42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காப்பி கோப்பையை கையில் எடுத்தபடி யதிராவை பார்த்தான் முகில்."யதி நான் உன்கிட்ட.." முகில் அடுத்த வார்த்தை சொல்லும் முன் தனது அறைக்குள் நுழைந்து கதவை படீரென சாத்திக் கொண்டாள் யதிரா.முகிலும் கே.கேவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். கே.கே கையை விரித்தாள். "இவளை வழிக்கு கொண்டு வர நீ ரொம்ப கஷ்டப்படணும் முகி. ஏனா என் டிரெயினிங் அப்படி.." என்றவளுக்கு தெரியாது யதிராவை இப்படி மாற்றிய வேதனை எதுவென்று.யதிரா தன் அறையில் அமர்ந்த வண்ணம் சூடான காப்பியை பார்த்தாள். கே.கே சொன்னது அவளின் காதுகளிலும் வந்து விழுந்தது. 'என் டிரெயினிங் அப்படி..' கே.கே சொன்னதை நினைத்துப் பார்த்தாள். அவள் சொன்னதில் உள்ள உண்மையை அவளாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.இதே பழைய யதிராவை இருந்திருந்தால் இன்று கே‌.கேவும் தன் நட்பு துரோகி என தெரிந்ததும் அழுது புரண்டிருப்பாள். தாங்க முடியாத வலியோடு கண்ணீரை மட்டுமே கைப்பிடித்திருப்பாள். சிந்திக்கும் நிதானமும் இருந்திருக்காது. இப்போதைய இந்த பற்றற்ற நிலையும் வந்திருக்காது என்பதை புரிந்துக் கொண்டாள்.கே.கே இதை ஏன் செய்தாள் என யோசித்தாள் யதிரா. நண்பனுக்காகவா இல்லை இந்த தோழிக்காகவா.? 'உண்மையில் நான் அவளுக்கு தோழிதானா.?' என்று சந்தேகிக்கவும் செய்தாள்.மற்றவர்களின் கை பாவையாய் இருப்பதை நினைத்து வெறுத்தாள். அதே சமயம் ஏதோ ஒரு வகையில் கே.கேவால் மாற்றியமைக்கப்பட்ட தனது மனோபலத்தை அவளால் மறுக்கவும் முடியவில்லை."சீக்கிரம் காப்பி குடிச்சிட்டு கிளம்பு முகி.. கமிஷனர் ஆபிஸ் போகணும்.." என்று அவனுக்கு நினைவுப்படுத்தினாள் கே.கே."ஓகே கே‌.கே.." என்ற முகிலுக்கு தூக்கம் வரும்போலவே இருந்தது. இந்த மூன்று மணி நேர தூக்கம் அவனுக்கு போதவில்லை. கொட்டாவியாக விட்டான்.அவன் காப்பியை பருகி முடித்த நேரத்தில் அவனின் ஃபோன் ஒலித்தது. எடுத்து பார்த்தான். சௌந்தர்யாவின் கணவன் அழைத்திருந்தான்."என் அக்கா வீட்டுக்காரர் ஃபோன் பண்ணி இருக்காரு கே‌.கே.." என்றவன் அழைப்பை ஏற்று ஃபோனின் ஸ்பீக்கரை இயக்கினான்."ஹலோ.. முகில் உன் அக்காவை போலிஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிப் போயிட்டாங்க.. நீ சீக்கிரம் வீட்டுக்கு வா.." என்றான் அவன் பதட்டமான குரலில்.கே.கே தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப இயலாமல் அந்த போனை அதிர்ச்சியாக பார்த்தாள்."என்ன மாமா சொல்றிங்க.? அவளை ஏன் போலிஸ் அரெஸ்ட் பண்றாங்க.?" குழம்பி போன குரலில் கேட்டான் முகில்."சுபா பொண்ணோட கார் ஆக்ஸிடென்ட் ஆக உங்க அக்காதான் காரணமாம். சுபாவோட அக்கா போலிஸ்ல கம்ப்ளைண்டை தந்திருக்கா. ஆதாரமும் தந்திருக்கா.." என்றான் அவன்.முகில் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். பழம் நழுவி பாலில் விழுந்தார் போல இருந்தது இந்த செய்தியை கேட்டதும். அவனின் முகத்தில் இருந்த வெற்றிப் புன்னகை கண்டு கே.கேவும் தன் கையின் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்."சுபாவோட அக்கா இவ்வளவு கேவலமா பொய் சொல்லியிருக்க கூடாது முகில்.." என்றான் சௌந்தர்யாவின் கணவன்.முகில் ஃபோனை கையில் எடுத்தான். "உண்மைதான் மாமா.. அந்த மேக்னாவுக்கு நல்ல பாடம் சொல்லி தரணும் நாம.." என்றான் முகில்."அவ மட்டும் நேர்ல இருந்திருந்தா நானே நாலு அறை தந்திருப்பேன் முகில். சீட்டர் அதுக்குள்ள ஓடிட்டா.." என்று அவன் சொல்ல இவர்கள் இருவரும் குழம்பி போனார்கள்."என்ன மாமா சொல்றிங்க?" என்றான் புரியாமல்."அந்த மேக்னா நேத்து நைட் கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கா.. இப்ப விடியற்காலை ப்ளைட்ல பிரான்ஸ் போயிட்டா.." என்றவன் மறுமுனையில் பற்களை கடிப்பது இங்கிருந்த இருவருக்குமே கேட்டது.கே.கே நெற்றியை பிடித்தாள். முகில் பற்களை கடித்தபடி தன் கை விரல்களை இறுக்கினான்."அவளை மாதிரி ஒருத்தியை உன் அக்கா எதுக்காக பிரெண்டா வச்சிருந்தாளோ.? அவளோட தங்கச்சியை தன்னோட தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டா சௌந்தர்யா. ஆனா கொஞ்சம் கூட நன்றி இல்லாம போயிடுச்சி அவளுக்கு.." என்றான் சௌந்தர்யாவின் கணவன் கோபமாக."நான் வந்து அக்காவை பார்க்கறேன் மாமா.." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு சோர்ந்து போய் இருக்கையில் விழுந்தான்."மேக்னா தப்பிச்சிட்டா கே.கே.." என்றான் சோகமாக."நம்மகிட்ட இருக்கற ஆதாரத்தை வச்சி அவளை திரும்ப நம்ம நாட்டுக்கு கொண்டு வந்துடலாம் முகி.. நாம எப்பவும் முயற்சியை கை விடவும் கூடாது. சோர்ந்து போய் உட்காரவும் கூடாது.." என்றாள் கே.கே உறுதியான குரலில்.முகில் புரிந்துக் கொண்டவனாக தலையசைத்தான். "நான் ஸ்டேசன் போய் பார்க்கறேன்.." என்று எழுந்து நின்ற முகில் ஃபோனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கே.கே ஆதாரங்களை கொண்டு வந்து அவனிடம் தந்தாள். யதிராவின் அறை கதவை ஆதங்கமாக பார்த்தான் முகில். அவளது முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது. மனதை சமாதானம் செய்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு போனான் அவன்.யதிரா தன் அறை கதவை திறந்தாள். வாசற்படியில் சாய்ந்து நின்றாள்."அவன் போய் ரொம்ப நேரம் ஆகுது.." என்றாள் கே.கே. யதிரா அதை காதில் வாங்காதவள் போல நின்றிருந்தாள்.கே.கே காப்பி கோப்பைகளை கையில் எடுத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் மீண்டும் வெளியே வந்தபோது யதிரா "சுபாவோடது பிளானிங் மர்டரா.?" என்றாள்.கே.கே அவளது கேள்வியால் ஆச்சரியமடைந்தாள். யதிராவின் ஆர்வம் அவளுக்குள் சிறு நம்பிக்கையை தந்தது."ஆமா.. பக்காவா ப்ளான் பண்ணி கொலை பண்ணி இருக்கா சௌந்தர்யா.." என்றாள் கே.கே."ஓ.." என்றவள் "தன் பியான்சி கொலை செய்யப்பட்டதாலதான் இவருக்கு இவ்வளவு கோபம் வந்ததா.? அதனால்தான் சொந்த அக்காவையே போலிஸ்ல மாட்டி விடுறாரா.?" என்றாள்.கே.கேவிற்கு யதிராவின் மூளையில் சாட்டையை வீச வேண்டும் போல இருந்தது."இல்ல.. இன்னொரு மர்டர் நடந்தது. அந்த மர்டருக்காகதான் இவன் இவ்வளவு கஷ்டப்படுறான். சுபாவோட சாவு எங்க இரண்டு பேரையும் பாதிச்சது உண்மைதான். ஆனா அதை விட பெரிய பாதிப்பை ஹேண்டில் பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம் நாங்க.." என்றாள்.யதிரா அதன் பிறகு எதையும் கேட்கவில்லை. அலுவலகம் செல்ல தயாராகலாம் என நினைத்து குளிக்க கிளம்பினாள்.முகில் போலிஸ் ஸ்டேசன் வந்து சேர்ந்தான். ஸ்டேசன் செல்லில் கை விலங்கோடு அமர வைக்கப்பட்டிருந்த சௌந்தர்யாவை கண்டு அவளருகே வந்தான்."என்ன ஆச்சிக்கா.?" என்றான் ஒன்றும் அறியாதவன் போல."நன்றி கெட்ட நாய் மேக்னா என்னையே சந்தேகப்பட்டு பொய் சாட்சி ரெடி பண்ணி என்னை போலிஸ்ல பிடிச்சி தந்திருக்கா.." என்றாள் பற்களை அரைத்தபடி.முகில் அவளின் கோபம் கண்டு வியந்தான். அவளின் நடிப்பு கண்டு ஆச்சரியப்பட்டான்."நான் போய் இன்ஸ்பெக்டரை பார்த்துட்டு வரேன் அக்கா.." என்றவன் அவளை விட்டுவிட்டு நடந்தான்.முகில் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் வந்தபோது அவர் ஏதோ முக்கிய வேலையில் இருந்தார்."வணக்கம் மேடம்.." என்றபடி முன்னால் அமர்ந்தான்.இன்ஸ்பெக்டர் சக்தி நிமிர்ந்து பார்த்தார். "வணக்கம்.. நீங்க.." என்றார் அவர்."நான் சௌந்தர்யாவோட பிரதர்.." என்று இவன் சொன்னதும் சக்தி கோபமாக எழுந்தார்."சொல்லுங்க.. என்ன விசயம்.?" என்றார் கோப குரலில்.அவரின் கோபத்தை கண்ட பிறகு முகிலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை."உங்க அக்கா இரண்டு கொலைகளை பண்ணி இருக்காங்க.. அதுக்கான முழு ஆதாரமும் என்கிட்ட இருக்கு.. நீங்க உங்களால் முடிஞ்ச எது வேணாலும் செய்ங்க.. ஆனா அதை கோர்ட்ல செய்ங்க.." என்றாள்."இரண்டு கொலையா.?" என்று அதிர்ச்சியடைந்தான் முகில்."ஆமா.. அவங்க தன் சொந்த மாமனாரையே திட்டம் போட்டு கொலை செஞ்சியிருக்காங்க.." என்றார் சக்தி.முகிலுக்கு சந்தோசம்தான் உண்டானது."மேடம்.. நான் முகில்.." என்றவன் தன்னை பற்றி இன்ஸ்பெக்டரிடம் சொன்னான். யதிரா அப்பாவை கொலை செய்த குற்றவாளியை கண்டு பிடிக்க தான் செய்த முயற்சி பற்றியும் சொன்னான்.சக்தி அவன் சொன்னதை நம்பவில்லை. முகில் தான் கொண்டு வந்திருந்த ஆதாரங்களை அவரிடம் தந்தான். "யதி அப்பா கேஸ்ல சம்பந்தப்பட்டது ஒருத்தர் இல்ல மேடம். மூணு பேர்.. யதியோட அண்ணன் ரூபன், என் அக்கா சௌந்தர்யா, அப்புறம் இந்த டாக்டர் மேக்னா.. இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஐம்பது லட்சம் லஞ்சமா வாங்கிக்கிட்டு இதுக்கான ஆதாரங்களை மறைச்சிட்டாரு. அவரோட வீட்டுல இருந்ததுதான் இந்த ஆதாரங்கள்.." என்று அனைத்தையும் விவரமாக சொன்னான்.சக்தி ஆதாரங்களை பார்த்தார். ஆதாரத்தின் விசயங்கள் பாதி பாதியாக இருந்தாலும் அதை சுலபமாக கணக்கிட முடிந்தது அவரால்."நான் இப்பவே கமிஷனர்கிட்ட பேசுறேன்.. உங்க ஆதாரங்களுக்கு நன்றி.. ரத்தினத்தையும் கைது செய்து விசாரிக்க சொல்றேன்.." என்றவர் தன்னிடமிருந்த ஆதாரத்தை அவனிடம் காட்டினார். "இது மேக்னா தந்துட்டு போன ஆதாரம்.." என்றார்.திரையில் ஓடிய காணோளியை பார்த்தான் முகில்.ரூபனும் சௌந்தர்யாவும் யாரிடனோ பேசும் காட்சி அது."என் அப்பாவோட சாவு இயற்கை மரணம்ன்னு பக்காவா இருக்கணும்.. இன்சூரன்ஸ்காரங்ககிட்ட மாட்டினோம்ன்னா நம்ம லைஃப் அதோட முடிஞ்சிடும்.." என்று சொன்னான் ரூபன்."அப்படி எதுவும் நடக்காது பேபி.. இத்தனை வயசுக்கு பிறகு அவர் வாழ்ந்து சாதிக்க ஏதும் இல்ல.‌. அதனால அவரோட சாவை யாருமே சந்தேகப்பட மாட்டாங்க.." என்றாள் சௌந்தர்யா."உன் பேச்சை கேட்டுதான் என் தங்கச்சிக்கும் இவ தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வச்சோம்.. கல்யாணத்துல எங்க அப்பா என் தங்கச்சிக்கு போட்ட நகைகளுக்கு பதிலா போலி நகைகளை சௌ மூலம் மாத்தியாச்சி.. ஆனா அந்த நகை வித்த பணம் முழுசா மூணு மாசம் கூட வரல.." என்று சோகமாக சொன்னான் ரூபன்.அவர்கள் பேசியதை கேட்டு பற்களை கடித்தான் முகில். தன் வாழ்வில் நடந்த திருமணம் கூட இவர்களின் பண தேவைக்காகவே நடந்துள்ளது என்பதை அறிந்ததும் அவனுக்குள் ஆத்திரம்தான் அதிகமானது."இதுல நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிங்க போல.." என்ற சக்தியிடம் தனக்கு தரப்பட்ட பிளட் கேன்சர் ரிப்போர்ட் பற்றியும் சொன்னான் முகில்."ஓ மை காட்.." என்ற சக்தியிடம் "இந்த வீடியோவுல எதிர் சைட் இருப்பது மேக்னாதான் மேடம். இதை நான் கன்பார்மா சொல்வேன்.." என்றான்."நீங்க சொன்னது எல்லாம் கேட்ட பிறகு நானும் கூட இதைதான் நினைக்கிறேன் முகில்.. மேக்னா வெளிநாடு கிளம்பிட்டா. அவளை கைது பண்ணி இந்தியாவுக்கு கொண்டு வரணும். சௌந்தர்யாக்கிட்ட இருந்து வாக்குமூலம் வாங்கிட்டா மேக்னாவை சுலபமா அரெஸ்ட் பண்ணிடலாம்.." என்றார் சக்தி."ஆமா மேடம்.. நீங்க ரூபனையும் கஸ்டடியில் எடுத்து இவங்க இரண்டு பேரையும் விசாரணை செய்யுங்க.. நான் சீக்கிரமா உங்களை வந்து பார்க்கிறேன்.." என்றவன் எழுந்து நின்றான்."இந்த கேஸ்க்கு தேவையான தகவல்களை சொல்லுவிங்கன்னு நினைச்சேன். அதுக்குள்ளயே கிளம்புறிங்களா.?" என்ற சக்தியிடம் தனது ஃபோன் நம்பரை தந்தான் முகில்."என் மனைவிக்கு இதை பத்தி எதுவுமே தெரியாது மேடம்.. அவளுக்கு இந்த விசயம் வேற யார் மூலமாவோ தெரியறதை விட என் மூலமாவே தெரியட்டும்.. அவக்கிட்ட இதை சொல்லத்தான் நான் இங்கிருந்து கிளம்பறேன்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 1069VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN