நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

கானல் - 5

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பொழிலின் ஒருதலைக்காதலை புரிந்துகொள்ளாமல் உதயன் உததிக்கு மட்டும் தன் ஒட்டுமொத்த காதலை பரிசாக அளித்து ஓரவஞ்சனை செய்ய அதை அறிந்த பொழிலின் நண்பன் முகிலனோ தன் தோழியின் மனக்குமறலை தாங்கிக்கொள்ள இயலாமல் கண்ணீர் எனும் மாரியை பொழிலை நோக்கி பொழியும் அந்த அந்திமாலைப் பொழுதில் சில்லென்று வீசும் தென்றலில் மழையை ரசித்தவாறு தனக்கு பிடித்த தேநீருடன் அந்த ரோட்டுக்கடையில் அமர்ந்தான் நம் நாயகன் துருவ் கிருஷ்ணா.


இதம் தரும் தென்றல் அவன் காரிகையை நினைவு கூற அந்த கொட்டும் மழையிலும் நனைந்தவாறே வீட்டிற்கு விரைந்தான்.


உள்ளே நுழைந்ததும் புறாக்களைத் தேடிச் செல்ல அதுவும் இவனைப் போலவே மழைச்சாரலில் சிறிது நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தது.


செல்லக்குட்டிகளா வாங்க என்றவன்
தன் அறைக்குள் அழைத்து சென்று
அறை சூடேற்றும் சாதனை ஆன் செய்து விட்டு குளியலறைக்குள் சென்றான்.


ஒரு வித யோசனையுடனே குளித்து முடித்து ஒரு முடிவுடன் வெளியே வந்தவன் புறாக்களுக்கு உணவு கொடுத்து விட்டு சன்னலோரம் சென்று நின்றான்.


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


மழையில் நனைவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்..
ஆனால் நம் சாஹீக்கு பிடிக்காது.
அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று வானம்...
என்னவோ மழை பெய்தால் அவள் நண்பன் முகில் அழுவது போல தோன்றுவதால் அவளுக்கு மழைப் பிடிக்காது...அவள் நனையவும் விரும்பமாட்டாள்.


இன்றும் அதே போல் மழைச்சாரலைக் கண்டவளுக்கு அதில் ஆட ஆசைத் தோன்ற எட்டி வானத்தைப் பார்த்த சாஹீ "ப்ளீஸ் ஒரே ஒரு முறை நனைஞ்சிக்கிறேன் " என முகிலிடம் கேட்க அது மின்னல் மூலம் தன் கோபத்தைக் காட்டியது.
" ஒரே ஒரு முறை " என பலமுறை கேட்டு அவள் நனைந்துவிட்டாள்.


மின்னலைப் பார்த்தவள் சிரித்து விட்டு கீழே இறங்கி கைகளை விரித்து சிறிது நேரம் தன்னை மறந்து அந்த சூழலை ரசித்து விட்டு பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைந்தாள்.


பிடிக்காத இந்த மழை கூட அவளுக்கு பிடிக்க காரணம் துருவ் தான்...
அந்த நாளை நினைத்தவள் இதழ்கள் தானாக சிரித்தது.


அன்றும் அதே போல் தன் முதல் நாள் கல்லூரி நினைவை சுமந்த படி வந்தவள் மேல் மழைத் தூரல் பட உடனே குடையை எடுத்துப் பிடித்துக் கொண்டாள்.


"இன்னும் மழை வரவே இல்ல அதுக்குள்ள எதுக்கு குடை" என்று கேட்ட தோழியை கண்டு கொள்ளாமல் தன் மேல் தூரல் படாதவாறு குடையைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு சீக்கிரமா விடுதிக்கு செல்ல முடியுமோ சென்று விட வேண்டும் என்று நினைத்தவாறே வேகமாக நடக்க தொடங்கியவள் தூரல் அதிகமாக ஒரு பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைந்தாள்.


குடையை மடக்கிக் கொண்டிருந்தவள் தன் அருகில் கேட்ட குரலைக் கண்டு விழிகள் விரித்து திரும்பி அவனை நோக்க அவன் தான் எனக் கண்டுகொண்டவள் மனம் குத்தாட்டம் போட்டது.


அவனைப் பார்க்க வேண்டும் என நினைக்கும் போதெல்லாம் அவள் கண்களில் அகப்படாமல் இருப்பவன் அவனைப் பற்றி நினைக்காமல் இருக்கும் போது கண்களில் பட்டு விடுகிறான்.
அவனை நினைக்காமல் இருக்கும் நாளை இல்லாமல் செய்து விடுகிறான்.
"உன்னை நினைச்சுட்டே இருக்கணுமா
போடா..." என்று மனதிற்குள் அவனைக் கொஞ்சியவள் இன்னும் கொஞ்சம் நகர்ந்து அவன் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.


" டேய் மச்சான் அந்த பிகர் சூப்பர்ல செமையா இருக்கா" என்ற பூஷனிடம்


" அப்படியா...எனக்குத் தெரியல டா" என்றவன் மழைச் சாரலில் விளையாடிக் கொண்டே பதில் கூற


"மச்சான் அங்கே பாரேன்...செம ஸ்ட்ரக்சர்...இந்த பொண்ணு தான் டா அழகு" என்றவனைக் கண்டு சிரித்தவன்


" அழகுங்கிறது முகத்துல அப்புறம் ஸ்ட்ரக்சர் ல இல்லை டா...அவ இருக்க உயரத்துக்கு அவ போட்டிருக்க சூ(shoe)
நல்லாலே இல்லை ,அப்புறம் அவ நெற்றி பாரு அது ரொம்ப சின்னது அதுல அவ்ளோ பெரிய பொட்டு வெச்சிருக்கிறது நல்லாவே இல்லடா...குட்டியா வெக்கணும் அப்போதான் அழகா இருக்கும்.
அவளோட முடி நீளமாவும் இல்லை அதுக்கு ப்ரீ ஹேர் விட்டா அழகா இருக்கும் பட் தலை பின்னி போட்டுருக்கா.
அது அவளுக்கு செட்டாகவே இல்லடா...
அவளோட காதைப் பாரு...வளையம் மாதிரி ஏதோ மாட்டிக்கிட்டு நல்லாவே இல்லை...
குட்டியா போட்டா அழகா இருக்கும்.
நான் சொன்ன இந்த ஆங்கிள்ள அவளை யோசியேன் செம அழகா இருப்பா ஒவ்வொரு பொண்ணும் அழகுதான் டா...சிலருக்கு அதை வெளிப்படுத்த தெரியல...சிலர் ஓவரா வெளிப்படுத்திடுறாங்க..." என்று சிரிக்க


"பொண்ணுங்களே பிடிக்காது, பர்க்கவே மாட்டனு இவ்ளோ சொல்லுறியே டா...என் தங்கச்சி பாவம் டா" என்றவனைக் கண்டு புன்னகைத்தவனை தன்னுள் முழுவதும் நிரப்பிக் கொண்டாள்.


" மழை அழகா இருக்குள்ள " என்றவன் வெளியே நின்று கைகளை நீட்டி சிறிது நேரம் ரசித்து விட்டு உள்ளே நுழைந்துக் கொள்ள அவன் செய்கை ஒவ்வொன்றையும் ரசித்தவளுக்குத் தெரியவில்லை.
அவனைப் போலவே இனிமேல் தானும் மழையை ரசிக்கப் போகிறோம் என்று...


பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள் முடியைப் பிடித்து பூஷன் இழுத்தான்.
ஏண்டா வந்து இழுத்தோம் என்ற நிலைக்கு ஆளாகப் போகிறோம் எனத் தெரியாமல் அவளைப் பார்த்து சிரித்தான்.


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மழையை ரசித்தவன் தன் காரிகையைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆவல் ஏற்பட தன் மடிக்கணினிக்கு உயிர் கொடுத்து காரிகை பற்றிய தேடலை ஆரம்பித்தான்.


இப்போது செல்ல விருக்கும் இடத்தைப் பற்றி ஆராய்ந்தவனுக்கு சிறு பயம் தோன்றத்தான் செய்தது..
அவன் அறிவான் அங்கு சென்ற ஒருவர் கூட உயிருடன் திரும்பவில்லை ஏன் கப்பல் கூட திரும்பியதில்லை.


தனக்கு இவ்வளவு துணிவு,தைரியம் வந்தது எதனால் என யோசிக்கும் போது இதழ்கள் தானாக புன்னகைச் சிந்தியது.


ஆம் கனவில் வந்த தன் காரிகையை நேரில் காண ஏற்படும் ஆவல் அது.
ஆனால் அவன் உயிர் நண்பனை இதில் பணயம் வைக்க வேண்டுமா என்ற எண்ணம் எழ நாளை அவனை வர வேண்டாம் என்று கூறி விடலாம் என முடிவெடுத்தவன் தன் காதலியை ஒருமுறைப் பார்த்து விட்டு கண்களை மூடினான்.
இன்றும் தன் காதலியைக் கனவில் சந்திக்க...


அவனின் ஆசையை நிறைவேற்ற வந்தாள் அவனின் காதலி ஆனால் அவனை மிரட்ட...


என்னைக் காண வருகிறாயா???


ஆமாம் என்பது போல் தலையாட்டினான்.


உன் உயிர் மீது பயம் இல்லையா???


நீ தானே எந்தன் உயிர் என்ற வசனம் பேசியவறைக் கண்டு


ஒரு ஏளனச் சிரிப்பு நானா ஹா ஹா என்று ஓர் கோரச் சிரிப்பு அதைக் கூட அவன் ரசித்தான்.(நம்மால் ரசிக்க முடியாது அவ்வளவு கேவலமான சிரிப்பு)


எனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தம் இல்லையே பிறகு ஏன் என்னைக் காண அங்கு வருகிறாய்??


இல்லை உனக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு நான் அறிவேன் என்ற கிருஷ்ணா அவள் கண்களைக் காண


எப்படி????


உன் கண்களை நான் அறிவேன் அது என்னிடம் பொய் உரைக்கிறது.சம்பந்தம் இல்லையென்றால் நீ ஏன் என் கனவில் இன்று வந்துள்ளாய்?? இதனைக் கூறவா...உனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லை அப்படிதானே என்று கூறி சிரித்தான்.


கண்களில் கோபம் தெரிக்க அவனை ஓர் பார்வைப் பார்த்து விட்டு சென்றாள் அந்த காரிகை.


போகாதே என்று அவன் கூறி முடிப்பதற்குள் அவள் சென்று விட்டாள்.(போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்)


கண்களைத் திறந்தவன் தன் மொபைல் அடிப்பதை உணர்ந்து அதைத் தேடினான்.


ஆம் போகாதே போகாதே அவன் மொபைல் ரிங் டோன்.


தினமும் அவன் காதலி வந்து வந்து செல்கிறாள் அல்லவா??
அதனால் தான் இப்படி ஒரு ரிங் டோன்(ஏலியன்க்கு இந்த பில்டப்பா நீங்கள் என்னை கழுவி கழுவி ஊத்துவது என் காதுகளில் கேட்கிறது வாசகர்களே நான் என்ன செய்வேன் என் நாயகன் ஏலியனைக் காதலிக்கிறானே நான் அப்போது பாடலைக் கொடுத்து தானே ஆக வேண்டும்.அவன் கேட்டால் டூயட் கூட போடுவேன்)


அவன் மொபைலில் நாளை யாரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தானோ அவனே தான்.


மொபைலில் பூஷ் குட்டி.


மொபைலுக்கு உயிர் கொடுத்தவன் பேச ஆரம்பிக்கும் முன்பே அவன் கத்த ஆரம்பித்திருந்தான்.


"டேய் நான் வருகிறேன் என்னையும் உன்னுடன் அழைத்துப் போ" என்று.


வரவில்லை என்று சீன் கிரியேட் செய்தவனல்லவா இவன் கிருஷ்ணாவின் மூளை பல்வேறு விதமாக யோசித்தது.


"எந்த எருமையோ நான் வரவில்லை என்றது??? யாரென்று தெரிந்துகொள்ளலாமா " என நக்கலாக வினவ


"அய்யோ இவனுடன் சென்றாலும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை,செல்லாவிட்டாலும் பாதுகாப்பு இல்லை" என நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டவன்


"இல்லை அந்த எருமை வெக்கேசனுக்கு வேடந்தாங்கல் சென்று விட்டது.நான் உன்னுடன் வருகிறேன்.நீ வருகிறாயா இல்லையா??? தங்கையை பார்க்க ஆசையாக இருக்கிறது" என்று கூறிய பூஷனிடம்


"தங்கையா?? அது யாருடா எனக்குத் தெரியாமல் " என்று கிருஷ்ணா கேட்க


"உனக்கு காதலி என்றால் எனக்கு தங்கை தானே" என அவன் தலையில் அடித்துக் கொண்டே கூற


ஆமா ஆமா என்ற கிருஷ்ணா வானத்தில் பறக்க ஆரம்பித்தான்(இது தான் காதலோ)


"போதும் போதும் வானத்தில் உள்ள பறவைகளுக்கு தொந்தரவு கொடுத்தது கீழே இறங்கு டா ஆவுனா பறந்துருவான் மேல" என பூஷன் மனதில் அவனை வசை பாட


ஹா ஹா சரி சரி என்ற கிருஷ்ணா சிரித்தான்.


"அப்புறம் என் தங்கை இன்றும் உன் கனவில் வந்திருப்பாளே வந்தாளா???" என்று கேட்ட பூஷனிடம்


தன் கனவினை அப்படியே கூற


"தண்ணீர் எதுவும் குடிக்காமலே புரை ஏறியது பூஷனுக்கு.
டேய் இது என்ன டா பட்டாசு பாலு,சனியன் சகடை,பிச்சை பெருமாள் ரேஞ்சுக்கு வந்து மிரட்டி விட்டு சென்றுள்ளதே என பயத்தில் உளற( பாவம் அவன் பாடு அவனுக்கு)


"பயம் வேண்டாம் டா நான் இருக்க பயமேன் இந்த துருவ் கிருஷ்ணா இருக்க பயமேன்" என அவன் சினிமா டைலாக் கூற


"அது தானே டா எனக்கு பயம்
என்ற பூஷனின் வாய் கரண்ட் எதுவும் அடிக்காமலே ஆயிரம் வாட் அளவுக்கு ஷாக் அடித்தது போல தத்தளித்தது
உயிர் போனால் போனது தான் டா ஏன்டா உனக்கு இப்படி ஒரு ஆசை " எனக் கேட்ட பூஷனிடம்


"என் கனவுக் காரிகையை நான் சந்தித்தே ஆக வேண்டும் அவளை சந்தித்தால் தான் என் பிறவிபயனை அடைவேன்" என்று தமிழ்ப் புலரைப் போல் கூற


"இது என்னடா புது புரளியால இருக்கு" என்ற பூஷனின் முகம் எப்படி இருக்கும் என்று யூகித்தவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.


சரி நாளைக்கு மதியம் நாம் இதை பற்றி பேசலாம் எனக் கூறி துருவ் மொபைலை ஆப் செய்து மறுபடியும் தன் காரிகையை காண கனவிற்கு சென்றான்.


"அய்யோ இவன் வேற என் வாழ்க்கையில் விளையாடுகிறான் ஏன் எனக்கு இந்த சோதனை ? ஊரில் நூறு இருநூறு நண்பர்கள் வைத்துள்ளவன் எல்லாம் சந்தோஷமாக தான் இருக்கிறான்.
இவன் ஒருவனை வைத்துக் கொண்டு நான் படும் பாடு இருக்கிறதே அய்யய்யோயோ " என்று சந்தானம் ரேஞ்சில் பேசியவன் தலையில் கொட்டிய சாஹீ அவனை முறைத்தாள்.


" லவ் பண்ணுறது தப்பா இந்நேரம் என் மானு குட்டி மட்டும் ஓகே கூறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தவன்
ஊட்டிக்கு அவளுடன் படகு இல்லத்தில் தண்ணீரில் விளையாட வேண்டிய என்னை கடலில் கப்பலுடன் உயிருக்கு போராட வைத்துவிட்டானே அவன் " என புலம்ப...


"அவனா??? அவன் மட்டுமல்ல அவள் சாஹீ உன்னால் தான் உன் காதலுக்காக என் உயிரைக் கேட்டால் எப்படி " என்ற பூஷனிடம்


" உன் மானுக்குட்டி உனக்கு ஓகே சொல்லணுமா வேணாமா" என்று கேட்ட சாஹீயிடம்


" கண்டிப்பா கண்டிப்பா மானுக்குட்டி உன் தோழிக்காக
உன் அத்தானை ஏலியனுக்கு பலி கொடுக்க பார்க்கிறாயே " என்று விடாமல் புலம்ப


சாஹீ தலையில் அடித்துக் கொண்டாள்.


❤❤❤❤காரிகை வருவாள்❤❤❤❤


ஹா ஹா வாங்க பா நாம போயிடலாம்....அவன் புலம்பல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.


பூஷனின் புலம்பல்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.


இது நான் எடுக்கும் புதுவித முயற்சி...
உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி❤
 

Author: im_dhanuu
Article Title: கானல் - 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN