25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிராவின் முகத்தை பார்த்தபடியே உள்ளே வந்தாள் கே.கே."இவன் சொல்ற எதையும் நம்பாத யதிரா.. ஹீ இஸ் எ பிராட்.. உன்னை ஏமாத்துறதை மட்டுமே தன் முழு நேர வேலையா வச்சிருக்கான்.." என்றவள் யதிராவின் அருகே வந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.சுபா கே.கேவை முறைப்பாக பார்த்தாள்."இதுல நீ தலையிடாத கே.கே.." என்றபடி அருகே வந்தான் முகில்."உன் நடிப்பு போதும் முகி.. உனக்கு உன் அக்காவும் உன் பேமிலியும்தான் முக்கியம்ன்னா நீ தாராளமா அவங்களோடு இருக்க வேண்டியதுதானே.? ஏன் இவளோட லைப்பை கெடுக்கற.? உன் கண்ணுக்கு இவ ஒரு கோல்டு டிக்கர் மாதிரி தெரிஞ்சதாலதானே இவக்கிட்ட உன் வொர்க்கை பத்தி சொல்லாம மறைச்ச.?" என்று கேட்டாள் கோபமாக.யதிரா அதிர்ச்சியோடு கே.கே பக்கம் பார்த்தாள். "கோல்டு டிக்கர்ரா.?" என்றவளுக்கு கண்ணீர் அதிகமாக வழிந்தது."யதிம்மா.. இது அப்படி இல்ல.." என்று அருகில் வந்தவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கே.கே."இனி யதிரா பக்கத்துல நீ வந்தா உன்னை நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது.." என்று விரல் நீட்டி எச்சரித்த கே‌.கே யதிராவை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.யதிராவுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. கண்ணீர் சரம் சரமாக வழிந்தது. கே.கே அவளை அங்கிருந்து வெளியே இழுத்துக் கொண்டு நடந்தாள். அலுவலக வாசலில் நின்றிருந்த தனது பைக்கில் ஏறியவள் யதிராவை அமர சொல்லி கை காட்டினாள். யதிராவுக்கு சுய நினைவே இல்லை. முகிலுக்கும் சுபாவுக்கும் இடையில் உள்ள உறவு மட்டும்தான் அவளின் நினைவு முழுக்க சுழன்றுக் கொண்டிருந்தது.பைக் நின்றதும் தெரியாது. கே.கே பைக்கை நிறுத்திய இடத்தில் தான் இறங்கி நின்றதும் தெரியாது.கே.கே தண்ணீர் பாட்டிலை யதிராவிடம் நீட்டினாள். யதிரா தண்ணீர் பாட்டிலை வெறித்து பார்த்தாள்."உன் முகத்தை கழுவிட்டு வா.." என்றாள் கே.கே.யதிரா தன் முகத்தை தொட்டு பார்த்தாள். கண்ணீர் காய்ந்த கரைகள் கைகளில் பிசுபிசுத்தது. யதிரா தான் எங்கிருக்கிறோம் என்று பார்த்தாள். ஆள் அரவம் இல்லாத பாலம் ஒன்றின் கீழே இருந்தார்கள் இருவரும். 'அதுக்குள்ள இங்கே எப்படி வந்தோம்.?' என்று கேட்டது அவளது புத்தி.கே.கே மீண்டும் தண்ணீரை நீட்டினாள். யதிரா முகத்தை கழுவி வந்தாள்.தன் பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கே.கே யதிராவை தன் அருகே வந்து அமர சொல்லி சைகை காட்டினாள். யதிரா முந்தானையில் முகத்தை துடைத்தபடி அவளருகே வந்து அமர்ந்தாள்."நான் கோல்டு டிக்கர் இல்ல.‌." என்றாள் தரையை பார்த்தபடி. இதை சொல்லும்போதே கண்ணீர் மீண்டும் தளும்ப ஆரம்பித்து விட்டது. அந்த வார்த்தை அவளை அதிகமாக பாதித்து விட்டது."நீ கோல்டு டிக்கர் இல்ல யதிரா.. முகில் ஒரு முட்டாள். பிராடு.. அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் உன்னை அழ வைக்கிறது மட்டும்தான்.. அவனோட அக்கா சொன்னான்னுதான் உன்னை விவாகரத்து செஞ்சிட்டு போனான்‌. ஆனா நீ அவன் திரும்பி வந்ததும் முழுசா நம்பி அவனை மீண்டும் ஏத்துக்கிட்ட.. அவன் இந்த மூணு வருசத்துல முப்பது கல்யாணம் செஞ்சி இருக்க கூட சான்ஸ் இருக்கு.. இதை நீ கொஞ்சம் கூட யோசிக்காம உடனே அவன் கை பிடிச்சிட்டு வந்துட்ட.. யார் வேணாலும் வந்து விளையாட உன் வாழ்க்கை என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு.. உனக்கு ஏன் செல்ப் ரெஸ்பெக்டே இல்ல.? ஏன் சுய சிந்தனையே இல்ல.?" என்றாள் கோபத்தோடு.அவள் கேட்க கேட்க யதிராவுக்கு கண்ணீர்தான் வந்தது. முகில் இப்படி ஒரு துரோகத்தை செய்ததை அவளால் நம்ப முடியவில்லை. அதே சமயம் தான் கண்ணால் பார்த்த விசயங்களை அவளால் மறக்கவும் முடியவில்லை.சுபாவும் முகிலும் அருகருகே இருந்த காட்சியை நினைத்து பார்த்தவள் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள். கே.கே அவளது முதுகை வருடி விட்டாள்."இப்ப நீ அழறதால என்ன மாறிட போகுது.? ஒரு சீட்டருக்காக நீ உன் கண்ணீரை வேஸ்ட் பண்ணா அதை விட முட்டாள்தனம் வேற ஏதும் இல்லை‌. நீயும் ஒரு பொண்ணு.. தன்னம்பிக்கை உள்ளவள்.. உன்னை ஏமாத்தியவன் முன்னால நீ வாழ்ந்துக் காட்டணுமே தவிர இப்படி உடைஞ்சிப் போய் அழ கூடாது.." என்றாள்."என் மாமா இப்படி செய்வாருன்னு நான் நினைக்கவே இல்ல.." அழுதபடி சொன்னாள் அவள்.கே.கே எழுந்து நின்றாள். யதிராவின் முன்னால் வந்தாள். யதிராவை தன் தோளில் சாய்த்து கொண்டாள்."ஏற்கனவே ஒருமுறை அக்காவுக்காக உன்னை விட்டு போனவன் மறுபடியும் உன்னை விட்டுட்டு போக மாட்டான்னு எப்படி நம்பின.?" என்று கேட்டபடி யதிராவின் தலையை வருடி தந்தாள்.அவள் கேள்வியில் இருந்த நிதர்சனம் புரிந்ததும் நெஞ்சம் அதிகமாக வலித்தது. அண்ணனும் வைபவும் கேட்ட அதே கேள்விதான். ஆனால் அதன் முழுஅர்த்தமும் இன்றுதான் அவளுக்கு புரிந்தது. இப்படி ஒரு நாள் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை அவள்.'இப்படி ஏமாந்து போறதுக்கு பதிலா செத்து போகலாம்..' என்று நினைத்து கண்களை துடைத்தபடி நிமிர்ந்தாள்."செத்து போ.. என்ன மாற போகுது.? முகில் மனசு மாறிட போறானா.? இல்ல நீ அனுபவிச்ச ஏமாற்றம் இல்லன்னு ஆகிட போகுதா.? நீ செத்தா இங்கே யாருக்கும் நட்டமே இல்ல.. இதை நீ புரிஞ்சிக்க.." என்றாள்."ஆனா இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியல.." என்றவள் மீண்டும் முகத்தை மூடி அழுதாள். கே.கேவிற்கு முகில் மீது கொலைவெறி வந்தது. டிராமாவுக்காக ஒரு அறை தந்த இடத்தில் இன்னும் நான்கு அறை தந்திருக்கலாம் என்று கோபம் வந்தது.யதிரா கால் மணி நேரம் கழித்து மீண்டும் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். "எனக்குன்னு யாருமே கிடையாது.. என் அண்ணனுக்கும் என்னை பிடிக்கல.. என் மாமாவுக்கும் என்னை பிடிக்கல.. நான் இருக்கறதுக்கு பதிலா செத்தே போகலாம்.." என்று எழுந்தாள்.கே.கே கோபத்தோடு அவளை பார்த்தாள். "லூசு மாதிரி யோசிக்காத.. அவங்களுக்கு உன்னை பிடிக்கலங்கறது மேட்டர் இல்ல.. உனக்கு அவங்களை சுத்தமா பிடிக்கலங்கறதுதான் மேட்டர்.. உன்னை பிடிக்காத ஒருத்தருக்காக அதுவும் உனக்கு பிடிக்காத ஒருத்தருக்காக உன் உயிரை விடுவதை போல கேவலமான செயல் வேற எதுவுமே இருக்காது.." என்றாள்.யதிரா சோகமாகினாள். கே.கே சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அவள் சொன்னது மூளையின் சிந்தைக்கு சுளீரென ஒரு அடியை தந்து விட்டது.முகத்தை துடைத்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று எதுவும் தோணவில்லை."நான் கே.கே.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் கே.கே.யதிரா நிமிர்ந்து அவளை பார்த்தாள். கே.கே அழகாய் இருந்தாள். அவளின் மையிட்ட கண்கள் யதிராவை விழியெடுக்காமல் பார்க்க சொன்னது."நான் கே.கே. என் பேரு கார்த்திகா. ஆனா எல்லோரும் கே‌.கேன்னு கூப்பிடுவாங்க.." என்றாள்.யதிராவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவளின் மூளை இப்போது வரையிலும் கூட சிந்தனை செய்ய மறுத்துக் கொண்டிருந்தது."நான் முகியோட பிரெண்ட்.." என்று அவள் சொல்லவும் சட்டென எழுந்து நின்றாள் யதிரா."ஆனா இப்ப இல்ல.." என்று அவசரமாக சொன்னாள் கே.கே."நான் ஒரு பெமினிஸ்ட்.. அவன் உன்னை ஏமாத்துவதை பார்த்துட்டு அமைதியா இருக்க முடியல.. இதை உன்கிட்ட சொல்ல ஏற்கனவே நிறைய முறை டிரை பண்ணேன்.. உன்னை பாலோவ் பண்ணி கூட வந்தேன். ஆனா உன்கிட்ட சொன்னா நீ நம்பமாட்டியோன்னு அமைதியா இருந்துட்டேன்.." என்றாள்.அன்று இவளை பேருந்தில் பார்த்தது யதிராவுக்கு நினைவு வந்தது."முகில் நல்லவனா கெட்டவனான்னு சொல்ல வரல நான்.. ஆனா நீ ஏமாறுவதில் எனக்கு விருப்பம் இல்ல.. பெண்களுக்கு அநியாயங்கள் நடந்தா கண்டிப்பா நான் தட்டி கேட்பேன்.. அதுக்கு தடையா யார் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்பேன்னே தவிர பயப்பட மாட்டேன்.." என்றாள்.அவள் சொல்வது யதிராவுக்கு முழுமையாக புரியாவிட்டாலும் கூட கே.கே ஏதோ ஒரு விதத்தில் தனக்கு தோள் தருகிறாள் என புரிந்தது."உன் வீட்டுக்கு போவதா இருந்தா அது உன் இஷ்டம்.. ஆனா உன் அண்ணன் உன்னை கால் கீழே இருக்கற செருப்பா கூட மதிக்க மாட்டான்.. உனக்கு ஓகேன்னா என் வீட்டுக்கு வரலாம். நான் தனியாதான் இருக்கேன். ஆனா உனக்கு முழு பாதுகாப்பு தர என்னால முடியும்.. நீ என்னை முழுசா நம்பலாம்.." என்றாள்.யதிராவுக்கு பிறந்தகம் செல்ல மனம் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால் கே.கே மீதும் நம்பிக்கை வரவில்லை அவளுக்கு. முதல் முறையாக சந்தேகம் என்ற ஒன்று அவளின் மூளையில் வேலை செய்ய ஆரம்பித்தது."இரண்டு நாள் வந்து என்னோடு இரு.. அதுக்கும் மேல இருக்க உனக்கு பிடிச்சிருந்தா நீ என்னோடே இருக்கலாம்.. இல்லன்னா கிளம்பலாம்.. உன் லைப்பை முழுசா கன்ட்ரோல் பண்ண போறது நீதான்.." என்றாள் அவள்.யதிராவுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கே.கே பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அமைதியாக பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.கே.கேவின் வீடு சிறு வீடு. ஆனால் இருவருக்கு தாராளமாக இருந்தது. அறை ஒன்றை கை காட்டினாள் கே.கே."பாத்ரூம் அது.. யூஸ் பண்ணிக்கோ.." என்றவள் எதிர் திசையிலிருந்த ஒரு கதவை கை காட்டினாள். "அது பெட்ரூம்.. நீ யூஸ் பண்ணிக்கோ.. லெஃப்ட் சைட் இருக்கறது என்னோட ரூம்.." என்றாள்.யதிரா சரியென தலையசைத்தாள். குளியலறை சென்று முகத்தை சுத்தம் செய்து வந்தாள். கே.கே சூடான காப்பியை கொண்டு வந்து நீட்டினாள்.யதிராவின் மனம் நெருப்பாக சுட்டது. காப்பியை குடித்தபோது தொண்டை வலித்தது.‌குழப்பமும் ஏமாற்றமும் தந்த வேதனையில் அழுது ஓய்ந்தவள் அன்று இரவு தூங்கினாள் என்பதை விட அலுப்பில் மயங்கி போனாள் என்றே சொல்லலாம்.யதிரா உறங்கிய பிறகு தனது அறைக்கு வந்தாள் கே.கே. முகிலுக்கு ஃபோன் செய்தாள்.முதல் ரிங்கிலேயே ஃபோனை எடுத்தான் முகில். "அவ என்ன பண்றா.?" என்றான்."தூங்கிட்டாங்க.." என்று பெருமூச்சி விட்டாள் கே.கே."இது ரொம்ப ஓவர் சார்.." என்றாள் எரிச்சலோடு."பேர் சொல்லியே கூப்பிடு கே.கே. அதே நல்லாருக்கு.. ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.. நீயாவது கொஞ்சம் உரிமை எடுத்துக்க.." என்றான்.கே.கே நெற்றியை தேய்த்தாள். "ஏன் முகி இவ்வளவு ரிஸ்க்.? எந்த தடயமா இருந்தாலும் நான் கண்டுபிடிச்சி தர மாட்டேனா.? கொஞ்சம் டைம் தந்திருந்தா ஆகாதா.?" என்றாள் வருத்தமாக."இல்ல கே.கே.. என் அக்காவும் ரூபனும் ரொம்ப ஓவரா பண்ணிட்டாங்க.. அவங்க செஞ்சதுக்கான அத்தனை பலனையும் நான் திருப்பி தர போறேன்.. என் வழியில எத்தனையோ பிரச்சனைகள் வரும். அது எதிலேயும் யதிரா பாதிப்படைய வேண்டாம்னு நினைக்கிறேன் நான்.. அதுவும் இல்லாம என் யதிரா நான் விருப்பப்பட்ட மாதிரி மாறணும்.. அதுக்கு இது ஒரு சந்தர்ப்பம். அவ்வளவுதான்.." என்றவன் சொன்னதை கேட்டு கே.கே எரிச்சலானாள்."உன் ஆசைப்படியே யதிரா உன்னை விட்டு பிரிஞ்சிட்டா.. கூடிய சீக்கிரமே நீ எதிர்ப்பார்த்த அத்தனை கேள்வியையும் கேட்பா.. அவளை என்கிட்ட ஒப்படைச்சதுக்காக நீ எப்படி பீல் பண்ண போறேன்னு பாரு.. சாதாரண வாழ்வியல் இல்ல.. கோபத்தோட தேவையையும் வெறுப்போட தேவையையும் யதிராவுக்கு நான் கத்து தர போறேன்.. நீ என்னத்தை நினைச்சி அவளை விட்டு போனாலும் சரி.. ஆனா இனி நீ மறுபடியும் அவளோட காதலை பெறணும்ன்னா ரொம்ப கஷ்டப்பட்டே ஆகணும்.. நானும் மோசமானவ.. என் டிரெயினுங்கும் மோசமானது முகி.." என்று சொல்ல முகிலுக்கு எதிர்காலத்தை நினைத்து சற்று பயமாகதான் இருந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1121VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN