39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா செய்யும் வேலையை விட்டுவிட்டு கே.கேவை திரும்பி பார்த்தாள்."நீ சொல்றதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.?" என்றாள்‌.கே.கே அவளை குழப்பமாக பார்த்தாள்."யதி நீ கோபத்துல பேசுறன்னு நினைக்கிறேன்.." என்றாள்.யதிரா மறுப்பாக தலையசைத்தாள்."இல்ல. எனக்கென்ன கோபம் வர போகுது.? உங்களுக்கும் என் கோபத்துக்கும் இடையில என்ன சம்பந்தம்.?" என்றாள்.யதிராவின் சலனமில்லா முகம் கே.கேவிற்கு பயத்தை தந்தது."யதி.." கையை நீட்டியபடி ஓரடி முன்னால் நடந்தாள் கே‌.கே.யதிரா பெருமூச்சோடு திரும்பி நின்றாள். பாதியாக வெட்டியிருந்த காய்களை எடுத்து மேலும் வெட்ட ஆரம்பித்தாள்."நான் சொல்வதை கூட காது கொடுத்து கேட்க மாட்டியா யதிரா.?" வருத்தமாக கேட்டாள் கே.கே.யதிரா கசந்து போய் சிரித்தாள். "ஆதாரம் தேட போறவர் பொண்டாட்டியை தெருவுல நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அவருக்கும் எனக்கும் இடையில் எந்த உறவும் இல்ல. அதனால அவரை பத்தி பேசறதும் கூட தப்புதான். ஆனா உன்னை நான் என்னன்னு சொல்றது.? ஆதாரம் தேட போன உனக்கு உன் ஆடையை அவிழ்க்கிறது மட்டும்தான் ஒரே வழியா தெரிஞ்சதா.?" என்றாள்.கே.கே மூச்சை இழுத்து விட்டாள். நிதானமாகி கொண்டாள்."உண்மையை சொல்லணும்ன்னா நான் ஒரு ட்ரக் அடிக்ட்.." என்றாள்.யதிராவின் கையில் இருந்த கத்தி நழுவி விழுந்தது. கே.கேவை திரும்பி பார்த்தாள். அவளின் முகத்தில் பொய் தெரிகிறதா என தேடினாள்."நான் கார்த்திகா. என் பேரண்ட்ஸும், பிரதர் சிஸ்டர்ஸ்ம் மல்டி மில்லியனர்ஸ். வேர்ட்ல் லெவல்ல பிசினஸ் பண்றாங்க. எங்க வீட்டுல கடைசி பொண்ணு நான். எல்லோருக்கும் செல்லம். கேட்ட நேரத்துல பணம் கிடைக்கும். கேட்காமலேயே நிறைய பாசம் கிடைக்கும். என்னோட பிரெண்ட் மைத்தி.." என்றவள் தன் கண்களின் ஓரத்தில் இருந்த ஈரத்தை துடைத்துக் கொண்டாள்."என்னோட பெஸ்ட் பிரண்ட் அவ.. அவளுக்கும் எனக்கும் இருந்த நட்பை பத்தி யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. அவ்வளவு டீப்பான பிரெண்ட்ஷிப்.. நல்லாதான் என் வாழ்க்கையும் போய்ட்டு இருந்தது. காலேஜ் டேஸ்ல ஒருநாள் என்னோட மத்த பிரெண்ட்ஸ் ட்ரீட் வைக்கிறதா ஒரு கிளப்புக்கு கூட்டிப் போனாங்க. ட்ரக்ஸ் எடுத்துக்க சொன்னாங்க. என்னால அதை எடுத்துக்க முடியாதுன்னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லி என்னை கேலி பண்ணாங்க. ஒரு ஆவேசத்துல ட்ரக்ஸை எடுத்துக்கிட்டேன் நான்.மனசு இரும்பா இல்லாம கொஞ்சம் ப்ரியா இருந்தா ஒரு முறை பயன்படுத்தினாலே நம்மளை அடிக்ட் ஆக்கிட்டுற ட்ரக் அது. நான் ஒரு டைம் எடுத்த உடனே அடிக்டட் ஆகிட்டேன். அப்புறம் தினமும் அந்த ட்ரக்ஸை எடுத்துக்க ஆரம்பிச்சேன். மைத்திக்கு என்னோட பழக்கம் பிடிக்கல. தினமும் சண்டை போட்டா. என்னை திருத்த எவ்வளவோ செஞ்சா. ஆனா எதுவும் என்னை மாத்தல. ஒருநாள் நான் போதையில் இருக்கும்போது யாரோ நிறைய பேப்பர்ல சைன் வாங்கினாங்க. அடுத்த நாள்தான் தெரியும் அது என்னோட பிரதர்-இன்-லாவோட வேலைன்னு. என்னோட ஷேர்ஸை அபகரிக்கத்தான் அவரே ஆள் செட் பண்ணி என்னை ட்ரக் அடிக்டா மாத்தி நான் போதையில் இருக்கும்போது சைனும் வாங்கியிருக்காரு. அடுத்த நாளே என்னோட அடிக்ட் பத்தி ஆதாரத்தோட வீட்டுல சொல்லிட்டாரு. அப்பா அம்மாவுக்கும் மத்த சிஸ்டர் அன்ட் ப்ரதர்ஸ்க்கெல்லாம் என்னோட போதை பழக்கம் தெரிய வந்துடுச்சி. எல்லோரும் என்னை கேவலமா பார்த்தாங்க. அம்மா என்னை பயங்கரமா திட்டினாங்க. அத்தனை பேர் முன்னாடி குற்றவாளியை போல நிற்க அவமானமா இருந்தது. அதனால நானே அந்த வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.மைத்திதான் என்னை அவ வீட்டுக்கு கூட்டி போனா. அம்மாவோட திட்டை யோசிச்சிசிட்டே இருந்தேன். ரொம்ப அவமானமாவும், ரொம்ப கஷ்டமாவும் இருந்தது. அதுல இருந்து தப்பிக்க நினைச்சி மைத்தி இல்லாத நேரத்துல மறுபடியும் ட்ரக் விக்கிறவனை தேடி போனேன். தினமும் இதே நிலைதான். மைத்தியோட வீட்டுல இருந்து பணத்தை திருடி கொண்டு போய் ட்ரக் வாங்கி பயன்படுத்தினேன். மைத்திக்கு செலவாகும் பணம் பத்தி கவலை இல்ல. அவளோட பேரண்ட்ஸ் அவளை திட்டுவதை பத்தி கவலை இல்ல. அவளோட ஒரே கவலை என்னோட ஹெல்த் மட்டும்தான்.என்னை ட்ரக் அடிக்ட்ல இருந்து வெளி கொண்டுவர நினைச்சி நிறைய மறுவாழ்வு மையம் தேடி கொண்டு போய் சேர்த்தினாள். ஆனா அங்கே எங்கேயும் என்னால நிலைச்சி இருக்க முடியல. அந்த சென்டர்ஸ்ல இருந்து தப்பிச்சி ஓடி வந்தேன். என்னால என்னை சுத்தி நடக்கற எதையும் புரிஞ்சிக்க முடியல. ட்ரக்ஸ் மட்டும்தான் என் ஒரே நினைவா இருந்தது. மைத்தியோட வீட்டுல என்னால ஒருநாள் பயங்கர சண்டை வந்துடுச்சி. அவளோட பேரண்ட்ஸ் என்னை திட்ட கூடாதுன்னு நினைச்ச மைத்தி என்னை கூட்டிட்டு வெளியே கிளம்பிட்டா. கோவிலுக்கு கூட்டி போக நினைச்சிருக்கா போல.ஈவினிங் டைம். வாகனங்கள் அதிகம் பயணிக்கிற சாலையில் என்னை நடக்க வச்சி கூட்டிட்டு போனா. எனக்கு ட்ரக் நினைவு வந்துடுச்சி. அவளை விட்டுட்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பிச்சிட்டேன். என்னை எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லி குறுக்க வந்து நின்னு தடுத்தா. நான் அவ பேச்சை காதுலயே போட்டுக்காம அவளை தாண்டி நடந்தேன்.'கார்த்தி நீ நிக்கலன்னா நான் இந்த வண்டிகள் முன்னாடி விழுந்து தற்கொலை பண்ணிப்பேன்'னு சொன்னா.. அவ பேச்சை காதுல வாங்காம நடந்தேன். அடுத்த செகண்ட் லாரி தூக்கி அடிச்சதுல வந்து என் காலடியில் விழுந்தா அவ. உடம்பெல்லாம் ரத்தம். அவ எடுத்த ரிஸ்க் என் மூளைக்கும் புரிஞ்சுது. ஆனா ட்ரக்ஸ்ம் போதையும் என்னை ஆட்டி படைச்சது. அவளை காப்பாத்த நினைச்சி கூடிய கூட்டம் அவளை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கூட்டி போனாங்க. நான் சிலை போல நின்னுட்டு இருந்தேன். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் ட்ரக்ஸ் என்னை வா வா ன்னு கூப்பிடுது. இன்னொரு பக்கம் என் உயிர் என்னை விட்டுட்டு ஆம்புலன்ஸ்ல போகுது. நான் என்ன செய்றது.? அங்கே கடந்து போற வண்டியில் விழுந்து செத்து போறதுதான் ஒரே வழின்னு நினைச்சி ரோட்டுல இறங்கிட்டேன்.எதிர்ல வந்த கார் சடன் பிரேக் அடிச்சி நின்னது. நான் அடுத்து வந்த லாரியை பார்த்து நடந்தேன். கார்ல இருந்தவர் இறங்கி வந்து நான் லாரியில் விழும் முன்னாடி காப்பாத்திட்டாரு. எனக்கு சாகணும்ன்னு சொல்லி அழுதேன். அவர் என்னை அவரோடு அவர் வீட்டுக்கே கூட்டி போனாரு. என்னோட பிரச்சனை என்னன்னு கேட்டாரு. நான் என்னை பத்தி முழுசா சொல்லல. ஆனா நான் ஒரு ட்ரக் அடிக்.. அதுல இருந்து வெளி வர முடியாம சாக டிரை பண்ணேன்னு சொன்னேன். அவர் என்னை பரிதாபமா பார்த்தாரு. அவரோட லைஃப் பத்தி சொன்னாரு. அவரும் ட்ரக்ஸ் எடுத்துக்க நினைச்சதை பத்தியும் சொன்னாரு. ஆனா ட்ரக்ஸ் எடுத்துக்க கூட தனக்கு தைரியம் இல்லன்னு சொன்னாரு.நம்ம வாழ்க்கை நம்ம கையில்தான் இருக்கு. நம்ம வாழ்க்கையை நம்மாள மட்டும்தான் செதுக்க முடியும்ன்னு சொன்னாரு‌ அவரு. அதுக்கு உளியா தன்னோட நட்பையும், பாதுகாப்பையும் தருவதா சொன்னாரு. ஏதோ ஒரு செகண்ட்ல நம்மையும் மீறி நம்ம மனசு சில வார்த்தைகளுக்கு பிரமிச்சி அந்த வார்த்தைகளுக்கு அடிமையாகிடும். அந்த செகண்ட் எனக்கும் அப்படிதான் ஆனது. அவர் எனக்கு காப்பி போட்டு தந்துட்டு அவரோட ரூம்க்கு டிரஸ் மாத்திக்க போனாரு.எனக்கு ரத்த வெள்ளத்துல இருந்த மைத்தி முகம் கண்ணுல வந்துட்டு போச்சி. யோசிக்கவே இல்ல நான். அந்த வீட்டுல கிச்சன் எங்கேன்னு தேடி போய் அடுப்பை பத்த வச்சி பக்கத்துல இருந்த இரும்பு கம்பியை எடுத்து சூடு பண்ணி இரண்டு காலுலயும் சூடு போட்டுக்கிட்டேன். பயங்கரமா எரிஞ்சது. இரண்டு கைகளையும் அதே அடுப்பு மேல வச்சி சுட்டுக்கிட்டேன். அவர் வந்து என்ன விசயம்ன்னு பார்க்கும் முன்னாடியே கை காலை சுட்டு வச்சிக்கிட்டேன். மைத்தி எனக்காக ஏதும் செய்வா.. நான் அவளுக்காக ஏதும் செய்வேன். எங்களோட பழைய ஒப்பந்தம் நியாபகம் வந்துச்சி.'இனி என்னால வெளியே எங்கேயும் போக முடியாது சார்'ன்னு அவர்கிட்ட சொல்லி சிரிச்சேன். அவர் என்னை திட்டிட்டு என் காயத்துக்கு மருந்து வச்சி விட்டாரு. அன்னையிலிருந்து என்னோட பாடிகார்ட் அவர். என்னோட வெல்விஷர் அவர். என்னோட பேரண்ட் அவர். நடு ராத்திரியில் எத்தனையோ நாட்கள் கத்தி அழுதிருக்கேன். அவரை கூட அடிச்சிருக்கேன். ஆனா அவர் என்னை பத்திரமா கவனிச்சிக்கிட்டாரு. மைத்தியோட முயற்சி வீணா போச்சின்னு நினைச்சிதான் அவ தற்கொலையை கடைசியா கையில் எடுத்தா. ஆனா இவரோட அர்ப்பணிப்பு வீணா போகல. மைத்தியோட முகமும் இவரோட தின முயற்சியும் என்னை பழைய ஆளா ஒருநாள் மாத்துச்சி. நடுவுல நாங்க இரண்டு பேரும் பட்ட கஷ்டங்கள் சொன்னா தீராது. அத்தனை இருக்கு.எப்படியோ ஒருநாள் நானும் மனுசியா மாறினேன். அவர்கிட்ட இருந்து பிரிஞ்சி மைத்தியை தேடி போனேன். அவ குணமாகி இருந்தா. நான் எங்கேயோ காணாம போயிட்டேன்னு நினைச்சி வாழ்ந்துட்டு இருந்தா. அவளையும் அவளோட வாழ்க்கையையும் டிஸ்டர்ப் பண்ண பிடிக்காம அவ கண்ணுல படாம திரும்பி வந்துட்டேன்.என் வீட்டுக்கு போனேன். என் பிரதர்-இன்-லாவை பார்த்தேன். அது என்னவோ அந்த அடிக்டல இருந்து மீண்டு வந்தபிறகு ஒரு பயங்கரமான தைரியம் வந்துடுச்சி. எல்லோரையும் மனுசங்களா பார்க்க தோணல. என் பிரதர்-இன்-லாவோட இடுப்புலயே கத்தி சொருகிட்டேன். அவன் என்கிட்ட இருந்து பிடுங்கிய ஷேர்ஸை திரும்ப எழுதி தரும்படி செஞ்சேன். அவன் எனக்கு செஞ்சதுக்கு தண்டனையா அவனோட ஷேர்ஸையும் நானே எழுதி வாங்கிட்டேன். என் மொத்த லைப்பும் பாழா போனது அவனாலதான்னு நியாபகம் வச்சிட்டே இருந்தேன். எதிர்ல யார் வந்தாலும் குத்தி கொல்லணும்ன்னு வெறி வந்தது. அந்த அளவுக்கு என் மைன்ட்ல வெறுப்பு இருந்தது.என்னோட சொத்துக்களை பார்த்துக்க ஆள் நியமிச்சிட்டு நான் மறுபடியும் அந்த சாரையே தேடி போனேன். என் மனசுல இருக்கற வெறுப்பை சொன்னேன். அந்த வெறுப்பை போக்கிக்க தியானத்துல இருந்து யோகா வரைக்கும் அத்தனையையும் ட்ரை பண்ண சொன்னாரு. ஒரு தப்பான விசயம் மனசுக்குள்ள வர ஒரு நிமிசம். ஆனா அதை வெளியே விலக்கி வைக்க ஒரு வருசமானாலும் கஷ்டம்ன்னு புரிஞ்சது.இரண்டு பேரும் சேர்ந்து நிறைய பேசினோம். நிறைய கத்துக்கிட்டோம். அவர் அவரோட லைஃப்க்கு தேவையான சிலதை கத்துக்கிட்டாரு. நான் எனக்கு தேவையான சிலதை கத்துக்க ஆரம்பிச்சேன். இங்கே வரும்வரை எங்க லைஃப் அப்படித்தான் எதையோ ஒன்னை கத்துக்கிறதல போயிட்டு இருந்தது.." என்று தன் மொத்த வாழ்க்கையையும் யதிராவிடம் சொன்னாள் கே.கே.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1048VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN