27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தான். நேற்றைய முத்தம் இன்றும் நினைவில் சிறு இதத்தை தந்தது. முத்தம் தர வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லைதான். யதிராவின் அருகாமை, யாருமற்ற தனிமை, அளவற்ற காதலை வெளிக்காட்ட இயலாத ஒரு சூழ்நிலை என்று அவன் தன் கட்டுப்பாட்டை மீறி விட்டான்.கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சுபா நின்றுக் கொண்டிருந்தாள்."சௌந்தர்யா அண்ணி பேருல எழுபது லட்சம் பணம் டெபாசிட் பண்ண போறிங்களா.?" என்றாள் கையை கட்டியபடி.முகில் திரும்பிக் கொண்டான். நிலை கண்ணாடியில் தெரிந்த சுபாவின் பிம்பத்தை பார்த்தான்."ஆமா.‌ ஏன்.?" என்றான்.சுபா முகத்தில் கோபம் தென்பட்டது. "இது கொஞ்சம் கூட சரி கிடையாது. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை அவங்க பேர்ல ஏன் போடணும்.? நீங்க இப்படியே உங்க அக்காவை பார்த்துட்டு இருந்தா நாளைக்கு நமக்குன்னு என்ன சேமிப்பு இருக்கும்.?" என்றாள் பற்களை கடித்தபடி.முகில் கண்களை சுற்றியபடி இவள் பக்கம் பார்த்தான். "சுபா நீ தேவையில்லாததை யோசிக்கிற.. யதிராவை பிடிக்கல.. அவக்கிட்ட இருந்து விலக உன் உதவி வேணும்ன்னு தெளிவா சொல்லிதான் உன்னை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனா என் மனசுல நீ இல்லவே இல்லன்னு தெரிஞ்ச பிறகும் கூட ஏன் இப்படி வீண் நம்பிக்கையோடு இருக்க.?" என்றான்.சுபா அவன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. "உங்க மனசுல நான் இப்ப இல்லங்கறது விசயமே இல்ல.. என் மனசுல நீங்க இருக்கிங்க. எனக்கு என் காதல் மேல முழுசா நம்பிக்கை இருக்கு. நீங்க ஒருநாள் கண்டிப்பா என் காதலை ஏத்துப்பிங்க. முட்டாள்தனமா உங்க அக்கா‌ பேர்ல பணத்தை டெபாசிட் பண்றதுக்கு பதிலா அதை வேறு எதாவது உருப்படியா பயன்படுத்துங்க.." என்றாள்.முகில் அவளை இளக்காரமாக பார்த்து விட்டு வெளியே நடந்தான்."நான் சொல்றதை கொஞ்சமாவது கேளுங்க..‌ இந்த பணம் உங்களுக்கு ரொம்ப பெரிசு.. ஆனா உங்க அக்காவுக்கு இது சாதாரணம்.. அவங்க இதை எல்லாம் ஈஸியா காலி பண்ணிடுவாங்க.. நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் வேஸ்டாக வேணாம்.." என்றாள் வருத்தமாக.முகில் உள்ளுக்குள் சிரித்தான். "எழுபது லட்சத்தை அவ ஏன் வேஸ்டா செலவு பண்ண போறா.? நீ சும்மா தொந்தரவு பண்ணாம இரு.." என்றான்.சுபா நெற்றியை தேய்த்தாள். "உங்க அக்கா ஒரு கேம்ப்ளர்.." என்றாள். நடப்பதை நிறுத்திய முகில் அவளது கன்னத்தில் ஒரு அறையை விட்டான்."எங்க அக்காவை பத்தி இன்னொரு முறை தப்பா பேசின உன் பல்லை தட்டிடுவேன்.." என்றான் ஆத்திரமாக. கோபத்தில் சிவந்த அவனது முகம் கண்டு பயந்து போனாள் சுபா. ஆனால் அவளுக்குள்ளும் கோபம்தான் அதிகமாக வந்தது."உங்ககிட்ட ஆதாரத்தை காட்டுறேன் இருங்க.." என்றவள் தன் அடிப்பட்ட கன்னத்தை தடவிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.முகில் அவளை கண்டு மனதுக்குள் நகைத்தான். 'சுண்டெலி பெருச்சாளியை காட்டி தர நினைக்குதாம்..' என்றெண்ணியவனுக்கு சுபா என்ன மாதிரியான ஆதாரத்தை கொண்டு வர போகிறாள் என்று யோசனையாக இருந்தது.தான் அறிந்த துரோகத்தின் வலியை யதிராவும் உணர வேண்டும் என்று நினைத்துதான் சுபாவின் துணையோடு யதிராவிடமிருந்து பிரிந்து வந்தான் முகில். நாடகம் என சொல்லிதான் சுபாவின் உதவியை நாடினான். ஆனால் அவள் அதுதான் சாக்கென்று முகிலை உடும்பு பிடி பிடித்துக் கொண்டாள்.முகில் இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அதன் காரணம் அவனது கையில் உள்ள மந்திர கயிறுதான் என்று சௌந்தர்யாவிடம் சொன்னாள் அம்மா. ஒரு வாரம் முகத்தை தூக்கி வைத்திருந்த அப்பா அதன் பிறகு இவனோடு சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார். சௌந்தர்யா வழக்கம் போல தனது ஆளுமையை இவனிடமும் காட்டினாள். முகில் அவளது ஆளுமையின் கீழ் செயல்படுவதை போன்று பிம்பத்தை காட்டினான். நிறுவனம் சம்பந்தபட்ட பல விசயங்களுக்கும் அவன் அவளது அறிவுரையையே நாடினான். தன்னால்தான் அவனது நிறுவனம் வளர்கிறது என்று சௌந்தர்யா எண்ணும் அளவுக்கு அவளிடம் ஆலோசித்தான் முகில். மூன்று வருடங்களுக்கு முன்னால் வரை அது அவனது இயல்பு என்பதால் இப்போது இவன் நடிப்பதை நடிப்பு என்று சௌந்தர்யாவாலும் கண்டறிய முடியவில்லை."அக்கா சாப்பாடு எடுத்து வை.." என்று வந்து அமர்ந்தவனுக்கு உணவை பரிமாறினாள் சௌந்தர்யா."பணம் எப்ப டிரான்ஸ்ஃபர் ஆகும்.?" என்றாள் புருவம் உயர்த்தியபடி. எந்த பணத்தாலும் அவளை சரணடைய வைக்க முடியாது என்பது முகில் அறிந்ததே. அவளது கோபமும், திமிரும், மற்றவர்களை தன் காலின் கீழ் தூசாகவும் நினைக்கும் அவளது குணத்தை முகில் அடியோடு வெறுத்தான். ஆனால் அவளை அடங்கும் வழிதான் அவனுக்கு இன்னும் கிடைக்கவில்லை.முகில் அலுவலகம் புறப்படுவதை வாசலின் ஒரு ஓரத்தில் நின்றபடி பார்த்தாள் சுபா. 'நான் சொன்னதை கே.கே கூட உடனே நம்பிட்டா.. ஆனா இந்த ஒல்லி பூசணிக்கா நம்ப மாட்டேங்குது..' என்று உள்ளுக்குள் எரிந்தாள். கே.கே முகிலின் முன்னாள் தோழியென்பதும், இன்னாளில் அவளுக்கு யதிரா மீது அளவில்லா பாசம் உள்ளது என்ற செய்தி அறிந்ததுமே சுபாவிற்கு கே.கே மேல் பயங்கர கோபம் வந்துவிட்டது.கே.கே இவளிடம் பேச வந்தபோது "நீங்க எனக்குதானே பிரெண்ட்.? ஆனா ஏன் யதிராவுக்கு சப்போர்ட் பண்றிங்க.?" என கோபமாக கேட்டவளுக்கு கே.கே தன்னிடம் பழகியது அனைத்தும் நடிப்பின் காரணம் என்பது தெரியவில்லை."நீயும் நானும் பிரெண்டானது எதேச்சையானது சுபா. யதிராவோடும் அப்படித்தான். ஆனா நான் முகிலை வெறுக்கறேன். அதனால நான் யதிரா பக்கம்தான் இருப்பேன். நீயும் அவனை வெறுத்தா அப்ப சொல்லு.. நம்ம பிரெண்ட்ஷிப்பை கன்டினியூ பண்ணலாம்.." என்று சொல்லி விட்டு போய் விட்டாள் கே.கே.சுபாவிற்கு கே.கே மேல் கோபம் வந்தது. அவள் முகிலை வெறுப்பது கண்டு கூட அவ்வளவு கோபம் வரவில்லை. ஆனால் அவள் யதிராவின் பக்கம் சென்றதுதான் அதீத கோபத்தை தந்தது. அதனாலேயே இன்று வரையிலும் கே.கேவோடு பேச மறுத்து பார்க்கும் இடமெல்லாம் அவளை முறைத்துக் கொண்டு திரிகிறாள்.முகில் அலுவலகம் வந்தான். அனைவருக்கும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவனும் பதில் வணக்கம் வைத்துவிட்டு துள்ளலோடு தனது அறைக்குள் நுழைந்தான். யதிரா தனது இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் இவனுக்கும் முன்னால் தினம் வந்தாக வேண்டும். இல்லையேல் தாமதமாக வரும் ஒவ்வொரு நாளுக்காகவும் இரண்டு நாட்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சொல்லியுள்ளான் முகில்.சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டவன் இருக்கையில் அமர்ந்து சட்டையின் கையை மேலே மடித்து விட்டுக் கொண்டான்.அவன் தனது மேஜை டிராவில் இருந்த சில பைல்களை எடுத்து மேலே வைத்துவிட்டு கணினியை இயக்க ஆரம்பித்த நேரத்தில் யதிரா தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தாள்‌‌. தன் கையிலிருந்த பைலை அவன் முன்னால் வைத்தாள்."நீங்க கையெழுத்து போட வேண்டியதுதான் மட்டும்தான் பாக்கி சார்.." என்றாள்.முகில் அந்த பைலை கையில் எடுத்த நேரத்தில் அவனது கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள் யதிரா.முகில் கன்னத்தை தேய்த்தபடி கோபமாக நிமிர்ந்து பார்த்தான். யதிரா ஆத்திரத்தோடு நின்றுக் கொண்டிருந்தாள்."இந்த அறை நேத்து என்னை கிஸ் பண்ணதுக்காக.. இன்னொரு முறை என்னை டச் பண்ணா அப்புறம் என்ன நடக்கும்ன்னே தெரியாது.." என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.முகில் அவளை நக்கலாக மேலும் கீழும் பார்த்தான். "நான் என்னவோ இதுக்கும் முன்னாடி உன்னை டச் பண்ணாத மாதிரி பேசுற.. நீ என்னோட பிராப்பர்டிங்கறதை மறந்துட்டியா.?" என்றான் தன் உதட்டில் நக்கல் சிரிப்பை ஓடவிட்டபடி.யதிரா பற்களை கடித்தாள்."உன்னை நான் கிஸ் பண்ணவுடனே நீயா எதையாவது ஓவரா கற்பனை பண்ணிக்காத.. சின்ன புள்ளைங்கள்ல புளி மிட்டாய் பிடிச்சிருந்ததுங்கறதுக்காக மறுபடியும் எப்போதாவது புளி மிட்டாயை பார்த்தா ருசிக்க ஆசைப்படுவோமே அந்த மாதிரிதான் இதுதான்.. அதுவும் இல்லாம உன் லிப்ஸ் ஒன்னும் அவ்வளவு டேஸ்டாவும் இல்ல.." என்றான் உதட்டை சுழித்தபடி.யதிரா கண்களை மூடி கோபத்தை அடக்கினாள். 'கோபத்தை அடக்கி வச்சி நீ என்ன ஞானியாவா ஆக போற.?' மனதுக்குள் குரல் ஒன்று கேட்கவும் பற்களை கடித்தபடி கண்களை திறந்தவள் அவனது சுழித்த உதட்டின் மீது ஒரு குத்து விட்டாள். ரத்தம் சொட்டிய உதட்டை புறங்கையால் துடைத்தபடி எழுந்து நின்றான் முகில்."கட்டிய பொண்டாட்டியை கூட அவளுக்கு விருப்பம் இல்லாதபோது தொடக்கூடாது. இது சட்டம் சொல்றது. நான் உங்க பொண்டாட்டியும் இல்ல. கேர்ள் பிரெண்டும் இல்ல.. என்னை என் அனுமதி இல்லாம கிஸ் பண்ணா எது கொண்டு வேணாலும் அடிப்பேன் நான். சட்டபடியும் கூட நடவடிக்கை எடுப்பேன். அதனால இனி கேர்ப்புல்லா இருங்க.. உங்க சீண்டலை வேற யார்க்கிட்டயாவது வச்சிகங்க.. ஆனா என்கிட்ட வேணாம்.." என்றவள் முறைத்தவனை தானும் முறைத்துவிட்டு திரும்பினாள். ஆனால் சட்டென ஏதோ யோசனையில் மீண்டும் அவன் பக்கம் பார்த்தாள். தன் உதட்டை துடைத்துக் கொண்டிருந்த அவனது கையில் நறுக்கென கிள்ளினாள்."என்னை வா போ சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. இன்னொரு முறை வா போன்னு ஒருமையில பேசினா அப்புறம் நானும் பார்க்கற இடத்துல எல்லாம் வாடா போடான்னு ஆரம்பிப்பேன்.. லாஸ்ட் வார்னிங் இது. இன்னொரு முறை பேசும் முன்னால யோசிச்சிட்டு பேசுங்க.." என்றவள் வெடுக்கென திரும்பி நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.'கே.கே எருமை மாடே..' என்று கே.கேவை மனதுக்குள் கருவியவன் எழுந்து பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்தினான். கன்னம் எரிந்தது. உதடும் ரத்த கசிவோடு எரிச்சலை தந்தது. கையை உதறிக் கொண்டான். அவள் கிள்ளிய இடம் நகம் பதிந்த தடத்துடன் சிவப்பாக கன்றிப்போய் இருந்தது. அடிப்பட்டதை எண்ணி கோபம் இருந்தாலும் கூட ஒரு புறம் மகிழ்வாக இருந்தது.'நான்தான் ஓவரா பண்ணிட்டேன் போல.. பூவாய் இருந்தவ எரிமலையா மாறும் அளவுக்கு கோபப்படுத்திட்டேன் போல.. ஆனாலும் லிப்ஸ் டேஸ்டாதான் இருந்தது. அதையாவது ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம்..' என நினைத்தவன் கண்ணாடியை பார்த்து உதட்டில் இருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டான். கன்னத்தில் இருந்த கை தடம் அதற்குள் மறைந்து போய் விட்டிருந்தது."இவ சாப்பிடுறாளா இல்லையா.? நாய் வாலையும் நிமிர்த்த முடியாது.. இந்த உதவாக்கரைக்கும் பலம் வரவழைக்க முடியாது.." என்று கண்ணாடியை பார்த்து திட்டினான்.அவனது பாக்கெட்டிலிருந்த ஃபோன் ஒலித்தது. கே.கே அழைத்திருந்தாள்."ஹலோ.. சொல்லு கே.கே.." என்றான்."நாய் வாலை நிமிர்த்தலாம்.. ஆனா உன்னை மாதிரி உதவாக்கரைக்குதான் புத்தி வரவைக்க முடியாது.." என்று எதிர்முனையில் எரிந்து விழுந்தாள் அவள்.முகில் பாத்ரூமை சுற்றம் முற்றும் பார்த்தான். "பாத்ரூம்ல கேமரா வச்சிருக்கியா.?" என்றான் அவசரமாக.'யூரின் போக நினைச்சி ஜிப்பை கழட்ட இருந்தேனே..' என்று அவன் நெற்றியில் அடித்துக் கொண்ட வேளையில் "பாத்ரூம்ல கேமரா வைக்க நான் என்ன சைக்கோவா.?" என்று கோபமாக கேட்டாள் கே.கே.முகில் பெருமூச்சி விட்டுவிட்டு ஜிப்பை கழட்ட நினைக்கையில் "உன் சட்டையில் உள்ள ஒரு பட்டன்லதான் மைக் இருக்கு.." என்றாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1090VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN