22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வர்சன் பூங்கொத்தை யதிராவின் மேஜை மேல் வைத்து விட்டு முகிலின் அறைக்கு வந்தான்."சார் போதும்.. அவங்க இப்பவே எரிச்சலாகி திட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. இத்தோடு விட்டுடலாம்.." என்றான் முகிலிடம்."இன்னும் கொஞ்ச நாளுக்கு கன்டினியூ பண்ணுங்க வர்சன்.. எனக்காக ப்ளீஸ்.." என்றான் முகில்.வர்சன் அங்கிருந்து சென்றதும் கே.கே தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து இவன் முன்னால் அமர்ந்தாள்."யதிரா மேடம்க்கு வர்சனை எதிர்த்து பேசும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சி சார்.. போதும் இதுன்னு நினைக்கிறேன் நான்.." என்றாள்.முகில் இல்லையென தலையசைத்தான். "அவளுக்கு மன தைரியம் நிறைய வேணும் கே.கே. அவளோட காதல் எந்த அளவுக்கு வலிமையானதுன்னு அவ புரிஞ்சிக்கணும். நானும் கூட புரிஞ்சிக்கணும்.. வர்சன் மேல ஏதோ ஒரு நிமிசத்துல அவளுக்கு ஏதாவது சபலம் வரலாம் இல்லையா.?" என கேட்டவனை கோபத்தோடு பார்த்தாள் கே.கே."நீங்க ரொம்ப ஓவரா பண்றிங்க சார்.. அவங்களுக்கு கேரக்டர் டெஸ்ட் வைக்கிறிங்களா இப்ப..?" என்றாள் கோபத்தில் சிவந்த முகத்தோடு."ஏன் வைக்க கூடாதா கே.கே.?" என கேட்டு சிரித்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள் அவள்."என்னை சுத்தி இருக்கற எல்லோருமே ஏதோ ஒரு வகையில என்னை ஏமாத்திட்டாங்க கே.கே. அவளையும்தான் ஏமாத்தினாங்க. ஆனா நிதர்சனம் புரிஞ்ச பிறகு இந்த லைஃப்ல யாரை நம்புறதுன்னு தெரியல.. இவ எனக்கு துரோகம் செய்ய மாட்டான்னு என் மனசுக்கு புரிஞ்சாலும் கூட ஏதோ ஒரு கிறுக்குதனமான திருப்திகாக இந்த பரிட்சை தேவைப்படுது.." என்றான் அவன்."ஐ ஹேட் யூ பாஸ்.. உங்க கையில இருக்கும் கயிற்றை கழட்டி எறிங்க முதல்ல.. அதனால்தான் உங்களுக்கு மூளை கெட்டுப்போச்சி.." என்றாள்.முகில் தன் கையில் இருந்த கருப்பு கயிற்றை பார்த்தான். கசப்பாக சிரித்தான். "நான் சந்திச்ச துரோகத்துக்கான நினைவு சின்னம் இது. இதை ஏன் கழட்ட சொல்ற.?" என்றான் அவளிடம்."என் மனைவி ஒவ்வொரு நிமிசமும் அவளோட சுய புத்தியை பயன்படுத்தணும். அவளோட மனசுல நான் மட்டும்தான் இருக்கேன்னு அவளுக்கு ரொம்ப நல்லா தெரியணும்.. கொஞ்சம் காத்திருந்துதான் பார்க்கலாமே.. அவளோட மனசு எந்த அளவுக்கு உறுதியானதுன்னு. இந்த உலகத்துல நம்ம கேரக்டரை டெஸ்ட் பண்ண ஆயிரம் கேரக்டரை ஆயிரம் விதமான சூழ்நிலையில் ஆண்டவன் அனுப்பி வைப்பான். நான் ஒரு கேரக்டர்தானே அனுப்பி இருக்கேன்.." என்றான் சிரிப்போடு.கே.கேவிற்கு அவன் சொன்னது பிடிக்கவேயில்லை. ஆனால் அவளுக்கு யதிரா மீது அளவில்லா நம்பிக்கை இருந்தது. அதனால் அவன் சொன்னதை தனக்கான சவாலாக எடுத்துக் கொண்டாள் அவள்.யதிரா உணவு இடைவேளையின் போது தனது டிபன் பாக்ஸில் இருந்த உணவை உண்டுக் கொண்டிருந்தாள். அவளது நட்பு கூட்டம் உணவோடு வந்து அவளை சுற்றி அமர்ந்தனர்."யதிரா.." என்று பேச்சை ஆரம்பித்தாள் சுந்தரி."சொல்லுங்க அக்கா.." என்றாள் இவள் தங்களுக்கு இருக்கும் கடனை எண்ணியபடியே."என் தம்பிக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கோம்.. உன் நம்பர் தந்தா நான் போட்டோ அன்ட் டீடெயில்ஸ் அனுப்பி வைக்கிறேன்.." என்றாள் அவள்."நோ.." என்று தலையை அசைத்தான் வர்சன்.யதிராவின் அருகே நெருங்கி அமர்ந்தவன் "இந்த மேடம் என்னோட பிராப்பர்டி.." என்றான் கொஞ்சல் குரலில்.வேணியின் அருகே அமர்ந்திருந்த ஓவியா தலையை குனிந்துக் கொண்டாள். கண்கள் கலங்கியது அவளுக்கு. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவள்.யதிரா வர்சனை விட்டு விலகி அமர முயன்றாள். ஆனால் வர்சன் அவளின் கை பற்றி அங்கேயே அமர வைத்தான்."அவளுக்குதான் உன் மேல இன்ட்ரஸ்ட் இல்லையே.. விட்டுட்டேன் வர்சு.." என்றாள் சுந்தரி."எனக்கு பிடிச்சி போன ஒரு விசயத்தை எதுக்காகவும் நான் விடவே மாட்டேன். போட்ட அப்ளிகேஷனை திருப்பி வாங்குற பழக்கம் எனக்கு இல்ல.." என்றான்.யதிரா தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். "உங்களுக்கு லாஸ்டா வார்னிங் தரேன் வர்சன். இனி என்னை தொந்தரவு செய்யாதிங்க.." என்றவள் சுந்தரி பக்கம் திரும்பினாள். "எனக்கு பாய் பிரெண்ட் இருக்காங்க அக்கா. இப்ப நான் அவரோடுதான் இருக்கேன்.." என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.வர்சன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். "மேடம் இன்னொரு தடவை நான் டிஸ்டர்ப் பண்ணா என் கன்னத்துலயே அறைவாங்கன்னு நினைக்கிறேன்.." என்றான்.அலுவலகத்தில் பலரும் யதிராவை பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். "பாய் பிரெண்டோடு ஒரே வீட்டுல இருக்காளாம்.." என்று அவள் காதில் விழும்படி பேசிக் கொண்டனர்.யதிராவின் தோழி ஒருத்தி கூட லிவிங் டூ கெதராகதான் வாழ்ந்து வருகிறாள். அவளும் இப்படிதான் மறைமுக பேச்சுகளை சந்திக்கிறாளா என சந்தேகித்தாள் யதிரா. இல்லை தன்னை மட்டுமே அனைவரும் உரசி பார்க்கிறார்களா என்று குழம்பினாள்.குரு அவளுக்கு அதிகளவு வேலை தந்துக் கொண்டிருந்தான். எவ்வளவு வேகமாக செய்தாலும் கூட வேலை முடியவே இல்லை. இதில் அலுவலகத்தில் உள்ள சக பணியாளர்கள் வேறு அவளின் முதுகு புறம் அவளது வாழ்க்கையை பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். நேரத்தை நிர்வகிக்க இயலாமல் திணறினாள் அவள். சிக்கலில் சிக்கி தவிப்பது போலிருந்தது.முன்பெல்லாம் அழுகை வரும் இடங்களில் இப்போது கோபமும் எரிச்சலும் வந்தது.மாலையில் வீடு வந்தவள் முகில் வரும்வரை காத்திருந்தாள். முகில் வந்ததும் "மாமா கல்யாணம் பண்ணிக்கலாமா.?" என்றாள் அவசர குரலில்."அதுதான் ஏற்கனவே ஆயிடுச்சே.." என்றான் அவன்."ஆனா விவாகரத்தும் ஆச்சி இல்ல. இப்ப வாங்க மறுபடியும் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்று அழைத்தாள் யதிரா.முகில் அவளை ஆச்சரியமாக பார்த்தான். "அதுக்கென்ன அவசரம்.? மெதுவா கட்டிக்கலாம்.." என்றான்."ஆபிஸ்ல எல்லோரும் ஒரு மாதிரியா பேசுறாங்க மாமா.. லிவிங் டூ கெதர்ன்னு சொன்னா கிண்டலா பார்க்கறாங்க.." என்றாள் சோகமாக.முகில் அவளருகே வந்து அவளை அணைத்துக் கொண்டான்."உலகம் எவ்வளவு அட்வான்ஸா போகுது தெரியுமா‌.? இப்ப இதெல்லாம் ரொம்ப சகஜம்.." என்றான்.யதிரா இல்லையென தலையசைத்தாள். அவனது நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளுக்கு அலுவலக பேச்சுகளை நினைத்து பார்க்கையில் அழுகை வரும்போல இருந்தது."ஒரு தாலி கட்டிட்டா ஆகாதா.?" என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.அவளது கன்னத்தில் கிள்ளி முத்தம் தந்தான் முகில். "கொஞ்சம் நாளாகட்டும்.. அப்புறம் கட்டுறேன்ம்மா.." என்றான்.அவள் சோகமாக மீண்டும் அவனது நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள். முகில் அவளது முகம் பற்றி நிமிர்ந்தினான்."இன்னைக்கு ஒருத்தர் பேசுறாங்கன்னு கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி யாராவது உன்கிட்ட வந்து இந்த மாப்பிள்ளை நல்லா இல்ல‌‌.. இன்னொருத்தன்தான் உனக்கு பொருத்தமா இருக்கான்னு சொல்வாங்க. அதுக்காக நீ என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கட்டிப்பியா.? அந்த மாதிரிதான் இதுவும். நாம நமக்காக வாழணும்மா.. வருசம் முழுக்க நம்ம வாழ்க்கையை அடுத்தவங்களோட எண்ணங்களே வழி நடத்த கூடாது.. யாரா இருந்தாலும் முதல் இரண்டு நாள் பேசுவாங்க. அப்புறம் அமைதியாகிடுவாங்க.. இதை நினைச்சி குழம்பாம இரு.." என்றான்."உங்களுக்கு என்னை பிடிக்கலையா மாமா.?" அவள் கலங்கும் விழிகளோடு கேட்க அவனுக்கு நெஞ்சம் வலித்தது. அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அவளது தோளில் முகம் புதைத்தான்."ரொம்ப பிடிச்சிருக்கும்மா.. ஆனா மனசுல நிறைய குழப்பம் கவலை.. கடன்.. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.. ஜஸ்ட் டைம் கொடும்மா.." என்றான். அவனது குரலில் இருந்த கவலை யதிராவையும் பாதித்தது. சரியென தலையசைத்தவளுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும் என்று யோசனையாக இருந்தது.இரண்டு வாரங்கள் சென்றது. கே.கே தன்னிடமிருந்த பைல் ஒன்றை முகிலிடம் தந்தாள். முகில் எடுத்துப் பார்த்தான்."ரூபன் ஒரு கேம்ப்ளர்.. உங்க அக்காவும்தான். காலேஜ் டேஸ்ல இருந்தே இரண்டு பேரும் கேமிங் கிளப்ஸ்ல மெம்பர்ஸா இருந்திருக்காங்க.. இரண்டு பேருக்கும் நடுவுல கேம்பிளிங் மைன்ட் ஒத்து போன ஒரே காரணத்தாலயே பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸோடு அவங்க லைப்பை ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு கட்டத்துல அதையே எக்ஸ்டன் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.. அப்புறம் வந்த நாட்கள்ல இரண்டு பேரும் எக்கச்சக்கமான பணத்தை கேம்ப்ளிங்கல தொலைச்சிருக்காங்க.. உங்க பாதர் இன் லாவுக்கு லேட்டாதான் இந்த விசயம் தெரிஞ்சிருக்கு.. ரூபனுக்கு மேல் கொண்டு பணம் தர மறுத்துப்பாரு போல. ஆக்சுவலா எனக்கும் இந்த ஒரு விசயத்துல மட்டும் முழு காரணம் தெரியல.. என்ன காரணத்தால கொலை செஞ்சாங்கன்னு அக்யூரட்டா தெரியல.. ஆனா இவங்க இரண்டு பேரும்தான் இன்சூரன்ஸ் பணத்துக்காக ப்ளான் பண்ணி அவரை மர்டர் பண்ணி இருக்காங்க.. ஆனா இந்த விசயம் உங்க அக்காவை மன ரீதியா பாதிச்சிருக்கு. அவங்களால உண்மையை காப்பாத்த முடியும்ன்னு தோணல. அதனால்தான் டைவர்ஸ் வாங்கிட்டு தன்னோட மன உறுத்தலில் இருந்தும் தப்பிச்சி போயிருக்காங்க. ஆனா அவங்க அங்கே யதிரா மேடத்தை பார்த்த ஒவ்வொரு செகண்டும் அவங்க ஒரு கொலையாளின்னு அவங்களுக்குள்ள நினைப்பு வந்துட்டே இருந்திருக்கு. தன்னோட மனசாட்சியே தன்னை கொன்னுட கூடாதுன்னு முடிவு பண்ணிதான் அவங்க ரூபனோடு சேர்ந்து பிளான் பண்ணி உங்களுக்கு விவாகரத்து வாங்கி தந்திருக்காங்க.. ஊர் பெரியவங்கிட்ட கூட உங்களோட கேன்சர் ரிப்போர்டை காட்டிதான் அவங்க மனசை மாத்தி இருக்காங்க. நீங்க உங்க மனைவி முன்னாடி சாக விரும்பலன்னு நினைக்கறதா சொல்லி ஊர் பெரியவர்களை நம்ப வச்சிருக்காங்க.." என்று கே.கே சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த முகிலுக்கு பூமியின் தரை தனது பாதத்தை விட்டு நழுவுவதை போல இருந்தது.தன் முதுகுக்கு பின்னால் இவர்கள் இருவரும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது அவனுக்கு தன் மீதுதான் கோபம் வந்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்த ஒரே காரணமே சம்பந்தமில்லா இருவர் தன் வாழ்வில் சடுகுடு விளையாடும் அளவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டதே என்று எண்ணி நொந்தான்."இது இயற்கையான இறப்பு இல்ல கொலைன்னு போலிஸ் ஒருத்தர் ரகசியமா கண்டுபிடிச்சிட்டாரு. அவருக்கும் ரிப்போர்ட் எழுதிய டாக்டருக்கும் லஞ்சம் தரத்தான் உங்க அக்கா டைவர்ஸ் நடந்த பிறகும் கூட ஐம்பது லட்சத்தை ரெடி பண்ணி தந்திருக்காங்க.. இன்ஸ்சூரன்ஸ் பணம் வந்தவுடனே இரண்டு பேரும் ஆளுக்கு பாதியா பங்கு போட்டுக்கிட்டாங்க.. இதுல உங்க மதர் இன் லாவை அவங்க ஏமாத்தியதுதான் எனக்கு ரொம்ப வியப்பா இருக்கு சார்.. அவங்க எப்படி மொத்த பணத்தையும் தன் மகனுக்கு தந்தாங்கன்னு தெரியல.." என்றாள் குழப்பமாக.முகிலுக்கு யோசனை நின்று போனது. அவர்கள் பிரிந்ததற்கான காரணம் கண்டு பிடிக்க முயன்றவன் அதன் பின்னால் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவேயில்லை. தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருந்த யதிராவுக்கு இந்த விசயம் தெரிய வரும்போது எப்படி துடித்து போவாளென்று அவனுக்கு இப்போதே கவலையாக இருந்தது."என் மாமியாரை வியப்போடு நினைச்சி பார்க்க ஒன்னுமில்ல கே.கே. ரூபன் என் மாமியார்க்கிட்ட அவங்க அப்பா பத்து கோடி ரூபா கடன் வாங்கி வச்சிட்டு செத்திருந்தாருன்னு சொல்லியிருந்தா கூட அவங்க தன் மகனை மறுவார்த்தை கேட்காம முழுசா நம்பி இருப்பாங்க.. அவங்களோட மைன்ட் செட் அவ்வளவுதான்.. அவங்களுக்கு பொண்ணா பிறந்த யதிராவும் இப்ப இப்படி ஒரு லோவர் ஹேண்டாவும், சரண்டரிங் மென்டாலிட்டியோடும் இருக்கறது ஒன்னும் அதிசயமே இல்ல..‌" என்றான் சோகமாக."மனசார நம்புறதுக்கும் கண் மூடிதனமா நம்புறதுக்கும் இடையில இருக்கற வித்தியாசம் தெரியல அவங்களுக்கு.. இரண்டுத்துக்கும் நடுவுல இருந்த வித்தியாசம் எனக்குமே அனுபவிச்ச பிறகுதானே புரிஞ்சுது..?" என்றவன் தலையை பிடித்தபடி மேஜையில் சாய்ந்தான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1132VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN