35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனது அறைக்கு வந்த முகில் ஃபோனை எடுத்து கே.கேவிற்கு அழைத்தான்."கே.கே.. யதிரா ரொம்ப வித்தியாசமா நடந்துக்கிட்டா.. அவளுக்கு என்ன ஆச்சின்னு என்னால புரிஞ்சிக்க முடியல.. நான் ஆசைப்பட்ட கேள்வியை அவ கேட்டுட்டா.. ஆனா சம்மந்தமே இல்லாம அவளுக்கு ஏன் இந்த நேரத்துல இப்படி ஒரு கோபம் வந்ததுன்னு என்னால புரிஞ்சிக்க முடியல.. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா.." என்று தன் குழப்பம் அத்தனையையும் அவளிடம் சொன்னான் முகில்.கே.கே சில நொடிகள் யோசித்தாள். "எனக்கும் சரியா தெரியல முகி.. நான் அவக்கிட்ட பேசிட்டு வேணா சொல்றேன்.. சுபாவோட டெத் இவளை பாதிச்சிருக்க சான்ஸ் இருக்கான்னு விசாரிச்சி பார்க்கறேன்.." என சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் அவள்.முகில் ஃபோனை மேஜை மேல் வைத்து விட்டு தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தான். யதிரா கேட்டு சென்ற வார்த்தைகள் அவனின் காதுகளில் ஒலித்தது. எப்போது கேட்பாள் என காத்திருக்கும்போது ஆவலாக இருந்தது. ஆனால் இன்று அவள் அந்த வார்த்தைகளை கேட்டபோது இதயம் வலித்தது.யதிரா வீட்டிற்குள் நுழைந்தாள். கே.கே தனது அறையிலிருந்து வெளியே வந்தாள்."யதி.. ஏன் ஒரு மாதிரி இருக்க.? ஆர் யூ ஆல்ரைட்.?" என்றாள். முகில் போனில் சொல்லும்போது கூட சாதாரணமாகதான் நினைத்தாள் கே.கே. ஆனால் யதிராவை நேரில் பார்க்கும்போதுதான் விசயத்தின் தீவிரத்தை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது."நான் நல்லாருக்கேன் கே.கே.." என்ற யதிரா அவளை தாண்டி கொண்டு சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். கே‌.கே அவளை வியப்போடு பார்த்தாள்.அறைக்குள் நுழைந்ததும் கதவை தாளிட்டு விட்டு அந்த கதவின் மீதே சாய்ந்து அமர்ந்தாள் யதிரா. இன்று அவளுக்கு ஏதோ ஒரு மாய கட்டில் இருந்து விடுப்பட்டது போல இருந்தது. கண் முன் இருந்த திரை விலகியதை உணர்ந்துக் கொண்டாள்.தன் மொத்த வாழ்க்கையையும் யோசித்தாள். முகிலின் வார்த்தைகளை எப்படி நம்பினோம் என்பதை நினைத்து பார்த்தாள். தாலியை கழட்டுகையில் கதறிய கதறலும், குழந்தையை இழந்த அன்று கெஞ்சிய கெஞ்சலும் மனதின் திரையில் மீண்டும் மீண்டும் ஓடியது. கண்களில் நிற்காமல் வழிந்தது கண்ணீர். நடந்து முடிந்த அத்தனை நிகழ்வும் தந்த வலிகள் எத்தகையது என்று இன்றுதான் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.தனது முட்டாள்தனம் இன்றுதான் புரிந்தது அவளுக்கு. "எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடந்தது.? கட்டிய புருசன் திடீர்ன்னு விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சி போனான். என் குழந்தையை என்னோட அண்ணனே அழிச்சான். மீண்டும் வந்து சேர்ந்த புருசன் சேர்ந்து வாழலாம்ன்னு சொல்லி கூட்டிப்போய் மறுபடியும் ஏமாத்தினான். இல்ல இல்ல. இங்கே யாரும் என்னை ஏமாத்தல.. நானேதான் ஏமாத்தினேன்.. அன்னைக்கு விவாகரத்து கேட்டவனை சட்டையை பிடிச்சி நான் கேள்வி கேட்டிருக்கணும்.. அன்னைக்கு அண்ணன் தம்பி சப்போர்ட் இல்லன்னு அழுதேனா.?" என கேட்டு சிரித்தாள்."அண்ணன் தம்பியை நம்பியா நான் பிறந்தேன்.? ஆனா பிறந்த பிறகு நம்பிட்டேன் இல்ல.. அதான் தப்பா போயிடுச்சி. அவனை நம்பியதுக்கு தண்டனையா என் குழந்தை செத்து போச்சி.. புருசனை நம்பியா நானும் வாழ்ந்தேன். ஆனா நம்பினேனே.? அதனாலதானே அவன் விட்டு போன உடனே வாழ்க்கையே போயிடுச்சி நினைச்சி கதறினேன்.? என் வாழ்க்கை இதோ என் கையிலதான் இருந்திருக்கு. ஆனா நான்தான் சோம்பேறிதனமா என் வாழ்க்கையை ரூல் பண்ண தெரியாம புருசன்கிட்டயும் அண்ணன்கிட்டயும் வாழ்க்கையை தந்தேன். அவங்க சிறப்பா என் வாழ்க்கையை முடிச்சி தந்துட்டாங்க.. ஆமா நான்தானே நம்பினேன். நான்தானே ஏமாந்தேன்.? நான்தானே முட்டாள்.? நான்தான் மெண்டல்.?" என கேட்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.அவள் சாய்ந்து அமர்ந்திருந்த கதவை கே.கே தட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அதை கூட காதில் வாங்காமல் புலம்பிக் கொண்டிருந்தாள் யதிரா."என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சி.. முடிச்சிட்டாங்க.. ஏற்கனவே விட்டு போனவனை மறுபடியும் நம்பி போனேன்.. பைத்தியம் நான்.. ஆனா என் குழந்தை என்னை நம்பிதானே கருவா ஆச்சி.? ஆனா நான் கை விட்டுட்டேனே.? என்னை நம்பி உருவான ஒரு குழந்தையை நான் காப்பாத்தல.. இது என் தப்பாலதான்.." மனதில் தோன்றியதை உளறிக் கொண்டிருந்தாள் யதிரா."இதெல்லாம் ஏன் எனக்கு இவ்வளவு நாளா தெரியல.? புருசன் பாசம் தந்தானே.. அந்த பாசம் தந்த போதையில மயங்கி இருந்துட்டேனே.. அதனாலயா.? ஆமா.. அதுதான் போல.. கொஞ்சமா சிரிச்சி பேசினா மயங்கிடுற மானம் கெட்ட மனம்தானே இது.?" என்று கேட்டாள்."இதுதான் வாழ்க்கையா.? பாசம்ன்னு சொல்லி ஏமாத்துறாங்க. நீயும் ஏமாறுற.. இதுல உன் நம்பிக்கைதான் சாகுது.. ஏனா நீ ஒரு உதவாக்கரை.." என்று உளறியவளின் செவிகளில் கே.கேவின் கத்தல் கேட்கவே இல்லை.யதிராவை அழைத்து பார்த்த கே.கே பதில் வராமல் போகவும் பயந்து போனாள். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத யதிராவின் உளறல் கே.கேவை குழப்பியது. அவளின் புலம்பலை கே.கேவாலும் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை."யதிரா.. கதவை திற.. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.." என்றாள். ஆனால் இவளின் குரல் யதிராவின் செவிகளை சேரவே இல்லை.அவசரமாக முகிலுக்கு ஃபோன் செய்தாள் கே.கே."முகி..‌ அங்கே என்னதான் ஆச்சி.?" என்றாள்."இங்கே ஏதும் ஆகல கே.கே. அக்காவும் மேக்னாவும் அழுதுட்டு இருந்தாங்க. இவ சுவரை வெறிச்சி பார்த்துட்டு நின்னுட்டு இருந்தா.. அதுக்கும் மேல எனக்கும் ஏதும் தெரியல.." என்றான் அவன். "ஏன் இதை கேட்கற கே.கே.? அவ ஓகேதானே.?" என கேட்டான்."உண்மையை சொல்லணும்ன்னா அவளுக்கு ஏதோ ஆயிடுச்சி. அவ தன் பாட்டுக்கு பேசிட்டு இருக்கா.. அவ பேசுவதை என்னால புரிஞ்சிக்க முடியல. எல்லோரும் ஏமாத்திட்டாங்க.. இல்ல நான்தான் ஏமாந்துட்டேன். நான் பைத்தியம். நான் முட்டாள்ன்னு உளறிட்டு இருக்கா.. இவ பிகேவியர் அப் நார்மலா இருக்கு.." என்றாள் கே.கே.முகில் நெற்றியை பிடித்தான். "எனக்கு ஏதோ தப்பா தோணுது கே.கே.." என்று பதறும் குரலில் சொன்னான் முகில்."ஆனா என்னன்னு தெரியணுமே.." என்ற கே.கேவின் செவிகளில் யதிராவின் அழுகை ஒலி கேட்டது."நீ ஆசைப்பட்ட மாதிரியே யதிரா மாறிட்டான்னு தோணுது.. இனி உன்னை ஜென்மத்துக்கும் வெறுப்பான்னு தோணுது.. நான் அப்புறம் பேசுறேன்.." என்றவள் ஃபோன் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்."யதிரா கதவை திற.." கதவை ஓங்கி தட்டினாள் கே.கே. யதிரா கதவை திறக்கவில்லை.அந்த அறை கதவிற்கான மாற்று சாவியை எடுத்து வந்தாள் கே.கே. கதவின் தாழ்ப்பாளை திறந்தாள். கதவின் அருகில் சுருண்டு படுத்திருந்தாள் யதிரா. விம்மி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள் அவள்."யதிரா.. யதிரா.." அவளருகே மண்டியிட்ட கே.கே அவளை எழுப்பினாள். யதிரா அழுதபடி எழுந்து அமர்ந்தாள்."ஏன் அழற யதிரா.?" அவளின் முகத்தை துடைத்து விட்டபடியே கேட்டாள் கே.கே."நான் ஒரு முட்டாள் கே.கே.. நான் ஒரு உதவாக்கரை.. நான் வாழ்றதே வேஸ்ட் கே.கே.. எனக்கு யார் யாரோ எதிரின்னு நினைச்சேன். ஆனா என்னோட ஒரே எதிரி நான்தான்னு எனக்கு தெரியாம போச்சி.." என்று அழுதவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் கே.கே."பரவால்ல யதி.. அழாதே விடு.. எல்லாம் சரியா போயிடும்.." என்றாள்.யதிரா மறுப்பாக தலையசைத்தாள். "இல்ல. இனி எதுவுமே சரியாகாது. எல்லாமே என் கை விட்டு போயிடுச்சி. என் மொத்த வாழ்க்கையுமே முடிஞ்சி போச்சி.." என்றவள் அழுகையின் இடையே சிரித்தாள். "என் வாழ்க்கை எப்பவோ முடிஞ்சிடுச்சி. ஆனா அதை தெரிஞ்சிக்க கூட எனக்கு இத்தனை வருசம் ஆகியிருக்கு.. என்னை மாதிரி ஒரு முட்டாளை பார்த்திருக்கியா கே.கே.?" என கேட்டாள்.கே.கே அவளின் கேசத்தை வருடி விட்டாள். "நீ முட்டாள் இல்ல யதி.." என்றாள்."நான் முட்டாள்தான் கே.கே.." என்று சொன்னவள் அதையே மீண்டும் மீண்டும் சொல்லி அரற்றினாள்.அரை மணி நேரம் அப்படியே கடந்தது.வீட்டின் காலிங்பெல் ஒலிக்கும் சத்தம் கே.கேவின் காதுகளில் விழுந்தது. ஆனால் யதிராவை விட்டு செல்ல விரும்பவில்லை அவள்.‌கே.கே யதிராவை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றாள். ஆனால் யதிராவின் அழுகை ஓயவே இல்லை. முழு சக்தியும் கண்ணீரில் கரைந்து போன பிறகு கே‌.கேவின் தோளிலேயே மயங்கி சரிந்தாள் யதிரா.அவளை படுக்கையில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டாள் கே.கே. அவளின் முகம் முழுக்க கண்ணீர் கோடுகள் இருந்தது."என்னாச்சி யதி.?" என கேட்டவளின் செவிகளில் மீண்டும் காலிங்பெல் சத்தம் கேட்டது. யதிராவின் அறை கதவை சாத்திவிட்டு சென்று வீட்டின் கதவை திறந்தாள் கே.கே. வாசலில் முகில் நின்றுக் கொண்டிருந்தான்."இங்கே என்ன பண்ற நீ.?" என கேட்டாள் கே.கே."அவ எப்படி இருக்கா.?" என கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தான் முகில்."இன்னொரு முறை லூசு மாதிரி என் வீட்டுக்குள்ள என் அனுமதி இல்லாம வராதே முகி.." என்று திட்டியவள் யதிராவின் அறை கதவை திறந்தாள்."தூங்கிட்டா.. இல்லன்னா உன்னை பார்த்துட்டு இன்னும் அதிக கடுப்பாகி இருப்பா.." என்றாள்.முகில் யதிராவின் வாடிய முகத்தை பார்த்தாள். "ஏன் இவ இப்படி இருக்கா.?" என கேட்டவன் கதவில் சாய்ந்து நின்றான்."தெரியல முகி. வந்ததுல இருந்து அழுதுட்டே இருந்தா.. நான் பைத்தியம், நான் முட்டாள்ன்னு உளறிட்டு இருந்தா.. அழுது அழுதே மயங்கிட்டா.. நீ விட்டு போனது இவளுக்கு ரொம்ப அடியை தந்துடுச்சின்னு நினைக்கிறேன்.." என்றாள் கே.கே.முகில் யதிராவின் கட்டில் மீது சென்று அமர்ந்தான். அவளின் கேசத்தை வருடி விட்டான். "நான் எல்லா உண்மையையும் சொல்லிட போறேன்.." என்றான் பெருமூச்சோடு."நோ.." கே.கே அவசரமாக சொன்னாள்."இன்னும் இரண்டு வாரம் நீ அமைதியா இரு.. இது நமக்கு கிடைச்ச நல்ல சான்ஸ்.. தப்பாவே இருந்தாலும் கூட நாம நமக்கு கிடைச்சிருக்கற சான்ஸைதான் பார்க்கணும்.‌ மேக்னாவும் இங்கேயே இருக்கா‌. சுபாவோட மர்டரை வச்சி நாம ஆட போற கேம்ல உன் அக்காவும் ரூபனும் வசமாக வந்து சிக்கணும். அதனால என்ன நடந்தாலும் சரி இந்த கேஸ்ல ரூட் கிடைக்கற வரைக்கும் நீ யதிராக்கிட்ட உண்மையை சொல்ல கூடாது. இதுல உயிர்பலி ஏற்பட கூட சான்ஸ் இருக்கு. அதனால எந்த உயிராவது போனா கூட உன்னோடதாவோ இல்ல என்னோடதாவோ இருக்கட்டும். யதிரா பத்திரமா இருந்தா போதும்.." என்றாள்.அவள் சொன்னதை யோசித்து பார்த்தான் முகில். சரியென்றுதான் தோன்றியது. யதிராவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழுந்து நின்றான்."நான் மேக்னாவோடு நெருங்கி பழகறேன்.." என்றான்.யதிராவை திரும்பி பார்த்தான். "இவளை பத்திரமா பார்த்துக்க.. எந்த விசயமா இருந்தாலும் சொல்லு. நான் செய்றேன்‌. நீ எதிலேயும் டைரக்டா தலையிடாத.. நான் கிளம்பறேன்.." என சொல்லிவிட்டு வெளியே நடந்தான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1050VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN