36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
'ஒருகணம் ஒருப்பொழுதும் பிரியக்கூடாது.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது..' அலாரம் ஒலித்தது.பாடல் காதில் விழுந்ததும் போனை எடுத்து சுவரில் ஓங்கி அடித்தாள் யதிரா. படீரென போன் சென்று மோதிய சத்தம் கேட்டு கே.கே அந்த அறைக்குள் ஓடி வந்தாள். முட்டிக்காலை கட்டியபடி கட்டிலின் மீது அமர்ந்திருந்தாள் யதிரா. கலைந்த தலையும், இரவில் அழுததால் சிவந்திருந்த கண்களும், வீங்கிய முகமும் என அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது."என்ன ஆச்சி யதி.?" என கேட்டபடி அவளின் அருகே வந்து அமர்ந்தாள் கே.கே."ஒன்னும் ஆகல.." என்று சொன்னவளின் குரல் கம்ப்யூட்டர் குரல் போல இருந்தது."டீ கொண்டு வரட்டுமா யதிரா.?" என்று கேட்டாள் கே.கே.யதிரா மறுப்பாக தலையசைத்தாள். "இல்ல.. வேணாம்.." என்றவள் எழுந்து நின்றாள். மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். தலையில் விழுந்த ஜில்லென்ற தண்ணீர் அவளின் மனதின் வெப்பத்தை குறைக்கும் திறனை பெற்றிருக்கவில்லை. இமைகளையும் திறந்திருந்த கண்களையும் தழுவியபடி ஓடிக் கொண்டிருந்தது ஷவரில் இருந்த கொட்டிய தண்ணீர். சிவந்திருந்த கண்கள் தண்ணீர் பட்டதும் எரிந்தது. ஆனால் அதன் எரிச்சலை பெரிதுப்படுத்தும் அளவிற்கு கூட அவளின் சிந்தை இல்லை.இவ்வளவு நாளும் விட்டு சென்றவனை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் தான் பட்ட கஷ்டங்கள் கண்களில் வந்தது. கதறலும், அழுகையும் எந்தவித பிரயோசனமும் இல்லாமல் ஒதுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்தாள். அண்ணனையும், கணவனையும் மட்டுமே யோசித்தவள் இன்றுதான் தன்னை யோசித்தாள். தன் வாழ்க்கையில் தான் என்ன செய்தோம் என யோசித்தாள். தன் வாழ்க்கைக்கு தான் என்ன செய்தோம் என யோசித்தாள். தனது மூளையை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் தனது கண்ணீரையும் அழுகையையும் பற்றி யோசிக்காமல் விட்டதன் தவறை புரிந்துக் கொண்டாள்.இந்த இருப்பத்தி மூன்று வருட வாழ்க்கையில் தான் தன் வாழ்க்கைக்காக செய்த சாதனை என்னவென யோசித்து கசப்பாக சிரித்தாள்."எதையுமே செய்யல நான்.. விவாகரத்து வேணும்ன்னு கேட்டவன்கிட்ட தாலியை பறிக்காதேன்னு பிச்சை கேட்டு அழுது என் தன்மானத்தை காத்துல வீசி இருக்கேன்.. ஒரு டாக்டரை எதிர்த்து பேசி அவளை அறைஞ்சிட்டு வராம என் குழந்தையையே பலி தந்திருக்கேன்.. என் குழந்தையை கொன்னுட்டு அதுக்கு தியாகம்னு பேர் வச்ச அண்ணன் முன்னால அடங்கி போய் என் பீலிங்க்ஸ்க்கே நான் துரோகம் பண்ணி இருக்கேன். விட்டுட்டு போனவன் திரும்பி வந்ததும் மீண்டும் போய் சேர்ந்து வாழ்ந்து எனக்கு நானே துரோகம் பண்ணி இருக்கேன்.. இங்கே நானே என் பீலிங்க்ஸ்க்கும், என் சுயமரியாதைக்கும் மரியாதை தராத போது மத்தவங்க மரியாதை தரணும்ன்னு ரொம்ப கேவலமா நினைச்சிருக்கேன்..ச்சை.. நானெல்லாம் என்ன பிறவி.? என்னை நானே எடைப்போட்டு பார்த்திருந்தா மத்தவங்க என்னை தூக்கி வீசுற அளவுக்கும், மத்தவங்க என்னை தப்பா ஆட்சி செய்ற அளவுக்கும் இருந்திருக்குமா.? இங்கே எல்லா தப்பும் என் மேலதான். மத்தவங்களை குறை சொல்ல கூட தகுதி இல்லாத ஜென்மம் நான்.." என தன்னையே திட்டிக் கொண்டாள்.அவள் தயாராகி வந்தபோது பார்சல் வாங்கி வந்த உணவை பிரித்து மேஜை மேல் வைத்தாள் கே.கே."கடையில சாப்பாடு வாங்கி காசு வேஸ்ட் பண்ணதுக்கு சாரி யதி.. ஆனா நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கற மாதிரி இருந்தது. அதனாலதான் இதை வாங்கிட்டு வந்தேன்.." என்றாள்.யதிரா எதுவும் சொல்லாமல் வந்து நாற்காலியில் அமர்ந்தாள். சாப்பிட ஆரம்பித்தாள். கே.கேவும் அவள் முன்னால் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தாள். தன் சுயத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக எவ்வளவு உண்டாலும் பசி தீர மறுத்தது யதிராவுக்கு.வழக்கத்தை விட இரண்டு மடங்கு உணவை உண்டாள். அதன் பிறகும் மூன்று டம்ளர் தண்ணீரை குடித்தாள். எதுவும் நெஞ்சத்தின் தீயை அணைக்கவில்லை."நான் ஆபிஸ் கிளம்பறேன் கே.கே.." என்றவள் தனது தோள்ப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினாள். அவள் கதவை திறந்த நேரத்தில் அவளின் கையை பற்றி நிறுத்தினாள் கே.கே."என்ன கே.. கே.?" என திரும்பி பார்த்துக் கேட்டாள் யதிரா."உனக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியல யதி.. ஆனா உனக்காக இங்கே நான் இருக்கேன். அதை மறந்துடாத.. உனக்கு என்ன உதவி வேணாலும் நான் செய்றேன்.. உன்னோட பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க நான் இருக்கேன்.. அதுக்கு முழு தீர்வு தர முடியலன்னாலும் என்னால முடிஞ்ச ஆலோசனைகளையாவது தருவேன்.." என்றாள்.யதிரா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்."சாயங்காலம் பேசலாம் கே.கே.. தேங்க்ஸ் பார் யுவர் கம்பர்ட்.." என்றவள் கே.கேவை விட்டு விலகி வெளியே நடந்தாள்.மேக்னா காலையில் கண் விழிக்கும்போது அவள் முன்னால் காப்பி கோப்பையை நீட்டினான் முகில். அவள் குழப்பமாக கோப்பையையும் அவனையும் பார்த்தாள். அவன் காப்பி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு வெளியே நடந்தான். மேக்னா அவனை விந்தையாக பார்த்தாள்."வந்து உட்காரு முகில்.. சாப்பிடுவ.." என்று காலை உணவின்போது சௌந்தர்யா அழைத்தபோது "எனக்கு பசியே இல்லக்கா.." என்ற முகில் சுபாவின் புகைப்படம் பார்த்து தன் கண்களை துடைத்தபடி அங்கிருந்து சென்றான். அவனது சோக முகம் மேக்னாவையும் யோசிக்க வைத்தது.அவன் அலுவலகம் வந்திருந்த போது யதிரா தனது இருக்கையில் அமர்ந்து தனது வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்."யதிரா.. உனக்கு என்ன ஆச்சி.?" என்று அவளின் அருகே வந்து கேட்டான் அவன்.யதிரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். "ஆபிஸ்க்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்காதிங்க சார்.." என்றாள் தனது வேலைகளை செய்தபடியே. அவளின் முகம் செய்து வைத்த சிலை போல இருந்தது. கோபத்தை கூட அவள் முகத்திலிருந்து கண்டறிய முடியவில்லை முகிலால்.முகில் அவளை பார்த்தபடியே சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். நிமிடத்திற்கு ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் ரோபோட் போல தனது வேலைகளை மட்டும் செய்துக் கொண்டிருந்தாள்.மதிய உணவு உண்ண அவள் எழுந்தபோது இவனும் அவளோடு சேர்ந்து எழுந்தான். அவள் கேண்டினிற்கு சென்று உணவை வாங்கி வந்து நாற்காலி ஒன்றில் அமர்ந்தபோது அவனும் அங்கேயே உணவை வாங்கிக்கொண்டு வந்து அவள் முன்னால் அமர்ந்தான்."யதிம்மா.. நீ ஏன் இவ்வளவு கோபமா இருக்க.?" என்றான். கே.கே சொன்னது போல விலகி இருக்கத்தான் முயன்றான் அவனும். ஆனால் அவளின் முகம் பார்க்கும் கணமெல்லாம் நெஞ்சத்தில் இடியோசைகள் கேட்டது அவனுக்கு. அவளின் இந்த முகத்தை கண்ட பிறகும் அவனால் அமைதியாக இருக்கவே முடியவில்லை.யதிரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். "தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணாதிங்க சார்.. அப்புறம் நான் போலிஸ் கம்ப்ளைண்ட் தர வேண்டி இருக்கும்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் முகில்.அவன் அடுத்து பேசும் முன் மற்றவர்கள் அங்கு வந்து அமர்ந்தனர். அனைவரும் முகிலையும், யதிராவையும் மாறி மாறி பார்த்தனர். சுந்தரி முகிலை பார்த்து சிரிக்க முயன்றாள். ஆனால் சிரிப்பதான் வர மறுத்தது."குட் ஆப்டர்நூன் சார்.." என்றான் வர்சன்.முகில் தலையசைத்து வணக்கத்தை ஏற்றுக் கொண்டான். யதிராவின் சாப்பிடும் வேகம் கூட முகிலுக்கு ஆச்சரியத்தை தந்தது. மற்றவர்கள் சாப்பிட தொடங்கும் முன்பே இவள் உணவை முடித்துக் கொண்டு எழுந்து விட்டாள். முகில் தன் உணவை அப்படியே விட்டுவிட்டு எழுந்துக் கொண்டான்.யதிரா அறைக்குள் நுழைந்து தன் வேலைகள் பார்க்க ஆரம்பிக்கவும் "லன்ச் டைம் இன்னும் இருக்கே.. அதுக்குள்ள ஏன் வேலையை ஆரம்பிக்கற.?" என்றான்."பரவாயில்ல சார்.. நான் இப்ப ப்ரியாதான் இருக்கேன்.." என்றவள் பேனா ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு பைலை திறந்தாள்.முகில் குழம்பி போனவனாக சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். 'நேத்து அப்படி என்னதான் ஆச்சி.?' என யோசித்தான். போனை எடுத்தவன் 'எங்க வீட்டு ஹால்ல கேமரா இருக்கா.?' என கேட்டு கே.கேவிற்கு மெஸேஜை அனுப்பினான்.'ஆமா இருக்கு.. இப்ப நான் கூட அதைதான் பார்த்துட்டு இருக்கேன்.. சுபா மேல தான் பாசமாவும் உயிராவும் இருந்ததா சொல்லி மேக்னா அழுதுட்டு இருக்கா..' என்று பதிலை அனுப்பினாள் கே.கே.'நேத்து ஈவினிங் என் அக்கா யதியை ஏதாவது சொன்னாளான்னு பார்த்து சொல்லு.. யதி நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்கு..' என்று அனுப்பினான் இவன்.'அதை நான் நேத்து நைட்டே பார்த்துட்டேன். உன் அக்கா இவளை திட்ட இருந்த நேரத்துல மேக்னா வந்துட்டா.. அதனால இவ மாற்றத்துக்கும் உன் அக்காவுக்கும் இடையில எந்த சம்பந்தமும் இல்ல. இவ திடீர்ன்னுதான் இப்படி மாறி இருக்கா.. இதுல இன்னொரு விசயம் தெரியுமா.? காலையில் இவ தன்னோட போனை சுவத்துல தூக்கி அடிச்சிட்டா..' என கே.கே அனுப்பிய சேதியை படித்தவன் அதிர்ச்சியோடு யதிராவை நிமிர்ந்து பார்த்தான். 'என் யதியா இப்படி செஞ்சா.?' என்று ஆச்சரியப்பட்டான்.'ஈவினிங் என்னோடு பேசுறேன்னு சொல்லி இருக்கா.. அவளா பேசினாதான் விசயம் என்னன்னு எனக்கும் தெரியும்.. அவ ஏதாவது சொன்னா நான் கண்டிப்பா உனக்கும் சொல்றேன்..' என்று கே.கே சேதியை அனுப்பி முடித்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது."ஹலோ யார் பேசுறது.?" என்றாள்."மேடம் நான் ஜீவா.. நீங்க ஒரு போலிஸ் பத்தி என்கிட்ட விசாரிச்சிங்களே.. நியாபகம் இருக்கா.?" என்றான் ஒருவன் எதிர்முனையில்."சொல்லுங்க ஜீவா.." என்றவள் எழுந்து நேராக அமர்ந்தாள்."அந்த போலிஸ் பேரு ரத்தினம்.. அவரோட அட்ரஸை உங்களுக்கு மெஸேஜ்ல அனுப்பி இருக்கேன் பாருங்க.." என்றான் அவன்."தேங்க்ஸ் ஜீவா.." என்றவள் இணைப்பை துண்டித்து விட்டு அவன் அனுப்பிய சேதியா பார்த்தாள்."பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான்.." என சொல்லியபடி அட்ரஸை பார்த்தாள். இரண்டு முகவரிகள் அதில் இருந்தன. குழம்பி போனவள் ஜீவாவிற்கு போன் செய்தாள்."இதுல இரண்டு அட்ரஸ் இருக்கு ஜீவா.." என்றாள்."ஆமா மேடம்.. சார் ரொம்ப வசதி.. இது இல்லாம கூட இன்னும் இரண்டு வீடு கொடைக்கானல்லயும், ஏற்காட்டிலேயும் இருக்கு. அது தேவையில்லன்னு உங்களுக்கு மென்சன் பண்ணல.." என்றவன் "இதுல நான் அனுப்பிய செகண்ட் அட்ரஸ்தான் ரத்தினம் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ற வீடு.. இன்னொன்னுல அவரோட பேமிலி இருக்கு.." என்று எக்ஸ்ட்ரா தகவலையும் சொன்னான்."தேங்க் யூ ஜீவா.." என்றவள் போனை வைத்துவிட்டு அந்த முகவரிகளை பார்த்தாள்.தூரத்து மேஜை மேல் இருந்த தன் ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டவள் அவசரமாக வெளியே ஓடினாள்.ரத்தினத்தின் இரண்டாம் அட்ரஸ் இருந்த வீட்டின் அருகே தன் பைக்கை நிறுத்தியவள் சுற்றிலும் பார்த்தாள். கடற்கரையோர ஒற்றை பங்களா வீடு அது. காம்பவுண்ட் கேட்டில் வாட்ச்மேன் ஒருத்தன் காவலுக்கு இருந்தான்."ஒரு கேஸ்க்கே அம்பது லட்சம் அடிச்சா இந்த மாதிரி இன்னும் பத்து வீடு வாங்கலாமே.." என்று வியந்து சொன்னபடி தன் பைக்கிலிருந்து இறங்கி நின்றாள் கே.கே.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.word count 1066VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN