31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீலா காப்பியோடு திரும்பி வந்தாள். அவள் தந்த காப்பியை வாங்கி பருகினாள் கே.கே.நீலாவின் முகத்தை பார்க்கும் போது கே.கேவிற்கு ரூபன் மீது கோபம் கோபமாக வந்தது. அப்பாவி தனத்தையே இயல்பாய் கொண்டிருக்கும் இவளுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது என யோசித்தாள். 'அவனுக்கு மனசாட்சிதான் சுத்தமாக இல்லையே' என்று அதன்பிறகே புரிந்துக் கொண்டாள்."இவ்வளவு தூரம் வந்ததுக்கு அவளோட ஃபோன் நம்பராவது கொடுங்க.." என்று காப்பியை குடித்து முடித்துவிட்டு கேட்டாள் கே.கே.நீலா ஓடிச்சென்று தனது ஃபோனை எடுத்து வந்தாள். யதிராவின் ஃபோன் நம்பரை சொன்னாள். கே.கே அவள் சொன்ன நம்பரை தன் போனில் பதிந்துக் கொண்டாள்."தேங்க்ஸ்.." என்றபடி எழுந்தவள் தனது பேக்கை கையில் எடுத்தாள்."இருங்க.. சாப்பிட்டு போவிங்க.." என்றாள் நீலா.அவளை பார்த்து புன்னகைத்தாள் கே.கே. "பரவால்லைங்க.. உங்க காப்பியே போதும்.. நல்ல டேஸ்டா இருக்கு.." என்று பாராட்டி விட்டு வெளியே நடந்தாள்.மாலையில் வீடு வந்த முகிலின் முன் வந்து நின்றாள் சுபா. "உங்க அக்கா ஒரு கேம்ப்ளர்.. இதை நீங்க நம்பணும்ன்னுதான் இதை உங்க நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன்.." என்றவள் முகிலின் நம்பருக்கு சில போட்டோக்களை அனுப்பி வைத்தாள்.முகில் தன் ஃபோனை கையில் கூட எடுக்கவில்லை. ஒய்யாரமாக நின்றபடி அவளை நக்கலாக பார்த்தான். "என் அக்காவை கெட்டவன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.? இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சதுன்னா நீ இந்த வீட்டுல இருந்து துரத்தியடிக்கபடுவ.. தெரியும்தானே.?" என்றான் புருவம் நெரித்து. அவனது பார்வைக்கும் அவனது கேள்விக்கும் அவள் சிறிதும் பயப்படவில்லை."யாராலும் என்னை இந்த வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியாது.. உங்களுக்கு புத்தி வரணும்ன்னுதான் நான் இதை உங்க போனுக்கு அனுப்பி வச்சேன்.. சும்மா உங்க அக்காவுக்கே எல்லா காசையும் செலவு பண்ணிட்டு இருக்காதிங்க.. உங்களை எப்படி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எனக்கு தெரியும்.. கல்யாணம் நடக்கும் முன்னால் உங்க பிஸ்னெஸை பெரிசாக்கும் வழியை பாருங்க.. நாளைக்கு உங்க அக்கா வந்து நம்ம குடும்பத்தை ரன் பண்ண போறதில்ல.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்."உன்னையெல்லாம் எவனாவது மெண்டல் கேஸ்தான் கல்யாணம் பண்ணுவான்.. மேரேஜ்க்கு முன்னாடியே இத்தனை ரூல்ஸ் போடுறவ கல்யாணத்துக்கு அப்புறம் பணத்துக்காக என்னை அடமானம் வைக்கவும் தயங்க மாட்ட.. புருசனை பணம் சம்பாதிச்சி மட்டுமே தர மிஷினா நினைக்கற உனக்கெல்லாம் எவன் புருசனா வந்தாலும் அது அவனோட கெட்ட காலம்.." என்று முனகியவன் அவள் அனுப்பி வைத்தது என்னவென்று பார்த்தான்.சௌந்தர்யா தனது நண்பர்களோடு அனுப்பி கொண்ட மெஸேஜ் சிலவற்றை போட்டோ எடுத்து வைத்து அதைதான் இவனுக்கு அனுப்பி இருக்கிறாள் சுபா. 'இதையெல்லாம் கே.கேவே ஈஸியா சேகரிப்பாளே..' என்று நினைத்தவன் "அக்கா.." என்று குரல் கொடுத்தான்."ஏன்டா..?" என்றபடி படியேறி வந்தாள் அவள். இவனது அறையின் கதவை திறந்து உள்ளே வந்தவள் "எதுக்குடா கூப்பிட்ட.?" என்றாள்."இந்த சுபா பொண்ணை ஏன் வீட்டுல வச்சிருக்க.. ரொம்ப நியூசென்ஸா இருக்கா.." என்றான் எரிச்சல் குரலில்."சின்ன பொண்ணுடா அவ.. அவளை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. கொஞ்ச நாளுல அவளே எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு அதுகேத்த மாதிரி நடந்துப்பா.. இன்னும் கொஞ்ச நாளுல அவளுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கேன் நான்.. பொருத்தம் கூட பத்தும் பொருந்தி போவுது.. உங்க ஜாதகம் பொருந்தியது போல வேற ஏதும் பொருந்தியது இல்லன்னு நான் பார்த்த எல்லா ஜோசியக்காரங்களும் சொல்றாங்க.." என்றாள்.முகிலுக்கு ருத்ர தாண்டவம் ஆட வேண்டும் போல இருந்தது. சிரமப்பட்டு தன் முகத்தில் கோபத்தை கொண்டு வராமல் இருந்தான்."அவ ஏதோ சரி இல்லக்கா.. உன்னை பத்தியே தப்பா சொல்றா.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சௌந்தர்யா."நீ கேம் விளையாடுற ஆள்ன்னு உளருறா.. உன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டு வைக்க கூடாதுன்னு மிரட்டலா சொல்றா.. உன்னை பத்தி அவ தப்பு தப்பாவே சொல்றாக்கா.." என்றவனை நம்பாமல் பார்த்தாள் அவள்.அவள் கேள்வியை கேட்கும் முன் அவனே தன் ஃபோனை அவளிடம் காட்டினான். "இங்கே பாரு.. அவ சொன்னதை நான் நம்பலன்னு அவளே எனக்கு இந்த மெஸேஜை அனுப்பி வச்சா.." என்றான்.அவனது ஃபோனை படக்கென பிடுங்கி பார்த்தாள் சௌந்தர்யா. அவன் சொன்னது அத்தனையும் உண்மை என்பது போல ஆதாரமாக இருந்தது அந்த செய்தி. ஆத்திரத்தோடு போனை அவனிடம் தந்துவிட்டு சுபாவை தேடி போனாள் அவள்."சுபா.." சௌந்தர்யாவின் கத்தலில் தனது ஃபோனை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து நின்றாள் அவள்."என்ன அண்ணி.?" என்றாள். கேள்வி கேட்டவளின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை தந்தாள் சௌந்தர்யா."என்னை பத்தி என் தம்பிக்கிட்ட என்னடி சொன்ன நீ.?" பற்களை அரைத்தபடி கேட்டாள்.அவள் அறைந்ததின் காரணம் இப்போது சுபாவுக்கு புரிந்து போனது. எரியும் கன்னத்தை ஒரு கையால் பற்றியவள் மறுகையால் சௌந்தர்யாவிற்கு அறை ஒன்றை தந்தாள்.சௌந்தர்யா அறைப்பட்ட தன் கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்."என்னை நீ யாருன்னு நினைச்ச.? என்னை அறையற அளவுக்கு நீ என்ன அவ்வளவு யோக்கியமா.? நீ ஒரு கேம்ப்ளர்ன்னு உன் தம்பிக்கிட்ட நான் சொன்னதையே உன்னால பொறுத்துக்க முடியலையோ.. உன்னோட மொத்த வண்டவாளத்தையும் நான் அவன்கிட்ட சொன்னா உன் கதி என்ன ஆகும் தெரியுமா.?" என்று கேட்டவளின் குரலில் நக்கல் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அதை கண்டு சௌந்தர்யாவுக்கு ஆத்திரம்தான் அதிகமானது."நீ செஞ்ச எல்லாத்தையும் நான் அவன்கிட்ட சொன்னா அவனே உன் மேல கேஸ் தந்து உன்னை ஜெயில்ல போட்டுடுவான்.. தெரியுமில்ல.? உனக்கு இப்ப இருக்கற ஒரே ஆப்சன் அவன் உன் அக்கவுண்டுக்கு போடுற பணத்தையெல்லாம் அப்படியே என் அக்கவுண்டுக்கு மாத்தி விடுறதுதான்.. இல்லன்னா நீ ஜெயில்ல.. அவனோட பணம் மொத்தமும் என் கையில.. இதுதான் நடக்கும்.." என்று அவள் சொல்ல கே.கே ஷேர் செய்திருந்த வீடியோ லைவ்வை பார்த்துக் கொண்டிருந்த முகில் திரையில் இருந்த தன் அக்காவையும் சுபாவையும் ஆச்சரியத்தோடு பார்த்தான்."இதுக்கு இரண்டும் ஒன்னுக்கொன்னு சலச்சது இல்ல போல.." என்று கிண்டலடித்தாள் கே.கே.தனது காதில் இருந்த இயர்போனை அட்ஜஸ்ட் செய்துக் கொண்ட முகில் "இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டு சாகட்டும்.." என்றான் வெறுப்பாக."இல்ல முகி.. இதுல வேற ஏதோ இருக்கு.. சுபா இந்த அளவுக்கு தைரியமா மிரட்டுறான்னா அவக்கிட்ட வேற ஏதோ தடயம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்றாள் கே.கே.முகிலும் அதை யோசித்து பார்த்தான். "யதி அப்பா இறந்ததுக்கான ஆதாரம் ஏதாவது இவக்கிட்ட இருக்குமோ.?" என்றான் சந்தேகமாக."எனக்கும் நிச்சயமா தெரியல.. ஆனா ஏதோ இருக்குன்னு தெரியுது.. அதை வெளிக்கொண்டு வருவது இப்ப உன் கையில்தான் இருக்கு.. நீ பாசமா பேசுவியோ இல்ல மிரட்டலா பேசுவியோ ஆனா அவ வச்சிருக்கும் ஆதாரம் நமக்கு கிடைச்சே ஆகணும்.. நாட்கள் தள்ளி தள்ளி போக இதுல இறங்கி இருக்கற நமக்குதான் டேஞ்சர் வந்து சேரும். அதனால இதை சீக்கிரமா முடிக்கிற வழியை பாரு.." என்றாள் அவள்."என்னால முடிஞ்ச எல்லா முயற்சியையும் செய்றேன் கே.கே.." என்றவன் திரையை கவனித்தான்."மிரட்டுறியா சுபா.? உன்னை நம்பி வீட்டுக்குள்ள சேர்த்ததுக்கு நீ காட்டுற நன்றிக்கடன் இதுதானா.?" வருத்த குரலில் கேட்ட சௌந்தர்யாவின் நெஞ்செல்லாம் விஷம் என்பதை சுபாவும் புரிந்தே வைத்திருந்தாள்."உன் நடிப்புக்கு நான் மயங்க மாட்டேன்.. என் அக்காவுக்கு நன்றிக்கடன் செலுத்ததான் நீ என்னை உன் வீட்டுக்கு கூட்டி வந்திருக்க.. அவ மட்டும் தன் வாயை திறந்தான்னா உன் தம்பி உன்னை என்ன செய்வான்னு தெரியுமில்ல.?" என அவள் உதடு சுழித்து கேட்க சௌந்தர்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தது."என்னையே மிரட்டற இல்ல..? உன்னை என் கூட பிறந்தவளா பார்த்ததுக்கு எனக்கு நல்ல பரிசு கிடைச்சிடுச்சி.." என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.சுபா சிரித்தாள். "நல்லாதான் நடிக்கற.. நீ உன் கூட பிறந்தவனுக்கே ஒன்னுக்கு இரண்டு முறை துரோகம் பண்ணவ.. நான் எல்லாம் உன் லிஸ்ட்ல எந்த இடத்துல இருப்பேன்னு எனக்கே தெரியும்.." என்றவள் கட்டிலில் அமர்ந்தாள்."உன் பேச்சுக்கும் அழுகைக்கும் மயங்கற ஆள் நான் இல்ல.. நீ இங்கே உருட்டுறதை விட்டுட்டு போய் உன் தம்பிக்கும் எனக்கும் நடுவுல கனெக்சனை தர வழியை பாரு.." என்று விட்டு தனது ஃபோனை நோண்ட ஆரம்பித்து விட்டாள் சுபா.சௌந்தர்யா அவளை ஆத்திரத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். தனது ஃபோனை எடுத்துக் கொண்டு மாடிக்கு கிளம்பினாள். ரூபனுக்கு ஃபோன் செய்தாள்."பேப்.. நான் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.." என்றாள் அழுகை குரலில்."என்ன ஆச்சி பேபி.?" அவன் பதட்டமாக கேட்டான்."முகி.. உன் அக்கா ஃபோன்ல இருந்து இப்ப கால் போயிட்டு இருக்கு.. இந்த லைனை கட் பண்ணு.. நான் சீக்கிரம் அதை கனெக்ட் பண்றேன்.." என்று முகிலிடம் சொன்ன கே.கே இணைப்பை மாற்றினாள். சௌந்தர்யா ஃபோன் அழைப்பை டிரேஸ் செய்தாள். ஆனால் அவள் சௌந்தர்யா போனை ஒட்டுக் கேட்கும் முன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது."இந்த கால் வேஸ்டா போச்சி.." என சலித்துக் கொண்டாள்."விடு கே.கே.. இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு மாட்ட போறா.." என சொல்லிவிட்டு போனை வைத்த முகில் அப்போது அறிந்திருக்க மாட்டான் சௌந்தர்யாவின் அடுத்த திட்டம் எவ்வளவு கொடூரமானது என்று."சரி.. நான் அப்புறம் பேசுறேன் முகி.. என் கேர்ள் பிரெண்ட்க்கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ற நேரம் வந்துடுச்சி.." என்றாள் கே.கே."அவ என் கேர்ள் பிரெண்ட்.." என முகில் சொல்ல சொல்லவே அந்த இணைப்பை துண்டித்துக் கொண்டாள் கே.கே.சிந்தனையோடு சமையலறையில் நின்றுக் கொண்டிருந்த யதிராவின் பின்னால் வந்து நின்று அவளை அணைத்துக் கொண்டாள் கே.கே."என்ன பேபி யோசனை.?" என்றாள் அவளது கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து தேய்த்தபடி."நான் ஹைதராபாத் போகணும் கே.கே.. அதுவும் ஒரு வாரம்.. இதை விட முக்கியமா இந்த ஒரு வாரமும் நான் என் ஹஸ்பண்டோடு ஒன்னா இருக்கணும்.." என்றாள் கவலையோடு.கே.கே அவளை சோகத்தோடு பார்த்தாள். "அவன் உன் ஹஸ்பண்ட் இல்ல.. எக்ஸ் ஹஸ்பண்ட்.." என்று நினைவுப்படுத்தினாள்."ஏதோ ஒன்னு போ.. நான் என்ன பண்றதுன்னு கவலையில இருக்கேன். இந்த டிரிப் கேன்சல் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.." என்றாள் வருத்தமாக.ஆனால் அவளும் அப்போது நினைக்கவில்லை அந்த டிரிப் கேன்சல் ஆக போகிறது என்று.மறுநாள் மதிய வேளையில் சுபா கார் ஆக்ஸிடென்டில் இறந்து போனாள் என்ற செய்தி வருமென அப்போது கே.கேவும் கூட யூகிக்கவில்லை.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 1072VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN