயலவில்லை. என்ன செய்வதென யோசித்தான்.தனது ஃபோனை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தான்.அழுதுக் கொண்டிருந்த யதிரா ஃபோன் அழைப்பு சத்தம் கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு ஃபோனை கையில் எடுத்தாள். முகிலின் பெயரை கண்டதும் இன்னும் அதிகமாக அழுகை வந்தது. ஆனால் அதே வேளையில் அவனுக்கு சிறிது மனதாங்கல் வந்தாலும் தன்னை வேலையிலிருந்து நிறுத்தி விடுவான் என்பது நினைவுக்கு வந்தது. அவசரம் அவசரமாக புடவை முந்தானையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.மூச்சை இழுத்து விட்டு கொண்டு ஃபோன் அழைப்பை ஏற்றாள்."ஹலோ மாமா.." என்றாள் தயக்கமாக."உன் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு.?" முதல் கேள்வியே இதைதான் கேட்டான் முகில். கே.கே அவன் முதுகில் ஒரு அடியை தந்தாள்."ஸ்ஸ்.." உதடு மீது கை வைத்து கே.கேவை அமைதியாக இருக்கும்படி சொன்னான் முகில்.யதிரா மீண்டும் தன் கண்களை துடைத்துக் கொண்டாள். "நல்லாதான் இருக்கேன் மாமா.." என்றாள்."சாப்பிட்டியா.?" என்றான் இவன்."சாப்பிட்டேன் மாமா.. நீங்க..?" என்று கேட்டாள் அவள்."நான் சாப்பிட்டேன்.. நான் குருவோடு முக்கியமான விசயம் ஒன்னு பேசணும்.. அவனோட ஃபோன் ரீச் ஆக மாட்டேங்குது. நீ உன் ஃபோனை கொண்டுப்போய் அவன்கிட்ட கொடு.." என்றான்.யதிரா எழுந்து நின்றாள். முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்துக் கொண்டு படிகளில் ஏறினாள்.'ரெகமடேசனுக்கே அப்படி சொன்னாரு. இப்படி ஒரு கால் வந்ததுன்னு ஃபோனை கொண்டுப்போய் தந்தா என்ன சொல்வாங்களோ.?' என்று குருவை எண்ணி பயந்தாள் யதிரா.செல்வியோடு போனில் உரையாடிக் கொண்டிருந்த குரு தன் அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். யதிரா தயக்கமாக உள்ளே வந்தாள்."நான் அப்புறம் ஃபோன் பண்றேன்ம்மா.." என்று செல்வியிடம் சொல்லிவிட்டு ஃபோன் அழைப்பை துண்டித்துக் கொண்டவன் யதிராவை கேள்வியாக பார்த்தான்.யதிரா தன் போனை அவன் முன்னால் நீட்டினாள். "எ.. என் வீட்டுக்காரர் உங்களோடு பேசணும்ன்னு சொன்னாரு.." என்றாள் தடுமாறிய குரலோடு."தாலியை வாங்கிட்ட பிறகு இன்னும் என்ன வீட்டுக்காரரு.?" என்று குரு முனகியது யதிராவுக்கு தெளிவாக காதில் விழுந்தது. அவளது காதில் தெளிவாக விழ வேண்டும் என்றுதானே அவனும் முனகினான்."ஹலோ.." என்றான் போனில்."இங்கே வாடா.." என்றான் முகில் எதிர்முனையில்.குரு தன் இண்டர்காமை யோசனையோடு பார்த்தபடி "ம்.." என்றான்.ஃபோனை யதிராவிடம் திருப்பி தந்தான். அதற்குள் பேசி முடித்தாயிற்றா என்று ஆச்சரியப்பட்டாள் யதிரா."நீங்க போய் உங்க வேலையை பாருங்க.." என்றவன் யதிரா தனது கேபினுக்குள் போன பிறகு எழுந்து நடந்தான்.அலுவலகத்தின் மறு முனையில் இருந்த முகிலின் அறைக்கு சென்றான். அவன் சென்ற நேரத்தில் அங்கே வர்சனை முறைத்தபடி நின்றிருந்தான் முகில்."ஏன்டா.?" என்றவன் வர்சனை பார்த்ததும் "சொல்லுங்க சார்.." என்றான் சட்டென.வர்சன் குருவை பார்த்ததும் புன்னகைத்தான். குருவும் நட்போடு புன்னகைத்தான். அதை கண்டு முகிலுக்கு எரிச்சலாக இருந்தது."மிஸ்டர் குரு.. இந்த வர்சன் சார் கூட வேலை செய்யுற பொண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்காரு.." என்றபடி தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றான் முகில்.குரு முகத்தில் இருந்த புன்னகை சட்டென காணாமல் போனது. வர்சனையும் முகிலையும் மாறி மாறி பார்த்தான்."சார்.. நீங்க இதை பெருசு பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. நானும் அந்த பொண்ணும் ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்றோம்.. அதனால இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்.." என்றான் வர்சன் தோளை குலுக்கியபடி.முகில் கோபத்தில் கண்களை இறுக்க மூடினான். கே.கேவிற்கு முகிலை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் சிரிப்புதான் பொத்துக் கொண்டு வந்தது. அவள் வாயை மூடியபடி சிரிப்பை அடக்குவதை கண்டு குரு குழம்பி போனான். வர்சன் கே.கேவை புருவம் உயர்த்தி பார்த்தான். நேற்று பேருந்து நிறுத்தத்தில் பார்த்த பெண் என்பது அவனுக்கு நினைவிற்கு வந்தது. அவள் இங்கே என்ன செய்கிறாள் என யோசித்தான்."லவ் பண்ற இரண்டு பேர் முத்தம் கொடுத்துக்கறதில என்ன இருக்கு சார்.?" புரியாமல் கேட்டான் குரு.முகில் இன்னமும் கோபம் தீராமல் நின்றுக் கொண்டிருந்தான்."இவன் முத்தம் கொடுத்தது யதிரா மேடம்க்கு.." என்று சொன்னாள் கே.கே.அவள் சொன்னது கேட்டு அதிர்ந்து போன குரு வர்சனை கோபத்தோடு பார்த்தான்."ஏன் பொய் சொல்றிங்க வர்சன்.? ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளுக்கு முத்தம் தந்தா அதுக்காக வழக்கு பதிவு பண்ணி உங்களை ஜெயிலுக்கு அனுப்ப முடியும். இது தெரியும்தானே.?" கையை கட்டியபடி கேட்டான் குரு."குரு சார்.. நானும் அந்த பொண்ணும் லவ் பண்றோம்.." என்று வர்சன் மீண்டும் சொன்னான்.குரு முகிலை பார்த்துவிட்டு இவன் பக்கம் திரும்பினான். "நீங்க முத்தம் தந்தது நம்ம எம்.டியோட கேர்ள் பிரெண்டுக்கு.. அந்த பொண்ணு இவரை தவிர வேற யாரையும் லவ் பண்ண மாட்டா.." என்றான் குரு.வர்சன் அதிர்ச்சியோடு முகிலை பார்த்தான். முகிலின் கோபம் இப்போதுதான் அவனுக்கு தெளிவாக புரிந்தது. யதிரா தனக்கு காதலன் இருப்பதாக சொன்னது உண்மைதான் என புரிந்துக் கொண்டவனுக்கு தாமதமாக புரிந்துக் கொண்டதை எண்ணி கவலையாக இருந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1062VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN