29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா அதிர்ச்சியோடு முகிலை பார்த்தாள்."நான் ஏன் டிரிப்புக்கு வரணும்.?" என்றாள்."ஏனா நீங்க என்னோட பி‌.ஏ.. நீங்க என் கூட வந்துதான் ஆகணும்.. டிரிப் ஒரு வாரம் இருக்கலாம்.. அதனால்தான் நான் இப்பவே சொல்லிட்டேன்.." என்றவனை கோபமாக பார்த்தாள் அவள்."நான் வர மாட்டேன்னு சொன்னா..?" என்று கேட்டாள்."கொஞ்சமாவது பொறுப்புள்ள ஸ்டாப்பா நடந்துக்கங்க.. உங்களுக்கு சம்பளம் தர கம்பெனி இது.. நியாயமா மனசாட்சிக்கு நேர்மையா உழைக்க பாருங்க.. உங்களை மாதிரியே எல்லோரும் ஒத்துழைப்பு தர மறுத்தா இருக்கற எல்லா கம்பெனியையும் இழுத்துதான் மூடணும்.. அப்புறம் இன்னும் இந்தியா வல்லரசு ஆகலன்னு புலம்பிக்கிட்டுதான் இருக்கணும்.." என்றான் மூக்கு சிவக்க.'எங்கே ஆரம்பிச்சி எங்கே முடிக்கிறாரு இவரு.?' என்று பற்களை கடித்தாள் யதிரா."டிரிப்ன்னா எங்கே.?" என்றவளின் முகத்தை ஆராய்ந்தான் அவன்."ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு சுத்த நாம என்ன ஹனிமூனா போக போறோம்.?" என அவன் கேட்க, யதிரா கடுப்போடு எழுந்து நின்றாள்."தேவையில்லாத வார்த்தைகளை பேசுவதை நிறுத்துறிங்களா.?" என்றாள் எரிச்சலோடு."பின்ன என்ன.? என்னோட எல்லா செட்யூலும் நீங்கதான் பார்த்துக்கிறிங்க.. அப்புறம் என்கிட்ட என்ன ஊர்ன்னு கேட்டா கடுப்பாகாதா.?" என்றவன் "சி டாட்ன்னு ஒரு டாக்குமெண்ட் பைல் உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கேன்.‌. அதுல உள்ள எல்லா வொர்க்கையும் இந்த ஒரு வாரத்துல முடிச்சிடுங்க.." என்றவன் தனது வேலையை பார்க்க சென்றான்."ஒரு வாரம் எப்படி இவரோடு இருக்கறது.?" என புலம்பியவள் தான் பதிவு செய்து வைத்திருக்கும் அவனது தினசரி அலுவல்களை பார்த்தாள். புதிதாக நிறுவனம் ஒன்றை வாங்கும் விசயமாக அவன் ஹைதராபாத் செல்வது புரிந்தது. பக்கத்தில்தானா என்றெண்ணி சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டாள்.சி டாட் பைலை ஓபன் செய்தவளுக்கு நிம்மதி அத்தோடு முடிந்து விட்டது. எக்கச்சக்கமான பைல்களும், அவள் முடிக்க வேண்டிய வேலைகளும் அதில் வரிசையாக இருந்தது."நாலு ஆள் செய்ய வேண்டிய வேலையை என் ஒருத்தியை வச்சே வாங்கிட்டு நாடு, வல்லரசுன்னு வெட்டி சீன் போடுறார் இவர்.." என்று புலம்பினாள். இவளை நிமிர்ந்து பார்த்த முகில் சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.சௌந்தர்யா தனது போனிற்கு வந்த மெஸேஜை பார்த்தாள். எழுபது லட்சம் அவளது பேங்க் அக்கவுண்டில் வரவானதாக காட்டியது அந்த செய்தி.சௌந்தர்யாவிற்கு சந்தோசமாக இருந்தது. நேற்று வரையிலுமே தம்பியின் மீது நம்பிக்கை இல்லாமலேயே இருந்தவளுக்கு இப்போது அவன் மீது அதிக நம்பிக்கை வந்துவிட்டது. தம்பி உண்மையிலேயே மனம் மாறி யதிராவை பிரிந்து வந்ததை இப்போது புரிந்துக் கொண்டவள் உடனே தன் நண்பன் ஒருவனுக்கு ஃபோன் செய்தாள்."சந்த்ரு.. கேம்ப்ளிங் கிளப் ஓபன் பண்ண பணம் கிடைச்சிடுச்சி.." என்றாள்.எதிர் முனையில் இருந்தவன் "உண்மையாவா.? ஆனா நிறைய பணம் வேணுமே, சௌந்தர்யா.." என்றான்."எழுபது லட்சம் இருக்கு.." என்றவளுக்கு சொல்லும்போதே பூரிப்பாக இருந்தது."மறுபடியும் ரிஸ்க் எடுக்கணுமா சௌந்தர்யா.? ஏற்கனவே இப்படிதான் கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாயோடு நீயும் ரூபனும் சேர்ந்து கிளப் ஆரம்பிச்சிங்க.. ஆனா ஆரம்பிச்ச மூணே மாசத்துல எல்லா பணத்தையும் தொலைச்சிட்டிங்க.. இப்ப ரூபன் வேற உனக்கு எதிரியாகிட்டான்.. நீ கிளப் ஆரம்பிச்சே அவனே உன்னை போலிஸ்ல போட்டு தந்துடுவான்.." என்று எச்சரித்தான் அவன்."ரூபன்கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ வாடகைக்கு நல்ல வீடா பாரு.. எல்லாமே ரொம்ப ரகசியமா இருக்கணும்.. இந்த முறை நான் மல்டி மில்லியனர் ஆகதான் போறேன்.. அதை யாராலும் தடுக்க முடியாது.." என்றவள் அவனுடனான இணைப்பை துண்டித்து விட்டு ரூபனுக்கு ஃபோன் செய்தாள்.இரண்டாவது ரிங்கில் ஃபோனை எடுத்தான் அவன்."பேப்.. மறுபடி கிளப் ஆரம்பிக்கலாமா.?" என்றாள் கொஞ்சலோடு."நோ பேப்.. இரண்டரை வருசம் முன்னாடி எக்கச்சக்கமான பணத்தை லாஸ் பண்ணிட்டோம்.. மறுபடியும் கிளப் ஏதும் வேண்டாம்.. அதுவும் இல்லாம இப்ப ரெய்ட் ஓவரா நடக்குது.. ஈஸியா போலிஸ்ல மாட்டிப்போம்.." என்றான் அவன்."கோழையை போல பேசாத பேப்.. நாம நினைச்சா நிறைய சம்பாதிக்க முடியும்.. உன் பயத்தால நம்ம வருங்காலத்தை நீ டீல்ல விடாதே.. நீ இப்படி தயங்கினா நம்ம குழந்தைக்கு வருங்காலமே இருக்காது.." என்றாள் அவள்.அறைக்குள் வந்த நீலாவை கண்டு நெற்றியை தேய்த்த ரூபன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் தான் புதிதாக முயற்சித்து செய்த பூண்டு அல்வாவை அவனிடம் நீட்டினாள்."பூண்டு அல்வா செஞ்சிருக்கேன்ங்க.." என்றாள்.அவன் மறுத்து தலையசைத்தான்."பேப்.. ஏன் பதில் பேச மாட்டேங்கிற.?" என்று எதிர்முனையில் கேட்டாள் சௌந்தர்யா.ரூபன் பதிலை சொல்லாமல் நீலாவை பார்த்தான் "ஒரு அர்ஜென்ட் கால்.. பேசிட்டு வந்துடுறேன்.." என்றான்."ஒரு ஸ்பூன் சாப்பிட்டு போங்க.." என்ற நீலா ஸ்பூனில் இருந்த அல்வாவை அவன் வாயில் ஊட்டினாள்.ஒரு வாய் அல்வாவோடு நாற்காலியை விட்டு எழுந்தான் ரூபன். அறையை விட்டு வெளியே செல்வதாக கை சைகை காட்டி விட்டு வெளியே நடந்தான் அவன்.மாடிக்கு செல்லும் படியில் ஏறினான்."பேப்.. என் கூட பேச கூட உனக்கு பிடிக்கலையா.?" என்று கேட்ட சௌந்தர்யா குரலில் சிறு அழுகை கலந்திருந்தது.மொட்டை மாடிக்கு வந்த ரூபன் தன் வாயில் இருந்த அல்வாவை கீழே துப்பினான்."என் வாயில் பூண்டு அல்வா இருந்தது பேப்.. என் பொண்டாட்டிக்கு வேற வேல இல்லன்னு தினம் இப்படி எதையாவது செஞ்சி என் உயிரை எடுக்கறா.. எல்லாம் என் தலைவிதி.. அத்தனையும் உன்னால வந்தது. குற்ற உணர்வு கொல்லுதுன்னு சொல்லி பிரிஞ்சி போயிட்ட. ஐ ஹேட் ஹேர்.." என்றான் எரிச்சலோடு."பேப்.. இப்படி பேசாதே.. அவளோட அம்மா இறந்த பிறகு மொத்த சொத்தும் அவளுக்குதான் வர போகுது.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க பேப்.." என்றாள் சௌந்தர்யா."அட்ஜஸ்ட் பண்ணி தொலைக்கிறேன்.. ஆனா நீ இப்படி நம்ம குழந்தைன்னு பேசிட்டு இருக்காத.. உன் புருசன் காதுல விழுந்தா அவன் எதாவது சந்தேகப்படுவான்.. ஏற்கனவே அவனுக்கும் எனக்கும் கொஞ்சமும் செட் ஆகாது.." என்றவன் அவள் போன் செய்ததன் காரணம் நினைவிற்கு வந்ததும் "கிளப் ஆரம்பிக்க நம்மகிட்ட பணம் ஏதும் இல்ல சௌ.." என்றான்."ஐ ஹேவ்.. அதுவும் எழுபது லட்சம்.." என்று சந்தோசத்தில் கூக்குரலிட்டாள் சௌந்தர்யா."அது பத்தாது பேப்.. ஒரு சுத்துக்கு கூட வராது.. இரண்டரை கோடியே பத்தாம போய்தான் மொத்தமா இழந்தோம்.. மறந்துட்டியா.? அது சரி உனக்கேது எழுபது லட்சம்.?" என்றான் சந்தேகமாக."என் குண்டு தம்பி வருமான வரித்துறைக்கிட்ட இருந்து கணக்கு காட்டாம இருக்க இதை என் அக்கவுண்ட்க்கு மாத்தி விட்டுருக்கான்.. அவன் இப்போதைக்கு இரண்டு மூணு வருசத்துக்கு இந்த பணத்தை யூஸ் பண்ண போறது இல்லையாம்.. அது மட்டுமில்லாம இனி மாசா மாசம் இப்படி பணத்தை என் அக்கவுண்டுக்குதான் மாத்தி விட போறான்.. நாம இதை யூஸ் பண்றதுதான் புத்திசாலித்தனம்.." என்றாள் சௌந்தர்யா.ரூபன் யோசித்தான். "நாம ஏன் என் மதர் இன் லா சாகுற வரைக்கும் வெயிட் பண்ண கூடாது.?" என்றான்."பேப்.. ஐ காண்ட் வெயிட்.. இப்ப நீ வந்தாலும் வரலனாலும் நான் கிளப் ஓபன் பண்ணதான் போறேன்.. நம்ம கிளப் பிரெண்ட்ஸ் எல்லோரும் நீயும் நானும் எதிரின்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு நம்ம லவ்வை ப்ரூஃப் பண்ணவாவது நீ என்னோடு சேர்ந்து கிளப் ஓபன் பண்ணுவன்னு நினைச்சேன்.. உனக்குன்னு தனி லைஃப் இருந்தா இனி நான் எப்போதும் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.." என்றவள் அழுதபடி ஃபோனை வைத்தாள்.ரூபன் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். (புகைப்பிடித்தல் அதை பிடிக்கறவங்களை விட பக்கத்துல இருப்பவர்களே ரொம்ப கேடு. அது மட்டுமல்ல இவங்க இரண்டு கேரக்டர்ஸை போல அடுத்தவங்களை கெடுத்து வாழ்வதும் கேடுதான்..)புகையை இழுத்தவன் சௌந்தர்யாவுக்கு ஃபோன் செய்தான்‌. அவள் அழுததை இவனால் தாங்கி கொள்ள முடியவில்லை."ஹலோ.. நீ ஏன் எனக்கு மறுபடியும் ஃபோன் பண்ற.? ஐ ஹேட் யூ, யூ நோ தட்.." என்றவள் இந்த பக்கம் கண்களை கசக்கினாள்."சாரி பேப்.. மறுபடியும் ரிஸ்க் எடுக்கணுமான்னு யோசிச்சேன்.. நாளைக்கு எல்.எம் கிளப்க்கு வா. நேர்ல பேசிக்கலாம்.." என்றவன் ஃபோன் அழைப்பை துண்டித்து கொண்டு பயன்படுத்தி முடித்த சிகரெட்டை எறிந்துவிட்டு கீழே நடந்தான்."அல்வா எப்படி இருந்ததுங்க.?" முக மலர்ச்சியோடு கேட்டாள் நீலா."செம ஸ்வீட்ம்மா.." என்றவன் அவளது கன்னத்தை தட்டி விட்டு நடந்தான். அவனது பாராட்டில் பூரித்து போன நீலா தனது ஒரே அரண்மனையான சமையற்கட்டிற்கு சென்றாள்.தனது வேலையில் மூழ்கிப்போயிருந்த இருந்த முகில் தனது ஃபோன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தான். கே.கே அழைத்திருந்தாள்.இருக்கையிலிருந்து எழுந்தவன் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.யதிரா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தனது பணியில் மூழ்கினாள். வேலை செய்வது கூட அவளுக்கு கடினமாக இருக்கவில்லை. இவ்வளவு வேலை வரிசையில் காத்திருக்கிறது என்ற எண்ணம்தான் அவளின் மனதை வாட்டியது.தனது அறையை விட்டு வெளியே வந்ததும் ஃபோனை காதில் வைத்தான் முகில். "சொல்லு கே.கே.. நான் உன் பிரெண்டை டிரிப்க்கு கூட்டி போறது நியாயம் இல்லன்னு சொல்ல போறியா.?" என்றான்."அது இல்ல.. உனக்கு நான் இப்ப ஒரு ஆடியோ அனுப்பி வைக்கிறேன்.. கேட்டு பாரு.. எந்தவிதமான எமோஷனல் மோடுக்கும் போகாதே.. இது நமக்கு கிடைச்ச சாம்பிள் மட்டும்தான்.." என்றவள் அழைப்பை துண்டித்துக் கொண்டாள். கே.கேவின் வர்ணனையை புரிந்துக் கொள்ள முடியாமல் நின்றிருந்த முகிலின் போனுக்கு வந்து சேர்ந்தது ஒரு ஆடியோ ஃபைல்.சௌந்தர்யா அவளது நண்பனோடும், ரூபனோடும் பேசியதை கேட்டவனுக்கு ஒவ்வொரு வார்த்தையை கேட்கும்போதும் அதிர்ச்சியாக இருந்தது.ஆடியோவை கேட்டு முடித்ததும் அவசரமாக கே.கேவிற்கு ஃபோன் செய்தான்."உன் அக்கா ஃபோனை ஹேக் பண்ணதுல கிடைச்ச முதல் உருப்படியான விசயம் இதுதான்.." என்று கசந்த குரலில் சொன்னாள் கே.கே."கே.கே.. இவங்க செய்றது அத்தனையும் தப்பு.. அவன் பணத்துக்காக இரண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கான்.. இவ இரண்டாவது புருசனோடு வாழ்ந்தபடியே அவனுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கா.. இவனை மாதிரி ஆளை மீட் பண்ணதுக்கும், இவளை போல ஒருத்தியோடு பிறந்ததுக்கும் நான்தான் அவமானமா நினைக்கணும் போல.." என்றான் ஆத்திரத்தோடு."புருசனுக்கு துரோகம் செய்றதும், பணத்துக்காக பொண்டாட்டி கட்டிக்கறதும் சிலருக்கு பேஷனாவே மாறிட்டுச்சி.. அது அவங்க உரிமை.. அவங்களை பத்தி விமர்சனம் செய்ய நமக்கு உரிமை கிடையாது.. நாம நம்ம வேலையை பார்க்கலாம்.. என் ப்ளான் நல்லா வொர்க் அவுட் ஆகுது.. நீ பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணதும் உன் அக்காவோட சுயரூபம் வெளியே வர ஆரம்பிச்சிடுச்சி.. அவங்க இரண்டு பேரையும் கொலை கேஸ்ல உள்ளே அனுப்பும் முன்னாடி கேம்ப்ளிங் க்ளப் நடத்துறதுக்காக உள்ளே அனுப்பிடலாம்.. அவங்க இரண்டு பேரும் மனுசங்களோடு மனுசங்களா வெளியே நடமாடுவதை பார்க்கும்போது ரொம்ப கடுப்பா இருக்கு எனக்கு.." என்றாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1085VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN