21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தனது மேஜையில் இருந்த ரோஜா மலர்களை யோசனையோடு பார்த்தாள்."யார் இதை இங்கே வச்சது.?" என தனக்கு தானே கேட்டவள் ரோஜா மலர்களை கையில் எடுத்தாள். மலர்களின் கீழே சிறு காகித துண்டு இருந்தது. எடுத்து பார்த்தாள். வர்சன் என்று எழுதியிருந்தது. பதட்டத்தோடு பேப்பரை கீழே விட்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த பேப்பரை எடுத்து கசக்கி குப்பைத்தொட்டியில் எறிந்தாள். பூக்களையும் தூக்கி எறிந்தாள்."இது மட்டும் மாமாவுக்கு தெரிஞ்சதுன்னா வேலையை விட்டே நிறுத்திடுவார்.." என்று புலம்பினாள்.மதிய உணவு இடைவேளையின் போது வர்சன் இவளை தேடி வந்தான். "யதிரா நான் தந்த பூக்கள் அழகா இருந்ததா உங்களை போலவே.?" என்றுக் கேட்டான்.யதிரா நடுங்கும் விரல்களை இறுக்கமாக பிடித்தபடி எழுந்து நின்றாள். "ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதிங்க.. எனக்கு லவ்வர் இருக்காங்க. நீங்க இப்படி தொல்லை பண்றது தெரிஞ்சா அவர் ரொம்ப கோபப்படுவாரு.." என்றாள்.வர்சன் ரகசியமாக சிரித்தான். "அவருக்கு தெரியாம பார்த்துக்கலாம்.." என்று சொல்லி கண்ணடித்தான். யதிராவுக்கு கால்கள் நடுங்கியது."நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.." என்றாள் பதட்டமாக."அதுக்கென்ன.? இனி மாறிக்கலாம்.." என்றவன் அவளது காதில் இருந்த கம்மலை சுண்டி விட்டான்.யதிராவுக்கு பயத்தில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியது.வர்சன் தனது கை கடிகாரத்தை பார்த்தான். "டைம் ஆச்சி.. சாயங்காலம் பார்க்கலாம் செல்லம்.." என்றவன் தனது இடத்திற்கு கிளம்பினான்.யதிரா கலங்கும் கண்களோடு அமர்ந்திருந்தாள்.கே.கேவின் கணினி திரையில் யதிராவை பார்த்துக் கொண்டிருந்த முகில் "இவளை திருத்த இப்போதைக்கு முடியாது.." என்று புலம்பினான்."கொஞ்சம் டைம் கொடுங்க சார்.. பாவம் அவங்க.. ரொம்ப அப்பாவியா இருக்காங்க.." என்றாள்."எங்களை சுத்தி கெட்டவங்களா இருக்காங்க கே.கே. எப்ப எந்த வகையில பிரச்சனை வரும்ன்னு தெரியல. எங்களை பிரிச்சி விட காத்திருங்காங்க. இவ இப்படி சின்ன விசயத்துக்கு கூட பயந்து அழுதுட்டு இருந்தா என்ன செய்றது.? இங்கே பாரு எங்க அக்கா மந்திரிச்ச கயிறை கையில கட்டி விட்டிருக்கா.. நானும் ஒன்னும் தெரியாதவன் போல இதை ரக்சாபந்தன் கயிறுன்னு நம்பி கட்டிட்டு வந்துட்டேன்.." என்றான் கவலையோடு.கே.கே அவனது கையில் இருந்த கருப்பு கயிறை பார்த்தாள். சௌந்தர்யா மீது கோபமாக வந்தது அவளுக்கு."கழட்டி எறிஞ்சிடுங்க சார்.." என்றாள் கோபமாக.அவன் இல்லையென தலையசைத்தான். "எங்களோட காதலுக்கு இருக்கற சக்தியை விட இந்த கயிறுக்கு சக்தி இருக்கும்ன்னு நான் நம்பல கே.கே. காதல்ன்னா பல தடையை தாண்டி வாழணும். இப்படி ஒரு சின்ன கயிற்றை கூட சகிச்சி வாழ முடியலன்னா அது காதலே இல்ல. என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு‌. அந்த கயிறு என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்.." என்றான். அவனது குரலில் நம்பிக்கை இருந்த அதே அளவிற்கு வருத்தமும் இருந்தது.எழுந்து நின்று அவனை அணைத்துக் கொண்டாள் கே.கே. சொந்த ரத்தமே பகையாளியாகும் போது வரும் துரோகத்தின் வலியும் வேதனையும் அவளுக்கும் புரியும்."உங்க மனசுக்கே நல்லது நடக்கும் சார்.." என்றாள்.ஒரு மாதம் ஓடி விட்டிருந்தது. யதிராவுக்கு தினமும் பூக்களை தந்தான் வர்சன். அவள் அந்த பூக்களை தினம் குப்பைகளில் எறிந்துக் கொண்டிருந்தாள். ஆனால் முன்பு போல அழுவதில்லை. அவ்வப்போது எரிச்சலோடு அவனிடம் பேசினாள். அவள் அந்த அளவுக்கு முன்னேறியதே முகிலுக்கு சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.கே‌.கே தனது வேலையில் மும்முரமாக இருந்தாள்.அந்த மாத சம்பளம் வந்ததும் முகிலிடம் தந்தாள் யதிரா. "இனி சாயங்காலமும் உங்களுக்கு பால் டீ போட்டு தரேன் மாமா.." என்றாள்.முகில் பணத்தை எண்ணி பார்த்துவிட்டு சோகமாக தலையை கோதினான்."என்ன ஆச்சி மாமா.?" அவள் குழப்பமாக கேட்டாள்."எங்க அப்பா அவரோட கடன்ல பாதியை எனக்கு பிரிச்சி விட்டுடாரு யதி.. மாசமான வட்டி மட்டுமே நாப்பதாயிரத்துக்கு மேல கட்டணும்.. அதை தாண்டி கடனையும் கொஞ்சம் கொஞ்சம் கட்டியாகணும். உன் சம்பளமும் என் சம்பளமும் எதுக்கு யூஸ் பண்றதுன்னே தெரியல.." என்றான் நெற்றியை பிடித்தபடி.யதிராவுக்கு அவனை பார்த்து கவலையாக இருந்தது. அவன் தோளில் சாய்ந்தாள். "மெதுவா கடனை கட்டிடலாம் மாமா.. நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க.." என்றாள்.முகில் ஆமோதித்து தலையசைத்தான். "இனி காலையிலேயும் டிக்காசனே வச்சிடும்மா.." என்றான் சோகமாக.யதிராவுக்கு அவனை பார்க்கும் போது அழுகை வரும்போல இருந்தது. "என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு சிரமம்.. தனியா வராம இருந்திருந்தா அந்த வீட்டுல உங்களுக்கு நல்ல சாப்பாடாவது இருந்திருக்கும்.." என்றாள் கண்களை துடைத்தபடி.முகில் அவளது முகத்தை பற்றி நிமிர்த்தினான். "நீயும் உன் வீட்டுலயே இருந்திருந்தா கூடத்தான் இப்படி வறுமையை அனுபவிச்சிருக்க தேவையில்ல.." என்றான்.யதிரா மறுத்து தலையசைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். "நீங்க இருந்தா போதும் மாமா.. எனக்கு வேற ஏதும் வேணாம்.. எங்க வீட்டுல ருசியான சாப்பாடும் வகைவகையா டிரெஸும் இருக்கும். ஆனா நீங்க இல்லையே.. ரொம்ப வருசம் ஆனாலும் பரவால்ல மாமா.. மெதுவா கடனை கட்டிக்கலாம்.." என்றாள்.முகில் அவளை பார்த்தான். அவளின் விழியோரத்தில் ஈரம் இருந்தது. அவள் கண்ணீரின் மீது முத்தங்களை பதித்தான்."உங்க அப்பாவோட இன்சூரன்ஸ் பணம் கூட நிறைய வந்ததுன்னு கேள்விப்பட்டேன் யதி.. அதை உன் அண்ணன் கடனா தந்தான்னா கூட வெளியிடத்துல கடனை கட்டிட்டு மாசமாசம் இவனுக்கே வட்டியை கட்டிடுவேன்.." என்றான் அவளது முகத்தை உற்று நோக்கியபடி.யதிரா மறுத்து தலையசைத்தாள். "அங்கே கேட்க வேணாம் மாமா.. அவன் கேவலமா பார்ப்பான். திட்டுவான்.. வட்டி அதிகமா இருந்தா கூட நாம வெளியவே வாங்கிக்கலாம்.." என்றாள் சோகமாக.'அவன் கேவலமா பார்ப்பான்னு புரிஞ்சி வச்சிருக்கியே. அது வரைக்கும் சந்தோசம்..' என எண்ணினான்."சும்மாதானே வச்சிருப்பான். அதனாலதான் கேட்டேன்.." என்றான் இவன் சமாளிப்பு குரலில்."இல்ல மாமா.. அவன்கிட்ட அவ்வளவு காசு ஏதும் இருக்காது.. எக்கச்சக்கமா கடன்தான் வாங்கி வச்சிருப்பான்னு நினைக்கிறேன்.." என்றாள் சிறு குரலில்."கோடி ரூபாயை அதுக்குள்ள செலவு பண்ணிட்டானா உன் அண்ணன்.?" யோசனையோடு கேட்டவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள்."கோடி ரூபாயா.? அவனுக்கு ஏது.?" என்றாள்.அவள் கேட்டது கண்டு இவன் குழம்பினான். அதன் பிறகுதான் தன் மனைவியின் புத்திசாலித்தனம் எந்த அளவிற்கானது என்பது அவனுக்கு நினைவிற்கு வந்தது."உங்க அப்பா இறந்தபோது எவ்வளவு இன்சூரன்ஸ் வந்தது.?" என்றான் இம்முறை."தெரியல மாமா.. ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ வந்திருக்கும்.." என்றாள் யோசனையோடு. அவளது நெற்றியில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு."உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது.?" என்று முனங்கினான்."யதிரா.." என்று அழைத்தான் சிறிது நேர யோசனைக்கு பிறகு."என்ன மாமா.?" என்று நிமிர்ந்தவளின் நெற்றியில் முத்தம் தந்தான்."நம்பிக்கை துரோகம் பத்தி நீ என்ன நினைக்கிற.?" என கேட்டான் அவளது கன்னத்தில் இதழ்களை பதித்து நகர்ந்தபடி.யதிராவுக்கு மூச்சி தடுமாறியது."பதில் சொல்லு யதி.." என்றான் முத்தங்களை தந்தபடியே."இ.. இப்படி முத்தம் தந்துட்டே கேட்டா நான் எப்படி பதில் சொல்வேன்.?" என்றாள் திணறலாக.முகில் சிரித்தான். "எப்படியோ சொல்லு.." என்றான்."தெரியல மாமா.. நம்பிக்கை துரோகம்ன்னா என்னன்னு அதிகமா தெரியாது.. கஷ்டமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்றாள் யோசனையோடு.கே.கே ஷாப்பிங் மால் ஒன்றில் நுழைந்தாள்."ஹேய்.."‌ என்று கையை அசைத்தபடி சுபா இவளருகே ஓடி வந்தாள்."ஹாய் சுபா.. நீ இன்ஸ்டாவுல பார்த்ததை விட நேர்ல ரொம்ப அழகா இருக்க.." என்று புகழ்ந்தாள் கே.கே."நீங்களும் இன்ஸ்டாவை விட நேர்ல இன்னும் செமையா இருக்கிங்க கே.கே.." என்றாள் சுபா.கே.கே பெருந்தன்மையோடு சிரித்தாள்."இன்னும் டூ வீக்ஸ் கழிச்சி என் பெஸ்ட் பிரெண்ட்க்கு மேரேஜ் நடக்க போகுது. அதுக்கு போட்டு போக டிரெஸ் செலக்ட் பண்ணதான் உங்களை கூப்பிட்டேன். உங்க டிரெஸ் செலக்சன் செமையா இருக்கும்ன்னு ஸ்வேதாதான் சொன்னாங்க.. அவங்க சொன்ன பிறகுதான் உங்கக்கிட்ட கேட்டேன்.." என்றாள் சுபா ஷாப்பிங் மாலுக்குள் நடந்தபடியே.'அந்த ஸ்வேதா என் பேக் ஐடின்னு தெரியாத வரை சந்தோசம்..' என்று எண்ணி சிரித்த கே.கே சுபாவை பின்தொடர்ந்து நடந்தாள். 'இன்னும் இரண்டு மாசத்துல இவளுடைய உயிர் தோழியா மாறணுமே..' என்று சலிப்போடு யோசித்தாள்.சில அடிகள் நடந்ததும் சுபாவின் மேலே வந்து இடித்தான் ஒரு இளைஞன். பாய்ந்து அவனது மூக்கின் மீது குத்தினாள் கே.கே. அவன் கையை ஓங்கிக் கொண்டு வந்தான். அவனது கையை வளைத்து அவனது தொடையில் ஒரு உதையை தந்த கே.கே "என் பிரெண்டுடா இவ.. கண்களை கவனமா வச்சிட்டு நடந்து போ‌.." என்று எச்சரித்தாள். அவனை விலக்கி தள்ளி விட்டு நடந்தவளின் தோளில் வந்து சாய்ந்தாள் சுபா."தேங்க் யூ கே.கே.. ஒரு மாசமா வெறும் இன்ஸ்டாவுல பழகின எனக்காக நீங்க இவ்வளவு ரிஸ்க் எடுப்பிங்கன்னு நினைக்கவே இல்ல.." என்றாள் கரகரத்த குரலில்.கே.கே அவளை விலக்கி நிறுத்தினாள்."நீ என்ன நினைச்சி என்கிட்ட பழகினன்னு தெரியாது சுபா. ஆனா நான் உன்னை என் பெஸ்ட் பிரெண்டா நினைச்சிதான் பழகிட்டு இருக்கேன். பெஸ்ட் பிரெண்டுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா உயிரையே தரணும்.. இதுதான் என் பாலிசி.." என்றவள் முன்னே நடந்தாள். சுபா ஆச்சரியத்தோடு அவளை பார்த்தாள். இப்படி ஒரு தோழி கிடைத்ததை எண்ணி சந்தோசப்பட்டாள். ஓடி சென்று அவளோடு இணைந்து நடந்தாள்.சுபா மீது வந்து மோதியவனுக்கு ஆயிரம் ரூபாயை மணி டிரான்ஸ்ஃபர் செய்தபடியே நடந்த கே.கே தன்னோடு இணைந்து நடக்கும் சுபாவை கண்டதும் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.யதிரா தன் வீட்டு தோட்டத்தில் காய்த்திருந்த காய்களை பயன்படுத்தி குழம்பு வைத்தாள்."நம்ம செடி காய்கள் மாமா.." என்றாள் உணவை பரிமாறும்போது.முகில் புன்னகைத்தபடி அவளுக்கு உணவை ஊட்டினான்."நீங்க சாப்பிடுங்க மாமா.." என்றவளுக்கு மீண்டும் ஊட்டினான்."இன்னும் எத்தனை நாளைக்கு சேர்ந்து இருக்க போறோமோ தெரியல.. இருக்கும் வரைக்குமாவது கொஞ்சம் சந்தோசமா இருப்போம்.." என சொல்லியவன் அடுத்த முறை ஊட்டும்போது யதிரா வாய் திறக்கவே இல்லை.முகில் நிமிர்ந்து அவளது முகம் பார்த்தான். அவளது கண்கள் கலங்கி இருந்தது."ஏன் மாமா இப்படி சொல்றிங்க.? நீங்க மறுபடியும் சௌந்தர்யா அண்ணி பேச்சை கேட்டு என்னை விட்டு போக போறிங்களா.?" என்றாள்."ச்சே.. ச்சே.. அப்படி சொல்லலம்மா நான். நான் சம்பாதிக்கும் பணம் கடனுக்கே பத்தாது. நீயும் எத்தனை நாளைக்கு என்னை அனுசரிச்சி போவன்னு யோசிச்சேன். நீயா விட்டுட்டு போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சி இப்படி சொல்லிட்டேன்.." என்றவன் எதையோ பேச வாய் திறந்தவளுக்கு உணவை ஊட்டினான்.அவள் அவசரமாக தண்ணீரை குடித்து விட்டு நிமிர்ந்தாள். "பணம் இல்லன்னாலும் நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் மாமா.." என்றாள்.அவன் ஒப்புதலுக்கு தலையசைத்தான்."உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா.?" என்று கேட்டாள் அவள்."இருக்கும்மா.." என்றவன் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் அவளுக்கு மனம் நொந்து போய் விட்டது அவனது அவநம்பிக்கையால்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1106VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN