34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மேக்னாவை கண்டதும் யதிராவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. அனிச்சையாக அவளின் வலக்கரம் அவளது அடிவயிற்றை நோக்கி சென்றது."ப்ளீஸ் டாக்டர். என்னை விட்டுடுங்க. நான் எங்கேயாவது போய் என் குழந்தையோடு பிழைச்சிக்கிறேன்.." மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே மருத்துவரிடம் தன் குழந்தையை காப்பாற்றிக் கொள்வதற்காக கதறியது யதிராவுக்கு இப்போது நினைவில் வந்தது."சுபா.. என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படிடி மனசு வந்துச்சி.?" மேக்னா கதறியபடி வந்து சௌந்தர்யாவை அணைத்துக் கொண்டாள்.சுபாவை எங்கு பார்த்தோம் என்பதும் கூட இப்போது நன்றாக நினைவிள்கு வந்தது. அன்று மருத்துவமனையில் மேக்னாவின் மேஜையில் இருந்த புகைப்படத்தில் சுபாவை பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவளுக்கு குழப்பம்தான் உண்டானது.மேக்னாவும் சௌந்தர்யாவும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி அழுவதை வெறித்து பார்த்தாள் யதிரா.'இவ சுபாவோட அக்கா.. சுபா முகிலுக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணு.. அவளோட அக்கா என் குழந்தையை கொன்னவ.. என்னை சுத்தி இங்கே என்ன நடக்குது.? கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு.. எனக்கு தெரியாம ஏதோ நடக்குது. என்னை சுத்தி யாரோ வலை விரிச்ச மாதிரி இருக்கு..' யதிராவால் நிற்க கூட முடியாத அளவுக்கு குழப்பம் மட்டுமே மனதினில் இருந்தது.மேக்னாவின் அழு குரல் கேட்டு முகில் தன் அறையிலிருந்து வெளியே வந்தான். மேக்னாவை கண்டதும் ஆத்திரம் தலைக்கேறியது அவனுக்கு. பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கியவன் படிகளில் இறங்கி வந்தான். மேக்னாவை வெறுப்பாக பார்த்திருந்தவன் கீழே வந்த பிறகே யதிராவையும் மற்றவர்களையும் கண்டான்.'இவங்க ஏன் இங்கே வந்திருக்காங்க.? யதிக்கு இங்கே என்ன வேலை.?' என யோசித்து குழம்பியவன் அவர்களின் அருகே வந்தான்."எல்லோரும் இங்கே என்ன பண்றிங்க.?" என்றான்."துக்கம் தெரிவிக்க வந்தோம் சார்.." என்றாள் ஓவியா. முகில் குழம்பி போனான்."உங்க பியான்சி இறந்துட்டாங்களே சார்.. அதனால்தான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தோம்.." என்று வர்சன் சொன்ன பிறகே விசயத்தை புரிந்துக் கொண்டான் முகில்.பியான்சி என்ற வார்த்தையை கேட்டதும் யதிராவுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பற்றி எரிந்தது. மனம் நெருப்பாக வெந்தது. இதுவரையிலும் இல்லாத ஒரு கோபத்தை தனக்குள் உணர்ந்தாள் அவள். இதுவரை காதல் தோற்று போனதை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது மேக்னாவை கண்டதும் இழந்த குழந்தையே மனதின் முழு இடத்தையும் பிடித்திருந்தது. மனைவியாய் காதலியாய் தோற்க்கையில் வராத ஒரு கோபம் தாயாய் தோற்கையில் அதிகமாய் வந்தது.அவளின் உள்ளத்தில் கொதித்த எரிமலையை அங்கிருந்த யாருமே புரிந்துக் கொள்ளவில்லை.தான் பலவீனமாய் இருந்ததால்தானே இப்படி ஒரு இழப்பை சந்திக்க நேர்ந்தது என்ற எண்ணம் சாட்டையடியாய் வந்து தாக்கியது அவளை. மூன்று மாதங்களுக்கு முன்னால் வரையிலும் தான் எப்படி இருந்தோம் என்பதை யோசித்திராதவள் இப்போது தனது பலவீனத்தை தெரிந்துக் கொண்டாள்.முன்பு சொன்னாலும் புரிந்திருக்காத விசயம் இது‌. ஆனால் இந்த சில நாட்களில் அனுபவித்த துரோகமும், வேதனையும், வலியும் அவளை நன்றாக மெருகேற்றி விட்டிருந்தது. தவறை சுலபமாக புரிந்துக் கொள்ள முடிந்தது அவளால். அவள் மீது இருந்த தவறுகளை அவளது மனம் பட்டியலிட ஆரம்பித்தது‌. 'நீ எவ்வளவு பெரிய முட்டாள்.. நீ எந்த அளவுக்கு பலவீனமாவன்னு இப்போதாவது புரிஞ்சிக்க யதிரா..' என்று கத்தியது அவளது மனம். கால்கள் மடங்கி தரையில் மண்டியிட இருந்தது. கோபத்தால் கலங்கியது விழிகள் இரண்டும். தான் யார் தன் தவறென்ன என்று புரிந்துக் கொண்டவளுக்கு ஓவென கதறி கத்தியழ தோன்றியது.யதிராவை விசித்திரமாக பார்த்தான் முகில். அவளது முகத்தில் இருந்த கோபமும் வேதனையும் முகிலுக்கு குழப்பத்தை தந்தன."யதிரா.." என்றான் அவளின் கரத்தை பற்றியபடி.தூக்கத்திலிருந்து விழித்தவள் போல உடல் சிலிர்த்து நிமிர்ந்து பார்த்தாள் யதிரா. முகில் அவள் முன்னால் நின்றுக் கொண்டிருந்தான். அவனின் பின்னால் மேக்னாவும் சௌந்தர்யாவும் சூழ்நிலை மறந்து அழுதுக் கொண்டிருந்தனர்.யதிரா வெடுக்கென தன் கரத்தை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். "நீங்க ஒருத்தர் சரியா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டு இருக்காது.. நம்பி வந்தவளை நடு ஆத்துல விட்டுட்டு போனவர் உங்களை நம்பி மறுபடியும் வாழ வந்த என்னை செருப்பால அடிச்சிக்கிட்டாலும் தப்பே இல்லை.." என மெல்லிய குரலில் முனகினாள்.அவள் சொன்னது முகில் காதுகளில் மட்டும்தான் விழுந்தது. அவள் சொன்னது கேட்டு அவனுக்கு குழப்பமும் வியப்புமாக இருந்தது. அவளின் இந்த திடீர் மாற்றம் அவனுக்கு புரியவில்லை.முகில் பற்றியிருந்த தன் கரத்தை வெடுக்கென பின்னால் இழுத்துக் கொண்டாள் யதிரா."உங்க வருங்கால மனைவி இறந்ததுக்கு என்னோட ஆழ்ந்த இரங்கல்கள்.." என்றவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள். அவளது குரல் அவளது குரலாகவே தோன்றவில்லை முகிலுக்கு. ஏதோ ஒரு வலி வேதனையை தாண்டி ஆத்திரத்தை உணர்ந்தான் அவன்.முகில் தன் அக்காவையும் மேக்னாவையும் திரும்பி பார்த்தான். பின்னர் யதிராவை பின்தொடர்ந்து ஓடினான்.சுந்தரியும் மற்றவர்களும் முகிலை விந்தையாக பார்த்தனர்."போகலாமா நாம.?" என்று கேட்டு விட்டு முன்னால் நடந்தாள் வேணி. மற்றவர்கள் அவளை தொடர்ந்து நடந்தனர்.அந்த தெருவின் வரிசையில் இருந்த கடைசி வீட்டை தாண்டி நடந்த யதிரா அடுத்து வந்த திருப்பத்தில் திரும்பினாள். முகில் ஓடி வந்து அவளின் கையை பற்றி நிறுத்தினான்."உனக்கு என்ன ஆச்சி.? ஏன் ரொம்ப டிரெஸ்ஸா இருக்க.? உடம்புக்கு ஏதும் சரியில்லையா.?" என கேட்டவன் அவளின் நெற்றியில் கை வைக்க முயன்றான். யதிரா வேகமாக பின்னால் நகர்ந்து நின்றாள்."ஏன்.? உங்களுக்கு என்ன வந்தது.? எனக்கு காய்ச்சல் வந்தா என்ன.? எனக்கு கருமாதியே பண்ணாதான் உங்களுக்கு என்ன‌.?" என்றவளின் கோபத்தை முகிலால் புரிந்துக் கொள்ள முடியவில்லை."உனக்கு என்ன ஆச்சி.?" என்றான் மீண்டும்.யதிரா கண்களை மூடியபடி பற்களை கடித்தாள். தன் இரு கை விரல்களையும் இறுக்கியபடி கைகளை மேலே உயர்த்தினாள்.அவளது மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் சிந்தியது."யதி.." முகில் கனிவோடு அழைத்தான். யதிரா மறுத்து தலையசைத்தாள்.கண்களை திறந்து அவனை பார்த்தாள். "ரொம்ப நன்றி.." என்றாள்.அவன் புரியாமல் பார்த்தான். "உங்களோட காதல் நாடகத்தை இந்த முறை சட்டுன்னு முடிச்சிக்கிட்டதுக்கு.." என்றாள் அவள். முகில் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்."உங்களோடு நான் வாழ்ந்த மொத்த வாழ்க்கையும் பொய்.. என்னோடு நீங்க பேசிய அத்தனை வார்த்தைகளும் பொய்.. இதை நான் இன்னைக்குதான் புரிஞ்சிக்கிட்டேன்.. நான் இந்த மொத்த உலகத்தையும் வெறுக்கிறேன். என் குடும்பத்தையும் உங்க குடும்பத்தையும் அடியோடு வெறுக்கிறேன்.. இது எல்லாத்தையும் தாண்டி உங்களை என் மனசோட அடியாழத்துல இருந்து வெறுக்கிறேன்.. உங்களோட வாழ்ந்ததுக்கு பதிலா விபச்சாரம் பண்ணி இருக்கலாம்ன்னு தோணுது.. உங்களை போல.." அவள் மேலும் பேசும் முன் அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான் அவன்."என்னடி வார்த்தை பேசி பழகற.?" என்றான் கோபத்தோடு அவன் தன் தலை முடியை கோதியபடியே.அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனாலும் யதிரா சிரித்தாள். அவளது சிரிப்பின் பின்னால் இருந்த வேதனையை அறிந்துக் கொள்ள முடிந்த முகிலால் அந்த வேதனையின் காரணத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை."நான் என்ன பொய்யா சொன்னேன்‌.? விபச்சாரிக்கிட்ட வருபவன் அவனோட வேலை முடிஞ்சதும் போயிடுவான்.. அது போலதானே நீங்களும்.. எப்ப வேணாலும் விட்டு போவிங்க.. கல்யாணம், காதல், கணவன் மனைவி இதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கா உங்ககிட்ட.? இல்லையே.! எப்ப வேணாலும் என்னை கை விட்டு போறவர் நீங்க.. உங்களை நம்பி ஒன்னுக்கு இரண்டு முறை உங்களோடு வாழ வந்தேனே.! என்னை மாதிரி ஒரு முட்டாளை ஜல்லடை போட்டு தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.." என்றாள்.அவன் வியந்து பார்த்து நின்றுக் கொண்டிருந்தான்."இப்ப கூட நான் ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்.? ஏனா நான் அந்த அளவுக்கு பைத்தியம்.." என்று தன் நெற்றியில் அடித்துக் கொண்டவள் அவன் பார்த்திருக்கும்போதே அங்கிருந்து விடுவிடுவென நடந்து போனாள்.அவன் எதிர்ப்பார்த்த கேள்விகளை அவள் கேட்டு விட்டாள். அதுவே அவனுக்கு இன்ப அதிர்ச்சியை தந்து விட்டது. ஆனால் அவளின் கோபம் தாண்டிய வெறுப்பையும், அவளின் கண்ணீர் தாண்டிய வேதனையையும்தான் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.யதிரா தன் கண்களை துடைத்தபடி தூரத்தில் நடந்து செல்வதை பார்த்தபடி நின்றவன் தன் குழப்பத்தை தீர்க்க கே.கேவிற்கு போன் செய்ய நினைத்து தன் பாக்கெட்டில் கையை விட்டான். ஃபோன் பாக்கெட்டில் இல்லை. அறையில் விட்டு வந்ததை புரிந்துக் கொண்டவன் வீட்டிற்கு செல்ல திரும்பினான்.சுந்தரியும் மற்றவர்களும் அவனை பார்த்தபடி எதிரில் நின்றிருந்தனர். முகில் அவர்களை நோக்கி நடந்தான். அவர்கள் அவனிடம் நிறைய கேள்விகள் கேட்க நினைத்தார்கள். ஆனால் யாருக்கும் தைரியம் வரவில்லை. அவன் அவர்களை பார்த்தபடியே அவர்களை தாண்டி சென்றான். அவன் தன் வீட்டிற்குள் நுழைவதை பார்த்தபடி நின்றார்கள் இவர்கள்."இவங்க இரண்டு பேரும் யாரும்.?" என்றாள் சுந்தரி அதிர்ச்சியோடு."ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப், லவ்வர்ஸும்.." என்றான் வர்சன்.அனைவரும் அவனை விந்தையாக பார்த்தனர். ஓவியாவும் அவனை வியப்போடு பார்த்தாள்."உனக்கு எப்படி தெரியும்.?" வேணி அவனிடம் கேட்டாள்."எப்படியோ தெரியும். இப்ப அதுவா முக்கியம்.? அவங்க இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டிதான். ஆனா டைவர்ஸ் வாங்கிட்டாங்க. மறுபடியும் சேர்ந்து வாழ்ந்தாங்க. ஆனா நம்ம சாரே பிரிச்சி விட்டுட்டாரு. அவருக்கு தன் மனைவி தைரியசாலி ஆகணும்ன்னு ஆசை.." என்ற வர்சன் தனக்கு தெரிந்த அனைத்தையும் அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டான்."சோ ஸ்வீட் பாஸ்.. ஐ லைக் ஹிம்.." என்று தன் கன்னத்தில் கை வைத்தபடி கனவோடு சொன்னாள் ஓவியா.அவளின் கழுத்தில் கை போட்டு இறுக்கினான் வர்சன். "உனக்கு ஸ்வீடும் ஹாட்டும் நானா மட்டும்தான் இருக்கணும்.." என்றான்.ஓவியா அவனது கை மீது அடித்தாள். "நீ மட்டும் யதிராவை ரூட் விட்ட.." என்றாள் முகத்தை திருப்பியபடி."அதெல்லாம் சும்மா.. ஆனா நீ சும்மா இல்ல.." என்றவன் மற்றவர்கள் பக்கம் திரும்பினான். "நான் என் வாய் நிற்காம உளறிட்டேன்‌. நீங்க யாரும் இதை சார்க்கிட்டயோ யதிராக்கிட்டயோ கேட்டு வச்சி என் வேலைக்கு உலை வச்சிட்டு போயிடாதிங்க.." என்றான்.முகில் வீட்டிற்கு வந்ததும் தன் அறையை நோக்கி கிளம்பினான்."முகி.." சௌந்தர்யாவின் அழைப்பு குரலால் நின்றான் அவன்."இதுதான் சுபாவோட சிஸ்டர்.. போன்ல பார்த்ததை விட நேர்ல வித்தியாசமா இருக்கா இல்ல.?" என்றாள்.மேக்னா தன் முகத்தை துடைத்தபடி தன் தங்கையின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.'நேர்ல, போட்டோவுல, போன்லன்னு எப்படி பார்த்தாலும் மறக்காத முகம் ஆச்சே இந்த முகம்.?' என்று பற்களை கடித்தபடி யோசித்தவன் சௌந்தர்யாவுக்கு ஆமென தலையசைத்து விட்டு தனது அறைக்கு நடந்தான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1059VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN