45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னை கைது செய்யும் காவல்துறையை குழப்பமும் பயமுமாக பார்த்தான் ரூபன்."என்னை ஏன் அரெஸ்ட் பண்றிங்க‌.?" என கேட்டு திமிற முயன்றான் அவன். நீலாவும் பயந்து போய் போலிசாரை பார்த்தாள்."உங்க புருசன் தன் சொந்த அப்பாவை கொலை பண்ணியிருக்காரும்மா.." என்றார் இன்ஸ்பெக்டர் சக்தி.இன்ஸ்பெக்டர் சொன்னது கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் நீலா. அவளால் அதை நம்பவே முடியவில்லை."எ.. என்ன சொல்றிங்க.? இவரு அப்படியெல்லாம் இல்ல.. இவரு ரொம்ப நல்லவரு.." என்றாள் நீலா. அவள் கண்கள் கலங்கி விட்டது. போலிஸார் சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளின் கண்ணீர் கண்டு முகிலுக்குதான் கஷ்டமாக இருந்தது. ஏன் அப்பாவிகள் மட்டும் பாதிக்கப்படுகிறார்கள் என கவலை கொண்டான்."நான் யாரையும் கொலை செய்யல.. என்னை விடுங்க.." ரூபன் போலிசாரை முறைப்பாக பார்த்து சொன்னான். அவன் சொன்னது கேட்டு முகிலுக்கு ஆத்திரமாக வந்தது. அவனை அடிக்க மீண்டும் பாய்ந்தான். போலிசார் இருவர் சட்டென அவனை பிடித்து நிறுத்தினர்."சார் நாங்க இருக்கோம்.. நீங்க அமைதியா இருங்க.." என்றார் ஒரு காவலர்."தேவையில்லாம என்னை அரெஸ்ட் பண்றிங்க.. நான் உங்க மேல ஹீயுமன் ரைட்ஸ் கமிசன்ல கம்ப்ளைண்ட் தர போறேன்.." என்றான் ரூபன்."நாங்க பக்கா ஆதாரத்தோடுதான் உன்னை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.. உன் நடிப்பை எங்கிக்கிட்ட காட்டாத.." என்று மிரட்டலாக சொன்னார் ஹெட் கான்ஸ்டபிள்.அவர் சொன்னது கேட்டு ரூபனின் முகத்தில் கலவரம் உண்டானது."எ..என்ன ஆதாரம்..?" என்றான் பதற்றமாக."அது எதுக்கு உனக்கு..?" என்ற சக்தி நீலாவை பார்த்தார். "மேடம் எங்களுக்கு கொஞ்சம் வழி விடுங்க.. உன் கணவருக்கு ஆதரவா பேசணும்ன்னா வக்கீலோடு கோர்ட்டுக்கு வாங்க.." என்றார்.நீலா கண்ணீர் கன்னங்களில் வழிய ஓரமாக ஒதுங்கி நின்றாள். அதே நேரத்தில் ரூபனின் அம்மா கோவிலுக்கு சென்று விட்டு பூஜை பையோடு வீட்டுக்குள் வந்தாள்.மகன் கைது செய்யப்படுவதை கண்டு பதற்றமாக அருகே வந்தாள் அவள். "ரூபா.." அவனின் முகத்தை கவலையோடு பார்த்தவள் போலிசாரிடம் திரும்பினாள்."என் பையன் கையில ஏன் விலங்கை போட்டிருக்கிங்க.?" என்றாள் பதட்டமாக.முகில் அவளின் அருகே வந்து அவளின் கையை பற்றினான். "அத்தை நான் சொல்றதை கேளுங்க.." என ஆரம்பித்தான். ஆனால் அம்மா அவனை விலக்கி தள்ளினாள். "துரோகி.. என்னை தொடாதே.. தள்ளி போ.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செஞ்சவன் நீ.. ஒரு காலத்துல உன்னையும் என் புள்ளை மாதிரி நினைச்சேன்.. அதுக்கான தண்டனையா இது.?" என்றாள் ஆத்திரமாக.இரண்டாம் முறையும் யதிரா ஏமாற்றப்பட்டதை அம்மாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. யதிராவின் கவலையடைந்த முகம் அவளின் கண்களில் வந்து போனது."அத்தை.. என்னை நீங்க அப்புறமா திட்டுவிங்க.. அதுக்கும் முன்னாடி நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க‌‌.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள். "உன்னை நம்பி என் பொண்ணை கட்டி வச்சனே.." என்றவள் ஆதங்கத்தில் அவனின் சட்டையை பற்றினாள்.போலிசார் இருவர் வந்து அவளை பிடித்து விலக்கி நிறுத்தினர். "அம்மா நாங்க உங்க பையனை கொலை கேஸ்ல அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.." என்றார் அதில் ஒருவர்.போலிஸ் சொன்னது கேட்டு அம்மாவிற்கு மயக்கம் வரும்போல இருந்தது. "என் பையனா.?" என்றாள் அதிர்ச்சியாக."இல்லைங்க.. என் பையன் ரொம்ப நல்லவன்ங்க.. அவன் அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டான்.." என்று அவசரமாக சொன்னாள் அம்மா."அம்மா.. உங்க பையன் இன்ஷுரன்ஸ் பணத்துக்காக உங்க வீட்டுக்காரரையே கொலை பண்ணி இருக்கான்.." என்று அதட்டலாக கூறினார் ஹெட் கான்ஸ்டபிள்.அம்மாவின் கண்களில் கண்ணீர் படபடவென கொட்ட ஆரம்பித்தது‌. காதில் விழுந்த செய்தியை அவளால் நம்ப இயலவில்லை. ஆனால் மனதில் இருந்த உறுத்தலும் அவளை எதோ செய்தது."என் பையனா‌.." என்றாள் நம்பிக்கை இல்லா குரலில்."ஆமாம்மா.. முழு ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு.." என்றார் இன்ஸ்பெக்டர்."இல்லம்மா.. இவங்க பொய் சொல்றாங்க.." என்று குரல் தந்தான் ரூபன்.ரூபனை பரிதாபமாக பார்த்தாள் அம்மா. இருதலைகொள்ளியாக இருந்தது அவளின் மனம்."உங்களுக்கு என்ன பேசுறதா இருந்தாலும் கோர்ட்டுல வந்து பேசுங்கம்மா.. எங்களை எங்க வேலையை பார்க்க விடுங்க.." என்றாள்.ரூபனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றார்கள். அம்மா அழுதுகொண்டு திரும்பினாள். நீலா ஒருபுறம் அழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது. "நீ கவலைப்படாதம்மா.. என் பையன் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான்.." என்றாள் அம்மா.நீலா அழுதபடி இருந்தாள். முகில் தன் அத்தையை கோபமாக பார்த்தான். "அத்தை உங்க பையன் உங்க ஹஸ்பண்டை கொலை பண்ணிட்டான். இதான் உண்மை.." என்று கோபமாக சொன்னான்."இல்ல.. நீதான் ஏதோ பிளான் பண்ணி என் பையனை போலிஸ்ல பிடிச்சி தந்திருக்க.. என் யதியோட வாழ்க்கையை கெடுத்த மாதிரி இப்ப எங்க வாழ்க்கையையும் நாசம் பண்ண நினைக்கிற நீ.." என்றவள் எழுந்து வந்து அவனின் சட்டையை பிடித்தாள். அவளின் குற்றச்சாட்டு முகிலுக்கு அதிக கோபத்தை தந்துவிட்டது."உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.. உங்க பையனும் சௌந்தர்யாவும் நம்ம எல்லோரையும் முட்டாளாக்கிட்டு இருக்காங்க. அவங்க இரண்டு பேரும் எவ்வளவு பெரிய துரோகிகள்ன்னு உங்களுக்கு சுத்தமா தெரியல.. நான் சொல்றதை உங்களால நம்ப முடியாது.. அட்லீஸ்ட் ஆதாரத்தையாவது நம்புவிங்களா.?" என்றவன் தன் ஃபோனை கையில் எடுத்தான்.ரூபன் சௌந்தர்யாவோடு பேசிய ஒலிப்பதிவை ஒலிக்க விட்டான். ரூபன் பேசியது கேட்டு அதிர்ந்து போனாள் நீலா. அவளுடைய கண்களில் சட்டென கண்ணீர் நின்று போனது. சௌந்தர்யாவின் குழந்தை ரூபனுக்கு பிறந்தது என்ற செய்தி நீலாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டது. தன் கணவன் தனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வான் என அவள் கனவிலும் எதிர்ப்பார்க்கவே இல்லை. இரண்டாம் தாரமாக அவனை கட்டிக் கொண்டாலும் கூட அவளின் நாயகன் ரூபன்தான். அவனை மனதுக்குள் கடவுள் போல நினைத்து தினம் தொழுதுக் கொண்டிருந்தாள். தனது மனதில் தான் கொண்டிருக்கும் அதே காதல், நேசம், பற்று, நம்பிக்கையை ரூபனும் தன் மனதில் கொண்டிருப்பான் என நம்பியிருந்தாள் நீலா. அவளின் மொத்த நம்பிக்கையும் நொடியில் தவிடுபொடியாகி போனதும் அவளின் நெஞ்சமே உடைந்து போனது. துக்கம் அவளின் குரல்வளையை நெரித்தது. அழ கூட சக்தியில்லாமல் தரையில் அப்படியே சாய்ந்து விழுந்தாள்.தரையில் மயங்கி விழுந்தவளின் அருகே அவசரமாக ஓடி வந்தாள் அம்மா. "நீலா.." எழுந்திரும்மா.." என்றாள் தன் மருமகளின் கன்னம் தட்டி.முகில் சமயலறைக்கு ஓடினான். ஒரு டம்ளர் தண்ணீரை கொண்டு வந்தான். நீலாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்."நீலா.. எழுந்திரும்மா.. இவன் போன்ல கேட்டது எதுவுமே உண்மை இல்லம்மா.. என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல.." என்றாள் அம்மா. நீலாவின் கன்னங்களை தட்டி எழுப்ப முயன்றாள்.நீலா சில நொடிகளுக்கு பிறகு கண் விழித்து பார்த்தாள். எழுந்து அமர்ந்தவள் முகத்தை மூடிக் கொண்டு கதறியழ ஆரம்பித்து விட்டாள்."என் வாழ்க்கையே போச்சே.." என்றவள் கதறலோடு தன் தலையில் அடித்துக் கொண்டாள். "என் தெய்வமே அவர்தான்னு நினைச்சி இருந்தேனே.. இப்படி என்னை கை விட்டுட்டாரே.. அவரையே நம்பி நான் இருக்கும் போது என் முதுகு பின்னாடி இப்படி ஒரு துரோகம் செய்ய அவனுக்கு எப்படி மனசு வந்தது.? பிடிக்காம விட்டு போனவளோடு சேர்ந்து குழந்தை பெத்துகறார்ன்னா நானெல்லாம் வாழ்ந்ததே வீண்தானா.?" என்று புலம்பி அழுதாள் நீலா."என் பையன் அப்படி இல்லம்மா.." யதிராவின் அம்மா இப்படி சொன்னதும் கடுப்பாகி போனான் முகில். தன்னிடமிருந்த வீடியோவை ஒளிப்பரப்பினான்.சௌந்தர்யாவும் முகிலும் தந்தையை கொல்ல மாத்திரை மூலம் ஏற்பாடு செய்ததை அறிந்ததும் அம்மாவிற்கு இதயமே நின்று போனது போல இருந்தது. தன் சொந்த மகனே பணத்திற்காக அப்பாவையே கொலை செய்துள்ளான் என்ற விசயம் அவளை உயிரோடு நொருக்கி விட்டது.அம்மாவினா கண்களில் கண்ணீர் படபடவென கொட்டியது. பாரத்தோடு நெஞ்சை பிடித்துக் கொண்டாள். அவளுக்கு நடந்துக் கொண்டிருப்பது அனைத்தும் கனவு என்பது போல இருந்தது. நீலா ஒருபுறம் அழுதுக் கொண்டிருந்தாள். அம்மாவோ மறுபுறம் அழுக கூட தெம்பில்லாத அளவுக்கு வலியோடு இருந்தாள்.முகில் சமையலறை சென்று இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தான். "சும்மா அழாதிங்க.. இந்த தண்ணியை குடிச்சிட்டு கண்ணீரை துடைச்சிகங்க.. உங்க கண்ணீருக்கு அருகதை இல்லாதவன் அவன்.. அவனையெல்லாம் ஒரு ஆளா மதிச்சி ஏன் இவ்வளவு பீல் பண்றிங்க..?" என கேட்டான்.யதிரா அம்மா பேச முடியாமல் திணறியபடி அழுதுக் கொண்டிருந்தாள். நீலா தன் கண்களை துடைத்துக் கொண்டாள். ஆனாலும் வரும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது."அவனும் சௌந்தர்யாவும் ரொம்ப பண்ணிட்டாங்க.. அவங்க தங்களோட லாபத்துக்காக என் வாழ்க்கையையும் யதிரா வாழ்க்கையையும் மொத்தமா அழிச்சிட்டாங்த.. எங்களுக்குன்னு ஒரு லைப்பே இல்லாம பண்ணிட்டாங்க.." என்ற முகில் நடந்த அனைத்தையும் அவர்களிடம் விவரித்தான்.நடந்ததை கேட்டு அம்மாவிற்கும் நீலாவிற்கும் கோபமாக வந்தது."ச்சே.. சொந்த ரத்ததங்களோட வாழ்க்கையை அழிக்க அவருக்கு எப்படி மனசு வந்தது.?" என ஆதங்கப்பட்டாள் நீலா‌.அம்மாவிற்கு இன்னும் அதிகமாக மனம் வலித்தது. தன் செல்ல மகளின் வாழ்வையும் அழித்து விட்டு கணவனையும் கொன்றவன் தனக்கு மகனே இல்லை என்று மனதுக்குள் வீராப்பாய் சொல்லிக் கொண்டாள்.யதிராவின் அறை கதவை தட்டினாள் கே.கே."கே.கே என்னை கொஞ்சம் விடு.. ப்ளீஸ்.. நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்.." என்றாள் யதிரா. அவளின் குரலில் அழுகையின் தடம் இருந்தது."ஆனா யதி நான் உன்கிட்ட பேசியாகணும்.." என்று கெஞ்சல் குரலில் அழைத்தாள் கே‌.கே."தயவுசெஞ்சு என்னை இனியும் செண்டிமெண்டல் பைத்தியமா மாத்தாத கே‌.கே.. என்னோட கஷ்டம் உனக்கு புரியாது.." என்று எரிச்சலாக கத்தினாள் யதிரா."ஆனா இப்ப நான் உனக்கு முக்கியமான ஒரு விசயத்தை பத்தி சொல்லியாகணும்.." என்று கே.கேவும் விடாப்பிடியாக சொன்னாள்."எதை பத்தியும் நான் தெரிஞ்சிக்க வேணாம்.." என கத்தினாள்."உங்க அப்பா இயற்கையா சாகல.. உன் அண்ணன்தான் கொலை பண்ணிட்டான்.. அந்த ஆதாரத்தை கண்டுபிடிக்கதான் முகில் உன்னை விட்டுட்டு போனான்.." என்று சொன்னாள் கே.கே‌.அவள் இதை சொல்லி முடித்த வினாடி யதிராவின் அறை கதவு படீரென திறந்தது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 1005VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN