28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் தனது சட்டையில் உள்ள பட்டன்களை ஆராய்ந்தான். அனைத்து பட்டன்களும் கருப்பாகதான் இருந்தது. ஆனால் நான்காவது பட்டன் அதே கருப்பில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. அந்த பட்டனை தொட்டு பார்த்தான்."டச் பண்ணாத.. சவுண்ட் ஒரு மாதிரி கேட்குது.." என்றாள் கே‌.கே.முகில் கோபத்தோடு கண்ணாடியை முறைத்தான். "கே.கே நீ என் பிரைவஸியை நாசம் பண்ற.." என்றான் எரிச்சலோடு."பிரைவசியா.? உனக்கெதுக்கு அந்த கருமம்.? பொண்டாட்டியை விட்டு பிரிஞ்சிதானே இருக்க.? அதை விட்டா உனக்குன்னு இருக்கறது உன் வோன் பிரைவசி மட்டும்தான். ஆனா நீ ஒன்னும் மன்மதன் கிடையாது.. அப்படியே இருந்தாலும் கூட நான் என் வேலையில் பக்கா கிளீன்.. ஆணழகனே நேர்ல வந்தாலும் அவன் கண்ணை தவிர வேற எங்கயும் பார்க்க மாட்டேன்.." என்றாள்.அவள் சொன்னது கேட்டு இடம் வலமாக தலையசைத்தான் முகில்."இது உன்னை கண்காணிக்க வச்ச மைக் இல்ல.. உன் வீட்டுல உள்ளவங்களை கண்காணிக்க வச்சது.. இவ்வளவு நாளா ஹால் வால்ல உள்ள ஹேங்கர்ல இருந்த சட்டையை உங்க அக்கா எடுத்து துவைச்சி மடிச்சி வச்சிருக்கா.. நீயும் எடுத்து மாட்டிட்டு வந்துருக்க.." என்று விளக்கத்தை சொன்னாள் கே.கே."ஹேங்கர்ல இருந்த சட்டையில் மைக் செட் பண்ணதை நீ என்கிட்ட சொல்லவே இல்ல.." என்று குறை சொன்னான் அவன்."நீ பேச்சை மாத்துறதை முதல்ல நிறுத்து.. யாரை கேட்டு நீ யதிக்கு கிஸ் தந்த.?" என்றாள் அவள் கோபமாக.முகில் உதட்டை கடித்தான். யதிரா தந்த அடியால் காயம்பட்ட உதடு இவன் தீண்டியதும் அதிகமாக எரிந்தது."ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல்.." சிறு குரலில் சொன்னவனுக்கு தனது அவசரத்தை நினைத்து தன் மீதே கோபம் வந்தது."அவ இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கா. அதிகம் அழாம இருக்கா. ஆனா நீ ஏன் அவளை கஷ்டப்படுத்துற. அவளும் மனுசிதானே.? அவளோட பீலிங்க்ஸோடு விளையாட உனக்கு என்ன அவ்வளவு ஆசை.?" என கேட்ட கே.கேவின் குரலில் வருத்தம் அதிகமாக இருந்தது.முகில் தலையை கோதியபடி அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான். "அவ பீலிங்க்ஸோடு விளையாடியது தப்புதான் கே.கே.. ஆனா இன்னைக்கு அவ என்னை அடிச்சபோது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா.? அன்னைக்கு வர்சன் முத்தம் தந்தபோது இதே மாதிரி இவ அடிச்சிருக்கணும்ன்னு பேராசைப்படுறேன் நான்.. ஆனா அன்னைக்கு மிஸ் ஆயிடுச்சி.. இனியாவது என் பொண்டாட்டியால் தன் சுய மரியாதையை காப்பாத்திக்க முடியுமேன்னு நினைச்சி இப்ப எனக்கு சந்தோசமா இருக்கு.. இதுக்காக இன்னும் நாலு அறை கூட வாங்கிக்க தயார் நான்.. இது அவ மேல இருக்கற லவ் கிடையாது. என்னோட சுயநலம்.. என் பொண்டாட்டியை எனக்கு சொந்தமானவளை இனி எவனாவது தொட்டா அந்த இடத்துல இவ கண்ணை கசக்கிக்கிட்டு நிற்காம அவனை ஒரு கை பார்ப்பான்னு நம்பிக்கை. அவ தன்மானம் முதல் காரணமா இருந்தாலும் கூட என் பொசசிவ்னெஸோட வெளிப்பாடுதான் இந்த எண்ணம்.. இதை உன்கிட்ட சொல்ல எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது.. தன் பொண்டாட்டி தனக்கு மட்டும் சொந்தமா, தன்னோட தீண்டலை மட்டும் அனுமதிக்கணும்ன்னுதான் எந்த ஒரு ஆணும் விரும்புவான். நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியாது.." என்றான்.எதிர்முனையில் கே.கே பெருமூச்சி விட்டாள். "முட்டாள்.. அவ இப்ப உன்னையும் அடியோடு வெறுக்கறா.." என்று நினைவுப்படுத்தினாள்.முகில் சிரித்தான். "அவ எங்கே வெறுக்கறா.? சகிச்சிட்டு இருக்கா.. அவ்வளவுதான். அவளுக்கு இன்னும் அறிவே வளரல. 'மூணு வருசம் முன்னாடி ஏன்டா என்னை விட்டுட்டு போன.?'ன்னு என்கிட்ட வந்து கேட்கணும் அவ. உண்மை எது பொய் எதுன்னு உணரணும் அவ. 'ஏன்டா என்னை மறுபடியும் விட்டுட்டு போன'ன்னு கேட்டு சட்டையை பிடிக்கணும்.. 'உன் மனசுல என் மேல காதல் இருக்கும்போது எதுக்குடா என்கிட்ட பொய் சொல்லி விலகி இருக்க'ன்னு கேட்கணும்.. அவளோட வாழ்க்கைக்காவும், அவளோட காதலுக்காகவும் அவளே போராடணும்.." என்று அவன் சொல்ல கே.கே கலகலவென சிரித்தாள்."இத்தனையும் அவளே பண்றதுக்கு நீ என்ன ***க்கு பூமியில இருக்க.?" என்றாள் எரிச்சலோடு."உனக்கு ருத்ரகாளியோட குணாதிசியத்துல ஒருத்தி வேணும்ன்னா அப்படி ஒருத்தியை தேடி கட்டியிருக்கணும்.. மனுசங்க என்ன எழவை பண்ணாலும் பொறுத்து போற பூமா தேவியை போல குணமுள்ள ஒருத்தியை கட்டி அவ வாழ்க்கையை இப்படி சின்னா பின்னமாக்க கூடாது.." என்றாள்."ருத்ரகாளியும் பூமாதேவியும் எல்லா பொண்ணுங்க நெஞ்சிலயும்தான் இருக்காங்க.. ஆனா நீங்கதான் ஒழுங்கா யூஸ் பண்றது இல்ல.. என் பொண்டாட்டி எனக்காக போராடணும்.. என் அக்கா மறுபடியும் என் மனசை மாத்தி யதிராவை விட்டு பிரிச்சி வைக்கிற ஒரு சூழ்நிலை வந்தாலும் அங்கே அவ இருக்கற எல்லோரையும் தூசா நினைச்சி மிதிச்சிட்டு என்னை அவ கூட இழுத்துட்டு போகணும்.. காலம் முழக்க அவ தன் காதலால் என்னை கன்ட்ரோல் பண்ணனும்ன்னு ஆசைப்படுறேன்.." என்றான்."மிட்டாய் மேல ஆசைப்படுற குழந்தையை போல நீ இப்படி கிறுக்குதனமா ஆசைப்படுற.. இது உன் லைஃப்.. அவளோட லைஃப்.. உங்க லைப்ல குறுக்க வர நான் விரும்பல.. என் வேலை இரண்டு காட்டெருமைகளை போலிஸ்ல பிடிச்சி கொடுக்கிறது மட்டும்தான்.. நான் என் வேலையை பார்க்கறேன்.. நீ என்னவோ பண்ணு.. ஆனா யதிராக்கிட்ட சும்மா சும்மா அடி வாங்கி சாகாத.. பாவம் என் பேபி, உன்னை மாதிரி ஒரு எருமையை அடிச்சா அவளுக்குதான் கை வலிக்கும்.. பட்டனை எடுத்துடாதே பேயே.." என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள்."கிறுக்காய் இருப்பதில் பெருமை கொள்கிறான் இந்த முகில்.." என்று சொன்னவன் சட்டை பட்டனை பார்த்தான்."என் பிரைவஸிக்கு வேட்டு வச்சிட்டா கே.கே. இன்னும் எத்தனை இடத்துல கேமராவும், மைக்கும் இருக்கோ..?" என புலம்பியபடி வெளியே நடந்தான்.யதிரா இன்னமும் எரிமலையாகவே இருந்தாள். முகில் முத்தம் தந்ததை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் சற்று முன் பேசியது அவளின் எரிமலைக்கு இன்னும் அதிகமான எரிப்பொருளை தந்துக் கொண்டிருந்தது.அறைக்குள் வந்த முகில் அவளை நக்கல் பார்வை பார்த்தபடி சென்று தனது இருக்கையில் அமர்ந்தான்.யதிரா அவனது முகத்தையே பார்க்க கூடாது என்று எண்ணியபடி அமர்ந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.முகில் நொடிக்கொரு முறை அவளை நிமிர்ந்து பார்த்தபடியே தனது வேலையை செய்தான். அவன் இப்படி பார்க்கும் ஒவ்வொரு முறையும் யதிரா எரிச்சலானாள். முள்ளின் மீது நிற்பது போலவே இருந்தது அவனோடு ஒரே அறையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும்.எப்போது மதிய உணவுக்கான இடைவெளி வருமென்று காத்திருந்தாள். நேரம் கடந்ததும் சட்டென அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள். முகில் அவளது பரபரப்பை கண்டு மனதுக்குள் நகைத்தான்.கேன்டினில் உணவை வாங்கியவள் சுந்தரிக்கும் வேணிக்கும் இடையே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்."இன்னைக்கும் நீங்க சமைக்கலையா.?" என கேட்டாள் ஓவியா. அவளது டிபன் பாக்ஸில் இருந்த உணவில் பாதியை தனது தட்டில் கொட்டிக் கொண்ட வர்சன் அவள் யாரை கேட்கிறாள் என்று நிமிர்ந்து பார்த்தான்."யதி பேபி.. நீ ஏன் இப்படி கம்மியா சாப்பிட்டு அரை பட்டினி இருக்க.?" என்றான்.ஓவியா அவனது முதுகில் அடி ஒன்றை தர, யதிரா அலுப்போடு கண்களை சுழற்றினாள். "நீயும் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற வர்சு.? உனக்குதான் உன் ஆள் இருக்கா இல்லையா.? பிறகேன் என்னை பேபின்னு கூப்பிடுற.?" என்றாள்."நானும் டார்ச்சர் பண்றேனா.? அப்படின்னா இன்னும் வேற யார் உன்னை டார்ச்சர் பண்றாங்க.?" என்று கிண்டலாக கேட்டான் அவன்.யதிரா பரிதாபத்தோடு ஓவியாவை பார்த்தாள். உதட்டை கடித்தபடி கண்களை மூடி திறந்த ஓவியா இம்முறை கொஞ்சம் பலமான அடியை வர்சனுக்கு தந்தாள்."அவங்களை இனி நீ டிஸ்டர்ப் பண்ணா அப்புறம் நான் உன் பல்லை தட்டிடுவேன்.." என்றாள் கோபமாக.வர்சன் அடிப்பட்ட தன் முதுகை கஷ்டப்பட்டு வருடி விட்டுக் கொண்டான். "எப்படி.. நேத்து செஞ்சி கொண்டு வந்திருந்தியே அதே மாதிரி அல்வா செஞ்சி தந்து என் பல்லை உடைக்க போறியா.? மடமடக்குன்னு கடிச்சி திங்கற மாதிரி ஒரு அல்வாவை என் வாழ்நாளிலேயே நேத்தேதான் சாப்பிட்டேன்.." அவன் கேலியாக சொல்லி சிரித்த நேரத்தில் அவனது தொடையில் இறங்கியது போர்க்-ஸ்பூன் ஒன்று."இவ என்னை கொல்ல பார்க்கறா.." என்று கத்தினான் வர்சன். கேன்டினில் அமர்ந்திருந்த பலரும் அவனது சத்தத்தால் இவர்களது மேஜையை திரும்பி பார்த்தனர். பின்னர் அவர்களுக்குள் எதையோ கிண்டலாக பேசி சிரித்துக் கொண்டனர்‌."ச்சே.. இந்த ஆபிஸ் லவ்வர்ஸ் டார்ச்சர் தாங்கல.." என்று சலித்து கொண்டாள் வேணி."உங்களுக்கு வயசாயிடுச்சி பாட்டி.. அதனால இப்படிதான் தோணும்.." என்று வம்பிழுத்தான் வர்சன்."போடா பொடிப்பையா.." என்று கையை அசைத்துவிட்டு அங்கிருந்து போனாள் வேணி.யதிராவும் உணவை முடித்துக் கொண்டு எழுந்தாள்.முகில் ஜன்னல் வழி தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே வந்தான் குரு. யதிராதான் சீக்கிரத்தில் வந்து விட்டாள் போல என்றெண்ணி திரும்பியவன் குருவை கண்டதும் சிறு புன்னகை புரிந்தான்."சௌந்தர்யா அக்கா சைட்ல இருந்து ஏதாவது கண்டுபிடிச்சியா.?" என்றான் அவன்."இன்னும் இல்ல.. இனிதான் வலையை விரிக்க போறேன்.." என்றவன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தான்."பாவம்டா யதி.." என்றான் குரு.முகில் கசப்பாக சிரித்தான். "எனக்கும் பாவமாதான் இருக்கு.. ஆனா என்ன செய்ய முடியும்.? என் பொண்டாட்டி என்னை மாதிரியே முட்டாளா இருக்கறதை என்னால ஏத்துக்க முடியல.. அவ சூழ்நிலைகளை கிரகிச்சி உண்மைக்கும் பொய்க்கும் இடையில இருக்கற வித்தியாசத்தை கண்டுப்பிடிக்கணும். இப்பவும் நான் அவக்கிட்ட பொய்தான் சொல்லிட்டு இருக்கேன். சும்மா ஒரு செகண்ட் ஒருத்தி வந்து என்னை தொட்டு பேசியதும் அதை நம்பிட்டு என்னை விட்டுட்டு போயிட்டா.. நடுவுல வாழ்ந்த இரண்டு மாசம் என்ன கணக்குல வந்தது.? இவக்கிட்ட சொல்லப்பட்ட பொய்கள் நிறைய முரண்பாடுகளை கொண்டது. அதையெல்லாம் கண்டுபிடிச்சி எதிர் கேள்வி கேட்கணும்.. அப்பதான் அவ முன்னேறினான்னு நான் நம்புவேன்.. அவ அப்படி ஒரு நாளில் வந்து என்னை வெறுக்கட்டும். நான் அன்னைக்கு அவ மன்னிப்பை கேட்டு என்ன வேணாலும் செய்றேன்.. ஆனா அது வரைக்கும் அவ பாவமும் கிடையாது.. எனக்கு புண்ணியமும் கிடையாது.." என்றான்."போடா முட்டாள்.. நீயும்தான் ஏமாந்த.. ஆனா நீ மட்டும் பிறக்கும்போதே புத்திசாலியா பிறந்த மாதிரி பேசுற.." என்று குரு சொல்ல இவன் பெருமூச்சி விட்டான்."ஒவ்வொரு பேரண்ட்ஸ்ம் தனக்கு கிடைக்காத அத்தனை சுகமும் தன் பிள்ளைகளுக்கு கிடைக்கணும்ன்னு நினைப்பாங்க.. அது போலதான் இதுவும்.. என்னவள் என்னை மாதிரி யார்கிட்டயும் ஏமாற கூடாதுன்னு ஆசைப்படுறேன்.." என்று சொன்னவனுக்கு தனது ஏமாற்றத்தை நினைத்து உள்ளம் வலித்தது."உன்கிட்ட அப்புறம் பேசுறேன்.." என்று விட்டு அங்கிருந்து சென்றான் குரு.சிறிது நேரம் கடந்த பிறகு அந்த அறைக்குள் வந்தாள் யதிரா. தனது இருக்கையில் அவள் அமர்ந்த நேரத்தில் அவள் முன் வந்து நின்றான் முகில்."அடுத்த வாரம் நான் போக போற பிசினஸ் டிரிப்ல நீங்களும் வரணும் மிஸ் யதிரா.." என்றான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1106VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN