40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா கேலி சிரிப்போடு கே.கேவை பார்த்தாள். "ஏன் அதோடு நிறுத்திட்ட.. இன்னும் நிறைய சொல்லு.. அந்த சார் முகில்தான்னு சொல்லு அதுவும் இப்ப முகில் சொந்தமா கம்பெனி ஓபன் பண்ண கூட உன் பணம்தான் உதவுச்சின்னு சொல்லு.." என்றாள் கிண்டலாக.'நீ சொன்னாலும் சொல்லலனாலும் அதான் உண்மை யதி..' என நினைத்த கே.கே "நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறியா.?" என்றாள்."இல்ல.." என சொல்லி தலையசைத்த யதிரா "இதை ஏன் என்கிட்ட சொல்றன்னுதான் கேட்கறேன்.. எனக்கு தேவைப்படாத ஒரு விசயத்தை நான் ஏன் கேட்கணும்.? நான் ஏன் அதை பத்தி யோசிக்கணும்.?" என்றாள்."ஏனா முகில் உன்னை விட்டு போக காரணமே நீதான்.." என்றாள் கே.கே.யதிரா அவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள்."மூணு வருசம் முன்னாடி நீயும் அவனும் பிரிய காரணம் சௌந்தர்யாவும் ரூபனும்தான். ஆனா இந்த முறை நீங்க பிரிய காரணம் முகில்தான்.. ஏனா அவன் நீ ரொம்ப வீக்கான மைன்ட் செட்ல இருக்கறதா நினைச்சான். உன்னை ஸ்ட்ராங்காகத்தான் அவன் உன்னை விட்டுட்டே பிரிஞ்சான். அவனோட இந்த ஐடியாவுல எனக்கும் சம்மதம் இல்ல‌. ஆனா நாங்க இந்த உறவுகளிடம் அனுபவிச்ச வலிகளும் ஏமாற்றங்களும் என்னையும் இதுக்கு சம்மதிக்க வச்சிடுச்சி.. உன் மனசை உடைச்சது தப்புதான்." என்றவள் கவலையோடு யதிராவை பார்த்தாள்."யதி.. சாரி.." என்றாள். யதிராவின் அருகே நெருங்கினாள்.யதிரா காய்ந்த எண்ணெயில் காய்கறிகளை கொட்டினாள். "நான்தான் சாரி சொல்லணும் கே.கே.." என்றாள் அவள்.கே.கே புரியாமல் பார்த்தாள். "நான் உங்க லைஃப்ல நிறைய தொந்தரவு தந்துட்டேன்.. அதுக்காக சாரி.." என்றாள்.கே.கேவிற்கு வருத்தமாக இருந்தது. "நான் சொல்றதை நீ நம்பலையா.?" என்றாள்.யதிரா சோகமாய் சிரித்தாள். "நம்புறதும் நம்பாததும் இரண்டாம் பட்சம்.. ஏன் நம்பணும்.. இதுதான் முதல் கேள்வி. நான் யார்.. நீங்க யார்.. என் லைஃப்ல உங்களோட அவசியம் என்ன.. இதைதான் நான் யோசிக்கணும்.." என்றாள்.கே.கே கோபத்தோடு அவளை திருப்பி நிறுத்தினாள். "அப்படின்னா அவ்வளவுதான் நீ.? சமாளிக்க முடியாம எங்களை ஓரம் கட்ட பார்க்கறியா.? இல்ல லைஃபை வெறுத்துட்டு ஓட போறியா.? நாங்க உனக்கு முக்கியம் இல்லையா.? சின்ன சண்டைகள், சின்ன கருத்து வேறுபாடுகள் கூட நமக்கிடையில் இருக்க கூடாதா.?" என்றாள்.யதிரா காய்கறிகளை கிளறி விட்டாள். உப்பை தூவினாள். "சின்ன சண்டை.. சின்ன கருத்து வேறுபாடு.. இதெல்லாம் எங்கே யோசிப்பாங்கன்னு தெரியுமா கே.கே.?" என்றாள்.கே.கே குழம்பி போனாள்."கொஞ்சமாவது காதலும் பாசமும் ஒட்டியிருக்கற மனசுதான் இதை பத்தி யோசிக்கும். செகண்ட் சான்ஸ் பத்தி கன்சிடர் பண்ணும். ஆனா இங்கே அப்படி இல்ல.." என்று தன் நெஞ்சை தொட்டு காட்டினாள். "இங்கே எதுவுமே இல்ல.. என் ஆன்மாவோட பாசம் செத்து போச்சி கே‌.கே.. நான் இழந்ததை நினைச்சி பார்க்கும்போது இப்ப நடந்த எதுவுமே பெரிசா தெரியல.. மூணு வருசமா உள்ளுக்குள்ள அழுதுட்டு இருந்தேன் நான். ஆனா அந்த அழுகைக்கு காரணமானவங்க யாருன்னு கண்ணை திறந்து பார்க்க தவறிட்டேன். இப்ப முழுசா புரிஞ்சதும் ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னாலயே என் மைன்டோட கிரிட்டிசத்தை தாங்கிக்க முடியல.. நானே உள்ளுக்குள்ள செத்து போயிட்டு இருக்கேன். இதுல நான் எங்கே உங்களோட தவறுகளையும் அதுக்கு நீங்க கற்பிக்கும் நியாயங்களையும் பத்தி யோசிக்கிறது.? வாழ்க்கையே வேஸ்ட்ன்னு இருக்கு கே‌.கே.. கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருங்க.. ப்ளீஸ்.." என்றாள்.கே.கே விழியெடுக்காமல் யதிராவை பார்த்தாள். தாங்கள் செய்த இந்த காரியம் யதிராவின் உணர்ச்சிகளை கொன்றுவிட்டதோ என பயந்தாள். 'முட்டாள் முகி.. உன் யோசனை நாசமா போயிட்டு இருக்குடா..' என கத்த தோன்றியது அவளுக்கு.'நல்லவேளையாக கொலை செய்யப்பட்டது யாரென கேட்காமல் போனாளே.. அதுவரை லாபம்..' என நினைத்தபடி அங்கிருந்து வெளியே நடந்தாள் கே.கே.முகில் தன் அறையில் அமர்ந்திருந்தான்."முகில்.." என்றபடி அறைக்குள் வந்தாள் மேக்னா.மேக்னாவை கண்டதும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான் முகில். அவனின் முகத்தில் இருந்த சோகம் மேக்னாவுக்கு பார்க்கும்போதே தெரிந்தது.முகிலின் முன்னால் வந்து நின்றாள்."சுபா இப்படி பாதியில் என்னை விட்டுட்டு போவான்னு நினைக்கவே இல்ல.." என்றான் முகில். அவனது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தது. "காலம் முழுக்க மனைவியா என் கை பிடிச்சி வருவான்னு நம்பினேன். ஆனா இப்படி பாதியிலேயே என் உயிரையும் சேர்த்து பறிச்சிட்டு போயிட்டா.." என்றான் கரகரத்த குரலில்."உன் அக்கா ரொம்ப தப்பு பண்ணிட்டா முகில்.." என்றாள் மேக்னா.முகில் குழப்பமாக அவளை நிமிர்ந்து பார்த்தான்."நீ ரொம்ப ஸ்வீட்பாய்ன்னு எனக்கும் தெரியும் முகில்.. சுபாவும் நீயும் லவ் பண்ணிட்டு இருந்ததை பத்தி சுபா என்கிட்ட டெய்லியும் போன்ல சொல்லி இருக்கா. ஆனா என் தங்கச்சியை உன் அக்கா அநியாயமா கொன்னுட்டா.." என்றாள்.முகில் உண்மையிலேயே அதிர்ச்சியானான். 'எலி பிடிக்கும் பூனை எங்க அக்கா. அந்த பூனையை வேட்டையாடுற இராவிலங்கு நீ மேக்னா.. நான் எப்படி இவளுக்கு வலை விரிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா இவளே இப்படி வந்து வலையில மாட்டுறாளே.. மேக்னா உன் ப்ளானை நானும் வரவேற்கிறேன்' என தன் மனதுக்குள் சொன்னான்."முகி.. நான் சொல்றதை நீ நம்ப மாட்டேன்னு தெரியும்.. உனக்கு நானே ஆதாரம் காட்டுறேன் இரு.." என்றவள் தன் ஃபோனை எடுத்தாள். இன்ஸ்டாவில் இருந்த வாய்ஸ் மெஸேஜ் ஒன்றை ஒலிக்க விட்டாள்.'அக்கா என் கார் பிரேக் பிடிக்கல.. இது சௌந்தர்யாவோட வேலைதான்.. ப்ளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்து.. நான்...' என்ற குரல் செய்தி அத்தோடு நின்றது. அதை தொடர்ந்து படீரென கார் பேருந்தோடு மோதும் சத்தமும் சில வாகனங்களின் இரைச்சலும் கேட்டது. அத்தோடு செய்தி நின்று போனது."இதை கேட்டியா.? உன் அக்காதான் காரணம்.." என்றாள் மேக்னா.முகில் அந்த போனை பார்த்தான். பின்னர் அவளின் முகத்தையும் அப்பாவியாய் பார்த்தான்."என் அக்கா ரொம்ப நல்லவ.. சுபா இப்படி சொல்லியிருக்கவே மாட்டா.." என்றான் சிறு குழந்தையின் அடம்போல."உன் மூளை இவ்வளவுதான் வொர்க் ஆகும்ன்னு எனக்கும் தெரியும் முகி.. உன் முட்டாள்தனம் பத்தி என்னை விட யார் அதிகம் தெரிஞ்சி வச்சிருக்க போறா.?" என்று முனகினாள் அவள்.முகிலுக்கு சுவற்றில் முட்டிக் கொள்ள தோன்றியது. அவளை அங்கேயே அறைந்து தள்ள தோன்றியது. 'முட்டாள் அப்படியே இருப்பான்னு உனக்கு யாருடி சொன்னது' என கேட்டு அவளின் பல்லை தட்ட சொல்லியது மூளை. ஆனால் அதே சமயம் அந்த முடிவுற்ற முட்டாள்தனம்தான் இன்றைக்கு இவளையும் தன் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதை புரிந்து கொண்டான்."நான் போய் என் அக்காக்கிட்டயே கேட்கறேன்.." என்று வெளியே நடந்தான் முகில்."முகில் நில்லு.." என சட்டென அவனின் கையை பிடித்து நிறுத்தினாள் மேக்னா."நீ ஏன் இவ்வளவு முட்டாளா இருக்க.? உன் லவ்வர் சுபா சாவுக்கு காரணம் உன் அக்காதான்.. இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற..?" என கோபமாக கேட்டாள்."என் லவ்வர் இறந்தது விபத்தால.. என் அக்கா எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்யவே மாட்டா.." என்று இவனும் கோபமாக சொன்னான்.இவனின் கோபத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. குண்டு பையன் அதே புத்தியோடு இருப்பான் என அவள் நினைத்திருந்த வேளையில் இவன் இப்படி கோபம் கொள்வதே அவளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.'கோபப்பட்டுட்டோமோ.? ஆனா இந்த அளவுக்கு கோபம் வரலன்னா எப்படி.? நிஜமாவே நான் சொரணை கெட்ட மனுசனாதான் மூணு வருசம் முன்னாடி வரை இருந்தேனா.?' என தன்னையே கேட்டுக் கொண்டான்."முகில்.. உன் அக்கா ரொம்ப கெட்டவ.. இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற.? அவ உன்னோட ஆசை காதலியை கொன்னுட்டா.. உன்னோட வருங்காலத்தையே அழிச்சிட்டா.. இது உனக்கு புரியலையா.? அவளை பழி வாங்கணும்ன்னு உனக்கு சுத்தமா தோணலையா.?" என்றாள்.'வாடி என் மதன மஞ்சரி.. எனக்குள்ள சூடு சொரணை வர வச்சி என் அக்காவையே பழி வாங்க வைக்க போறியா நீ..?' என நினைத்தவன் ஒன்றும் அறியா பிள்ளை போலவே அவளை பார்த்தான்."ஆனா நான் என்ன பண்றது.?" என்றான் ஒன்றும் அறியாதவன் போல."பெருசா ஏதும் செய்யாத முகி.. உன் அக்காவுக்கு பணம் தராத.. அதுவே போதும் அவ அடங்கி கிடக்க.. நான் இந்த வாய்ஸ் மெஸேஜை போலிஸ்க்கு அனுப்ப போறேன்.. மீதியை அவங்க பார்த்துப்பாங்க.. தயவுசெஞ்சி இனியாவது நீ புத்தியோடு பிழைச்சிக்க.. உனக்கு நிஜமாவே சுபா மேல கொஞ்சமாவது காதல் இருந்தா இந்த கேஸ்ல உங்க அக்காவுக்கு எதிரா, போலிஸ்க்கு சப்போர்ட் பண்ணு.." என்றவள் வந்த வழியிலேயே திரும்பி நடந்தாள்.முகில் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான்."இவளோட தங்கச்சி செத்தா அதுக்கு நான் பழி வாங்கணுமாம்.. பொய் ரிப்போர்டால என் வாழ்க்கையை அழிச்சதுக்கு இவளை என்ன செய்றதாம்.?" என்றான் கோபமாக."உங்க இரண்டு பேரை விடவும் நான் ரொம்ப கெட்டவன் மேக்னா. இது உங்களுக்குதான் புரியல.. அமைதியா இருந்தவனை வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிட்டு இருந்தவனை அப்படியே இருக்க விட்டிருக்கணும்.. இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டிருக்க கூடாது.." என்றான் ஆத்திரமாக.அவனது ஆத்திரம் முழுதாக தீரும் முன் கே.கே அவனுக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தாள்."சொல்லு கே.கே.." என்றவனிடம் "யதிக்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன் நான்.." என்றாள்."இருக்கற பிரச்சனையில இது வேற இப்ப தேவையா கே.கே.?" என்று அவளிடம் கத்தினான். அவனால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை."முகி.. பிரச்சனை அது இல்ல.. பிரச்சனை அதை விட சீரியஸ்.. நடந்த உண்மையை நான் சொன்னேன். ஆனா அவ காது கொடுத்து கேட்க கூட தயாரா இல்ல.. அவளோட மைன்ட் அந்த அளவுக்கு அப்செட்டாக இருக்கு.. காரியம் நம்ம கை மீறி போன மாதிரி பீல் ஆகுது முகி.. அவளோட பீலிங்க்ஸ் செத்து போச்சின்னு அவளே சொல்றா.. எனக்கெதுக்கு உண்மை.? நீங்க என்ன பண்ணா எனக்கென்னன்னு கேட்கறா.. எனக்கு பயமா இருக்கு.. அவளுக்கு உன் மேலயோ என் மேலயோ கோபமோ வருத்தமோ கூட இல்ல.." என்றாள்.முகில் தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தான். "கே.கே நீ பொய் சொல்றியா.? கேம் விளையாடுறியா.?" என்றான்."முகி உன்னை விட அதிக பயத்துல இருக்கேன் நான். சோ ப்ளீஸ் டோன்ட் டாக் லைக் தட்.." என்ற கே.கே "யதி.." என்றாள் அதிர்ச்சியாக தன் முன் நின்றிருந்த யதிராவை கண்டு."கே.கே.. யதி.." முகில் மறுமுனையில் குழப்பத்தோடு அழைப்பது யதிராவுக்கும் கேட்டது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1052VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN