26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் தன் மடியில் படுத்திருந்த யதிராவின் தலையை வருடி விட்டான்."லவ் யூ யதிம்மா.." என்று அவளது காதோரம் கொஞ்சலாக சொல்லினான் முகில்.தன் முகத்தை நோக்கி குனிந்தவனின் மூக்கோடு மூக்கை உரசியவள் "நானும் லவ் யூ.." என்றாள் சிணுங்கலாக. அவளுக்கு முத்தம் ஒன்றை தந்தான் அவன்.'ஒருகணம் ஒருபொழுதும் பிரிய கூடாதே.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே..'அலார சத்தத்தில் சடக்கென எழுந்து அமர்ந்தாள் யதிரா. 'கனவா இது.? விவஸ்தை கெட்ட கனவா இருக்கே..' என்று கனவை திட்டினாள்.குக்கர் விசில் சத்தம் போட்டது. கொட்டாவி விட்டபடி படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள். குக்கர் மீண்டும் விசிலடித்தது.ஹாலில் டிவி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. ரிமோட்டை எடுத்து சத்தத்தை குறைத்தாள். மீண்டும் குக்கர் சத்தமிட்டது. டிவி சத்தம் குறைந்ததும் கே.கே குளியலறையில் கத்தலாக பாடுவது கேட்டது.யதிரா சென்று குளியலறை கதவை தட்டினாள். "கே.கே நிறைய விசில் வந்துடுச்சி.? குக்கர்ல என்ன வச்சிருக்க.?" என்றாள்.கே.கே சட்டென பாட்டை நிறுத்திக் கொண்டாள். "குக்கர் அடுப்புல இருக்கா.? யதி நான் குளிக்க வந்து ஒன் ஹவர் ஆச்சி.." என்று கே.கே சொன்னதும் யதிரா அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். அடுப்பை அணைத்தாள். குக்கரின் விசிலை தூக்கி விட்டாள். அந்த மொத்த வீட்டையும் தன் வாசனையால் நிறைத்திருந்தது கே.கே பயன்படுத்தும் நறுமண திரவியம். ஆனால் அந்த நறுமணத்தை தாண்டி குக்கரின் தீய்ந்த வாடை நாசியில் வந்து மோதியது.யதிரா சலித்துக் கொண்டாள். கே.கே உடம்பை சுற்றியிருந்த டவலோடு வந்து சமையலறையை எட்டிப் பார்த்தாள்."என்ன ஆச்சி யதி.?" என்றாள்.யதிரா கோபத்தோடு இவளை திரும்பி பார்த்தாள். "கிச்சனுக்குள்ள வராதன்னு சொன்னா உனக்கு புரியவே புரியாதா.? உன்னால இன்னைக்கும் நாம ஹோட்டல்தான் சாப்பிட போறோம்.." என்றாள்."ஆர்வ கோளாறை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க செல்லம்.." என்றபடி வந்து அவளின் தாடையை பிடித்து கொஞ்சினாள் கே.கே.யதிரா அவளது கையை தட்டி விட்டாள். "இந்த கொஞ்சலுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல.. எனக்கு வேலைக்கு போக டைம் ஆச்சி.. நான் குளிக்க போறேன்.." என்றவள் குளியலறை நோக்கி நடந்தாள்.கே.கே தான் விட்ட இடத்திலிருந்து பாடலை மீண்டும் பாட ஆரம்பித்தாள்.யதிரா தன் மீது விழுந்த ஜில்லென்ற தண்ணீரில் கனவால் கடுப்பாகி விட்ட தன் மனதையும் சேர்த்து குளிர்விக்க முயன்றாள்.யதிரா முகில் மீது கொலைவெறியில் இருந்தாள். அலுவலகத்தில் நேற்று யாரும் பார்க்காத நேரத்தில் இவளுக்கு முத்தம் தந்து விட்டான் அவன். அப்போதே அவனை பிரித்து மேய்ந்திருப்பாள் அவள். ஆனால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த குருவால் இவளது எண்ணம் வீணாகி போனது.யதிரா கே.கேவோடு வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆரம்பத்தில் அதிகம் அழுதுப் பார்த்தாள் யதிரா. அழுக அழுக சோகம் தீரவேயில்லை. கே.கே தினமும் இவளது சோகத்தில் பங்கு கொண்டு தேறுதல் வார்த்தைகளை சொன்னாள். ஆனால் எதுவும் மாறவில்லை.இவள் பிரிந்து வந்து ஒரு வாரம் கடந்தபிறகு குரு இவளுக்கு ஃபோன் செய்தான். வேலைக்கு வர வேண்டும் என்று சொன்னான் அவன். மாட்டேன் என மறுத்தவளின் போனுக்கு டாக்குமெண்ட் ஒன்றை அனுப்பி வைத்தான்."எங்க கம்பெனியோடு மூணு வருசம் ஒப்பந்தம் போட்டுதான் உங்களை வேலைக்கு சேர்த்திருக்கோம்.. மூணு வருசம் முடியும் முன்னாடி நீங்க வேலையை விட்டு நிற்கறதா இருந்தா எங்க நிறுவனத்துக்கு நஷ்ட ஈடா ஒரு கோடி ரூபா செட்டில் பண்ணனும்.." என்றான் போனில்."இது ரொம்ப ஓவரா இருக்கு.. ஒரு கோடி ரூபா.?" என்றவள் அவசர அவசரமாக அந்த டாக்குமெண்டை படித்து பார்த்தாள். கடைசி பக்கத்தின் கீழ் கடைசியில் அவளது கையெழுத்தும் இருந்தது.அதில் எழுதியிருந்ததை கண்டு அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவளது கடைசி துளி பொறுமையும் அந்த நொடியில் மறைந்து போனது."நான் இந்த மாதிரி எந்த டாக்குமெண்ட்லயும் கையெழுத்து போடல.." என்றாள் ஆத்திரத்தோடு."அது உங்க கையெழுத்துதான் யதிரா.. நீங்க வீணா மறுப்பதால எதுவும் மாறிட போறது இல்ல.. எங்க நிறுவனத்தோட முக்கியமான பல டாக்குமெண்ட்ஸை நீங்க பார்த்திருக்கிங்க.. நீங்க எங்க நிறுவனத்தை விட்டு சட்டுன்னு விலகினால் அது மூலமா எங்களுக்கு பல சோதனைகள் வரலாம்.. நாளை காலையில் எட்டரைக்கு நீங்க ஆபிஸ்ல இல்லன்னா நாங்க உங்க மேல சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.. நீங்க எங்க எதிரி கம்பெனிக்கு கையாளா இருந்து எங்களை உலவு பார்க்க வந்ததா சொல்லி கேஸ் தருவோம்.. இதுக்கு மேல பேசுறதா இருந்தா நீங்க முகில்கிட்ட பேசிக்கோங்க.." என்றான் அவன்.அன்று யதிராவுக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல.குரு ஃபோனை வைத்தபிறகு ஆத்திரத்தோடு இருக்கையில் அமர்ந்தவளின் முன்னால் வந்து அமர்ந்தாள் கே.கே."என்ன ஆச்சி.?" என கேட்டவளிடம் குரு போனில் சொன்னதை சொன்னாள் யதிரா."நான் மாமாகிட்ட போய் பேச போறேன்.. அவர் ஏன் என்னை இப்படி தொல்லை பண்றாரு.? அவருக்கு மனசாட்சியே இல்லையா.?" என புலம்பினாள்."முகி உன்னை டார்ச்சர் பண்ண பார்க்கறான்.. அவன் ஏற்கனவே உன்னை ஒரு முறை சரண்டரிங் மென்டாலிட்டி உடையவன்னு சொல்லி என்கிட்ட கேலி பேசி இருக்கான். இப்பவும் நீ சரண்டர் ஆகணும்ன்னுதான் நினைக்கிறான்.." என்றாள் கோபமாக.சரண்டரிங் மென்டாலிட்டி என்ற வார்த்தை யதிராவை தாக்கி விட்டது. யதிராவின் வாடிய முகம் கண்டு பெருமூச்சி விட்டாள் கே.கே."அவன் சொன்னதும் பொய் இல்லன்னுதான் தோணுது யதி.. இப்பவும் உன் முன்னாடி நல்ல ஆப்சன் இருக்கு‌. ஆனா நீ முகில்கிட்ட போய் கெஞ்ச நினைக்கிற.. போட்டியிலயே கலந்துக்காம தோல்வியை ஒப்புக்கொள்வதை போல ஒரு முட்டாள்தனம் வேற ஏதும் இல்ல.. உன்னை உன் தன்மானத்தை அடமானம் வச்சி அவன்க்கிட்ட போய் கெஞ்சணும்ன்னு உனக்கென்ன விதி.? நீ நினைச்சி இறங்கினா அவனை உன் முன்னாடி சரணடைய வைக்கலாம்.. உனக்கு யார் வேணாலும் எதிரியா இருக்கலாம். ஆனா உனக்கு நீயே துரோகியா இருக்காத.." என்றாள்.யதிரா முகத்தை மூடியபடி யோசனையில் ஆழ்ந்தாள். தன் முன் இருக்கும் வழிகள் என்ன என்னவென தேடினாள். வேலைக்கு செல்ல மறுத்தால் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். அதற்கான பணமும் இவளிடம் இல்லை. கோர்ட் வரை செல்லும் அளவுக்கு இவளுக்கு தைரியமும் இல்லை. சரியென்று வேலைக்கு சென்றால் அங்கு முகிலை கண்டு மனமுடைந்தே சாக வேண்டும், நரக வேதனையை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டும். என்ன செய்வது என யோசித்தாள்."அவனையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்காத நீ.. நீயும் உன் எதிரியும் ஒரே பஸ்ல ஒரே சீட்டுல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து பயணம் பண்ண வேண்டிய நிலமை வந்தா நீ பஸ்ஸை விட்டு கீழே குதிக்க முடியாது. அதே மாதிரிதான் இதையும் நினைச்சிக்க.. மூணு வருசமெல்லாம் ஒரு மேட்டரா.? கண்ணை மூடி திறக்கும் முன்னாடி ஓடிடும்.. அவனை எதிர்க்கவே உன்னால முடியலன்னா அப்புறம் நீ யாரைதான் எதிர்த்து வாழுவ.?" என்று கேட்டாள் கே.கே.அவள் சொன்னது யதிராவுக்கு புரிந்தது. மூணு வருடம் நரகம்தான் என்றாலும் கூட அதை விட்டு தப்பி செல்ல இயலாத போது அதை எதிர்த்து போராடியபடி ஏன் வாழ கூடாது என்று நினைத்தாள்.மனதை உறுதிப்படுத்திக் கொண்டு மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு அடுத்த பரிட்சை காத்திருந்தது. அவள் இனி முகிலுக்கு பி.ஏ வாக வேலை செய்ய வேண்டும் என்று புது தகவலை சொன்னான் குரு.யதிராவின் மனம் எரிமலையாக கனன்றது. முகிலின் முகத்திலேயே விழிக்க கூடாது என்று கங்கணம் கட்டியிருந்தவள் அவனுக்கு உதவியாளாக வேலை செய்ய நேர்ந்ததை எண்ணி விதியை நொந்தாள். ஓவியா தந்த பைல்களை வாங்கி கொண்டு ஓவியாவின் இருக்கையில் அமர்ந்தவள் முன் வந்து நின்றான் முகில்."இனி உன் சீட் என் ரூம்ல.." என்றான். யதிரா பற்களை கடித்தபடி எழுந்தாள். அவன் அனைத்தையும் வேண்டுமென்றே செய்கிறான் என புரிந்தது.இந்த ஒரு வாரத்தில் கே.கே பலமுறை சொல்லியுள்ளாள் வெற்று கோபத்தால் நமது மனநிலைதான் பாதிக்கப்படும் என்று. அதனாலேயே பொறுமையை கடைப்பிடித்த யதிரா அமைதியாக இடம் மாற்றப்பட்ட கேபினுக்கு வந்து சேர்ந்தாள்.தனது இருக்கையில் அமரும் முன் "நீ, வா, போன்னு அநாவசியமா பேசாதிங்க.. மரியாதையை தந்து வாங்கிகங்க.." என்றாள் எரிச்சலை அடக்கியபடி.முகில் வியந்து பார்ப்பதை கண்டு கொள்ளவே இல்லை அவள்.அதன்பிறகு இந்த இரண்டு மாதங்களும் அவளுக்கு சோதனை காலமாகதான் சென்றது. ஆரம்பத்தில் முகிலின் கண் முன் அமர்ந்தபடி அவளால் வேலையில் கவனம் செலுத்தவே இயலவில்லை. சிரமப்பட்டு தன்னை தானே தேற்றிக் கொண்டு அவள் வேலையில் மூழ்கினாலும் கூட அவ்வப்போது சுபா வந்து எரிச்சலை தந்து சென்றுக் கொண்டேயிருந்தாள்.இந்த இரண்டு மாத காலமும் அவளின் ஒரே ஆறுதல் கே.கே மட்டும்தான். அவள் யதிராவின் பக்கபலமாக இருந்தாள். இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர் இந்த நாட்களில். அவளும் முகிலும் முன்னாள் நண்பர்கள் என்பது பொறாமை தரும் அளவுக்கு கே.கேவோடு பழகி விட்டாள் யதிரா.குளித்து முடித்து வெளியே வந்தவள் பூட்ஸை மாட்டிக் கொண்டிருந்த கே.கேவை பார்த்தாள்.கே.கே இவளை நிமிர்ந்து பார்த்தாள். "வாவ்.. செம ப்யூட்டியா இருக்க நீ.." என்றாள். யதிரா குறும்பு சிரிப்போடு தனது அறைக்குள் நுழைந்தாள்.இருபது நிமிட இடைவெளியில் தயாராகி வந்தவள் "கே.கே நான் செம கடுப்புல இருக்கேன்.. முகிலோட எதிரி நிறுவனம் எதுன்னு கண்டுபிடிச்சி அவங்களோடு நட்பு வச்சிக்கிட்டு இன்பர்மேசன் எல்லாத்தையும் கை மாத்தி விடலாம்ன்னு நினைக்கிற அளவுக்கு கடுப்பா இருக்கேன்.." என்றாள்.கே.கே எழுந்து வந்து அவள் முன்னால் நின்றாள். தனது பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்தபடி அவளை தலை முதல் கால் வரை பார்த்தாள்."இவ்வளவு கடுப்பு ஏன்.? அதுவும் இந்த காலங்காலத்தாலயே..?" என்றாள் கண்களை சிமிட்டியபடி.யதிரா கடுப்பின் காரணத்தை நினைத்து எரிச்சலடைந்தாள். நெற்றியை பிடித்தாள். " நேத்து மாமா எனக்கு முத்தம் தந்துட்டாரு.." என்றாள் பற்களை கடித்தபடி.கே.கேவிற்கு முகில் மேல் ஆத்திரம் வந்தது. சிறிது பரிதாபமும் வந்தது."அவன் முத்தம் தர அளவுக்கு நீ ஏன் இடம் தர..?" பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைகளை மேலே எடுத்தவள் கைகளை கட்டியபடி இவளை பார்த்து கேட்டாள்.யதிரா இடம் வலமாக தலையசைத்தாள். "நான் அவரோட முத்தம் வேணும்ன்னு ஆசைப்பட்ட மாதிரி நீ கேட்கற.." என்றாள்.கே.கே முகத்தை சுளித்தாள். "அவன் முத்தம் தர வரும்போதே அவன் முகத்துல நச்சுன்னு ஒரு பஞ்ச் தராம அந்த முத்தத்தை அங்கே நல்லா என்ஜாய் பண்ணிட்டு இங்கே வந்து சீன் போட்டுட்டு இருக்க நீ.. அட்லீஸ்ட் முத்தம் தந்த பிறகாவது அவனுக்கு ஒரு உதையை தந்திருப்பியா.? ம்கூம். அதுவும் இல்ல.. நீ ஒரு ஒன்னாம் நம்பர் உதவாக்கரை.. சரண்டரிங் மென்டாலிட்டி உன் ரத்தத்திலயே ஊறி போச்சி.." என்று சலிப்போடு சொன்னவள் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டாள் தான் சொன்னதில் ரோசம் வந்த யதிரா நேராக அலுவலகம் சென்றவுடன் முகிலுக்கு பன்ச் ஒன்றை தர போகிறாள் என்று.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1106VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN